Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்துமஸ் பார்ட்டியும், உணவும் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை சபை சடங்கு வைத்தால் விடிந்தால் அதிகாலை மட்டும் மற்றவர்களை குறை சொல்வதுவே முழு நேர வேலையாக உள்ள மாமிக்கு யாரும் அழைப்பு வைப்பது இல்லை ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அழையா விருந்தளியாக உள்ளே வந்து விடுவார்கள் உள்ளே வந்து முதல் நாள் அமைதியாக இருப்பா கல்யாணம் தாலி ஏறபோகும் நேரம் பெரிய கொள்ளுபாடே நடக்கும் யாரடா  இவ்வளவு கொள்ளு பாட்டுக்கும் காரணம் என்று தேடினால் அந்த நாரதர் மாமிதான்  கடைசியில் காரணமா  இருப்பா சிலருக்கு விளங்கினாலும் விளங்காத ஜென்மம் போல் திரிவினம் .

  • Replies 69
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊரிலை சபை சடங்கு வைத்தால் விடிந்தால் அதிகாலை மட்டும் மற்றவர்களை குறை சொல்வதுவே முழு நேர வேலையாக உள்ள மாமிக்கு யாரும் அழைப்பு வைப்பது இல்லை ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அழையா விருந்தளியாக உள்ளே வந்து விடுவார்கள் உள்ளே வந்து முதல் நாள் அமைதியாக இருப்பா கல்யாணம் தாலி ஏறபோகும் நேரம் பெரிய கொள்ளுபாடே நடக்கும் யாரடா  இவ்வளவு கொள்ளு பாட்டுக்கும் காரணம் என்று தேடினால் அந்த நாரதர் மாமிதான்  கடைசியில் காரணமா  இருப்பா சிலருக்கு விளங்கினாலும் விளங்காத ஜென்மம் போல் திரிவினம் .

 வழமையான எழுதியதும் விளங்காத, திரிக்கும் பொருந்தாத பெருமாள் பாணி எழுத்து?😂 களம் இதை மிஸ் பண்ணுகிறது! பம்பலும் தேவையல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பந்தா பார்ட்டி vs சோத்து கோஸ்டி

சச்சரவில் நீங்க எந்த பக்கம் எண்டு சொல்லவே இல்லையே பாஸ்?

எந்த கோஸ்டி  ஆயினும், இயலுமானவரை அனுசரித்து போக வேண்டும்.

அனால், பெரும்பாலானோர் வெளிப்படையாக அருவருகிறார்கள், அவஸ்தைப்படுகிறார்கள் என்றால், விருந்தோம்பாளர்  அதை அகற்றுவதற்கு, குறைபதத்திற்கு விருந்தோம்பாளர் வலிந்து முயன்று இருக்க வேண்டும்,  ஏனெனில், உங்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

நியாயமான கருத்து 👍🏿

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் பாட்டின்னு நூடில்ஸ் ரெஸ்ரோரட் போய் நூடில்ஸ் சாப்பிட வெள்ளையளும் உண்டு.. பாரம்பரிய உணவு சாப்பிடுபவர்கள் அநேகர்.

பொங்கல் அன்று எப்படி கூழ் குடிப்பது முறையாகாதோ.. ஆடிக் கூழ் அன்று பொங்கல் பொங்குவது முறையாகாதோ.. அந்தந்த தினத்தை அந்தந்த நாகரிகப் பின்னணியோடு கொண்டாடி மகிழ்வதுதான் சிறப்பு. தினமுமா.. கிறிஸ்மஸ் உணவு உண்கிறோம் இல்லை தானே. 

பிரித்தானியாவில் வான்கோழி பிரதானம் என்றால்.. நோர்வேயில் பன்றி தான் பிரதானம்.. கிறிஸ்மஸுக்கு. அதேபோல்.. 25 டிசம்பர் தான் கிறிஸ்மஸ் என்றால்.. சில ஐரோப்பிய நாடுகளில் 24 இல் கொண்டாடுவார்கள். ஆக வான்கோழிக்கு பதில் கோழி அமைவது தவறல்ல. ஆனாலும் பாரம்பரிய கிறிஸ்மஸ் உணவுகள் சிலவாவது மேசையை அலங்கரிப்பது சிறப்பு. அதை ஏன் கெடுத்துக் கொள்வான். குறிப்பாக வளரும் தலைமுறைக்கு உள்ளதை உள்ளபடி அறிமுகம் செய்வதுதான் சிறப்பு. மாற்றம் அவசியமில்லாத இடத்தில் தேவையில்லா ஆணி புடுங்கிற வேலை எதுக்கு..??!

எனினும் உணவுத் தெரிவு அவரவர் உரிமை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 13:50, Nathamuni said:

தண்ணி, பச்சை தண்ணி, சுடுதண்ணி, குளிர் தண்ணி, தேத்தண்ணி, கோப்பித்தண்ணி, மல்லித்தண்ணி... 😎

இதுக்கு பேர் பாட்டி இல்லை.. பூட்டி…😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் சொல்லவருவது என்னவென்றால் இதில் விருந்துக்கு அழைத்தவரும் நம்மாளு டெமிலர் போனவங்களும் நம்மாளுங்க… ஆக நம்ம வட்டத்தில என்ன பெரும்பான்மை மக்கள் சாப்பிடுவினமோ அதைச்செய்து குடுப்பதுதானே நியாயம்.. நாலு வெள்ளயளுக்கு நடுவ நம்மளுக்கும் பாட்டி வச்சா ஓகே எண்டு வான்கோழிய மிண்டி விழுங்கலாம்.. ஆனா போனதும் சோறு கூப்பிட்டதும் சோறு அப்புறம் எதுக்கு எண்டதுதான் நாதத்தின்ர கேள்வி.. எனக்கு அது நியாயமான கேள்வியாத்தான் படுது..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சோற்றுக்கு பங்கம் என்றால் சங்காராம் நிஜமென்று சங்கே முழங்கு!

அப்டீன்னு பாரதிதாசனே பாடி இருக்காராமே?😂

54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கு பேர் பாட்டி இல்லை.. பூட்டி…😂

நம்ம நாதம் போன பார்ட்டியில் லாகிரி வஸ்து இல்லாமலா? 

நீங்கள் @Nathamuniஐ புரிந்து கொண்டது இவ்வளவுதானா கோப்பால்….

தண்ணி, பச்சை தண்ணி இரெண்ட்டெல்லோ…ரெண்டும் வேறல்லோ…

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வான்கோழி கண்ணிலையும் காட்டக்கூடாது.போன கிறிஸ்துமசுக்கு மகள் வான்கோழி சமைக்க வெளிக்கிட்டு அது வேகுறதுக்கே கனநேரம் எடுத்துட்டுது. இப்ப கரண்ட்காசு ஸ்மா;ட் மீற்றரில் பார்த்துக்கொண்டு இருக்க ஏறுது. இந்த முறை அது சரிவராது சாப்பிட்ட மாதிரியும் இருக்காது என்று கோழி மீன் என்று நம்ம சாப்பட்டைடையே செய்தம். நண்பர்களும் தங்கள் பங்குக்கு சமைத்து கொண்டு வந்ததனால். அளவுக்கு மீறி எல்பலாருக்கும் கட்டிக் கொடுததனால் அடுத்தநாளும் எல்லோர் வீட்டிலும் அதுதான் சாப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஆக வான்கோழிக்கு பதில் கோழி அமைவது தவறல்ல.

ஓம். பலருக்கு பிரச்சனையாக உள்ளது.

5 hours ago, புலவர் said:

எனக்கு வான்கோழி கண்ணிலையும் காட்டக்கூடாது

😂

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 17:32, Justin said:

#முன்னோர் என்ன மூடர்களா என்ற பெயரில் இந்த சோற்றுச் சாபம் தேவையா எங்களுக்கு? 

புது வருட கொண்டாட்டத்திற்கு  எம்மவர்களிடம் நல்ல வரவேற்புடன் சக்கரை பொங்கலும், புக்கையும் சம்பலும் உலாவந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வாண்கோழிப் பண்ணை வேலைக்கு ஆகாதா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் உணவகத்தில் சமையல்காரனாக வேலை செய்துள்ளேன் (சமைப்பது பிடிக்காத விடயம்).

கிட்டதட்ட 130 உணவுப்பதார்த்தங்கள் செய்யப்படும் ஆனால் ஒன்றைகூட சுவை பார்த்தது கிடையாது காரணம் 90% உணவு வகைகள் மேலைத்தேய உணவுவகைகள்.

எம்மவர்கல் மட்டும் பந்தா காட்டுவதில்லை, சில மேற்கத்தையவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை.

தமது இறைச்சியினை எவ்வாறு சமைக்க வேண்டும் என ஒன்றை தெரிவு செய்வார்கள் அவ்வாறே சமைத்து கொடுத்தாலும் இறைச்சியினை வெட்டிபார்த்துவிட்டு சண்டை பிடிப்பார்கள், தமது தவறு என காட்டாமல் மற்றவர்கள் மேல்தான் தவறு என்று நிற்பார்கள், சில சமையல்காரர்கல் பதிலுக்கு சண்டை பிடிப்பார்கள்.

காரனம் அவர்கள் நிலை சரி என்பதுடன் நேரம் வரையறுக்கபட்டதாக இருக்கும், ஒரு மேசையில் 2 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் 20 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் அனைத்து ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ஒரு உணவு ஆறிவிடும்.

என்னுடன் வேலை செய்த சில சமையல்காரர்கள் இறைச்சியினை கத்தியால் மெல்லிய அளவில் கீறி சரிபார்ப்பார்கள் ஆனால் அது அவசியாமாக இருக்காது எனென்றால் தொடர்ச்சியாக வேலை செய்யும் போது இறைச்சியினை கரண்டியினால் பிடிக்கும்போதே உணர முடியும் சரியாக சமைக்கப்பட்டுள்ளதா என.

தற்போது அந்த உணர்திறன் போய்விட்டது.

வேகமாக சமைக்க சில விடயங்களை கையாளுவார்கள், அந்த இறைச்சி சுவையில்லாமல் வெறும் இறப்பர் மாதிரி இருக்கும்.

சமையல் கூடம் எப்போதும் ஒரு போர்க்களம் போல இருக்கும், இதில் இப்படி தேவையில்லாமல் நேரம் விரயம் ஆக்கும் குழப்பகாரர்களை கண்டால் சமையல்காரர் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள்.

பல மேசைகளுக்கான உணவு பதார்த்தங்களுக்குள் ஒற்றுமையாக உள்ள பதார்த்தினை சேர்த்தே சமைப்பார்கள் (நேரத்தினை சேமிக்க) இப்படி பல விடயங்களையும் அதே நேரம் நேரத்தினையும் கணக்கில் கொள்ளவேண்டும், ஒரு பதார்த்தத்தினை மறந்தாலும்  கடினமாகி விடும்.

பொதுவாக ஒரு தடவை ஓடர் இரசீதினை பார்த்தால்  திரும்ப திரும்ப பார்க்க விரும்ப  மாட்டார்கல் நேரம் விரையமாக்கப்படும் என்பதால்.

இந்த வேலையில் சேருவதற்கு முன்னர் எனது நினைவாற்றல் படுமோசமாக இருந்தது.

எனது குழந்தைகள் (சிறுவயதுதான்) சில சமயம் உணவகத்தில் அது வேண்டாம் இது வேண்டாம் என கூறியிருப்பார்கள் ஆனால் தவறுதலாக அவர்கள் அதனை தவறவிட்டிருப்பார்கள், உணவினை மீண்டும் சமைத்து எடுத்து வருவதாக கூறினாலும் பரவாயில்லை என கூறி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதான படுத்தி விடுவதற்கான காரணம் அவர்களது கஸ்டம் புரிந்தமையால்.

எம்மவர்கள் நடாத்தும் ஒன்றுகூடலில் இறைச்சியினை தேவைக்கதிமாக எரிந்து காய்ந்து போகுமாறு சமைப்பார்கள், ஆனாலும் அதனை வேண்டும் என்று செய்வதில்லை, அவர்களது குறிக்கோள் சுவையான உணவினை வழங்கவேண்டும் என்பதாகவே இருக்கும்.

அதே போல்தான் சம்பளத்திற்கு வேலை செய்யும் சமையல்காரன் கூட எந்த வகையான அழுத்தத்திலும் சுவையான உணவினை வழங்கவே முழு மூச்சாக முயற்சிப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

வரும்

On 9/1/2023 at 06:00, vasee said:

எம்மவர்கள் நடாத்தும் ஒன்றுகூடலில் இறைச்சியினை தேவைக்கதிமாக எரிந்து காய்ந்து போகுமாறு சமைப்பார்கள், ஆனாலும் அதனை வேண்டும் என்று செய்வதில்லை, அவர்களது குறிக்கோள் சுவையான உணவினை வழங்கவேண்டும் என்பதாகவே இருக்கும்.

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

வரும்

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

இறைச்சியில் மட்டுமல்ல சாதாரண வெறும் முட்டை பொரியலில் கூட ஒவ்வொரு பதமும் அதற்கு என சம்பந்தமில்லாத பெயரும் வைத்திருப்பார்கள், ஆனால் அந்த பெயர்கள் மெனுவில் இருக்காது, பரிமாற்பவர்கள் உங்களது உண்வினை ஓடர் எடுக்கும் போது கேட்பார்கள், தெரியாவிட்டால் அது பற்றி சிறிய விளக்கம் கொடுப்பார்கள்.

எவ்வாறு ஒரு உணவினை சமைப்பது என்பது தெரியாத போது நன்றாக சமைக்க கூறுவது (Well done) பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

இறைச்சியில் மட்டுமல்ல சாதாரண வெறும் முட்டை பொரியலில் கூட ஒவ்வொரு பதமும் அதற்கு என சம்பந்தமில்லாத பெயரும் வைத்திருப்பார்கள், ஆனால் அந்த பெயர்கள் மெனுவில் இருக்காது, பரிமாற்பவர்கள் உங்களது உண்வினை ஓடர் எடுக்கும் போது கேட்பார்கள், தெரியாவிட்டால் அது பற்றி சிறிய விளக்கம் கொடுப்பார்கள்.

எவ்வாறு ஒரு உணவினை சமைப்பது என்பது தெரியாத போது நன்றாக சமைக்க கூறுவது (Well done) பாதுகாப்பானது.

ஒரு சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை வைக்க முடியாது. எவரவருக்கு எப்படி சாப்பிட விருப்பமோ அப்படி சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.😊

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒரு சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை வைக்க முடியாது. எவரவருக்கு எப்படி சாப்பிட விருப்பமோ அப்படி சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.😊

21 hours ago, விளங்க நினைப்பவன் said:

வரும்

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

அதனைதான் விளங்கநினைப்பவனும் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 05:00, vasee said:

எனது குழந்தைகள் (சிறுவயதுதான்) சில சமயம் உணவகத்தில் அது வேண்டாம் இது வேண்டாம் என கூறியிருப்பார்கள் ஆனால் தவறுதலாக அவர்கள் அதனை தவறவிட்டிருப்பார்கள், உணவினை மீண்டும் சமைத்து எடுத்து வருவதாக கூறினாலும் பரவாயில்லை என கூறி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதான படுத்தி விடுவதற்கான காரணம் அவர்களது கஸ்டம் புரிந்தமையால்.

முழு பகிர்வுமே அருமை. அதிலும் இந்த பகுதி 👏🏾.

உங்களை போல் பெரிய உணவகம் இல்லை ஆனால் பலவருடம் ஒரு துரித உணவு கடையில் ஆல்-இன்-ஆல் ஆக வேலை செய்தேன். 

என்னோடு கூட வரும் பலர் எகிறும் போது நானும் தலையிட்டு சமாதானம் செய்துள்ளேன். சில அனுபவங்கள் வாழ்க்கை பாடங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

முழு பகிர்வுமே அருமை. அதிலும் இந்த பகுதி 👏🏾.

உங்களை போல் பெரிய உணவகம் இல்லை ஆனால் பலவருடம் ஒரு துரித உணவு கடையில் ஆல்-இன்-ஆல் ஆக வேலை செய்தேன். 

என்னோடு கூட வரும் பலர் எகிறும் போது நானும் தலையிட்டு சமாதானம் செய்துள்ளேன். சில அனுபவங்கள் வாழ்க்கை பாடங்கள். 

சில நேரங்களின் இந்த பொறுமையினை அடுத்தவர்கள் சாதகமாக எடுத்து விடுவார்கள், இப்படியும் பல நிகழ்வுகள் நடந்துள்ளது.

அண்மையில் ஒரு சம்பவம் எனது காரில் பின்னால் வந்த கார் காரர் மோதிவிட்டார்,

இரண்டு காருக்கும் சேதம், காரினை ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் சென்றேன்.

சில நிமிடங்களாக வெளியே வராமையால் அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என நினைத்தேன் அதனால் உங்களுக்கு ஏதுவும் பிரச்சினை இல்லைதானே என கேட்டேன், இல்லை என்றார் ஆனால் பதட்டமாக காணப்பட்டார், அதனால் அவரிடம் சொன்னேன் விபத்து நடந்துவிட்டது உங்களுக்கோ எனக்கோ பிரச்சினையில்லை; உங்களிடம் காப்புறுதி உள்ளதுதானே அதனால் பிரச்சினையில்லை என சொன்னேன்.

அதுவரை பதட்டமாக இருந்தவர் திடீரரென என் மேல் பிழை என்பது போல ஆரம்பித்தார்,நீண்டநேர வேலை, நித்திரை கொள்ளவும் இல்லை. எனது தகவல்களை அவரிடம் கொடுத்துவிட்டு அவரது தகவலை பெற்றுவிட்டு ஒரு மாதிரி காரை எடுத்துகொண்டு சென்றுவிட்டேன் அதற்கு மேல் அவரிடம் பேசவேண்டிய தேவையில்லை அந்தளவிற்கு அவர் சாதாரணமாகிவிட்டார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.