Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதை, கெமெரோன் பேரம் பேசும்படி eu கெட போது, eu எக்காளத்தனமாக, ஆணவத்தோடு மறுத்தது, UK eu  இல் இருந்து பிரியாது என்ற இறுமாப்புடன்.

eu இன் அந்த ஆணவத்தனமான மறுப்பே,  UK இன் இறைமை எந்த நிலையில் என்ற கேள்விகள்  எல்லாம் எழுந்தன, மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை உருவாக்கியது.

  • Replies 81
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

Proportional bar chart

How different age groups voted

மேலும் நீங்கள் இளையோர் என்று யாரைச் சொல்லுகிறீர்கள் என்பதும் ஒரு பிரச்சனை. உங்கள் வாதத்திற்கு ஏற்ப அதனையும் மாற்றுவீர்கள். இளையோர் என்பதிலும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள்.. என்பது அடங்கும். மாணவர்கள் மத்தியில் சமூக வலை தாக்கம் அதிகம். இருந்தாலும் அந்தப் பருவத்தினரில் கூட 27 சதவீதம் பேர் பிரக்சிட்டு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

இங்கிலாந்தில் லண்டன் பெரும் பகுதியை தவிர (கலப்பினத்தினர் வாழும் பகுதி) மிகுதி இடங்களில் பெரும்பான்மை... பிரக்சிட் வாக்குகளே. 

இளையோர் என்பதை நான் இணைத்த தரவுகளில் 24 இற்குக் கீழ் என வரையறுத்தார்கள். உங்கள் கருத்துக்குப் பலம் சேர்க்க வேன்டுமெனில் 54 இற்குக் குறைந்தோரை இளையோர் என அழைத்து விட்டுப் போங்கள்! என்ன கெட்டு விடும்?😂 Data are data!

  • கருத்துக்கள உறவுகள்

குரோஷியா இந்த வருடத்தில் இருந்து யூரோவை தனது நாணயமாக அறிமுகபடுத்துகிறது ஷெங்கன் பகுதியாகின்றது. இது குரோஷியாவின் பொருளாதாரத்தையும் யூரோவையும் பலப்படுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றிய  தலைவர் தெரிவிக்கிறார்.இதில் மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்து தமிழர்களுக்கு என்ன பிரச்சனை? மேற்குலகத்தை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியம் பலம் அடைகின்றது என்று மகிழ்சி கொள்ள வேண்டிய நேரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ்சும் ஜேர்மனியும் தங்கள் பண பலத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டி வைத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இணையவன் said:

பெரும்பன்மை என்பது 100 வீதம் இருக்கவேண்டியதில்லை 🙃 73 வீதம் என்பது ஏனைய வயதுக்காரரோடு ஒப்பிடும்போது மிகப் பெரிய பெரும்பான்மை.

மிகுதி 27 % கணிசமான அளவு என்று சொல்லலாம் தானே. மேலும் பெரும்பான்மையான இளவயதினர் என்று யாரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லையே...??! 

18 hours ago, Justin said:

இளையோர் என்பதை நான் இணைத்த தரவுகளில் 24 இற்குக் கீழ் என வரையறுத்தார்கள். உங்கள் கருத்துக்குப் பலம் சேர்க்க வேன்டுமெனில் 54 இற்குக் குறைந்தோரை இளையோர் என அழைத்து விட்டுப் போங்கள்! என்ன கெட்டு விடும்?😂 Data are data!

இதை தான் சொல்வது சப்புக்கட்டென்று. 27 சதவீதம் இளையோர் பிரக்சிட்டுக்கு வாக்களத்திருக்கிறார்கள். இது கணிசமான அளவும் கூட. அதாவது நாலில் ஒருவர் பிரக்சிட்டுக்கு வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வயதினருக்கு உல்லாசமே வாழ்க்கை.. குறிப்பாக சமூக வலை தாக்கம் அதிகம்.. என்றிருக்கும் போதும் கூட.. நாலில் ஒருவர் நாட்டைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார்கள்.

6 hours ago, குமாரசாமி said:

பிரான்ஸ்சும் ஜேர்மனியும் தங்கள் பண பலத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டி வைத்திருக்கின்றார்கள்.

Map: Which Member States contributed the most to EU GDP?, as % in 2020

இத்தாலியும். ஆனால் இத்தாலியில் ஈ யூவுக்கு எதிரான மக்களின் எண்ணம் அதிகரித்தே வருகிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரான்சுக்கு அடுத்தப்படி எனலாம். ரஷ்சிய - உக்ரைன் போரைச் சாட்டி.. ஈ யூவை மீளக் கட்டியமைக்க முயற்சிக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2023 at 11:21, Kadancha said:

EU இல் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பால்கன் நாடுகள் எல்லாமே ஓர் விதத்தில், பொதுவாக மற்றவர்களை எப்படி பேய்க்காட்டி வாழலாம் (உழைப்பு, பழகுவது)  என்ற நடத்தை போக்கு கொண்டவை. 

இது அவர்களுடன் நீண்ட கால அனுபவத்தில் பழகும்  போதே தெரிய வரும்.

இது ஒரு கரணம் அவர்களுக்கு இடையில், எத்தனையோ நூற்றாண்டு கடந்தும், நம்பிக்கையீனம், சந்தேகிப்பது, ஒருவரை ஒருவர் வெறுப்பது (வரலாறும் காரணம்) ... என்பதற்கு   

உ.ம். croatia இல், அங்கு வரும் உல்லாச பிரயாணிகள் அவர்களுக்கு வருமானத்தை  ஈட்டித்த தருகிறார்கள் என்று தெரிந்தும், வேறு நாட்டவர்களை வேண்ட வெறுப்பாக நடத்துவது. 

eu இன்  அச்சாணி கழரும் அச்சு  பால்கன்  ஆகவே இருப்பதற்கு வாய்ப்புகள் கூட.  

சரியாக சொன்னீர்கள். பால்கன் நாடுகளில் உள்ளவர்களுக்கு இரண்டு முகம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

மிகுது 27 % கணிசமான அளவு என்று சொல்லலாம் தானே. மேலும் பெரும்பான்மையான இளவயதினர் என்று யாரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லையே...??! 

இதை தான் சொல்வது சப்புக்கட்டென்று. 27 சதவீதம் இளையோர் பிரக்சிட்டுக்கு வாக்களத்திருக்கிறார்கள். இது கணிசமான அளவும் கூட. அதாவது நாலில் ஒருவர் பிரக்சிட்டுக்கு வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வயதினருக்கு உல்லாசமே வாழ்க்கை.. குறிப்பாக சமூக வலை தாக்கம் அதிகம்.. என்றிருக்கும் போதும் கூட.. நாலில் ஒருவர் நாட்டைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார்கள்.

Map: Which Member States contributed the most to EU GDP?, as % in 2020

இத்தாலியும். ஆனால் இத்தாலியில் ஈ யூவுக்கு எதிரான மக்களின் எண்ணம் அதிகரித்தே வருகிறது. 

அப்ப நாலில் மூவர் ப்றெக்சிற்றை எதிர்த்தது "கணிசம்" இல்லையா கோபால்?😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பிரான்ஸ்சும் ஜேர்மனியும் தங்கள் பண பலத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டி வைத்திருக்கின்றார்கள்.

Christine-Lagarde-v1-52410d7bdaaf436686462f35f9879cb8.png

United States Secretary of the Treasury

Janet_Yellen_official_Federal_Reserve_portrait.jpg

இந்த இரு ஆச்சிமாருக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் உருவாக்குவதே முழுநேர வேலை.  
சாதாரண செய்திகளிலும் கட்டுரைகளிலும் பொருளாதார நெருக்கடி ...... பொருளாதார தேக்க நிலை 
என்று நீங்கள் வாசித்தும் கேட்டும் கொண்டிருக்கும் போது 

அமெரிக்க ஐரோப்பிய நடுத்தர ஏழை மக்களின் எதிர்கால முதலீடுகள் ட்ரில்லியன் டாலர் கணக்கில் காணாமல் போய் ....... பெருத்த பண முதலைகளின் கைகளுக்கு மாறியிருக்கும். 

எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டு இவர்களை இன்ச் அளவும் வெறுத்துவிடாதீர்கள் 
இவர்களையும் கொஞ்சம் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் .... அப்போதான் உங்களை அறியாமலே இவர்களை பின்தொடர தொடங்குவீர்கள். இவர்களுடைய நேர்காணல்கள் கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் அடுத்து எங்கு புள்ளி வைக்க போகிறார்கள் கோலம் என்ன வடிவாகும் என்பதை ஓரளவு கணிக்க முடியும்.

அமெரிக்காவை பொறுத்தவரை வேலையற்றோர் வீதம் (Unemployment)  மிக வெகுவாக குறைந்து இருக்கிறது ( விலைவாசி ஏற்றத்துக்கு  இதும் ஒரு காரணம்) அதை வெகுவாக ஏற்றி வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கையை கூட்டுவதுக்கு பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  வட்டி வீதத்தை வெகுவாக ஏற்றியதன் மூலம்  சிறிய வியாபார நிறுவங்களின் பணப்பரிமாற்றம் மற்றும் வங்கிகடன் தடைபட்டு அதன் மூலம் வேலையற்றோர் எண்ணிக்கை கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது அது எதிர்பார்த்ததுபோல அமையவில்லை. இதுக்கு மேல் வட்டி வீதம் கூடினால் பொருளாதாரம் இன்னமும் மந்த நிலை அடையும் என்பதால்  கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கிறார்கள். வரும் வருட பட்ஜட்டுக்கு கூடுதல் கடன் பெறுவதுக்கு  இப்போதே ஒப்புதல் கிடைத்துள்ளதால் மேலும் சில ட்ரில்லியன்கள் கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு  எனும் பெயரில்  பணக்காரரிடம் செல்ல இருக்கிறது.

5 வருடத்துக்கு முன்பு என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெளிந்த உண்மை. ஆதலால் இவர்கள் எப்போதுமே மீட்ப்பார்கள் வேஷம் கலையாமல் வாழ்வார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2023 at 11:36, குமாரசாமி said:

நூறுவீதம் உண்மை. எனக்கு கிட்டத்தட்ட 30  வருட அனுபவங்கள் உண்டு. சில வேளைகளில் எனது உழைப்பையே இழந்திருக்கின்றேன்.

டென்மார்க்

நோர்வே

சுவிட‌ன் உந்த‌ கோதாரிக்கை போய் விழாம‌ த‌ப்பிட்டு தாத்தா...........

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பிரான்ஸ்சும் ஜேர்மனியும் தங்கள் பண பலத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டி வைத்திருக்கின்றார்கள்.

அடுத்து ரூமேனியாவாம்.🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்ப நாலில் மூவர் ப்றெக்சிற்றை எதிர்த்தது "கணிசம்" இல்லையா கோபால்?😂

ஆமாம் அந்தக் கணிசமானவர்கள் தான் கடைசியில் வென்றிட்டார்கள். போட்டிக்கு கருத்தெழுதாமல்.. வேறு வகைக்கு உருப்படியா கருத்து வைக்கலாமே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

அடுத்து ரூமேனியாவாம்.🤣🤣🤣

ஜேர்மன்காரனே பழைய டொச்ச மார்க் காசிலை இருந்த சந்தோசம் இப்ப இல்லையெண்டுறான்😁

5 hours ago, பையன்26 said:

டென்மார்க்

நோர்வே

சுவிட‌ன் உந்த‌ கோதாரிக்கை போய் விழாம‌ த‌ப்பிட்டு தாத்தா...........

ஒண்டாயிருந்து  தண்ணியடிப்பம் ஆடுவம் பாடுவம் குத்தியாட்டம் போடுவம். 😄
காசு விசயத்தில மட்டும் மடியிலை கை வைக்காத. 😂
தாய் பிள்ளை எண்டாலும் வாயும் வயிறும் வேற எண்டமாதிரி🤣 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மன்காரனே பழைய டொச்ச மார்க் காசிலை இருந்த சந்தோசம் இப்ப இல்லையெண்டுறான்😁

ஒண்டாயிருந்து  தண்ணியடிப்பம் ஆடுவம் பாடுவம் குத்தியாட்டம் போடுவம். 😄
காசு விசயத்தில மட்டும் மடியிலை கை வைக்காத. 😂
தாய் பிள்ளை எண்டாலும் வாயும் வயிறும் வேற எண்டமாதிரி🤣 

பின்னை. உதுகளை கட்டியாள்வதற்கு  ஜேர்மனியும், பிரான்சும், இத்தாலியும் தலையால் நடக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஐரோப்பாவில் வாழ்ந்த போதிலும் அவர்களில் அரசியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மற்றும் தேவைகள் அதற்கான மனித வலு சார்ந்து பூச்சியமாகவே உள்ளோம் என்பது இங்கு எழுதப்படும் கருத்துக்கள் ஊடாக தெரிகிறது. 

ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் என்பதே வெளியே இருந்து ஐரோப்பா வருபவர்களை விடுத்து தமக்குள்ளேயே பகிர்தல் என்பது கூட தெரியாத இங்கே வந்து குடியேறியவர்களான நாமே உள்ளோம் என்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது. 

2050 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த பிரெஞ்சு பெண்ணும் பிள்ளை பெற்றுக்கொள்ள போவதில்லை என்பது ஒரு தரவு. அப்படியானால் அந்த இடத்தை நிரப்புவது யார்?? எது சிறந்த தெரிவு ஐரோப்பியர்களுக்கு?

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, விசுகு said:

நாம் ஐரோப்பாவில் வாழ்ந்த போதிலும் அவர்களில் அரசியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மற்றும் தேவைகள் அதற்கான மனித வலு சார்ந்து பூச்சியமாகவே உள்ளோம் என்பது இங்கு எழுதப்படும் கருத்துக்கள் ஊடாக தெரிகிறது. 

ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் என்பதே வெளியே இருந்து ஐரோப்பா வருபவர்களை விடுத்து தமக்குள்ளேயே பகிர்தல் என்பது கூட தெரியாத இங்கே வந்து குடியேறியவர்களான நாமே உள்ளோம் என்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது.

இதற்குள் எந்த உள் அரசியலும் இல்லை என சொல்ல வருகின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன்காரனே பழைய டொச்ச மார்க் காசிலை இருந்த சந்தோசம் இப்ப இல்லையெண்டுறான்😁

ஒண்டாயிருந்து  தண்ணியடிப்பம் ஆடுவம் பாடுவம் குத்தியாட்டம் போடுவம். 😄
காசு விசயத்தில மட்டும் மடியிலை கை வைக்காத. 😂
தாய் பிள்ளை எண்டாலும் வாயும் வயிறும் வேற எண்டமாதிரி🤣 

2002 தானே யூரோ காசு வெளி வ‌ந்த‌து

டென்மார்க் ம‌க்க‌ள் 55 விழுக்காடு பேர் யூரோ வேண்டாம் என்று சொன்னார்க‌ள்

45 வித‌ பேர் யூரோ வேணும் என்று

இந்த‌ வெள்ளைய‌ல் ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் திற‌மையா நாட்டை ஆளுன‌ம்...........உக்கிரேன் பிர‌ச்ச‌னை தொட்டு நேட்டோவில் சேர்ந்த‌து தொட்டு எல்லாம் முட்டாள் த‌ன‌மான‌ முடிவு 

இங்கை ம‌க்க‌ளின் முடிவு தான் எதையும் தீர்மானிக்கும் புட்டினின் அடி இங்காள் ப‌க்க‌மும் விழுமாய் இருந்தா டென்மார்க் வெள்ளைய‌லுக்கு அப்ப‌ தான் நல்ல‌ புத்தி வ‌ரும் 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

நாம் ஐரோப்பாவில் வாழ்ந்த போதிலும் அவர்களில் அரசியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மற்றும் தேவைகள் அதற்கான மனித வலு சார்ந்து பூச்சியமாகவே உள்ளோம் என்பது இங்கு எழுதப்படும் கருத்துக்கள் ஊடாக தெரிகிறது. 

ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் என்பதே வெளியே இருந்து ஐரோப்பா வருபவர்களை விடுத்து தமக்குள்ளேயே பகிர்தல் என்பது கூட தெரியாத இங்கே வந்து குடியேறியவர்களான நாமே உள்ளோம் என்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது. 

2050 ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த பிரெஞ்சு பெண்ணும் பிள்ளை பெற்றுக்கொள்ள போவதில்லை என்பது ஒரு தரவு. அப்படியானால் அந்த இடத்தை நிரப்புவது யார்?? எது சிறந்த தெரிவு ஐரோப்பியர்களுக்கு?

எங்களுக்கு ஈயு (freedom of movement), செங்கன் (borderless travel), ஈரோ (monetary union) இடையான வேறுபாட்டை விளங்கி கொள்ள கூட நேரமில்லை. எழுதினாலும் வாசிக்க மாட்டம் 🤣.

எங்ககிட்ட போய், ஐரோப்பிய யூனியனின்  நீண்டகால மூலோபாயம் பற்றி கதைத்தால்…

நாங்கள் ரொமேனியன் குப்பாடி…பால்கன்ஸ் கொசப்பு…இதுக்கு மேலே போக மாட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

எங்களுக்கு ஈயு (freedom of movement), செங்கன் (borderless travel), ஈரோ (monetary union) இடையான வேறுபாட்டை விளங்கி கொள்ள கூட நேரமில்லை. எழுதினாலும் வாசிக்க மாட்டம் 🤣.

எங்ககிட்ட போய், ஐரோப்பிய யூனியனின்  நீண்டகால மூலோபாயம் பற்றி கதைத்தால்…

நாங்கள் ரொமேனியன் குப்பாடி…பால்கன்ஸ் கொசப்பு…இதுக்கு மேலே போக மாட்டம்.

ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கிய காலத்திற்கு இந்நேரம் முழு ஐரோப்பாவும் முன்னேறி இருக்க வேண்டுமே?????

பக்கத்து நாடு போலந்திற்கு போய் பார்த்தால் தெரியும் ஐரோப்பிய அவலங்கள். பெரிய பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து வெளியேற  காரணம் என்னவாக இருக்கும்?
 
10 minutes ago, goshan_che said:

எங்களுக்கு ஈயு (freedom of movement), செங்கன் (borderless travel), ஈரோ (monetary union) இடையான வேறுபாட்டை விளங்கி கொள்ள கூட நேரமில்லை. எழுதினாலும் வாசிக்க மாட்டம் 🤣.

உங்களைப்போன்ற மாபெரும் புத்திசாலிகள் இருந்தும் தமிழினத்திற்கென ஒரு நாடில்லாதது இன்னும் அதிசயம் தான் 🤪

அறிவுக்கொழுந்துகள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன்காரனே பழைய டொச்ச மார்க் காசிலை இருந்த சந்தோசம் இப்ப இல்லையெண்டுறான்😁

ஒண்டாயிருந்து  தண்ணியடிப்பம் ஆடுவம் பாடுவம் குத்தியாட்டம் போடுவம். 😄
காசு விசயத்தில மட்டும் மடியிலை கை வைக்காத. 😂
தாய் பிள்ளை எண்டாலும் வாயும் வயிறும் வேற எண்டமாதிரி🤣 

இங்கை இப்ப‌ போல‌ந் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் கூட‌ வேலை செய்யின‌ம் தாத்தா

போல‌ந் நாட்ட‌வ‌ருக்கு கூட‌ நேர‌ம் வேலை குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு 

கோழிக‌ள் ப‌க்றி தொட்டு ப‌ல‌ இட‌ங்க‌ளில் தாத்தா

போல‌ந் கார‌ன் வ‌ருவ‌துக்கு முதல் இங்கை வேலைக்கு நிறைய‌ ஆட்க‌ள் தேவை.............இப்ப‌ ப‌ல‌ பேர் வேலை தேடி தான் எடுக்க‌னும் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கிய காலத்திற்கு இந்நேரம் முழு ஐரோப்பாவும் முன்னேறி இருக்க வேண்டுமே?????

பக்கத்து நாடு போலந்திற்கு போய் பார்த்தால் தெரியும் ஐரோப்பிய அவலங்கள். பெரிய பிரித்தானியா ஒன்றியத்திலிருந்து வெளியேற  காரணம் என்னவாக இருக்கும்?
 
1900-1950, 1950-2022 ஐரோப்பாவில் நடந்த யுத்த அழிவை ஒப்பிட்டால், வாழ்க்கை தர உயர்வை ஒப்பிட்டால் - ஈயூ வெற்றியா தோல்வியா என காணலாம்.

போலந்தை விட மோசமான பகுதிகள் இங்கிலாந்தில் உண்டு. பிரான்ஸ், ஜேஎமனியிலும்.

பெரிய பிரித்தானியா வெளியேற பல காரணக்கள்.

அதில் மிக முதன்மையானது - 2008 சரிவுக்கு - பின் ஆட்சிக்கு வந்த 2010 அரசாங்கம் எடுத்த கடுமையான பொது சன சேவை “வெட்டு” முடிவு.

இதனால் அரச உதவி, அரச உதவியோடு வீடு, சுகாதார சேவை, பள்ளிகூடத்தில் இடம் என சராசரிக்கும் குறைவான செல்வம் உடைய குடும்பங்கள் பலத்த சரிவை சந்தித்தன.

இந்த கோபத்தை 2010-2016, இந்த முழுக்க முழுக்க ஐரோப்பிய குடி ஏறிகளால் விளைந்தது என உரு ஏற்றி வளர்த்து விட்டு, 2016 இல் பிரெக்சிற்றை வைத்தார்கள்.

தென்கிழக்கு இங்கிலாந்து, லண்டன் போன்ற காசு பிழங்கும் பகுதிகள் பிரெக்சிற்றை ஆதரிக்கவில்லை. வட கிழக்கு, வட மேற்கு, கிழக்கு இங்கிலாந்து, இப்படி வருமானம் குறைந்த பகுதிகள் கடுமையாக ஆதரித்தன.

இதில் கொடுமை என்ன என்றால் - இந்த வறிய பகுதிகள்தான் ஈயூவில் இருந்து அதிக பணம் (funding) பெற்றன. ஆனால் ஈயூவுக்கு அனுப்பும் காசில் கிழமைக்கு £350 மில்லியனை NHS க்கு கொடுப்போம். தேனும் பாலும் ஓடும். எங்கள் முழு மீன்பிடி வளத்தையும் எடுப்போம் (பிரான்சை துரத்தி விட்டு) - அமெரிகாவோடு வர்த்த உடன்படிக்கை செய்வோம்…

இப்படி பொய்களை அவிழ்த்து விட்டு - மக்களை முட்டாள் ஆக்கி - இனவாதத்தை தூண்டி - பிரெக்சிற்றை ஒப்பேத்தினார்கள்.

இப்போ பெருவாரியான மக்கள் பிரெக்சிற் ஒரு மொக்கு வேலை என்பதை ஏற்கிற்ரகள்.

அமெரிகாவோடு ஒரு உடன்படிக்கையும் இல்லை. மீன்பிடி, விவசாயம், சகலதுறைகளிலும் பிரெக்சிற்றால் வீழ்ச்சி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

GB News என்பது இப்போ யூகேயில் முளைத்திருக்கும் ஒரு காளான் செய்தி நிறுவனம். முழுக்க முழுக்க வலதுசாரி, பிரெக்சிற் ஆதரவு.

அவர்கள் அண்மையில் நடத்திய கருத்து கணிப்பில் வந்த முடிவு - அவர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை🤣.

https://www.thepoke.co.uk/2022/11/21/watch-moment-gb-news-presenter-realises-poll-went-against-brexit/

இப்போ ஒரு வாய்ப்பு தந்தால் எப்படி வாக்களிப்பீர்கள் என அவர்கள் டிவிட்டரில் கேட்க 18,700 பேரில் 55% பிரெக்சிற்றுக்கு எதிராக வாக்களிப்போம் எண்டு போட்டு - அவர்களை டென்சன் ஆக்கி விட்டார்கள் 😝.

இத்தனைக்கும் இந்த மாதிரி சேனல்களை பார்ப்போர் பெரிதும் ஐரோப்பியர் மேல் காழ்புணர்வு உள்ள, டிரம்ப் ஆதரவு மனநிலையில் உள்ள, பிரெக்சிற்றை ஆதரித்த மொக்கு கூட்டங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

2020-2022 டிசெம்பர் வரை யூகேயில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்புகளின் படி ஈயூவை நீங்கியது சரியா தவறா என்ற கேள்விக்கு பதில் 👇.

https://www.statista.com/statistics/987347/brexit-opinion-poll/

One in five who voted for Brexit now think it was the wrong decision

Peter RavenData Journalist
November 17, 2022, 9:17 AM GMT+

  • The wider public now think Britain was wrong to leave the European Union by 56% to 32%

https://yougov.co.uk/topics/politics/articles-reports/2022/11/17/one-five-who-voted-brexit-now-think-it-was-wrong-d

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

1900-1950, 1950-2022 ஐரோப்பாவில் நடந்த யுத்த அழிவை ஒப்பிட்டால், வாழ்க்கை தர உயர்வை ஒப்பிட்டால் - ஈயூ வெற்றியா தோல்வியா என காணலாம்.

போலந்தை விட மோசமான பகுதிகள் இங்கிலாந்தில் உண்டு. பிரான்ஸ், ஜேஎமனியிலும்.

பெரிய பிரித்தானியா வெளியேற பல காரணக்கள்.

அதில் மிக முதன்மையானது - 2008 சரிவுக்கு - பின் ஆட்சிக்கு வந்த 2010 அரசாங்கம் எடுத்த கடுமையான பொது சன சேவை “வெட்டு” முடிவு.

இதனால் அரச உதவி, அரச உதவியோடு வீடு, சுகாதார சேவை, பள்ளிகூடத்தில் இடம் என சராசரிக்கும் குறைவான செல்வம் உடைய குடும்பங்கள் பலத்த சரிவை சந்தித்தன.

இந்த கோபத்தை 2010-2016, இந்த முழுக்க முழுக்க ஐரோப்பிய குடி ஏறிகளால் விளைந்தது என உரு ஏற்றி வளர்த்து விட்டு, 2016 இல் பிரெக்சிற்றை வைத்தார்கள்.

தென்கிழக்கு இங்கிலாந்து, லண்டன் போன்ற காசு பிழங்கும் பகுதிகள் பிரெக்சிற்றை ஆதரிக்கவில்லை. வட கிழக்கு, வட மேற்கு, கிழக்கு இங்கிலாந்து, இப்படி வருமானம் குறைந்த பகுதிகள் கடுமையாக ஆதரித்தன.

இதில் கொடுமை என்ன என்றால் - இந்த வறிய பகுதிகள்தான் ஈயூவில் இருந்து அதிக பணம் (funding) பெற்றன. ஆனால் ஈயூவுக்கு அனுப்பும் காசில் கிழமைக்கு £350 மில்லியனை NHS க்கு கொடுப்போம். தேனும் பாலும் ஓடும். எங்கள் முழு மீன்பிடி வளத்தையும் எடுப்போம் (பிரான்சை துரத்தி விட்டு) - அமெரிகாவோடு வர்த்த உடன்படிக்கை செய்வோம்…

இப்படி பொய்களை அவிழ்த்து விட்டு - மக்களை முட்டாள் ஆக்கி - இனவாதத்தை தூண்டி - பிரெக்சிற்றை ஒப்பேத்தினார்கள்.

இப்போ பெருவாரியான மக்கள் பிரெக்சிற் ஒரு மொக்கு வேலை என்பதை ஏற்கிற்ரகள்.

அமெரிகாவோடு ஒரு உடன்படிக்கையும் இல்லை. மீன்பிடி, விவசாயம், சகலதுறைகளிலும் பிரெக்சிற்றால் வீழ்ச்சி.

இங்கேயும்  இப்படித்தான்  இனவாதத்தை  தூண்டினார்கள்

ஆனால்  ஆட்சியிலிருந்தவர்கள்  மற்றும் தூரநோக்குடைய பிரெஞ்சு மக்களை  இவர்களால்  முட்டாளாக்கமுடியவில்லை

தற்போது இவர்களம்  ஐரோப்பா  தேவை என  ஒத்தூத  தொடங்கிவிட்டார்கள்

அதற்கு  காரணம்  மேலே நான்  சொன்ன நம்முக்குள்ளேயே...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இங்கேயும்  இப்படித்தான்  இனவாதத்தை  தூண்டினார்கள்

ஆனால்  ஆட்சியிலிருந்தவர்கள்  மற்றும் தூரநோக்குடைய பிரெஞ்சு மக்களை  இவர்களால்  முட்டாளாக்கமுடியவில்லை

தற்போது இவர்களம்  ஐரோப்பா  தேவை என  ஒத்தூத  தொடங்கிவிட்டார்கள்

அதற்கு  காரணம்  மேலே நான்  சொன்ன நம்முக்குள்ளேயே...

இங்கே வேறு எந்த காலப்பகுதியிலும் இந்த பாட்சா பலித்திருக்காது.

இரெண்டு பெரிய கட்சியில் பழமைவாத கட்சி 60-70% பிரெக்சிற் ஆதரவாக இருந்தது. ஆகவே கட்சி சொன்னதை பலர் கேட்கவில்லை.

தொழிலாளர் கட்சியில் அப்போ தலைவராய் இருந்தவர் வாழ்நாள் ஐரோப்பிய எதிர்ப்பாளர் (கம்யூனிச சிந்தாந்த காரணம்).

ஆகவே கட்சியை அவர் முழுமூச்சாக இறக்கவில்லை. சும்மா ஒப்புக்கு பேசியதோடு சரி.

குறிப்பாக மக்களின் “கோவம்”. இதுக்கு 2010 இல் வந்த “சேவை வெட்டு” தான் காரணம். ஆனால் அதை தூக்கி அப்படியே ஈயு மேல் போட்டு விட்டார்கள்.

இத்தாலியில் தூண்டியவவும் இப்போ அடக்கி வசிக்கிறா🤣.

புட்டின் ஆதரவு கூட 180 பாகையால் திரும்பி விட்டது🤣. @குமாரசாமி அண்ணை அவவ நம்பி ஏமாந்து போனார் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.