Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்களோ உண்மை தெரியாமல் அவரை நக்கல் அடிக்க, மற்றவர்கள் பலர் அவரை ஒரு ஹீரோவாக பார்த்து புகழ்பாட நல்ல பகிடி தான 😂

மேற்கு வங்காள முத‌ல்வ‌ர் என்ன‌ சொன்னார் வ‌ங்கிளாதேஸ்சுக்கு உங்க‌ட‌ ப‌டைய‌ அனுப்புறீங்க‌லா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று ]
இப்படியும் ஒன்று நடந்ததா?  தன‌து காவ‌ல்துறை - பொலிஸ்சை அனுப்பவா என்று கேட்ட மேற்கு வங்காள முத‌ல்வ‌ர் முட்டாளாக தானே இருப்பார்.

பாகிஸ்தானிட‌ம் இருந்து வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து ?

கோசான் என்ன‌வோ எழுத‌ நீங்க‌ள் நித்திரையால் எழும்பி க‌ண்ட‌த‌ கிறுக்கின‌ மாதிரி தெரியுது 😂😁🤣 

  • Replies 139
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

அதி உத்தமர் மாண்புமிகு புட்டின் அவர்கள் நினைத்தால்,
அமெரிக்காவை…. சிதறு தேங்காய் மாதிரி, பல சிறு நாடுகளாக பிரிக்கலாம்.
ஆனால் அவர் இப்படியான கீழ்த்தரமான வேலைகளை செய்ய மாட்டார்.
எதிரிக்கும்… கருணை காட்டுபவரே சிறந்த அரசியல்வாதி. அவர் தான்… மாண்புமிகு புட்டின்.

மேற்குலகை மாதிரி மற்றவனை சுரண்டித்தின்ன ரஷ்ய பெரும்குடிமக்களுக்கு எந்த அவசியமுமில்லை. அந்த நிலைக்கு மாண்புமிகு அதி உத்தம பெரு மதிப்புக்குரிய புட்டின் அவர்கள் ரஷ்யாவிற்கு அந்த நிலமையை ஏற்படுத்தவுமில்லை. ஏற்பட போவதுமில்லை.

உக்ரேனுக்காக இரத்தக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்காவில் இருக்கும் இந்தக்கேவலம் ரஷ்யாவில் இல்லை ராசாக்களே🤪 🥀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nedukkalapoovan said:

சதாம் குசைன் உண்மையில் ஈரான் - ஈராக் போரில் அமெரிக்காவின் பக்கம் நின்றவர். கடைசியில்.. அமெரிக்கனே அவர் கழுத்தை அறுத்திட்டான். கடாபியும் ஒரு காலத்தில் மேற்குச் சார்ந்து நின்று ஏமாந்தவர்.

அமெரிக்கன் சதாம்,கடாபிக்கு செய்ததை போல் புட்டினுக்கும் செய்ய நினைத்திருப்பார்கள். அதாலை தான் உக்ரேனுக்கு கண் மூக்கு தெரியாமல் சாத்துப்படி நடக்குது.......

இந்தா உக்ரேனுக்கு ஆயுதங்கள் காசுகள் அள்ளி அள்ளி குடுக்கிறம் எண்டுறாங்கள்.  செலென்ஸிக்கு அடி குறைஞ்சமாதிரி தெரியேல்லை

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பையன்26 said:

கோசான் என்ன‌வோ எழுத‌ நீங்க‌ள் நித்திரையால் எழும்பி க‌ண்ட‌த‌ கிறுக்கின‌ மாதிரி தெரியுது

இல்லை.  அமெரிக்காவின் சிலிப்பர் செல்  புரின் என்று தெரியாமல் அவரை தாக்கிவிட்டேனே என்று கோஷான் சே  கவலைபட்டார். அதற்கு நான் சொன்ன கருத்து அது.
இந்தியா மேற்கு மாகாண முத‌ல்வ‌ர்  வ‌ங்கிளாதேசுக்கு உங்க‌ட‌ ப‌டைய‌ அனுப்ப போகின்றீர்களா அல்ல‌து என‌து பொலிஸ்சை அனுப்பவா என்று கேட்டதாக இந்த திரியில் செய்தி பார்த்தேன் இப்படி  ஏமாற்றுகார முதல் அமைச்சர் முன்பு இருந்தாரா என்று வியப்பாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உடனடி பார்வையில்  (மத்திம, நீண்ட கால பார்வையில் அல்ல),  

Neocons' (Nato's) nuclear Armageddon in or for breaking Russia?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2023 at 22:50, nedukkalapoovan said:

அமெரிக்கன் மட்டும்.. என்னவாம். இந்தா கப்பல் கொண்டு வாறன் என்றிட்டு.. முள்ளிவாய்க்காலில் அப்படியே வைச்சு காவு கொண்டுட்டானே. 

அமெரிக்கன் கப்பலை நம்பி புலிகள் போராடவில்லை.  அப்படி கூறுவது புலிகளை கொச்சைப்படுத்துவதாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை களமும் ன்னான் நம்பவில்லை, அனால், பென்டகன் பாத்தீட்டு சரத்துகளில் ருசியா தங்கத்தை குறிவைப்பதை நேரடியாக எழுத்தில் காணும் போது, ருசியாவை நேட்டோ உடைக்க முற்படுகிறது என்பதை நம்ப வேண்டி இருக்கிறது.

Neocons இந்த சிந்தனையும் அப்படியே இருக்கிறது. Neocons அரசியல் அடிப்படையில், அவர்களின் உலக அமைப்பு  சிந்தனாவாதத்தை  (world view), 1995 க்கு பின் வந்த அமெரிக்க / நேட்டோ யுத்தங்களில் மற்ற சிந்தனைவாதங்களை பின்தள்ளி நிகழ்ச்சி நிரல்களில் முன்னிறுத்தியது.

இப்பொது, உக்கிரைன் - ருஷ்யாவிலும் அதுவே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது; வேறுபாடு ரஷ்யா இடம் அணு ஆயுதம் உள்ளது, வளமும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

இல்லை.  அமெரிக்காவின் சிலிப்பர் செல்  புரின் என்று தெரியாமல் அவரை தாக்கிவிட்டேனே என்று கோஷான் சே  கவலைபட்டார். அதற்கு நான் சொன்ன கருத்து அது.
இந்தியா மேற்கு மாகாண முத‌ல்வ‌ர்  வ‌ங்கிளாதேசுக்கு உங்க‌ட‌ ப‌டைய‌ அனுப்ப போகின்றீர்களா அல்ல‌து என‌து பொலிஸ்சை அனுப்பவா என்று கேட்டதாக இந்த திரியில் செய்தி பார்த்தேன் இப்படி  ஏமாற்றுகார முதல் அமைச்சர் முன்பு இருந்தாரா என்று வியப்பாக இருந்தது.

ச‌ரி விடுங்கோ
இந்திரா காந்தி அம்மையாரின் துணிச்ச‌லான‌ ந‌ட‌வ‌டிக்கையின் மூல‌ம் வ‌ங்ளாதேஸ்  த‌னி நாடான‌து ?
 
  • கருத்துக்கள உறவுகள்

1990ல் சோவியத் உடைந்த போது, நூறாண்டுகளாக விடுதலைக்கு போரிட்ட, செச்சினியா என்று இஸ்லாமியர் நிறைந்த ஒரு நாடும் பிரிந்தும் சுதந்திரத்தினை அறிவித்தது.

ஆனால் ரஷ்யா அதனை 1994ல் ஆக்கிரமித்து. போராளிகள் விடுதலைப்போரினை வீராவேசத்துடன் தொடங்கிய போது, 2000ம் ஆண்டில் பெரும் குண்டு வீச்சுகளை நிகழ்த்தி மிகமோசமான அடக்குமுறையினை புட்டின் கட்டவிழ்த்து விட்டார். அனேகமாக, இளவயது ஆண்கள் இல்லாத ஒரு நாடாக ஆக்கி, பெண்களை பாலியல் வக்கிரகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் ரசிய படைகள். 

தோமஸ் டீ வால் எனும் நிருபர், இந்த மூர்க்கத்தனமான புட்டினின் நடவடிக்கையே, கிரிமியா மேல் தொடர்ந்து அதனையும் பிடித்து ஆளுமைக்கு கொண்டு வந்த புட்டினை, மேற்கு கண்டுகொள்ளாமல் விட்டதால், அவருக்கு அதீத நம்பிக்கை வந்து,  அப்படியே உக்ரேன் மேல் தாக்குதலையும் தொடங்கினார் என்கிறார்.

ஆக, புட்டின் தடுக்கப்படாவிடில், அவர் ஒரு அடுத்த நாடுகளை கபளீகரம் செய்யும் நவீன ஹிட்லர் ஆவார் என்கிறார் தோமஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, island said:

அமெரிக்கன் கப்பலை நம்பி புலிகள் போராடவில்லை.  அப்படி கூறுவது புலிகளை கொச்சைப்படுத்துவதாகும். 

அந்த கதையும் உலாவியது  உண்மைதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Nathamuni said:

புட்டின் செய்தது அவ்வளவும் ரஷ்ய  கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளை.....
இதர நாடுகளை  களீபரம் செய்யும் அளவிற்கு அந்த நாடுகள் பலம் குன்றியா இருக்கின்றன?
அல்லது பூ பறித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனவா?

ரஷ்யா மற்ற நாடுகளை களிபரம் செய்வதற்கு மாற்றான் சொத்துக்களை பறித்து தின்னும் அளவிற்கு பஞ்ச நாடும் அல்ல.ரஷ்யாவிற்கு காலநிலை  சிக்கலை தவிர வேறொரு சிக்கலுமில்லை.😎

இதை உங்கள் தோமஸ்க்கு எடுத்து சொல்லுங்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

சொல்லுறன், சொல்லுறன்.... 😁

தமிழிலயா, டச்சிலையா என்று யோசிக்கிறேன்.....🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2023 at 10:48, Justin said:

முதலில் போரைத் துவங்கியது புட்டின் தான் என்றாலும், இதில் பெரிய நன்மைகள் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்குக் கிடத்திருக்கிறது. இது windfall என்பார்கள், சும்மா இருக்க மடியில் விழும் இலாபம்😂: நேட்டோவில் இராணுவ ஓர்மம் கொண்ட சுவீடன், பின்லாந்து இணைவு,  நோட்டோ நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம், 2014 இல் உருவாக்கிய ஈட்டிமுனை நேட்டோ படையை நிரந்தர நேட்டோ படையாக்கும் முயற்சிகளில் முன்னேற்றம்.

புட்டினுக்கு மேற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது, இவர் 90 களில் அமெரிக்கா உள்நுழைய வைத்த sleeper agent ஓ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது!😅

ஐரோப்பாவுக்கு வாயு, பெற்றோலை அறா விலைக்கு விற்பதும்  அமெரிக்காவுக்கு லாபம் என்பதை இலகுவாக மறந்து விட்டீர்கள்.
அமெரிக்கா ஐரோப்பாவை பார்த்து நண்பேன்டா என்று சொன்னதாம்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Nathamuni said:

சொல்லுறன், சொல்லுறன்.... 😁

தமிழிலயா, டச்சிலையா என்று யோசிக்கிறேன்.....🤔

அப்படியான நிருபர் நிச்சயம் பெரிய பிரித்தானியா அல்லது வட அமெரிக்கராகத்தான்  இருப்பார். ஆகவே உங்களுக்கு இங்கிலிஷ் அந்த மாதிரி தெரியுமெல்லோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

1990ல் சோவியத் உடைந்த போது, நூறாண்டுகளாக விடுதலைக்கு போரிட்ட, செச்சினியா என்று இஸ்லாமியர் நிறைந்த ஒரு நாடும் பிரிந்தும் சுதந்திரத்தினை அறிவித்தது.

ஆனால் ரஷ்யா அதனை 1994ல் ஆக்கிரமித்து. போராளிகள் விடுதலைப்போரினை வீராவேசத்துடன் தொடங்கிய போது, 2000ம் ஆண்டில் பெரும் குண்டு வீச்சுகளை நிகழ்த்தி மிகமோசமான அடக்குமுறையினை புட்டின் கட்டவிழ்த்து விட்டார். அனேகமாக, இளவயது ஆண்கள் இல்லாத ஒரு நாடாக ஆக்கி, பெண்களை பாலியல் வக்கிரகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் ரசிய படைகள். 

தோமஸ் டீ வால் எனும் நிருபர், இந்த மூர்க்கத்தனமான புட்டினின் நடவடிக்கையே, கிரிமியா மேல் தொடர்ந்து அதனையும் பிடித்து ஆளுமைக்கு கொண்டு வந்த புட்டினை, மேற்கு கண்டுகொள்ளாமல் விட்டதால், அவருக்கு அதீத நம்பிக்கை வந்து,  அப்படியே உக்ரேன் மேல் தாக்குதலையும் தொடங்கினார் என்கிறார்.

ஆக, புட்டின் தடுக்கப்படாவிடில், அவர் ஒரு அடுத்த நாடுகளை கபளீகரம் செய்யும் நவீன ஹிட்லர் ஆவார் என்கிறார் தோமஸ்.

அப்போ நேட்டோவே ரஸ்யாவை அடித்திருக்கலாமே.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் காட்டிய வீரம் ரஸ்யாவில் காட்டாமல்  கிழக்கு ஐரோப்பாவில் பதுங்குவது ஏன்?

4 hours ago, island said:

அமெரிக்கன் கப்பலை நம்பி புலிகள் போராடவில்லை.  அப்படி கூறுவது புலிகளை கொச்சைப்படுத்துவதாகும். 

நடுநிலமை என்று வந்தவர்களின் நடுநிலைமைக்கு என்னானது.  ? யுக்ரேனில் குண்டு மழையிலும் கமறாவும் கையுமாக நிற்பவர்கள் போர் தொடங்க முன் வன்னியை விட்டு ஓடியது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஐரோப்பாவுக்கு வாயு, பெற்றோலை அறா விலைக்கு விற்பதும்  அமெரிக்காவுக்கு லாபம் என்பதை இலகுவாக மறந்து விட்டீர்கள்.
அமெரிக்கா ஐரோப்பாவை பார்த்து நண்பேன்டா என்று சொன்னதாம்.🤣

ரஷ்யாவிடம் எரிபொருளுக்குத் தங்கியிருப்பதை விட அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளில் தங்கியிருப்பது நல்லதென ஐரோப்பாவே கருதும் போது வேறென்ன செய்ய முடியும் புட்டினால்?

 முதல் உலகப் போரிலும் சரி, இரண்டாம் போரிலும் சரி, இனி வரக் கூடிய போரிலும் சரி, அமெரிக்கா ஐரோப்பாவின் நண்பன் தான்!

இதை வரலாற்று நூல்களை  வாசிப்பதால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் நுணா. யூ ரியூப், ரிக் ரொக் வீடியோக்களைப் பார்ப்பதால் இதை விளங்குவது கடினம்😎

1 hour ago, nunavilan said:

அப்போ நேட்டோவே ரஸ்யாவை அடித்திருக்கலாமே.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் காட்டிய வீரம் ரஸ்யாவில் காட்டாமல்  கிழக்கு ஐரோப்பாவில் பதுங்குவது ஏன்?

நடுநிலமை என்று வந்தவர்களின் நடுநிலைமைக்கு என்னானது.  ? யுக்ரேனில் குண்டு மழையிலும் கமறாவும் கையுமாக நிற்பவர்கள் போர் தொடங்க முன் வன்னியை விட்டு ஓடியது ஏன்?

உக்ரைன் தன் நட்டில் நிற்க அனுமதித்ததால் நிற்கிறார்கள். இலங்கை அரசு வெளியேறு என்று கட்டளை போட்டதால் MSF தவிர ஏனையோர் வெளியேறினார்கள்.

என்ன நுணா? ஒரு பிரபலமான தமிழ் தளத்தில் பொறுப்பாளராக இருக்கிறீர்கள், ஆனால் 13 வருடங்கள் முன்பு எங்கள் ஊரில் நடந்த சம்பவங்களையே "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" கணக்காக நினைவில் வைத்திருக்கிறீர்கள்?😂 பிறகு களம் எப்படி உருப்படும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Justin said:

ரஷ்யாவிடம் எரிபொருளுக்குத் தங்கியிருப்பதை விட அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளில் தங்கியிருப்பது நல்லதென ஐரோப்பாவே கருதும் போது வேறென்ன செய்ய முடியும் புட்டினால்?

 முதல் உலகப் போரிலும் சரி, இரண்டாம் போரிலும் சரி, இனி வரக் கூடிய போரிலும் சரி, அமெரிக்கா ஐரோப்பாவின் நண்பன் தான்!

அமெரிக்காவின் அடாவடித்தனங்களை நினைத்து ஐரோப்பிய மக்கள் வாய்க்குள் முணுமுணுப்பது ஐரோப்பாவில் வாழும் எமக்குத்தான் தெரியும்.
பெரிய பிரித்தானியா இதற்குள் அடங்காது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் அடாவடித்தனங்களை நினைத்து ஐரோப்பிய மக்கள் வாய்க்குள் முணுமுணுப்பது ஐரோப்பாவில் வாழும் எமக்குத்தான் தெரியும்.
பெரிய பிரித்தானியா இதற்குள் அடங்காது. 😂

வாய்க்குள் அல்லது காதுக்குள் உங்கள் சினேகிதர்கள் முணுமுணுப்பதெல்லாம் ஐரோப்பிய அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை என்ன செய்யும்? ஒன்றும் செய்யாது!

இரண்டு போரிலும் அமெரிக்காவின் வலிமை தேவைப் பட்டது போல, இனியும் தேவைப் படும். இல்லா விட்டால் புட்டின் போல யாராவது வந்து வாசல் கதவைத் தட்டும் போது வேற யார் சீனாவா உதவி அனுப்பும்?  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Justin said:

இதுதான் எல்லா விடயங்களும் படிக்கும் புத்தகங்களில் வராது. பலது அரசியலுக்காக அடக்கி அமுக்கப்பட்டு விடும். அதெல்லாம் உங்களுக்கு தெரிய வராது. பக்கத்தில் என்ன நடக்கின்றது என தெரியாமல் குதிரை மாதிரி ஓட வேண்டியதுதான். ஏனைய ஊடகங்கள் எது சொன்னாலும் காது கொடுத்து பார்ப்பதும் இல்லை. பல ஊடகங்களை தடை செய்து விட்டு தாங்கள் செய்வதெல்லாம் சரியென ஊதிப்பெருப்பிக்கும் ஊடகங்களை சார்ந்தவர்கள் தான் தாங்களும் தாங்கள் சார்ந்தோரும்.

ஜேர்மனியில் முக்கிய ஊடகங்கள்  அதிரடியாக சொல்ல மறுக்கும் விடயம் ஒன்று பூதாகாரமாக இருக்கின்றது. ஊடகங்கள் உண்மைகளை வெளியே சொன்னால் ஒவ்வொரு ஜேர்மனியனும் கிட்லராகத்தான் மாறுவான். அவ்வளவு  கொடுமையாக பிரச்சனைகள் புகைகின்றது.

இந்த முறை யார் வந்து கதவை தட்டுகிறார்களென பார்ப்போம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சில ஆயிரம் பேர் வேலை செய்யும் பிரதான ஜேர்மனிய மேற்குலக ஊடகங்களில் ஒருவர் கூட வாய் திறக்க முடியாதபடி என்ன மந்திரப் பூட்டா ஐயா போட்டிருக்கிறார்கள்?😂

அல்லது ரஷ்யாவில் இருப்பது போல "போர்" என்று உச்சரித்தால்  15 வருடம் தண்டனை என்று பயமூட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?😎

உங்களுக்கு நீங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் ஊடக சுதந்திரம் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறீர்கள், இந்த லட்சணத்தில் ரஷ்ய ஊது குழல்களைத் தடை செய்தது பற்றிய கவலை வேறு வருகிறதே? மேற்குல தடை செய்தால் என்ன? ரெலிகிராமிலும், வேறு தளங்களிலும் RT பார்க்கலாம் அல்லவா?

Fringe ஊடகங்களின் சதிக் கதைகளை நம்பி ஹிற்லர், புட்டின் வகையறாக்களை  உலக ஹீரோக்களாக மாற்றுவதில் தான் இது முடியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Justin said:

கடந்த 3- 4 நாட்களாக தொலைக்காட்சி மற்றும் வானொலியை மிக கவனமாக கேட்டு வருகின்றேன்.  அரசு அனுமதிப்பதைத்தான் ஊடகங்களும் சொல்லின்றதோ என்ற சந்தேகத்தை பூர்த்தி செய்வதாகவே இருக்கின்றது.

இது சம்பந்தமாக மேலும் கருத்தாட விரும்பவில்லை காரணம்  கண் மறைக்கப்பட்ட குதிரைகள் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்......

Horse carriage racing | அன்னவாசலில் குதிரை வண்டி பந்தயம் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

எனக்கு நேரம் பொன்னானது. 😎

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இங்கும் (பிரான்சில்) ஒரு பயம்  இருந்தது

இப்ப  ரசியா    எப்ப  கையை தூக்கப்போகிறது என்பது  தான்  கேள்வி??

எப்படி  இருந்த  ரசியா???

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் அடாவடித்தனங்களை நினைத்து ஐரோப்பிய மக்கள் வாய்க்குள் முணுமுணுப்பது ஐரோப்பாவில் வாழும் எமக்குத்தான் தெரியும்.
பெரிய பிரித்தானியா இதற்குள் அடங்காது. 😂

அடங்கும், அடங்கும்.... உடான்சு சுவாமியார் இங்கை தான் இருந்து புறுபுறுத்துக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அடங்கும், அடங்கும்.... உடான்சு சுவாமியார் இங்கை தான் இருந்து புறுபுறுத்துக் கொண்டிருக்கிறார்.

ஐ…நீங்களும் இந்த சப்ஜெக்ட்டில் உடாஸ்சின் சைட் எண்டு எனக்கும் தெரியும்.

எங்க வெளிப்படையா சொன்னா யாழ்கள பெரியவர் @குமாரசாமி, சின்னவர் @தமிழ் சிறி யின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வருமோ எண்டு யோசித்து, ஜேம்ஸ் சொன்னார், ஜோன்ஸ் சொன்னார் எண்டுறியள் என்ன🤣.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

கடந்த 3- 4 நாட்களாக தொலைக்காட்சி மற்றும் வானொலியை மிக கவனமாக கேட்டு வருகின்றேன்.  அரசு அனுமதிப்பதைத்தான் ஊடகங்களும் சொல்லின்றதோ என்ற சந்தேகத்தை பூர்த்தி செய்வதாகவே இருக்கின்றது.

இது சம்பந்தமாக மேலும் கருத்தாட விரும்பவில்லை காரணம்  கண் மறைக்கப்பட்ட குதிரைகள் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்......

Horse carriage racing | அன்னவாசலில் குதிரை வண்டி பந்தயம் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

எனக்கு நேரம் பொன்னானது. 😎

எனக்கு நேரம் பொன்னல்ல, உயிர்😂

ஆனால். கருத்தாட விரும்பாமையின் காரணம் புரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.