Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம் 

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது.

மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனுக்கு இராணுவ தளவாட வசதிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர் நிலைமையை அதிகரிப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து, சூழ்நிலையை மேலும் மோசமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கிம் யோ ஜொங்கின் இந்த கருத்துக்கள், உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுடன் வட கொரியாவின் ஆழமான ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
 
https://athavannews.com/2023/1322115

  • Replies 55
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உக்கல்  உக்ரைனுக்கு... அமெரிக்கா போர் டாங்கிகளை வழங்க எடுத்த முடிவை கண்டித்த,
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரிக்கு பாராட்டுக்கள். 👋
உங்களை போன்ற துணிவு உள்ளவர்காளால்தான்... 
இந்த உலகத்தில் இன்னும் மழை  பெய்கின்றது.
உங்கள் நெஞ்சுரமும், துணிவும் மற்ற நாட்டு,  தலைவர்களுக்கும் வர வேண்டும். 🙂

நெடுக... அமெரிக்காவின், சீலைத் தலைப்பில்... 
தொங்கிக் கொண்டு இருக்காமல் வெளியே வர வேண்டும். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

உக்கல்  உக்ரைனுக்கு... அமெரிக்கா போர் டாங்கிகளை வழங்க எடுத்த முடிவை கண்டித்த,
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரிக்கு பாராட்டுக்கள். 👋
உங்களை போன்ற துணிவு உள்ளவர்காளால்தான்... 
இந்த உலகத்தில் இன்னும் மழை  பெய்கின்றது.
உங்கள் நெஞ்சுரமும், துணிவும் மற்ற நாட்டு,  தலைவர்களுக்கும் வர வேண்டும். 🙂

நெடுக... அமெரிக்காவின், சீலைத் தலைப்பில்... 
தொங்கிக் கொண்டு இருக்காமல் வெளியே வர வேண்டும். 😂 🤣

ஜேர்மனியில் மழையின்றி வரட்சியென்று செய்தியில் சொன்னார்கள்! எப்ப பியோங்யாங் பயணம்? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ம‌ழை எப்ப‌ப‌ பெய்ய‌னுமோ அப்ப‌ப்ப‌ பெய்யுது ஜேர்மனியில் 

அதிக‌ம் பெய்தால் நாட்டுக்கு கேடு என்று இய‌ற்கைக்கு தெரியுது 🤣😁😂 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகநாடுகளில் வரட்சி வந்தால் என்ன அந்த வரட்சி ரஷ்யா, வடகொரியாவில் மழை பெய்து குளிர்ச்சியாக இருப்பதை விட மேலாது என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் கண்டனத்திற்கு நன்றி சகோதரி. மேற்குலகு அகல கால்வைத்து பல இடர்களை சந்திக்கப்போகின்றது ..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம் 

உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம்

ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது.

மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைனுக்கு இராணுவ தளவாட வசதிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர் நிலைமையை அதிகரிப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து, சூழ்நிலையை மேலும் மோசமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கிம் யோ ஜொங்கின் இந்த கருத்துக்கள், உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுடன் வட கொரியாவின் ஆழமான ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
 
https://athavannews.com/2023/1322115

ஏன். கண்டிக்கிறீர்கள்.  ? அடித்து பறிக்க முடியவில்லையா?.  .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்!👀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

ஜேர்மனியில் மழையின்றி வரட்சியென்று செய்தியில் சொன்னார்கள்! எப்ப பியோங்யாங் பயணம்? 😂

இதே போல் தான் விடுதலைப்புலிகளின் போர்நடவடிக்கைகளை புலம்பெயர் தேசங்களிலிருந்து கண்டித்தார்கள். போரை முடித்து அழித்தார்கள்.இப்போது நாட்டில் வன்முறைகள் ஏதும் இல்லையென்றனர்.
ஆனால்  புலம்பெயர் தேசத்து கண்டிப்பாளர்கள் போர் முடிந்த பின் தாங்கள் வாழும் நாடுகளிலேயே கோமா நிலைக்கு வந்து விட்டனர்.:face_with_tears_of_joy:

போக மாட்டினமாம்  :zany_face:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தலை கிம் பார்க்க இரெண்டு அன் லிமிடட் மீல்ஸ் ஒன்றாக சாப்பிடுபவர் போல தெரிந்தாலும், சகோதரி அழகாய்தான் இருக்கிறாவு.

தமிழ் நாட்டு செங்கமலத்தின் வாரிசெல்லோ…

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இதே போல் தான் விடுதலைப்புலிகளின் போர்நடவடிக்கைகளை புலம்பெயர் தேசங்களிலிருந்து கண்டித்தார்கள். போரை முடித்து அழித்தார்கள்.இப்போது நாட்டில் வன்முறைகள் ஏதும் இல்லையென்றனர்.
ஆனால்  புலம்பெயர் தேசத்து கண்டிப்பாளர்கள் போர் முடிந்த பின் தாங்கள் வாழும் நாடுகளிலேயே கோமா நிலைக்கு வந்து விட்டனர்.:face_with_tears_of_joy:

போக மாட்டினமாம்  :zany_face:

அதே போல முதல் வெடி கேட்க முன்னரே "சிங்களவன் அடிக்கிறான்!" என்று ஓடி வந்த தேசிய வீரர்களும் போகாமல் சிவிங்கம் போல ஒட்டிக் கொண்டார்களாம்! அது மட்டுமல்லாமல், ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புட்டின், கிம், சதாம், ட்ரம்ப் என்று ஆதரவு வேறு!

ஆனால், என்ன, ரஷ்யா தற்செயலாக வென்று ஜேர்மனி, டென்மார்க் என்று ரஷ்ய தாங்கிகள் நுழைந்தால் முதலில் ஓடப் போவதும் இதே சிவிங்கங்கள் தான்! 😂

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்றில் மேற்குநாடுகள் உக்ரேனுக்கு 321 புதிய ரக தாங்கிகளை வழங்கவிருக்கின்றன என்று செய்தி வெளிவந்திருக்கிறது. ஜேர்மனின் நவீன லெப்பேர்ட் - 2 ரகத் தாங்கிகள், அமெரிக்கத் தயாரிப்பான ஏப்ராம் தாங்கிகள் மற்றும் இங்கிலாந்தின் சலெஞ்சர் ரக தாங்கிகளும் இதற்குள் அடக்கமாம். தற்போது உக்ரேன் யுத்தத்தில் பாவித்துவரும் தாங்கிகள் சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டவையாம் . குறைந்தது 40 வருடங்களுக்கு முன்னதான தொழிநுட்பமே இத்தாங்கிகளில் காணப்படுவதால் தாக்குதல்த் திறன் குறைவானதென்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ரஸ்ஸியாவின் நவீன ரக தாங்கிகளுக்கு நிகராக இவற்றால் தாக்குப் பிடிப்பதென்பதே இலேசான காரியமல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், பல களங்களில் இந்தப் பழமையான சோவிய கால தாங்கிகளைப் பாவித்தே உக்ரேன் தாக்குப்பிடித்து வருகிறது. 

போதாக்குறைக்கு, மேற்குநாடுகள் நீண்டதூர எறிகணைகள், மிகயொலி யுத்த விமானங்களையும் தரும் யோசனையில் இருக்கின்றனவாம். 

https://edition.cnn.com/2023/01/27/world/ukraine-tanks-western-allies-intl-hnk/index.html

https://edition.cnn.com/videos/world/2023/01/29/ukraine-tanks-pleitgen-cnntmw-vpx.cnn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Justin said:

அதே போல முதல் வெடி கேட்க முன்னரே "சிங்களவன் அடிக்கிறான்!" என்று ஓடி வந்த தேசிய வீரர்களும் போகாமல் சிவிங்கம் போல ஒட்டிக் கொண்டார்களாம்! அது மட்டுமல்லாமல், ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புட்டின், கிம், சதாம், ட்ரம்ப் என்று ஆதரவு வேறு!

ஆனால், என்ன, ரஷ்யா தற்செயலாக வென்று ஜேர்மனி, டென்மார்க் என்று ரஷ்ய தாங்கிகள் நுழைந்தால் முதலில் ஓடப் போவதும் இதே சிவிங்கங்கள் தான்! 😂

உங்களுக்கென்ன? அமெரிக்கா.......... நீங்கள் எட்டத்த இருந்து உள்ள நாடுகளுக்கு சொட்டிப்போட்டு இருப்பியள். சாகிறது இன்னல்களை அனுபவிக்கிறது முழுக்க அப்பாவிச்சனங்கள். கேட்டால் அரபு வசந்தம்,அப்பு வசந்தம் ஆச்சி வசந்தம் உக்ரேன் வசந்தம் எண்டுவியள்.  :hahaha:

கொஞ்சம் நில்லுங்கோ...:406:

உக்ரேன் பிரச்சனையில் நானும் நான் சார்ந்தோரும் ரஷ்ய சார்பாக இருந்தாலும் மக்கள் அழிவை விரும்பாதவர்கள். ஆனால் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் உக்ரேன் ஆதரவாளர்கள்.மனித உரிமையை மதிப்பவர்கள். மனிதாபிகள். ஆனால் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிப்பவர்கள். இதன் மூலம் நீங்கள் சார்ந்தோர்தான் போரை விரும்புகின்றீர்கள். அப்பாவிகள் உயிரிழப்பை விரும்புகின்றீர்கள்.

அமைதி வழியில் போரை நிறுத்த சிந்திக்காதவர்கள். அது பற்றியே கருத்தெழுதாதவர்கள். போர் நடப்பது ரஷ்யாவில் அல்ல.உக்ரேனில். அழிவு யாருக்கு??? :cool:

29 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் பிரச்சனையில் நானும் நான் சார்ந்தோரும் ரஷ்ய சார்பாக இருந்தாலும் மக்கள் அழிவை விரும்பாதவர்கள்.

ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை இது பகிடியா ? நீங்களும் ரஸ்ய ஆதாரவாளர்களும் எழுதிய கருத்துகள் அப்படியே யாழில் உள்ளன.

இதற்கு 3 அப்பாவிகள விருப்பு வாக்கு வேறு போட்டுள்ளனர் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அந்த‌ அப்பாவிக‌ளில் நானும் ஒருவ‌ன் ❤️🙏

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் உட‌ன் ப‌ட‌னும் என்று நினைத்தா அது ஒரு போதும் ச‌ரி வ‌ராது

எழுதுப‌வ‌ர்க‌ளின் ம‌ன‌சில் என்ன‌ எழுத‌ தோனுதோ அதை தான் அவ‌ர்க‌ள் எழுதுவார்க‌ள்

புரட்சியாளர் சே குவேரா சொன்ன‌து தான் இந்த‌ நூற்றாண்டில் நினைவில் வ‌ந்து போகுது 

நாலு கூமுட்டைக‌ள் சேர்ந்து செய்வ‌து தான் ஆட்சி என்றால் அதை த‌ட்டி கேட்ப‌தை த‌விர‌ வேறு வ‌ழி இல்லை 

அமெரிக்காவின் கொடும் செய‌லால் தான் போர் இவ‌ள‌வு கால‌மும் நீடிக்குது அமெரிக்கா உக்கிரேன் போருக்கை மூக்கை நுழைக்காட்டி போர் எப்ப‌வோ நின்று இருக்கும் பேச்சு வார்த்தை மூல‌ம் 😏

5 minutes ago, பையன்26 said:

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் உட‌ன் ப‌ட‌னும் என்று நினைத்தா அது ஒரு போதும் ச‌ரி வ‌ராது

எழுதுப‌வ‌ர்க‌ளின் ம‌ன‌சில் என்ன‌ எழுத‌ தோனுதோ அதை தான் அவ‌ர்க‌ள் எழுதுவார்க‌ள்

😏

😀

பையன், இதைத்தான் நானும் கேட்டேன். எழுதும்போது தோன்றுபவற்றை எதிர் மாறாக எழுதினால் எது பகிடி, இன்று எழுதியதா அல்லது நேற்று எழுதியதா என்று நீங்களே சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

😀

பையன், இதைத்தான் நானும் கேட்டேன். எழுதும்போது தோன்றுபவற்றை எதிர் மாறாக எழுதினால் எது பகிடி, இன்று எழுதியதா அல்லது நேற்று எழுதியதா என்று நீங்களே சொல்லுங்கள்.

குசா தாத்தா தேரை இழுத்து ந‌டுத் தெருவில் விட்டு வேடிக்கை பார்க்கும் ம‌னித‌ர் கிடையாது

அவ‌ரும் அர‌சிய‌லில் ப‌ழ‌ம் தின்று கொட்டையும் போட்ட‌வ‌ர்................அமெரிக்கா என்ர‌ பெரும் பூத‌த்தை நினைத்து அருவ‌ருப்பில் அவ‌ர் எழுதின‌தாக‌ பார்க்கிறேன் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னை ப‌ற்றி 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உக்ரேன் பிரச்சனையில் நானும் நான் சார்ந்தோரும் ரஷ்ய சார்பாக இருந்தாலும் மக்கள் அழிவை விரும்பாதவர்கள். ஆனால் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் உக்ரேன் ஆதரவாளர்கள்.மனித உரிமையை மதிப்பவர்கள். மனிதாபிகள். ஆனால் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிப்பவர்கள். இதன் மூலம் நீங்கள் சார்ந்தோர்தான் போரை விரும்புகின்றீர்கள். அப்பாவிகள் உயிரிழப்பை விரும்புகின்றீர்கள்.

அமைதி வழியில் போரை நிறுத்த சிந்திக்காதவர்கள். அது பற்றியே கருத்தெழுதாதவர்கள். போர் நடப்பது ரஷ்யாவில் அல்ல.உக்ரேனில். அழிவு யாருக்கு??? :cool:

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை  ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை 

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம் அல்லது

போரை  முடிவுக்கு  கொண்டு  வரும் பாதை இது  தான்  என்று புரியவே  இல்லையண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஒரு நாட்டை ஆக்கிரமிக்க  போரைத்தொடங்கியவனை  ஆதரித்தபடி

நாட்டை  இழந்து  கொண்டிருப்பவனை

போராபத்தில் தத்தளிப்பவனை 

ஆதரிக்கக்கூடாது

உதவக்கூடாது என்பது  எந்தவகையில் நியாயம் தர்மம் அல்லது

போரை  முடிவுக்கு  கொண்டு  வரும் பாதை இது  தான்  என்று புரியவே  இல்லையண்ணா

அப்ப‌டி பார்த்தா போன‌ நூற்றாண்டில் கியூபா நாட்டை அமெரிக்கா ஆக்கிரமிக்க நினைச்ச‌தும் த‌ப்பு தான்

ஏன் கியூபா நாட்டுக்கு அமெரிக்கா ப‌ல‌ த‌டைக‌ள் போட்டு இருக்கு முடிந்தா விள‌க்க‌த்தை தாருங்க‌ள் அத‌ற்கு பிற‌க்கு உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னைக்கு வ‌ருவோம் 😏

10 minutes ago, பையன்26 said:

குசா தாத்தா தேரை இழுத்து ந‌டுத் தெருவில் விட்டு வேடிக்கை பார்க்கும் ம‌னித‌ர் கிடையாது

அவ‌ரும் அர‌சிய‌லில் ப‌ழ‌ம் தின்று கொட்டையும் போட்ட‌வ‌ர்................அமெரிக்கா என்ர‌ பெரும் பூத‌த்தை நினைத்து அருவ‌ருப்பில் அவ‌ர் எழுதின‌தாக‌ பார்க்கிறேன் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னை ப‌ற்றி 🙏🙏🙏

பையன் நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே.

அருவருப்பில் தாத்தா எது எழுதினாலும் விருப்புப் புள்ளி போடுவீர்களாக இருந்தால் கருத்தைப் பார்க்காமல் ஆளைப் பார்த்துத்தானே பச்சை குத்துகிறீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

பையன் நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே.

அருவருப்பில் தாத்தா எது எழுதினாலும் விருப்புப் புள்ளி போடுவீர்களாக இருந்தால் கருத்தைப் பார்க்காமல் ஆளைப் பார்த்துத்தானே பச்சை குத்துகிறீர்கள் ? 

நானும் குண்டு ச‌த்த‌தை கேட்டு வ‌ள‌ந்த‌வ‌ன் அத‌ற்கு பிற‌க்கு தான் புல‌ம்பெய‌ர் நாட்டு வாழ்க்கை

இரு நாட்டு பிர‌ச்ச‌னைக‌ளில் த‌மிழ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் இருந்தே மூக்கை நுழைக்காம‌ இருந்து இருந்தா ந‌ம‌க்குள் தேவை இல்லா க‌ருத்து மோத‌ல்க‌ள் வ‌ந்து இருக்காது

சில‌ருக்கு ர‌ஸ்சியா செய்வ‌து ச‌ரி என்று ப‌டுது சில‌ருக்கு ர‌ஸ்சியா செய்வ‌து பிழை என்று ப‌டுது இது தான் வித்தியாச‌ம்

இதுக்கு மிஞ்சி இந்த‌ திரிக்குல் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை அண்ணா

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் 🙏🙏🙏

2 minutes ago, பையன்26 said:

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் 🙏🙏🙏

நன்றி பையன், நேராக விருப்புப் புள்ளி போட்டதைக் கூறி கருத்தாடியமைக்கு.

பல காலமாகவே குழு வாதங்களை யாழ் களம் எதிர்த்து வந்துள்ளது. பச்சை குத்துவதும் இதன் ஒரு அங்கமே. குழு விவாதங்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்காகவே பச்சைப் புள்ளிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது. அதுவும் பலனளிகாதபடியால்தான் இறுதியாக பச்சை இடுபவரின் விபரம் மறைக்கப்பட்டது. குழு விவாதம் யாழின் வளர்ச்சிக்கு முற்றாக முரனானது. 

உங்களுக்கு ஒவ்வொரு நாளும் தரப்படும் ஊக்குவிப்புப் புள்ளிகளை நல்ல கருத்துக்களையும் கட்டுரை செய்தி இணைப்புகளையும் சொந்த ஆக்கங்களையும் ஊக்குவிக்கப் பயன்படுத்துங்கள். யாழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கென்ன? அமெரிக்கா.......... நீங்கள் எட்டத்த இருந்து உள்ள நாடுகளுக்கு சொட்டிப்போட்டு இருப்பியள். சாகிறது இன்னல்களை அனுபவிக்கிறது முழுக்க அப்பாவிச்சனங்கள். கேட்டால் அரபு வசந்தம்,அப்பு வசந்தம் ஆச்சி வசந்தம் உக்ரேன் வசந்தம் எண்டுவியள்.  :hahaha:

கொஞ்சம் நில்லுங்கோ...:406:

உக்ரேன் பிரச்சனையில் நானும் நான் சார்ந்தோரும் ரஷ்ய சார்பாக இருந்தாலும் மக்கள் அழிவை விரும்பாதவர்கள். ஆனால் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் உக்ரேன் ஆதரவாளர்கள்.மனித உரிமையை மதிப்பவர்கள். மனிதாபிகள். ஆனால் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிப்பவர்கள். இதன் மூலம் நீங்கள் சார்ந்தோர்தான் போரை விரும்புகின்றீர்கள். அப்பாவிகள் உயிரிழப்பை விரும்புகின்றீர்கள்.

அமைதி வழியில் போரை நிறுத்த சிந்திக்காதவர்கள். அது பற்றியே கருத்தெழுதாதவர்கள். போர் நடப்பது ரஷ்யாவில் அல்ல.உக்ரேனில். அழிவு யாருக்கு??? :cool:

அமெரிக்கா தொலைவு காரணமாகப் பாதுகாப்பாக இருக்கிறது என்பது ஓரளவுக்கு உண்மை. ஆனால், நீங்கள் பொது மக்களின் அழிவை விரும்பாதோர் என்பதும் (இணையவன் எழுதியதைப் பாருங்கள்!), நேட்டோ உக்ரைனைக் கைவிட்டால் போர் அழிவு நின்று விடும் என்பதும் தவறான தகவல்கள்.

நேட்டோ கைவிட்டால், 2014 இல் பாடம் படிக்காதது போலவே புட்டின் இன்றும் பாடம் படித்திருக்க மாட்டார். மொல்டோவா,  ஜோர்ஜியா என்று தொடர்ந்து நொட்டிக் கொண்டேயிருப்பார். இது அமெரிக்காவை விட ஐரோப்பாவில் வசிக்கும் உங்கள் போன்றோருக்குத் தான் நீண்ட கால நோக்கில் ஆபத்தானது - ஏன் என்பதை பலரும் வரலாற்று ஆதாரங்களோடு இங்கே எழுதி விட்டனர். எனவே, மீள உரைத்தல் அவசியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அப்ப‌டி பார்த்தா போன‌ நூற்றாண்டில் கியூபா நாட்டை அமெரிக்கா ஆக்கிரமிக்க நினைச்ச‌தும் த‌ப்பு தான்

ஏன் கியூபா நாட்டுக்கு அமெரிக்கா ப‌ல‌ த‌டைக‌ள் போட்டு இருக்கு முடிந்தா விள‌க்க‌த்தை தாருங்க‌ள் அத‌ற்கு பிற‌க்கு உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னைக்கு வ‌ருவோம் 😏

என்னப்பா இது போன நூற்றாண்டுக்கதை எல்லாம்?

உண்மையில் நீங்கள் அமெரிக்காவை நம்பி இங்கே எழுதிய அளவுக்கு கூட நான் எழுதியதே இல்லை.

என்னைப் பொறுத்தவரை ரசியா உலகிற்கு உதவாத மற்றும் சிறுபின்மையினருக்கு உதவாத ஒரு ராட்சத ஏகாபத்திய நாடு. அது ஒரு போதும் உலகுக்கோ எமக்கோ உதவப்போவதில்லை. நன்றி 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

பல காலமாகவே குழு வாதங்களை யாழ் களம் எதிர்த்து வந்துள்ளது. பச்சை குத்துவதும் இதன் ஒரு அங்கமே. குழு விவாதங்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்காகவே பச்சைப் புள்ளிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது. அதுவும் பலனளிகாதபடியால்தான் இறுதியாக பச்சை இடுபவரின் விபரம் மறைக்கப்பட்டது. குழு விவாதம் யாழின் வளர்ச்சிக்கு முற்றாக முரனானது. 

நல்லதொரு விடயம்😀 பச்சை இடுபவரின் விபரம் மறைக்கப்பட்டது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.