Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

 

உக்ரேனில் சண்டைக்காக மேற்குலகு பில்லியனில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. 

துருக்கிக்கும் சுரியாவுக்கும் கிள்ளியாவது கொடுத்தார்களா ? மனிதாபிமானத்துக்காக கண்ணீர் விடுபவர்கள் பதில் கூறுங்கள். 

இவர்களது அண்ணன் தம்பிகளின்  பணத்தில் தான்  மேற்குலகே
ஏன் அமெரிக்காவே  வாழ்கிறது???

  • Replies 58
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு உலகத்தில் நடக்கும் எந்த அழிவுகளை பற்றியும் கவலை இல்லை. அதற்காக சந்தோசப்படவுமில்லை. ஆனால், எங்கு அழிவுகள் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இவர்களது அண்ணன் தம்பிகளின்  பணத்தில் தான்  மேற்குலகே
ஏன் அமெரிக்காவே  வாழ்கிறது???

மேற்கு கட்டி வளர்க்கப்பட்டதே கொள்ளைகளால்தான் என்பது உங்களுக்குத் தெரியாத என்ன்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு உலகத்தில் நடக்கும் எந்த அழிவுகளை பற்றியும் கவலை இல்லை. அதற்காக சந்தோசப்படவுமில்லை. ஆனால், எங்கு அழிவுகள் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் தான் 

சரியான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2023 at 15:45, கிருபன் said:

 அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. 

சும்மா போங்கப்பூ....

வெள்ளை நிறத்திற்காக கால் கழுவி அடிமை விசுவாசத்தைக் காட்டுவதை விடவா கூலிக்கு மாரடிப்பது தாழ்ந்துவிட்டது ? 🤣

இத்தால் சகலரும் அறிவது....

கூலிக்கு மாரடிக்கும் தொழிலை இழிவாகக் காட்டியதற்காக யார்  களம் சார்பாக கருப்பனுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சும்மா போங்கப்பூ....

வெள்ளை நிறத்திற்காக கால் கழுவி அடிமை விசுவாசத்தைக் காட்டுவதை விடவா கூலிக்கு மாரடிப்பது தாழ்ந்துவிட்டது ? 🤣

புலம்பெயர்ந்த எல்லோரும் உங்களைப் போல மகாராஜாவாக வாழமுடியாதுதானே @Kapithan. அதற்காக கால் கழுவி அடிமையாக இருக்க நாமெல்லாம் பழைய கால ரோமாபுரியில் வாழவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த எல்லோரும் உங்களைப் போல மகாராஜாவாக வாழமுடியாதுதானே @Kapithan. அதற்காக கால் கழுவி அடிமையாக இருக்க நாமெல்லாம் பழைய கால ரோமாபுரியில் வாழவில்லை.

அதே நாட்டில் அதே கொள்ளையடித்த காசில் அதே வாழ்வை வாழ்ந்தபடி சில பக்கங்களை மறந்து விட்டு விரல் நீட்டிப்பேசும் இன்னும் வாழும் ரோமாபுரி மன்னர் அவர். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விசுவாசத்திற்காக எதையும் செய்வார்கள் போலுள்ளது.:face_with_tears_of_joy:
அழிவுகள் ஆயிரமிருந்தும் உக்ரேனுக்காக மட்டும் அழுவதுதான் சகிக்க முடியவில்லை. :nerd_face:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த எல்லோரும் உங்களைப் போல மகாராஜாவாக வாழமுடியாதுதானே @Kapithan. அதற்காக கால் கழுவி அடிமையாக இருக்க நாமெல்லாம் பழைய கால ரோமாபுரியில் வாழவில்லை.

பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை என்று ஒரு சொல்லடை உங்களைப் போன்றோரை நினைவுபடுத்துகிறது கிருபன். 🤣

3 hours ago, விசுகு said:

அதே நாட்டில் அதே கொள்ளையடித்த காசில் அதே வாழ்வை வாழ்ந்தபடி சில பக்கங்களை மறந்து விட்டு விரல் நீட்டிப்பேசும் இன்னும் வாழும் ரோமாபுரி மன்னர் அவர். 

நாம் இருவரும் சேர்த்துதானே கொள்ளையிட்டோம். பங்கும் சரி சமானமாகப் பிரித்தோமே மறந்துவிட்டீர்களா விசுகர், கோபம் ஏன்? பங்கு பிரிப்பில் குறையேதும் உள்ளதோ ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

 

நாம் இருவரும் சேர்த்துதானே கொள்ளையிட்டோம். பங்கும் சரி சமானமாகப் பிரித்தோமே மறந்துவிட்டீர்களா விசுகர், கோபம் ஏன்? பங்கு பிரிப்பில் குறையேதும் உள்ளதோ ? 

🤣

நீங்கள் நினைக்கிறீர்கள் இதில் உள்ள விசத்தை நான் அறியமாட்டேன் என்று.  எம் இனத்தின் இது போன்ற உதபுவர்களை பதம் பார்க்கும் ஈனத்தனத்தை அறிந்ததால் தான் 

அதில் காலை வைக்கும் போதும் தெரிந்தே வைத்தேன் எடுக்கும் போதும் மிக மிக சுத்தமாகவே எடுத்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

நீங்கள் நினைக்கிறீர்கள் இதில் உள்ள விசத்தை நான் அறியமாட்டேன் என்று.  எம் இனத்தின் இது போன்ற உதபுவர்களை பதம் பார்க்கும் ஈனத்தனத்தை அறிந்ததால் தான் 

அதில் காலை வைக்கும் போதும் தெரிந்தே வைத்தேன் எடுக்கும் போதும் மிக மிக சுத்தமாகவே எடுத்தேன். 

விசுகர்,

கொள்ளையடித்த காசில் வாழ்வதாக நீங்கள் என்னைக் கூறியபோது அதை அப்படியே உங்களிடம் திருப்பிவிட்டேன். அம்புட்டுதே. 

முன்னர் என்னை சோசல் காசில் வாழ்வதாக கூறினீர்கள். தற்போது கொள்ளையடித்த காசில் வாழ்வதாகக் கூறுகிறீர்கள். உண்மையில் இவற்றை நான் பெரிதாக எடுக்காமல் நகைச்சுவையாக கடந்துபோகிறேன். ஆனால் நீங்கள் கூறியதை அப்படியே உங்களிடம் நகைச்சுவையாகத் திருப்பிவிடும்போது அதை விசம் என்கிறீர்கள். 

உங்களுக்கு வந்தால் ரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னியா 😀

(விசுகர், நீங்கள் யாரென்பதை நான் அறியேன், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் யாம் அறிந்திலோம். இங்கே கூறப்படுவது எல்லாமே யாழ்  களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களுக்கான செல்லச் சண்டையே தவிர தனிப்பட்ட ரீதியில் எதுவுமே இல்லை. 👍)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 20:16, alvayan said:

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு...

இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை வேறை லெவெல்..எந்த சயத்தைவிடவும் நாம்தான் பெரிது..அல்லாதான் பெரிது..இப்ப..கதை வேறை..

எங்க‌ட‌ நாட்டை கூட‌ 2004 சுனாமி தாக்கிய‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அத‌ற்கு எங்க‌ட‌ ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்தினார்க‌ளா
 

  • கருத்துக்கள உறவுகள்

இது இய‌ற்கை கொடுத்த‌ அழிவு
டென்மார்க்கில் கூட‌ நில‌ ந‌டுக்க‌ம் வ‌ந்த‌து க‌ட‌லை ஒட்டி இருக்கும் ஊரில் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் பாதிப்பு ஒன்றும் பெரிசா இல்லை................

இந்த‌ இய‌ற்கை அழிவோடு அர‌சிய‌லை ம‌த‌த்தை க‌ல‌ப்ப‌து அழ‌க‌ல்ல‌ 

உல‌கில் அதிக‌ நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் இன்டொனேசியாவும்.............அந்த‌ நாடு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு தீங்கு ஒன்றும் செய்ய‌ வில்லை ஆனால் இய‌ற்கையால் ப‌ல‌ அழிவுக‌ளை ச‌ந்திக்கும் நாடு


இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இது போல் ந‌ட‌க்க கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பையன்26 said:

இது இய‌ற்கை கொடுத்த‌ அழிவு

அது தான் உண்மை 👍
இயற்கை அழிவுகள் இலங்கையில் தமிழர்கள் பிரதேசங்களிலும் வரலாம், சிங்களவர் பிரதேசங்களிலும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

எங்க‌ட‌ நாட்டை கூட‌ 2004 சுனாமி தாக்கிய‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அத‌ற்கு எங்க‌ட‌ ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்தினார்க‌ளா
 

நாங்கள் ..எந்த சந்தர்ப்பத்திலும் மத மமதை கொண்டு அலையவில்லை ஐயா...லட்சத்தில் ஒருசிலர் குரான் எரித்ததிற்கு ..துள்ளிய துள்ளலுக்கே நான் எழுதியது...அதில் அந்த மக்களுக்கு  அனுதாபம் செலுத்தியுமுள்ளேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்வு!

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்வு!

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலகின் மிகப்பெரும் நிறுவனங்களும் நாடுகளும் முன்வந்துள்ளன.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் , துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 874,000 பேருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சூடான உணவை வழங்க 77 மில்லியன் டொலர்களைக் கோருகிறது.

பிராந்தியத்தின் கடுமையான குளிர்ந்த குளிர்கால நிலைமைகளில் சூடான உணவு தேவைப்படுபவர்களில் சிரியாவில் புதிதாக இடம்பெயர்ந்த 284,000 மக்களும் துருக்கியில் 590,000 பேரும் அடங்குவர், இதில் 45,000 அகதிகள் மற்றும் 545,000 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர்.

இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆகியவை துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விளையாட்டு கூட்டமைப்புகளாக மாறியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் அறிவித்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைக்கு ஆதரவாக ஆரம்ப தொகையாக 200,000 யூரோக்களை ஐரோப்பிய கால்பந்து அமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான அதன் அறக்கட்டளை, நன்கொடையாக வழங்கும் என அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பிரீமியர் லீக், ஒரு மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கத்தின் அதிர்வுகளுக்குப் பிறகு 100 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில், துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700க்கும் அதிகமாக உள்ளது.

துருக்கியில் வெள்ளிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 20,213க்கும் அதிகமாக உயர்ந்தது, சிரியாவில் 3,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நிலநடுக்கங்களுக்குப் பிறகு சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
 

 

https://athavannews.com/2023/1323846

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிரியாவிற்காய் ஒருத்தரும் நிதியுதவி கோரவில்லை ? அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் சிரியாவிற்காய் ஒருத்தரும் நிதியுதவி கோரவில்லை ? அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா 

கேடு கெட்ட‌ உல‌க‌ம் எதிலும் சுய‌ ந‌ல‌ம்

இந்தியா இர‌ண்டு நாட்டுக்கும் உத‌வுவ‌தாக‌ செய்தியில் பார்த்தேன் அக்கா.............

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=1218620215437592 👈

கட்டிட இடிபாடுகளுக்கு  உள்ளேயிருந்து வீடியோ அனுப்பிய சிரியா சிறுவன்!
நான் இறப்பேனா இல்லை இன்னும் உயிர் வாழ்வேனா என்று தெரியவில்லை. 
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்… மேற்கண்டவாறு சிரியாவில் பூகம்பத்தின் 
இடிபாடுகளின் கீழ் சிக்குண்டு வெளியேற வழியில்லாமல் தவிக்கும் 
தைரியமான சிறுவன் அங்கிருந்து தனது மொபைல் மூலம் வீடியோ செய்து 
அனுப்பிய காட்சியே இதுவாகும்.மீட்பு பணியாளர்கள் தனக்கு அருகாமையில் 
நெருங்கிவிட்ட நிலையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?

துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகளின் பெற்றோர் யார் எங்கே என்பதும் தெரியாத நிலை இருக்கிறது.

இதுகுறித்து துருக்கி பிபிசி செய்தியாளர் டாம் பேட்மேன் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கே அவர் கண்ட காட்சிகளையும், சேகரித்த செய்திகளையும் இங்கே கட்டுரையாக தொகுத்து வழங்குகிறது பிபிசி.

துருக்கியின் அடனா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்

குழந்தைகள் தங்களக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகள் எவ்வளவு கொடுமையானது என்பதை புரிந்துகொள்ள முடியாத வயதில் இருக்கின்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு ஆறு மாத பெண் குழந்தைக்கு மருத்துவர்கள் புட்டிப்பால் புகட்டிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவளது பெற்றோர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னும் நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத குழந்தைகள் அங்கே இருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள் இறந்திருக்கக்கூடும் அல்லது நிலநடுக்கத்தின் இடர்பாடுகளில் சிக்கி கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கக்கூடும்.

துருக்கியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் அவர்களது குடும்பங்களை சிதைத்தது மட்டுமல்லாமல் தற்போது அவர்களது அடையாளங்களையும் பறித்துக் கொண்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் குழந்தையின் கைகளை மருத்துவர் நர்ஷா கெஸ்கின் இறுகப் பற்றியிருந்தார். அந்த குழந்தையின் படுக்கையில் 'யாரெனத் தெரியாதவள்' (anonymous) என்று ஒட்டப்பட்டிருந்தது.

அவளுக்கு பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. அவளது கண்களுக்கு கீழே கருத்து போயிருந்தது. முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அத்தகைய நிலையிலும் அவள் எங்களை திரும்பி பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.

`அவள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டாள், எப்படி இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் அவளது சரியான முகவரியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கான தேடல் தொடர்ந்து வருகிறது` என்கிறார் அதனா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரும், இணை இயக்குனருமான மருத்துவர் கெஸ்கின்.'

இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான குழந்தைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இடிந்த கட்டடங்களின் இடர்பாடுகளுக்கு நடுவே மீட்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் இந்த அதனா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதற்கு ஒரே காரணம் இந்த மருத்துவமனை கட்டடம் மட்டும்தான் இன்னும் இடியாமல் நின்றுக் கொண்டிருக்கிறது.

5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க இந்தக் குழந்தை தலையில் காயம்பட்டதுடன், பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன.
 
படக்குறிப்பு,

5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க இந்தக் குழந்தை தலையில் காயம்பட்டதுடன், பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன.

இங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகள் இடிந்து விழுந்துவிட்டது. சில மருத்துவமனைகள் சேதமடைந்து கிடக்கின்றன. அதனால் இந்த அதனா மருத்துவமனை அனைவருக்கும் ஒரு மீட்பு மையமாக மாறிவிட்டது.

நிலநடுக்கத்தால் இஸ்கெண்டிருன் நகரத்தில் இருந்த மருத்துவமனை கட்டடம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே அங்கே மகப்பேறு சிகிச்சை பிரிவில் புதிதாக பிறந்திருந்த பல குழந்தைகள் அவசர அவசரமாக இங்கே ஒரே மூச்சில் கொண்டு வரப்பட்டனர்.

`தற்போது நாட்டின் பேரிடர் மண்டலம் முழுவதும் தாங்கள் யார் என்ற அடையாளம் தெரியாத சுமார் 260 குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர்` என்று துருக்கியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்னும் பல பகுதிகளில் தேடல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கைகள் கணிசமான அளவு உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

மருத்துவர் கெஸ்கினை நான் பின் தொடர்ந்து சென்றபோது மருத்துவமனை முழுவதும் நிலநடுக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகாக நிரம்பியிருந்த காட்சிகளை என்னால் காண முடிந்தது. அறுவை சிகிச்சை பிரிவுக்குள் சென்றபோது அங்கே காயமடைந்த குழந்தைகள் பலர் இருந்தனர்.

அங்கே ஒரு பெண் குழந்தை கைகளில் டிரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். அவளுக்கு தலையில் பலத்த காயங்களும், பல இடங்களில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

அந்த குழந்தை அவளது பெயரை கூறக்கூடிய நிலையில் இருக்கிறாளா என்று நான் மருத்துவர் இலக்னூர் பன்லிசூர் கேட்டபோது,`அவளது கண் அசைவுகள் மற்றும் உடல் சைகைகள் மூலமாகவே தற்போது அவள் சொல்ல வருவதை தாங்கள் புரிந்து கொள்வதாக` அவர் கூறினார்.

இப்படியொரு பயங்கரமான நிலநடுக்கத்தை எதிர்க்கொண்ட அதிர்ச்சியின் காரணமாக இங்கே பல குழந்தைகள் பேச முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அவர்களது பெயர்கள் தெரியும். ஒருவேளை ஒரு சில நாட்கள் கழித்து அவர்கள் சீரான மனநிலைக்கு திரும்பிய பின் அவர்கள் பேசுவதற்கு முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளின் முகவரிகளை தேட அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் முகவரிகளுக்கு பதிலாக கட்டடங்களின் உருக்குலைந்த நிலைகளே காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளில் 100 பேர் ஏற்கனவே மீட்பு மையத்தினரால் கவனிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது துருக்கியின் சமூக ஊடகங்கள் முழுவதும் இடர்பாடுகளில் சிக்கி தொலைந்துபோன குழந்தைகளின் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. அவர்கள் எந்த பகுதியில், எந்த கட்டிடங்களில் வசித்து வந்தார்கள் என்பது குறித்த விவரங்களை பகிர்ந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர் இல்க்னர் பேன்லிசீசர், குழந்தை அறுவை சிகிச்சை வல்லுநர்
 
படக்குறிப்பு,

அதிர்ச்சி காரணமாக பல குழந்தைகளால் பேச முடியவில்லை என்கிறார் டாக்டர் இல்க்னர் பேன்லிசீசர், குழந்தை அறுவை சிகிச்சை வல்லுநர்

குழந்தைகளின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் பணியில் துருக்கியின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் அதனா மருத்துவமனையில் காயமடைந்த நபர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தில் மருத்துவர் கெஸ்கின்னும் தனது உறவினர்கள் பலரை இழந்துவிட்டார். தற்போது தனது குழந்தைகளுடன் அதனா மருத்துவமனையில் அவர் வசித்து வருகிறார்.

இதுகுறித்து மருத்துவர் கெஸ்கின் கூறும்போது ` இப்போது எனது குழந்தைகள் என்னிடம் இருக்கின்றனர். அதற்காக நான் கடவுளுக்கு மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு தாயாக குழந்தைகளை இழந்து தவிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது எனக்கு தெரியும். அதே போல் இந்த சமயத்தில் நாம் திடமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த குழந்தைகளுக்காக இப்போது நாம் மட்டுமே இருக்கிறோம்` என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

நிலநடுக்கத்தில் தொலைந்துபோன சிலர் தங்களது குடும்பங்களை தேடி இணைந்து வரும் காட்சிகளையும் நம்மால் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. ஆனாலும் அங்கே பல குழந்தைகள் அடையாளங்களை இழந்து, தாங்கள் யாரென்றே தெரியாத நிலையில் இருக்கின்றனர் என்பதுதான் இன்றைய துருக்கியின் உண்மை நிலை! துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர்.

https://www.bbc.com/tamil/global-64609539

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ரதி said:

ஏன் சிரியாவிற்காய் ஒருத்தரும் நிதியுதவி கோரவில்லை ? அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா 

கோரோனா காலங்களிலும் மேற்குலகு கும்பல் ஈரான்,வடகொரியா,சிரியாவிற்கு எல்லாம் மனிதாபிமான அடிப்படியில் மருந்துகளை விநியோகிக்க தடை விதித்திருந்தார்கள்.அவர்களுக்கு சீனாவும் ரஷ்யாவும் உதவி செய்தது. நில நடுக்க விடயத்திலும் ரஷ்ய நிவாரண படைகள் சிரிய களத்தில் இருக்குமென நம்பலாம்.ரஷ்ய ஊடகங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

மேற்குலகிற்கு பின்பக்கம் கழுவினால் மட்டுமே உதவி செய்வார்கள் என்பது ஊரறிந்த விடயமல்லவா?

இப்போது நம்மவர்கள்  கழுவ ஆரம்பித்து விட்டார்கள் அல்லவா? இனி தனி நாடுதான்.:smiling_face_with_tear:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 05:05, alvayan said:

குரான் எரித்ததிற்கு ..துள்ளிய துள்ளலுக்கே

சுவீடனில் குர்ரான் எரித்ததிற்கு துருக்கிய பிரதமர்  எர்டோகன் துள்ளியது அல்லாவின் இராஜ்யம் தனது தலைமையில் தான் அமையபோவதாக தனது மக்களை பேய்காட்டி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு.  தற்போது அல்லாவின் பூமியில் பேரழிவுகரமான இயற்கை அழிவு நடை பெற்றது அவரது மதவாத அரசியலுக்கு பெரிய பின்னடைவு.இப்போதே துருக்கிய மக்கள் அவர்மீது வெறுப்படைய தொடங்கிவிட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 28,000 ஆக உயர்வு!’ உலகம் இன்னும் இருக்கிறதா’ என கேட்டு அழுத மூதாட்டி !

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000ஐ கடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜேர்மன் மீட்பு பணியாளர்களும் ஆஸ்திரிய இராணுவமும் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி பெயர் குறிப்பிடப்படாத குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டத்தை மீறும் எவரையும் தண்டிப்பதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்க தாம் தயாராக உள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்னும் சில பகுதிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் உயிருடன் மீட்டு வருகின்றனர்
பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்கள், உறைந்த வானிலை இருந்தபோதிலும், இன்னும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் .
7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தின் மையப்பகுதியான கஹ்ராமன்மாராஸ் என்ற தெற்கு நகரத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே இழுக்கப்பட்ட 70 வயதான மெனெக்சே ‘ உலகம் இன்னும் இருக்கிறதா’ என கேட்டு அழுதார்.

தெற்கு ஹடேயில் 123 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு வயது சிறுமி உயிருடன் காணப்பட்டதாக Hürriyet நாளிதழ் தெரிவித்துள்ளது,

துர்க்கியே மற்றும் சிரியா முழுவதும் குறைந்தபட்சம் 870,000 பேருக்கு உணவு உதவி தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம் என மேலும் தெரிவித்துள்ளது .

நிலநடுக்கத்தில் 12,141 கட்டிடங்கள் இடிந்து அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

https://thinakkural.lk/article/239062

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவை பொறுத்த வரை உதவிகள் செய்வது, மனிதாபிமான நிவாரண உதவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ரஷ்ய  படைகள்  ஆக்கிரமிக்கவும், அழிப்பதற்கு மட்டுமே நாடுகளில் இறங்கும். ஈழ தமிழ்  ரஷ்ய ஆதரவு தத்துவதலைவர் தொடங்கி தொண்டர்கள் வரை மேற்குலக நாடுகளிலேயே தமக்குரிய உயர்ந்த பாதுகாப்பையும், நல்லவாழ்கையையும் தேடிக்கொண்டதை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவை பொறுத்த வரை உதவிகள் செய்வது, மனிதாபிமான நிவாரண உதவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ரஷ்ய  படைகள்  ஆக்கிரமிக்கவும், அழிப்பதற்கு மட்டுமே நாடுகளில் இறங்கும். ஈழ தமிழ்  ரஷ்ய ஆதரவு தத்துவதலைவர் தொடங்கி தொண்டர்கள் வரை மேற்குலக நாடுகளிலேயே தமக்குரிய உயர்ந்த பாதுகாப்பையும், நல்லவாழ்கையையும் தேடிக்கொண்டதை காணலாம்.

ரஸ்யாவின் உதவிக்கு சிரிய அதிபர், துருக்கி அதிபர் நன்றி  தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.