Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய  ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள்  பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம்.

இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றனமேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர்.

1.jpg

18839793-104396136826261-183117581371506

18879870-104467340152474-749807248371586

2.jpg

cha.jpg

 

 

 

cha1.jpg

 

 

cha2.jpg

cha3.jpg

cha4.jpg

cha5.jpg

 

cha6.jpg

hot.jpg

Edited by nilmini
repetitive
  • Like 15
  • Replies 52
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய  ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனு

nilmini

இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்

nilmini

அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல்  நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்று, நில்மினி…!

மிக அரிய விசயங்களை அறிந்து கொண்டேன்…!

லெமூர்களைப் போலத் தான் டோடோ பறவையும் மனித்ர்களை ஒரு காலத்தில் நம்பியது. விளைவு?

உலகில் மிகவும் சுயனலம் கொண்ட இனமே மனித குலம்…!

இயற்கை எதையும் மாற்ற எப்போதுமே தயங்கியதில்லை..!

அது பிரளயமாகவும் இருக்கலாம்…!

Edited by புங்கையூரன்
Posted

அற்புதமான படங்களும் அரிய தகவல்களும். தொடருங்கள் நில்மினி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, nilmini said:

2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய  ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள்  பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம்.

இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றனமேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர்.

1.jpg

18839793-104396136826261-183117581371506

18879870-104467340152474-749807248371586

2.jpg

cha.jpg

 

 

 

cha1.jpg

 

 

cha2.jpg

cha3.jpg

cha4.jpg

cha5.jpg

cha6.jpg

cha6.jpg

hot.jpg

ஆகா….  நில்மினி. பயணக் கட்டுரை, அழகான படங்களுடன். 🙂
மடகஸ்காரை பற்றிய செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்த்த போது…
அந்த நாட்டில் உள்ள 🦋🐛அழகிய 🦩பறவைகள்🦜, 🦥விலங்கினங்கள்🦨,
🌳தாவரங்கள்🌴 போன்றவற்றை பார்த்து வியந்து இருக்கின்றேன்.
ஒரு முறையாவது அங்கு போக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
ஆரம்ப கட்டுரையே…. பலவித தகவல்களுடன் வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளது.
தொடருங்கள் நில்மினி. 👍🏽

 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகழகான படங்களுடன் வருகை புரிந்துள்ளீர்கள், அமர்க்களப் படுத்துங்கள் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் ......!   👍

Posted

மடகஸ்கார்  என்றதும் நான் கொழும்பில் சந்தித்த ஒரு முசுலீம் பணக்காரர் தான் மடகாஸ்காருக்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்வதாக வும் அங்கிருந்து வைரம் போன்றவையும் இரத்தினக்கற்களும் வாங்கலாம் எனவும் கூறியதாக நினைவு. நன்றிகள் உங்களின் பகிர்வுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மடகாஸ்கர் பயண அனுபவமும் படங்களும் நேரில் பார்க்கக் கிடையாத என்போன்றோருக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நில்மினி பயணக் கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

படங்களை பார்க்க திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் போல இருக்கிறது.ஓணானை பார்க்க குட்டி டைனோசர் போல இருக்கிறது.

தொடர்ந்து பதியுங்கள்.போகாவிட்டாலும் இதுகளை பார்த்தாவது சந்தோசப்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எல்லோருடைய கொமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி. எப்பவோ எழுத நினைத்தது. அங்கு வாழும்  மக்களில் 95 வீதமானோர் 500 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை தான் வாழ்கின்றனர். மிகவும் வறுமை. வரும்போது அநேகமான கொண்டுபோன பொருட்களை அங்கு விட்டுட்டு அழகான கலை பொருட்களை வாங்கி வந்தோம்.


 இந்த சிறுமிகள் மாலையில் பவோபாப்  என்னும் ராட்சத மரத்தில் இருந்து பெறும் மணிகளை கொண்டு செய்த மாலைகளை விற்றுத்தான் பள்ளிக்கூடம் போகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கடிகாரம் நான் குடுத்தது. இந்த மரம் நெடுந்தீவு மற்றும் மன்னாரில் போர்த்துக்கீசரால் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்து நடப்பட்டது. இந்த இலைகள் தண்ணிப்பிடிப்பானவை. அரேபியார்களுக்கு குதிரை விற்கும் காலத்தில் குதிரைகள் இந்த மரத்தின் கீழ் இளைப்பாறி தண்ணிக்காக இலைகளையும் சாப்பிட்டதாக நெடுந்தீவு சென்றபோது சொன்னார்கள்.

யாழ்ப்பாணத்தில் செய்யும் பனை சார்ந்த கைவினை பொருட்களின் தரம் பத்தாது. இந்த வறிய மக்கள் செய்து வைக்கும் பொருட்கள் மிகவும் உறுதியான நல்ல தரமானவை. ஏனெனில் அதை செய்வதற்கு பயிட்சியாளர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அப்படி செய்தா நல்லம். அகப்பைகள் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான் பாவிக்கலாம். நான் ஒவ்வொரு முறையும் வேண்டும்போது அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். தரமானதாக செய்தால் எல்லோரும் நிறைய வேண்டுவார்கள் (வெள்ளைக்காரர் உற்பட) யாழ் சந்தையில் எனக்கு சில வெள்ளைக்காரர்கள் அப்படி அவர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். நிறைய எழுத இருக்கு. நான் பாவிக்கும் கூகிள் மொழி பெயர்ப்பு அவ்வளவு நல்லம் இல்லை. நீங்கள் எல்லோரும் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?

Edited by nilmini
  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, nilmini said:

நீங்கள் எல்லோரும் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?

கணனி எனில் இந்த தளத்தில் முயன்று பாருங்கள்.

https://www.branah.com/tamil

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, புங்கையூரன் said:

லெமூர்களைப் போலத் தான் டோடோ பறவையும் மனித்ர்களை ஒரு காலத்தில் நம்பியது. விளைவு?

உலகில் மிகவும் சுயனலம் கொண்ட இனமே மனித குலம்…!

 

மனிதர்களை நம்பும் விலங்கினகளுக்கு அதுதான் முடிவு. நம்பாவிட்டாலும் மனிதர்கள் விடப்போவதில்லை. இந்த லெமூர் இனங்களை பாதுகாப்பதற்கு முதன் முதலில் ஆர்வம் காட்டியவர் ஒரு அமெரிக்க பெண் விஞ்சானி. அந்த முயற்சி இப்ப நல்ல பலன் அளிக்கிறது.

12 minutes ago, ஏராளன் said:

கணனி எனில் இந்த தளத்தில் முயன்று பாருங்கள்.

https://www.branah.com/tamil

கணணி தான். முயன்று பார்க்கிறேன். நன்றி ஏராளன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

18698357-10154485550150703-4534690180238

18698538-10154485547995703-6940572834850

18700058-10154485547815703-7050129724606

18700094-10154485543410703-4014586149459

18700340-10154485549805703-7990067360170

18739688-10154485548785703-2194115891544

18739693-10154485550595703-1774074414277

18739839-10154485547850703-7107545912934

18740183-10154485550330703-6115554423864

18740355-10154485543920703-3604804136235

18765922-10154485557670703-4417801631534

18767625-10154485550605703-5633767897485

18768501-10154485549055703-6066133624482

18813211-10154485548495703-5158072464142

18813533-10154485549725703-1896127920930

18813676-10154485548290703-1011877402242

18814298-10154485545250703-6847309958021

19442076-844693855692908-673741546429066

19442125-844693869026240-430094833632594

19466688-844693919026235-443498071832394

Madagascar.png

 

 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. உங்கள் நேரத்திற்கு நன்றி சகோதரி 👍🏼

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, PIRA said:

மடகஸ்கார்  என்றதும் நான் கொழும்பில் சந்தித்த ஒரு முசுலீம் பணக்காரர் தான் மடகாஸ்காருக்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்வதாக வும் அங்கிருந்து வைரம் போன்றவையும் இரத்தினக்கற்களும் வாங்கலாம் எனவும் கூறியதாக நினைவு. நன்றிகள் உங்களின் பகிர்வுக்கு 

உண்மைதான். அங்கு பயணிக்கும்போது திடீரென ஸ்ரீலங்கா பெயர் பலகைகளை பார்த்ததும் வியந்து போனேன். மாணிக்கக்கற்களை புராதன முறையில் தண்ணீரில் அகல்வதை படம் எடுத்தேன். கண்டுபிடித்து அதையும் பகிர இருக்கிறேன். மாணிக்கக்கற்கள் இருக்கும் ஒரு இடத்துக்கு போனோம். அங்கு இலங்கையர்களையும் சந்தித்தேன்.
 
 
 
 
 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பதிவுகள் இடும்போது மற்றவர்கள் போடும் கமெண்ட்ஸுக்கு லைக்குகள் போட முடியாமல் இருக்கிறது. ஐந்து லைக்குகள் தான் நேற்றைக்கு காலையில் இருந்து போட விடுகிறது.எல்லோருக்கும் அப்படிதானா?

Edited by nilmini
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆமாம்  அப்படித்தான் .  அத்தோடு  படங்களுடன் ஒரு சிறு விளக்கம் தந்தால் மிகவும் நன்று 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பல வகையான லெமூலர் விலங்குகள் வாழ்விட அழிவு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக அழியும் அபாயத்தில் உள்ளன. அதனால்மடகாஸ்கர் தீவிலுள்ள பல காடுகளையும் சரணாலயங்களாக மாற்றி இந்த லெமூர் விலங்குகள், பச்சோந்திகள் மற்றும் தாவர விலங்கினங்களை பாதுகாக்கிறார்கள்.

எலி மாதிரி காதுகளும், நீண்ட அகண்ட வாலும், வவ்வால் மாதிரி கால்களும் கொண்ட அய்யி அய்யி என்னும் இனம் (மேலே படத்தில் உள்ளது) தன்னுடைய கூர்மையான பார்வை மற்றும் கேட்கும் திறனைப் பயன்படுத்தி உணவின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது. இதனுடைய அடர் பழுப்புநிற விநோதமான உருவ அமைப்பு கெட்ட சகுனமாக கருதப்படுவதால் அதிகளவு அழிக்கப்பட்டு அரிய விலங்கின‌த்தினுள் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது. இந்த விலங்கை பற்றிய ஒரு சுவாரசியமான செய்தியை அண்மையில் படித்தேன். இந்த இணைப்பில் உள்ளது  https://www.bbc.com/tamil/science-63427908

1 hour ago, நிலாமதி said:

ஆமாம்  அப்படித்தான் .  அத்தோடு  படங்களுடன் ஒரு சிறு விளக்கம் தந்தால் மிகவும் நன்று 

நன்றி. படங்களுக்கு இடையில் சில விளக்கங்களும் எழுதி வருகிறேன். பார்க்கவில்லையா நிலாமதி?

Edited by nilmini
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, nilmini said:

நிறைய எழுத இருக்கு.

எழுதுங்கோ எழுதுங்கோ காத்திருக்கிறோம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மடகாஸ்கர் படங்களைப் பகிர்வதற்கு நன்றி @nilmini அக்கா. விசித்திரமான விலங்குகள், பறவைகள் வாழும் இந்தத் தீவுக்குப் போகச் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் கிருபன், இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று எனக்கும் மிகவும் மகிழ்ச்சி. பல்கலைக்கழகத்தின் மூலமாக போனதால் தான் இப்படி கல்வி சார்ந்த எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்து, பல வகையான சரணாலயங்கள், ஆராய்ச்சி கூடங்கள் இன்று பார்க்கக்கூடியதாக இருந்தது.

Posted

நல்ல சுவாரசியமான ஒரு பயணக் கட்டுரை நில்மினி. நீங்கள் 2017 இல் உங்களது ஒரு பதிலில் மடகஸ்கார் பற்றி குறிப்பிட்டு இருந்ததைக் கண்டவுடன், அது பற்றி எழுத முடியுமா என நான் கேட்டது நினைவு.

வெளினாட்டு பயணிகள் பலரை கவரும் நாடாகவும், மாணிக்க கற்கள் விளையும் பூமியுமாக இருப்பினும் இவர்கள் ஏன் 500 வருடங்களுக்கு முற்பட்ட வாழ்க்கையைப் போன்று வறுமையாக வாழ்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. அதுவும் 13 நாட்களுக்கு அமெரிக்க டொலர் 12000 அறவிடும் விடுதிகளை கொண்ட ஒரு நாட்டில்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மடஹாஸ்கார், ஹலப்பாஹஸ், ரஸ்மானியா, அவுஸ்திரேலியா போன்ற தீவுகள் தனித்துவமானவை. அங்கு இயல்வாக்கமடைந்த உயிரினங்களும் வித்தியாசமானவை. அதிசயங்கள் நிறைந்தது எமது பூமிப்பந்து..!

தொடருங்கள்.  நில்மினி…!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, நிழலி said:

நல்ல சுவாரசியமான ஒரு பயணக் கட்டுரை நில்மினி. நீங்கள் 2017 இல் உங்களது ஒரு பதிலில் மடகஸ்கார் பற்றி குறிப்பிட்டு இருந்ததைக் கண்டவுடன், அது பற்றி எழுத முடியுமா என நான் கேட்டது நினைவு.

வெளினாட்டு பயணிகள் பலரை கவரும் நாடாகவும், மாணிக்க கற்கள் விளையும் பூமியுமாக இருப்பினும் இவர்கள் ஏன் 500 வருடங்களுக்கு முற்பட்ட வாழ்க்கையைப் போன்று வறுமையாக வாழ்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. அதுவும் 13 நாட்களுக்கு அமெரிக்க டொலர் 12000 அறவிடும் விடுதிகளை கொண்ட ஒரு நாட்டில்.

வணக்கம் நிழலி. உண்மையில் இந்த பயண கட்டுரை எழுத வெளிக்கிட்டதே உங்களுக்குதான். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அது நிழலியா என்று ஒரு சந்தேகம். பழைய மெசேஜ்களை தேடிப்பார்த்தேன் கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படியும் பயண கட்டுரையை பார்த்து விட்டு கொமெண்ட்ஸ் போடுவீர்கள் என்று பார்த்தேன். காணவில்லை. இன்று தற்சமயமாக தான் பார்த்தேன். எல்லா notification களும் வருவதில்லை. அதனால் சிலரது பதில்கள் நான் பார்க்காமலே போக நேருடுகிறது. 

அரசியல்தான் காரணமாக இருக்கும். மிக மிக வறுமையான நாடு. 95 வீதமான வருமானம் 5 வீதமான மக்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் பார்த்த சில காட்சிகள் மக்கள் எப்படி 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்திருப்பார்கள் என்பதை மனக்கண் முன் கொண்டு வந்தது. கட்டுரை மேலும் தொடரும்

15 hours ago, புங்கையூரன் said:

மடஹாஸ்கார், ஹலப்பாஹஸ், ரஸ்மானியா, அவுஸ்திரேலியா போன்ற தீவுகள் தனித்துவமானவை. அங்கு இயல்வாக்கமடைந்த உயிரினங்களும் வித்தியாசமானவை. அதிசயங்கள் நிறைந்தது எமது பூமிப்பந்து..!

தொடருங்கள்.  நில்மினி…!

ஓம் புங்கையூரன். இலங்கை நியூசிலாந்து போன்ற நாடுகளும் அப்படிதான். பெரும் நிலப்பரப்பில் இருந்து எப்பவோ பிரிந்து போனதால் ஆதி காலத்து விலங்குகள் தாவரங்கள் எல்லாம் அழியாமல் இன்னமும் வாழ்கின்றன (ஓரளவுக்கேனும்)

Edited by nilmini
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

ஆனால் அது நிழலியா என்று ஒரு சந்தேகம். பழைய மெசேஜ் காளை தேடிப்பார்த்தேன் கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படியும் பயண கட்டுரையை பார்த்து விட்டு கொமெண்ட்ஸ் போடுவீர்கள் என்று பார்த்தேன். காணவில்லை. இன்று தற்சமயமாக தான் பார்த்தேன். எல்லா notification களும் வருவதில்லை. அதனால் சிலரது பதில்கள் நான் பார்க்காமலே போக நேருடுகிறது. 

வணக்கம் சகோதரி

உங்கள் திரியில் யாராவது எழுதுவதை அறிய செற்றிங்கில் போய்  Follow என்பதை அழுத்திவிட்டால் உங்கள் பதிவில் யார் எழுதினாலும் உடனே தெரியவரும்.

53-CAEC73-F4-E8-479-D-B078-9944335-E9-FC

  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத எத்தனை வேலை இருக்கு அத்தனையும் உங்கப்பனா செய்வான் நான் தான செய்யணும் காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும் தண்ணி கட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா ஒன்னா ரெண்டா போ போ ஒழுங்கா சொன்னத கேளு   ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா ஓ ஓ ஓ டேய் ஆண் : ஏன்டி என் வெள்ளையம்மா முட்டை முன் போல இல்லையம்மா ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும் கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்   கதிரு கதிரு நல்ல வருது வருது அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு அந்த பழசு பழசு அத மறந்தா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ........!   --- சொன்ன படி கேளு ---
    • அர்ச்சுனா அவசரப்பட்டு இப்போது பாதை மாறி பயணிப்பதாகவே எனக்கு படுகிறது.  தான்தோன்றித்தனமாக யாழ் வைத்தியசாலைக்கு சென்று சத்திய மூர்த்தியை சந்தித்ததும், அங்கு ஊழியர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதும் தப்பு. எதிராளிகளை பழிவாங்குவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் பெற்றுக்கொண்டாதாக எண்ணத்தோன்றுகிறது.  அநீதியை தட்டிக்கேட்பதற்கு சரியான வழிமுறைகளை பின்பற்றாமல், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அனைத்தையும் ஒரு நாளிலேயே  சரிசெய்துவிடலாம் என்று எண்ணி செயலாற்றுவது முற்றிலும் மடமை.  அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது. அதைத் தமிழ் மக்களும் நீண்டகாலத்துக்கு சகித்துக்கொள்வார்கள் என்று கூறமுடியாது.  
    • கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
    • அடுத்த வாரமே தன்னைப்  பிரபாகரனின் பேரன் என்பார்.  இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு  அடிக்கிற (B)பிராண்டை  பொறுத்து மாறுபடலாம். 😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.