Jump to content

ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்

7-11.jpg

உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த டா வின்சி என புகழ்ந்துள்ளார் ஜெலென்ஸ்கி.

27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முத்தில் கொல்லப்பட்டார்.

பக்முத் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது.

அந்த பக்முத் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த ஆண்டில் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, நமது வீரர்களை இழப்பது என்பது துயரமான ஒன்று. அவர்களின் தியாகத்தை நாம் எப்பொழுதும் மறக்கமாட்டோம். எப்போதும் நன்றியுள்ளவர்களாகவும் இருப்போம் என்றார்.

https://akkinikkunchu.com/?p=240694

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்துக்குள் 1100 ரஷ்ய படையினர் பலி: உக்ரேனிய ஜனாதிபதி

Published By: SETHU

13 MAR, 2023 | 02:30 PM
image

உக்ரேனின் பக்முத் நகரை கைப்பற்றவதற்கான சமரில் 1,100 இற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனனர் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார்.

கைத்தொழில் நகரான பக்முத்தை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படையினர் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதியிலிருந்து முயன்று வருகின்றனர். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் மிக நீண்டகாலமாக நடைபெறும் சமர் இதுவாகும்.

தற்போது பக்முத்தில் உக்கிரமான மோதல் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பக்முத்தின் கிழக்குப் பகுதியை ரஷ்ய படையினர் மற்றும் ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு ஆகியன கைப்பற்றியுள்ளன. அந்நகரின் மேற்குப் பகுதி உக்ரேனிய படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் 1,100 இறகும் அதிகமான எதிரிப் படையினரை நாம் கொன்றுள்ளோம் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார். அத்துடன், மேலு; சுமார் 1500 ரஷ்ய படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை? உக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 220 உக்ரேனிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது,

https://www.virakesari.lk/article/150415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான செய்தி மறைக்கப்படுகிறது (அதற்காக நான் இவரின் இழப்பின் உக்கிரைன் மீதான தாக்கத்தை மலினப்படுத்தவில்லை).

ருசியா உக்கிரன் மேற்கில் இருந்து செயற்றப்படும் நேட்டோ உயர் அதிகாரிகளின் 80 மீட்டருக்கும் ஆழமான பதுங்கு குளியைப் தாக்கி அளித்து உள்ளது.

இந்த பதுங்கு  குழி அமைப்பு 300 பேர் அளவு கொண்டு இருந்ததகவ்ம், 40 நேட்டோ உயர் அதிகாரிகள் மரணித்து உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

முன்பு சொல்லி இருந்தேன், கண்ணனுக்கு தெரியாத அணுஆயுத பிரயோக சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ருசியா இன்னும் 6 மாதகாலம் போரை இழுத்தால் 

வழமை போல அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு கொடுக்குமா தெரியவில்லை?

எல்லோரும் கைவிட்டால் உக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியாதென்றே எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

dana on Twitter: "‼️‼️⚡️A US nuclear bomber fired training shots at St.  Petersburg, Russia. The strategic bomber B-52H Stratofortress of the US Air  Force, capable of carrying nuclear weapons, entered the position

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ருசியா இன்னும் 6 மாதகாலம் போரை இழுத்தால் 

வழமை போல அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு கொடுக்குமா தெரியவில்லை?

எல்லோரும் கைவிட்டால் உக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியாதென்றே எண்ணுகிறேன்.

சீனா தொலைநோக்கில் காய்களை நகர்த்திவருகிறது 
பைடனுக்கு டிமென்ஷியா வர வர கூடுகிறது என்றே எண்ணுகிறேன் 
இந்தியா ரூபாயில் டிரேட் செய்ய போகிறது 13 நாடுகள் இஸ்திரேல் உட்பட உடன்பட்டு இருக்கிறார்கள்.
டாலருக்கு நல்ல அடி வீழ இருக்கிறது 
எமக்கும் இன்னுமொரு பொருளாதார நெருக்கடி வருவத்துக்கு அதிக சாத்தியம் உண்டு 

சீனாவை எங்களால் இனி எதிர்க்க முடியாது இந்த அடிப்படை புரியாத லூசுகள் அரசியலில் இருப்பதால் 
பொருளாதார அழிவை தடுக்க முடியாது. எங்களின் முதலாவது ட்ரேட் பங்காளி சீனாதான் 
எங்களிடம் இருந்து 50% வரையான இறக்குமதியை சீனா செய்கிறது ... இதை இன்னொரு நாட்டால் ஈடு செய்ய முடியாது. சீனாவில் இருந்துவரும் எல்லா காண்டைனர்களும் மீண்டும் நிரம்பியே திரும்புகின்றன .. இவ்வளவு தொகை பண்டங்களை வேறு எங்கும் அனுப்ப முடியாது 

3 hours ago, ஈழப்பிரியன் said:

ருசியா இன்னும் 6 மாதகாலம் போரை இழுத்தால் 

வழமை போல அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு கொடுக்குமா தெரியவில்லை?

எல்லோரும் கைவிட்டால் உக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியாதென்றே எண்ணுகிறேன்.

இப்போதே தல்லாம் தல்லாம் என்று சொன்ன தாங்கிகளை யாரும் அனுப்புவதாக இல்லை 
ஜெர்மனி டெக்னாலஜி மேம்படுத்தும் வேலை நடந்துகொண்டு இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறது. 
சீன இரானிய ஆயுதங்கள் ரஸ்யாவுக்கு போகின்றன சீனாவுக்கு போதிய எண்ணை மலிவு விலையில் கிடைக்கிறது. 

இங்கு இப்போதும் கொலிவூட் பாணியில் செய்திகள் வாசிப்பு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இந்த பதுங்கு  குழி அமைப்பு 300 பேர் அளவு கொண்டு இருந்ததகவ்ம், 40 நேட்டோ உயர் அதிகாரிகள் மரணித்து உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆதாரம்?

6 hours ago, Kadancha said:

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

இது உண்மை. இது நடந்த போது அதன் flight tracking படத்தை திண்ணையில் போட்டேன் (கீழே மருதரும் போட்டுள்ளார்).

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

இதற்கு  பதிலடியாக, நேட்டோ / அமெரிக்க st பீட்டர்ஸ் பேர்க் க்கு 200 கிம் தொலைவில் அணு ஆயுத விமானங்களை அனுப்பி ருசியாவை அச்சுறுத்தி உள்ளது.

இந்த "அச்சுறுத்தல்" பறப்புகளை முதலில் வழமையாக்கியதே ரஷ்யா தான். ரஷ்யாவின் strategic bomber "கரடி - Bear" என்று அழைக்கப் படும் Tu-95 விமானங்கள், அலாஸ்காவின் எல்லை வரை வந்து போவதுண்டு. அமெரிக்க - கனடா கூட்டு வான்பாதுகாப்பு அமைப்பான NORAD இதை அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதில்லை, ஏனெனில் இவை சர்வதேச வான்பரப்புகளை விட்டு விலகுவதில்லை.

 பல சமயங்களில் நோர்வேயின் வான் பரப்பிற்கு மிக அண்மையாக "கரடி" வந்ததால், நோர்வே விமானப் படை F-35 சண்டை விமானங்களை அனுப்ப வேண்டி வந்திருக்கிறது, ஆனால் எந்த எச்சரிக்கையும் இல்லாமல், எல்லையைக் குறித்துக் காட்டி "கரடியை"😂 சர்வதேசப் பரப்பிற்கு அனுப்பி வைத்தல் மட்டுமே நடந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

ஒரு வாரத்துக்குள் 1100 ரஷ்ய படையினர் பலி: உக்ரேனிய ஜனாதிபதி

ரஷ்யாவின் அன்றைய இன்றைய வரலாறுகளை கவனித்து பார்த்தால் தன் படை பலிகளை கண்டு அஞ்சும்/பின் வாங்கும் நாடல்ல அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவின் அன்றைய இன்றைய வரலாறுகளை கவனித்து பார்த்தால் தன் படை பலிகளை கண்டு அஞ்சும்/பின் வாங்கும் நாடல்ல அது.

உந்த உக்ரைன் புலிக்கேசியிட மொத்தக் கணக்குப் படி பார்த்தால்.. இப்ப ரஷ்சியாவிடம் இராணுவமுமில்லை. ஆயுதமும் இல்லை.. விமானமும் இல்லை. டாங்கியும் இல்லை. ஆனால்.. புலிக்கேசி இன்னும் அமெரிக்கனிடமும் அமெரிக்க அடிவருடிகளிடமுன் ஆயுதம் கேட்டு கெஞ்சுவது ஏனோ..??! 

உக்ரைன் புலிக்கேசிட கணக்கை.. ஏவிவிட்ட எஜமானர்களே நம்புவதில்லை. நீங்க என்னடான்னா..?!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

உந்த உக்ரைன் புலிக்கேசியிட மொத்தக் கணக்குப் படி பார்த்தால்.. இப்ப ரஷ்சியாவிடம் இராணுவமுமில்லை. ஆயுதமும் இல்லை.. விமானமும் இல்லை. டாங்கியும் இல்லை. ஆனால்.. புலிக்கேசி இன்னும் அமெரிக்கனிடமும் அமெரிக்க அடிவருடிகளிடமுன் ஆயுதம் கேட்டு கெஞ்சுவது ஏனோ..??! 

உக்ரைன் புலிக்கேசிட கணக்கை.. ஏவிவிட்ட எஜமானர்களே நம்புவதில்லை. நீங்க என்னடான்னா..?!

பலரது கோபத்துக்கு ஆளாகப் போகிறீர்கள். 

😀

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்

உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஸ்யாவின் அகோர தாக்குதலில்.... அகால மரணமடைந்த, டாவின்சியின்...  
பிரிவால் துயருற்று இருக்கும்,  புலிகேசி சாரி... ஜெலென்ஸ்கிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2023 at 17:27, goshan_che said:

ஆதாரம்?

நம்புவது, நம்பாததும் உங்களை பொறுத்தது.

இந்த ஊடகம், இந்தவச்செய்தி வந்ததும் இணைய முடக்குதலுக்கு உள்ளாகி, மீண்டும் இயங்க தொடக்கி இருக்கிறது. ரஷ்யா சார்பு ஊடகம் தான். 

அதில் சொல்லப்படுவது, ருசியா படைத்தரப்பின் தகவல்.

https://www.theinteldrop.org/2023/03/09/2nd-kinzhal-attack-hits-natos-western-command-center-400-feet-underground-40-killed/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

நம்புவது, நம்பாததும் உங்களை பொறுத்தது.

இந்த ஊடகம், இந்தவச்செய்தி வந்ததும் இணைய முடக்குதலுக்கு உள்ளாகி, மீண்டும் இயங்க தொடக்கி இருக்கிறது. ரஷ்யா சார்பு ஊடகம் தான். 

அதில் சொல்லப்படுவது, ருசியா படைத்தரப்பின் தகவல்.

https://www.theinteldrop.org/2023/03/09/2nd-kinzhal-attack-hits-natos-western-command-center-400-feet-underground-40-killed/

நன்றி. இணைப்புக்கும். இணையதளத்தின் சார்புநிலை பற்றிய விளக்கத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.