Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய முட்டைகள் நாளை நாட்டை வந்தடையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முட்டைகள் நாளை நாட்டை வந்தடையும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றிய கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Feeding-layers-extruded-flaxseed-can-boo

தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

குறித்த முட்டை இருப்புகள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/245329

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் வரப் போகுதா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

இனித்தான் வரப் போகுதா

Cartoon Chicken Laying Eggs GIFs | Tenor

கோழி வரும் முன்னே... முட்டை  வரும் பின்னே....  🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் முட்டை எண்டால் கூழ்முட்டைதானே?

ஏப்ரல் fool எண்டு அடிக்க வசதியா இருக்கும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இந்தியன் முட்டை எண்டால் கூழ்முட்டைதானே?

ஏப்ரல் fool எண்டு அடிக்க வசதியா இருக்கும்🤣

உப்பிடி இந்தியாவை கூடாமல் கதைச்சு  தேவையில்லாத எதிர்ப்பை தேடக்கூடாது கண்டியளோ.தமிழீழம் அமைக்க இந்திய உதவி தேவை.😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உப்பிடி இந்தியாவை கூடாமல் கதைச்சு  தேவையில்லாத எதிர்ப்பை தேடக்கூடாது கண்டியளோ.தமிழீழம் அமைக்க இந்திய உதவி தேவை.😎

@கற்பகதரு @arjun 

லேட்டா வந்தாலும், அண்ணர் உங்கள் வழிக்கு லேட்டஸ்டா வந்து விட்டார் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்திற்கு என தனியே ஒரு பொக்ஸ் எடுத்து வைக்குக..👌

IMG-20230319-213637.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் !

 

 

Asela Sampath arrested by CID | Daily News

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இறக்குமதி மூலம் சுங்கம் ஏற்றுமதி – இறக்குமதி சட்டத்தை மீறியுள்ளது. எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று முட்டைகளின் நிலையை பரீட்சிக்கவேண்டும் என்றும் அசேல சம்பத் கோரியுள்ளார்.

https://thinakkural.lk/article/246588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறக்குமதியாகும் முட்டைகள் பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றவை - கோழி பண்ணை உற்பத்தியாளர் சங்கம்

Published By: DIGITAL DESK 5

29 MAR, 2023 | 03:05 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் உள்நாட்டு பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றது என கோழி பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள்  55 கிராம் முதல் 70 கிராம் வரையில்  நிறையுடைய அதேவேளை  தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 45 கிராம் நிறையுடையனவாகும்.

இவற்றுள் தேன் போன்ற வாசனை வீசுகிறது. மேலும் குறித்த முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில் அவற்றுள் 50 வீதமானவை பழுதடைந்துள்ளன.

அரசாங்கமானது கோழி பண்ணை உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குமாயின் வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் வேண்டிய தேவை ஏற்படாது.

முன்னதாக முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்படவில்லை எனின் உள்நாட்டில்  உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை 30 முதல் 35 ரூபாய் வரையில் விற்பனை செய்திருக்கலாம்.

இதேவேளை நாட்டில் முட்டைகள் சந்தைகளில் காணப்பட்ட போதிலும் வர்த்தகர்கள் அவற்றை போதைப் பொருட்கள் விற்பனை செய்வது போன்று குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் விற்பனை செய்கிறார்கள். 

நாட்டில் முட்டை தட்டுப்பாடு காணப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றும் வர்த்தக அமைச்சர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/151667

  • கருத்துக்கள உறவுகள்

கோழி வளர்த்திருந்தாலும் இப்ப முட்டை போட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட்லீஸ்ட் சாதாரண கோழி முட்டையை கூட உற்பத்தி செய்ய முடியாத வக்கற்ற சிங்கள அரசுக்கு நாடு தேவையாம் .

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

 

May be an illustration

 

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த  முட்டைகளை, 
ஏழு நாட்களாக நாட்டுக்குள்  விடுவிக்கப்படாமல் வைத்திருந்திருக்கிறார்களாம். 
அந்த அளவுக்கு...  உணவுப் பொருட்களை கையாள்வதில் அவர்களின் இலட்சணம் தெரிகிறது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

May be an illustration

எனக்கு இந்த கேலிச்சித்திரத்தை பார்க்க நக்கல் சிரிப்புத்தான் வருது.
ஏதோ முட்டை அத்தியாவசிய சாப்பாடு மாதிரியும்......அதாலை சனம் உடம்பு மெலிஞ்ச மாதிரியும்.....

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

எனக்கு இந்த கேலிச்சித்திரத்தை பார்க்க நக்கல் சிரிப்புத்தான் வருது.
ஏதோ முட்டை அத்தியாவசிய சாப்பாடு மாதிரியும்......அதாலை சனம் உடம்பு மெலிஞ்ச மாதிரியும்.....

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

 

👆 ஒவ்வொரு நாளும் காலையில்... பிறண்டி, விஸ்கியுடன்...   
முட்டை கோப்பி குடிக்கும் ஆட்களுக்கு கஸ்ரமாக இருக்கும் அல்லவா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration

 

May be an illustration

 

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த  முட்டைகளை, 
ஏழு நாட்களாக நாட்டுக்குள்  விடுவிக்கப்படாமல் வைத்திருந்திருக்கிறார்களாம். 
அந்த அளவுக்கு...  உணவுப் பொருட்களை கையாள்வதில் அவர்களின் இலட்சணம் தெரிகிறது. 

 

6 hours ago, குமாரசாமி said:

May be an illustration

எனக்கு இந்த கேலிச்சித்திரத்தை பார்க்க நக்கல் சிரிப்புத்தான் வருது.
ஏதோ முட்டை அத்தியாவசிய சாப்பாடு மாதிரியும்......அதாலை சனம் உடம்பு மெலிஞ்ச மாதிரியும்.....

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

இது ஏப்ரல் பூலுக்கு பாவனைக்காக இறக்கப்பட்டது.

தெரிந்தோ தெரியமலோ திண்டுடாதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இது ஏப்ரல் பூலுக்கு பாவனைக்காக இறக்கப்பட்டது.

தெரிந்தோ தெரியமலோ திண்டுடாதேங்கோ.

இந்தியா இலங்கையை வைத்தே பிழைத்துக் கொள்ளும்......ஒன்றுக்கும் உதவாத கச்சடாக்கள் எல்லாம் இனி இங்குதான்.....! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இந்தியா இலங்கையை வைத்தே பிழைத்துக் கொள்ளும்......ஒன்றுக்கும் உதவாத கச்சடாக்கள் எல்லாம் இனி இங்குதான்.....! 

பணத்தை கொடுத்து வாங்கினால் பரவாயில்லை

எந்த நாளும் பிச்சை பாத்திரம் என்றால் இப்படி தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 05:40, பெருமாள் said:

அட்லீஸ்ட் சாதாரண கோழி முட்டையை கூட உற்பத்தி செய்ய முடியாத வக்கற்ற சிங்கள அரசுக்கு நாடு தேவையாம் .

 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 08:46, தமிழ் சிறி said:

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த  முட்டைகளை, 
ஏழு நாட்களாக நாட்டுக்குள்  விடுவிக்கப்படாமல் வைத்திருந்திருக்கிறார்களாம். 
அந்த அளவுக்கு...  உணவுப் பொருட்களை கையாள்வதில் அவர்களின் இலட்சணம் தெரிகிறது. 

கடன் கிடைத்ததுக்கு வெடியும் பால்சோறும் தின்னுகிட்டு வெறியில் கிடப்பாங்கள் தேடுங்கையா ....௨௦௦9 லிருந்து வெடிபோடுவதே அவங்கடை முக்கிய தொழில் ஆகிவிட்டது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2023 at 02:09, ஈழப்பிரியன் said:

பணத்தை கொடுத்து வாங்கினால் பரவாயில்லை

எந்த நாளும் பிச்சை பாத்திரம் என்றால் இப்படி தான் வரும்.

தானத்துக்கு உழுத மாட்டின்ர பல்லைப்பிடிச்சு பாக்கக்கூடாது!

On 30/3/2023 at 19:24, குமாரசாமி said:

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

அதே! வருமானம் கொழிக்கும் வர்த்தக நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விக்குதுகள், விவசாயிகளை சோம்பேறிகளாக்கி உள்ளூர் உற்பத்தியை நிறுத்தி இறக்குமதி செய்யுதுகள், இதுகளுக்கு ஒவ்வொரு அமைச்சர், இவர்களை நம்பி கடன் கொடுக்கவும் ஆட்கள், இதற்குள் தன்னிறைவுக்கனவு வேறு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி -நளின் பெர்னாண்டோ

 

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் 30 மில்லியன் முட்டைகள் வரை இறக்குமதி செய்ய முடியும் என்றார்.

எவ்வாறாயினும், அதிக அளவு இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு போதுமான அளவு முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வெளியிடும் திறன் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான விருப்பத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அதன்படி, முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இதுவரை மொத்தம் 3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/247442

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முட்டைகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய அனுமதியில்லை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஒரு மில்லியன் முட்டைகளை தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் உள்ள முட்டைகளுக்கான அனுமதியை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் பெற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அந்த முட்டைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் நாளைய தினம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார். இதேவேளை, கடந்த 23 ஆம் திகதி இரண்டு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன்படி, இதுவரை நான்கு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/248030

பாவனைக்குதவாதவற்றை வாங்குவதாக சொல்லிவிட்டு(ஏற்றுமதி இறக்குமதி இரு பக்கமும் ஊழல்) விற்றால் அம்பலமாகும் என அனுமதிக்கவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இங்கால பக்கம் வரல முட்டை விலை என்னவோ 65 ஓவாதான் 

ஆனால் வடகிழக்கில் இருக்கும் சாதரண குடும்ப பிள்ளைகளின் போஷாக்கு வீதம் தற்போது குறைந்துள்ளது சில கணக்கெடுப்புக்களில் காரணம் பொருட் கள் விலையேற்றத்தால்  இதை நாங்களும் உணர்கிறோம்  ஒரு மாதுளை 800 ரூபா குறைஞ்ச விலை அப்படி இருக்க பிள்ளைகளுக்கு எப்படி போசாக்கான உணவுகள் கொடுக்க முடியும் ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் இங்கால பக்கம் வரல முட்டை விலை என்னவோ 65 ஓவாதான் 

ஆனால் வடகிழக்கில் இருக்கும் சாதரண குடும்ப பிள்ளைகளின் போஷாக்கு வீதம் தற்போது குறைந்துள்ளது சில கணக்கெடுப்புக்களில் காரணம் பொருட் கள் விலையேற்றத்தால்  இதை நாங்களும் உணர்கிறோம்  ஒரு மாதுளை 800 ரூபா குறைஞ்ச விலை அப்படி இருக்க பிள்ளைகளுக்கு எப்படி போசாக்கான உணவுகள் கொடுக்க முடியும் ??

இங்க இந்திய மாதுளம்பழம் 1000ரூபா!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இங்க இந்திய மாதுளம்பழம் 1000ரூபா!

3 கறுத்த கொழும்பான மாம்பழம் 1000 ரூபா காரணம் நோன்பு கால, விலை அதிகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.