Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

சினத்தை குளிர்விப்பதற்காய்
பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன்

செவிகளை உரசி உரசி
சீண்டியபடி நகர்ந்தது காற்று
நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை
விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம்
விரைந்து விரைந்து
வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன்

காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது
எத்தனை வலிகள்
எத்தனை குதறல்கள்
எத்தனை  குமுறல்கள்
அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது

புரிந்தும் புரியாதவர்களாய்
புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய்
பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி
வரைந்த கோடுகளில் மீள மீள
வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள்
காலம்
அவர்களயும் பதிய மறுக்கவில்லை

என்.பரணீதரன் ( கரவை பரணீ)

நோர்வே

 

99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். 

 

என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.

 

  • Like 11
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Paranee said:

99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். 

வணக்கம் பரணி உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

இணைந்திருங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் பரணி வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீளவும் காண்பதில் மகிழ்ச்சி . தொடர்ந்திருங்கள். 

  • Thanks 1
Posted

வணக்கம் பரணி. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. 

  • Thanks 1
Posted

வணக்கம் வணக்கம்
அனைவருக்கும் நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வணக்கம், வாருங்கள். தொடர்ந்து இணைதிருங்கள்.

எங்களோடு மல்லுக்கட்டி🤪 குதூகலியுங்கள், களிப்புறுங்கள்!😄

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நன்னிச் சோழன் said:

வணக்கம், வாருங்கள். தொடர்ந்து இணைதிருங்கள்.

எங்களோடு மல்லுக்கட்டி🤪 குதூகலியுங்கள், களிப்புறுங்கள்!😄

நன்னி பரணி பழைய ஆள்.

யாழ் தொடங்கிய கால உறுப்பினர்.

மட்டுறுத்தினராகவும் இருந்த ஞாபகம்.

  • Thanks 1
Posted

ம் மட்டுறுத்தினராகவும் இருந்திருந்தேன்.  யாழ் இணையம் எனக்கு துணையை  தந்தது நல்ல வாழ்க்கையை தந்தது.  பல ஆளுமைகளை நட்பாக்கியது. என்னை எனக்கே இனம் காட்டியது

Posted

மீண்டும் கண்டது மகிழ்ச்சி பரணி. தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் மீள் வரவு நல்வரவாகட்டும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Paranee said:

ம் மட்டுறுத்தினராகவும் இருந்திருந்தேன்.  யாழ் இணையம் எனக்கு துணையை  தந்தது நல்ல வாழ்க்கையை தந்தது.  பல ஆளுமைகளை நட்பாக்கியது. என்னை எனக்கே இனம் காட்டியது

அப்புறம் ஏனையா விவாகரத்து எடுத்தீர்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கவிதையுடன் மீள் வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

நன்னி பரணி பழைய ஆள்.

யாழ் தொடங்கிய கால உறுப்பினர்.

மட்டுறுத்தினராகவும் இருந்த ஞாபகம்.

அடையாளங்காட்டியமைக்கு நன்றி 

  • Thanks 1
Posted (edited)
20 hours ago, ஈழப்பிரியன் said:

நன்னி பரணி பழைய ஆள்.

யாழ் தொடங்கிய கால உறுப்பினர்.

மட்டுறுத்தினராகவும் இருந்த ஞாபகம்.

 

15 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் ஏனையா விவாகரத்து எடுத்தீர்கள்.

திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்தமையால் இங்கு 

Edited by Paranee
  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Paranee said:

 

திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்தமையால் இங்கு வருகை குறைந்துவிட்டது. 

 

துணைவியை தந்ததும் இந்த யாழ் இணையம்தான். 2003ம் ஆண்டு முகம் பார்க்காமல் என் எழுத்துகளை மாத்திரமே அறிந்த ஒருத்தி என்னை காதலித்து 2004ம் ஆண்டு கரம்பிடிக்க காரணமாக இருந்தது இந்த யாழ் இணையம்தான்.  

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி பரணி.

யாழ் இணையம் வாழ்க்கைத்துணையை கண்டடைய உதவியது என்பது புதிய தகவல்.!

  • Thanks 1
Posted
2 hours ago, கிருபன் said:

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி பரணி.

யாழ் இணையம் வாழ்க்கைத்துணையை கண்டடைய உதவியது என்பது புதிய தகவல்.!

இங்கே இருந்தவர்களிற்கு தெரியும்.  இணுவையூர் மயூரன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவனம் அப்பு ப்ரசர் ஏறிக்கிடக்கிற மாதிரி தெரியுது. கவிதை சொல்லுது..... மீள் வருகை நலமாகட்டும்.

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/3/2023 at 20:24, Paranee said:

புரிந்தும் புரியாதவர்களாய்
புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய்
பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி
வரைந்த கோடுகளில் மீள மீள
வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள்
காலம்
அவர்களயும் பதிய மறுக்கவில்லை

 

பரணி, அன்றைய கருத்தாடல்களை நினைத்தபடி நான் வரைந்த கோடுகளுடன் நகர்கிறேன்

மூனா/முல்லை

688-C7365-7311-40-AC-96-E6-CD63-BAD2-CCF

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.