Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேறு கண்டத்து பிறவி....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கத்துக்கடல் நாகைக்

காத்தான் தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில்

அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊர் அடங்கும்;

ஓரகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

  • Replies 95
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொற்பிழையை திருத்தி வாசிக்கலாம் ஆனால் பொருட்பிழை இருந்தால் அதை வாசிப்பவர்கள் தமக்கு சாதகமாகத்தானே பயன்படுத்துவார்கள்.பொருட்ப

ஒரு கவிதையை வாசிக்கிறோம். கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருக்கிறது. கருத்தின் அடிப்படையில் விவாதிக்கலாம்.

ஒரு கவிதையை வாசிக்கிறோம். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், பொருட்பிழைகள் இருக்கின்றன. சுட்டிக்காட்டுகிறோம். பிழையில்லையென்றால் பிழையில்லையென பதிலளிக்கலாம்.

ஒரு கவிதையை வாசிக்கிறோம். எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், பொருட்பிழைகள் இருக்கின்றன. சுட்டிக்காட்டுகிறோம். பிழையிருந்தால் நேர்மையோடு திருத்திக்கொள்ளலாம்.

எழுத்துப் பிழைகள் என்பது இணையத்தைப் பொறுத்தவரை சாதாரணமான விடயம் தான். அதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். தனது கவிதையின் பொருளை மாற்றக் கூடிய பிழை என்று தெரிந்தும், அதைச் சுட்டிக் காட்டிய பின்னரும் திருத்தாமல் இருப்பதில் எந்த நேர்மையும் இல்லை. நேரமில்லை, அவசரத்தில் எழுதுகிறேன் என்பவருக்கு, பிழைகளை சுட்டிக் காட்டியவர்களை வசைபாடுவதற்கு நேரமும் பொறுமையும் இருக்கிறது எனின் இதைப் போல அயோக்கியத்தனம் வேறில்லை.

வன்னி மைந்தன் நாம் சொல்கிற கருத்தை நேர்மையுடன் எதிர்கொண்டிருந்தால் தொடர்ந்து கருத்தாடுவதில் பயனுண்டு. நாம் அவரை மட்டம் தட்டுவதாக உணர்ந்திருந்தால் எமது கருத்துக்களை புறக்கணித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், பதில் கவிதை என்கிற பெயரில் எழுத எழுத மீண்டும் மீண்டும் பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இத்தனைக்கும் ஜெயபாலனின் கவிதை ஒன்று அங்காலே அநாதரவாய் நிற்கிறது. அதைக் கண்டுகொள்வார் யாருமில்லை. பிழைகளால் பிழைகளை விளம்பரப்படுத்தி, பிழைகள் விட ஊக்கமளிக்கும் எங்களை நாம் தண்டித்துக்கொள்வது நல்லது. :)

எனவே, இனியும் தவறிழைக்காது இருக்க வேண்டுமென்றால், இன்றிலிருந்து வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் பதிலளிக்காது புறக்கணிப்பதே மேல், அதுவே எனது சுயமரியாதைக்கும் சிறப்பு எனக் கருதி இத்தலைப்பிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறேன்.

நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன். :o

  • கருத்துக்கள உறவுகள்

சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாமா ஐயா?

"அறிவினையதிலே" என்றால் என்ன பொருள்?

"இல்லென இல்லென" என்றால் என்ன பொருள்?

"உள்கணக்க" என்றால் என்ன பொருள்?

மதமதை மதமதை நீயிழிப்பாய்

மடமையில் இன்றதை நீ செய்வாய்

ஒன்றதை ஒன்றதை நீ மறந்தாய்

உன்னிலை மீதிலே நீ உமிழ்ந்தாய்...

அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

ஊழ்வினை ஊழ்வினை உள்கணக்க

வேறென்ன வேறென்ன நீயுரைப்பாய்...

இரும்பது மீதிலே ரயிலோடும்

இல்லென இல்லென நீயுரைத்தால்

உன்னிலை உன்னிலை என்னவென்போம்

ஊழ்வினையதுவே மேலே என்போம்...

பிழைகளால் பிழைகளை விளம்பரப்படுத்தி, பிழைகள் விட ஊக்கமளிக்கும் எங்களை நாம் தண்டித்துக்கொள்வது நல்லது.

எனவே, இனியும் தவறிழைக்காது இருக்க வேண்டுமென்றால், இன்றிலிருந்து வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் பதிலளிக்காது புறக்கணிப்பதே மேல், அதுவே எனது சுயமரியாதைக்கும் சிறப்பு எனக் கருதி இத்தலைப்பிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறேன்

இத்தலைப்பில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கவிதையும். அது தொடர்பில் வினப்பட்ட வினாவும்.

இதற்கு இக்கவிதையின் வாசகன் என்ற முறையில் நான் எனது விளக்கத்தை அளித்திருந்தேன். அதற்கு வன்னி மைந்தன் மாற்றுக் கருத்துச் சொல்லவில்லை.

அறிவினையதிலே என்பதில் விளங்க முடியாத தன்மை என்ன..???! அறிவுதனிலே என்பதையே அவர் அப்படி எழுத முனைந்திருக்கிறார். காரணம்.. அதற்கு வேறு பொருள் அமைய அங்கு இடமில்லை..!

உள்கணக்க.. உள் கனக்க.. என்பதாக வர வேண்டியது.. காரணம் உள்கணக்க என்ற ஒரு பதம் சாதாரண பாவனையில் இருப்பதாக இல்லை. வன்னிமைந்தன் செந்தமிழ் கொண்டு கவி வடிக்கவில்லை எப்போதும்.

இல்லென.. என்பதை இல்லையென என்று அந்த இடத்தில் இலகுவாகவே அடையாளம் காண முடிகிறது.

அப்படி இருக்க... ஏதோ செந்தமிழ் கொண்டு கவி வடித்தது போல் வினவியது இருக்க.... அந்த வினவலுக்குள் தனது முன்னைய முரண்பாட்டை மீள் பிரதிபலிக்க முயன்ற சபேசன்.. இந்த விடயத்தை ஊதிப் பெருப்பித்து விட்டார்.

இந்த விடயத்தில்... வன்னி மைந்தன் ஒரு வளரும் எழுத்தாளன் என்ற வகையில் அவர் பக்கம் எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. காரணம்.. வினவியவர்களின் அனுபவம், பின்னணி வன்னி மைந்தனுக்கு இருக்க வாய்ப்பில்லை.

அனுபவம் மற்றும் பின்னணி கொண்டவர்கள்.. வினவலைத் தவிர்த்து தாங்கள் புரிந்ததைச் சொல்லி வன்னி மைந்தனிடம் கேட்டிருந்தால்.. அவர் அதற்குப் பதிலிறுத்திருக்க முடியும் என்ற ஒரு நிலையைக் கருத்தில் கொண்டே எனது விளக்கத்தை அளித்தேன். அதற்கு அவர் மாற்றுக் கருத்து வைக்கவில்லை.

அடுத்து முக்கியமான விடயம்.. கள உறவுகளைப் புறக்கணிப்பு செய்தல்..???!

இங்கு உலகக் கிண்ணப் போட்டியின் போது சிறீலங்கா அணிக்கு ஆதரவு வழங்கிய நிலைப்பாட்டுக்காக கூட சிலரை சிலர் புறக்கணிக்க ஆரம்பித்தனர். அது அவரவர்களின் விருப்பம் என்று அப்பவே கூறப்பட்டது. பகிரங்கமாக கூறிப் புறக்கணிக்க வேண்டியதில்லை என்றும்.. அதற்கான அவசியம் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. காரணம்.. கள உறவுகளைப் புறக்கணிப்பு என்பதன் மூலம் யாழ் களத்தின் இலக்கை அடையவதை நாமே சேதப்படுத்திக் கொள்கின்றோம் என்பதுதான் நிஜம். அத்தோடு அது சிலரின் மேலாண்மை ரீதியான நிலைப்பாட்டை நிறுவும் வாய்ப்பை உண்டு பண்ணும்.

"பிழைகளால் பிழைகளை விளம்பரப்படுத்தி, பிழைகள் விட ஊக்கமளிக்கும் " என்பது சரியான உதாரணங்களோடு இங்கு விளங்க வைக்கப்பட வேண்டும். காரணம்.. இந்த இடத்தில் கண்டத்துப் பிறவி.. வேற்றுக்கிரகவாசி என்பதானதில் எனது பங்களிப்பு உண்டு. ஒருவேளை அவையும் இங்கு கருத்தில் எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும். இன்றேல்.. பகிரங்கமாக கூறாமல் நாமும் சில பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி எழலாம். அதனால் யாரும் யாருக்காகவும் எதையும் இழக்கப் போறதில்ல. யாழும் தமிழும் தான் பங்களிப்புக்களை இழக்கும். :)

ஓரிடத்தில் வன்னி மைந்தன் என்பது தவறுதலாக வல்வை மைந்தன் என்று வந்துவிட்டது. தவறுக்கு வருத்தங்கள்.

நன்றி வணக்கம்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இத்தலைப்பில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கவிதையும். அது தொடர்பில் வினப்பட்ட வினாவும்.

இதற்கு இக்கவிதையின் வாசகன் என்ற முறையில் நான் எனது விளக்கத்தை அளித்திருந்தேன். அதற்கு வன்னி மைந்தன் மாற்றுக் கருத்துச் சொல்லவில்லை.

அறிவினையதிலே என்பதில் விளங்க முடியாத தன்மை என்ன..???! அறிவுதனிலே என்பதையே அவர் அப்படி எழுத முனைந்திருக்கிறார். காரணம்.. அதற்கு வேறு பொருள் அமைய அங்கு இடமில்லை..!

உள்கணக்க.. உள் கனக்க.. என்பதாக வர வேண்டியது.. காரணம் உள்கணக்க என்ற ஒரு பதம் சாதாரண பாவனையில் இருப்பதாக இல்லை. வன்னிமைந்தன் செந்தமிழ் கொண்டு கவி வடிக்கவில்லை எப்போதும்.

இல்லென.. என்பதை இல்லையென என்று அந்த இடத்தில் இலகுவாகவே அடையாளம் காண முடிகிறது.

அப்படி இருக்க... ஏதோ செந்தமிழ் கொண்டு கவி வடித்தது போல் வினவியது இருக்க.... அந்த வினவலுக்குள் தனது முன்னைய முரண்பாட்டை மீள் பிரதிபலிக்க முயன்ற சபேசன்.. இந்த விடயத்தை ஊதிப் பெருப்பித்து விட்டார்.

இந்த விடயத்தில்... வன்னி மைந்தன் ஒரு வளரும் எழுத்தாளன் என்ற வகையில் அவர் பக்கம் எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. காரணம்.. வினவியவர்களின் அனுபவம், பின்னணி வல்லை மைந்தனுக்கு இருக்க வாய்ப்பில்லை.

அனுபவம் மற்றும் பின்னணி கொண்டவர்கள்.. வினவலைத் தவிர்த்து தாங்கள் புரிந்ததைச் சொல்லி வன்னி மைந்தனிடம் கேட்டிருந்தால்.. அவர் அதற்குப் பதிலிறுத்திருக்க முடியும் என்ற ஒரு நிலையைக் கருத்தில் கொண்டே எனது விளக்கத்தை அளித்தேன். அதற்கு அவர் மாற்றுக் கருத்து வைக்கவில்லை.

அடுத்து முக்கியமான விடயம்.. கள உறவுகளைப் புறக்கணிப்பு செய்தல்..???!

இங்கு உலகக் கிண்ணப் போட்டியின் போது சிறீலங்கா அணிக்கு ஆதரவு வழங்கிய நிலைப்பாட்டுக்காக கூட சிலரை சிலர் புறக்கணிக்க ஆரம்பித்தனர். அது அவரவர்களின் விருப்பம் என்று அப்பவே கூறப்பட்டது. பகிரங்கமாக கூறிப் புறக்கணிக்க வேண்டியதில்லை என்றும்.. அதற்கான அவசியம் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. காரணம்.. கள உறவுகளைப் புறக்கணிப்பு என்பதன் மூலம் யாழ் களத்தின் இலக்கை அடையவதை நாமே சேதப்படுத்திக் கொள்கின்றோம் என்பதுதான் நிஜம். அத்தோடு அது சிலரின் மேலாண்மை ரீதியான நிலைப்பாட்டை நிறுவும் வாய்ப்பை உண்டு பண்ணும்.

"பிழைகளால் பிழைகளை விளம்பரப்படுத்தி, பிழைகள் விட ஊக்கமளிக்கும் " என்பது சரியான உதாரணங்களோடு இங்கு விளங்க வைக்கப்பட வேண்டும். காரணம்.. இந்த இடத்தில் கண்டத்துப் பிறவி.. வேற்றுக்கிரகவாசி என்பதானதில் எனது பங்களிப்பு உண்டு. ஒருவேளை அவையும் இங்கு கருத்தில் எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும். இன்றேல்.. பகிரங்கமாக கூறாமல் நாமும் சில பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி எழலாம். அதனால் யாரும் யாருக்காகவும் எதையும் இழக்கப் போறதில்ல. யாழும் தமிழும் தான் பங்களிப்புக்களை இழக்கும். :)

நன்றி வணக்கம்.

நமது சார்பில் அச்சொட்டான கருத்தை மிக தெளிவாக விளக்கியுரைத்தமைக்கு எனது நன்றிகள்...

மாற்றாரின் திட்டமிடல் நாம் நன்றெ அறிவோம் பல சிக்கல்களை தவிர்பதற்காக நான்

பாவை விட்டு வேறு விடயத்தில் நுழைய வில்லை..கருத்தளிக்கவில்லை..

எனக்கு புறு பார்ப்பதென்பது கடினமான காரியம்...

மதயிழிவு நிலைகளை நிறுத்தங்கள் அவ்வாறு இல்லாவிடின் வேறு நிலைகளை நாம் எடுக்கவேண்டி வரும்...

பா புரியாதவர் எப்படி பகுத்தறிவாளியாக முடியம்...???

இதிலும் சொற்பிழை இருக்கலாம்

நன்றி வணக்கம்.

கருத்துக் களம் என்று வந்த பிறகு, இங்கு யாரையும் புறக்கணிப்பது நல்லது அல்ல.

யாரும் யாரையும் புறக்கணித்து எதுவும் ஆகப் போவது இல்லை.

வன்னிமைந்தனிற்கும் எங்களை விட்டால் தவறுகளை சுட்டிக்காட்ட யார் இருக்கிறார்கள்?

நாங்கள்தானே அவருக்கு தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

சரி! விடயத்திற்கு வருவோம்

"அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்"

இதைப் பற்றி முதலில் இளஞன்தான் கேள்வி எழுப்பி இருந்தார். பின்பு நானும் கேள்வி கேட்டிருந்தேன்.

ஆனால் நான் கேட்ட "பலுநோய், இலுநோய்" போன்றவற்றிற்கு இன்னும் பதில் இல்லை. ஆனால் பறவாயில்லை.

இங்கே சொல்லப்பட்ட "அறிவினை" பிரச்சனைக்கு வருவோம்.

"அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்"

"அறிவினை" என்ற சொல் "அறிவை" என்று பொருள் படும்.

உதாரணம்: அவனுடைய அறிவினை நான் பாராட்டுகிறேன்

வட்டார பேச்சு வழக்கில் அறிவினை என்பதை அறிவு என்றும் பயன்படுத்துகிறார்கள்.

வன்னிமைந்தன் கூறிய "அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்" என்பதை "அந்த அறிவினை அதிலே நீ வீழ்ந்தாய்" என்றதான் கொள்ள வேண்டும். இதை வேறு மாதிரி எழுத முடியாது.

;ஆகவே இங்கே "அந்த அறிவு, அதிலே நீ வீழ்ந்தாய்" என்று பொருள் வரும்.

இப்பொழுது என்னுடைய சந்தேகம்:

வன்னிமைந்தன் பாராட்டுகிறாரா, திட்டுகிறாரா????

Edited by சபேசன்

"அறிவுரை அறிவுரையென விரித்தாய்- அந்த

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்"

இதைப் பற்றி முதலில் இளஞன்தான் கேள்வி எழுப்பி இருந்தார். பின்பு நானும் கேள்வி கேட்டிருந்தேன்.

"அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்"

"அறிவினை" என்ற சொல் "அறிவை" என்று பொருள் படும்.

உதாரணம்: அவனுடைய அறிவினை நான் பாராட்டுகிறேன்

வட்டார பேச்சு வழக்கில் அறிவினை என்பதை அறிவு என்றும் பயன்படுத்துகிறார்கள்.

வன்னிமைந்தன் கூறிய "அந்த அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்" என்பதை "அந்த அறிவினை அதிலே நீ வீழ்ந்தாய்" என்றதான் கொள்ள வேண்டும். இதை வேறு மாதிரி எழுத முடியாது.

;ஆகவே இங்கே "அந்த அறிவு, அதிலே நீ வீழ்ந்தாய்" என்று பொருள் வரும்.

இப்பொழுது என்னுடைய சந்தேகம்:

வன்னிமைந்தன் பாராட்டுகிறாரா, திட்டுகிறாரா????

அறிவினை அதிலே நீ வீழ்ந்தாய்

அறிவின் + ஐ அதிலே நீ வீழ்ந்தாய்

அதாவது அறிவில் தோன்றிய ஐ(யம்) அதிலே நீ வீழ்ந்தாய்

என்று எடுத்துக் கொள்ளலாம் சபேசன்.

ஈழத்தில் ஒரு காளமேக புலவர் உருவாவதை தடுத்து விடாதீர்கள் சபேசன் :)

காளமேகத்துப் புலவர்கள் தோன்றினால் நன்று

ஆனால் நிறையக் காளான் புலவர்கள்தான் இருக்கிறார்கள்.

என்றாலும் வெற்றிவேலின் விளக்கம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது.

வெற்றிவேலை மனதாரா பாராட்டுகிறேன்

Edited by சபேசன்

காளமேகத்துப் புலவர்கள் தோன்றினால் நன்று

ஆனால் நிறையக் காளான் புலவர்கள்தான் இருக்கிறார்கள்.

:D:D:D

வெற்றிவேலின் விளக்கம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது.

வெற்றிவேலை மனதாரா பாராட்டுகிறேன்

நன்றி.

அது போலவே உங்கள் கருத்துக்கள் மேல் நாம் தொடுக்கும் தாக்குதல்களை நீங்களும் தனிப்பட்ட தாக்குதல்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மூத்தோர் மேல் நாம் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம். அத்தோடு பல முரண்பாடான கொள்கைகள் கொண்டிருந்தாலும், ஈழப்போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக தான் கருதுகிறோம்.

மேலும், பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை கொண்டவர்களையும் ஈழவிடுதலைக்காக ஒன்றினைக்கும் திறன் பெற்ற தலைவரின் அதிசயிக்கத்தக்க ஆளுமைக்கு தலைவணங்குகிறோம்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

காளமேகத்துப் புலவர்கள் தோன்றினால் நன்று

ஆனால் நிறையக் காளான் புலவர்கள்தான் இருக்கிறார்கள்.

என்றாலும் வெற்றிவேலின் விளக்கம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது.

வெற்றிவேலை மனதாரா பாராட்டுகிறேன்

This post has been edited by சபேசன்: இன்று, 10:42 AM

அதனை நீங்கள் சொல்ல தேவையில்லை.இங்கு வந்து கவிதை வாசித்து விமர்சிப்பவர்கள் கூற வேண்டும்."நான்" என்னும் மமதை எப்பவுமே நல்லதுக்கல்ல நண்பரே!!!!!!!!!

எனவே, இனியும் தவறிழைக்காது இருக்க வேண்டுமென்றால், இன்றிலிருந்து வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் பதிலளிக்காது புறக்கணிப்பதே மேல், அதுவே எனது சுயமரியாதைக்கும் சிறப்பு எனக் கருதி இத்தலைப்பிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறேன்.

"என்னப்பா, இளைஞன் நேற்று இரவு போதையில இருந்தவனோ? இன்றிலிருந்து பதிலளிக்காமல் புறக்கணிக்கப் போறன் என்று எழுதிட்டு, இன்று வந்து எழுதுறானே? இளைஞனின்ர சுயமரியாதைக்கு என்ன ஆச்சு?" என்று குழப்பமாக இருக்குதோ? அப்படி நீங்கள் தவறாக பொருள் கொண்டிருந்தால் நான் என்ன செய்ய...

அதொன்றுமில்லை எல்லாம் அன்புத் தோழர் வன்னி மைந்தனின் பாதிப்புத்தான். :P

நானும் பார்த்தேன் நானெழுதிய வசனங்களுக்கும் யாராவது பெருந்தகை வந்து மொழிபெயர்ப்பு செய்வார் என்று. ஆனால் யாருமே வராத காரணத்தால் நானே எனது வசனங்களை மொழிபெயர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். அதாகப்பட்டது...

விளக்கம் 1:

"இன்றிலிருந்து" என்பதில் எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டது.

அது, "இன்றிருந்து (இன்று இருந்து)" என்று வந்திருக்கவேண்டும். இடையில் "எலி" புகுந்ததால் "லி" சேர்ந்துவிட்டது. "இன்று பேசாமல் (ஒன்றும் செய்யாமல்) நாற்காலியில் இருந்து ..." என்பதாகவே நீங்கள் பொருள் கொள்ளவேண்டும்.

விளக்கம் 2:

"இன்றிலிருந்து" என்பதில் எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டது.

அது, "இன்றில்லிருந்து (இன்று இல் இருந்து)" என்று வந்திருக்கவேண்டும். இடையில் "ல்" ஐ தட்டச்சின் வேகம் தின்றுவிட்டதால் இந்தப் பிழை நேர்ந்துவிட்டது. "இல்" என்றால் வீடு என்றும் பொருளுண்டு. அதனால் "இன்று வீட்டில் இருந்து" என்பதாகவே நீங்கள் பொருள் கொள்ளவேண்டும்.

விளக்கம் 3:

"இன்றிலிருந்து" என்பதில் எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டதாக நீங்கள் கருதினால் அது பிழை.

எப்படியென்றால், "கதிரையில் இருந்து எழுதினேன்" என்று சொல்வோம் தானே அதுபோல் "இன்றில் இருந்து (அமர்ந்து) எழுதினேன்" என்பதாகப் பொருள் கொள்ளவேண்டும். (இலக்கணப்பிழை, சொற்பிழை இருக்கலாம்... ஆனால் சொல்ல வந்த கருத்து அதுதான் :P ).

"புறக்கணிப்பதே மேல்" என்பதை நீங்கள் தவறான பொருளில் உள்வாங்கிவிட்டீர்கள்.

புறக்கணிப்பு என்பதை Ignorance என்று நீங்கள் நினைத்திருந்தால் அது உங்கள் அப்போதைய மனோநிலையைக் கொண்டு கற்பித்த பொருளாகவே இருக்கும். நான் இங்கே சொல்லியிருப்பது "புறத்தை கணித்தல்", "புறத்தின் கணிப்பு", "புறம் கணிப்பு" "judgement" என்கிற பொருளிலேயே. (இலக்கணப்பிழை, சொற்பிழை இருக்கலாம்... ஆனால் சொல்ல வந்த கருத்து அதுதான் :P ).

இப்படியாக நான் சொல்லவந்தது என்னவென்றால்...

எனவே, இனியும் தவறிழைக்காது இருக்க வேண்டுமென்றால், இன்றிலிருந்து வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் பதிலளிக்காது புறக்கணிப்பதே மேல், அதுவே எனது சுயமரியாதைக்கும் சிறப்பு எனக் கருதி இத்தலைப்பிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறேன்

மொழிபெயர்ப்பு:

எனவே, இனியும் தவறிழைக்காது இருக்க வேண்டுமென்றால், இன்றிலிருந்து (இன்றில் இருந்து = இன்று என்பதில் இருந்து அல்லது கிடந்து) / இன்றிருந்து (இன்று பேசாமல் சும்மா இருந்து) / இன்றில்லிருந்து (இன்று வீட்டில் இருந்து) வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் (கதையோ, கவிதை, கட்டுரையோ, கருத்தோ அவர் எழுதுகிறவற்றுக்கு) பதிலளிக்காது புறக்கணிப்பதே (வெளிச் சூழலை அவதானித்து அல்லது கணித்து அதாவது judge பண்ணி அதாவது ஆக்கம் எழுதிய சூழல், ஆக்கம் எழுதிய கவிதைப்பகுதி, கருத்துக்கள நிலைமை, வன்னி மைந்தன் இப்படிக் கவிதைகள் எழுதுவது ஏன் என்ற காரணங்கள் போன்ற அவரின் கவிதைப் புறத்தின் கணிப்பை மேற்கொள்வதே) மேல், அதுவே எனது சுயமரியாதைக்கும் சிறப்பு எனக் கருதி இத்தலைப்பிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறேன். :P

அதாவது "இன்று" என்று குறிப்பிட்டது "நேற்று இரவு 11:19 மணிக்கு". நேற்று 41 நிமிடங்கள் மட்டும் தான் ஒதுங்கிக்கொண்டனான். அனைத்தும் எம் திருவிளையாடலே! :D

"பிழைகளால் பிழைகளை விளம்பரப்படுத்தி, பிழைகள் விட ஊக்கமளிக்கும் " என்பது சரியான உதாரணங்களோடு இங்கு விளங்க வைக்கப்பட வேண்டும். காரணம்.. இந்த இடத்தில் கண்டத்துப் பிறவி.. வேற்றுக்கிரகவாசி என்பதானதில் எனது பங்களிப்பு உண்டு.

பிழைகளால் பிழைகளை விளம்பரப்படுத்தி, பிழைகள் விட ஊக்கமளிக்கும் எங்களை நாம் தண்டித்துக்கொள்வது நல்லது.

அடக்கடவுளே... எங்களை என்றது என்னை, சபேசனை, ஈழத்திருமகனை. நாங்கள் பிழைகளை திருத்தச் சொல்லி சுட்டிக் காட்ட அல்லது சந்தேகங்களைக் கேட்க, அவர் பதிலுக்கு ஆர்வக்கோளாறோடு இன்னொரு கவிதையோடு வர, அதிலும் சில பிழைகள் இருக்க, பிறகு நாங்கள் சுட்டிக்காட்ட ... இதைத்தான் சொன்னேனுங்கோ.

அடுத்து முக்கியமான விடயம்.. கள உறவுகளைப் புறக்கணிப்பு செய்தல்..???!

நாம் கருத்துக்கள உறவுகளை புறக்கணிப்பதுமில்லை. புறக்கணிக்கப் போவதுமில்லை. எம்மைப் புறக்கணிப்பவர்களைக் கூட கண்டுகொள்ளாமல் இருப்போமே தவிர, யாரையும் புறக்கணிக்கப் போவதில்லை. :D

இங்கு உலகக் கிண்ணப் போட்டியின் போது சிறீலங்கா அணிக்கு ஆதரவு வழங்கிய நிலைப்பாட்டுக்காக கூட சிலரை சிலர் புறக்கணிக்க ஆரம்பித்தனர். அது அவரவர்களின் விருப்பம் என்று அப்பவே கூறப்பட்டது. பகிரங்கமாக கூறிப் புறக்கணிக்க வேண்டியதில்லை என்றும்.. அதற்கான அவசியம் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. காரணம்.. கள உறவுகளைப் புறக்கணிப்பு என்பதன் மூலம் யாழ் களத்தின் இலக்கை அடையவதை நாமே சேதப்படுத்திக் கொள்கின்றோம் என்பதுதான் நிஜம். அத்தோடு அது சிலரின் மேலாண்மை ரீதியான நிலைப்பாட்டை நிறுவும் வாய்ப்பை உண்டு பண்ணும்.

புறக்கணிப்பு (Ignorance :P ) என்பது அவரவர் விருப்பம், சுதந்திரம். விலகியிருத்தல், ஒதுங்கியிருத்தல், காணாதிருத்தல் போன்றவற்றுக்கு பகிரங்க அறிவிப்புத் தேவையில்லை. அவை ஒன்றிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்லது வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாதிருப்பதற்காக செய்யப்படுபவை. அதனால் பகிரங்க அறிவிப்புத் தேவையில்லை.

ஆனால் நாம் புறக்கணிப்பு செய்யப் போகிறோம் என்பதே எதிர்த்தரப்பை பலவீனப்படுத்தத்தான் என்கிற போது அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு செய்வது தான் பலம். எதிர்த்தரப்புக்குத் தெரியவேண்டும் எதனால் தாம் புறக்கணிக்கப் படுகிறோம் என்பது. நாம் என்ன தேவைக்காக புறக்கணிப்பு செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்தே பகிரங்க அறிவிப்புத் தேவையா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

கருத்துக் களம் என்று வந்த பிறகு, இங்கு யாரையும் புறக்கணிப்பது நல்லது அல்ல.

யாரும் யாரையும் புறக்கணித்து எதுவும் ஆகப் போவது இல்லை.

நாம் கருத்துக்களத்தில் ஒருவரை புறக்கணிப்பது என்பதால் எதுவும் ஆகப்போவதில்லை என்பது உண்மையே. ஒருவர் கருத்துக்கள உறவுகளை புறக்கணிப்பதாலோ, கருத்துக்களத்தை புறக்கணிப்பதாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. கருத்துக்கள் இவ்வுலகில் இருக்கும் வரை (யாழ் இணைய) கருத்துக்களம் தன் பாட்டில் வளர்ந்துகொண்டே இருக்கும். ஒருவர் கருத்துக்களத்தை விட்டு விலகிப் போவதாலோ, தான் எழுதுவதை நிறுத்துவதாலோ, மற்றவர்களுக்கு பதில் கருத்தை எழுதுவதைக் குறைப்பதாலோ கருத்துக்களத்துக்கு எந்த நட்டமும் வரப்போவதில்லை. அப்படி நட்டம் வரும், யாழ் கருத்துக்களம் பலதை இழக்கும் என்று நாம் நினைத்தோமென்றால் நமக்குத் தான் நட்டம் :D புதியவர்கள் வருவார்கள். புதிய கருத்துக்கள் சேரும். கருத்து மோதல்கள் நிகழும். "சிலர் வருவார், சிலர் போவார், கருத்துக்களம் இருந்துகொண்டே இருக்கும்" (சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்... என்ற மெட்டில் படிக்கவும் ) --> இந்தக் கருத்து தாம் பிறரால் புறக்கணிக்கப் பட்டதாக உணரும் உறவுகளுக்கும், புறக்கணிக்கப் படுவதாக உணரும் உறவுகளுக்கும், கருத்துக்களத்தில் எழுதாமல் இருக்க முடிவெடுத்த, முடிவெடுக்க இருக்கிற உறவுகளுக்கும். :)

அறிவினை அதிலே நீ வீழ்ந்தாய்

அறிவின் + ஐ அதிலே நீ வீழ்ந்தாய்

அதாவது அறிவில் தோன்றிய ஐ(யம்) அதிலே நீ வீழ்ந்தாய்

என்று எடுத்துக் கொள்ளலாம் சபேசன்.

சபாஷ்! :lol:

Edited by இளைஞன்

அறிவினை என்பதை அறிவின் வினை என்று எடுக்க முடியாதா?

அதாவது அறிவு இருக்கு என்பதால் வந்த மமதையின் வினை?

:D:D

குறுக்காலபோவான்!

நான் நீங்கள் சொன்னது போன்ற விளக்கத்தையும் நான் எதிர்பார்த்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

அத்துடன் நெடுக்காலபோவான் இதற்கு "வேற்றுமை அணி", "முரண் அணி" என்று சொல்லிக்கொண்டு வேறொரு விளக்கம் தந்தாலும் தரலாம்

கவிதை வெறும் எழுத்துக்களோ வரிகளோ இல்லை..

அது உணர்வு.. ஒருவரின் அகத்தின்.. கோபத்தின்..ஏக்கத்தின் ஆசையின்..அன்பின்..வீரத்தின்..வ

Edited by vikadakavi

இளைஞன் ஒரு உறுப்பினரைப் புறக்கணிக்கிறார் என்றதும் அதிர்ச்சி அடைந்தேன்.

புறக்கணிப்பை அழகாக புரியவைத்த இளைஞனுக்குப் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"புறக்கணிப்பதே மேல்" என்பதை நீங்கள் தவறான பொருளில் உள்வாங்கிவிட்டீர்கள்.

புறக்கணிப்பு என்பதை Ignorance என்று நீங்கள் நினைத்திருந்தால் அது உங்கள் அப்போதைய மனோநிலையைக் கொண்டு கற்பித்த பொருளாகவே இருக்கும். நான் இங்கே சொல்லியிருப்பது "புறத்தை கணித்தல்", "புறத்தின் கணிப்பு", "புறம் கணிப்பு" "judgement" என்கிற பொருளிலேயே. (இலக்கணப்பிழை, சொற்பிழை இருக்கலாம்... ஆனால் சொல்ல வந்த கருத்து அதுதான்.

சரி நீங்கள் சொல்வது போல நாங்கள் எடுத்துக் கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் தவறான அர்த்தம் தரவல்ல.. சொற்களைப் பாவிப்பதை தவிர்ப்பது உங்களுக்கு வீண் சிரமத்தையும் மன உளைச்சல் ஏற்படுவதையும் தவிர்க்கும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் உங்கள் புறக்கணிப்புக்கு.. புறம் - குறை கணித்தல் (குறை பிடித்தல்) என்பதாகவும் ( புறங் கூறாதே என்பார்கள்) பொருள்படும்.

அதுபோக..நீங்கள் பாவித்த புறக்கணிப்பு என்ற பதம் இருக்கின்ற வசனம் முக்கியம்..."இன்றிலிருந்து வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் பதிலளிக்காது புறக்கணிப்பதே மேல், அதுவே எனது சுயமரியாதைக்கும் சிறப்பு எனக் கருதி இத்தலைப்பிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறேன்."

நீங்கள் எந்தப் புறத்தைக் கணிக்க முடிவு செய்தீர்களோ தெரியவில்லை... ஆனால் வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் பதில் அளிக்காது.. புறக்கணிப்பதே மேல் என்றதும்.. உங்கள் சுயமரியாதை என்பதற்கு சிறப்பு என்பதற்காக தலைப்பை விட்டே ஒதுங்கிக் கொள்கிறேன் என்றதும்.. நீங்கள்... சொன்ன... Judgement என்பதற்கு அவசியமில்லைத் தானே. உங்களின் சுயமரியாதையை காக்க வேணும் என்ற அக்கறையுள்ள நீங்கள் எப்படி வன்னி மைந்தனின் அனைத்து ஆக்களுக்கும்.. பதிலளிக்காது.. புறக்கணிப்பு ( உங்களின் விளக்கப்படி Judgement) செய்யத் தீர்மானித்தீர்கள். காரணம்..??! அதுமட்டுமன்றி.. நீங்கள் வன்னி மைந்தனின் அனைத்து ஆக்கங்களுக்கும் பதில் எழுதாது.. புறத்தைக் கணிக்கப் போவதற்கும் குறிப்பிட்ட தலைப்பை விட்டு ஒதுங்கிறத்துக்கும் என்ன தொடர்பு சார். புறத்தைக் கணிக்க.. நீங்கள் களத்தை விட்டல்லவா.. ஒதுங்கி இருக்கனும்..!! :D

எது எப்படியோ...நல்லது.. வன்னி மைந்தனின் புண்ணியத்தில் தமிழ் அகராதிகள் புரட்டப்படுகின்றன என்பதில் என்னால் பூரண மகிழ்ச்சி கொள்ள முடிகிறது. வன்னி மைந்தனின் கவிதையின் வாசகனாக எனது சொந்த விளக்கத்தை அவருடைய கவிதைக்கு தந்தேன். இப்போ பலரும் தங்கள் விளக்கங்களையும் அளிக்க முனைந்திருப்பது.. வன்னி மைந்தன்.. விளக்கமில்லாமல்.. அர்ப்ப பதங்களைப் போட்டு கவிதை வரைகிறார் என்ற குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்திருக்கும். அதுதான் எனது நோக்கமும். அது பகுதியாக என்றாலும் குற்றச்சாட்டை கொணர்ந்தவர்களாலேயே நிறுவப்பட்டுவிட்டது. வன்னி மைந்தனின் கவிதைகள் புறம் கணித்தலுக்கு ( Judgement ) உரிய அளவுக்கு தகுதியுடையது என்பதில் வன்னி மைந்தன் பெருமைப்பட முடியும்.

நீங்கள் கையாண்ட பதம் (ignore) என்ற நோக்கில் என்பதை என்னால் உறுதியாக நிறுவ முடியும். ஆனால் அது இங்கு அநாவசியமில்லை. காரணம்.. உங்களின் குறித்த வசனமே குறித்த பதத்தின் பாவனை நோக்கத்தைச் சொல்லிவிட்டது. :D

நாம் கருத்துக்களத்தில் ஒருவரை புறக்கணிப்பது என்பதால் எதுவும் ஆகப்போவதில்லை என்பது உண்மையே. ஒருவர் கருத்துக்கள உறவுகளை புறக்கணிப்பதாலோ, கருத்துக்களத்தை புறக்கணிப்பதாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. கருத்துக்கள் இவ்வுலகில் இருக்கும் வரை (யாழ் இணைய) கருத்துக்களம் தன் பாட்டில் வளர்ந்துகொண்டே இருக்கும். ஒருவர் கருத்துக்களத்தை விட்டு விலகிப் போவதாலோ, தான் எழுதுவதை நிறுத்துவதாலோ, மற்றவர்களுக்கு பதில் கருத்தை எழுதுவதைக் குறைப்பதாலோ கருத்துக்களத்துக்கு எந்த நட்டமும் வரப்போவதில்லை. அப்படி நட்டம் வரும், யாழ் கருத்துக்களம் பலதை இழக்கும் என்று நாம் நினைத்தோமென்றால் நமக்குத் தான் நட்டம் புதியவர்கள் வருவார்கள். புதிய கருத்துக்கள் சேரும். கருத்து மோதல்கள் நிகழும். "சிலர் வருவார், சிலர் போவார், கருத்துக்களம் இருந்துகொண்டே இருக்கும்" (சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்... என்ற மெட்டில் படிக்கவும் ) --> இந்தக் கருத்து தாம் பிறரால் புறக்கணிக்கப் பட்டதாக உணரும் உறவுகளுக்கும், புறக்கணிக்கப் படுவதாக உணரும் உறவுகளுக்கும், கருத்துக்களத்தில் எழுதாமல் இருக்க முடிவெடுத்த, முடிவெடுக்க இருக்கிற உறவுகளுக்கும்.

யாழ் களம் எப்பவும் போல இருக்குது. ஆனால் அதன் உள்ளிடம் காலியாகும் வகையில் போய்க்கொண்டிருக்கிறது. நாம் முன்னரே சொல்லிவிட்டோம்.. புறக்கணிப்பதால். யாரும் எதையும் இழக்கப் போறதில்ல. யாழ் களமும் தமிழும் தான் இழப்புக்களைச் சந்திக்கும் என்று. ஒரு நட்புறவற்ற சூழலில் எவருமே ஆரோக்கியமான கருத்தாடலை செய்ய விரும்பமாட்டினம். படைப்புக்களை தர விரும்பமாட்டினம். ஏனோ தானோ என்றிட்டு இருந்திட்டுப் போயிடுவினம். அதனால்.. பல அரிய தகவல்கள் படைப்புக்கள் உட்பட பல விடயங்கள் வெளிவராமலே மறைந்திடும். பார்ப்பதற்கு அது இழப்பாக தெரியக் கூட வாய்ப்பில்லை. நிச்சயம் யாழ் களம் இழப்புக்களைச் சந்திக்கும். நீங்கள் உங்களை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துரைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பல திறமைசாலிகள்.. இந்தக் களத்தை புறக்கணித்துப் போய்விட்டனர். அவர்களின் பங்களிப்புக்கள்.. இல்லாதது இழப்பல்ல என்பீர்களா..??! ஆம் என்றால் அது நீங்கள் உங்களைப் பற்றி செய்திருக்குக்கும் மிகைப்படுத்திய மதிப்பீட்டின் விளைவு.

நெ.போவான் அண்ணா..

உங்கள் திறனை நேரத்தை இது போன்ற கருத்தாடல்களில் செலவழிப்பது எனக்கு கவலையாக இருக்கிறது..

உண்மைதான். இருந்தாலும் ஒரு எழுத்தாளனை அவமதித்து அடித்து விரட்டுவதை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியல்ல. இப்போ.. அதற்கு ஒரு முடிவு வந்திருக்கிறது. வன்னி மைந்தன் கையாண்ட சொற்களே பெரும் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. வள்ளுவன் அளவுக்கு வன்னி மைந்தன் உயர்ந்து நிற்கிறார். நாம் இதற்குள் வந்த வேலை முடிஞ்சுது.. அதுபோதும்.. நாம் எனி ஒதுங்கிக் கொள்ளலாம். :D:lol:

Edited by nedukkalapoovan

இளைஞன் அறிவில் நீங்கள் முதியவன் என்று தோணுகிறது..

எல்லா மனங்களிலும் தமிழ்த்தீ ஒளிருகிறாள்..

ஆனால் சில வேளை இதயம் விட்டு இதயம் சுட்டுவிடுகிறாள்..

சிறியவன் கருத்தைச்சொன்னேன்..

தவறு என்று என்றால் தப்பில்லை திட்டிவிடுங்கள்..

:D விகடா... இந்தத் தலைப்பு இன்னும் இழுபடுவதற்கு காரணமே, வன்னி மைந்தன் தான் விட்ட பிழைகளை நேர்மையாக ஏற்றுக்கொண்டு திருத்தாதமையே. பாருங்கள் தலைப்பில் கூட இன்னும் மாற்றமில்லை. முதலில் சொன்னது போல இணையத்தில் எழுதும் போது எழுத்துப்பிழைகள் நேர்வது தவிர்க்கமுடியாதது. அவசரத்தில் தான் பெரும்பாலானவர்கள் எழுதுகிறோம். ஆனால் கருத்துக்களில் நேர்கிற எழுத்துப்பிழைகளை நாம் கண்டுகொள்வதில்லை. அந்தப் பிழைகளைத் திருத்தியே படிக்கிறோம். கவிதைகளிலும் எழுத்துப் பிழைகள் நேரும் போது அவற்றைத் திருத்தி வாசித்து நாமே விளங்கிக்கொள்கிறோம்

செந்தமிழிலே எழுதவேண்டும் என்றும் இங்கு யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. கருத்துக்களத்தில் எழுதுகிற எம்மில் பலர் சிறுவயதில் புலம்பெயர்ந்தவர்கள். அந்தவகையில் பார்க்கும் போதும் எழுத்துப் பிழைகள் தவிர்க்க முடியாததே. முன்னர் கருத்துக்களத்தில் சிலர் எழுத்துப்பிழைகளை விடும்போது அவற்றை திருத்த தமிழறிவு மிக்கோர் உதவினார்கள்.

வன்னி மைந்தனின் கவிதையில் பொருள் மயக்கம் அல்லது பொருள் தெளிவின்மை ஏற்படக் கூடிய சிலவற்றையே நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். சில இடங்களில் தவறான பொருள் தரக்கூடிய சொற்களை பயன் படுத்தியிருந்தமையையும் சுட்டிக் காட்டியிருந்தோம். முன்னரும் ஒரு கவிதையில் "அல்லா புத்தர் யேசு" என்று ஏதோ எழுதியிருந்தார். அதிலும் எதனால் அப்படி எழுதினீர்கள் என்று விளக்கம் கேட்டேன். தெளிவில்லாததால் தான் கேட்டேன். ஆனால், அவற்றை திருத்துவதாக இதுவரையிலும் காணோம்

ஒரு கவிதையில் இருக்கிற பிழைகளை சுட்டிக்காட்டுவதும், சந்தேகங்களை தெளிவுபடுத்தக் கேட்பதையும் மட்டம் தட்டுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும், பிழை பிடிக்கவே நாங்கள் அலைவதாகவும் உணர்வது/சொல்வது எதனால் என்பது அவருக்கே வெளிச்சம்.

வன்னி மைந்தனுக்கு நேரமில்லை, அவசரத்தில் எழுதினார் என்றால்... நான் வன்னி மைந்தனிடம் சந்தேகம் கேட்டது "Sep 7 2007, 08:59 PM" க்கு. அதன் பின் யமுனா கருத்தெழுதியது "Sep 7 2007, 09:10 PM" க்கு. அதன்பின் வன்னிமைந்தன் தனது ஆக்கத்தில் ஏதோ திருத்தத்தினை மேற்கொண்டுள்ளார். அவர் திருத்தம் செய்த நேரம்: This post has been edited by vanni mainthan: Sep 7 2007, 09:16 PM

அப்படியிருந்தும் என் சந்தேகத்தை உள்வாங்கி திருத்தம் மேற்கொள்ளவில்லை. சரி நான் தான் பிழையாக புரிதல் கொண்டிருந்தேன் என்றாலும் அவர் அதற்கு எனக்கு விளங்கப்படுத்தியிருக்கலாம். நான் அவருடைய கருத்தியற் தளத்தில் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் தனது கருத்தில் திருத்தத்தை மேற்கொண்டுவிட்டு "Sep 7 2007, 09:31 PM" க்கு எனக்கு எப்படிப் பதிலெழுதியிருக்கிறார் என்று பார்க்கவும்:

போதனை பொழிந்திட வந்தவரே

பொருளது உமக்கு புரியலயோ..??

ஆதியந்தம் மறந்ததினால்

ஜயனே உனக்கு இன்னிலையோ...??

அவருடைய கருத்தியல் தளத்தில் நின்று நான் எதுவும் சொல்லவில்லையே. பிறகெதற்கு என்னை நோக்கிய இந்தக் கொலைவெறி? :D எதுவாக இருப்பினும் இந்த வரிகளில் கூட எழுத்துப் பிழை இருக்கிறது. இருந்தாலும் நாம் அதைச் சுட்டிக் காட்டவும் இல்லை. இங்கே வன்னி மைந்தன் "இன்னிலையோ" என்று சொல்ல வருவது "இந்த நிலையோ" என்கிற பொருளில். ஆனால் "இந்நிலையோ" என்று எழுதவேண்டும் அதனை. "இன்னிலை" என்பது "இனிய நிலை" என்று பொருள் தரும். அதன்படி பார்த்தால் வன்னிமைந்தன் என்னைப் பார்த்து "ஆதியந்தம் மறந்ததினால் ஐயனே உனக்கு இனிய நிலையோ" என்று சொல்கிறார் என்று பொருள்.

"Klug ist nicht, wer keine Fehler macht. Klug ist der, der es versteht, sie zu korrigieren." -Lenin

என்று லெனினின் சொன்ன ஒரு வசனம் யேர்மன் மொழியில் இருக்கிறது. அதாவது

"புத்திசாலி என்பவன், பிழை விடாமலே இருப்பவன் அல்ல. புத்திசாலி என்பவன், தான் விட்ட பிழையை உணர்ந்து, அதைத் திருத்திக் கொள்பவன்"

சரி நீங்கள் சொல்வது போல நாங்கள் எடுத்துக் கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் தவறான அர்த்தம் தரவல்ல.. சொற்களைப் பாவிப்பதை தவிர்ப்பது உங்களுக்கு வீண் சிரமத்தையும் மன உளைச்சல் ஏற்படுவதையும் தவிர்க்கும் என்று நினைக்கிறேன்.

இது தான் இங்கே வன்னி மைந்தனுக்கும் நடந்துகொண்டிருப்பது. அதைச் சுட்டிக் காட்டினால் எம்மைப் பகையாளியாக பார்க்கிற போது நாம் என்ன செய்யமுடியும். வன்னி மைந்தனுடன் இது தான் முதற்தடவை கருத்தாடுகிறேன் என்று நினைக்கிறேன். அதனால் பழைய பகை இருக்கவும் வாய்ப்பில்லை :lol:

நீங்கள் கையாண்ட பதம் (ignore) என்ற நோக்கில் என்பதை என்னால் உறுதியாக நிறுவ முடியும்.

அவரவர் தங்களுக்கேற்ப தங்களுக்கு உறுதியாக (?) எதையும் நிறுவ முடியும். "நான் இன்ன காரணத்தால் தான் இப்படி செய்தேன், நான் நினைத்த நோக்கம் நிறைவேறிவிட்டது, இதனைத் தான் எதிர்பார்த்தேன், நான் இதற்குள் வந்த வேலை முடிந்தது" என்பதெல்லாம் யாழ் கருத்துக்களத்துக்கு என்ன புதிதா? தமக்கேற்றாற்போல் காரணம் கற்பிப்பதும், தமக்கேற்றாற்போல் கருத்துக்களைத் திரிப்பதும் யாழ் கருத்துக்களத்துக்கு என்ன புதிதா? :) அவரவர் எதற்காக எதைச் செய்கிறார்கள் என்பது அவரவர்க்கே வெளிச்சம். இது யாழ் கருத்துக்களத்துக்கு மட்டுமல்ல...

ஆனால் அது இங்கு அநாவசியமில்லை.

"ஆனால் அது இங்கு அவசியமில்லை" என்று வரவேண்டுமோ?

யாழ் களம் எப்பவும் போல இருக்குது. ஆனால் அதன் உள்ளிடம் காலியாக இருக்கிறது. நாம் முன்னரே சொல்லிவிட்டோம்.. புறக்கணிப்பதால். யாரும் எதையும் இழக்கப் போறதில்ல. யாழ் களமும் தமிழும் தான் இழப்புக்களைச் சந்திக்கும் என்று. ஒரு நட்புறவற்ற சூழலில் எவருமே ஆரோக்கியமான கருத்தாடலை செய்ய விரும்பமாட்டினம். படைப்புக்களை தர விரும்பமாட்டினம். ஏனோ தானோ என்றிட்டு இருந்திட்டுப் போயிடுவினம். அதனால்.. பல அரிய தகவல்கள் படைப்புக்கள் உட்பட பல விடயங்கள் வெளிவராமலே மறைந்திடும். பார்ப்பதற்கு அது இழப்பாக தெரியக் கூட வாய்ப்பில்லை. நிச்சயம் யாழ் களம் இழப்புக்களைச் சந்திக்கும். நீங்கள் உங்களை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துரைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பல திறமைசாலிகள்.. இந்தக் களத்தை புறக்கணித்துப் போய்விட்டனர். அவர்களின் பங்களிப்புக்கள்.. இல்லாதது இழப்பல்ல என்பீர்களா..??! ஆம் என்றால் அது நீங்கள் உங்களைப் பற்றி செய்திருக்குக்கும் மிகைப்படுத்திய மதிப்பீட்டின் விளைவு.

நட்பான சூழல் இருந்தால் தான் ஆரோக்கியமான கருத்தாடல் நடக்கும் என்பது உண்மையே. ஆனால், நட்புறவான சூழலென்பது அவரவர் உருவாக்கிக் கொள்வது. விதைப்பது தான் அறுவடை செய்யப்படுகிறது. நான் எதற்கு என்னை மட்டும் வைத்துக் கருத்துரைக்கவேண்டும். இங்கே கருத்துக்களத்துக்கு யாரும் கருத்துக்களத்தை வளர்க்கிற நோக்கிலோ, தமிழை வளர்க்கிற நோக்கிலோ வருபவர்கள் அல்ல. அவரவர் அவரவர் தேவையை முன் நிறுத்தியே வருகிறார்கள். நான் உட்பட. "பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும்" என்பதுபோல் நினைத்தால் அது தவறு. ஒருவர் கருத்துக்களத்தை விட்டுப் போகிறார் என்றால் அது முற்றுமுழுதாக அவரது முடிவு. நிலைப்பாடு. நான் என்னைப் பற்றிய மிகைப்படுத்திய மதிப்பீடு செய்யவேண்டிய அவசியம் இல்லை. "நான்" உட்படத்தான் சொல்கிறேன். கருத்துக்களத்துக்கு நான் இடைப்பட்ட சிலகாலம் வரவில்லை அல்லது கருத்துக்கள் எழுதவில்லை. இடைப்பட்ட சிலகாலத்தில் மிகக்குறைவாகவே வந்து போனேன். அப்படியிருக்கிறபோது என்னைப் பற்றி நான் மிகைப்படுத்திய மதிப்பீடு செய்யவேண்டியதில்லை. பழையவர்கள் போனால் புதியவர்கள் வருவார்கள். ஒரு திறமைசாலி போனால் பத்து திறமைசாலிகளை கருத்துக்களம் உருவாக்கும். அதற்கான ஆற்றல் யாழ் கருத்துக்களத்துக்கு இருக்கிறது.

வன்னி மைந்தனின் கவிதைகள் புறம் கணித்தலுக்கு ( Judgement ) உரிய அளவுக்கு தகுதியுடையது என்பதில் வன்னி மைந்தன் பெருமைப்பட முடியும்.

இதற்குக் கூட ஒன்று சொல்லத் தான் ஆசை. அதைச் சொல்வதால் பிறகு விவாதம் திசைமாறி (ஏற்கனவே திசைமாறிட்டுது) எங்கோ செல்லும் என்பதாலும் தவிர்த்துவிடுகிறேன்.

வன்னிமைந்தா, இப்பயாவது வந்து கவிதையைத் திருத்துங்களையா? :D (இல்லாட்டி அழுதுடுவன்)

Edited by இளைஞன்

இளைஞன் !!

பிரச்சனை வேறெங்கோ இருக்கிறது. அது இங்கு எதிரொலிக்கிறது என்றே நினைக்கிறேன். பிழைகளை நேர்மையாக சுட்டிக் காட்டுவதே எங்களால் செய்யத் தக்கது. எதிர்வாதம் புரிவதல்ல. திருந்துவது, திருத்துவது எல்லாம் தனிநபர்கள் சார்ந்தது. அதை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

வெற்றிவேல்!!

நீங்கள் கூறிய பகுப்பு சரியென தோன்றவில்லை.

ஐயம் என்பது இறுதியில் தொக்கு நின்று பொருள்தருமா? தமிழில் "ஐயம்" என்பது சொல்லின் முதலிலே வருவதாகவே அறிந்திருக்கிறேன்.

ஐயம் + உறவு = ஐயுறவு.

உங்கள் பகுபத விதிப்படி பகுக்கப் போனால்

உறவை = உறவு + ஐ (யம்) ?? எனவாகும். இது சரியா?

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

நட்பான சூழல் இருந்தால் தான் ஆரோக்கியமான கருத்தாடல் நடக்கும் என்பது உண்மையே. ஆனால், நட்புறவான சூழலென்பது அவரவர் உருவாக்கிக் கொள்வது. விதைப்பது தான் அறுவடை செய்யப்படுகிறது. நான் எதற்கு என்னை மட்டும் வைத்துக் கருத்துரைக்கவேண்டும். இங்கே கருத்துக்களத்துக்கு யாரும் கருத்துக்களத்தை வளர்க்கிற நோக்கிலோ, தமிழை வளர்க்கிற நோக்கிலோ வருபவர்கள் அல்ல. அவரவர் அவரவர் தேவையை முன் நிறுத்தியே வருகிறார்கள். நான் உட்பட. "பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும்" என்பதுபோல் நினைத்தால் அது தவறு. ஒருவர் கருத்துக்களத்தை விட்டுப் போகிறார் என்றால் அது முற்றுமுழுதாக அவரது முடிவு. நிலைப்பாடு. நான் என்னைப் பற்றிய மிகைப்படுத்திய மதிப்பீடு செய்யவேண்டிய அவசியம் இல்லை. "நான்" உட்படத்தான் சொல்கிறேன். கருத்துக்களத்துக்கு நான் இடைப்பட்ட சிலகாலம் வரவில்லை அல்லது கருத்துக்கள் எழுதவில்லை. இடைப்பட்ட சிலகாலத்தில் மிகக்குறைவாகவே வந்து போனேன். அப்படியிருக்கிறபோது என்னைப் பற்றி நான் மிகைப்படுத்திய மதிப்பீடு செய்யவேண்டியதில்லை. பழையவர்கள் போனால் புதியவர்கள் வருவார்கள். ஒரு திறமைசாலி போனால் பத்து திறமைசாலிகளை கருத்துக்களம் உருவாக்கும். அதற்கான ஆற்றல் யாழ் கருத்துக்களத்துக்கு இருக்கிறது.

நட்புறவான சூழலுக்கு தனிநபர் மட்டுமல்ல.. ஒவ்வொரு அங்கத்தவரும்..(நிர்வாகம் உட்பட) அதன் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமைகள் இருக்கும். யாழ் களம் ஒரு உறுப்பினரை புறக்கணிக்கத் தூண்டுகின்றதென்றால்.. அது குறிப்பிட்ட சிலவற்றை இழக்கிறது என்பதுதான் அர்த்தம். அதைப் பிரதியீடு செய்ய முடியும் என்பது உடனடிச் சாத்தியமும் இல்லை.. சிலவேளை அது கற்பனையாகவே இறுதி வரை இருந்தும் விடலாம். யாழ் களம் திறமை உள்ளவர்களை உருவாக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வரையரறுக்கப்பட்ட திறமைகள் வளர்க்க அல்லது தக்க வைக்க உதவுகிறது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்னும் திறமை உள்ளவர்கள் நாடி வரத்தக்க வகையில் இருக்கிறது என்பது மட்டும் மகிழ்ச்சிக்குரிய விடயம். அதுவும் இப்படியே புறக்கணிப்பு என்று போனால்.. நிச்சயம்.. நிலை தலை கீழாக மாறத்தான் சந்தர்ப்பம் உண்டு. ஒரு சிலரின் தத்துவார்த்தங்களோடு.. சுழல வேண்டிய நிலையே ஏற்படும். என்னைப் பொறுத்தவரை இங்குள்ள ஒவ்வொரு உறுப்பினரும் திறமைகளைக் கொண்டிருக்கிறனர் என்றே கருதுகின்றேன். எனவே வெளிப்படையா நான் புறக்கணிக்கிறன்.. நீங்களும் முடிவெடுங்கோ என்ற அநாவசிய கூப்பாடு அவசியமா என்று சிந்திக்க வேண்டியது பகிரங்கமாக அறிக்கை விட்டுப் புறக்கணிப்பவர்களின் கடமை. ஒருவர் புறக்கணிக்க மற்றவர் புறக்கணிக்காமல் இருக்கமாட்டார். இப்படியே போனால்...???! :D:D

வன்னி மைந்தன் உங்கள் வினாக்களுக்கு உரிய மதிப்பளிக்காததற்கு உங்களின் பின்னால் கருத்துரைத்த சில உறுப்பினர்கள் காட்டிய அதீத அக்கறை.. சா.. அதீத பாசம் தான் காரணம். எப்பவும் வன்னி மைந்தனோட சிலருக்கு ரெம்ப பாசம்..! அவரின் கவிதைகள் கண்ட உடன பகுத்தறிவைக் கூட விட்டுவிடுகிறார்களே..! அதுதான் காரணமாக இருக்கலாம். :):D

அநாவசியம் அல்ல அவசியம் என்றாக வரவேண்டும். தவறாக பதிவாகிவிட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள். :lol:

Edited by nedukkalapoovan

கருத்துக்கள விதிமுறைகள் நட்புறவான சூழலை விரும்பியே கட்டமைக்கப்பட்டிருக்கு. நீங்கள் சொல்வது போல் அதனை ஒவ்வொரு உறுப்பினர்களும் (நான், நீங்கள், மற்றைய கருத்துக்கள நண்பர்கள், மட்டுறுத்தினர்கள்) பொறுப்புணர்ந்து நடந்தால் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவும். கருத்துக்களம் ஒருவரை புறக்கணிக்கத் தூண்டுகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. முதலே சொன்னதுபோல புறக்கணிப்பதும், கருத்துக்களத்தில் இருந்து விலகியிருப்பதும் அவரவர் முடிவு. சுய கட்டுப்பாடு போடுவதும், சுய பரிசோதனை செய்துகொள்வதும், சுய தடை செய்துகொள்வதும் அவரவர் நிலைப்பாடு. அதற்கான சுதந்திரத்தை கருத்துக்களம் எல்லாருக்கும் வழங்கியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால், ஒருவர் மற்றவரிடம் நீங்கள் அவரை (கருத்துக்களத்தில் உள்ள ஒருவரை) புறக்கணியுங்கள் என்று கருத்து விதைப்பதை அல்லது பிரச்சாரம் செய்வதை கருத்துக்கள நிர்வாகம் அனுமதிக்காது என்றே நினைக்கிறேன். அனுமதிக்கவும் கூடாது. அதேநேரத்தில நான் வாசித்த அளவில் "புறக்கணிக்கப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள், திறமைசாலிகள் வெளியேறினார்கள்" என்பது கருத்துக்களத்தில் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிற வெறும் ஒப்பாரிகளாகவே எனக்குப் படுகிறது. :D

வன்னி மைந்தன் எழுதிய கவிதை கருத்துக்களத்தில் உள்ள ஒரு சிலரை இலக்கு வைத்தே எழுதப்பட்டது. கருத்துக்களத்தில் நடக்கிற கருத்தாடல்களை தொடர்ந்து கவனிக்கிற எல்லோருக்கும் வன்னி மைந்தனின் கவிதையை வாசித்தவுடன் விளங்கக்கூடிய உண்மை. இது எங்கிருந்து தொடங்கியது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இது இலகுவில் முடியாது என்பது மட்டும் தெரியும். :lol:

வன்னி மைந்தன்...

நீங்கள் நிறைய கவிதைகளை வாசிக்க வேண்டும். கொஞ்சம் எழுதினாலும் நிறைவாக எழுதவேண்டும். தன்னுடைய கவிதையை பாராட்டுகிறவர்களை நண்பர்களாகவும், கவிதையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுபவர்களை பகையாளிகளாகவும் நினைக்காமல், அனைவரோடும் நட்போடு பழகுவதே ஆரோக்கியமானது. உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் உங்களுக்காக நீங்களே கருத்தைத் தெரிவியுங்கள். இன்னொருவர் வந்து உங்களுக்காக விளக்கம் தரும் வரை காத்திருந்துவிட்டு, "எனது கருத்தை அச்சொட்டாக கூறினீங்கள்" என்று சொல்வது உங்கள் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் எப்படி மற்றைய நண்பர்களை மதிக்கிறீர்களோ அப்படித்தான் அவர்களும் உங்களை மதிப்பார்கள். இன்னொரு கவிதைத் தலைப்பில் பார்த்தபோது நீங்கள் "இது கவிதையா கதையா என்று" கேலி செய்வது போன்று எழுதியிருந்தீர்கள். சிலவேளை அது கதை வடிவமாகக் கூட இருக்கலாம்... அதனை நீங்கள் கருத்தியல் ரீதியாக அணுக வேணும். அப்படியில்லாமல் சும்மா ஒரு வரியில் "இது கதை" என்று சொல்வது உங்களை தவறான மதிப்பீடு செய்யவே தூண்டும்.

மற்றவரைத் திட்டவேண்டும் என்பதற்காக கவிதை எழுதாமல், ஒரு கருத்து தொடர்பாக ஆரோக்கியமான முறையில் கவிதையை எழுதுங்கள். அப்பதான் உங்கள் கருத்தில் முரண்பாடு இருப்பவர்களும் உங்களோடு நல்ல முறையில் கருத்துப் பகிர்வார்கள். சரி... தொடர்ந்து கவிதைகளை எழுதுங்கோ... :D

தலைப்பைத் தாண்டி எங்கெங்கோ எல்லாம் கருத்து செல்கிறது. இனியும் இவைபற்றி இதற்குள் தொடர்வது நல்லதாகப் படவில்லை. நான் அடங்குறன். உங்கள் அணுகுமுறை தொடர்பான எனது விமர்சனமே இது. சொல்வது எனது கடமை. கேட்பதும் கேட்காததும் உங்கள் உரிமை. :D

  • தொடங்கியவர்

சொல்லடுக்கி சொல்லடுக்கி- நீர்

சொரிந்த வார்த்தையெல்லாம்

கல்லாகி போனதுகாண்- உம்

நெஞ்சம் போலானதுபார்....

செந்நெருப்பு தீயினிலே

செந்தமிழன் வேகையிலே

மதயிழி வாதத்தை

மன்றேற்றி குலைத்தீரோ...??

மூடர்களே நிற்பீர்

மூளை கழுவீர்

அன்னை தமிழ்காக்க

அணியணியாய் திரள்வீர்...

பற்றிய எழுத்தாணி

பாவனை புரிவீர்

ஈழமதை நீர் காக்க

இன்று குரல் கொடுப்பீர்...

கொக்கரித்தாய் போதும்

குப்பைகள் கொளுத்து

நல் மாந்தராய்

நாடதில் மிளிர்...

கோமண கந்தனென்றும்

கோடாரி கடவுளென்றும்

இழித்தாய் போதும்

இதயம் மாற்று...

பகுத்தறி வாளனென்று

பாரெங்கும் உரைத்தாய்

பாவம் பிள்ளாய்

பகுத்தறிவை நாட்டு...

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் இளைஞனுக்கு, நீங்கள் எத்தகைய கவிஞனாக இருக்கட்டும்.நான் இளைஞன்,கவிதை என்றால் ஒன்றும் விளங்காதவனகவே இருந்துவிட்டு போகட்டும்.ஆனால் என்னை விட ஒரு படி மேல் போய் ஒரு சில வரிகளை கவிதைகளாக புனைந்து (சொற்பிழை, பொருட்பிழை) புனைந்துவிட்டு ஆகா ஓகோ என்று

புகழ்வதை காட்டிலும்(தன்னை புகழாத கம்மாளன் இல்லை)

ஒரூ சிறு கவிஞர் வல்வை மைந்தன் கவிதைகள் உலாலாலாலா ..................வர வேண்டும்.இதனை பல பேர் மதிக்கவில்லை போல் தெரிகிறது.or else i have to go further. because ignorence isn't a solving problem.

வெற்றிவேல்!

என்னுடைய கருத்துக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை நான் ஒரு போதும் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

தனிப்பட்டரீதியாக தாக்குதல் நடத்தினாலும், நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

நுணாவிலான்!

நான் மமதையில் எதையும் பேசவில்லை. அத்துடன் நான் யாழ் களத்தை மையப்படுத்தி அந்தக் கருத்தை சொல்லவும் இல்லை. அப்படிப் புரியும் படி நான் எழுதியிருந்தால், அது என்னுடைய தவறாகவே இருக்கட்டும்.

சரி! மீண்டும் விடயத்திற்கு வருவோம்.

விகடகவி நல்ல ஒரு முடிவுரையை தந்திருந்தார். ஆனால் முடிக்காமல் தொடர்கிறீர்கள். சரி நானும் தொடர்கிறேன்.

நெடுக்காலபோவான் கூறிய புறங்கூறுதல் என்பதற்கான அர்த்தம் தவறு. புறம் என்பது குறையை குறிக்காது. முதுகுக்கு பின்னால் பேசுவது, சம்பந்தப்பட்டவர் இல்லாத போது பேசுவது என்பதுதான் புறம் கூறுதல் ஆகும். அதாவது புறமாகப் பேசுவது. இங்கே புறம் என்பது குறை என்பதைக் குறிக்கவில்லை.

அத்துடன் வேறு சில விடயங்களையும் சொல்ல விரும்புகிறேன்.

எனக்கும் வன்னிமைந்தனிற்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. வன்னிமைந்தன் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும், நான் இதே கருத்துக்களைத்தான் தந்திருப்பேன்.

ஒரு படைப்பாளனிடம் இருக்கூடாத அத்தனை குணங்களையும் வன்னிமைந்தன் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்.

ஒரு எழுத்தாளன் தான் எந்த மொழியில் படைக்கிறானோ, அதில் ஓரளவாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

என்னுடைய பார்வையில் கதை, கட்டுரை போன்றவற்றை எழுதுபவரை விட கவிதை எழுதுபவர் மொழியை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். காரணம் கவிதை மொழியை மேலும் அழகு படுத்துகின்ற ஒன்று. ஆனால் கவிதை எழுதிவிட்டு "எழுத்துப் பிழையை திருத்திப் படியுங்கள்" என்று சொன்னவர் உலகிலேயே வன்னிமைந்தனாக மட்டும்தான் இருக்க முடியும்.

வன்னிமைந்தன் யாழில் மட்டும் 1160இற்கும் மேற்பட்ட கருத்துக்களை எழுதியிருக்கிறார். அதில் ஒரு சில அரசியல் சம்பந்தமான கட்டுரைகள். மற்ற அனைத்துமே கவிதைகள் என்ற பெயரில் எழுதப்பட்டவைதான். அவர் நன்றியைக் கூட கவிதை வடிவில்தான் சொல்லுவார்.

எப்படியும் ஒரு வருடத்தில் 1000 கவிதைகள் எழுதியிருப்பார். ஆனால் இன்றைக்கும் எழுத்துப் பிழைகளும், சொற்பிழைகளும், பொருட்பிழைகளும் வருகின்றன. வன்னிமைந்தன் அவசரத்தில் பிழைகளை விடவில்லை. தமிழறிவு போதாமல்தான் பிழை விடுகிறார் என்பது அவர் விடுகின்ற பிழைகளின் மூலமே உணரக்கூடியதாக இருக்கிறது.

தமிழ் தெரியாத சிங்களவன் ஒரு அறிவிப்பு பலகையில் தமிழில் தவறாக எழுதியிருந்தாலே, அதை தமிழ்க் கொலை என்று சொல்கின்ற நாம் ஒரு தமிழனாகிய வன்னிமைந்தன் விடுகின்ற பிழைகளை கண்டும் காணாமல் இருக்க முடியாது.

ஆகவே வன்னிமைந்தன் தமிழில் நிறையப் பயிற்சிகள் எடுக்க வேண்டும். நிறைய எழுதி எழுதி சரி பார்க்க வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும்.

இடையில் சில மாதங்கள் வன்னிமைந்தனைக் காணவில்லை. நான் அவர் அந்தக் காலத்தை தன்னை புடம் போட எடுத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தேன். இனி இவர் புதிய வேகத்தோடு வருவார் என்று நம்பினேன்.

ஆனால் தன்னை புடம் போட்டிருப்பார் என்று நினைத்த காலத்தை, பெரியார் படம் பார்ப்பதற்கு மட்டும்தான் செலவழித்திருக்கிறார் என்பதை அவர் வந்த பின்புதான் உணர்ந்து கொண்டேன்.

எழுத்துப் பிழைகளை விடுவோம். காலப் போக்கில் பயிற்சிகளின் மூலம் வன்னிமைந்தன் திருந்தி விடுவார் என்று நம்புவோம்.

சம்பந்தம் இல்லாத சொற்களை எழுதுவதும், இருக்கின்ற சொற்களை தான் நினைத்தபடி சேதப்படுத்துவதையும் இவர் கைவிடுவாரா?

உதாரணமாக கிரகம் என்பதை கண்டம் என்று எழுதி விட்டு திருத்தாமல் இருக்கிறார்.

இன்னொரு உதாரணம் "பலுநோய்" என்று எழுதினார். அவர் எழுதிய மற்றயை விடயங்களைக் கொண்டு அது பால்நோய் என்று புரிந்து கொண்டேன்.

வன்னிமைந்தன் "பால்நோய்" என்பதை "பாலுநோய்" என்று எழுத முனைந்து கடைசியில் "பலுநோய்" என்று எழுதிவிட்டார்.

"பாலுநோய்" என்று யாராவது எங்காவது பேசுவது உண்டா. பால்நோய்க்கும் பசு கறக்கின்ற பாலிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பசு கறக்கின்ற பாலைக் கூட கிராமத்தில் உள்ள படிக்காதவரும் "அம்மா, பால்" என்று அழகாகச் சொல்வார். சரி! இதையாவது சில இடங்களில் "பாலு" என்று சொல்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்

ஆனால் பால்நோய் என்பது ஆண்பால், பெண்பால் போன்ற சொற்களோடு சம்பந்தப்பட்டது. இந்தச் சொற்களையே நாம் பாடப் புத்தகங்களில் இருந்துதான் பெற்றுக்கொள்கிறோம். இவைகளை பேச்சுவழக்கில் பாவிப்பதும் வெகுகுறைவு. அப்படிப் பாவிப்பவர்களும் "ஆண்பாலு, பெண்பாலு" என்று எங்குமே பேசுவதில்லை.

அப்படியிருக்கு "பாலுநோய்" என்ற சொல் எங்கேயிருந்த வர முடியும்?

அப்படியிருக்க வன்னிமைந்தன் கவிதை என்ற பெயரில் ஒரு சொல்லை எழுதி, இருக்கின்ற சொல்லை சேதப்படுத்துவதை எப்படி வரவேற்க முடியும்?

அவர் வட்டார பேச்சுவழக்கில் தாராளமாக எழுதட்டும். ஆனால் இருக்கின்ற சொற்களை காயப்படுத்தி புதிய சொற்களை உருவாக்கி தமிழுக்கு கெடுதல் செய்ய வேண்டாம்.

அடுத்தது அவர் விமர்சனங்களை எதிர்கொள்கின்ற முறை

ஒருவர் விமர்சனத்தை வைக்கின்ற போது, அவரிடம் உள்நோக்கம் தேடுவது ஒரு படைப்பாளிக்கு அழகு அல்ல. அப்படி விமர்சனத்தை வைப்பவரிடம் ஆயிரம் காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் கூட, அவைகளை கருத்தில் எடுக்காது விமர்சனத்திற்கு பதில் சொல்வதுதான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய ஒரு கட்டாயமான இயல்பு.

ஆனால் அதுவும் வன்னிமைந்தனிடம் இல்லை.

நாம் வன்னிமைந்தனை புண்படுத்தியதாக நினைக்கவில்லை. ஆனால் வன்னிமைந்தன் தன்னை அறியாமலேயே சக படைப்பாளிகளை புண்படுத்திக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் கூறிய புறங்கூறுதல் என்பதற்கான அர்த்தம் தவறு. புறம் என்பது குறையை குறிக்காது. முதுகுக்கு பின்னால் பேசுவது, சம்பந்தப்பட்டவர் இல்லாத போது பேசுவது என்பதுதான் புறம் கூறுதல் ஆகும். அதாவது புறமாகப் பேசுவது. இங்கே புறம் என்பது குறை என்பதைக் குறிக்கவில்லை.

வன்னி மைந்தன் முடிஞ்சு எனி நெடுக்காலபோவனாக்கும்.

புறம் + கூறல் = புறங்கூறல்.

புறம் + கணிப்பு = புறக்கணிப்பு ( இளைஞன் சொன்னது)

அதென்ன சம்பந்தம் இல்லாமல் பேசுதல்... அதுதாங்க.. குறை கண்டுபிடித்துப் பேசுதல். புறம் பேசாதே என்பார்கள். புறணி பாடாதே என்பார்கள்..??! ஒருவர் போகவிட்டு.. அவரைப் பற்றிக் குறைகள் சொல்லுதல். நல்லது சொன்னா சொல்லாத என்று சொல்லுவினமா சார்...???! :D

இரண்டும்.. புறம் தானேங்களே..! அதில வேற வேறயாங்க..! புறம் என்பது பல பொருள் எடுக்கும் அது வேறு விடயம். ஆனால் புறம் என்பது ஒரு சொல்... தானேங்க..! எதனடடிப்படையில்.. அதில்ல இது என்றீங்க..! :D

இப்படி.. கேட்டா வன்னி மைந்தனில்ல.. யார் தான் பதில் அளிப்பினம். கொஞ்சம் என்றாலும் பகுத்தறிவை பாவியுங்க.. இருக்கு இருக்கு என்று சொல்பவர்கள் யார் தெரியுமா.. இல்லாதவர்கள் தான்..! :D:)

நீங்கள் எப்படி மற்றைய நண்பர்களை மதிக்கிறீர்களோ அப்படித்தான் அவர்களும் உங்களை மதிப்பார்கள். இன்னொரு கவிதைத் தலைப்பில் பார்த்தபோது நீங்கள் "இது கவிதையா கதையா என்று" கேலி செய்வது போன்று எழுதியிருந்தீர்கள். சிலவேளை அது கதை வடிவமாகக் கூட இருக்கலாம்... அதனை நீங்கள் கருத்தியல் ரீதியாக அணுக வேணும். அப்படியில்லாமல் சும்மா ஒரு வரியில் "இது கதை" என்று சொல்வது உங்களை தவறான மதிப்பீடு செய்யவே தூண்டும்

வன்னி மைந்தன் கேட்டாரோ தெரியவில்லை. அவள் என்ற தலைப்பில் உள்ள கவிதை என்ற ஒன்றில் நான் தான் கேட்டேன்...??! எனது பார்வையில் அது அப்படி இருந்ததால் கேட்டேன். சம்பந்தப்பட்ட புதியவர் என்பதால் இதை positive வா எடுப்பாரோ தெரியவில்லை. அவரிடைய ஏனைய ஆக்கங்கள் அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது. :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.