Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பதினெட்டு 

அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா. 

என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா. 

நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன். 

மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு. 

மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை.  கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு  போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன். 

அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர்  இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும்.  நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா. 

நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன்.

இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார். 

நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது.  போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள்  கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது. 

அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன். 

அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.      

அங்கு சென்று நீண்ட நாட்கள் இருப்பது பற்றி சிந்திக்கும் போதெல்லம் முதல் முதலாக வரும் விடையம் இதுதான். சுகாதாரம் வைத்தியம். அனைத்து அரச அலுவலகங்களிலும் இதே நிலைமை தான் என்றாலும் வைத்திய சாலைகளிலும் அதே நிலைமை மற்றும் மனிதாபிமானம் இல்லாத தன்மை.  தனியார் மருத்துவமனை/சேவை சிறந்தது ஆனால் எதாவது பெரிய வருத்தமென்றால் 2-3 நாட்களில் பல இலடசங்கள் கரைந்து விடும்.  பல புலன் பெயர் நாடுகளின் பொது வைத்தியசாலை மலை போலவும் ஊர் பொது வைத்தியசாலைகள் பாதாளம் போலவும் இருக்கும்.  இது எப்போதுமே ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஒரு விடையம்.  அங்கு மக்களை மனதளவில் நோயாளிகள் ஆக்கி விடுவார்கள் ஆனால் அங்கு வாள்பவர்களுக்கு பழகி விட்டதனால் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறன்.

  • Replies 378
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இலங்கையில் ஆறு மாதங்கள்    நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி ந

மெசொபொத்தேமியா சுமேரியர்

இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

மெசொபொத்தேமியா சுமேரியர்

பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, Sabesh said:

அங்கு சென்று நீண்ட நாட்கள் இருப்பது பற்றி சிந்திக்கும் போதெல்லம் முதல் முதலாக வரும் விடையம் இதுதான். சுகாதாரம் வைத்தியம். அனைத்து அரச அலுவலகங்களிலும் இதே நிலைமை தான் என்றாலும் வைத்திய சாலைகளிலும் அதே நிலைமை மற்றும் மனிதாபிமானம் இல்லாத தன்மை.  தனியார் மருத்துவமனை/சேவை சிறந்தது ஆனால் எதாவது பெரிய வருத்தமென்றால் 2-3 நாட்களில் பல இலடசங்கள் கரைந்து விடும்.  பல புலன் பெயர் நாடுகளின் பொது வைத்தியசாலை மலை போலவும் ஊர் பொது வைத்தியசாலைகள் பாதாளம் போலவும் இருக்கும்.  இது எப்போதுமே ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஒரு விடையம்.  அங்கு மக்களை மனதளவில் நோயாளிகள் ஆக்கி விடுவார்கள் ஆனால் அங்கு வாள்பவர்களுக்கு பழகி விட்டதனால் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறன்.

ஒரே வழி. அங்கு டொக்டர்களாக இருக்கும் பழைய நண்பர்களுடன் நல்ல நண்பர்களாக  இருக்கவேண்டும் அல்லது குடும்ப உறவுக்குள் டொக்டர்கள் இருக்கவேண்டும்.

என்னுடன் படித்த ஐந்து நண்பர்கள் டொக்டர்களாக இருக்கின்றார்கள்! கைகால் முறிவுக்கு ஒருத்தர்! நரம்புப் பிரச்சினைக்கு ஒருத்தர்! இன்னொருத்தர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்! இவர்களை நம்பிப் போகலாம் என்று இருக்கின்றேன்😊

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கிருபன் said:

ஒரே வழி. அங்கு டொக்டர்களாக இருக்கும் பழைய நண்பர்களுடன் நல்ல நண்பர்களாக  இருக்கவேண்டும் அல்லது குடும்ப உறவுக்குள் டொக்டர்கள் இருக்கவேண்டும்.

என்னுடன் படித்த ஐந்து நண்பர்கள் டொக்டர்களாக இருக்கின்றார்கள்! கைகால் முறிவுக்கு ஒருத்தர்! நரம்புப் பிரச்சினைக்கு ஒருத்தர்! இன்னொருத்தர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்! இவர்களை நம்பிப் போகலாம் என்று இருக்கின்றேன்😊

அங்கு வந்ததும் உங்களுடன் நான் நண்பனாகி விடுகிறேன் 😉

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, Sabesh said:

அங்கு சென்று நீண்ட நாட்கள் இருப்பது பற்றி சிந்திக்கும் போதெல்லம் முதல் முதலாக வரும் விடையம் இதுதான். சுகாதாரம் வைத்தியம். அனைத்து அரச அலுவலகங்களிலும் இதே நிலைமை தான் என்றாலும் வைத்திய சாலைகளிலும் அதே நிலைமை மற்றும் மனிதாபிமானம் இல்லாத தன்மை.  தனியார் மருத்துவமனை/சேவை சிறந்தது ஆனால் எதாவது பெரிய வருத்தமென்றால் 2-3 நாட்களில் பல இலடசங்கள் கரைந்து விடும்.  பல புலன் பெயர் நாடுகளின் பொது வைத்தியசாலை மலை போலவும் ஊர் பொது வைத்தியசாலைகள் பாதாளம் போலவும் இருக்கும்.  இது எப்போதுமே ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஒரு விடையம்.  அங்கு மக்களை மனதளவில் நோயாளிகள் ஆக்கி விடுவார்கள் ஆனால் அங்கு வாள்பவர்களுக்கு பழகி விட்டதனால் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறன்.

இப்படிப் பயந்துகொண்டிருந்தால் ஒன்றும் நடவாது. நாம் அங்கு சென்று வாழ்ந்தாலும் முற்றுமுழுதாக வெளிநாட்டைத் துறந்துவிடவில்லையே. ஒரு இன்சூரன்சைப் போட்டுக்கொண்டு செல்லலாமா என்று பார்க்கவேண்டும். தனியார் வைத்திய நிலையங்கள் மோசமாக இல்லை. நாம் மருத்துவச் செலவுக்கும் சேர்த்தேதான் பணம் வைத்திருக்க வேண்டும் . ஆனாலும் எதற்காக எதிர்மறையாக சிந்திப்பான்.

12 minutes ago, கிருபன் said:

ஒரே வழி. அங்கு டொக்டர்களாக இருக்கும் பழைய நண்பர்களுடன் நல்ல நண்பர்களாக  இருக்கவேண்டும் அல்லது குடும்ப உறவுக்குள் டொக்டர்கள் இருக்கவேண்டும்.

என்னுடன் படித்த ஐந்து நண்பர்கள் டொக்டர்களாக இருக்கின்றார்கள்! கைகால் முறிவுக்கு ஒருத்தர்! நரம்புப் பிரச்சினைக்கு ஒருத்தர்! இன்னொருத்தர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்! இவர்களை நம்பிப் போகலாம் என்று இருக்கின்றேன்😊

உங்கள் நண்பர்களை எமக்கும் அறிமுகம் செய்து வைத்தால் பிரச்சனை தீர்ந்தது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பத்தொன்பது 

எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் நடைபெற்றதால் நான் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை எனினும் வந்தவுடன் கூறுங்கள் சந்திக்கலாம் என்றுவிட்டு இருந்துவிட்டேன். 14 தை சகாரா போன்  செய்கிறார். நாளை எங்கள் ஊரில் பட்டத்திருவிழா நடைபெற இருக்கு சுமே. வந்தீர்கள் என்றால் என் வீட்டில் தங்கிப் போகலாம் என்கிறார். 

நான் செல்வச்சந்நிதி கோயிலுக்கு சில தடவைகள் சென்று தொண்டைமான் ஆற்றில் குளித்துவிட்டு வந்ததுடன் சரி. வல்வெட்டித்துறை எப்படி என்றுகூடத் தெரியாது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று வருகிறேன் என்றுவிட்டு அடுத்தநாள் காலையில் ஓட்டோ பிடித்துக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவுக்கு 3000 என்று பேசி கிளம்பியாச்சு. போய் இறங்கியவுடன் இன்னொரு ஆயிரம் தரும்படிகேட்க ஏன் முதலே 3000 என்று சொல்லித்தானே வந்தது. பிறகென்ன என்றதும் தூரம் கூட  என்கிறார். நீங்கள் வந்த தூரத்துக்கு 3000 சரிதானே. னீகள் கேட்பதானால் 500 ரூபாய் கூடத் தருகிறேன். அதைவிடத் தரமாட்டேன் என்கிறேன். யாவரும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு செல்ல எது சகாராவின் வீடு என்று தெரியாமல் போன் செய்ய வாசலுக்கு வந்து கையைக் காட்டுகிறார். 

வாசலில் ஒரு மலரின் பெயர் எழுதியிருக்க வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது வீடு. உள்ளே சென்றால் மிக விஸ்தாரமாக உயரமாக பிரமாண்டமான அறைகளுடன் அட்டாச் டாய்லெட் பாத்ரூமுடன் கூடிய வீடு என்னைப் பிரமிக்க வைக்கிறது. சினிமாக்களில் வரும் வீடுபோன்று மிக அழகாய் இருக்கிறது. என்  வளவில் இப்படி ஒரு வீடு கட்டினால் எத்தனை அழகாய் இருக்கும் என எழுந்த கற்பனையை வேண்டாம் என்று முடிவெடுத்து இழுத்து மூடுகிறேன். 

அவரின் மருமகளாக வர இருப்பவர் தேநீர் ஊற்றிவர அவரையும் அறிமுகம் செய்துவிட்டு நாம் ஊர் கதை, உலகத்துக்கதை, யாழ்க் கதை எல்லாம் கதைக்கிறோம். கதைத்து முடியவில்லை. கொஞ்சம் வெயில் தணிய நாம் வெளிக்கிட்டு பட்டத்திருவிழாவுக்குக் கிளம்பினால் சகராவின் வீட்டுக்கு அண்மையில் இருக்கும் அவர் சிறுவயதில் படித்த பள்ளி தெரிய குதூகலத்தோடு பள்ளியைப் பற்றிக் கதைக்கிறார். போகவர அவரின் உறவினர்கள் தெரிந்தவர்கள் என நின்றுநின்று கதைத்தபடி செல்கிறோம். பட்டத் திருவிழாவுக்கு வேறு ஊர்களில் இருந்தும் சனங்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கு. வீதிகளும் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட வீதியால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கின்றனர். கடற்கரைப் பக்கமாக செல்ல எக்கச்சக்கமான வாகனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. சாரிசாரியாக சனங்கள் போகின்றனர். கடற்கரை பார்க்க அந்த வெயிலிலும் அழகாக இருக்கிறது. இடையிடையே மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டிருக்கின்றன. 

ஒவ்வொரு சந்திசந்தியாக சிறு தெய்வங்களும் கட்டடங்களும் அது பற்றிய கதைகளுமாக சகாரா சொல்லியபடி வர நானும் கேட்டபடி நடக்கிறேன். 

வானத்தில் தூரத்தில் பட்டங்கள் தெரிகின்றன. மனது குதூகலம் கொள்கிறது. சிறுவயதில் திருவிழாவுக்குச் சென்ற நினைவுகள் வருகின்றன. கிட்டச் செல்லச் செல்ல விலத்த முடியாத சனம். எத்தனையோ விதமான பட்டங்கள், பிரமாண்டமான பட்டங்கள், உருமாறும் பட்டங்கள் என நாலு மூலைப் பட்டம் மட்டுமே பார்த்த எனக்கு இவற்றைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் போய் நின்றால் இருப்பதற்கான இடமே இல்லை. ஒரு அரை மணிநேரம் அதில் நின்றுவிட்டு வேறு பக்கம் செல்கிறோம். 

அங்கும் சனக்கூட்டம் தான். இருந்தாலும் அங்கு நிற்பதும் பட்டங்களைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக நேரம் கழிகிறது. சகாரா போனை எடுத்து வீடியோ கோலில் கண்மணி அக்காவை அழைக்கிறார். அவர் வந்ததும் அவருடன் கதைக்க தானும் வந்திருக்கலாம் என்கிறார் கண்மணியக்கா. நெட்வொர்க் சரியில்லாததாலும் சன இரைச்சலினாலும் கண்மணியக்கா கதைப்பது வடிவாகக் கேட்கவில்லை. பிறகு கதைப்போம் என்று போனை வைத்துவிட்டுப் பார்க்க ஏற்றியிருந்த பெரிய பட்டங்கள் போதிய காற்று இன்மையால் இறக்கப்பட நாம் அங்கிருந்து வேறு இசை நிகழ்வுகள் நடைபெற இருந்த இடம் நோக்கிச் செக்கிறோம். வழியில் பல ஐஸ்பழ வான்கள் நிற்க சகாரா எமக்கு வாங்கித் தர அதைக் குடித்தபடி நடக்கிறோம். 

வீதியில் போவதும் வருவதுமாக வாகன நெரிசல்கள். நாம் நடப்பதற்கே இடம் இல்லை. மோட்டார் சயிக்கிளில் வருவோரும் போவோரும் எம்மை யாரும் இடித்துவிடாதபடி நாம் முன்னும்பின்னும் பார்த்தபடி நடக்கிறோம். எமக்குக் கிட்டவாக இரண்டு மூன்று மோட்டார் சயிக்கிள்கள் வருவதும் நிற்பதுமாக சகாரா முன்னே செல்ல நடுவே அவர் மருமகள் நான் அவர்கள் பின்னே செல்கிறேன். போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியபடி அங்காங்கே நிற்க இருந்தாற்போல் ஒருவன். பார்க்க ரவுடி போல இருக்கிறான். எனக்கும் சகாராவுக்கும் அண்மையில் இடிப்பது போல் வருகிறான். என்ன தம்பி கவனமா ஓடுங்கோ என்கிறேன் நான். 

என்னட்டை சேட்டை விடாதை. தலையிலயோ தட்டுறாய் என்றபடி ஏதேதோ சொல்ல எனக்கோ ஒன்றும் புரியாமல் அவன் என்னைச் சொல்கிறானா அல்லது சகாராவா என்று எண்ண அவன் சகாராவைப் பார்த்துத் திட்டுவது தெரிய தவறுதலாத் தட்டுப்பட்டிருக்கும் தம்பி என்று அவனை நான் அமைதிப்படுத்தப் பார்க்க, நான் வேணும் என்றுதான் அவனுக்கு தலையில அடிச்சனான் என்கிறா சகாரா. எனக்குப் பதட்டமாகிறது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்க அவர் தேவையிலாமல் தனக்குக் கிட்ட அவர் மோட்டார் சயிக்கிளை கொட்டுவர அதுதான் மண்டையில போட்டனான்.  இவை எங்கள் ஊரவையும் இல்லை.வாற இடத்தில ஒழுங்கா நடக்க வேண்டாமோ என்று சகாரா கேட்க நான் சரிதான் என்கிறேன்.

தண்ணியும் அடித்திருக்கிறார்கள் போல. இந்தியத் திரைப்படங்களில் சிறிய ரவுடிகள் போலவே இருக்க இன்று என்ன நடக்கப்போகுதோ, கடவுளே காப்பாற்று என்று மனதில் வேண்டிக்கொள்கிறேன். மெதுவாக எனது போனை எடுத்து அவர்களை வீடியோ எடுத்தால் கண்டுவிடுவார்கள் எனப் பயந்து சும்மா கையில்வைத்திருப்பதுபோல் அவர்களின் மோட்டார் சயிக்கிளை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறேன். அதன்பின் இரண்டு மூன்றுபேர் எமக்குகிக்கிட்ட வந்து  மன்னிப்புக் கேட்கவேணும் என்று கூற எனக்கு எந்தப் பக்கத்தால் ஓடுவது என்று கூடத் தெரியவில்லையே என மனதில் எண்ணுகிறேன். சகாராவோ அசரவில்லை. எங்கள் ஊரில வந்து என்ன தனகல் வேண்டிக்கிடக்கு. வந்தா வந்த அலுவலைப் பாருங்கோ. எங்கடை ஊர் ஆட்களைக் கூப்பிட்டன் என்றா வீடுபோய் சேரமாட்டியள் என்கிறா. அவர்கள் ஊரவர் என்று தெரிந்தபின் சமாளித்து பின்வாங்கிச் செல்ல எனக்குப் பதட்டம் தணியவே இல்லை. 

அதன்பின் இந்தியாவில் இருந்து வரவளைக்கப்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குச் சென்றால் நிகழ்வு ஆரம்பிக்க இரவாகும் என்றதும் நாம் திரும்பி நடக்கிறோம். சிதம்பராக் கல்லூரி வரும் வழியில் இருக்க அதுபற்றியும் சகாரா கூறிக்கொண்டே வருகிறா. அண்ணரின் வீட்டையும் ஒருக்காப் பார்க்கவேண்டும் என்றதும் வீடு எங்கே இருக்கு வளவு மட்டும்தான் என்றபடி கூட்டிக்கொண்டு செல்கிறா. பார்த்தால் மதில்கள் எல்லாம் உடந்த நிலையில் இருக்க வளவு முழுவதும் மோட்டார் சயிக்கிளை நிறுத்தி வைத்துள்ளனர். மனதில் ஒருவித வலி எழுகிறது. இந்தப் பெரிய வீரனை நீங்கள் நினைக்கவேண்டாமா. அவரின் வீட்டைத்தான்  இராணுவம் அழித்தால் அந்த வளவை மாசுபடுத்தாது பாதுகாக்கக்கூட முடியாதவர்களாக அவ்வூர் மக்கள் வாழ்கிறார்களே என்னும் ஆதங்கம் எழுகிறது.  

சந்தியில் உள்ள ஆலமரத்தடியில் கட்டியிருந்த கட்டில் சிறிது நேரம் இருந்து என்னை அசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் எழுந்து அண்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவர் லண்டனில் வசித்தவர். தற்போது அங்கு வாழ்கிறார். அவருடனும் சென்று கதைத்துவிட்டு களைத்துப்போய் வீடு வருகிறோம். சகாராவின் அண்ணியார் எமக்காக தோசை, சம்பல், சாம்பார் என கொடுத்துவிட பசிக்கு அமிர்தமாக இருக்கிறது. அதன்பின் சகாராவின் சகோதரர்கள் வந்து இயல்பாகக் கதைத்துவிட்டுச் செல்ல வேறு உறவினர்களும் வருகின்றனர். 

மீண்டும் இரவு ஒன்பது மணிபோல் மிகப் பெரிதாக அழகாக வடிவமைக்கப்படிருந்த டோரா பொம்மை ஊர்வலமாக வந்து ஒரு கோவிலுக்கு அண்மையில் நின்று பொம்மையின் உள்ளே நின்று இருவர் ஆட்டுவிக்க பார்க்க அழகாக இருக்கிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் இளயவர்களும் சிறுவர்களும் குத்துப் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர். அதற்கு ஒரு கதை கூட சகாரா சொன்னார். எனக்கு மறந்துவிட்டது. நடந்து நடந்து கால்கள் சரியான வலி. ஒரு இரண்டு மணி நேரத்தின் பின் வந்து நான்கு பேர் படுக்கக்கூடிய கட்டிலில் நான் மட்டும் படுத்து உடனே தூங்கியும் விட்டேன். 

அடுத்தநாட் காலை பிந்தி எழுந்து காலை உணவை உண்டு சகாராவுக்கும் எனக்கும் அலுவல்கள் இருந்தபடியால் நான் கிளம்பிவிட்டேன். வரும்போது ஓட்டோ பிடிக்காது பெரிய மினிபஸ்சில் இடங்களைப் பார்த்தபடி யாழ்ப்பாணம் வந்து அங்கு ஒரு திரைப்படமும் பார்த்துவிட்டு ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்கிறேன்.  சகாராவைச் சந்தித்ததும் பட்டத்திருவிழா அனுபவங்களும் ஒரு நீங்கா நினைவாக எப்போதும் என்  மனதில் இருந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

நான் அவ்வூர் விடயங்கள் பலதையும் கூறாது விட்டுவிட்டேன். மன்னியுங்கள் சகாரா. 

அண்ணர் பிறந்து வளர்ந்த இடம் இப்படியாய் இருக்கு. 

May be an image of 3 people, motorcycle, scooter and text

May be an image of 1 person, boat and beach

May be an image of crowd

May be an image of 5 people

May be an image of 2 people, beach, crowd and ocean

May be an image of 4 people and crowd

May be an image of 5 people

  • Like 10
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@மெசொபொத்தேமியா சுமேரியர்

பட இணைப்புகளுக்கு நன்றி.👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எழுதிக் களைத்துவிட்டேன். இன்னும் ஓரிரு பகுதிகளுடன் நிறுத்தப்போகிறேன்.

அதெல்லாம் சரிவராது.:cool:
ஆறுமாதம் நிண்டதை  ஆறு மாதமாவது தொடர்ந்து எழுதணும்.:beaming_face_with_smiling_eyes:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஏற்பட்டதுதான் உங்களுக்கும் என்று இல்லை.

அது தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு தெரிந்தவரின் உறவினர் இலங்கை சென்ற போது அவரை டொங்கு நுளம்பு கடித்து டொங்கு காச்சல் வந்துவிட்டதாம்.அவர் மிகவும் பயந்துவிட்டாராம்.அவருடன் இங்கே வந்த பின்பு நேரில் கதைத்தேன். அவருக்கு பணம் பிரச்சனை இல்லை. அவருடன் படித்தவர் யாழ்பாணம் மருத்துவ மனையில் டொக்டராக இருந்ததாலும் அங்கே தான் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்பதாலும் அங்கே தான் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பினார்.அவர் தனது நண்பர் டொக்டரை மட்டுமல்ல அங்கே வேலை செய்தவர்கள் சிங்கலவர் உட்பட நல்லாகவே சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

அதெல்லாம் சரிவராது.:cool:
ஆறுமாதம் நிண்டதை  ஆறு மாதமாவது தொடர்ந்து எழுதணும்.:beaming_face_with_smiling_eyes:

மனிசன் என்னை வீட்டைவிட்டுக் கலைத்துப்போடுவார்.😀

57 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு தெரிந்தவரின் உறவினர் இலங்கை சென்ற போது அவரை டொங்கு நுளம்பு கடித்து டொங்கு காச்சல் வந்துவிட்டதாம்.அவர் மிகவும் பயந்துவிட்டாராம்.அவருடன் இங்கே வந்த பின்பு நேரில் கதைத்தேன். அவருக்கு பணம் பிரச்சனை இல்லை. அவருடன் படித்தவர் யாழ்பாணம் மருத்துவ மனையில் டொக்டராக இருந்ததாலும் அங்கே தான் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்பதாலும் அங்கே தான் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பினார்.அவர் தனது நண்பர் டொக்டரை மட்டுமல்ல அங்கே வேலை செய்தவர்கள் சிங்கலவர் உட்பட நல்லாகவே சொன்னார்.

உண்மைதான். எல்லோரும் ஒரேமாதிரி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசன் என்னை வீட்டைவிட்டுக் கலைத்துப்போடுவார்.😀

Too late Akka😀👋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசன் என்னை வீட்டைவிட்டுக் கலைத்துப்போடுவார்.😀

பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும்.கொத்தார்தான் உங்களுக்கு பயமாமே? கேள்விப்பட்டன்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திரவிழாவிற்கு ஒரு முறை நண்பர்களோட போய் கதிரை ஒன்றில் இருத்திவிட்டு அவங்கள் சுத்தப் போயிட்டாங்கள். கூட்டமும் நமக்கு ஆகாது. அதற்கு பிறகு போவதில்லை.

புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் வீடு வைத்திருப்பது ஏதோ ஒரு வகையில் தாயகத்திற்கு பயனே. உங்கள் சந்ததிகளையும் தாயகத்தோடு தொடர்பில் வையுங்கள். மலேசிய அம்மம்மாவின் சீதன வளவை இன்றுவரை விற்காது வைத்துள்ளார்கள் பிள்ளைகள். தற்செயலாக அங்கு வசிக்க முடியாதவிடத்து இங்கு வந்து வாழலாம் என்ற எண்ணத்தில்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, குமாரசாமி said:

அதெல்லாம் சரிவராது.:cool:
ஆறுமாதம் நிண்டதை  ஆறு மாதமாவது தொடர்ந்து எழுதணும்.:beaming_face_with_smiling_eyes:

அதே தான்.
நாளுக்கு நாள் எழுதாவிட்டாலும் இரண்டு நாளுக்கு ஒன்று எழுதலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் சந்திப்புகளும் படங்களும் அருமை......தொடரை நிறுத்த வேண்டாம்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஏராளன் said:

இந்திரவிழாவிற்கு ஒரு முறை நண்பர்களோட போய் கதிரை ஒன்றில் இருத்திவிட்டு அவங்கள் சுத்தப் போயிட்டாங்கள். கூட்டமும் நமக்கு ஆகாது. அதற்கு பிறகு போவதில்லை.

புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் வீடு வைத்திருப்பது ஏதோ ஒரு வகையில் தாயகத்திற்கு பயனே. உங்கள் சந்ததிகளையும் தாயகத்தோடு தொடர்பில் வையுங்கள். மலேசிய அம்மம்மாவின் சீதன வளவை இன்றுவரை விற்காது வைத்துள்ளார்கள் பிள்ளைகள். தற்செயலாக அங்கு வசிக்க முடியாதவிடத்து இங்கு வந்து வாழலாம் என்ற எண்ணத்தில்!

அப்படியா  ?? அங்கே வீடு உண்டா??.  தனிவளவா??.  யாருடைய பொறுப்பிலுண்டு??  இடையிடையோ வந்து காணியையே...வீட்டையே பார்க்கிறவரகளா  ??

என்னுடைய தகப்பனருக்கு   ஒரு சித்தப்பாவை. ஐந்து பிள்ளைகளுடன்.  மலேசியாவில் வாழ்ந்தார்கள்....மற்ற சித்தப்பா. ஒரு மகளுடன். இலங்கையில் வாழ்ந்தார்கள்   50 பரப்பளவு காணியில்   சுண்ணாம்பால் கட்டிய பழைய காலத்து வீடு   ...இவருக்கு கடன் தொல்லையால்.  வீட்டை தமையனை வேண்டும் படி கேட்டார்....அவரும் வேண்டியவர்கள்     ஊருக்கு 1967. இல். மனைவியையும் ஒரு மகனும் வந்தார்கள்    பிறகு வரவில்லை   தாய் தகப்பன். இறந்து விட்டார்கள்     தொடர்புகளுமில்லை    கைதடியில் இருந்த தம்பியார் பல வருடங்களாக [ஆட்சி உறுதி]  இருந்தது என  உறுதி முடித்து   மகளுக்கு எழுதி விட்டார்.......அவர்கள் அதனை   இரண்டு கோடிக்கு விற்று விட்டார்கள்  ....  உவ்விடம்.  எப்படி வீடு  வளவு வைத்திருக்க முடியும் ????..இங்கே இருந்து கொண்டு       சொந்த தம்பியார். குடும்பம் இப்படி செய்யும்போது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kandiah57 said:

பலருக்கு சட்டம் புரிவதில்லை. தாறு மாறான புரிதல்....

யுத்தகாலத்தில் ஆட்சி உரித்து செல்லாது என்பது சரி....: ஆனால் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்து விட்டன என்பதை மறக்கக் கூடாது....

யுத்தகாலத்தில் கூட, நீங்கள் இடம் பெயர்ந்ததை, வெளிநாடாடில் இருந்ததை உறுதி செய்ய வேண்டும்.

ஊரில் இருந்து கொண்டே, ஒருவரை குடி வைத்து, சும்மா இருக்க விட்டால், ஆட்சி உரித்து கிடைத்துவிடும் என்பதை மறக்கக் கூடாது. அதாவது, ஆட்சி உரித்து ரகசியமாக கோருவதில்லை. கோட் போய் தான் கேட்பது. கோட் கடதாசி போடும் போது பதில் கொடாவிடில் அவருக்கு ஆட்சி உருத்தாகும்.

முன்னொரு காலத்த்தில், தபாலை கடாத்திக் கூட மோசடி செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kandiah57 said:

அப்படியா  ?? அங்கே வீடு உண்டா??.  தனிவளவா??.  யாருடைய பொறுப்பிலுண்டு??  இடையிடையோ வந்து காணியையே...வீட்டையே பார்க்கிறவரகளா  ??

என்னுடைய தகப்பனருக்கு   ஒரு சித்தப்பாவை. ஐந்து பிள்ளைகளுடன்.  மலேசியாவில் வாழ்ந்தார்கள்....மற்ற சித்தப்பா. ஒரு மகளுடன். இலங்கையில் வாழ்ந்தார்கள்   50 பரப்பளவு காணியில்   சுண்ணாம்பால் கட்டிய பழைய காலத்து வீடு   ...இவருக்கு கடன் தொல்லையால்.  வீட்டை தமையனை வேண்டும் படி கேட்டார்....அவரும் வேண்டியவர்கள்     ஊருக்கு 1967. இல். மனைவியையும் ஒரு மகனும் வந்தார்கள்    பிறகு வரவில்லை   தாய் தகப்பன். இறந்து விட்டார்கள்     தொடர்புகளுமில்லை    கைதடியில் இருந்த தம்பியார் பல வருடங்களாக [ஆட்சி உறுதி]  இருந்தது என  உறுதி முடித்து   மகளுக்கு எழுதி விட்டார்.......அவர்கள் அதனை   இரண்டு கோடிக்கு விற்று விட்டார்கள்  ....  உவ்விடம்.  எப்படி வீடு  வளவு வைத்திருக்க முடியும் ????..இங்கே இருந்து கொண்டு       சொந்த தம்பியார். குடும்பம் இப்படி செய்யும்போது 

வீடு இல்லாமல் வெறும் வளவு. இப்போது இன்னொரு பெரியம்மாவை வீடுகட்டி இருக்கவிட்டிருக்கு. 
எங்களது அம்மாவின் மூத்த அண்ணாவின் இரண்டு பிள்ளைகள் ஒரு தொடர்பும் இல்லை, அங்கே பிறந்து வளர்ந்தவர்கள்.
இடைக்கிடை வந்து தங்கிப் போனால் தானே நிலமை தெரியும். சொந்த தம்பியார் எடுத்தது பரவாயில்லை யாரும் உரிமை கோராதவிடத்து.
வட்டுக்கோட்டையில் சம்பந்தமே இல்லாதவர்கள் எடுத்துவிட்டார்கள், இப்போது சட்டத்தரணி ஊடாக உரிமைகோரல் நடக்கிறது உரித்துடையவர்களால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, ஏராளன் said:

இந்திரவிழாவிற்கு ஒரு முறை நண்பர்களோட போய் கதிரை ஒன்றில் இருத்திவிட்டு அவங்கள் சுத்தப் போயிட்டாங்கள். கூட்டமும் நமக்கு ஆகாது. அதற்கு பிறகு போவதில்லை.

புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் வீடு வைத்திருப்பது ஏதோ ஒரு வகையில் தாயகத்திற்கு பயனே. உங்கள் சந்ததிகளையும் தாயகத்தோடு தொடர்பில் வையுங்கள். மலேசிய அம்மம்மாவின் சீதன வளவை இன்றுவரை விற்காது வைத்துள்ளார்கள் பிள்ளைகள். தற்செயலாக அங்கு வசிக்க முடியாதவிடத்து இங்கு வந்து வாழலாம் என்ற எண்ணத்தில்!

வம்சாவளியினர் தயாகத்துடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை 👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் சட்ட ஆட்சி எப்பவுமே ஒரு நொண்டிக் குதிரை என்பதற்கு சாட்சி இந்தக் காணிக் கபளீகரப் பிரச்சினை தான்! இதை உணர்ந்தே  அப்பா இறுதி வரை வீடு கட்ட முடியாமல் வெறுமனே வைத்திருந்த யாழ்ப்பாணக் காணி பங்கு பிரிப்பு வரும் போது நான் ஒதுங்கி விட்டேன்.

அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு அரைப்பரப்புக் காணி உரிய சட்டப் பாதுகாப்புடன்  போதும். பின்னர், ஒரு ஆறடி நிலம் - எரித்தால்  அதை விடக் குறைவான அளவு நிலம்- அமெரிக்காவின் ஒரு மூலையில் போதும்! Less is more!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

வம்சாவளியினர் தயாகத்துடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை 👍

ஆசை தான், ஆனால் வாய்ப்புகள் குறைவு.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

இலங்கையில் சட்ட ஆட்சி எப்பவுமே ஒரு நொண்டிக் குதிரை என்பதற்கு சாட்சி இந்தக் காணிக் கபளீகரப் பிரச்சினை தான்! இதை உணர்ந்தே  அப்பா இறுதி வரை வீடு கட்ட முடியாமல் வெறுமனே வைத்திருந்த யாழ்ப்பாணக் காணி பங்கு பிரிப்பு வரும் போது நான் ஒதுங்கி விட்டேன்.

அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு அரைப்பரப்புக் காணி உரிய சட்டப் பாதுகாப்புடன்  போதும். பின்னர், ஒரு ஆறடி நிலம் - எரித்தால்  அதை விடக் குறைவான அளவு நிலம்- அமெரிக்காவின் ஒரு மூலையில் போதும்! Less is more!

இரண்டாம் பந்தி கனடாவில் எனது விருப்பமும் அதே தான்..உடல் உறுப்பு தானம் உட்பட ஓரளவுக்கு தயார்..😆

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Justin said:

ஒரு ஆறடி நிலம் - எரித்தால்  அதை விடக் குறைவான அளவு நிலம்- அமெரிக்காவின் ஒரு மூலையில் போதும்! Less is more!

சிந்திக்க வைத்த நல்ல கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2023 at 22:13, குமாரசாமி said:

அதெல்லாம் சரிவராது.:cool:
ஆறுமாதம் நிண்டதை  ஆறு மாதமாவது தொடர்ந்து எழுதணும்.:beaming_face_with_smiling_eyes:

அப்ப நான் ரெகோர்ட் பண்ணி போடவோ என குரலில ??😀

15 hours ago, Justin said:

இலங்கையில் சட்ட ஆட்சி எப்பவுமே ஒரு நொண்டிக் குதிரை என்பதற்கு சாட்சி இந்தக் காணிக் கபளீகரப் பிரச்சினை தான்! இதை உணர்ந்தே  அப்பா இறுதி வரை வீடு கட்ட முடியாமல் வெறுமனே வைத்திருந்த யாழ்ப்பாணக் காணி பங்கு பிரிப்பு வரும் போது நான் ஒதுங்கி விட்டேன்.

அமெரிக்காவின் ஒரு மூலையில் ஒரு அரைப்பரப்புக் காணி உரிய சட்டப் பாதுகாப்புடன்  போதும். பின்னர், ஒரு ஆறடி நிலம் - எரித்தால்  அதை விடக் குறைவான அளவு நிலம்- அமெரிக்காவின் ஒரு மூலையில் போதும்! Less is more!

என் கணவரின் காணியை இப்போதே விற்போம் என்று நானும் கணவரும் எண்ணுகிறோம். ஆனால் பிள்ளைகள் வேண்டாம் என்கின்றனர். நாம் இருக்கும்போதே எத்தனை பேராசைப்படுகிறார்கள் உறவினர்கள். எம் பிள்ளைகளை எப்படி ஏமாற்றி காணியை அபகரிக்கலாம் என்றுதான் எண்ணுவார்கள். கச்சேரியில் பணம் கட்டினால் காணி உறுதியை இலகுவாக எடுக்கலாம். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

14 hours ago, ஏராளன் said:

ஆசை தான், ஆனால் வாய்ப்புகள் குறைவு.

வாய்ப்பை நாம் தானே உருவாக்கவேண்டும்.

On 9/5/2023 at 18:07, Sabesh said:

அதே தான்.
நாளுக்கு நாள் எழுதாவிட்டாலும் இரண்டு நாளுக்கு ஒன்று எழுதலாம்

ஒருமாதமா எழுதியது போதாதோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/5/2023 at 11:43, ஏராளன் said:

இந்திரவிழாவிற்கு ஒரு முறை நண்பர்களோட போய் கதிரை ஒன்றில் இருத்திவிட்டு அவங்கள் சுத்தப் போயிட்டாங்கள். கூட்டமும் நமக்கு ஆகாது. அதற்கு பிறகு போவதில்லை.

புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் வீடு வைத்திருப்பது ஏதோ ஒரு வகையில் தாயகத்திற்கு பயனே. உங்கள் சந்ததிகளையும் தாயகத்தோடு தொடர்பில் வையுங்கள். மலேசிய அம்மம்மாவின் சீதன வளவை இன்றுவரை விற்காது வைத்துள்ளார்கள் பிள்ளைகள். தற்செயலாக அங்கு வசிக்க முடியாதவிடத்து இங்கு வந்து வாழலாம் என்ற எண்ணத்தில்!

புலம்பெயர்ந்தவரின் சொத்துக்களை அரசாங்கம் எடுக்கப்போகிறது என்ற பொய்யான புரளியை நம்பித்தான் பலரும் தமது காணிகளை உறவினரின் பெயர்களுக்கு மாற்றினார்கள். அங்கேதான் ஆரம்பித்தது எல்லாம். ஒருவரைப்பார்த்து ஒருவர் என வெளிநாட்டினருக்கு எதுக்கு சொத்து என்று ஆரம்பித்து தாமே எல்லாவற்றையும் முடிவுசெய்கின்றனர். மற்றைய நாடுகளைப் பற்றித் தெரியாது. வெளிநாட்டினர் இலங்கையில் சொத்துக்களை வைத்திருக்கலாம். என்ன வரிதான் அதிகம் செலுத்தவேண்டும்.

On 9/5/2023 at 18:22, suvy said:

உங்களின் சந்திப்புகளும் படங்களும் அருமை......தொடரை நிறுத்த வேண்டாம்.....!  👍

அங்கத்தைய நிலவரம் பற்றி என்ன அறிந்துகொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டால் அவை பற்றி எனக்குத் தெரிந்தால் கூறலாம்.😃 அதைவிட்டு நிறுத்தவேண்டாம் என்றால் என்ன நியாயம் அண்ணா 😃 

On 9/5/2023 at 10:57, குமாரசாமி said:

பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும்.கொத்தார்தான் உங்களுக்கு பயமாமே? கேள்விப்பட்டன்😂

ஏன் நீங்கள் உங்கட மனிசிக்குப் பயப்படுறது இல்லையா ?????உண்மையைச் சொல்லுங்கோ😂

On 9/5/2023 at 09:39, யாயினி said:

Too late Akka😀👋

ஆண்கள் எப்பவும் பக்கத்தில் இருப்பதுதான் எமக்கு பலம். அல்லது நாங்களே எல்லாத்துக்கும் முறியவேணும்.😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப நான் ரெகோர்ட் பண்ணி போடவோ என குரலில ??😀

ஓம்....நல்ல விசயம்.வித்தியாசமாய் இருக்கும். இசையும் கதையும் மாதிரி இருந்தால் விசேசம். :face_with_tears_of_joy:

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம்.    உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
    • போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு !   மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.2017
    • சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம்     இது வட தமிழீழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்திருந்தது.             அங்கு பயின்ற மருத்துவர்களும் தாதியரும்   நடுவில் அமர்ந்திருப்பவர் படைய மருத்துவர் லெப். கேணல் சத்தியா அவர்கள்                 பின்னாளில்         திருவுருவப்படத்திற்கு வலது பக்கம் அமர்ந்திருப்பவர் மரு. சத்தியமூர்த்தி ஆவார்.
    • பெரியார் ராமசாமியைத் தனது பேரன் என்று சீமான் ஒரு காலத்தில் அழைத்துவந்தார். இதனை ஒரு கூட்டத்தில் கிண்டலடித்துப் பேசிய பெரியாரின் உண்மையான பேரனான இளங்கோவன், "நாந்தான் பெரியாரின் உண்மையான பேரன், சீமான் கள்ளப்பேரன், அவன் பெரியாரின் சின்னவீட்டிற்குப் பிறந்தாலும் பிறந்திருப்பான்" என்று கூறியிருந்தார். அதன்பிறகு பெரியாரை தனது பேரன் என்று கூறுவதைச் சீமான் தவிர்த்து விட்டிருக்கலாம். இப்போது இளங்கோவனின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றிருக்கத் தேவையில்லை. அவரது அரசியல் அவருக்குத்தான் புரியும். அதனால் எமக்கேதும் நடக்கப்போவதில்லை. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.