Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம்

image_e6fa672edf.jpg

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன.   இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் முன்முயற்சிகள் குறித்த  விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.

அண்மையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை (INR) பயன்படுத்துவது குறித்த விவாதத்தை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது. 

இந்திய ரூபாயை பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து முடிவுக்கு வந்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளமும் செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கையில் நிலவும் கடுமையான வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை சமாளிப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாக, இலங்கையர்களிடம் இந்திய ரூபாயில் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசு விடுத்த கோரிக்கையின் பிரகாரம், பத்தாயிரம் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு நிகரான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க இந்திய அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது.

சாா்க் (SAARC) பிராந்தியத்திற்கான பொதுவான நாணயம்?

image_ae848129a8.jpg

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு  (South Asian Association for Regional Cooperation -SAARC) பிராந்தியத்தில் பொதுவான நாணயத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை ஏற்கனவே வைத்திருந்தது. என்ற போதிலும், அது வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. அப்போதைய அரசியல் ரீதியாக  இருந்த முரண்பாடுகள் இந்தத் திட்டத்தை முடங்க வைத்தன. தற்போது பிராந்தியத்திலுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை இந்த பொது நாணய பரிவா்த்தனையை பேசு பொருளாக்கியிருக்கிறது.

இந்திய, இலங்கை நாடுகளுக்கிடையில் தற்போது எட்டப்பட்டுள்ள  இந்த முடிவு ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தெற்காசியாவில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒன்றாகவும் இது பாா்க்கப்படுகிறது.

இலங்கையுடனான வர்த்தகத்தை எளிதாக்குமா?

image_6355bd41b5.jpg

பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலங்கையர்கள் இந்திய ரூபாயை வைத்திருப்பதற்கு, இலங்கையில் உள்ள வங்கிகள் இந்திய ரூபாயில் பண கையிருப்பை பராமரிக்கும் நோஸ்ட்ரோ (Nostro) வங்கிக் கணக்குகளை பராமரிக்க வேண்டும்.

இலங்கை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய வங்கிகளின் பிற பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற  கலந்துரையாடலில் இந்த திட்டம் தொடர்பாகவும், இது செயல்படுத்தும் கட்டமைப்பு தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கியும் இலங்கை மத்திய வங்கியும் வடிவமைக்கும் செயல் திட்டத்திற்கு பிறகு, நியமிக்கப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய ரூபாயை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதால் ஏற்படும் நன்மைகளை வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனா். குறுகிய காலத்தில் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள், குறைந்த பரிமாற்றச் செலவுகள் மற்றும் வர்த்தகக் கடனை எளிதாக அணுகுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு கோபால் பாக்லே, வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை இந்த பரிவா்த்தனை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளாா்.

அது தவிர, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், இந்திய ரூபாயை உத்தியோகபூர்வ நாணயமாக மாற்றுவது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக அண்மையில்  தனது இந்திய விஜயத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்திய ரூபாயை இலங்கையின் உத்தியோகபூர்வ நாணயமாக பயன்படுத்துவது தொடர்பில் இலங்கையில் விவாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல.  ஆனால், தற்போது இலங்கையில் நிலவும் வெளிநாட்டு கையிருப்பு (டொலர்கள்) கடும் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாக இது முன் வைக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 2022 இல் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை நியமிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அறிய வருகிறது.

2022 டிசெம்பரில் இந்திய அரசு வழங்கிய ஒப்புதல்

image_2a0f55407b.jpg

இலங்கையில் இந்திய நாணய பரிவா்த்தனை தொடா்பாக இந்தியா வழங்கியுள்ள ஒப்புதல் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையர்கள் இப்போது 10,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள இந்திய ரூபாய்களை வைத்திருக்கும் அனுமதியை பெற்றுள்ளனர். இதனால் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தாமல் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.

டொலர் பணப்புழக்கத்தின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இது பெரிதும் உதவும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அண்டை நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் உட்பட பல துறைகளில் நெருக்கடியின் போது இந்த முடிவு இலங்கைக்கு விசேட அனுகூலங்களை வழங்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இரு நாடுகளுக்கிடையிலான இந்த முடிவின் மூலம் ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்கவும் முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தெற்காசியாவில் ஒரு  வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒன்றாகவும் இதைப் பாா்க்க முடிகிறது.

image_e5d3044c24.jpg

22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கை, தனது குடிமக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு பல மாதங்களாக போராடி வருகிறது.

இந்திய ஊடக அறிக்கையின்படி, இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிப்பது என்பது ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளையும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இடையே நேரடியாக செய்ய முடியும் என்பதாகும்.

இலங்கையர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்திய ரூபாய் பயன்படுத்த அனுமதிக்கப்படும் உலகின் பிற நாடுகள்

image_07836c9166.jpg

கொவிட் நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் கூட, சில வலிமையான நாடுகளை விட இந்தியா அதிக பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

தேவைப்படும் நேரத்தில் முடிவெடுத்து விரைவாகச் செயல்படுவதே இதன் வெற்றி என்று கூறப்படுகிறது. பல ஆசிய நாடுகள் வலுவான பொருளாதாரம் கொண்ட தங்கள் நாடுகளில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்த அனுமதித்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது உலக அளவில் செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மனி, கென்யா, இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் பல நாடுகளை உள்ளடக்கிய 18 நாடுகளுக்கு இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.

நேபாளம், மாலத்தீவு, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் இதே வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ள வங்கிகள் இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்கின்றன. அந்த வசதியைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் நேரடியாக இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்ய தயாராக உள்ளனர்.

ஜிம்பாப்வே நாடும் இந்திய ரூபாயைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது.

image_804bc5a17a.jpg

ஈரான் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான பரிவர்த்தனைகளில் இந்திய நாணய பாிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் மத்திய வங்கியின் சமீபத்திய தகவலின்படி, ரஷ்யாவும் இந்திய நாணய பரிவா்த்தனைக்கு தயாராகி வருவதாக அறிய வருகிறது.

உக்ரைனுடன் மோதலில் உள்ள ரஷ்யா, இந்தியாவிடம் இருந்து உதவி பெற்று வருவதாகவும், இந்திய நாணயத்தை  தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் அறிய வருகிறது.

ரொய்ட்டர்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்திய அரச வங்கிகள் இப்போது ரஷ்யாவுடன் இந்திய ரூபாயில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

இலங்கை எதிா்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான பொருளாதார சூழலுக்கு மாற்றீடாக,  இந்திய தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகள் இலங்கையில் இந்திய ரூபாயில் செலவழிப்பதற்கும், இலங்கை ரூபாயை இந்தியாவில் ஏற்றுக்கொள்வதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்தியா நீட்டிய நேசக்கரம்

இலங்கையின் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பொருளாதார உறவுகளையும், கடந்த வருடத்தில் இந்தியா வழங்கிய நிதி மற்றும் மனிதாபிமான ஆதரவையும் அண்மையில் பாராட்டிப் பேசியிருந்தாா்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் பின்னணியில், கடன் மறுசீரமைப்பு தொடா்பான  வலுவான நிதி உத்தரவாதங்களை இந்தியா நட்புறவோடு வழங்கியிருந்தது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா கடந்த ஆண்டு 3.8 பில்லியன் அமொிக்க டொலர் மதிப்பிலான உதவியை  வழங்கி  இலங்கையை நெருக்கடி நிலையிலிருந்து மீள வைத்தது.
image_6acb6a2bcf.jpg 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வதேசமயமாகும்-இந்திய-ரூபாய்-இலங்கைக்கு-ஒரு-வரப்பிரசாதம்/91-316360

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டாலருக்கு எங்கு பார்த்தாலும் ஆப்பாக இருக்கே 😃

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, உடையார் said:

டாலருக்கு எங்கு பார்த்தாலும் ஆப்பாக இருக்கே 😃

டாலருக்கு ஆப்பு இறுக்கினாலும், 
நோகாத மாதிரி… காட்டிக் கொள்வதில்,  அமெரிக்கன் பலே கில்லாடி. 🤣

Posted

இந்தியாவைச் சுற்றியுள்ள வறிய நாடுகளுக்கு இந்திய ரூபாவில் பரிமாற்றம் செய்வது வரப்பிரசாதமாக இருக்கலாம்.

இந்தியாவில் பெற்றோலிய உள்நாட்டு விலை உயரும்போது பொதுமக்களின் வங்கிக் கையிருப்பு உயர்வதாகவும் விலை குறையும்போது கையிருப்பு குறைவதாகவும் முன்பு எங்கோ வாசித்த ஞாபகம். 

ரஸ்யாவின் தற்போதைய பெரும் எரிபொருள் வாடிக்கையாளர்களில் ஒருவராக இந்தியா மாறியுள்ளது. கட்டுரையில் கூறியிருப்பது போன்று இந்த வர்த்தகம் இந்திய ரூபாவில் நடப்பதாக வைத்த்துக் கொள்வோம். ஒரு கட்டத்தில் ரஸ்யா பெருந்தொகையான இந்திய ரூவாவைக் கையிருப்பில் வைத்திருக்கப் போகிறது. இப் பணத்தை இந்தியாவில் மட்டுமே முதலிட முடியும். அதாவது மீண்டும் இந்திய ரூபாவாக உள்ளே வருவது நீண்ட காலத்துக்க்கு பயனுள்ளதாக இருக்குமா ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய ரூபாய் வந்தபின் இலங்கை என்றொரு நாடு இருக்குமா? இருந்தும் என்ன பயன்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

இந்திய ரூபாய் வந்தபின் இலங்கை என்றொரு நாடு இருக்குமா? இருந்தும் என்ன பயன்???

இலங்கையில் இந்திய  ரூபாய்களை பயன்படுத்தலாம் என முகநூலில்  பகிர்கிரார்கள் ஊஎ வந்தால் மாற்றிக்கொண்டு வாங்கோ இலகுவாக இருக்கும் 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இந்திய  ரூபாய்களை பயன்படுத்தலாம் என முகநூலில்  பகிர்கிரார்கள் ஊஎ வந்தால் மாற்றிக்கொண்டு வாங்கோ இலகுவாக இருக்கும் 😉

உங்களுக்கு தெரியாத சில விடயங்கள் இருக்கின்றன

சும்மா உதாரணமாக ஒன்று

ஒரு யூரோ = ஒரு ரூபாய் என்றால் எத்தனை சுற்றுலாக்காரர்கள் ஏன் எம்மவர் ஊர் வருவார்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

உங்களுக்கு தெரியாத சில விடயங்கள் இருக்கின்றன

சும்மா உதாரணமாக ஒன்று

ஒரு யூரோ = ஒரு ரூபாய் என்றால் எத்தனை சுற்றுலாக்காரர்கள் ஏன் எம்மவர் ஊர் வருவார்கள்???

ஏன் அடக்கி வாசிக்கின்றீர்கள், எல்லோருக்கு அறியத்தாருங்கள் ஊருக்கு போகும் போது வசதியாக இருக்கு உங்கள் தகவல்கள் பலருக்கு

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/4/2023 at 18:20, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இந்திய  ரூபாய்களை பயன்படுத்தலாம் என முகநூலில்  பகிர்கிரார்கள் ஊஎ வந்தால் மாற்றிக்கொண்டு வாங்கோ இலகுவாக இருக்கும் 😉

வணக்கம் ராசன்!
இந்திய ரூபாய் இலங்கையில் பலமானது தானே?

நாங்கள் ஐரோப்பியர்கள் சுற்றுலாவாக அமெரிக்கா,சுவிஸ்,லண்டன்,ஸ்பானியா,இந்தியா எல்லாம் செல்லக்கூடியதாக இருக்கின்றது. இதே நாடுகளுக்கு இந்தியர்களும் சுற்றுலாவாக வந்து போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/4/2023 at 22:13, விசுகு said:

உங்களுக்கு தெரியாத சில விடயங்கள் இருக்கின்றன

சும்மா உதாரணமாக ஒன்று

ஒரு யூரோ = ஒரு ரூபாய் என்றால் எத்தனை சுற்றுலாக்காரர்கள் ஏன் எம்மவர் ஊர் வருவார்கள்???

யாருமே வரமாட்டார்கள்

On 1/5/2023 at 04:37, குமாரசாமி said:

வணக்கம் ராசன்!
இந்திய ரூபாய் இலங்கையில் பலமானது தானே?

நாங்கள் ஐரோப்பியர்கள் சுற்றுலாவாக அமெரிக்கா,சுவிஸ்,லண்டன்,ஸ்பானியா,இந்தியா எல்லாம் செல்லக்கூடியதாக இருக்கின்றது. இதே நாடுகளுக்கு இந்தியர்களும் சுற்றுலாவாக வந்து போகின்றார்கள்.

இலங்கையில் இந்திய காசு எந்த வகையில் உள்நுழையும் என தெரியவில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இந்திய காசு எந்த வகையில் உள்நுழையும் என தெரியவில்லை . 

இலங்கையில் தற்போது இந்தியாவா சீனாவா வலிமையாக உள்ளது?
நான் நினைக்கின்றேன் இந்தியா என......

ஏனெனில் தொப்புள்கொடி உறவு எனும் பதம் கிந்தியாவிற்கு நன்றாகவே பயன்படுகின்றது போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/4/2023 at 04:50, இணையவன் said:

இந்தியாவைச் சுற்றியுள்ள வறிய நாடுகளுக்கு இந்திய ரூபாவில் பரிமாற்றம் செய்வது வரப்பிரசாதமாக இருக்கலாம்.

இந்தியாவில் பெற்றோலிய உள்நாட்டு விலை உயரும்போது பொதுமக்களின் வங்கிக் கையிருப்பு உயர்வதாகவும் விலை குறையும்போது கையிருப்பு குறைவதாகவும் முன்பு எங்கோ வாசித்த ஞாபகம். 

ரஸ்யாவின் தற்போதைய பெரும் எரிபொருள் வாடிக்கையாளர்களில் ஒருவராக இந்தியா மாறியுள்ளது. கட்டுரையில் கூறியிருப்பது போன்று இந்த வர்த்தகம் இந்திய ரூபாவில் நடப்பதாக வைத்த்துக் கொள்வோம். ஒரு கட்டத்தில் ரஸ்யா பெருந்தொகையான இந்திய ரூவாவைக் கையிருப்பில் வைத்திருக்கப் போகிறது. இப் பணத்தை இந்தியாவில் மட்டுமே முதலிட முடியும். அதாவது மீண்டும் இந்திய ரூபாவாக உள்ளே வருவது நீண்ட காலத்துக்க்கு பயனுள்ளதாக இருக்குமா ?

ஆம் இருக்கும் .... 
காரணம் இந்திய ரூபாயில் ரஸ்யா கடனை பேணும்போது ( இது ஏற்றுமதி இறக்குமதி மிகுதி கணக்காகும் Trade Deficit ) 
இந்திய ரூபாய் வீழ்ச்சி கண்டால் .... கூடிய பொருட்களை ரஸ்யா இறக்குமதி செய்துகொள்ளும் 
இந்திய ரூபாய் ஏற்றம் கண்டால் .... அதை வேறு ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளும்.தனது கடனை பெறுமதியாக பேணிக்கொள்ளும் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய ரூபாவினை அன்னிய செலாவணியாக உப்யோகிப்பதில் சிக்கல் இருப்பதாக கருதுகிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்), காரணம் இந்தியா dirty float எனும் முறையினை பின்பற்றுகிறது, இது  காசின் உண்மையான பெறுமதியினை பிரதிபலிக்காது, இது இந்தியாவுடன் வர்த்தகம் புரியும் நாடுகளுக்கு பாதகமான அம்சம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

நீங்கள் சொல்லுவது  மூன்றாம் தர உலகில் சாத்தியம் ஆகும் 
இந்தியா போன்ற ஏற்றுமதி நாடுகளுக்கு சாத்தியமாக மிக குறைந்த பட்ஷமே உண்டு 
ரசியாவுக்கு இந்திய ரூபாய் தேவை இல்லை ... இந்திய கனிம வளங்கள்தான் தேவை அதை இறக்குமதி செய்துகொள்ளும். 

ஈடாக இந்தியாவும் ரசிய எண்ணையை இறக்குமதி செய்து 
அதை சுத்திகரித்து பிளாஸ்டிக் மற்றும் ஏனெர்ஜி பொருட்களாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்துகொள்ளும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Maruthankerny said:

இந்தியா மிக இறுக்கமான currency band பயன்படுத்திவதாக நினைவில் உள்ளது (1%), இதனால் பணச்சந்தை வர்த்தகர்கள் இந்திய நாணயத்திற்கெதிராக ஜோர்ஜ் சோரோஸ் செய்ததை போல இந்திய நாணயத்தின் பெறுமதிகெதிராக வர்த்தகத்திலீடுபட முடியும் இந்தியா தற்போதுள்ள dirty float இல் அன்னிய செலாவணி நாணயமானால்.

இந்திய நாணயம் reserve currency ஆக பாவிக்கும் போது நன்மையுண்டு அதே நேரம் பல பாதகங்களும் உண்டு இந்தியாவுக்கு, ஆனால் நாணயத்தினை Free float ஆக வைத்திருக்காவிட்டால் வர்த்தக பங்காளி நாடுகள் அந்த நாணயத்தின் மீதான நம்பிக்கை அற்று போகும், வெளிநாட்டு வர்த்தகத்தில் reserve currency ஆக்குவதற்காக கட்டுப்பாடற்ற மிதக்கவிடப்பட்ட  நாணய கொள்கையினை பின்பற்றினால் அதன் monetary policy  இல் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என கருதுகிறேன் அத்துடன் தொடர்ச்சியாக மத்திய வங்கி தலையீடு தவிர்க்க படமுடியாததாகி விடும் என கருதுகிறேன்.

இந்திய நாணயம் இலங்கையில் நாணயமாக பயன்படுத்தலாம் என முன்னர் கருத்து தெரிவித்திருந்தேன், ஆனால் அதற்கும் உலக அன்னிய செலாவணி என்ற நிலைக்கு இந்தியா செல்ல வேண்டுமாயின் எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் பற்றியே தற்போது கேள்வி எழுப்பியுள்ளேன்.

உண்மையாக இந்தியா இந்த சவாலினை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது எனக்கு புரியவில்லை. அதனை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.

Posted
4 hours ago, Maruthankerny said:

நீங்கள் சொல்லுவது  மூன்றாம் தர உலகில் சாத்தியம் ஆகும் 
இந்தியா போன்ற ஏற்றுமதி நாடுகளுக்கு சாத்தியமாக மிக குறைந்த பட்ஷமே உண்டு 
ரசியாவுக்கு இந்திய ரூபாய் தேவை இல்லை ... இந்திய கனிம வளங்கள்தான் தேவை அதை இறக்குமதி செய்துகொள்ளும். 

இந்தியா ஏற்றுமதி நாடு என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

2021 இல் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி 395 பில்லியன் டொலர்கள் - இறக்குமதி 573 பில்லியன்

இதே வருடத்தில் சேவைகள் மூலம் இந்தியா பெற்ற வருமானம் 241 பில்லியன் - வெளிநாட்டுச் சேவைகள் மூலமான செலவு 196 பில்லியன்.

https://www.attijaritrade.ma/fr/choisissez-votre-marche-cible/profils-pays/inde/echanger#

மொத்த ஏற்றுமதி இங்கு சமநிலையில் இல்லை. இந்தியாவில் பெருகிவரும் சனத்தொகையால் இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/5/2023 at 03:06, vasee said:

இந்தியா மிக இறுக்கமான currency band பயன்படுத்திவதாக நினைவில் உள்ளது (1%), இதனால் பணச்சந்தை வர்த்தகர்கள் இந்திய நாணயத்திற்கெதிராக ஜோர்ஜ் சோரோஸ் செய்ததை போல இந்திய நாணயத்தின் பெறுமதிகெதிராக வர்த்தகத்திலீடுபட முடியும் இந்தியா தற்போதுள்ள dirty float இல் அன்னிய செலாவணி நாணயமானால்.

இந்திய நாணயம் reserve currency ஆக பாவிக்கும் போது நன்மையுண்டு அதே நேரம் பல பாதகங்களும் உண்டு இந்தியாவுக்கு, ஆனால் நாணயத்தினை Free float ஆக வைத்திருக்காவிட்டால் வர்த்தக பங்காளி நாடுகள் அந்த நாணயத்தின் மீதான நம்பிக்கை அற்று போகும், வெளிநாட்டு வர்த்தகத்தில் reserve currency ஆக்குவதற்காக கட்டுப்பாடற்ற மிதக்கவிடப்பட்ட  நாணய கொள்கையினை பின்பற்றினால் அதன் monetary policy  இல் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என கருதுகிறேன் அத்துடன் தொடர்ச்சியாக மத்திய வங்கி தலையீடு தவிர்க்க படமுடியாததாகி விடும் என கருதுகிறேன்.

இந்திய நாணயம் இலங்கையில் நாணயமாக பயன்படுத்தலாம் என முன்னர் கருத்து தெரிவித்திருந்தேன், ஆனால் அதற்கும் உலக அன்னிய செலாவணி என்ற நிலைக்கு இந்தியா செல்ல வேண்டுமாயின் எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் பற்றியே தற்போது கேள்வி எழுப்பியுள்ளேன்.

உண்மையாக இந்தியா இந்த சவாலினை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது எனக்கு புரியவில்லை. அதனை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.

இந்தியாவுக்கு நிறைய சிக்கல் இருக்கும் ....
தவிர அமெரிக்க ஏகாபதியம் ... ஐயோ வடை போச்சே என்றுவிட்டு சும்மா இருக்க போவதில்லை 
இவர்களை மீண்டும் டாலருக்கு கொண்டுவர ரவுடிகளே செய்யாத அடடூழியம் வரை செய்யத்தான் போகிறார்கள். இந்தியாவில் ஒரு பஞ்சம் வரும்போது ஐ எம் எப் ஊடாக ஒரு ஆப்பு வைத்து கொள்வார்கள்.

இந்திய உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுப்பதோடு இந்தியாவுக்கு கூடுதலான 
வெளிநாட்டு பணத்தினை ரூபிள் யுவான் ய் கொண்டுவரும் அதனால்தான் இந்தியா இப்போது இதை விரைவாக செய்துகொள்கிறது. தவிர இது ஐரோப்பாவுக்கும் சாதகமாகவே இருக்கும் நேரடியான ரஷ்ய இறக்குமதியை விட இந்தியா ஊடாக அவர்கள் எண்ணெய் சார்ந்த கனிமங்களை இறக்குமதி செய்துகொள்வார்கள். 

உல்லாசப்பயண பயணிகள் இந்தியா வருபவர்கள் ... இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் உதாரணமாக துபாய் பாலி தாய்லாந்து என்று லட்ஷக்கணக்கான இந்தியர்கள் இனி இந்திய ரூபாய்யையே கொண்டுசெல்ல முடியும் ( 3 யை விட ) நேரடியாகவே பண பரிமாற்று நடந்துகொள்ளும். அது இந்திய ரூபாயை குறைந்த பட்ஷம் ஆசியாவில் ஒரு முன்னனி கரன்சியாக ஆக்கிக்கொள்ளும். 

சாதக பாதகங்கள் நிறைய உண்டு இந்திய அரசின் தொலைநோக்கு பார்வையில்தான் லாபமும் தொடர்வதும் உண்டு. 

On 7/5/2023 at 03:31, இணையவன் said:

இந்தியா ஏற்றுமதி நாடு என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

2021 இல் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி 395 பில்லியன் டொலர்கள் - இறக்குமதி 573 பில்லியன்

இதே வருடத்தில் சேவைகள் மூலம் இந்தியா பெற்ற வருமானம் 241 பில்லியன் - வெளிநாட்டுச் சேவைகள் மூலமான செலவு 196 பில்லியன்.

https://www.attijaritrade.ma/fr/choisissez-votre-marche-cible/profils-pays/inde/echanger#

மொத்த ஏற்றுமதி இங்கு சமநிலையில் இல்லை. இந்தியாவில் பெருகிவரும் சனத்தொகையால் இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும். 

ஏற்றுமதி சமநிலை எந்த நாட்டிலும் இல்லை 
அமேரிக்கா அண்ணளவாக 2 ட்ரில்லியன் டாலர் சீனாவுக்கு கடன் வைத்துள்ளது 
இது Import & Export deficit    தான்.  வருடா வருடம் இந்திய ஏற்றுமதி கூடிக்கொண்டே செல்கிறது 
நிறைய முன்னணி நிறுவனங்கள் இப்போ இந்தியா செல்ல தொடங்கி இருக்கிறார்கள் 
சீன அமெரிக்க உறவு அப்பப்போ விரிசல் காண்பதால்  பல நிறுவனங்கள் இந்தியாவை தெரிவு செய்கிறார்கள். 
இவை இன்னமும் ஏற்றுமதியை அதிகரிக்கும் 

Posted
2 hours ago, Maruthankerny said:

நான் மேலே இணைத்த கட்டுரையில் இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கும் என 2026 ஆம் ஆண்டுவரை மதிப்பிடப்பட்டுள்ளதே.

வருடா வருடம் ஏற்றுமதி கூடித்தான் செல்லும். அதேபோல் இறக்குமதியும் கூடிச் செல்லும். இந்த ஆண்டு மொத்த இறக்குமதி 3.7 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் இறக்குமதி 7.5 வீதத்தால் கூடியுள்ளது. இந்த அடிப்படையில் இந்தியாவை ஏற்றுமதி நாடாகக் கருத முடியாதல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, இணையவன் said:

அப்படி கருத்துவத்துக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
அவர்கள் ஏற்கனவே $750 பில்லியன்கள் ஏற்றுமதி செய்கிறார்கள் ... அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கூடுதலான ஏற்றுமதி சேர்விஸ் இல் கம்ப்யூட்டர் ப்ரொக்ராம்ஸ் .... இணைய வழி சேவிஸ்ட்கள் .... இவை தொடர்ந்தும் ஒரு பங்கு பணத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
தொழில்சாலை உற்பத்தி மட்டுமே 2030இல் ஒரு ரில்லியன் எட்டும் என்று எதிர்பார்க்க படுகிறது 

மக்கள்தொகை அதிகரிப்பால் உணவு தொழில்நுட்பம் போன்றவையின் இறக்குமதியும் அதிகரிக்கும் 

இதனால் ரசியா பேணும் இந்திய கடனுக்கு எந்த பாதிப்பும் இல்லை 
ரஸ்யா கூடுதல் எண்ணையை ஏற்றுமதி செய்துகொண்டு ..... இந்தியா ஊடாக அமெரிக்க ஐரோப்பிய தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துகொள்ளும். 

Foreign Direct Investment (FDI): -India reported its highest-ever annual FDI Inflow of US$ 81.97 billion last fiscal. A total of 863 Investment Projects are under active consideration with an investment of $121 Billion including 272 soon-to-take-off proposals worth $41 Bn.

Petroleum Products: - Contributed in a major way to India's exports, with crude oil prices rising due to the pandemic and made worse by geopolitical tensions due to the Ukraine war. India exports $55.5 bn worth of petroleum products, a massive rise of 150 per cent over last year. 

இந்தியா நோக்கிய வெளிநாட்டவர் முதலீடு வருடா வருடம் அதிகரிக்கிறது பில்லியன்களில் 

எண்ணெய் சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியும் பில்லியன்களில் அதிகரிக்கிறது 

இதுவே ரஸ்யாவிற்கு தேவையானவை. 

Posted
45 minutes ago, Maruthankerny said:

அப்படி கருத்துவத்துக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
அவர்கள் ஏற்கனவே $750 பில்லியன்கள் ஏற்றுமதி செய்கிறார்கள் ... அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கூடுதலான ஏற்றுமதி சேர்விஸ் இல் கம்ப்யூட்டர் ப்ரொக்ராம்ஸ் .... இணைய வழி சேவிஸ்ட்கள் .... இவை தொடர்ந்தும் ஒரு பங்கு பணத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இதில் சேவைகள் 241 பில்லியன் மட்டுமே 🙂 இணைய வழிச் சேவைகளுக்கு வெளியில் கடும் போட்டி நடக்கிறது.

46 minutes ago, Maruthankerny said:

எண்ணெய் சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியும் பில்லியன்களில் அதிகரிக்கிறது 

இதுவே ரஸ்யாவிற்கு தேவையானவை. 

ஆரம்பத்திலிருந்தே ரஸ்ய உக்ரெய்ன் பிரச்சனையயை அடிப்படையாக வைத்தே இந்திய பொருளாதாரத்தை ஆராய்கிறீர்கள்.

2030 இல் இதே ரஸ்ய அரசியலும் உக்ரெயின் சண்டையும் தொடரும் என்று எதிர்பார்க்கிறீர்களா ?

2030 இல் பெற்றோலிய உற்பத்தி இன்று உள்ளைதை விட 20 வீதம் வீழ்ச்சியடையும். இதை எதிர்பார்த்தே ஐரோப்பிய நாடுகள் இப்போதே தமது எரிபொருள் தேவையை வெளியிலிருந்து எதிர்பார்க்காத கொள்கையை உருவாக்கி வருகிறார்கள். பெற்றோலியப் பொருட்களுக்கும் இதே நிலைதான். அதேபோல் அமெரிக்காவில் எப்போதும் எரிபொருள் பஞ்சம் வரப்போவதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, இணையவன் said:

இதில் சேவைகள் 241 பில்லியன் மட்டுமே 🙂 இணைய வழிச் சேவைகளுக்கு வெளியில் கடும் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் இலங்கையும் இணைய வேண்டிய அரிய தருணம் இது. இந்தியா, ரஷ்ய சார்பு நிலையை வெளிப்படையாக எடுத்தால், அமெரிக்காவிற்கு இருக்கும் ஒரு மறைமுக துருப்புச் சீட்டு, outsource செய்யும் இணைய, தொழில் நுட்ப சேவைகளை வேறு நாடுகளுக்குத் திருப்பி விடுவது. தாய்வான், தென் கொரியா போல அமெரிக்காவிற்கு நெருக்கமாக இலங்கை வர முடியா விட்டாலும் சிறிதளவாவது ஒரு வருமான வழியைக் கட்டியெழுப்பலாம்.

இதையெல்லாம் ஆலோசனையாகச் சொல்ல யாரும் இலங்கையில் இல்லையென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

அறிவுஜீவிகள் வெளியேறினார்

பொருளியல் நிபுணர்கள் வெளியேறினார்

தற்பொழுது வைத்தியர்கள் வெளியேறிக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. 

கடைசியில் காப்பாற்ற நாதியில்லாமல் இந்நாடு நிற்கப் போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/5/2023 at 00:31, vasee said:

இந்திய ரூபாவினை அன்னிய செலாவணியாக உப்யோகிப்பதில் சிக்கல் இருப்பதாக கருதுகிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்), காரணம் இந்தியா dirty float எனும் முறையினை பின்பற்றுகிறது, இது  காசின் உண்மையான பெறுமதியினை பிரதிபலிக்காது, இது இந்தியாவுடன் வர்த்தகம் புரியும் நாடுகளுக்கு பாதகமான அம்சம் ஆகும்.

நன்றி அருமையான கருத்து .

இந்தியா உறுதியற்ற நாடு அந்த உளநாட்டிலேயே சும்மா பங்கு சந்தை உடைந்தால் அங்கிருப்பவர்களுக்கே ஆப்பு விழும் நிலை உள்  நாட்டில் சுத்தி முடிந்து அருகில் உள்ள நாடுகளை ஏமாளியாக்க வெளிக்கிடுகிறார்கள். ஏன் அப்படி என்று கேட்பவர்களுக்கு அமெரிக்க வங்கிகள் சரிய ஐரோப்பாவிலும் நெறி கட்டுவது ஏன் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/4/2023 at 17:43, விசுகு said:

உங்களுக்கு தெரியாத சில விடயங்கள் இருக்கின்றன

சும்மா உதாரணமாக ஒன்று

ஒரு யூரோ = ஒரு ரூபாய் என்றால் எத்தனை சுற்றுலாக்காரர்கள் ஏன் எம்மவர் ஊர் வருவார்கள்???

அண்ணன் குறை நினைக்கவேண்டாம் .

அந்த ஒரு யூரோவுக்கு ஐரோப்பாவில் ஒரு கோழி வாங்க ஏழு யூரோ அதே கோழியை அரை  ரூபாயில் வாங்குவது என்றால் சுற்றுலாக்காரர் போவினம் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனால் இலங்கை போன்ற இறக்குமதியை நம்பி இருக்கும் வங்குரோத்து சொறிலங்காவில் பத்து ரூபாவாக கோழி இருக்கும் அண்ணா .

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
    • முடிந்தால் முட்டையை ஆட்டையைப் போட்டுப் பார் . ........!  😂
    • இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 
    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.