Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

14.jpg

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.

ஆனால், உக்ரைன் இன்னமும் எதிர்த்து நிற்கிறது. ரஷ்ய தரப்பிலோ, சுமார் 200,000 படைவீரர்கள் பலியாகிவிட்டார்கள்.

17 பில்லியன் டொலர்கள் அளவில் வாகனங்கள் முதலானவற்றை ரஷ்யா இழந்துவிட்டது என்கிறது உக்ரைன் தரப்பு.

ஆக, இனி என்ன நடக்கும், ரஷ்யாவுக்கு என்ன ஆகும், புடின் என்ன ஆவார் என்பது குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், புடின் கொல்லப்படுனார் என்றும், அதற்குப் பின் ரஷ்யா உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணரான Paul Goble தெரிவித்துள்ளார்.

புடின் சிறுபான்மை இனத்தவர்களை தனது போருக்காக பயன்படுத்திக்கொள்வதாகவும், அவர்களில் ஏராளமானோர் உயிரிழந்தது, புடினுக்கே பாதகமாக திரும்பும் என்றும் சிலர் கணிக்கத் துவங்கியுள்ளார்கள்.

அத்துடன், எப்படி 1991ஆம் ஆண்டு, சோவியத் யூனியன், 15 புதிய நாடுகளாக உடைந்ததோ, அதேபோல ரஷ்யாவும் உடைந்து சிதறும் என்கிறார் Paul Goble.

இதற்கிடையில், ரஷ்யா உடைந்து சிதறினால் எப்படியிருக்கும் என்பதைக் காட்டும் வரைபடங்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன.

spacer.png
 
https://akkinikkunchu.com/?p=244661

  • Replies 170
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

ரஷ்ய தரப்பிலோ, சுமார் 200,000 படைவீரர்கள் பலியாகிவிட்டார்கள்.

1

https://akkinikkunchu.com/?p=244661

சிங்களவன் கணக்குவிட்ட மாதிரி இருக்கு😃 ஆனால், உக்ரைன்???

மேற்குலகு ஏலாத கட்டத்திற்கு வந்துவிட்டார்கள், இப்ப உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டார்கள், இப்படியே கனவு காண வேண்டியதுதான் மேற்குலக ஊடகங்கள், எவ்வளவு காலத்திற்குதான் செலவழிக்கின்றார்களென்று பார்ப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, உடையார் said:

சிங்களவன் கணக்குவிட்ட மாதிரி இருக்கு😃 ஆனால், உக்ரைன்???

மேற்குலகு ஏலாத கட்டத்திற்கு வந்துவிட்டார்கள், இப்ப உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டார்கள், இப்படியே கனவு காண வேண்டியதுதான் மேற்குலக ஊடகங்கள், எவ்வளவு காலத்திற்குதான் செலவழிக்கின்றார்களென்று பார்ப்போம்

மேற்குலகம் ஆசைப்படுறதுக்கும் ஒரு அளவிருக்கு.....:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

சிங்களவன் கணக்குவிட்ட மாதிரி இருக்கு😃 ஆனால், உக்ரைன்???

மேற்குலகு ஏலாத கட்டத்திற்கு வந்துவிட்டார்கள், இப்ப உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டார்கள், இப்படியே கனவு காண வேண்டியதுதான் மேற்குலக ஊடகங்கள், எவ்வளவு காலத்திற்குதான் செலவழிக்கின்றார்களென்று பார்ப்போம்

20 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகம் ஆசைப்படுறதுக்கும் ஒரு அளவிருக்கு.....:beaming_face_with_smiling_eyes:

Top 30 Tractor GIFs | Find the best GIF on Gfycat

அமெரிக்க வுத் துறையிலும்...  கெகலிய ரம்புக்வெல இருக்கிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் (ரஸ்சியாவி உடைப்பது) தான் திட்டமே; உக்கிரைன் அதில் ஒரு பகுதி.

உக்கிரைன் நேட்டோவில் உத்தியோக பூர்வமாக இணைந்து இருந்தால்; அடுத்து நடக்க கூடிய சாத்தியக்கூறுகள் இவை.

எந்த முறை என்பது தான் பிரச்னை - இராணுவ, உளவு முறையிலா, பொருளாதாரத்தை கொண்டா என்பது. 

இப்பொது முன்னாள் உளவு துறை என்ற பெயரில் வருகிறது.

முன்பே சொல்லி இருந்தேன், உக்கிரைன் உத்தியோகபூர்வமாக இணைந்து இருந்தால்; நேட்டோ, eu சும்மா, வாளா இருக்க முடியாது  

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவை உடைத்தபின்னர் சீனாவை உடைக்கலாம். அதற்கு முன்னர் இந்தியாவை உடையுங்கோப்பா, புண்ணியமாப் போகும்.

🤣

  • கருத்துக்கள உறவுகள்

“the colossal natural resources of Siberia should not belong to Russia alone.” என Madeleine Albright (former U.S. Secretary of State)  கூறியதாக வதந்தியும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

ரஸ்யாவை உடைத்தபின்னர் சீனாவை உடைக்கலாம். அதற்கு முன்னர் இந்தியாவை உடையுங்கோப்பா, புண்ணியமாப் போகும்.

🤣

எனது கனவு கொஞ்சம் பெரியது

இந்தியா சீனா ரசியா மூன்றும் உடையணும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இந்தியா சீனா ரசியா மூன்றும் உடையணும். 

இலங்கையும் இரண்டாய் உடையவேணும் அண்ணை !

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எனது கனவு கொஞ்சம் பெரியது

இந்தியா சீனா ரசியா மூன்றும் உடையணும். 

இந்தியா உடையணும்  

ரஸ்யா ஏன் உடைய வேண்டும் ⁉️

சீனா ஏன் உடைய வேண்டும் ⁉️

ஏன் ...மெரிக்கா, கனடா உடையக்கூடாது ⁉️

வை வை வை ⁉️

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய 2 cents: எல்லா வசதி படைத்த நாடுகளும் ரண்டு மூண்டு துண்டுகளாக உடைய வேணும்!😂 அப்ப தான் "ஐயோ சிங்களவன் கொல்றான்!" என்று வந்து அடைக்கலம் புக இன்னும் பல தெரிவுகள் ஈழத்தமிழருக்குக் கிடைக்கும்!😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

ஏன் ...மெரிக்கா, கனடா உடையக்கூடாது ⁉️

வை வை வை ⁉️

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்......அதைப்பற்றியெல்லாம் நாம் பேச மாட்டம். பேசவும் கூடாது.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பிளான் போட்டாச்சுப் போலை. சதாம், கடாபி போன்ற மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதிகள் வரிசையில் புட்டினும் கோவணத்தோட கிடக்கப்போறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தியா உடையணும்  

ரஸ்யா ஏன் உடைய வேண்டும் ⁉️

சீனா ஏன் உடைய வேண்டும் ⁉️

ஏன் ...மெரிக்கா, கனடா உடையக்கூடாது ⁉️

வை வை வை ⁉️

கனவு தானே பெரிதாக காண்பதில் உங்களுக்கு என்ன எரிச்சல்??

எனது கனவுக்கு பின்னால் எனது தேசத்தின் விடுதலைக்கனவை அடைய இவர்களது வீட்டோ அதிகாரம் விடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இந்தியா உடையணும்  

ரஸ்யா ஏன் உடைய வேண்டும் ⁉️

சீனா ஏன் உடைய வேண்டும் ⁉️

ஏன் ...மெரிக்கா, கனடா உடையக்கூடாது ⁉️

வை வை வை ⁉️

கப்பித்தான் புரோ இப்படி ஒன்றை வாங்கினால் நீங்கள் விரும்பும் நாட்டை எல்லாம் உடைத்து விளையாடலாமுங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, island said:

கப்பித்தான் புரோ இப்படி ஒன்றை வாங்கினால் நீங்கள் விரும்பும் நாட்டை எல்லாம் உடைத்து விளையாடலாமுங்க. 

இந்தியாவை மட்டும்தான் உடைக்கும்படி நான் விரும்புகிறேன். வேறெந்த நாட்டையும் அல்ல. மற்ற நாடுகளை உடைக்கும்படி வேண்டுவது விசுகர்தான்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்தியாவை மட்டும்தான் உடைக்கும்படி நான் விரும்புகிறேன். வேறெந்த நாட்டையும் அல்ல. மற்ற நாடுகளை உடைக்கும்படி வேண்டுவது விசுகர்தான்..🤣

ஏன் மற்றவர்களுக்கு கனவு காணும் உரிமையையும் மறுக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

ஏன் மற்றவர்களுக்கு கனவு காணும் உரிமையையும் மறுக்கிறீர்கள்?

நான் எங்கேயப்பா பிறருடைய கனவுகளைக் குழப்பினேன்? 😀

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அமெரிக்கா மாநிலங்களின் கூட்டாக ஒரே அமெரிக்காவா இருக்குமாமில்ல. உளவுத்துறையா உளறல் துறையா. 

சோவியத் என்பது வேறு.. ரஷ்சியா என்பது வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

ஏற்கனவே பிளான் போட்டாச்சுப் போலை. சதாம், கடாபி போன்ற மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதிகள் வரிசையில் புட்டினும் கோவணத்தோட கிடக்கப்போறார். 😂

எதனை அடிப்படையாகக் கொண்டு சதாமையும் கடாபியையும் மனிதகுலத்திற்கெதிரான பயங்கரவாதிகள் எனக் கூறுகிறீர்கள்? 

எங்கள் போராளிகளையும், எம்மையும்தான் பயங்கரவாதிகள் என்றுதான் கூறுகிறார்கள்.இதில் எது உண்மை? 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்.. ரஷ்சியாவை மேற்கு நாடுகள் உடைக்க முயலும் என்பதை புட்டின் ஏற்கனவே வெளிப்படையாகக் கூறிவிட்டுத்தான் இந்த யுத்தம் செய்கிறார். மேலும் உக்ரைனை முற்றாக ஆக்கிரமிப்பது ரஷ்சியாவின் நோக்கமல்ல.. எனபதையும் புட்டின் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார்.

ஆப்கானித்தான்.. ஈராக்கில்.. தலிபான்களிடமும் ஐஸ் காரர்களிடமும் அமெரிக்கா விட்டிட்டு ஓடினதுகளோடு ஒப்பிடும் போது ரஷ்சியாவின் இழப்பு உக்ரைனில் குறைவே. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கிடைக்கும் இலவசக் கல்வியை முடித்துக்கொண்டு பொருளாதார அகதியாக ஓடிவருபவர்கள் மட்டும் மேற்கு நாடுகளுக்கு வரலாம் என்றில்லை. அகதிகளும் மேற்கு நாடுகளுக்கு வரலாம். 

ஆனால் பொருளாதார அகதிக்கும், அகதிக்கும் வேறுபாடு அதிகம்.

பொருளாதார அகதி, ரூபிளின் பெறுமதி அதிகரித்தால் ரஸ்யாவுக்கும், யுவானின் பெறுமதி அதிகரித்தால் சீனாவுக்கும் ஓடுவார்கள். ஆனால் அகதிகள் என்போர் பாதுகாப்பு எனக் கருதும் நாடுகள் எல்லாவற்றிற்கும் ஓடுவார்கள்

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

என்னுடைய 2 cents: எல்லா வசதி படைத்த நாடுகளும் ரண்டு மூண்டு துண்டுகளாக உடைய வேணும்!😂 அப்ப தான் "ஐயோ சிங்களவன் கொல்றான்!" என்று வந்து அடைக்கலம் புக இன்னும் பல தெரிவுகள் ஈழத்தமிழருக்குக் கிடைக்கும்!😎

நல்ல நாடுகள் துண்டு துண்டாக உடைந்தால் நடக்கம் போகும் உண்மை அது தான். அங்கே அப்படி வந்து இருந்து அனுபவித்து கொண்டு கொழுப்பெடுத்து வக்கணையாக பேசிக் கொண்டு ரஷ்யா சீனா புகழ் பாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல நாடுகள் துண்டு துண்டாக உடைந்தால் நடக்கம் போகும் உண்மை அது தான். அங்கே அப்படி வந்து இருந்து அனுபவித்து கொண்டு கொழுப்பெடுத்து வக்கணையாக பேசிக் கொண்டு ரஷ்யா சீனா புகழ் பாடுவார்கள்.

அங்கே இருந்து அனுபவித்துக்கொண்டு, கொழுப்பெடுத்து, வக்கணையாகப் பேசுவதற்கும் ஒரு தில் வேணுமில்லையா 🤣 

அந்தத் தில் பலரிடம் மிஸ்ஸிங்  மச்சி 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, வாலி said:

ஏற்கனவே பிளான் போட்டாச்சுப் போலை. சதாம், கடாபி போன்ற மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதிகள் வரிசையில் புட்டினும் கோவணத்தோட கிடக்கப்போறார். 😂

கோவணம்.

இதையே தான் தமிழர்/தமிழீழ எதிரிகளும்  எமக்கெதிராக இன்றும் குத்திக்காட்டிக்கொண்டு எள்ளி நகையாடுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் இறுதி நிகழ்வை கொஞ்சமும் கிஞ்சித்து பார்க்காமல் கோவணத்தை வைத்து எமது போராட்ட தலைமையையே கேவலப்படுத்தி விட்டீர்கள்.

அது சரி சதாமும்  கடாபியும் ஆசிய மக்களுக்கு என்ன கெடுதல் அதாவது ஈழத்தமிழர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.