Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதகு - முதற்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

இதை எழுதியவர்

தாயகத்தில்  அதுவும் கொழும்பு  மற்றும்  மட்டக்களப்பிலிருந்து  எழுதுகிறார் அண்ணை

அவர்கள் எழுதட்டும். ஆனால் நாங்கள் இதை அவர்களுக்கு நினைவுபடுத்துவோம்.

 

  • Replies 147
  • Views 14.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நேற்று எனது நட்புவட்டதின் WhatsAppலும் ஒரு link அனுப்பியிருந்தார்கள்..இன்னமும் இப்படி எத்தனை வருகிறதோ தெரியவில்லை..

என்னத்தை சொல்ல.

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தப்பாடலின் மீதிவரிகள் காசி ஆனந்தன் அவர்களுடயதா தெரியவில்லை.. படத்திலும் அப்படி பார்த்த நினைவு இல்லை..அதே போல இந்த வீடியோவில் பாடலாசிரியர்களை குறிப்பிட்டுள்ளார்கள்..

 

புதுவை ஐயாவாகத்தான் இருக்கவேண்டும்.  

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர்கள் எழுதட்டும். ஆனால் நாங்கள் இதை அவர்களுக்கு நினைவுபடுத்துவோம்.

 

எத்தனையோ முறை பார்த்து விட்டேன் இந்த வாலியின் கவிதை, சில வலிகளை மறந்து வாழ்வதுதான் மனித வாழ்க்கை, அவை தந்து விட்ட பாடங்கள் தான் எத்தனை- ஒரு காலமும் மறக்க முடியாது. இவன்தான்  எங்கள் துரோகி , இவன்தான்  எங்கள் எதிரி என  எங்கள் இதயத்திற்கு அடிக்கடி pacer கொடுக்கும் வாலியின் வரிகள். இன்னும் 10 ஆண்டுகள் சென்றாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். இணைப்பிற்கு நன்றி கு.சா.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின் பின் பணம் கட்டி படம் பார்த்தேன்.
பள்ளிக் கால நினைவுகள் கண்முன்னே வந்து போயின.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 14:52, தமிழ் சிறி said:

பிரபாகரன் துப்பாக்கியை எடுத்த தருணம் | கிட்டு, இயக்குனர் 

 

நாயகன் குட்டிமணியுடன் நேர்காணல் 

 

மேதகு படத்தை மட்டுமே பார்க்காமல் இயக்குனர் கிட்டுவின் உரையாடலையும் கேளுங்கள்.

தலைவரின் பிறந்தநாளுக்கு தமிழ் தேசிய தலைவர்களை கூப்பிடப் போவதாக சொல்கிறார்.பார்ப்போம்.

இணைப்புக்கு நன்றி சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் பற்றி நான் "வேண்டுமென்றே" மௌனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது (அமெரிக்கா கருத்துச் சொல்லாமல் இருப்பதை அவதானிப்பது போல அவதானிக்கிறார்களப்பா!😎).

மௌனமேதுமில்லை! எங்கள் வரலாறு எல்லாக் கோணங்களிலும் சொல்லப் பட வேண்டியது முக்கியம். நான் இன்னும் பார்க்கவில்லை - தெரியாத தளங்களில் கடனட்டை பாவிப்பதில் இருக்கும் தயக்கம் தான் காரணம். (மேலதிக தகவல், ஆர்வமுள்ளோருக்கு, பமிலி மான் 2 உம் நான் பார்க்கவில்லை இன்னும்!)

சோ, கெரி ஓன்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

மேலதிக தகவல், ஆர்வமுள்ளோருக்கு, பமிலி மான் 2 உம் நான் பார்க்கவில்லை இன்னும்!)

ஓ, அதுவேறையா?? பரவாயில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு திரைப்படத்திற்காக ஐ எம் டி பி இணையத்தளம் பார்வையாளர்களின் கணிப்பினை வைத்து 9.8/10, அதாவது 98 வீதம் தரமான படம் என்று மதிப்பிட்டிருக்கிறது.

https://www.imdb.com/title/tt14923112/

 

https://twitter.com/search?q=%23methagu&lang=en

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ ஆதரவாளர்கள் பார்த்துவிட்டு பாராட்டுகள்! படம் வெற்றிப்படம் | மேதகு

மேதகு பார்த்தீர்களா! | ஐயா பெ.மணியரசன் உரை!

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு வெளிவந்தபின்னர் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களிடையே சிண்டுமுடியும் வேலைகளும், சில்லறைத்தனமான அரசியலு ம்முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.அத்துடன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்களிடையே பிளவுகளை அதிகரிக்கும் கைங்கரியங்களை திராவிட ஆதரவாளர்கள் இப்படத்தினைப் பாவித்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிகிறது. 

முதன்முதலாக, ஈழத்தமிழனின் அவலத்தையும், ஆயுதப் போராட்டத்திற்கான தேவையினையும் உண்மைக்கு அருகில் கொண்டுசென்று வெளிவந்திருக்கும் இந்த முயற்சியை நினைத்து ஆனந்தப்படுவதா அலது இதன்பின்னால் நடைபெற்று வரும் சில்லறைத்தனமான கட்சிபேத அரசியலை எண்ணி வருந்துவதா என்று தெரியவில்லை. 

இத்திரைப்படம் வெளியாகும் முன்னர் வெளிவந்ததாக நம்பப்படும் சீமானின் இப்படத்திற்கான எதிர்ப்பும், அவ்வெதிர்ப்பினை படம் வெளியாகிய பின்னர் சிலர் வெளிப்படுத்தியமையும், அதனால் சீமானின் ஆதரவாளர்கள் அவரின் பேச்சை நியாயப்படுத்திவருவதும், படக்குழுவை திராவிடக் கட்சிகளுடனும், சீமானினால் வெளியேற்றப்பட்டவர்களுடனுன் சேர்த்து விமர்சிப்பதும் நடக்கிறது. இவை எதுவுமே தேவையற்றவை.

தமிழ்த் தேசியத்திற்கான சக்திகள் ஒன்றுபடாவிட்டாலும் பரவாயில்லை, இப்படி ஆளாளுக்கு அடித்துக்கொன்டு, இருப்பதையும் போட்டுக் குளப்பாமல் இருந்தாலே போதுமானது. தமிழ்த் தேசியம் என்பது ஒரு கட்சிக்குச் சொந்தமானது எனும் மாயையினை விட்டு தேசிய ஆதரவாளர்கள் வெளியேறாதவரை இவர்களின் கட்சிப் போராட்டங்கள் தேசியத்தைப் பலவீனபடுத்தவே உதவப்போகிறது, பலப்படுத்தவல்ல. உணர்வார்களா? பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மேதகு வெளிவந்தபின்னர் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களிடையே சிண்டுமுடியும் வேலைகளும், சில்லறைத்தனமான அரசியலு ம்முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.அத்துடன், தமிழ்த் தேசிய ஆதரவாளர்களிடையே பிளவுகளை அதிகரிக்கும் கைங்கரியங்களை திராவிட ஆதரவாளர்கள் இப்படத்தினைப் பாவித்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிகிறது. 

வெளியே போய் ஆட்களைத் தேட வேண்டியதில்லை.

யாழ்களத்துக்குள்ளேயே தொடங்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/sasikumar.isaaivani/videos/182983607170826

 

இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மனம் மகிழ்ச்சியாக உள்ளது
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு - சினிமா விமர்சனம்

மேதகு - சினிமா விமர்சனம்

மேதகு - சினிமா விமர்சனம்

தெருக்கூத்து வடிவத்தில் முழுக்கதையையும் சொல்லியிருக்கும் உத்தி, சிறப்பு!

பிரீமியம் ஸ்டோரி

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், எப்படி ஆயுதப்போராளியாக உருவெடுத்தார் என்பதைச் சொல்லும் வரலாற்றுப்படம் ‘மேதகு’, BS Value தளத்தில் வெளியாகியிருக்கிறது.

பண்டாரநாயக்க காலத்திலிருந்து சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான பாரபட்சம் நிலவிவந்தது. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ‘ஈழத்தந்தை’ என்றழைக்கப்படும் செல்வநாயகத்தின் அமைதிவழிப் போராட்டங்களை இலங்கை அரசும் அதை இயக்கும் பௌத்த பிக்குகளும் கண்டுகொள்ளவில்லை. பொறுமையிழந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுக்க, அதில் பிரபாகரன் எப்படிப் போராளியாக உருவானார் என்பதைச் சொல்கிறது படம்.

தெளிவான அரசியல் சார்புடன் உருவாகியிருக்கும் படம் என்றாலும் வெறுமனே பிரசாரமாக மட்டுமே இல்லாமல் கலைநேர்த்தி, அழகியல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டமை ஆகியவற்றைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் கிட்டுவுக்கு வாழ்த்துகள். தெருக்கூத்து வடிவத்தில் முழுக்கதையையும் சொல்லியிருக்கும் உத்தி, சிறப்பு!

இளவயது பிரபாகரனின் உருவத்தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன் மிகவும் இயல்பான நடிப்பையும் வழங்கியிருக்கிறார் குட்டிமணி. ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்த ஆதங்கம், யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறை குறித்த கோபம், அரசியல் உரையாடல்கள் என அனைத்தையும் நேர்த்தியாகப் பிரதிபலித்திருக்கிறார். தெருக்கூத்துக் கலைஞர்களாக ராஜவேல் - பெருமாள், பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளையாக ராஜா, மேயர் துரையப்பாவாக அரங்கநாதன் ஆகியோர் கவர்கிறார்கள்.

மேதகு - சினிமா விமர்சனம்
 

தமிழர்கள்மீதான வன்முறை யதார்த்துடன் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ஆல்பிரட் துரையப்பா கொலைத்திட்டம் ஒரு மர்மப்படத்துக்குரிய விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘உரிமையைக் கேட்டால் அதற்கு விலை உயிரா’, ‘சுவாசிக்கக் கத்துக்கிட்டு இருக்கும்போது, ஏன் நுரையீரல்ல கத்தி பாய்ச்சுறாங்க’ எனக் கத்திமுனை வசனங்கள். உறுத்திக்கொண்டு தெரியாமல், நிகழ்வுகளின் கைபிடித்துக்கொண்டு பயணிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரியாஸ். மாயத்தை நிகழ்த்துகிற திரைக்கதையில், இறுதிவரை தன் பிடிமானத்தை விடாது தொடர்கிறது பிரவீன் குமாரின் இசை.

யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரமாண்டத்தைக் காட்ட இயலாத பட்ஜெட் பலவீனம், தமிழீழத்தின் முதல் தற்கொலைப் போராளி சிவகுமரன் மரணம் பற்றிய தகவற்பிழை, 30 ஆண்டுக்கால ஆயுதப்போராட்டத்தின் சிறுகீற்று பற்றிய பதிவு மட்டுமே போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் நம் கண்முன் வாழ்ந்த ஒரு தமிழ்ப்போராளியின் வாழ்க்கையைப் படைப்பாகச் சித்திரித்த வகையில் வெற்றிபெற்றிருக்கிறார் ‘மேதகு.’

 

Ananda Vikatan - 07 July 2021 - மேதகு - சினிமா விமர்சனம் | methagu cinema review

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2021 at 02:56, ரஞ்சித் said:

மேதகு வெளிவந்தபின்னர் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களிடையே சிண்டுமுடியும் வேலைகளும்,

🤣 செம காமெடி. சீமான் நாங்கள் தலையிட்டா சரியா வராது, நீங்கள் படத்தை நிறுத்தி விடுங்கள் என்று யாரிடமோ கேட்பாராம். 

யாரிடம் இப்படி கேட்டார் சீமான்?

திமுக? அதிமுக? பாஜக? 

அடுத்து படம் வந்த பின் ஒரு அறிக்கையோடு அதை கடந்து போவாராம். அழைத்தும் பட வெளியீட்டுக்கு போக மாட்டாராம்.

இவ்வளவு பிரச்சனை சீமானுக்கும், பட குழுவுக்கும் இருக்க , அதுவும் படம் வரமுதலே பல காலமாக இருக்க - எதோ படம் வந்த பின் “யாரோ சிண்டு முடிகிறாத்களா?”.

அதுவும் யாழ்களத்தில் முடிகிறார்களா?

சீமானுக்கும் பட குழுவுக்குமான பிரச்சனை பல ஆண்டுகள் பழையது.

இந்த படத்தை தயாரித்த சுமேசு, குகன் குமார் ஆகியோரிடம் போய் கேளுங்கள். அவர்களை யாரும் சிண்டு முடிந்து விட்டார்களா? அல்லது அவர்கள் சீமானை ஏன் எதிர்கிறார்கள் என.

இருவரும் டுவிட்டரில் உள்ளார்கள்.

இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் குகன். கீழே பேட்டி போடுகிறேன். 

 

On 30/6/2021 at 04:01, ஈழப்பிரியன் said:

வெளியே போய் ஆட்களைத் தேட வேண்டியதில்லை.

யாழ்களத்துக்குள்ளேயே தொடங்கிவிட்டார்கள்.

 

இந்த திரியில் இதை பதிய வேண்டாம் என விலகியே நடந்தேன். ஆனால் இங்கே எழுதும் சிலருக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியலில் என்ன நடக்கிறது என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாமல் - எழுதும் போது அதை மறுக்க வேண்டியதாகிறது.

22 hours ago, விசுகு said:

https://www.facebook.com/sasikumar.isaaivani/videos/182983607170826

 

இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மனம் மகிழ்ச்சியாக உள்ளது

நான் இதை காசி ஆனந்தன் அல்லது புதுவை எழுதினர் என @பிரபா சிதம்பரநாதன்க்கு கூறினேன். பிழையான தகவல்.

அறிவுமதி, யுகபாரதி என பெரிய தலைகள் எல்லாம் ஓடி ஒழிய (மேலே குகனின் பேட்டி பார்க்கவும்) ஒரு படலை கிட்டுவும் இந்த பாடலை திருக்குமரன் எழுதியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

சிண்டு முடிகிறார்களா இல்லையா என இவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இந்த திரியில் இதை பதிய வேண்டாம் என விலகியே நடந்தேன். ஆனால் இங்கே எழுதும் சிலருக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியலில் என்ன நடக்கிறது என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாமல் - எழுதும் போது அதை மறுக்க வேண்டியதாகிறது.

வணக்கம் கோசான்
ஆரம்பத்தில் படம் வெளிவந்தவுடன் மேதகு படத்தை எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒன்றாக கை கோர்த்தோம்.
அந்தநேரம் சீமான் வெறுக்கிறாரா யார்யாரெல்லாம் வெறுக்கிறார்கள் என்று நாம் ஆராயவே இல்லை.

ஆனாலும் நாளாக நாளாக நீங்களாகவே சீமானைப் பற்றி தேவையில்லாமல் ஒற்றுமையாக போய்க் கொண்டிருந்த திரியில் வலுக்கட்டாயமாக சில செய்திகளை இணைத்து தூண்டில் போடுவது அப்பட்டமாகவே தெரிந்தது.

இப்போ அதுக்கு வலுசேர்குமாப் போல குப்பை கூழங்களை கொண்டுவந்து இணைத்து இந்தா பார் அந்தா பார் என பந்தா காட்டுகிறீர்கள்.

மேதகுவை சீமான் எதிர்த்திருந்தாலும் நாம்(நான்)என்னாலான ஆதரவை வழங்குவேன்.

இதை மீண்டும் நீட்டிக்காமல் இத்துடனேயே விட்டுவிட்டு மேதகுவை வெற்றி பெற செய்வோம்.
நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ அதுக்கு வலுசேர்குமாப் போல குப்பை கூழங்களை கொண்டுவந்து இணைத்து இந்தா பார் அந்தா பார் என பந்தா காட்டுகிறீர்கள்.

மேதகுவை சீமான் எதிர்த்திருந்தாலும் நாம்(நான்)என்னாலான ஆதரவை வழங்குவேன்.

மேதகு படத்திற்கான உலகளாவிய ரீதியில் உள்ள தமிழர்களின் ஆதரவின் மூலம் சீமான் மீதுள்ள வக்கிரத்தை இங்கேயும் ஏனைய வலைத்தளங்களிலும் தீர்க்க முனைகின்றனர்.

இந்த திரைப்படத்தில் இயக்குனர்கிட்டுஅவர்களால் வெளியிடப்பட்டகுறும்படம் ஒன்றிலிருந்து அவர் ஒருசாதி வெறியர் என்று ஒரு தரப்புஅவர்மீது குற்றம் சுமத்திகொண்டிருக்கிறது அந்த இரண்டுவீடியோக்களும் கீழேஇணைக்கப்பட்டுள்ளது

இவர் முன்னர் நாம் தமிழர் கட்சியில்இருந்து அதீத சாதி வெறிகாரணமாக கட்சியிலிருந்துநீக்கப்பட்டவர் என்றும் ஒரு தகவல்உலா வருகிறது சில வேளைகளில்அதன் காரணமாகத்தான் சீமான்இதிலே தலையிடாமல் அல்லதுகருத்து சொல்லாமல் இருக்கிறாரோஎன்பது தெரியவில்லை

எது உண்மை எது பொய் என்பதுதெரியவில்லை ஆனாலும் கீழேஉள்ள வீடியோ உண்மையானதுபோல் தெரிகிறது

https://www.facebook.com/100057256234020/videos/1228201577609066

https://www.facebook.com/messenger_media/?thread_id=100001268867520&attachment_id=647304262850438&message_id=mid.%24cAABa8wbts9OAlZ5Nzl6ZFjZLTv_g

21 minutes ago, வரணியான். said:

இந்த திரைப்படத்தில் இயக்குனர்கிட்டுஅவர்களால் வெளியிடப்பட்டகுறும்படம் ஒன்றிலிருந்து அவர் ஒருசாதி வெறியர் என்று ஒரு தரப்புஅவர்மீது குற்றம் சுமத்திகொண்டிருக்கிறது அந்த இரண்டுவீடியோக்களும் கீழேஇணைக்கப்பட்டுள்ளது

இவர் முன்னர் நாம் தமிழர் கட்சியில்இருந்து அதீத சாதி வெறிகாரணமாக கட்சியிலிருந்துநீக்கப்பட்டவர் என்றும் ஒரு தகவல்உலா வருகிறது சில வேளைகளில்அதன் காரணமாகத்தான் சீமான்இதிலே தலையிடாமல் அல்லதுகருத்து சொல்லாமல் இருக்கிறாரோஎன்பது தெரியவில்லை

எது உண்மை எது பொய் என்பதுதெரியவில்லை ஆனாலும் கீழேஉள்ள வீடியோ உண்மையானதுபோல் தெரிகிறது

https://www.facebook.com/100057256234020/videos/1228201577609066

https://www.facebook.com/messenger_media/?thread_id=100001268867520&attachment_id=647304262850438&message_id=mid.%24cAABa8wbts9OAlZ5Nzl6ZFjZLTv_g

இரன்டாவது video இணைப்பதில் சிக்கல் உள்ளது அது தான் முளுமையான குறும்படம். please help me to attach

Edited by வரணியான்.

On 1/7/2021 at 02:54, விசுகு said:

https://www.facebook.com/sasikumar.isaaivani/videos/182983607170826

 

இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மனம் மகிழ்ச்சியாக உள்ளது

He is the Poet from Srilanka - Thirukumaran

https://www.facebook.com/Gurumenan/videos/137589495141405

https://www.facebook.com/sunder414/videos/4000316526670744

 

Edited by வரணியான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா,

நீங்கள் சொன்னதில் பலதில் உண்மை இல்லை. வேணும் எண்டு இல்லை. தவறான புரிதல் என்றே எண்ணுகிறேன்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பத்தில் படம் வெளிவந்தவுடன் மேதகு படத்தை எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒன்றாக கை கோர்த்தோம்.
அந்தநேரம் சீமான் வெறுக்கிறாரா யார்யாரெல்லாம் வெறுக்கிறார்கள் என்று நாம் ஆராயவே இல்லை

1. சீமான் இந்த படத்தை எதிர்கிறார் என்பது பற்றி படம் வெளி வரமுதலே எனக்கு தெரியும். ஆனால் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதை பற்றி கதைக்காமல் விட்டேன். இந்த திரியில் ஆ. சாமி சீமானின் ஆடியோவை போட்ட பின்பும் எதுவும் எழுதாமல் கடந்து போனேன். அதன் பின் @Nathamuni அதற்கு எதிர் வினையாற்றிய போதும், இதன் பின்னால் கேடு கெட்ட அரசியல் உள்ளது ஆனால் இந்த திரியில் அதை பற்றி கதைக்க விரும்பவில்லை என்றே சொல்லி போனேன். 

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆனாலும் நாளாக நாளாக நீங்களாகவே சீமானைப் பற்றி தேவையில்லாமல் ஒற்றுமையாக போய்க் கொண்டிருந்த திரியில் வலுக்கட்டாயமாக சில செய்திகளை இணைத்து தூண்டில் போடுவது அப்பட்டமாகவே தெரிந்தது.

👆🏼 இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது. நீங்கள் யாழிலும் சிண்டு முடிகிறார்கள் என்று எழுதும் வரை இந்த திரியில் சீமானை பற்றி நான் எழுதவில்லை.

இப்போ சொல்லுங்கள் இந்த திரியை திசை திருப்புவது, திரியின் ஒற்றுமையை குலைப்பது நானா? நீங்களா?

2 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ அதுக்கு வலுசேர்குமாப் போல குப்பை கூழங்களை கொண்டுவந்து இணைத்து இந்தா பார் அந்தா பார் என பந்தா காட்டுகிறீர்கள்.

நான் இணைத்த வீடியோ - படத்தின் நிர்வாக தயாரிப்பாளரின் பேட்டி. இதையும் 3 நாளுக்கு முதலே பார்த்து விட்டு இணைக்காமல் விட்டேன்.

ஆனால் நீங்கள் யாழில் சிண்டு முடிகிறார் என எழுதியதன் பின், இந்த சிண்டு எப்பவோ முடிந்ததது என்பதை காட்ட அந்த வீடியோவை இணைத்தேன்.

பிகு

இந்த படத்தை சீமான் ஏன் எதிர்கிறார் என்பதை நான் இன்னொரு திரியில் (இந்த திரியில் அல்ல) எராளனுடன் (மட்டும்) சிலாகித்தேன். எனது பார்வையை அவருக்கும், அக்னிக்கும் கூறினேன். 

அந்த திரியில் கூட - எராளனுடன் மட்டும் அதை விவாதிக்க விரும்புகிறேன், திரியை 10 பக்கம் நீட்ட விரும்பவில்லை என்று சொல்லி, அதை கடைபிடிக்கவும் செய்தேன்.

முடிவாக இந்த திரி படம் பற்றி மட்டுமே இருக்க வேண்டும், இதில் சீமானை இழுக்க கூடாது என மிக உறுதியாக இருந்த என்னை, அதேபோல் ஒற்றை நோக்கத்தில், ஒற்றுமையாய் போய் கொண்டிருந்த திரியை குழப்பியடித்தது, உங்கள் “யாழிலும் சிண்டு முடிகிறார்கள்” என்ற கூற்று மட்டுமே.

இப்படியான அநாவசிய அரசியல் குழுவாத கருத்துகளை இட்டு, அதற்கு ஒரு மூணு பேர் பச்சை குத்தி பக்கவாத்தியம் வாசிக்காமல் - இந்த திரியை தொடர்ந்தும் படம் பற்றி உரையாட மட்டுமே பாவிப்போம்🙏🏾.

18 minutes ago, வரணியான். said:

நன்றி வரணியான்,

ஒரு பேட்டியில் ஈழ கவிஞர் என்றார்கள். அதனால்தான் நானும் காசி ஆனந்தன்/ புதுவை ஐயாவாய் இருக்கும் என யோசித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 20:09, goshan_che said:

இதன் பின்னால் நடக்கும் அரசியல் மிக கேவலமானது. இந்த திரியில் இருந்து திசை மாறக்கூடாது என்பதால் எழுதவில்லை.

👆🏼இந்த திரியில் இன்று காலை வரைக்கும் நான் படம் தவிர்ந்து எழுதிய ஒரே கருத்து இது மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.