Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கி மாநாட்டில் ரஷ்ய, உக்ரேனிய எம்.பிகள் கைகலப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி மாநாட்டில் ரஷ்ய, உக்ரேனிய எம்.பிகள் கைகலப்பு

Published By: Sethu

05 May, 2023 | 11:04 AM
image

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) பாராளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இச்சம்பவம் இடம்பெற்றது. 

இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார்.

அதையடுத்து ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கியின் கையிலிருந்து உக்ரேனிய கொடியை மற்றொரு ரஷ்ய எம்பியான வெலேறி ஸ்டாவிட்ஸ்கி பறித்தார். அதன்பின் இவ்விரு எம்.பிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் இவ்விருவரையும் அங்கிருந்தவர்கள் பிரித்தனர்.

ரஷ்ய எம்பி ஸ்டாவிட்ஸ்கி, மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

https://www.virakesari.lk/article/154546

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார்.

உக்ரைனியர்கள்  விடும், குரங்கு சேட்டைகளுக்கு... இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
மாநாடு நடப்பது அந்நிய நாட்டில்....   
அங்கு ரஷ்ய பாரளுமன்ற உறுப்பினர் பேட்டி கொடுக்கின்றார்.
பிறகு என்ன இழவுக்கு... உக்ரேன் கொடியை பின்னால் போய் நின்று காட்டுகிறார்கள். 
சபை நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் தான்,   உக்ரேனியர்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைனியர்கள்  விடும், குரங்கு சேட்டைகளுக்கு... இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
மாநாடு நடப்பது அந்நிய நாட்டில்....   
அங்கு ரஷ்ய பாரளுமன்ற உறுப்பினர் பேட்டி கொடுக்கின்றார்.
பிறகு என்ன இழவுக்கு... உக்ரேன் கொடியை பின்னால் போய் நின்று காட்டுகிறார்கள். 
சபை நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் தான்,   உக்ரேனியர்கள்.

உக்கிரேனிய பாராளுமன்ற உறுப்பினரின் வருத்தம் புரிகிறது, உக்கிரேனை இரஸ்சியா எவ்வளவு மோசமான அழிவினை ஏற்படுத்திக்கொண்டுள்ளது, அதனால் அவர் கொஞ்சம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார், ஆனால் அதற்காக அவரை தள்ளி வன்முறையிலீடுபடும் இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைனியர்கள்  விடும், குரங்கு சேட்டைகளுக்கு... இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
மாநாடு நடப்பது அந்நிய நாட்டில்....   
அங்கு ரஷ்ய பாரளுமன்ற உறுப்பினர் பேட்டி கொடுக்கின்றார்.
பிறகு என்ன இழவுக்கு... உக்ரேன் கொடியை பின்னால் போய் நின்று காட்டுகிறார்கள். 
சபை நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் தான்,   உக்ரேனியர்கள்.

இதுக்கும் சேர்த்து வட்டிகுட்டியோட வாங்கப்போயினம். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

உக்கிரேனிய பாராளுமன்ற உறுப்பினரின் வருத்தம் புரிகிறது, உக்கிரேனை இரஸ்சியா எவ்வளவு மோசமான அழிவினை ஏற்படுத்திக்கொண்டுள்ளது, அதனால் அவர் கொஞ்சம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார், ஆனால் அதற்காக அவரை தள்ளி வன்முறையிலீடுபடும் இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.

இங்கு உள்ள செய்தியில்..
ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் பேசும் போது, பின்னால் நின்று கொடி காட்டுபவர் உக்ரைன் எம்.பி.
அந்த கொடியை மற்றைய ரஷ்ய எம்.பி.   பறித்துக் கொண்டு செல்லும் போது.. 
பின்னால் வந்து ரஷ்ய எம்.பி.யை தாக்கியவர்   கொடி காட்டிய உக்ரைன் எம்.பி.

இப்போது… உங்கள் மொழியில்… வன்முறையிலும், தரக்குறைவாகவும் நடந்து கொண்டது யார் என்பதை.. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

மன்னிக்கவும் எனது தவறு, நீங்கள் கூறுவது போல நடந்திருந்தால் உக்கிரேன் மிக கேவலமாக நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

இதுக்கும் சேர்த்து வட்டிகுட்டியோட வாங்கப்போயினம். :rolling_on_the_floor_laughing:

நிச்சயமாக... ஒரு கிழமையில் அடுத்தடுத்து நடந்த,  
கிரெம்ளின் தாக்குதலுக்கும், துருக்கியில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்கும் 
எமக்கே.... இரத்தம் கொதிக்கும் போது...
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எப்படி இருக்கும். 😎

வட்டிக்கு வட்டி, குட்டிக்கு குட்டி என்ற கணக்கில்...
மொத்தமாகவும், சில்லறையாகவும் திருப்பி கொடுக்கப் படும். 😂
இந்தக் கணக்கை... முடிக்காமல் ரஷ்யா ஓயாது என்பது நூறு வீதம்  உண்மை. 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உக்கிரேனிய பாராளுமன்ற உறுப்பினரின் வருத்தம் புரிகிறது, உக்கிரேனை இரஸ்சியா எவ்வளவு மோசமான அழிவினை ஏற்படுத்திக்கொண்டுள்ளது,

அதனால் அவர் கொஞ்சம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார்,

ஆனால் அதற்காக அவரை தள்ளி வன்முறையிலீடுபடும் இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது

மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.

கொடியைப் பிடித்தது உக்ரேன்  

கொடியைப் பறித்தது ரஸ்யா

பறித்தவரைத் தள்ளி அடித்தது உக்ரேன். 

இறுதியில், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவது ரஸ்ய அமைச்சர்...🤣

மேற்குலக ஊடகங்களை மட்டும் தொடர்ந்து படிதது, கேட்டு வந்தால் இப்படித்தான் எல்லாவற்றையும் நேரெதிராக யோசிக்கத் தோன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

2 hours ago, vasee said:

மன்னிக்கவும் எனது தவறு, நீங்கள் கூறுவது போல நடந்திருந்தால் உக்கிரேன் மிக கேவலமாக நடந்துள்ளது.

🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

🙆‍♂️

ஐயா…. விளங்க நினைப்பவரே…. 😂
துருக்கியில் நடந்த சம்பவங்கள் இங்கு, சுத்தத் தமிழிலும்….
ஈஸ்ட்மென் கலரிலும், அழகிய வண்ண நிறத்தில் காணொளியாக இருக்கும் போது…
உக்ரைனுக்கு முரட்டு முட்டு கொடுக்க சொல்வது அதிகமாக தெரியவில்லையா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

🙆‍♂️

நானும் என்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

கனவா  என?☺️

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்  நாங்களும் இப்படி சிங்கக்கொடியை இழுத்து பறிச்சி இருக்கிறம், அவங்களும் புலிக்கொடியை பிடுங்கி வீசி இருக்காங்கள்.
யுத்தம் நடக்கும் நாட்டு மக்களுக்கிடையில் இதெல்லாம் நடக்கும். சும்மா கண்ணீர் விட்டு, பந்தலிலே பாவக்கா ரக ஒப்பாரி வைக்க கூடாது.    

மேலுள்ள செய்தியைத் தவறாக வாசித்ததால் வேறொரு வீடியோவுடன் எனது பதிவை இட்டபின் தவறென்று தெரிந்து நீக்கிவிட்டேன். அதற்குள் தமிழ்சிறி மேற்கோள் காட்டி எழுதிய பதிவையும் நீக்கியுள்ளேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:

இலங்கை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்  நாங்களும் இப்படி சிங்கக்கொடியை இழுத்து பறிச்சி இருக்கிறம், அவங்களும் புலிக்கொடியை பிடுங்கி வீசி இருக்காங்கள்.
யுத்தம் நடக்கும் நாட்டு மக்களுக்கிடையில் இதெல்லாம் நடக்கும். சும்மா கண்ணீர் விட்டு, பந்தலிலே பாவக்கா ரக ஒப்பாரி வைக்க கூடாது.    

உண்மை  தான்

இவை  நடந்திருக்கின்றன

ஆனால்  தேவையற்ற  இடங்களில்  ஒரு  நாட்டின்  தேசியக்கொடியை  பிடித்தலும் தவறு

பிடுங்கி  வீசுவதும் தவறு..

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கொடியை பறித்த ரஷ்ய பிரதிநிதி – ஆக்ரோஷமாக தாக்கிய உக்ரைன் எம்பி – வைரலாகும் வீடியோ!

உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷ்ய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உட்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய பயங்கரவாதமும் பாசிசமும் வெகுவிரைவில் அடக்கப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாலி said:

ரஷ்ய பயங்கரவாதமும் பாசிசமும் வெகுவிரைவில் அடக்கப்படவேண்டும்!

ஒரு வருசத்துக்கு மேல் நடந்து வரும் இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகள் தொகை ?????. காயமடைந்தவர்கள் சுமார் ??,000, அகதி ஆகி நாட்டை விட்டு வெளியேறியோர் 8.1 மில்லியன் (விட அதிகம்). இதற்கெல்லாம் களங்காத இதயங்கள்; கொடியை தூக்கி காட்டிய பிரச்சினையில் இரண்டு பேர் தள்ளு முள்ளுபட வெகுண்டெழுந்து குரல் கொடுப்பது சற்றே வேடிக்கையாய் உள்ளது. 🤔 

பி.கு 
ஒவொரு இணையதளமும் இறந்தவர்கள் குறித்த வித்தியாசமான தகவல்களை வழங்கி உள்ளன 

The FSB's reported calculation of almost 110,000 casualties by February is still far lower than numbers this week in previously leaked US documents, which estimated Russian losses at between 189,500 and 223,000 casualties, with 35,500-43,000 men killed in action. 

https://www.bbc.com/news/world-europe-65260672 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நானும் என்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

கனவா  என?☺️

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அழிவுக்கார  ரஷ்யா புடின் மீதான வெறித்தனமான ஆதரவு என்பது  இப்படிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

கொடியைப் பிடித்தது உக்ரேன்  

கொடியைப் பறித்தது ரஸ்யா

பறித்தவரைத் தள்ளி அடித்தது உக்ரேன். 

இறுதியில், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவது ரஸ்ய அமைச்சர்...🤣

மேற்குலக ஊடகங்களை மட்டும் தொடர்ந்து படிதது, கேட்டு வந்தால் இப்படித்தான் எல்லாவற்றையும் நேரெதிராக யோசிக்கத் தோன்றும். 

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

🙆‍♂️

7 hours ago, விசுகு said:

நானும் என்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

கனவா  என?☺️

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அழிவுக்கார  ரஷ்யா புடின் மீதான வெறித்தனமான ஆதரவு என்பது  இப்படிதான்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, vasee said:

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

இதைவிட அழகாக விளக்க முடியாது😃😃

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அ

சொத்த புத்தியின்றி பல காலம் மயங்கி இருந்திருக்கின்றாரென்று வெளிப்படையாக சொல்கின்றீர்கள்🤔

8 hours ago, இணையவன் said:

மேலுள்ள செய்தியைத் தவறாக வாசித்ததால் வேறொரு வீடியோவுடன் எனது பதிவை இட்டபின் தவறென்று தெரிந்து நீக்கிவிட்டேன். அதற்குள் தமிழ்சிறி மேற்கோள் காட்டி எழுதிய பதிவையும் நீக்கியுள்ளேன். நன்றி.

இனிமேல் நீங்களும் நுனிப்புல் மேய வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

மன்னிக்கவும் வசி.

உங்கள் இரண்டாம் பதிவைப் பார்த்தபின்னர் எனது பதிவை நீக்க முயற்சித்தேன். முடியவில்லை. நான் அலைபேசியைப் பாவிப்பதால் இந்தப் பிரச்சனை இருக்குமோ தெரியாது. 

நிர்வாகம்; முடிந்தால் எனது முதலாவது பதிவை நீக்கிவிடவும். 

நன்றி. 

ஆனால் விளங்க நினைப்பவரது பதிவு 😤

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

நம்பத்தானே வேண்டும் ஏனெனில் நீங்கள் ஆங்கிலத்தில் அல்லவா விளக்கம் தந்துள்ளீர்கள் 😷

9 hours ago, விளங்க நினைப்பவன் said:

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அழிவுக்கார  ரஷ்யா புடின் மீதான வெறித்தனமான ஆதரவு என்பது  இப்படிதான்.

அனுபவம் பாடங்களை தரும்

பாடங்கள் முதிர்ச்சியை தரும் 

அதனை ஏற்று நடக்க சுயபரிசோதனை அவசியம் 

அதனால் தான் வரலாறே வழி காட்டி என்றார் தலைவர். நன்றி 

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

சொத்த புத்தியின்றி பல காலம் மயங்கி இருந்திருக்கின்றாரென்று வெளிப்படையாக சொல்கின்றீர்கள்🤔

சித்தாந்த மயக்கத்தில் இருந்து அவர் விழிப்புற்று மற்ற தமிழர்களையும் விழிப்படைய வைக்கின்றார் 👌
இலவசமாக இலங்கையில் தமிழில் வெளியிடபட்ட ரஷ்ய சீன புத்தகங்களால் மூளை களுவபட்ட தமிழர்களுக்கு செய்யும் பெரும் உதவி இது. ஆனால் சிலர் தாங்கள் வழிப்புற்று தங்களுக்கு மட்டும் சிறந்த வாழ்கை பாதுகாப்பான இடத்தில் அமைத்து என்யோய் பண்ணி கொண்டு மற்றவர்களுக்கு நரகத்திற்கு வழிகாட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா  எதை இணைத்து பின்பு நீக்கினார் என்று தெரியவில்லை. இந்த தள்ளுபடிகள்,  அடிதடிகளை நானும் வெறுக்கிறேன். உக்ரேன் எம்பி தனது நாட்டு கொடியை கையில் வைத்திருந்தை பொறுக்க முடியாமல் அதை வந்து பறித்த ரஷ்ய பிரதிநிதியின் மோசமான ஆக்கிமிப்பு சிந்தனை,புரின் சிந்தனை ஏற்று கொள்ளவே முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சித்தாந்த மயக்கத்தில் இருந்து அவர் விழிப்புற்று மற்ற தமிழர்களையும் விழிப்படைய வைக்கின்றார் 👌
 
சரியாக சொன்னீர்கள், தொடர்க உங்கள் சேவை, உண்மைகளை புட்டு புட்டு வைக்கின்றீர்கள் 😃😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.