Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சின்.. சிறந்த பாண் தயாரிப்புக்காக, பிரெஞ்சு அரசின் சிறப்பு விருதை வென்ற ஈழத்தமிழன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image

பிரான்சின்.. சிறந்த பாண் தயாரிப்புக்காக, 
பிரெஞ்சு அரசின் சிறப்பு விருதை வென்றுள்ளார் ஈழத்தமிழன் தர்சன். 
அதோடு எதிர் வரும் ஓராண்டிற்கு அரச மாளிகைக்கு 
பாண் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளார். 
வாழ்த்துகள் தமிழா.

https://twitter.com/kirubaganesan3/status/1656558741058191360/photo/1

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்  தர்சன்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தர்சன்......!   🌹

பரிஸின் சிறந்த பாண் தயாரிப்பாளர் என்று வர வேண்டும்.

வாழ்த்துகள் தர்சன்.

  • கருத்துக்கள உறவுகள்

தர்ஷனுக்கு எனது வாத்துக்கள்🌹

  • கருத்துக்கள உறவுகள்

இது தானா பிரான்ஸ் பாண்🙄🙄 @விசுகு @suvy

வாழ்த்துக்கள் தர்சன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது தானா பிரான்ஸ் பாண்🙄🙄 @விசுகு @suvy

வாழ்த்துக்கள் தர்சன் 

Baguette Magique selber backen – Grundrezept

தனிக்காட்டு ராஜா... இந்த Baguette எனும்  பாணின் வாசனையும், 
மொறுமொறுப்பும்...ஆட்களை மயக்கும். 
ஆசை தீர.... எவ்வளவும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

எங்கள்... கறி, பருப்பு, குழம்பு, சம்பல் போன்றவற்றுடனும்,
ஜாம், சீஸ், வூஸ்ற்  போன்றவற்றுடனும் தோதாக வரக்  கூடிய...     
ஒரு சுவை இந்த Baguette பாணுக்கு  உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி அண்ண. 

  • கருத்துக்கள உறவுகள்

La France, Pays de Loire, Vendée, toutes sortes de pains, frnch flûte'''',''Baguette,  etc., dans une boulangerie à La Mothe Achard Photo Stock - Alamy

விதம் விதமான பலவகையான பாண்கள்  இருக்கின்றன தனி ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

தர்சனுக்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இந்த Baguette எனும்  பாணின் வாசனையும், 
மொறுமொறுப்பும்...ஆட்களை மயக்கும். 
ஆசை தீர.... எவ்வளவும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

எங்கள்... கறி, பருப்பு, குழம்பு, சம்பல் போன்றவற்றுடனும்,
ஜாம், சீஸ், வூஸ்ற்  போன்றவற்றுடனும் தோதாக வரக்  கூடிய...     
ஒரு சுவை இந்த Baguette பாணுக்கு  உண்டு. 

தனது நாட்டு தயாரிப்புக்காகான அரசின் விருதை பெற்றிருக்கிறார் சிறப்பு.
சிறி அண்ணா நீங்கள் சொன்னது சரி . ஆனா இந்த பிரான்ஸ் பாணை சம்பல் பருப்பு  குழம்புடன் நான் சாப்பிட்டு பார்க்கவில்லை. இலங்கை பாண் சம்பல் பருப்பு  குழம்புடன் சாப்பிட்டு இருக்கிறேன். நன்றாக இருந்தது  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் தர்சன்.
இப்படியான போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது மிக மிக சிரமமான காரியம்.
அதுவும் பிரான்ஸ் நாட்டில் மிக கடினம். பிரான்ஸ் நாட்டவர் உணவு ,சுவையில் நுண்ணியமானவர்கள். அவர்களின் மொழி அழகைப்போல் உணவிலும் அதிக கவனம் செலுத்துவார்களாம்.
வாழ்த்துகள் :handshake:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

தனது நாட்டு தயாரிப்புக்காகான அரசின் விருதை பெற்றிருக்கிறார் சிறப்பு.
சிறி அண்ணா நீங்கள் சொன்னது சரி . ஆனா இந்த பிரான்ஸ் பாணை சம்பல் பருப்பு  குழம்புடன் நான் சாப்பிட்டு பார்க்கவில்லை. இலங்கை பாண் சம்பல் பருப்பு  குழம்புடன் சாப்பிட்டு இருக்கிறேன். நன்றாக இருந்தது  

விளங்க நினைப்பவன், 
அடுத்த முறை எமது  உணவான.. சம்பல்,  குழம்பு, கறிவகை ஏதாவது ஒன்றுடன் தொட்டுக்
கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். ஆகா… சொல்லி வேலையில்லை, வேறை லெவல். 😂🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தர்சன். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

La France, Pays de Loire, Vendée, toutes sortes de pains, frnch flûte'''',''Baguette,  etc., dans une boulangerie à La Mothe Achard Photo Stock - Alamy

விதம் விதமான பலவகையான பாண்கள்  இருக்கின்றன தனி ......!  👍

ஆஹா இத்தனை வகை பாண் ஐயிற்றமா 🤗🤗

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2023 at 18:30, தமிழ் சிறி said:

Baguette Magique selber backen – Grundrezept

தனிக்காட்டு ராஜா... இந்த Baguette எனும்  பாணின் வாசனையும், 
மொறுமொறுப்பும்...ஆட்களை மயக்கும். 
ஆசை தீர.... எவ்வளவும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

எங்கள்... கறி, பருப்பு, குழம்பு, சம்பல் போன்றவற்றுடனும்,
ஜாம், சீஸ், வூஸ்ற்  போன்றவற்றுடனும் தோதாக வரக்  கூடிய...     
ஒரு சுவை இந்த Baguette பாணுக்கு  உண்டு. 

நன்றி சிறி

நான்  எழுத  வேண்டியதை அப்படியே அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்

18 hours ago, குமாரசாமி said:

வாழ்த்துகள் தர்சன்.
இப்படியான போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது மிக மிக சிரமமான காரியம்.
அதுவும் பிரான்ஸ் நாட்டில் மிக கடினம். பிரான்ஸ் நாட்டவர் உணவு ,சுவையில் நுண்ணியமானவர்கள். அவர்களின் மொழி அழகைப்போல் உணவிலும் அதிக கவனம் செலுத்துவார்களாம்.
வாழ்த்துகள் :handshake:

அதே..

எனக்கு  இன்னும் நம்பமுடியவில்லை

நன்றி அண்ணா

அவர்களுடைய தேசத்தில், அவர்களுடைய பாரம்பரிய உணவை தயாரித்தது, அதில் தேர்ச்சி பெற்று முதலிடமாகவும் வந்தது  அந்த தேசத்தில் குடியேறிய ஒரு தமிழன். நண்பர்களை கேட்டபோது சொன்னார்கள் பானையும் பிரஞ்சுக்காரங்களையும் பிரிக்கமுடியாதென.... அவ்வளவு முக்கியத்துவமானதாம் அந்தப் பான்.

எவ்வளவு பெருமையான விடயம்.

கல்வி கலைகளிலில் மட்டுமல்ல சாதனை தமிழனது. நாளை வானிலும் நிகழும். காத்திருப்போம் வாழ்த்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2023 at 17:16, தனிக்காட்டு ராஜா said:

இது தானா பிரான்ஸ் பாண்🙄🙄 @விசுகு @suvy

வாழ்த்துக்கள் தர்சன் 

பாஸ் இதுக்கெல்லாம் இலங்கையில் ஏங்கக் கூடாது. எல்லாமே இப்போ அங்கு விற்பனைக்கிருக்குது.

ஐரோப்பிய நாடுகளில் இல்லாத நல்ல பொருட்களும் அங்குண்டு. குறிப்பாக மலேசிய.. அவுஸி பொருட்களும் உண்டு.

ஐரோப்பாவை விட அங்கு நல்லா செய்கிறார்கள். அதுவும் சம்பலோடு சாப்பிட ருசி இருக்கே.. தனி. 

https://delifrance.lk/

No photo description available.

https://www.onegalleface.com/mall-overview/

கொழும்பில் இங்கு உள்ள பல்பொருள் அங்காடியிலும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

பாண் இலங்கையில் காலை தேசிய உணவு.

காரணம் பிரிட்டிஸ் காலத்துக்கு முன்னான 300 வருட ஜரோப்பிய காலணித்துவம்.

இந்தியாவில் இது பிரபலமானதல்ல.

ஆகவே அப்படிப் பட்ட நாட்டில் இருந்து வந்தவர் பாண் சிறப்பாக போடுவதில் வியப்பில்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

பாண் இலங்கையில் காலை தேசிய உணவு.

காரணம் பிரிட்டிஸ் காலத்துக்கு முன்னான 300 வருட ஜரோப்பிய காலணித்துவம்.

இந்தியாவில் இது பிரபலமானதல்ல.

ஆகவே அப்படிப் பட்ட நாட்டில் இருந்து வந்தவர் பாண் சிறப்பாக போடுவதில் வியப்பில்லையே!!

நீங்கள் சொல்வது யதார்த்தம் தான்.

மேலும் இலங்கை பிஸ்கட்டைப் போல உருசி உள்ள பிஸ்கட்டை இங்கிலாந்தில் மட்டுமல்ல... பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கூட சாப்பிட முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

விளங்க நினைப்பவன், 
அடுத்த முறை எமது  உணவான.. சம்பல்,  குழம்பு, கறிவகை ஏதாவது ஒன்றுடன் தொட்டுக்
கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். ஆகா… சொல்லி வேலையில்லை,

அங்கே நின்ற போது தங்கும்விடுதி காலை உணவுடன் சேர்த்து புக் பண்ணியது. இந்த பாணும் பட்டர், யாம்,  சீஸ், அவர்கள் பாணியிலான முட்டை பொரியல் (Scrambled Eggs) தந்தவர்கள்.

56 minutes ago, nedukkalapoovan said:

ஐரோப்பிய நாடுகளில் இல்லாத நல்ல பொருட்களும் அங்குண்டு. குறிப்பாக மலேசிய.. அவுஸி பொருட்களும் உண்டு.

ஐரோப்பாவை விட அங்கு நல்லா செய்கிறார்கள். அதுவும் சம்பலோடு சாப்பிட ருசி இருக்கே.. தனி. 

ஓம் உண்மை தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

மேலும் இலங்கை பிஸ்கட்டைப் போல உருசி உள்ள பிஸ்கட்டை இங்கிலாந்தில் மட்டுமல்ல... பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கூட சாப்பிட முடியவில்லை. 

வியாபார நோக்கங்களுக்காக அந்தந்த நாட்டு சுவைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.

பிரெஞ்சுக் காரர்கள் எந்த உணவை உண்டாலும் அருகில் ஒரு துண்டு பாண் இருக்கும். இடையிடையே பாண் துண்டுகளையும் சுவைப்பார்கள். சாப்பிட்டு முடியும்போது இறுதியாக உள்ள பாண்துண்டால் கோப்பையை ஒற்றி வழித்துத் துடைத்து ஒன்றும் மீதம் இல்லாதவாறு சாப்பிட்டு விடுவார்கள். 😀

5 - 6 வருடங்களுக்கு முன்னர் அடையார் கடை எனப்படும் இரவில் அதிக நேரம் திறந்திருக்கும் சிறு கடைகளை எம்மவர்கள் அல்ஜீரியர்களிடமிருந்து வாங்க வாங்கத் தொடங்கினார்கள். இன்று பரிசையும் பரிசைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பல நூற்றுக் கணக்கான கடைகளில் ஏறத்தாள முழுவதையும் வாங்கிவிட்டனர். 

தற்போது பாண் கடைகளைக் குறிவைத்து வருகின்றனர். இது சுலபமானது அல்ல. இங்கு வேலை செய்பவர்களில் சிலருக்காவது டிப்ளோமா தகுதி இருக்க வேண்டும். மற்றும் ஏராளமான தரக் கட்டுப்பாடுகளும் உண்டு. தமிழர்களின் இவ்வாறான முன்னேற்றம் பெருமைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் சொல்வது யதார்த்தம் தான்.

மேலும் இலங்கை பிஸ்கட்டைப் போல உருசி உள்ள பிஸ்கட்டை இங்கிலாந்தில் மட்டுமல்ல... பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கூட சாப்பிட முடியவில்லை. 

Mailiban Cream Cracker biscuit இப்ப அஸ்டாவில் கிடைக்கிறது.

இந்தியா, மத்திய கிழக்கிலும் கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

5 - 6 வருடங்களுக்கு முன்னர் அடையார் கடை எனப்படும் இரவில் அதிக நேரம் திறந்திருக்கும் சிறு கடைகளை எம்மவர்கள் அல்ஜீரியர்களிடமிருந்து வாங்க வாங்கத் தொடங்கினார்கள். இன்று பரிசையும் பரிசைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பல நூற்றுக் கணக்கான கடைகளில் ஏறத்தாள முழுவதையும் வாங்கிவிட்டனர். 

தற்போது பாண் கடைகளைக் குறிவைத்து வருகின்றனர். இது சுலபமானது அல்ல. இங்கு வேலை செய்பவர்களில் சிலருக்காவது டிப்ளோமா தகுதி இருக்க வேண்டும். மற்றும் ஏராளமான தரக் கட்டுப்பாடுகளும் உண்டு. தமிழர்களின் இவ்வாறான முன்னேற்றம் பெருமைக்குரியது.

நல்லதுதான் இணையவன், ஆனால் எனது பார்வை வித்தியாசமானது.

பிரான்ஸ் மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் எங்கும், இதே கதை தான்.

நம்மவர்களுக்கு பொருளாதார புரிதல் இல்லை. பெரிய சூப்பர் மார்கட் எல்லாம் ஒன்லைன் வியாபாரத்தில் கவனம் செலுத்துகின்றன.

கடை ஒன்றை எடுக்க, பெரு ஆரம்ப முதலீடு தேவை. அதுவே இணைய வியாபாரமாயின் வீட்டில் இருந்தே செய்யலாம்.

தமிழ் படங்களும், விஜய் சூப்பர் சிங்கரும், வளரும் புதிய தொழில் நுட்ப அறிவை தராது.

புதிய தொழில்நுட்பம், குறித்து தேடி படித்துக் கொள்ளும் வரை, நடப்பதை புரிந்த வேறு இனத்தவர், நைசாக கை கழுவி விடும் கடைகளை எடுத்து புளங்காகிதம் அடைந்தாலும், விரைவில் கை கடிக்கும்.

ஒரு தொழில் தொடங்கு முன் கணக்காளர் ஆலோசணை கேட்பதில்லை. 18 மாதத்தின் பின் வரிக் கணக்கு சமர்ப்பிக்க கணக்காளரிடம் ஓடும் போதே, போஸ்மோட்டம் நடக்கும்.

அப்போது தான் வியாபார நிலை தெரியவரும். அதுவரை கடை நடாத்தும் புளங்காகிதம் தொடரும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.