Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மயிர்கொட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-F3-CF914-B4-FF-4-E66-B84-C-17-BA3-AD33

முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும்

அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள்

அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது பிறன்மனை நோக்காதே என்று மணமகனுக்கு எச்சரித்தது.

இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும் என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்து விட்டிருக்கிறார்கள். இதை உணர்த்துவதற்காகத்தான் முள் முருங்கையை அன்று மணப் பந்தலில் மணப்பெண்ணின் தந்தைமார்கள் நட்டு வைத்தார்கள்.

முள்முருங்கை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது  என்னவோ மயிர்கொட்டி (மசுக்குட்டி)தான். இளவேனிற் காலத்தில் முள்முருங்கையை  மயிர்கொட்டிகள் கூட்டம் கூட்டமாக பெரிதாக ஆக்கிரமித்திருக்கும். வெயில் ஏற ஏற மரத்தின்நிழற்பகுதிகளைத்தேடி அவை ஊர்வலமாக போக ஆரம்பிக்கும். எந்த எந்தக் கிளைகளில் அவை கூடி நிற்கின்றனவோ அவற்றிற்கு கீழேநிலத்தில் காவோலைகளைப் போட்டுக் கொளுத்தி விடுவார்கள். வெப்பம் தாளாமல் மரத்தின் மேலே இருந்து ஒவ்வொன்றாகநெருப்பிலே விழுந்து பொசுங்கி சுருண்டு போய்  செத்துப் போயிருக்கும். அந்த நிலையில் அவற்றைப் பார்க்கும் போது சின்னஇறால்களை எண்ணெய்யில் பொரித்த காட்சி எனக்குள்  வந்து நிற்கும்.

இன்றைய காலநிலை மாற்றத்தால் யேர்மனியிலும் இந்த மயிர் கொட்டிகள் மரங்களில் ஊர்வலம் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த மயிர்கொட்டிகள் அவர்களுக்குப் புதிது. 2019 அளவில் மயிர்க் கொட்டிகள் பற்றிய முதல் எச்சரிக்கையை யேர்மனிய சுகாதாரத்துறையும்வனத்துறையும் கூட்டாக விடுத்திருந்தன. பின்னாளில் வந்த கொரோனா அலையில் மயிர்க் கொட்டிகளைப் பற்றி அதிகமாகப்பேசப்படவில்லை. இப்பொழுது கொரோனாக் கெடுபிடிகள் முற்றாகத் தளர்ந்த நிலை. இளவேனிற் காலம் ஆரம்பித்த நேரம் மீண்டும்மயிர்கொட்டிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்

ஒரு மயிர்க் கொட்டியில் ஏறக்குறைய 600,000 எரிச்சலூட்டுகிற ஒருவகை நச்சுத் தன்மை  கொண்ட மயிர்கள் இருக்கின்றன.  சிறிதாக வீசும் காற்றே மயிர்க் கொட்டிகளின் மெல்லிய மயிர்களை  நூறு மீட்டர் வரை கொண்டு செல்லக் கூடியது. மயிர் கொட்டிகளின் மயிர்கள் முகம், கைகள் மற்றும் கால்கள் போன்ற ஆடைகளால் மறைக்கப்படாத உடல் பகுதிகளையே அதிகம்பாதிக்கிறது நச்சு முடிகள் உள்ளிழுக்கப்பட்டால், அவை தொண்டை மற்றும் காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவதுடன்  மூச்சுத்திணறலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மயிர்க் கொட்டிகளின் பழைய கூடுகளால் வளர்ப்பு நாய்கள் உட்பட   காட்டுப்பன்றி, மான், நரி உள்ளிட்ட வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன என்று அறிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய யேர்மனியச் செய்திகளைக் கேட்கையில், அன்று  இளவேனிற் காலைகளில் பாடசாலைக்கு சைக்கிளில் ஒழுங்கையூடாகப்பயணிக்கும் போது இலைகளில் இருந்து நூல் விட்டு தொங்கிக் கொண்டிருந்த மயிர் க் கொட்டிகள் ஊடாக வளைந்து வளைந்துசைக்கிள் ஓட்டிய சாமர்த்தியங்கள் நினைவில் வந்து மனது இனிக்கிறது.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

2019 அளவில் மயிர்க் கொட்டிகள் பற்றிய முதல் எச்சரிக்கையை யேர்மனிய சுகாதாரத்துறையும்வனத்துறையும் கூட்டாக விடுத்திருந்தன. பின்னாளில் வந்த கொரோனாஅலையில் மயிர்க் கொட்டிகளைப் பற்றி அதிகமாகப்பேசப்படவில்லை. இப்பொழுது கொரோனாக் கெடுபிடிகள் முற்றாகத் தளர்ந்த நிலை. இளவேனிற் காலம் ஆரம்பித்த நேரம் மீண்டும்மயிர்கொட்டிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்

ஒரு மயிர்க் கொட்டியில் ஏறக்குறைய 600,000 எரிச்சலூட்டுகிற ஒருவகை நச்சுத் தன்மை  கொண்ட மயிர்கள் இருக்கின்றன.  சிறிதாக வீசும் காற்றே மயிர்க் கொட்டிகளின் மெல்லிய மயிர்களை  நூறு மீட்டர் வரை கொண்டு செல்லக் கூடியது. மயிர் கொட்டிகளின் மயிர்கள் முகம், கைகள் மற்றும் கால்கள் போன்ற ஆடைகளால் மறைக்கப்படாத உடல் பகுதிகளையே அதிகம்பாதிக்கிறது நச்சு முடிகள் உள்ளிழுக்கப்பட்டால், அவை தொண்டை மற்றும் காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவதுடன்  மூச்சுத்திணறலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

கனடாவில் எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டில்..
கடந்த நான்கு மாதங்களாக உடம்பு எல்லாம் கடிக்கின்றதாம் என்று... 
மிகுந்த சிரமப் படுகின்றார். அவரால் என்ன வென்று கண்டு பிடிக்க முடியவில்லை.
வீட்டில் இருந்த பெறுமதியான  சோபா, அலுமாரி போன்ற தளபாடங்கள்  
எல்லாவற்றையும் எறிந்து விட்டார்கள். அப்படி இருந்தும் கடிக்கின்றதாம்.

அந்தக் கால கட்டத்தில்  வீட்டிற்கு உள்ளே உள்ள பூச் செடிகளுக்கு, 
கடையில்  புது மண் வாங்கி வந்து மாற்றியவராம். சிலவேளை... அந்த  மண்ணில் இருந்து
கண்ணுக்கு தெரியாத  ஏதாவது உயிரினம் வந்திருக்கலாமோ என்று சந்தேகிக்கின்றார்.

சம்பந்தப் பட்ட துறையினரை... அணுகிய போது, அவர்கள் கிழமைக்கு 
ஒரு முறை வந்து மருந்து அடித்து விட்டு.. 200 டொலரும் வாங்கிச் செல்கிறார்களாம். 
ஆனால்... ஒரு பலனும் இல்லை என்று வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கின்றார்.
சிலவேளை... நீங்கள் சொன்ன மாதிரி, மசுக்குட்டி  பிரச்சினையோ தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் சில வருடங்களுக்கு முன்னர் பேசுபொருளாக இருந்தது.  வெயிலுக்கு மரங்களின் கீழ் ஒதுங்க நினைத்தாலே பழைய ஞாபங்கள் வந்து போகும்... அதிலும் அந்த கம்பிளி மசுக்குட்டி இருக்கே ... நசுக்கியும் கொல்ல முடியாது ... இறப்பர் போல நசுங்கி திரும்பவும் உயிர் பெற்று ஊரும்.

நீங்கள் கூறியது போல காவோலை போட்டு எரித்த பின்னர் பார்த்தால் அசல் இறால் பொரியல் தான் :)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

இன்றைய காலநிலை மாற்றத்தால் யேர்மனியிலும் இந்த மயிர் கொட்டிகள் மரங்களில் ஊர்வலம் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த மயிர்கொட்டிகள் அவர்களுக்குப் புதிது. 2019 அளவில் மயிர்க் கொட்டிகள் பற்றிய முதல் எச்சரிக்கையை யேர்மனிய சுகாதாரத்துறையும்வனத்துறையும் கூட்டாக விடுத்திருந்தன. பின்னாளில் வந்த கொரோனா அலையில் மயிர்க் கொட்டிகளைப் பற்றி அதிகமாகப்பேசப்படவில்லை. இப்பொழுது கொரோனாக் கெடுபிடிகள் முற்றாகத் தளர்ந்த நிலை. இளவேனிற் காலம் ஆரம்பித்த நேரம் மீண்டும்மயிர்கொட்டிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்

தங்கள் நேரத்திற்கும் தகவலுக்கும் நன்றி. பயனுள்ள தகவல். வெய்யிலின் வேகத்தைப் பார்த்துக் கடந்த ஆண்டு ஒரு இளைஞர் எதிர்காலத்தில் பாம்புகளும் வரலாமெனக் கூறினார். யாரறிவார்.

Edited by nochchi
பிழைதிருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

1-F3-CF914-B4-FF-4-E66-B84-C-17-BA3-AD33

முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும்

அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள்

அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது பிறன்மனை நோக்காதே என்று மணமகனுக்கு எச்சரித்தது.

இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும் என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்து விட்டிருக்கிறார்கள். இதை உணர்த்துவதற்காகத்தான் முள் முருங்கையை அன்று மணப் பந்தலில் மணப்பெண்ணின் தந்தைமார்கள் நட்டு வைத்தார்கள்.

முள்முருங்கை என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது  என்னவோ மயிர்கொட்டி (மசுக்குட்டி)தான். இளவேனிற் காலத்தில் முள்முருங்கையை  மயிர்கொட்டிகள் கூட்டம் கூட்டமாக பெரிதாக ஆக்கிரமித்திருக்கும். வெயில் ஏற ஏற மரத்தின்நிழற்பகுதிகளைத்தேடி அவை ஊர்வலமாக போக ஆரம்பிக்கும். எந்த எந்தக் கிளைகளில் அவை கூடி நிற்கின்றனவோ அவற்றிற்கு கீழேநிலத்தில் காவோலைகளைப் போட்டுக் கொளுத்தி விடுவார்கள். வெப்பம் தாளாமல் மரத்தின் மேலே இருந்து ஒவ்வொன்றாகநெருப்பிலே விழுந்து பொசுங்கி சுருண்டு போய்  செத்துப் போயிருக்கும். அந்த நிலையில் அவற்றைப் பார்க்கும் போது சின்னஇறால்களை எண்ணெய்யில் பொரித்த காட்சி எனக்குள்  வந்து நிற்கும்.

இன்றைய காலநிலை மாற்றத்தால் யேர்மனியிலும் இந்த மயிர் கொட்டிகள் மரங்களில் ஊர்வலம் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த மயிர்கொட்டிகள் அவர்களுக்குப் புதிது. 2019 அளவில் மயிர்க் கொட்டிகள் பற்றிய முதல் எச்சரிக்கையை யேர்மனிய சுகாதாரத்துறையும்வனத்துறையும் கூட்டாக விடுத்திருந்தன. பின்னாளில் வந்த கொரோனா அலையில் மயிர்க் கொட்டிகளைப் பற்றி அதிகமாகப்பேசப்படவில்லை. இப்பொழுது கொரோனாக் கெடுபிடிகள் முற்றாகத் தளர்ந்த நிலை. இளவேனிற் காலம் ஆரம்பித்த நேரம் மீண்டும்மயிர்கொட்டிகளைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்

ஒரு மயிர்க் கொட்டியில் ஏறக்குறைய 600,000 எரிச்சலூட்டுகிற ஒருவகை நச்சுத் தன்மை  கொண்ட மயிர்கள் இருக்கின்றன.  சிறிதாக வீசும் காற்றே மயிர்க் கொட்டிகளின் மெல்லிய மயிர்களை  நூறு மீட்டர் வரை கொண்டு செல்லக் கூடியது. மயிர் கொட்டிகளின் மயிர்கள் முகம், கைகள் மற்றும் கால்கள் போன்ற ஆடைகளால் மறைக்கப்படாத உடல் பகுதிகளையே அதிகம்பாதிக்கிறது நச்சு முடிகள் உள்ளிழுக்கப்பட்டால், அவை தொண்டை மற்றும் காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவதுடன்  மூச்சுத்திணறலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் மயிர்க் கொட்டிகளின் பழைய கூடுகளால் வளர்ப்பு நாய்கள் உட்பட   காட்டுப்பன்றி, மான், நரி உள்ளிட்ட வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன என்று அறிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய யேர்மனியச் செய்திகளைக் கேட்கையில், அன்று  இளவேனிற் காலைகளில் பாடசாலைக்கு சைக்கிளில் ஒழுங்கையூடாகப்பயணிக்கும் போது இலைகளில் இருந்து நூல் விட்டு தொங்கிக் கொண்டிருந்த மயிர் க் கொட்டிகள் ஊடாக வளைந்து வளைந்துசைக்கிள் ஓட்டிய சாமர்த்தியங்கள் நினைவில் வந்து மனது இனிக்கிறது.

முள்முருங்கையை விட, கறி முருங்கையில் தான் மயிர்க்கொட்டிப் பிரச்சினை அதிகம் இருப்பதாகக் கண்டிருக்கிறேன். பந்தம் கொழுத்தி எரிப்போம் ஊரில்.

உண்மையில், மயிர்க்கொட்டி பட்டாம்பூச்சி, moth எனப்படும் அந்துப் பூச்சி ஆகியவற்றின் குடம்பி (larva) நிலை. எனவே, இவற்றை அழிக்கும் போது பட்டாம்பூச்சிகள்யும், அந்துப் பூச்சிகளையும் அழிக்கிறோம். ஆனால், வாழ்விடங்களில் ஊடுருவினால் அகற்றுவதில் தவறில்லை.

மயிர்க்கொட்டியின் குடலை மட்டும் குறி வைத்துத் தாக்கும் பக்ரீரியாக்களை ஒரு மருந்தாக விற்கிறார்கள். வாங்கி, கூட்டமாக இருக்கும் மயிர்க்கொட்டிகள் மீது தெளித்து விட்டால், அவை சாப்பிடாமல் இருந்தே, நலிந்து அழிந்து போகும். இந்த பக்ரீரியா தேனீக்கள் போன்ற  பயன் தரும் பூச்சிகளைப் பாதிக்காதவை என்பதால் சூழலுக்குப் பாதகம் குறைவு.

எனக்குத் தெரிந்து கனடாவில். ஒன்ராரியோவில் இருக்கும் மயிர்க்கொட்டிகள் (மசுக்குட்டிகள்) சாதுவானவை. அதன் மயிர்கள் எம் உடலில் பட்டாலும் ஒன்றும் செய்வதில்லை. நானும் என் பிள்ளைகளும் அவற்றை எடுத்து கைகளில் ஊர விட்டு விளையாடுவதுண்டு. பிரவுண் நிறத்தில் புசு புசு என்று அழகாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாங்கிய காணியில் இரண்டு பெரிய புன்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றில் இலைகளை மூடி மயிர்கொட்டிகள்தான். ஆனாலும் வெட்ட மனமின்றி வீட்டிருக்கிறேன். அவை ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் அதிகம் வரும். லண்டனில் யூன், யூலை மாதம் காணப்படும் அதன்பின் இருக்காது.

52 minutes ago, nochchi said:

தங்கள் நேரத்திற்கும் தகவலுக்கும் நன்றி. பயனுள்ள தகவல். வெய்யிலின் வேகத்தைப் பார்த்துக் கடந்த ஆண்டு ஒரு இளைஞர் எதிர்காலத்தில் பாம்புகளும் வரலாமெனக் கூறினார். யாரறிவார்.

லண்டனில் முன்னர் அதிக பாம்பு இருந்ததாகவும் அதனாலேயே நரி போன்ற மரநாய் கொண்டுவந்ததாகவும் அதற்குப் பின் பாம்புகள் இல்லை என்றும் ஓரிடத்தில் வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மசுக்குட்டியுடனான அனுபவங்கள்சொல்லி மாளாதவை.......சில சமயங்களில் வீட்டுக்குள் படுக்கையிலும் வந்திருக்கும்.......எனது நண்பன் ஒருவனுக்கு பட்டப் பெயர் மசுக்குட்டி .....!  😂

நன்றி கவி.அருணாசலம்......!  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

மசுக்குட்டியுடனான அனுபவங்கள்சொல்லி மாளாதவை.......சில சமயங்களில் வீட்டுக்குள் படுக்கையிலும் வந்திருக்கும்.......எனது நண்பன் ஒருவனுக்கு பட்டப் பெயர் மசுக்குட்டி .....!  😂

நன்றி கவி.அருணாசலம்......!  

உங்களது நண்பருக்கு, அந்தப் பட்டம் வைக்க என்ன காரணம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

உங்களது நண்பருக்கு, அந்தப் பட்டம் வைக்க என்ன காரணம். 😎

நாங்கள் உறவினர்கள்+அயலவர்கள் சமவயதுடையவர்கள் ஆனாலும் அவரின் உண்மையான பெயரை யோசித்துப் பார்க்கிறேன் தெரியவில்லை, சிறுவயதில் இருந்தே அப்படித்தான் எல்லோரும் அழைத்துப் பழக்கம்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

மசுக்குட்டியுடனான அனுபவங்கள்சொல்லி மாளாதவை.......சில சமயங்களில் வீட்டுக்குள் படுக்கையிலும் வந்திருக்கும்.......எனது நண்பன் ஒருவனுக்கு பட்டப் பெயர் மசுக்குட்டி .....!  😂

நன்றி கவி.அருணாசலம்......!  

ஓம் எங்கட நண்பர் ஒருவருக்கும் மசுக்குட்டி என பட்டம், அவர் ஆள் கொஞ்சம் வளர்த்தி குறைவு.
ஏஎல் ரியூசனுக்கு போயிற்று வீடு திரும்பும்போது சேர்ட்டுக்குள்ள முதுகில கடிக்க நான் தேய்க்க கடி தாங்க முடியவில்லை. வீடு வந்து சேர்ட், பனியனை கழட்டினா சின்ன மசுக்குட்டி நசிஞ்சு கிடக்குது. நடு முதுகு வீங்கிக் கிடக்குது. கிளுவம் இலையை தேச்சு, எண்ணையும் போட்டு தேய்க்க கடி குறைஞ்சிற்றுது. வீக்கம் வத்த 3/4 நாளானது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

நாங்கள் உறவினர்கள்+அயலவர்கள் சமவயதுடையவர்கள் ஆனாலும் அவரின் உண்மையான பெயரை யோசித்துப் பார்க்கிறேன் தெரியவில்லை, சிறுவயதில் இருந்தே அப்படித்தான் எல்லோரும் அழைத்துப் பழக்கம்........!  😂

3 minutes ago, ஏராளன் said:

ஓம் எங்கட நண்பர் ஒருவருக்கும் மசுக்குட்டி என பட்டம், அவர் ஆள் கொஞ்சம் வளர்த்தி குறைவு.
ஏஎல் ரியூசனுக்கு போயிற்று வீடு திரும்பும்போது சேர்ட்டுக்குள்ள முதுகில கடிக்க நான் தேய்க்க கடி தாங்க முடியவில்லை. வீடு வந்து சேர்ட், பனியனை கழட்டினா சின்ன மசுக்குட்டி நசிஞ்சு கிடக்குது. நடு முதுகு வீங்கிக் கிடக்குது. கிளுவம் இலையை தேச்சு, எண்ணையும் போட்டு தேய்க்க கடி குறைஞ்சிற்றுது. வீக்கம் வத்த 3/4 நாளானது.

எனது ஒன்று விட்ட அண்ணர் ஒருவர் காலையில் கிணத்தடியில் குளித்து விட்டு,
கொடியில் இருந்த துவாயை எடுத்து துடைத்திருக்கிறார்.
அது நிறைய மசுக்குட்டிகள், காலை வெய்யில் படாமல் பதுங்கி இருந்ததுகள்…
ஆளின் உடம்பை பதம் பார்த்து விட்டுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும் என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்து விட்டிருக்கிறார்கள். இதை உணர்த்துவதற்காகத்தான் முள் முருங்கையை அன்று மணப் பந்தலில் மணப்பெண்ணின் தந்தைமார்கள் நட்டு வைத்தார்கள்.

கண்ணா வேறு ஏதோ உறுப்பு அல்லவா?
முள்முருங்கைக்கு யானைக்கால் வருத்தம் மாதிரி ஒரு வீக்க நோய் வந்ததால் யாழ்ப்பாணத்தில் முள்முருங்கை இல்லை. மக்கள் தமக்கு தொற்றிவிடும் என்ற பயத்தில் தறித்துவிட்டார்கள்.
கல்யாண முருங்கை தானே கன்னிக்காலாக நடுவது?

கறிமுருங்கையின் அடிப்பகுதியில் நிறைய மசுக்குட்டி படர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

முள்முருங்கையை விட, கறி முருங்கையில் தான் மயிர்க்கொட்டிப் பிரச்சினை அதிகம் இருப்பதாகக் கண்டிருக்கிறேன். பந்தம் கொழுத்தி எரிப்போம் ஊரில்.

உண்மைதான் Justin. அதனால்தான் என்னவோ எங்கள் வீட்டில் கறி முருங்கை வளர்க்கவில்லை. ஆனாலும் எப்படியோ எங்கள் வீட்டு முள் முருங்கையில் மயிரக்கொட்டிகள் குடியேறிவிட்டன.

9 hours ago, ஏராளன் said:

கறிமுருங்கையின் அடிப்பகுதியில் நிறைய மசுக்குட்டி படர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்.

கறி முருங்கையில் அதிகளவு மயிர்கொட்டிகள் இருந்தன என்பதால்,  முருங்கை இலை சுண்டலை நான் நீண்ட காலங்கள் தவிர்ததிருந்தேன்

13 hours ago, nochchi said:

வெய்யிலின் வேகத்தைப் பார்த்துக் கடந்த ஆண்டு ஒரு இளைஞர் எதிர்காலத்தில் பாம்புகளும் வரலாமெனக் கூறினார். யாரறிவார்.

nochchi, காகங்கள் வந்திருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

மசுக்குட்டி கறி முருங்கை வளர்ப்பிற்க்கு பொரும் பிரச்சனை.

12 hours ago, ஏராளன் said:

கண்ணா வேறு ஏதோ உறுப்பு அல்லவா?

அது என்ன என்டால் கவியின் இங்கிதம்.😄

அது ஒரு இளவேனிற் காலமாகத்தான் இருக்க வேண்டும். மரங்களில் புதிய இலைகள் அரும்பிக் கொண்டு இருந்தன. 
கொழும்பில் நான் இல் Access tower இல் இருந்த software company ஒன்றில் வேலை பார்த்துக்க கொண்டு இருந்த காலம்.

என்னுடன் டில்மினி எனும் அழகான சிங்கள இளம்பெண்ணும் வேலை செய்து கொண்டு இருந்தார். காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கொழும்பில் அறை எடுத்து தங்கி வேலை செய்து கொண்டு இருந்தார்.

கேட்பது தமிழ் ஈழம் என்றாலும் பார்ப்பது சிங்களப் பெண் எனும் ஒரு நல்ல பொலிசியை கடுமையாக நான் பின்பற்றிக் கொண்டு இருந்த நாட்கள் அவை.

டில்மினி பேரூந்தில் பயணித்து யூனியன் பிளேசில் இருந்த தரிப்பிடத்தில் இறங்கி அலுவலகத்துக்கு 10 நிமிடங்கள் நடந்து வரவேண்டும்.

அவள் நடந்து வரும் பொழுது, அவளுடன் சேர்ந்து Temple tree மரங்களில் பூத்து இருக்கும் வெண்ணிறப் பூக்களின் வாசனையும் அவளுடன் தவழ்ந்து வரும்.

இடையில் ஒரு மரம் நின்றது. என்ன மரம் என்று நினைவில்லை. நிறைய இலைகள் அரும்பிக் கொண்டு இருந்தன.

அவற்றுடன் மசுக்குட்டிகளும் தங்கள் Pupa எனும் ஒரு சிறு கூட்டில் இருந்து தரையை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்தன.

டில்மினி அவற்றைக் கவனிக்கவில்லை. மரத்தின் கீழாக நடந்து வந்து அலுவலகம் சேர்ந்தாள்.

அவள் ஆடை எங்கும் மசுக்குட்டி.

ஆடைக்குள்ளும் மசுக்குட்டி

அலுவலகம் வந்தவுடன் நான் அதைக் கவனித்து அவளுக்கு சொல்லி, உன் ஆடைக்குள்ளும் புகுந்து இருக்கும். உடனடியாக சட்டையை கழற்றி பார் என்று சொல்ல....

அவள் அடுத்த வினாடி சட்டையை கழற்ற முயன்று, பின் பெண்ணுக்கே உரிய நாணம் வந்து முகம் மேலும் சிவந்து

"சுட்டக்ணங்க்,,உயாகே இஸ்ரரா..,மம மகே ரெத்தி கலவன்ன உற்சாக கலா" (கொஞ்சம் விட்டால் நான் உனக்கு முன் உடுப்பை கழற்ற முயன்று இருப்பேன்" ... ) என்று சொல்லி விட்டு  rest room இற்கு ஓடிச் சென்று விட்டாள்

Edited by நிழலி
ஒரு சொல் இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ மசுக்குட்டி தானாக சட்டடையில் வந்திருக்கும் எப்பதில் பலத்த சந்தேகம் இருக்கு.😝

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அது ஒரு இளவேனிற் காலமாகத்தான் இருக்க வேண்டும். மரங்களில் புதிய இலைகள் அரும்பிக் கொண்டு இருந்தன. 
கொழும்பில் நான் இல் Access tower இல் இருந்த software company ஒன்றில் வேலை பார்த்துக்க கொண்டு இருந்த காலம்.

என்னுடன் டில்மினி எனும் அழகான சிங்கள இளம்பெண்ணும் வேலை செய்து கொண்டு இருந்தார். காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கொழும்பில் அறை எடுத்து தங்கி வேலை செய்து கொண்டு இருந்தார்.

கேட்பது தமிழ் ஈழம் என்றாலும் பார்ப்பது சிங்களப் பெண் எனும் ஒரு நல்ல பொலிசியை கடுமையாக நான் பின்பற்றிக் கொண்டு இருந்த நாட்கள் அவை.

டில்மினி பேரூந்தில் பயணித்து யூனியன் பிளேசில் இருந்த தரிப்பிடத்தில் இறங்கி அலுவலகத்துக்கு 10 நிமிடங்கள் நடந்து வரவேண்டும்.

அவள் நடந்து வரும் பொழுது, அவளுடன் சேர்ந்து Temple tree மரங்களில் பூத்து இருக்கும் வெண்ணிறப் பூக்களின் வாசனையும் அவளுடன் தவழ்ந்து வரும்.

இடையில் ஒரு மரம் நின்றது. என்ன மரம் என்று நினைவில்லை. நிறைய இலைகள் அரும்பிக் கொண்டு இருந்தன.

அவற்றுடன் மசுக்குட்டிகளும் தங்கள் Pupa எனும் ஒரு சிறு கூட்டில் இருந்து தரையை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்தன.

டில்மினி அவற்றைக் கவனிக்கவில்லை. மரத்தின் கீழாக நடந்து வந்து அலுவலகம் சேர்ந்தாள்.

அவள் ஆடை எங்கும் மசுக்குட்டி.

ஆடைக்குள்ளும் மசுக்குட்டி

அலுவலகம் வந்தவுடன் நான் அதைக் கவனித்து அவளுக்கு சொல்லி, உன் ஆடைக்குள்ளும் புகுந்து இருக்கும். உடனடியாக சட்டையை கழற்றி பார் என்று சொல்ல....

அவள் அடுத்த வினாடி சட்டையை கழற்ற முயன்று, பின் பெண்ணுக்கே உரிய நாணம் வந்து முகம் மேலும் சிவந்து

"சுட்டக்ணங்க்,,உயாகே இஸ்ரரா..,மம மகே ரெத்தி கலவன்ன உற்சாக கலா" (கொஞ்சம் விட்டால் நான் உனக்கு முன் உடுப்பை கழற்ற முயன்று இருப்பேன்" ... ) என்று சொல்லி விட்டு  இற்கு ஓடிச் சென்று விட்டாள்

அடப்பாவி

அவ்வளவும்  வீணா??

அண்ணனுக்கு  ஒரு  தொலைபேசி  போட்டிருக்கலாமே...?🤪

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

டில்மினி அவற்றைக் கவனிக்கவில்லை. மரத்தின் கீழாக நடந்து வந்து அலுவலகம் சேர்ந்தாள்.

அவள் ஆடை எங்கும் மசுக்குட்டி.

ஆடைக்குள்ளும் மசுக்குட்டி

அலுவலகம் வந்தவுடன் நான் அதைக் கவனித்து அவளுக்கு சொல்லி, உன் ஆடைக்குள்ளும் புகுந்து இருக்கும். உடனடியாக சட்டையை கழற்றி பார் என்று சொல்ல....

அவள் அடுத்த வினாடி சட்டையை கழற்ற முயன்று, பின் பெண்ணுக்கே உரிய நாணம் வந்து முகம் மேலும் சிவந்து

"சுட்டக்ணங்க்,,உயாகே இஸ்ரரா..,மம மகே ரெத்தி கலவன்ன உற்சாக கலா" (கொஞ்சம் விட்டால் நான் உனக்கு முன் உடுப்பை கழற்ற முயன்று இருப்பேன்" ... ) என்று சொல்லி விட்டு  இற்கு ஓடிச் சென்று விட்டாள்.

உள்ள போனால் கடிக்கத் தொடங்கி இருக்குமே?!
டில்மினியின் கதையும் நல்லாத் தான் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் புராணத்திலும் நான் இதுவரை படித்ததில்லை.......யானை மோட்சமடைந்திருக்கு, பாம்பு மோட்சமடைத்திருக்கு, முதலை மோட்சமடைந்திருக்கு ஏன் சிலந்தி கூட மோட்சமடைந்திருக்கு ஆனால் சில மசுக்குட்டிகள் மோட்சமடைந்தது  இங்குதான்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

உன் ஆடைக்குள்ளும் புகுந்து இருக்கும். உடனடியாக சட்டையை கழற்றி பார் என்று சொல்ல....

நல்லவேளை உங்கள் ஆடைக்குள் மசுக்குட்டி இல்லை.

உங்கள் அனுபவம் இனிதானது. அதைச் சொன்ன விதம் அழகு.

கண்ணதாசன் கவிதையில் இருந்து,  

“காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே….”

  • கருத்துக்கள உறவுகள்

மசுக்குட்டி என்றால் முருங்கைக்காய் ஆய முருங்கை மரத்தில் ஏறி மசுக்குட்டியை படைபடையாகப் பார்த்து கையைவிட்டு கிளைகளை எல்லாம் ஒடித்துக்கொண்டு விழுந்து கையை உடைச்சதுதான் நினைவு வரும்!

இன்னும் இரண்டு மரங்களில் இருந்து விழுந்திருந்தேன்!

பெரிய மாமரம் - உயரத்தில் கிடையாக இருந்த கொப்பில் “குருவி நுழைந்து” கைதவறி முதுகு அடிபட விழுந்தது.

பப்பாசி - வேலிக்கரை பப்பா மரத்தில் பப்பாப்பழம் புடுங்க ஏறி கெட்டு முறிந்து முள்ளுக்கம்பி வேலிக்கு மேலே விழுந்தது. எங்கையெல்லாம் கறள்கம்பி குத்தினது என்று கேட்கக்கூடாது! வலக்கை வேற பிரண்டு புக்கை கட்டவேண்டி வந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பப்பாசி - வேலிக்கரை பப்பா மரத்தில் பப்பாப்பழம் புடுங்க ஏறி கெட்டு முறிந்து முள்ளுக்கம்பி வேலிக்கு மேலே விழுந்தது. எங்கையெல்லாம் கறள்கம்பி குத்தினது என்று கேட்கக்கூடாது! வலக்கை வேற பிரண்டு புக்கை கட்டவேண்டி வந்தது.

அன்று நண்பர்கள் வட்டத்தில் ஒருத்தனை நன்றாக ஏற்றிப் பேசி ஏதாவது செய்யச் சொன்னால் அவனிடம் இருந்து வரும் பதில், ‘பப்பா மரத்திலை ஏத்தாமல் சும்மா இருடா” என்றிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

 "பிள்ளையை   அடித்து (கண்டித்து )  வளர்  முருங்கையை முறித்து வளர் " என்பார்கள் . அதிக கிளை விடும் எனும் காரணமாக இருக்கலாம்.  முருங்கையும்  பப்பாசி யும் இலகுவில் ஓடியும் ( முறியும்) மரங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.