Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு !!!

Featured Replies

மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை, ஒரு செய்தியயை அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், இருந்த வழக்கில், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இன்று அதன் அறிக்கையயை சமர்பித்து இருக்கிறது. அதில் ராமர் இருந்தற்கான, வரலாற்றுப்பூர்வமான, சான்றுகள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறது.

இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில், ராமர் பாலம் என்று கருதப்படுவதை முற்றாக மறுத்துள்ளது, மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை.

தகவல் உதவி: Press unit Trust of India.

http://news.digitaltoday.in/news/india.jsp...ory&id=8671

Sethusamudram project: Centre denies existence of Rama

Press Trust of India

New Delhi, September 12

In the midst of a political controversy over the Sethusamudram project, the Centre on Wednesday told the Supreme Court that there was no historical evidence to establish the existence of Lord Rama or the other characters in Ramayana.

In an affidavit filed before the apex court, the Archaeological Survey of India (ASI) rejected the claim of the existence of the "Ramasetu bridge" in the area where the project was under construction.

The multi-crore rupee project proposes to provide a shorter sea route from Rameshwaram to Sri Lanka.

Referring to the Ramayana, the affidavit said there is no "historical record" to incontrovertibly prove the existence of the character, or the occurrences of the events, depicted therein

  • Replies 85
  • Views 11.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

In the midst of a political controversy over the Sethusamudram project, the Centre on Wednesday told the Supreme Court that there was no historical evidence to establish the existence of Lord Rama or the other characters in Ramayana.

இராமாயணத்தில் உள்ள எந்த கதாப்பாத்திரனத்தின் இருப்பையும் நிறுவக் கூடிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதுதான் மேலுள்ள ஆங்கில வரியில் சொல்லப்பட்டுள்ளது.

இராவணன் உள்ளடங்க. இராவணன் தமிழன்.. இராமன் ஆரியன்.. இராமாயணம் ஆரிய - திராவிட யுத்தம் என்றது எல்லாமே பொய். நேரு மாமா தொடங்கி அனைவரும் சொன்னது வரலாற்றுத் திரிபு. இராமர் பாலம் அல்லது அடம்ஸ் பாலம் என்று அழைக்கப்பட்ட புவியியல் கூறு மட்டும் உண்மை. நல்ல முடிவு..! இப்போதைக்கு இந்த வடிவ அறிக்கை வரவேற்கத்தக்கது..! :D

அடம்ஸ் பாலம் தொடர்பான வரலாற்றுப் புவியியல் உண்மைகளை கண்டறிய வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது. எனி இராமர் பாலம் என்று யாரும் அழைக்காதீர்கள். குறித்த புவியியல் கூறுக்கு.. அடம்ஸ் பாலம் என்று பெயரிடுங்கள். அதைத்தான் வெள்ளைக்காரன் எப்பவோ செய்திட்டான்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு... ஆரிய - திராவிட இருப்பை, சண்டையை நிலை நிறுத்த முற்பட்டவர்களுக்கு எதிரான நல்ல அறிவுப்பு. நிச்சயம் அப்படியான வாதங்களை இது நிலைகுலைய வைக்கும்..! வரலாற்றை மாற்றி எழுதத் தூண்டும். இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் நோக்கித் தள்ளும். தமிழர்களை விட்டு விலக்கும். :lol::lol:

Edited by nedukkalapoovan

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு... ஆரிய - திராவிட இருப்பை, சண்டையை நிலை நிறுத்த முற்பட்டவர்களுக்கு எதிரான நல்ல அறிவுப்பு. நிச்சயம் அப்படியான வாதங்களை இது நிலைகுலைய வைக்கும்..! வரலாற்றை மாற்றி எழுதத் தூண்டும். இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் நோக்கித் தள்ளும். தமிழர்களை விட்டு விலக்கும். :lol: :D

பல பொய்களால் உருவாக்கப்பட்ட சரித்திரங்கள் ஒருபொய் சரியும்போது மற்றையதை நோக்கி சாய்வது இயல்புதானே.

  • கருத்துக்கள உறவுகள்

பல பொய்களால் உருவாக்கப்பட்ட சரித்திரங்கள் ஒருபொய் சரியும்போது மற்றையதை நோக்கி சாய்வது இயல்புதானே.

அதனால் தான் நாங்கள் எப்பவும் குறிப்பிடுகிறோம்.. தமிழர்களின் வரலாற்றைத் தனித்து ஆராய வேண்டும். ஆரிய திராவிடக் கலப்பின்றி எமது வரலாற்றுச் சான்றுகள் அறிவியல் ரீதியாகவும்.. ஆர்கியோகொலொஜி ரீதியாகவும்.. அணுகிப் பெறப்பட வேண்டும். புராண இலக்கியங்களில்.. இராவணனைத் தமிழனாக்கி சா.. திராவிடனாக்கி... இராமனை ஆரியனாக்கி.. ஆரிய - திராவிட கற்பனை சித்தாந்தம் பேசி வரலாறு படைப்போர் சிந்திக்க வேண்டியது இதுவே..!

இலக்கியங்கள் காலப்பதிவுகள் என்ற வகையில் சில புவியியல் கூறுகளை மட்டும் தான் உண்மையாக பிரதிபலித்தனவா என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது..!

ஆரிய - திராவிட மக்கள் கூட்டம் அடிபட்டது அதை பார்பர்னியர்கள்.. கடவுள், அரக்கன் ஆக்கி விட்டனர் என்பதையும் இந்த அறிவிப்பு.. நிர்மூலமாக்கிவிட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் அப்படி ஒரு யுத்தம் நடந்திருந்தால் மனித எச்சங்கள்.. கிடைத்திருக்கும். போர் தளபாட மீதிகள் கிடைத்திருக்கும். இவை எவையும் இல்லை.. என்பதைத்தான் அறிக்கை சொல்லி இருக்கிறது. இராமாயணம் எனும் புராண இலக்கியம் சொன்ன சில புவியியல் உண்மைகளைத் (இராமர் பாலம் என்று அடையாளம் காட்டப்பட்ட கூறு உள்ளடங்க) தவிர வேறு எல்லாமே பொய். அப்படின்னு.. அறிக்கை தெளிவாகச் சொல்லி இருக்கிறது. :D:lol:

Edited by nedukkalapoovan

நாம் மறுபடியும் இந்தத் திரியிலும் ஆரியர் திராவிடர் என்ற விவாதத்தைப் புகுத்தாமல், குறிப்பிட்ட தலைப்புடன் தொடர்புடைய, பின்வரும் விடயங்களில் உங்கள் கருத்துக்களைக் கூறலாமல்லவா ?

- பல்லாண்டுகளாக உண்மை என நினைத்து வணங்கிய இராமர் பொய் என்பது நிரூபிக்கப்பட்டபோது ஏற்படப்போகும் சமூக மாற்றங்கள்.

- இத் தீர்ப்பினால் இந்து மதத்தில் உள்ள ஏனைய கடவுள்களும் கேள்விக்குறியாகிவிட்டால் ஒவ்வொரு மனித மனங்களிலும் எழும் கேள்விகள்.

- மதத்தை அடிப்படையாக வைத்து கட்டியெழுப்பப்பட்ட அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் எதிர்காலம்.

- ஏனைய மதத்தினரின் முன்பாக இந்து மதத்தினரின் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் மறுபடியும் இந்தத் திரியிலும் ஆரியர் திராவிடர் என்ற விவாதத்தைப் புகுத்தாமல், குறிப்பிட்ட தலைப்புடன் தொடர்புடைய, பின்வரும் விடயங்களில் உங்கள் கருத்துக்களைக் கூறலாமல்லவா ?

- பல்லாண்டுகளாக உண்மை என நினைத்து வணங்கிய இராமர் பொய் என்பது நிரூபிக்கப்பட்டபோது ஏற்படப்போகும் சமூக மாற்றங்கள்.

- இத் தீர்ப்பினால் இந்து மதத்தில் உள்ள ஏனைய கடவுள்களும் கேள்விக்குறியாகிவிட்டால் ஒவ்வொரு மனித மனங்களிலும் எழும் கேள்விகள்.

- மதத்தை அடிப்படையாக வைத்து கட்டியெழுப்பப்பட்ட அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் எதிர்காலம்.

- ஏனைய மதத்தினரின் முன்பாக இந்து மதத்தினரின் நிலைப்பாடு.

இராமர் பாலம் விடயத்தில் தான் இராமர் பொய். அயோத்திய இராம ஜென்ம பூமி விவகாரத்தில் இராமர் மெய். அதற்கு நீதிமன்றத்தில் இதே இந்திய அகிழ்வாராச்சி மையம் சான்றுகளை அளித்துள்ளது.

இராமர் அவதாரமாகவே சித்தரிக்கப்பட்டு புராண இலக்கியத்தில் காட்டப்பட்டுள்ளார். இராமர் சார்ந்து எழுந்ததல்ல இந்து மதம். இராமருக்கு முன்னாடியே அது இருக்கு சார். நீங்க ரெம்பவே குழம்பிடுறீங்க.

நீங்க சுற்றிச் சுழன்று எங்க வாறீங்க என்றது புரியுது. ஆனால் விசயத்தில ரெம்ப அவசரப்படுறீங்க. பொறுமையா ஆராய்ஞ்சி பார்த்திட்டு எழுதனும்..! :D

நெடுக்காலபோவான்!

தயவுசெய்து தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டாம். அயோத்தி விவகாரத்தில் "ராமர் இருந்தாரா, இல்லையா?" என்பது அல்ல பிரச்சனை. அங்கே ராமர்கோயில் இருந்ததா, இல்லையா? என்பதுதான்.

ராமர்கோயில் பற்றித்தான் இந்திய அகழ்வாராய்ச்சி மன்றம் நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தது. ராமரைப் பற்றி அல்ல.

நாரதரே!!

மாங்கனியை இங்கு வைத்துவிட்டு எங்கைய்யா நிக்கிறீர். இங்கு திருப்பியும் ஒரு கலம்பகம் தொடங்கும் போலுள்ளது. :D:lol:

  • தொடங்கியவர்

இராமாயணத்தில் உள்ள எந்த கதாப்பாத்திரனத்தின் இருப்பையும் நிறுவக் கூடிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதுதான் மேலுள்ள ஆங்கில வரியில் சொல்லப்பட்டுள்ளது.

இராவணன் உள்ளடங்க. இராவணன் தமிழன்.. இராமன் ஆரியன்.. இராமாயணம் ஆரிய - திராவிட யுத்தம் என்றது எல்லாமே பொய். நேரு மாமா தொடங்கி அனைவரும் சொன்னது வரலாற்றுத் திரிபு. இராமர் பாலம் அல்லது அடம்ஸ் பாலம் என்று அழைக்கப்பட்ட புவியியல் கூறு மட்டும் உண்மை. நல்ல முடிவு..! இப்போதைக்கு இந்த வடிவ அறிக்கை வரவேற்கத்தக்கது..! :D

அடம்ஸ் பாலம் தொடர்பான வரலாற்றுப் புவியியல் உண்மைகளை கண்டறிய வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது. எனி இராமர் பாலம் என்று யாரும் அழைக்காதீர்கள். குறித்த புவியியல் கூறுக்கு.. அடம்ஸ் பாலம் என்று பெயரிடுங்கள். அதைத்தான் வெள்ளைக்காரன் எப்பவோ செய்திட்டான்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு... ஆரிய - திராவிட இருப்பை, சண்டையை நிலை நிறுத்த முற்பட்டவர்களுக்கு எதிரான நல்ல அறிவுப்பு. நிச்சயம் அப்படியான வாதங்களை இது நிலைகுலைய வைக்கும்..! வரலாற்றை மாற்றி எழுதத் தூண்டும். இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் நோக்கித் தள்ளும். தமிழர்களை விட்டு விலக்கும். :lol::lol:

நெடுக்காலபோவான் பொய் சொலவதற்க்கும் ஒரு அளவு வேணும்,

மேற்கூறிய செய்தியில் இந்திய மத்திய தொல்பொருட் துறை 'இராமர் பாலம் கட்டவில்லை என்று தான் கூறி இருக்கிறது.ஆரிய திராவிட இனக்குழுமங்கள் இல்லை என்றோ ஆரியர் வடக்கில் இருந்து வந்தனர் என்பதையோ இராமாயணம் போன்ற புனைகதைகளை உருவாக்கி தங்களை கடவுளர்களின் தூதர்கள் போலவும் திராவிடரை கீழானவர்கள் என்றும் சொல்லி பல கதைகளைப் புனைந்ததை மறுத்தோ எதனையும் கூறி விடவில்லை.தாங்கள் எதிர் நோக்கிய திராவிட மக்களை அடக்கி ஆளவே இப்படியான கட்டுக் கதைகளைப் புனைந்தனர்.இவற்றை நியாயப்படுத்த இருக்கிற இயற்கையான பூகோளத்தையும் திராவிட மக்களிடம் ஏற்கனவே இருந்த செவிவழிக் கதைகள் போன்றவற்றில் இருந்து தமக்கு ஏற்றவாறு திருத்து எழுதப்பட்டதே இராமயணம். நீங்கள் இங்கே யாழ்க் களத்தில் செய்யும் திருப்புகளைப் போல. உங்கள் திரிப்புக்களை நீட்டி முழங்கிச் செய்வதை நிற்பாட்டவும்.இங்கிருப்பவர் எல்லோரும் மடையர் நான் தான் அதி புதிசாலி எங்கிற நினைப்பில் திரிப்புக்களைச் செய்ய வேண்டாம்.

ஆறிய திராவிட இனக்குழுமங்கள் இருந்தன என்பதை மரபணுவியல், மொழியியல், தொல்பொருட் சான்றுகள் ஏற்கனவே நிருபித்துள்ளது.இது பற்றி நடந்த விவாதத்தில் உங்களால் எந்த ஆய்வையும் காட்ட முடியாது போனதை மீளவும் நினைவு படுத்துகிறேன்.

எனவே பொய்களையும் புரட்டுக்களையும் இங்கே விதைத்து கொண்டிருக்காமல் நேர்மையாக கருத்தாடவும்.

மற்றவர்களை மடையராக்கும் எண்ணத்தில் அதி மேதாவித்தனமாக இப்படி எழுதுவதால் உங்களை எல்லோரும் நகைப்பிக்கிடமான வகையிலேயே பார்க்க வேண்டி இருக்கும்.

திராவிடரின் சரித்திரத்தை ஆரியரின் இராமயணப் புனைகதையை வைத்து எவரும் நிறுவி விடவில்லை.எவ்வாறு இலங்கையில் தமிழரின் சரித்திரம் மகாவம்சத்தால் எழுதப்பட முடியாதோ அதே போல் திராவிடரின் சரிதிரத்தை இராமாயணம் சொல்ல முடியாது.இராமயணம் ஆரியரின் சூழ்ச்சியைப் பறை சாற்றும் ஒரு ஆதாராம் மட்டுமே.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

ஆறிய திராவிட இனக்குழுமங்கள் இருந்தன என்பதை மரபணுவியல், மொழியியல், தொல்பொருட் சான்றுகள் ஏற்கனவே நிருபித்துள்ளது.இது பற்றி நடந்த விவாதத்தில் உங்களால் எந்த ஆய்வையும் காட்ட முடியாது போனதை மீளவும் நினைவு படுத்துகிறேன்.

ஆமாம் நீங்களே ஒட்டி.. தயாவை வெருட்டி.. அவருக்கு மரபணுவியல் தெரியாது என்று பேக்காட்டி.. எல்லாம் பார்த்திட்டுத்தான் இருந்தேன். எந்த இடத்திலும் இந்திய ஆரிய திராவிட கோட்பாட்டாளர்களைத் தவிர எவரும்.. ஆரிய திராவிடம் என்பதை நவீன அறிவியல் ஆய்வூடு சொல்ல விளையல்ல..! குறிப்பா மரபணுவியல்.. ஆரிய திராவிடம் என்ற இனக்குழுங்களை இவைதான் என்று வரையறுத்து.. அவற்றுக்கான அடையாளங்கள் இவை என்று எவற்றையும் வரையறுக்கவும் இல்லை.

நீங்கள் மற்றவர்களை மட்டம் தட்டிக் கருத்தாடி வருவதால் உங்களுக்கு பதில் அளிக்கிறதில பிரயோசனம் இல்லை என்று விட்டிட்டேன்.

அவையே இராமருக்கு அடையாளம் இல்லை இராமர் பாலத்துக்க என்றினம்.. அங்கால அயோத்தில.. இராமர் பிறந்ததும் என்றினம். கோயிலில இருக்கிற ராமர்.. பிறக்காமலா.. இராம ஜென்ம பூமி வந்தது. குழப்பிறது.. நாங்களல்ல.. இந்திய அகழ்வாராய்ச்சி.. மன்னர்களும்.. யாழ் கள ஆரிய திராவிட விசுவாசிகளும். ஏதோ இந்திய அமைப்புகளாம். லஞ்சம் கொடுத்தா எல்லாம் அறிக்கைல வரும். அப்படியான நாடு அது. இதையெல்லாம் நம்பி.. அதுவும் உங்க கூட கருத்தாடினா.. மரபணு தெரியாததுகள் என்று எங்களையும் உங்க லெவலுக்கு கொண்டு வந்திருவீங்க சாமி. நீங்களும்.. உங்கட ஆரியமும் திராவிடமும். கட்டி பத்திரமா வைச்சி.. பெரியாருக்கு படைச்சு தீபம் காட்டுங்க. :):lol:

நவீன ஆய்வுகள் தெளிவாகச் சொல்கின்றன.. ஆரிய.. திராவிடம் எல்லாம் சுத்துமாத்து என்று. அதற்கான ஆதாரங்கள் போதிய அளவுக்கு இங்கு கொடுத்து விளக்கியாச்சு. பழைய வரலாற்றுக் குறிப்புகளை.. மாறி மாறி.. சோடிச்சிட்டு.. மரபணு அப்படிச் சொல்லுது.. சாதி இருக்கு எண்டுது... சாதிய அடிப்படைல மரபணு வேறுபடுகுது.. என்று.. இந்திய சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு.. அதுக்குள்ள நின்று சோடிச்சதுகள் எல்லாம் ஆய்வு..???! நடுநிலையோடு நியோர்க் ரைம்ஸ் போட்டது குப்பை..! :lol::)

நெடுக்காலபோவனைப் பார்த்து சிரிக்கிறது இருக்கட்டும்... திராவிடருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் அல்லது சான்று பகரும்.. நவீன மரபணு ஆய்வு முடிவை ஒருக்கா தாறீங்களா சார். சும்மா அவிழ்காதேங்க. இங்க வேகாது உங்க பருப்பு.

ஆரிய கொள்கையே நாசியத்தின் பிரச்சாரம் என்பதை இஸ்ரேலியர்கள் தெளிவாக நிறுவி உள்ளனர். அண்மையில் அதைக் கூட இணைத்திருந்தேன். அதுமட்டுமன்றி.. இதுதான் ஆரிய இயல்புகள்.. இவைதான் திராவிட இயல்புகள் என்று மனிதரில் எதுவும் மரபணுவியல் ரிதியா பாகுபடுத்தப்படல்ல.

சும்மா ஜீன் பூல் எண்டியள்.. அதாம் இதாம் எண்டியள்.. என்ன அடிப்படைல ஆய்வுகள் செய்யுறாங்க என்பதையே புரியாம.. ஜீன் பூல்.. சுமிங் பூல் என்று தயாவை வெருட்டினாப் போல.. ஒட்டித் தள்ளினாப் போல.. அதெல்லாம் ஆரிய திராவிட நிறுவல் ஆகிடாது சார். :) :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

தயவுசெய்து தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டாம். அயோத்தி விவகாரத்தில் "ராமர் இருந்தாரா, இல்லையா?" என்பது அல்ல பிரச்சனை. அங்கே ராமர்கோயில் இருந்ததா, இல்லையா? என்பதுதான்.

ராமர் கோயில் பற்றித்தான் இந்திய அகழ்வாராய்ச்சி மன்றம் நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தது. ராமரைப் பற்றி அல்ல.

இங்க மட்டும் என்ன பிரச்சனை... பாலத்தை இராமர் கட்டினாரா இல்லையா என்பதுதானே...???! இல்லாத இராமருக்கு எப்படி சார் கோவில் வரும்.. ஜென்ம பூமி வரும்..>>>???!! இப்ப தானே சொல்லி இருக்கிறீங்க.. இராமரோ.. இல்ல இராமாயண கதாப்பாத்திரங்களோ இருந்ததுக்கு சான்றில்லை என்று. அப்ப ஒட்டுமொத்த இராமாயணமும்.. பொய். அப்ப எப்படி அயோத்தியும்.. இராம ஜென்பம் பூமியும்.. மட்டும் கோயிலோட இருக்க முடியும். இராமரே இருக்கல்ல.. அப்படி எனும் போது அவர் பிறந்த இடமென்று சொல்லி எப்படி கோயில் கட்டி இருப்பாங்க. அப்ப அது இராமர் கோவில் அல்ல.. நபிகள் நாயகம் வந்த பள்ளிவாசலே...>>>??! என்றால்.. ஏற்றுக் கொள்ளத்தானே வேணும். :lol::lol:

http://en.wikipedia.org/wiki/Ram_Janmabhoomi

Edited by nedukkalapoovan

இங்க மட்டும் என்ன பிரச்சனை... பாலத்தை இராமர் கட்டினாரா இல்லையா என்பதுதானே...???! இல்லாத இராமருக்கு எப்படி சார் கோவில் வரும்.. ஜென்ம பூமி வரும்..>>>???!! இப்ப தானே சொல்லி இருக்கிறீங்க.. இராமரோ.. இல்ல இராமாயண கதாப்பாத்திரங்களோ இருந்ததுக்கு சான்றில்லை என்று. அப்ப ஒட்டுமொத்த இராமாயணமும்.. பொய். அப்ப எப்படி அயோத்தியும்.. இராம ஜென்பம் பூமியும்.. மட்டும் கோயிலோட இருக்க முடியும். இராமரே இருக்கல்ல.. அப்படி எனும் போது அவர் பிறந்த இடமென்று சொல்லி எப்படி கோயில் கட்டி இருப்பாங்க. அப்ப அது இராமர் கோவில் அல்ல.. நபிகள் நாயகம் வந்த பள்ளிவாசலே...>>>??! என்றால்.. ஏற்றுக் கொள்ளத்தானே வேணும். :lol::)

ஆமாம். இன்று உலகில் ராமருக்கு எங்குமே கோவில் இல்லை. அதெல்லாம் சும்மா. :lol::)

மிக வேடிக்கையாக இருக்கிறது.

அவர்கள் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள். இராமாயண கதாபாத்திரங்களை நிறுவ எந்தவித புதைபொருள் தடயங்களும் இல்லை என்று. கோவில்கட்டி கும்மியடிப்பது மக்களின் பிரச்சனை. இந்த இரண்டையும் ஏன் ஒன்றாக்குகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இன்று உலகில் ராமருக்கு எங்குமே கோவில் இல்லை. அதெல்லாம் சும்மா. :lol::lol:

மிக வேடிக்கையாக இருக்கிறது.

அவர்கள் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள். இராமாயண கதாபாத்திரங்களை நிறுவ எந்தவித புதைபொருள் தடயங்களும் இல்லை என்று. கோவில்கட்டி கும்மியடிப்பது மக்களின் பிரச்சனை. இந்த இரண்டையும் ஏன் ஒன்றாக்குகிறீர்கள்?

இராம ஜென்ம பூமி மட்டும் இராமாயண அடிப்படையில்லாமல் எழுந்ததா...????! அயோத்தியில் இராமர் பிறந்தார் என்பது வேறேதாவது இதிகாச புராணங்களில் கூறப்பட்டுள்ளதா..??! இராமர் பற்றிய புராண இலக்கியமாக இராமாயணம் தானே விளங்குகிறது...??!

இராமாயணத்தில் உள்ள இராமரின் மற்றும் கதாப்பாத்திரங்களின் existence க்குத்தான் ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதே தவிர.. இராமாயணத்தில் உள்ள இராமரின் மற்றும் கதாப்பாத்திரங்களின் presence இராமர் பாலத்தில் இல்லை என்பதாக அந்த வரி விளக்கம் சொல்லவில்லை. முழு இராமாயணத்துக்குமான இராமரின் மற்றும் பிற கதாப்பாத்திரங்களின் இருப்புக்கும் சான்றில்லை எங்கிறது. இராமர் பாலத்தில் என்று வரையறுத்து மட்டும் சொல்லவில்லை. இது மிக முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம்.

காரணம்.. இல்லாத இராமருக்கு எப்படி.. ஜென்ம பூமி.. அயோத்தியில் வரும்...????! அங்கு கோவில் வரும்...???! கோவில் எங்கும் இருக்கலாம். அது மக்களின் மத உரிமை. ஆனால் இராமாயண அடிப்படையில் அயோத்தியும்.. இராமர் பிறப்பும்.. ஜென்ம பூமியும்.. கோயிலும் நெருங்கி நிற்கின்றனவே. அங்கே இராமருக்கு ஆலயம் இருந்ததும்.. இராமர் பிறந்த இடமும் அதுதான் என்று நிறவ வரலாற்றுச் சான்றுகளை தேடியவர்கள்.. இன்னோர் இடத்தில்.. மொத்த இராமாயண பாத்திரங்களுக்கும் வரலாற்றுச் சான்றில்லை எங்கிறார்கள் இது அவர்களுடைய முரண்பாட்டைக் காட்டவில்லையா..??!

இராமர் பாலத்தில் இராமரின் மற்றும் இராமாயண கதாப்பாத்திரங்களின் பிரசன்னம் (presence) இல்லை என்பது வேறு. இராமர் மற்றும் இராமாயண கதாப்பாத்திரங்களின் இருப்புக்கு (existence) ஆதாரம் இல்லை என்பதும் வெவ்வேறானவை. அதனால் தான் எனது சந்தேகத்தை கிளப்பினேன். அதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் இருந்ததற்கான சான்றுகள் இல்லை!

சுப்ரீம் கோர்ட்டில் தொல்பொருள்துறை!!

வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

டெல்லி:

ராமர் இருந்ததற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. மேலும், ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை. அது இயற்கையாக உருவானதாகவும் என்று மத்திய தொல்பொருள்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராமர் பாலத்தை இடிக்கத் தடை விதிக்கக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ராமர் பாலத்திற்கு சேதம் விளைவிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய தொல்பொருள்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதன்படி மத்திய தொல்பொருள்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. வரலாற்றுச் சான்றுகளிலும் அதுகுறித்து எதுவும் இல்லை.

இதிகாசங்களில் கூறப்படுபவை எல்லாம் வரலாற்றுச் சான்றுகள் கிடையாது. அதில் உள்ள நிகழ்வுகளும் (ராமாயணம்), பாத்திரங்களும் (ராமர்) உண்மையானவை என்று கூற முடியாது.

ராமர் பாலம் என்று கூறப்படுவது இயற்கையான மணல் திட்டுக்களால் ஆன வடிவமாகும். பல நூற்றாண்டுகளாக இது இருந்து வருவதால் இறுகிப் போய் அசைக்க முடியாத ஒரு பால அமைப்பு போல மாறியுள்ளது.

இது ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால்தான் இந்த பாலம் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை எந்த ஆய்வையும் இதுவரை நடத்தவில்லை.

இந்த பால அமைப்பு உருவாகி 1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளாகியிருக்கக் கூடும். ஆனால் மனுதாரர்கள் கூறுவது போல ராமாயண காலத்தில் இது உருவாகவில்லை.

ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையிலான இந்த பாலம், கிமு 18,000க்கும், கிமு. 70000க்கும் இடைப்பட்ட காலத்திற்குள் உருவாகியிருக்க வேண்டும். அப்போது கடல் மட்டம் இந்தப் பாலத்தை தொடவில்லை. எனவே இந்தப் பாலம் வழியாக இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் போய் வந்திருக்கலாம், வியாபாரம் கூட நடந்திருக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்வானி கடும் கண்டனம்:

மத்திய தொல்பொருள்துறையின் இந்த அறிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொல்பொருள் துறை தாக்கல் செய்த மனு விவரங்கள் வெளியானவுடன் பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தொல்பொருள் துறையின் அறிக்கையில் ராமர் இருந்தற்கு சான்றுகள் கிடையாது என்று கூறியிருப்பதற்கு கடும் கண்டனமும், ஆட்சேபனையும் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

-தட்ஸ் தமிழ்

அயோத்தியில் ராமர் கோயில் இருந்திருக்கக்கூடும்.

ஆனால் அது ராமர் இருந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை.

அங்கே ராமர் என்று ஒருவர் இருந்தார் என்றும், அயோத்தி ராமர் பிறந்த இடம் என்றும் நம்பியர்வர்கள், தாம் நம்பிய ராமருக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரம்தான் அது.

யாரும் முட்டாள்தனமாக எதையும் நம்பலாம். நம்பிக் கோயிலும் கட்டலாம். கோயில் இருக்கிறது என்பதற்காக அவர்கள் நம்பியதும் இருந்தது என்று அர்த்தம் இல்லை.

உப்பிடிப் பாத்தா இன்னமும் 100...200 வருடங்களில் "வரலாற்று எச்சங்களின்" அடிப்படையில் அபிராமி அம்மன் டென்மார்கில கூட உயிர் வாழ்ந்திருப்பா என்றும் அப்படியே கடவுள் இருக்கிறார் என்று அங்கு இன்று நடக்கும் அதிசயங்களை வைத்தும் பக்த்தர்களின் எண்ணிக்கையை வைத்தும் நிறுவப்படுமோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே வகை யானை இனங்கள் உள்ளன. ஆகவே ஒருகாலத்தில் இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலத்திட்டாய் இருந்திருக்க வேண்டும். தனிப்படுத்துகை மூலம் ஆபிரிக்கயானை இனங்கள் சற்று உருமாற்றம் பெற்றது போல இங்கு நடைபெறவில்லை. பூகற்பவியல் ரீதியில் மிகப்பிற்பட்ட காலத்திலேயே இலங்கை இந்தியாவிடமிருந்து சுனாமியாற் பிரிந்திருக்க வேண்டும். அதன்பிறகும் மக்கள் இருபுறங்களுக்கும் ஆழங்குறைந்த பகுதியூடாகப் போய்வந்திருக்கலாம். அரசர்கள் சில கற்களைப்போட்டு படைநடத்திச் சென்றுகூட இருக்கலாம். ஆகவே ஏதோ ஒன்று நடந்திருக்கிறது.

ஹரப்பா மொகஞ்சரொப் பகுதிகளுக்கு வந்த வெள்ளை இனத்து ஆரியர்கள் அங்கிருந்த கறுப்பின மக்களோடு செய்த பதினெட்டு வருடகால யுத்தமே இன்று தேவாசுர யுத்தமாகக் கணிக்கப்படுகிறது.

இராமர் போன்றவர்கள் வில்லம்பு வைத்திருந்த ராசாக்களேயாவர். இராமாயணத்தில் வரும் அறிவுக்கொவ்வாத புழுகுகளைப் புறமொதுக்கிவிட்டுப் பார்த்தால் அதையும் ஒரு சரித்திர நூலாக ஏற்று மேலும் ஆராய்ச்சிகளைத் தொடரமுடியும். இருக் வேதமும் இவ்வாறே தற்காலத்தில் சரித்திரச் சான்றுகளைத் தரும் நூலாகக் கருதப்படுகின்றது. ஒன்றில் புராணத்தனமான செய்திகளைக் கண்ணை மூடிக்கொண் ஏற்பது அல்லது விஞஞானத்தனமான செய்திகளை முற்றாக நம்புவது என்னும் நிலைப்பாடு மாறி புராணக்கதாபாத்திரங்களும் அக்காலத்தில் வாழ்ந்த சாதாரண மனிதர்களேயென்ற அணுகுமுறையோடு நோக்கினால் வரலாற்றை ஓரளவு புரிந்துகொள்ளமுடியும். ராகுலசங்கிருத்தியாயன் போன்றவகளின் புத்திஜீவிப் பார்வை பலரிடம் இல்லை. ஆரிய திராவிட இருப்பை மறுப்பதற்குப் புராணங்களையும் இதிகாசங்களையும் முற்றாக மறுக்கும் அணுகுமுறையைச் சிலரும், அவற்றை அப்படியே ஏற்கும் அணுகுமுறையைச் சிலரும் கொள்கின்றனர். அப்படியல்லாமல் புராணங்களைச் சரித்திரச்சான்றுகளாகவும் அவற்றின் கதாபாத்திரங்களைச் சாதாண மனிதர்களாகவும் நோக்கி அணுகும்போது ஆரிய திராவிட இருப்பின் உண்மை தெரியவரும். அக்காலத்தில் நிறையப் போர்கள் நடந்திருக்கின்றன. மக்கள் ஒதுங்கி வாழ்ந்தாதால் பல்வேறு மொழிகள் இந்தியாவில் உருவாகியிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் இனக் குழுமங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையே. தெற்காசியர்களின் நிறம் மண் நிறமாக மாறிப் போனதற்கான காரணம் அது சீன, ஆரிய, கறுப்பினங்களின் கலவையால் உண்டானதால் இருக்கலாம். இதற்கு வெகுகாலம் முந்தியே கறுப்புத் திராவிட இனங்கள் இந்தியாவில் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் இன்று இருப்பது கலப்பினமே

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தியில் ராமர் கோயில் இருந்திருக்கக்கூடும்.

ஆனால் அது ராமர் இருந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை.

அங்கே ராமர் என்று ஒருவர் இருந்தார் என்றும், அயோத்தி ராமர் பிறந்த இடம் என்றும் நம்பியர்வர்கள், தாம் நம்பிய ராமருக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரம்தான் அது.

யாரும் முட்டாள்தனமாக எதையும் நம்பலாம். நம்பிக் கோயிலும் கட்டலாம். கோயில் இருக்கிறது என்பதற்காக அவர்கள் நம்பியதும் இருந்தது என்று அர்த்தம் இல்லை.

இவ்வளவு மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருக்கின்ற போது.. இராமர் என்ற நம்பிக்கை.. இராமாயண அடிப்படையில் வர வேண்டிய தேவை என்ன..??! அயோத்தியே இராம ஜென்ம பூமி என்று வரக் காரணம் என்ன..??! சிவனை நம்புகிறார்கள்.. எங்காவது சிவன் ஜென்ம பூமி என்று ஒன்றிருக்கா..???! புராண அடிப்படைகளில் இருந்துதான் அவை எழுகின்றன. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் இருந்தது என்றால்.. அதுவும் இராமாயணம் கூறியபடி.. அயோத்தியில் இருந்தது என்று நிறுவ முற்பட்டவர்கள்.. இப்ப இராமாயணத்தின் படி இராமரின் இருப்பே இல்லை என்று விட்டார்களே. அப்போ.. இராம ஜென்ம பூமி என்பது இல்லை. அங்கு வெறும் கோவில் போன்ற ஒரு அமைப்புத்தான் இருந்தது. அப்ப ஏன் பாபர் மசூதியை இடிக்கனும்..??! அதை இதே காங்கிரஸ் அரசு அனுமதிக்கனும்...???! :lol::)

சபேசன்.. நீங்கள் இங்கு வைக்கும் கருத்து வெட்கக் கேடானது. காரணம்.. உங்கள் இராவணனும் இல்லை என்று விட்டார்கள். நீங்கள் தான் அவனை தமிழனாக்கி காட்டினீங்களே. எனி சொல்வீர்கள் போல.. தமிழ் மன்னன் இருந்தான்.. அவனின் செல்வாக்கை அறிந்த பார்பர்னர்கள்.. இராமாயணம் என்ற கட்டுக்கதைக்குள்.. அவனை இழுந்து பார்பர்ன மன்னனான இராமனால் அவன் தோற்கடிக்கப்பட்டதாக சித்தரித்து ஆரிய - திராவிட வாதத்தை நிறுவினர் என்று.

இராமாயணத்தில் உச்சரிக்கப்பட்ட புவியியல் கூறுதான் உண்மை. ஆனால்.. இலங்கையிலோ... இல்ல பாலத்திலோ.. இராமாயணம் சொல்லும் காலத்தில் யுத்தம் நடந்ததற்காக எந்த வரலாற்றுச் சான்றும் இல்ல அப்படித்தான் அகழ்வாராய்ச்சி செய்யாமலே.. முடிவு கட்டினம்...??! அப்படி இருக்க.. எப்படி.. தமிழ் மன்னன் - ஆரிய மன்னன்... யுத்தம் செய்திருப்பினம்....??!

இது ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால்தான் இந்த பாலம் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை எந்த ஆய்வையும் இதுவரை நடத்தவில்லை. - தற்ஸ் தமிழ்.

அகழ்வாரராய்ச்சி எதுவும் செய்யாமலே.. அகழ்வாராய்ச்சி அறிக்கை சமர்பித்த ஒரே டிப்பாட்மெண்ட் இந்திய அகழ்வாராய்ச்சி.. நிறுவனம் தான்..! இராமர் பாலம் வரலாற்று முக்கியமானதில்லை என்று கருதி தாங்கள் அகழ்வாராய்ச்சி செய்யல்லையாம். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கினமாம்...???! எங்கையோ உதைக்குதே...???! :lol::)

இப்படி பல விடயங்கள் சங்கிலித் தொடராக தொக்கு நிற்கும்...! :):huh:

Edited by nedukkalapoovan

நான் தொடர்ந்து சொல்லி வருகின்ற விடயம் உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு குழந்தைப் பிள்ளைக்கு விளங்கப்படுத்தவது போல் நான் என்னுடைய கருத்தை இங்கே பல முறை சொல்லியிருக்கிறேன்.

இப்பொழுது இன்னும் ஒரு முறை சொல்கிறேன்.

1. ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைகதை.

2. திராவிடர்கள் அந்தக் கதையில் அரக்கர்களாகவும் குரங்குகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

3. ஆரியார்கள் உயர்ந்தவர்களாகவும் தெய்வ சக்தி மிக்கவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

4. ஆரியர்களின் தலைமைத்துவம் "ராமர்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

5. திராவிடர்களின் தலைமைத்துவம் "இராவணன்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

6. அன்றைய ஒட்டுக்குழுக்கள் "சுக்கிரீவன், அனுமான், விபீடணண்" போன்றவர்கள் மூலம் குறிக்கப்படுகிறது

இங்கே குறிப்பிடப்படுகின்ற பாத்திரங்கள் அன்றைக்கு இருந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. இதை அப்படி விளங்கிக் கொள்ளக்கூடாது. அன்றைக்கு இருந்தவர்கள் இவ்வாறான கற்பனைப் பாத்திரங்கள் மூலம் குறிக்கப்படுகிறார்கள் என்பதே அர்த்தம்.

இராவணன் இருந்தான் என்பதற்கும் திராவிட மக்களின் தலைமைத்துவத்திற்கு இராமாயணம் "இராவணன்" என்ற குறியீட்டை வழங்கியது என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இங்கே நாம் இராவணன் என்ற குறியீட்டை உயர்த்திப் பேசுவது, "இராமன்" என்ற குறியீட்டிற்கு எதிரான கலகம்தான். "இராவணன்" என்று ஒருவன் இருந்தான் என்று நான் சொல்வதாக அதை அர்த்தப்படுத்தக்கூடாது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொடர்ந்து சொல்லி வருகின்ற விடயம் உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு குழந்தைப் பிள்ளைக்கு விளங்கப்படுத்தவது போல் நான் என்னுடைய கருத்தை இங்கே பல முறை சொல்லியிருக்கிறேன்.

இப்பொழுது இன்னும் ஒரு முறை சொல்கிறேன்.

1. ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைகதை.

2. திராவிடர்கள் அந்தக் கதையில் அரக்கர்களாகவும் குரங்குகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

3. ஆரியார்கள் உயர்ந்தவர்களாகவும் தெய்வ சக்தி மிக்கவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

4. ஆரியர்களின் தலைமைத்துவம் "ராமர்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

5. திராவிடர்களின் தலைமைத்துவம் "இராவணன்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

6. அன்றைய ஒட்டுக்குழுக்கள் "சுக்கிரீவன், அனுமான், விபீடணண்" போன்றவர்கள் மூலம் குறிக்கப்படுகிறது

இங்கே குறிப்பிடப்படுகின்ற பாத்திரங்கள் அன்றைக்கு இருந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. இதை அப்படி விளங்கிக் கொள்ளக்கூடாது. அன்றைக்கு இருந்தவர்கள் இவ்வாறான கற்பனைப் பாத்திரங்கள் மூலம் குறிக்கப்படுகிறார்கள் என்பதே அர்த்தம்.

இராவணன் இருந்தான் என்பதற்கும் திராவிட மக்களின் தலைமைத்துவத்திற்கு இராமாயணம் "இராவணன்" என்ற குறியீட்டை வழங்கியது என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இங்கே நாம் இராவணன் என்ற குறியீட்டை உயர்த்திப் பேசுவது, "இராமன்" என்ற குறியீட்டிற்கு எதிரான கலகம்தான். "இராவணன்" என்று ஒருவன் இருந்தான் என்று நான் சொல்வதாக அதை அர்த்தப்படுத்தக்கூடாது.

நீங்கள் சொன்னது எவையுமே வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையில் அமையல்ல. பார்பர்னர்கள்.. அப்படிச் சொல்லி இருக்கலாம்.. இப்படிச் சொல்லி இருக்கலாம் என்று சொல்கிறீர்களே தவிர..??! இராமர் பாலத்தை.. கடந்து வந்த திராவிடர்களின் எச்சங்கள் எங்கே...???! தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளிலும் சரி.. சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும் சரி.. இதற்கான எச்சங்கள் கிடைக்கல்ல...???! போர் நடந்ததற்கான அறிகுறியே கிடைக்கல்ல இன்னும்..! அப்படி இருக்க...???! இராமர் படை -- ஆரியரானதும்.. இராவணன் படை - திராவிடர் ஆனதும் எப்படி..???!

இராமாயணம் சொன்னது போல நீங்கள் குறிப்பிடுவது போல..அப்படி ஒரு ஆரிய - திராவிட யுத்தம் நடந்திருந்தால்.. அதன் எச்சங்கள் சான்றுகள் கிடைத்திருக்கும். பெரு நகரங்கள் இருந்த அடையாளங்கள் இருந்திருக்கும்...???! ஆனால் இல்லையே...???! அப்படி ஒன்று கிடைத்திருந்தால்.. இராமாயணம்... நிறுவப்பட்டிருக்குமே..??! இராமாயணம் நிராகரிக்கப்படும் போது அது சார்ந்து எழும் பார்பர்ன எதிர்ப்பு திரிபுகளும் நிராகரிக்கப்படுகின்றன. இந்த இலகு உண்மை புரியாமல்.. அடுத்தவர்களை சிறுபிள்ளை என்பதில் உள்ள சிறுமைத்தனத்தை நீங்கள் உணரத்தவறுகிறீர்கள்.

எப்படி இராமாயணத்துக்கு தற்போதுள்ள வடிவில் சான்றுகள் இல்லையோ.. அதுபோல.. உங்களின் ஆரிய - திராவிடத் திரிபுக்கும் சான்றுகள் இல்லை.

நீங்கள் பார்பர்ன எதிர்ப்பு என்ற கற்பனையை கதைக்குள் திணிப்பது போலவே எல்லாம் நடக்கிறது. :lol::lol:

நீங்கள் சொல்வது சரி!

இராமன் இல்லாமல் போகின்ற பேர்து இராவணன் என்பது இல்லாமல் போய்விடும். காரணம் அவைகள் உண்மையானவைகள் அல்ல. இரு சித்தாந்தகள் கொண்டிருக்கும் குறியீடுகளில் இரண்டுதான் அவைகள்

அதே போன்று

பார்ப்பனியம், ஆரியம், இந்துத்துவம் என்பவைஇல்லாமல் போகின்ற போது திராவிடம் என்பதும் இல்லாமல் போய் விடும்

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி!

இராமன் இல்லாமல் போகின்ற பேர்து இராவணன் என்பது இல்லாமல் போய்விடும். காரணம் அவைகள் உண்மையானவைகள் அல்ல. இரு சித்தாந்தகள் கொண்டிருக்கும் குறியீடுகளில் இரண்டுதான் அவைகள்

அதே போன்று

பார்ப்பனியம், ஆரியம், இந்துத்துவம் என்பவைஇல்லாமல் போகின்ற போது திராவிடம் என்பதும் இல்லாமல் போய் விடும்

அப்ப திராவிடத்தை நிலை நிறுத்த ஆரியம்.. பார்பர்னியம்... இந்துத்துவம் - (இந்துத்துவம் என்பது இந்துமதப் போதனையல்ல. மாறாக இந்து மத வெறி. இந்து மதம் போதிக்கவில்லை அதை. எப்படி ஆரிய திராவிட கற்பனை வெறி இருக்கோ அப்படி.. ஒன்றுதான் இந்துத்துவம் ) வேணும் என்றீங்க...! நல்ல சித்தாந்தம். சித்தாந்தத்தைக் காக்க சித்தாந்தங்கள் தேவை. ஆனால் அவை மெய்ப்படும் என்று கனவு காண்பதும் பலிக்காது.

ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற மெய்யில் இருந்து தேடல் செய்கிறம். அதனால் சித்தாந்தங்கள் பேசுவது பற்றியோ.. அல்லது அவற்றின் வீழ்ச்சி பற்றியோ நமக்கு கவலையில்லை. தமிழர்கள் தேட வேண்டியது அறிவியல் கொண்டதான உலக அங்கீகாரமுள்ள..தங்கள் இருப்புக்கான வரலாற்று உண்மைகளேயே அன்றி.. சித்தாந்தங்களுக்குள் உள்ள சித்தரிப்புக்களை அல்ல..! அவற்றுக்கு முக்கியமளித்தலும் அவசியமில்லை. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாண்டுகளாக உண்மை என நினைத்து வணங்கிய இராமர் பொய் என்பது நிரூபிக்கப்பட்டபோது ஏற்படப்போகும் சமூக மாற்றங்கள்.

இராமர் தான் இல்லை என்று சொல்லி இருகிறாங்க மற்ற கடவுள்களை பற்றிய தீர்ப்பு என்னும் நீதிமன்றத்தால் வழங்கபடவில்லை ஆகையால் சமூகத்தில் மாற்றங்கள் பெரிதாக வரபோகிறது இல்லை,இராமருக்கு பதிலாக புலத்தில புதுசாமி உண்டாக்க நாங்கள் முழுமூச்சாக பாடுபடுவோம் என்று இத்தால் உறுதியாக கூறுகிறோம்.

நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்வது மீண்டும் சரி!

அறிவியல்ரீதியாகத்தான் எல்லாவற்றையும் அணுக வேண்டும். அறிவியல்ரீதியாக அணுகுவதால்தான் நாம் அன்றிலிருந்து இன்று வரை ராமன் என்ற கடவுள் இல்லையென்றும், ராமன் என்பவனும் குரங்குகளும் இணைந்து பாலம் கட்டவில்லை என்றும் சொல்லி வருகின்றோம்.

அறிவியல்ரீதியாக அணுகித்தான் நிறைய விடயங்கள் சொல்கிறோம். ஆனால் சிலர் இங்கே எதையும் அறிவியல்ரீதியாக அணுகாமல், ராமன், பிள்ளையார் போன்றவைகளை நம்பி வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சா ராமர் பாலம் கடலுக்குள்ளே போகாம இருந்தா எவளவு சனம் போட்டில் போய் இறந்து இருக்க மாட்டார்கள்............. சரி பொனது போகட்டும் இப்பவாது அதை உடக்காம பத்திரப்படுத்தினா இலங்கையை விட்டு தமிழரை அடிச்சு விரட்டும் போது சிறுவர்களை தோளில் தூக்கி கொண்டு பெரியவர்கள் நெஞ்சளவு தண்ணீ தானே என்று நடந்து இந்தியா போகலாம் பலத்துக்கு மேலாக...............................

:lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.