Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு, பேருதவியை வழங்கினார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தினால் 3ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன்,   வைரமுத்து சரோஜா,, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன் உள்ளிட்டோருக்கு) லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த செவ்வாய்கிழமை (06.06.23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் விடுத்த வேண்டுகோள்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும், இதுவரை 26 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

நீண்டகாலம் சிறைகளில் தம் வாழ்வை தொலைத்த இவர்கள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதனை உணர்ந்த லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாக அமைந்துள்ளது.

அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, முதற்கட்டமாக விடுதலை பெற்ற 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

P07-600x401.jpg

P03-600x400.jpg

P06-600x400.jpg

P05-600x400.jpg

P04-600x400.jpg

P14-600x400.jpg

P13-600x400.jpg

P12-600x400.jpg

P11-600x400.jpg

P15-600x400.jpg

P16-600x400.jpg

https://athavannews.com/2023/1334208

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கோ வயிற்றில் புளி கரைக்கப்படுகிறது...🤣

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர இவரை புலி என்று சொல்லாமல் விட்டால் அதிசயம் நடந்து விட்டதாக நினையுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சரத் வீரசேகர இவரை புலி என்று சொல்லாமல் விட்டால் அதிசயம் நடந்து விட்டதாக நினையுங்கள். 

உந்தாள் குலைப்பதே வாய்கரிசிக்குத் தான் எண்டபடியால், 25 இலட்சம் கொடுக்கேக்க, ஒரு 5 இலட்சம் எறிஞ்சால், ஆள் நித்திரையாப் போடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செயற்பாட்டுக்கு நன்றி மட்டுமே என்னால் சொல்லமுடிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இவர் செய்த முதலீடுகள் இந்தியாவுக்கு ஓரளவாவது அந்நிய செலவாணியைக் கொண்டுவந்தது தவிர இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சிகளை யாரும் செய்யலாம் எனும் துணிவைக் கொண்டுவந்தது ஆனால் இவரது எல்லா முயற்சிகளும் புறக்குடத்தில் ஊற்றிய நீராக வருமானவரிச் சோதனை எனும் ச்யலினால் இவருக்கு மனப்புழுக்கம்தான் முடிவில் மிஞ்சியது. இப்போ இலங்கையில் இவரது  முயற்சி இதைத்தான் சொல்வது இந்தியா ஒரு பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துப்பார்க்க நினைத்து அது மெல்ல நீந்தி இலங்கைத்தீவின் கரைக்கு வந்துவிட்டது 

சுபாஸ்கரன் நீங்கள் யாரோ எவரோ உங்கள் நோக்கம் என்ன ஏதோ நீண்டநாள் நீங்கள் இலங்கைத்தீவில் நீடிப்பீர்களோ இல்லையோ இருதாலும் 

அன்புடன் தாய்மண் வரவேற்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பணம் பொருள் சேர்த்தாலும் அதில் சிறு பங்கையேனும் இன்னொருவருக்கு கொடுக்க நல்ல மனம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா சுபாஸ்கரன் இலங்கையில் பொருளாதார ரீதியில் காலூன்றும் முயற்சியை இங்கே பலர்  வரவேற்றிருப்பது  சிந்தனையில் ஏற்பட்ட நல்ல மாற்றம் . 

மேலும் பலர் இதனைப் பின்பற்ற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு இது பெரிய தொகையாக இல்லாவிடடாலும், பெற்றுக்கொண்ட போராளிகளின் குடும்பத்துக்கு பெரிய ஒரு உதவிதான்.

லைக்கா ஞானம் பவுண்டஷன் என்னும் பெயரில் இவர்கள் நாட்டு முழுவதும் வறிய மக்களுக்கான உதவிகளை இப்போது ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கக்கூடிய நல்ல முயட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஐயா..💐

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமில்லாமல் வெளியே வரும் அவர்களுக்கு இது பேருதவி. நன்றி சுபாஷ் மற்றும் பிரேம் குழுவினருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உதவியை வைத்துக்கொண்டு அவர்கள் சிறு தொழில்களை செய்து வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமயும். நன்றி சுபாஸ்கரனுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா குழுமத்துக்கு நன்றியும் பாராட்டுகளும் .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா குழுமத்துக்கு நன்றியும் பாராட்டுகளும் .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

மேலும் பலர் இதனைப் பின்பற்ற வேண்டும். 

சிங்களம் இனவெறியை கைவிடும்வரை கொஞ்சம் அமைதியாக இருப்பது நல்லது இன்னும் சிறிது காலத்தில் இலங்கை நாணயம் அதாள பாதாளத்துக்கு பாயும் தற்போது செயற்கையாக டொலர் தேவையை நிறுத்தி வைத்துள்ளார்கள அதாவது ரணில் சர்வ அதிகாரங்களும் உடைய மக்களின் வாக்கினை பெற்று ஜானதிபதி ஆகும் வரை என்று நினைத்து இருந்தார்கள் நினைப்புக்கு மாறாக தேவை அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகின்றது சிங்களம் உண்மையான பஞ்சத்தை இலங்கையில் குடியேறிய நாளில் இருந்து இன்றுவரை அனுபவிக்கவில்லை ஆனால் வடகிழக்கு தமிழர்கள் இந்திய தமிழர்கள் அனுபவித்து உள்ளார்கள் அதற்கேற்ப இசைவாக்கம் அடைந்து உள்ளார்கள் ஆனால் இந்த சிங்களம் முதன் முதலாக பஞ்சத்தை உணரும்போது தமிழ்ருக்கு எதிரான  இனவெறியும் கழண்டு போய் உண்மையை உணருவார்கள் .

அல்லது ரணில் தப்பி தவறி  ஆட்சிக்கு வந்து காலை நீட்டினால் வரி கையை நீட்டினால் வரி நடந்தால் வரி நின்றால் வரி அப்படி வருவது தவிர்க்க முடியாத ஒன்று அனுபவிக்கும் போதும் சிங்களவர்களின் கோமணத்துடன் தமிழர் எதிர்ப்பு இனவாதமும் கழண்டு விழும் மற்றபடி  புத்தனே நேரில் வந்து தமிழர் எதிர்ப்பு இனவாதத்தை கைவிடு என்று சொன்னாலும் சிங்களவர்கள் கேட்க்கபோவது இல்லை .அவர்கள் மாறுவார்கள் என்று நம்புவதும்  மூடத்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அவர்களை நம்பும்படி யார் கேட்டது ? 

காற்றுள்ள போதே, தூற்றிக்கொள் என்பது பழமொழி. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

லைக்கா சுபாஸ்கரன் இலங்கையில் பொருளாதார ரீதியில் காலூன்றும் முயற்சியை இங்கே பலர்  வரவேற்றிருப்பது  சிந்தனையில் ஏற்பட்ட நல்ல மாற்றம் . 

மேலும் பலர் இதனைப் பின்பற்ற வேண்டும். 

மற்றவர்களை விடுங்கள், தாங்கள் எப்போது களத்தில் இறங்குவது? எப்போதும் மற்றவர்களை தள்ளி விடுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

அவர்களை நம்பும்படி யார் கேட்டது ? 

காற்றுள்ள போதே, தூற்றிக்கொள் என்பது பழமொழி. 

காத்து இன்னுமா உங்களுக்குள் நிக்குது 😀 இந்த இரண்டாவகுப்புபழமொழியெல்லாம் எமது போராட்டதில் பல் இளித்து வெகுகாலம் ஆகிவிட்டது .

இப்போது விகாரைக்கு காணி பிடித்து கொண்டு தமிழ் இனவெறி ஆடிக்கொண்டு இருப்பது நீங்கள் கேள்விபடவில்லையாக்கும் ? அடுத்து அங்கு நினைத்தவுடன்  சுபாசோ எலான் மாஸ் கோ வடகிழக்கு தமிழர்களுக்கு உதவ முடியாது பல சிங்கள முதலைகளுக்கு படியளக்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சரி சரி, 

கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பங்களையும் தவறவிட்டுப்போட்டு, அடுத்த ஆர்ப்பாட்டத்தில் போய் புலிக்கொடியைப் பிடித்தபடி ஐ வோண்ட் தமிழீழம் என்று கத்துவோம்.

அப்படிக் கத்தும்போது தமிழீழத்தை பிரித்து, நாலாய்   மடித்து, கையில் வைத்துத் தந்துவிடுவார்கள்.

சரியா...🥺

7 hours ago, satan said:

மற்றவர்களை விடுங்கள், தாங்கள் எப்போது களத்தில் இறங்குவது? எப்போதும் மற்றவர்களை தள்ளி விடுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.

உங்களுக்குப் பரீட்சயம் இல்லாத விடயங்களில் ஏன் தலையிடுகிறீர்கள்? விட்டுவிடுங்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சரி சரி, 

கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பங்களையும் தவறவிட்டுப்போட்டு, அடுத்த ஆர்ப்பாட்டத்தில் போய் புலிக்கொடியைப் பிடித்தபடி ஐ வோண்ட் தமிழீழம் என்று கத்துவோம்.

அப்படிக் கத்தும்போது தமிழீழத்தை பிரித்து, நாலாய்   மடித்து, கையில் வைத்துத் தந்துவிடுவார்கள்.

சரியா...🥺

அப்படி என்ன சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

உங்களுக்குப் பரீட்சயம் இல்லாத விடயங்களில் ஏன் தலையிடுகிறீர்கள்? விட்டுவிடுங்கள். 

அவர் என்ன கேட்டார் நீங்கள்  என்ன பதில் கூறுகிறீர்கள் மற்றவரை தள்ளி விடுவதில் மும்முரமாய் நிக்கிறீர்கள்  நீங்கள்  எப்போ களத்தில்  இறங்குவது ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

அவர் என்ன கேட்டார் நீங்கள்  என்ன பதில் கூறுகிறீர்கள் மற்றவரை தள்ளி விடுவதில் மும்முரமாய் நிக்கிறீர்கள்  நீங்கள்  எப்போ களத்தில்  இறங்குவது ?

பிறகேன் அல்லிராஜாவை வாழ்த்துகிறீர்கள்? 

ஒரு சிறு கடை வைப்பதற்கே தைரியம் வேண்டும். மிகப்பெரிய வியாபார நிருர்வனங்களை நடாத்துவோர் risk எடுத்துத்தான் வெற்றியாளர் ஆகிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அந்த நாட்டை கைப்பற்றுவதற்கு ஒத்தது. 

இங்கே பலரது நிலைமை ; "நான் Lottery tickrt எடுக்கமாட்டேன், ஆனால்  எனக்குத்தான் முதற்பரிசு விழவேண்டும்" என்பதுபோல இருக்கிறது.  எந்த ஒரு அடியும் எடுத்து வைக்க மாட்டேன். ஆனால்  தமிழீழம் வேண்டும் என்பதாக இருக்கிறது. 

***

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அந்த நாட்டை கைப்பற்றுவதற்கு ஒத்தது. 

உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என நினைக்கிறன். நாட்டில் இனக்கலவரம் ஏன் தொடங்கியது? எப்படி தொடங்கியது, அதில் அழிந்தவை எவை என்பதை தெரிந்து கொண்டாலே பலர் தயங்குவதன் காரணம் புரியும். அந்த நிலையில் இருந்து சிங்களம் இன்னும் பின்வாங்காத நிலையில், எங்கள் கையில் அதிகாரமில்லாமல் முதலிடுவது; அவர்கள் எப்போ வேண்டுமானாலும் பறிக்கவோ, எரிக்கவோ, துரத்தவோ முடியும். பாரம்பரிய உறுதியுள்ள காணிகளை, கோவில்களை பாதுகாக்க முடியவில்லை, கேள்விகேட்க முடியவில்லை, நீதிமன்றங்கள் கையறுநிலையில், இதில இவர் உபதேசிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

***

முடிந்தால் இவருக்குப்பின்னால் இருப்பவர்கள் பாதிப்படைந்த மக்களின் காணிகளை மீட்டுக்கொடுக்கட்டும் பாப்போம்! முதலிடுகிறவன்; தான் முதலிடுவதற்கு பொருத்தமான சூழ்நிலையிருந்தாலே முதலிட முடியும், அங்குள்ள மக்களின் நிலை சுதந்திரம், தனது முதலீடுகளை நுகரக்கூடிய நிலையில் மக்கள் உள்ளனரா, தனது முதலீட்டுக்கு பாதுகாப்பு உள்ளதா, முடியாதவிடத்து இழப்பில்லாமல் மீளப்பெறலாமா, அதனால் லாபம் பெறமுடியுமா என்பதெல்லாம் ஆராய்ந்தே முதலிடுவார்கள். இவர் சொல்லிவிட்டார் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு முதலிட அவர்களுக்கென்றொரு அறிவில்லையா? நான் சொல்லியோ அவர் சொல்லியோ யாரும் முதலிடவோ முடியாதே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2023 at 13:06, Cruso said:

அவர்களுக்கு இது பெரிய தொகையாக இல்லாவிடடாலும், பெற்றுக்கொண்ட போராளிகளின் குடும்பத்துக்கு பெரிய ஒரு உதவிதான்.

லைக்கா ஞானம் பவுண்டஷன் என்னும் பெயரில் இவர்கள் நாட்டு முழுவதும் வறிய மக்களுக்கான உதவிகளை இப்போது ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கக்கூடிய நல்ல முயட்சி. 

அருமையானதொரு கருத்து பாராட்டுக்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.