Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓயாத நிழல் யுத்தங்கள் – 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத நிழல் யுத்தங்கள் – 1

இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது.

இதை  ஒரு  தட்டையான  வரலாறாகச்  சொல்லி  விட  முடியாது. ஆனால்,  அந்தக்  காலங்களில்  நிகழ்ந்த  சம்பவங்கள்  சார்ந்து  முப்பரிமாணச்  சித்திரமாக  எங்கள் நினைவுகள்  இருக்கின்றன. இவை  சார்ந்து  சில  கட்டுரைகளை  தனித்தனியாக  எழுதும்  முயற்சி  இதுஇதன்  மூலம்  உலக  வரலாற்று  வாசிப்பையும்பகிர்வையும்  ஊக்குவிக்கும்  ஒரு  சிறு  முயற்சி.

இரு முன்னறிவித்தல்கள்:

1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும்.

2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives)  இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.   

கொரியா

ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு  முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது.

எப்படி இரு கொரியாக்கள் உருவாகின?

ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. 

இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல.

உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு.

இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார்.   

அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு

கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம்.

வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை

இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது.

ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது.

எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம்.

மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம்

இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர்  யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது.

சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு

large.Inchonlanding.jpg.4d942995fb8bbe138199beb3ad3989c3.jpg

இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். 

ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது.

அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்!

ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது.

இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது.       

சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்"

“கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது.

அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது.

எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

 

large.Koreanarmistice.jpg.55a5fc32136d08b4478f722010152e6b.jpg

ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். 

போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும்

கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது.

மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள்.

சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது.

   - முற்றும்

Edited by Justin
அமைப்புத் திருத்தம்
  • Like 9
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையில் படித்த உலகச் சரித்திரத்தில் இந்த கொரிய சண்டைகள் பற்றி சொல்லித் தரவில்லை......அதுதான் தெய்வமச்சான் அமெரிக்காவுடன் ஆக்ரோஷமாய் இருக்கிறார் போல .....!  😂

நன்றி justin ......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

 

ஜஸ்டின் பனிப்போர் பற்றிய உங்கள் ஆக்கம் அருமையாக உள்ளது. Looking forward for the rest of the article.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2023 at 03:05, Justin said:

அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்!

ஒருவருமே இதை உணரவில்லை என்பதைத்தான் இன்றைய உலக நிகழ்வுகள் காட்டுகிறது. 

நன்றி Justin அண்ணா.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி.தொடருங்கள் சரித்திரத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்த, கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள். இதை நியானி பின் செய்திருப்பதால், இந்த திரியிலேயே தொடர்ந்து எழுதுவேன். அடுத்தது பெர்லின் சுவரின் கதை, அடுத்த வெள்ளி இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2023 at 15:13, Justin said:

வாசித்த, கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள். இதை நியானி பின் செய்திருப்பதால், இந்த திரியிலேயே தொடர்ந்து எழுதுவேன். அடுத்தது பெர்லின் சுவரின் கதை, அடுத்த வெள்ளி இணைக்கிறேன்.

தொடருங்கள் - யாழில் இப்போ ஒரு புது மெருகு தெரிகிறது. அதில் இப்படியான கட்டுரைகளின் பங்கு முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத நிழல் யுத்தங்கள் - 2

ஆகஸ்ட் 13 ஆம் திகதி, 1961 பனிப்போர் கதையில் ஓர் முக்கியமான நாள். இந்த தினத்தில் தான் பனிப்போரின் இரு தரப்பினரும் மிக நெருக்கமாக எதிரெதிர் திசைகளில் ஆளணிகளை நிறுத்தி வைத்திருந்த ஒரு புவியியல் எல்லை ஒரு திடப்பொருளாக உருவானது. அந்த எல்லையின் பெயர் "பெர்லின் சுவர்". பெர்லின் சுவரின் கதை, ஆகஸ்ட் 13, 1961 முதல், நவம்பர், 9 1989 வரை நீழும் ஒரு சுவாரசியக் கதை. இந்தச் சுவரின் அரசியல், இராணுவ, மற்றும் சொந்த அனுபவக் கதைகள் இன்னும் எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேற்கும் கிழக்கும்

1945 இல்  ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருகிறது. இறுதியாக ஹிற்லரின் மரணத்திற்கு முன்னர், கிழக்கிலிருந்து நாசி ஜேர்மனியை சோவியத் படைகள் ஊடுருவி, ஜேர்மனியின் கிழக்கு மூலையில் அமைந்திருந்த பேர்லினை நிர்மூலமாக்கி விட்டு, மேலும் கிழக்கு நோக்கி முன்னேறியிருந்தன. மேற்கிலிருந்து, பிரிட்டன், அமெரிக்க, பிரெஞ்சுப் படைகள் முன்னேறி மேற்குப் பாதியில் நிலை கொண்டன. இதன் பின்னர், பொற்ஸ்டாம் மகாநாட்டின் முடிவுகளின் படி, ஜேர்மனியின் மேற்கை பிரிட்டனும், அமெரிக்காவும் நிர்வகிக்க, கிழக்கை சோவியத் நாடு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்ற ஏற்பாடு உருவானது. பின்னர், பிரிட்டனின் ஒரு பகுதி, பிரான்சிடம் கையளிக்கப் பட்டதோடு, மேற்கு ஜேர்மனியில் அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சுப் பகுதிகள் உருவாகின. இதில் கவனிக்க வேண்டியது, கிழக்கில், சோவியத் கட்டுப் பாட்டில் ஜேர்மனியின் வரலாற்றுப் புகழ் மிக்க பெர்லின் அமைந்திருந்தது. எனவே, பெர்லினையும் கிழக்கு, மேற்காகப் பாதியாக்கி நிர்வகிக்க ஏற்பாடு. இது 1946 இல் நிகழ்ந்த போது கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் தேசங்களாக உருவாகியிருக்கவில்லை. 1949 இல், கிழக்கு ஜேர்மனி (ஜனநாயக ஜேர்மன் குடியரசு) , மேற்கு ஜேர்மனி (ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு) ஆகிய இரு தேசங்கள் உருவாகின. மேற்கு ஜேர்மனி, மேற்கின் அடியொற்றிய ஜனநாயக ஆட்சி, தேர்தல்கள், நாடாளுமன்றம் என ஒரு ஆட்சி முறையை ஏற்படுத்திக் கொண்டது. கிழக்கு ஜேர்மனி, சோவியத் முறைமையைப் பின்பற்றி கிழக்கு ஜேர்மன் சோசலிசக் கட்சியெனப் படும் ஒரு கட்சியின் கீழ், சோவியத்தின் மறைமுகக் கட்டுப்பாட்டில் ஒரு ஆட்சியை உருவாக்கிக் கொண்டது.

கிழக்கும் மேற்கும் சந்தித்த பெர்லின்

ஏற்கனவே, கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளுக்கிடையே ஒரு கம்பி வேலி வகையிலான எல்லை எழுப்பப் பட்டிருந்தது. இது, தேச எல்லையாக முழு நீளத்திற்கும் இரு நாடுகளையும் பிரித்திருந்தது. கிழக்கு மேற்கு பெர்லினுக்கிடையே எல்லைகள் திடமாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில், ஒரு வீதியில் வரையப் பட்ட 6 அங்குலத் தடிப்பான ஒரு வெள்ளைக் கோடு தான் கிழக்கு மேற்கு பேர்லின்களைப் பிரித்த எல்லையாக இருந்தது. இதன் விளைவு, இரு தேசங்களுக்குமிடையே, ஜெர்மனியர்கள் சாதாரணமாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் கிழக்கு மேற்குப் பாதிகளிடையே 80 இடங்களில் மக்கள் இரு நகரங்களுக்குமிடையே சென்று வரக்கூடிய நுழைவாயில்கள் இருந்தன.

எனவே, கிழக்கில் இருந்து மேற்கிற்குள் நுழைய விரும்பும் பெரும்பாலானோர், கண்காணிப்புகள் குறைந்த பெர்லின் எல்லைகளின் வழியாகவே பயணம் செய்யலாயினர். கிழக்கு ஐரோப்பாவினூடாக மேற்கினுள் நுழையும் வெளிநாட்டு அகதிகளுக்கும் கூட இதுவே சிறந்த வழியாக விளங்கியது.

 மக்களை இழந்த கிழக்கு ஜேர்மனி

large.IMG_1247.jpg.bfe35c818623fd35bfa493896203c28b.jpg

மத்திய பெர்லினில் (Berlin Mitte) கிழக்கு - மேற்கு பெர்லின்களிடையேயான எல்லையின் 2008 ஆம் ஆண்டுத் தோற்றம். கிழக்கு பேர்லின் பக்கமிருந்து எடுக்கப் பட்ட படத்தில் தெரியும் அகற்றப் பட்ட கட்டிடம் முன்னாள் கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம். பின்னணியில், மேற்கு பெர்லின் பக்கம் தெரிவது Berlin Dom எனப்படும் பெர்லின் பேராலயம் (Berlin Cathedral) (படம்: சொந்த ஆவணம் 2008).

கிழக்கு ஜேர்மனி, சோவியத் கோட்பாட்டை அடியொற்றி உருவாக்கிய ஒரு கட்சி ஆட்சி முறை விரைவிலேயே அந்த நாட்டின் பொருளாதார, சமூக நிலைமைகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. வயதான கிழக்கு ஜேர்மனியர்கள் ஓரளவுக்கு சோசலிசத்தை, எளிமையான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு உயிரோடிருக்கக் கற்றுக் கொண்டனர். ஆனால், இளம் கிழக்கு ஜேர்மனியர்களுக்கு இந்த எல்லைகள் வகுத்த வாழ்க்கை தேங்கிய குட்டையில் இருப்பது போன்ற ஒரு நிலையாகத் தெரிந்தது. இதனால், கணிசமான எண்ணிக்கையில் இளம் கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனி நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள். 1951 இல், கிழக்கு ஜேர்மன் அரசு மேற்கு நோக்கிப் பயணம் செய்வோருக்கு பயண அனுமதி முறையொன்றைக் கொண்டு வந்தது. இதன் பிறகும், இளம் சந்ததி மேற்கு நோக்கி இடம் பெயர்வதைத் தடுக்க இயலவில்லை. 1951 முதல் 1961 வரையான 10 ஆண்டுகளில் மட்டும் 2 மில்லியன் வரையான கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனி நோக்கி இடம்பெயர்ந்தனர் - அவர்களுள் அரைவாசிப்பேர் 25 வயதுக்குட்பட்ட இளையோர் என ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது. இந்த மேற்கு நோக்கிய இடம்பெயர்வு, கிழக்கில் பாரிய பொருளாதாரத் தேக்க நிலையையும், சனத்தொகை வளராத தேக்க நிலையையும் உருவாக்கியது தான், பெர்லின் சுவரை கிழக்கு ஜேர்மனி எழுப்பக் காரணமாக இருந்தது. ஆனால், இதை 1951 இன் பயண அனுமதி போலச் செய்யாமல், இரகசியமாக ஒரே இரவில் செய்தால் தான் மக்கள் எல்லையைப் பிய்த்துக் கொண்டு ஓடிவிடாமல் தடுக்கலாம் என கிழக்கு ஜேர்மன் அரசு உணர்ந்திருந்தது.

ஒபரேசன் றோஸ்

 இந்த இரகசிய சுவர் எழுப்பல் நடவடிக்கைக்கு இடப்பட்ட பெயர் ஒபரேசன் றோஸ்! மிகவும் இரகசியமாக, மக்களுக்கு எந்த முன் சமிக்ஞையும் தராமல் திட்டமிடப் பட்ட இந்த நடவடிக்கைக்குத் தலைவராக எரிக் ஹெனேக்கர் இருந்தார் (இவர் பின்னர் கிழக்கு ஜேர்மன் தலைவராகவும் பதவி வகித்தவர்). மேற்கின் உளவு நிறுவனங்கள் கூட இது நடப்பதற்கு இரு நாட்கள் முன்னதாகத் தான் ஏதோ பெரிய திட்டம் இருப்பதை அறிந்து கொண்டிருந்தனர். ஒபரேசன் றோஸ், ஆகஸ்ட் 13 நள்ளிரவில் ஆரம்பமான போது, முதல் நடவடிக்கையாக இரு பெர்லின் பாதிகளுக்குமிடையிலான நிலக்கீழ் (U-bahn), தரைமேல் (S-bahn) ரயில்கள் உடனே நிறுத்தப் பட்டன - இதுவே மக்கள் ஏதோ நடக்கிறதென முதலில் உணர்ந்த தருணமாக இருந்தது. சடுதியாகவே கிழக்கு ஜேர்மன் எல்லைக் காவல் பொலிசின் பாதுகாப்போடு, பாரிய இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உயரமான கம்பி வேலிகள் கிழக்கு மேற்கு எல்லையில் எழுப்பப் பட்டன. இந்தக் கம்பி வேலிகள் அடுத்த ஒரு வாரத்தில் கொங்க்ரீட் சுவர்களால் பலம் பெற்றன. நூற்றுக் கணக்கான வீதிகள் கிழக்கு மேற்கு எல்லையில் மூடப் பட, பெர்லினில் இருந்த 80 எல்லைக் கடவைகள் 3 ஆக ஒரே இரவில் குறுக்கப் பட்டன. ஒபரேசன் றோஸ் வெற்றி, கிழக்கு பெர்லினில் இருந்து கிழக்கு ஜேர்மனியர் யாரும் மேற்கிற்கு நினைத்த வாக்கில் போக முடியாத சுவர் எழுந்து விட்டது.     

ஜேர்மன் மக்கள் என்ன செய்தார்கள்?

தடாலடியாக நிகழ்ந்த இந்த நடவடிக்கைக்கு, கிழக்கு ஜேர்மன் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் பெரிதாக வரவில்லை. அதற்கான அவகாசமும் இருக்கவில்லை. ஆனால், மேற்கு பெர்லின் வாசிகள், எல்லைப் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்து தம் எதிர்ப்பைக் காட்டினர். அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சுப் படைகள் -குறிப்பாக இவர்கள் இராணுவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர்- எந்த துலங்கலையும் காட்டாமல், மேற்கு பெர்லின் மக்களைக் கட்டுப் படுத்த மட்டும் செய்தனர். கிழக்கு ஜேர்மன் படையினருக்கு மேற்கின் திசை நோக்கி ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட தீர்க்கக் கூடாதென கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனாலும், பின்னரங்கில், சோவியத் படையின் தாங்கிகள் நின்றதையும் மேற்கின் உளவுப் பிரிவு பதற்றத்தோடு அவதானித்துக் கொண்டிருந்தது. ஆனால், முள் வேலிகள் எழ ஆரம்பித்ததுமே, இது ஒரு மேற்கு நோக்கிய சோவியத்  ஆக்கிரமிப்பு அல்ல என அமெரிக்கத் தரப்பு விளங்கிக் கொண்டதால், பதற்றம் தணிந்தது.

ஆனால், கிழக்கு பேர்லின் மக்கள் முன்னரை விட தீவிரமாக இப்போது மேற்கு பெர்லினை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். பெர்லின் சுவர் சில பகுதிகளில் வீடுகளின் கொல்லைப் புறச் சுவராகவே தெரியும் அளவுக்கு குடிமனைகளுக்கு நெருக்கமாகச் சென்றிருக்கிறது. இந்த இடங்களில் சில கிழக்கு பெர்லின் வாசிகள், சாளரங்கள் வழியாகக் குதித்து மேற்கு பெர்லினுக்குள் தப்பியோடிய சம்பவங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில், இத்தகைய சுவருக்கு அண்மைய வீடுகளின் கீழ் தளத்தை கிழக்கு ஜெர்மன் பொலிசார் முற்றாக சீல் வைத்து, மேல் தளத்தை மட்டும் விட்டு வைத்திருந்தனர். மக்கள், மேல் தளச் சாளரத்தின் வழியே மெத்தை, தலையணைகள் என்பவற்றை மேற்கு பெர்லின் பக்கம் எறிந்து, அவற்றின் மேல் குதித்து தப்ப முயன்ற சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.  வெளிப்படையாக இல்லாமல், தப்பியோடுவோரை வேறு வழிகளில் தடுத்து நிறுத்த முடியாத பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவும் வழங்கப் பட்டிருந்தது. பெர்லின் சுவர் இருந்த காலப்பகுதி முழுவதும், 170 பேர் வரை கிழக்கு ஜேர்மன் எல்லைப் பொலிசாரினால் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். ஆனாலும், மக்கள் தப்பியோடுவதும், சுரங்கப் பாதைகள் அமைத்து கிழக்கிலிருந்து மேற்கிற்கு ஆட்களைக் கடத்துவதும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதனால், மேற்கு ஜேர்மனியின் சனத்தொகையும் (அதனால் பொருளாதாரமும்) வளர, கிழக்கு ஜேர்மனியின் சனத்தொகை 1951 முதல் 1989 வரை வளராமல் தேங்கியது.   

மேற்கு அணியின் துலங்கல் என்னவாக இருந்தது?

 

large.Regan1987.jpg.2d2431fba2e0ed593b28b0b2b9abd3b9.jpg

1987 ஜூன் 12: மேற்கு பெர்லினில் றொனால்ட் றீகன் உரை. பின்னணியில் பெர்லின் சுவரும், அதன் பின்னால் பெர்லினில் பிரபலமான ப்றண்டன்பேர்க் வாயிலும் (Brandenburg Tor) தெரிகின்றன. (பட உதவி, நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம்).

மேற்கு ஜேர்மனி, கிழக்கிலிருந்து வரும் ஜேர்மனியர்களை அதிக அலட்டலில்லாமல் உள்வாங்கிக் கொண்டது. வருவோரில் பெரும்பாலானோர் வேலை செய்யக் கூடிய, மூளைசாலிகளாக இருந்தனர், எனவே மேற்கிற்கு இது ஒரு வரப்பிரசாதம். மேற்கு ஜேர்மனி திடீரென சோவியத் தாங்கிகளால் ஆக்கிரமிக்கப் படுமோ என்ற உசார் நிலையில் இருந்த அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சு அணிக்கு, பெர்லின் சுவர் சிறிது நிம்மதியைக் கொடுத்தது. ஆனாலும், பெர்லினுக்கு வெளியே இருக்கும் எல்லை வழியாக சோவியத் தாங்கிகள் நுழைவதை எதுவும் தடுக்க முடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும். இதற்கு ஒரே வழியாக, மேற்கில் நேட்டோவின் இருப்பை பலப்படுத்துவதும். பெர்லினை முழுவதும் கைவிட்டு விடாமல் இருப்பதுமே வழிகளென மேற்கு அணி உணர்ந்திருந்தது. பெர்லினை இராணுவங்களற்ற சூனியப் பிரதேசமாக மாற்ற வேண்டுமென்ற சோவியத் தரப்பு வாதங்களையும் மேற்கு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரே இரவில் எழுந்து, ஒரே இரவில் வீழ்ந்த சுவர்

large.IMG_1252.jpg.56129f8b0a9364cebc67ea7d541ed3a6.jpg

பெர்லின் சுவரின் எச்சங்கள் இன்றும் பெர்லின் நகரின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கே பேருந்துச் சாளரத்தினூடு தெரிவது பெர்லின் இந்திய தூதுவராலயத்திற்கு அருகில் காணப்படும் பெர்லின் சுவரின் எச்சம் (படம்: சொந்த ஆவணம், 2008).

கிழக்கு ஐரோப்பாவின் மீது சோவியத்தின் செல்வாக்கு படிப்படியாக பலவீனமடைந்து வந்து கொண்டிருந்தது. 1946 முதல், கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகளில் மக்கள் எதிர்ப்பு உள்ளூர் கம்யூனிச ஆட்சிகளுக்கெதிராக எழுந்த போதெல்லாம், சோவியத் தாங்கிகள் தெருவில் இறங்கி மக்களை எதிர் கொள்வதே வழமையாக இருந்தது. கிழக்கு ஜேர்மனியில் கூட ஒரு தொழிலாளர்  புரட்சி ஆர்ப்பாட்டம்  இப்படித் தான் சோவியத் உதவியுடன் அடக்கப் பட்டது. ஆனால், 1985 இல் மிகையில் கொர்பசேவ் சோவியத் நாட்டின் தலைமையை ஏற்றது முதல் சில மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார். இதனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஒரு கட்சி ஆட்சிக்கெதிராக புதிய கட்சிகளும், அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. போலந்தில், லெக் வலெசா தலைமையில் உருவான "ஒற்றுமை இயக்கம் – Solidarity Movement" இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கிழக்கு ஐரோப்பாவை மேற்கிலிருந்து பிரித்து வைத்திருந்த "இரும்புத் திரை" (Iron Curtain- இந்தச் சொற்பதத்தை முதலில் பாவித்தவர் வின்ஸ்ரன் சேர்ச்சில்) மீது, சிறு ஓட்டைகள் விழ ஆரம்பித்தன. நவம்பர் 1989 இல் பெர்லின் சுவர் தாரை தப்பட்டைகளோடு வீழந்தமை தான் செய்திகளில் பெரிதாக பிரபலமானது. ஆனால், அதே ஆண்டு ஏப்ரலில், அதிக ஊடக வெளிச்சமில்லாமல், ஹங்கேரி, ஆஸ்திரியாவின் எல்லையில் தான் எழுப்பி வைத்திருந்த மின்சார வேலியை அகற்றியது. ஹங்கேரியில் கம்யூனிச ஆட்சி ஈடாட்டம் கண்ட பின்னர் இந்த மாற்றம்.

யார் பெர்லின் சுவரைத் தகர்த்தது?

படிப்படியான கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களோடு, அமெரிக்காவின் தலைமையில் மேற்கு அணி செயல்படுத்திய அழுத்தங்களும் பெர்லின் சுவரைத் தகர்த்தன என்பதே சரியானது. 1987 இல் பெர்லின் சுவருக்கு அண்மையான ப்றண்டன்பேர்க் வாயிலுக்கருகில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு உரையை ஆற்றிய அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகன் “Mr. President, tear down this wall!” என்று  (கொர்பச்சேவ் நோக்கி) பகிரங்க அழைப்பு விடுத்தது ஒரு பிரபலமான நிகழ்வு.

இரு ஆண்டுகள் கழித்து, நவம்பர் 9, 1989 இல் ஒரு கிழக்கு ஜேர்மன் அதிகாரி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் " கிழக்கு, மேற்கு பேர்லின் வாசிகள் தடையின்றிப் பயணிக்கலாம்” என்ற தொனியிலான ஒரு அறிவித்தலை விடுத்த சில மணித்துளிகளில், ஆயிரக்கணக்கான கிழக்கு பேர்லின் வாசிகள் பெர்லின் சுவரை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். அன்றிரவு 11 மணிக்கு கிழக்கு ஜேர்மன் எல்லைக்காவலர்கள் தடுப்புகளின்றி மக்கள் மேற்கினுள் நுழைய அனுமதிக்க ஆரம்பித்தார்கள். 11.30 மணிக்கு சகல பெர்லின் எல்லைக் கடவைகளும் திறக்கப் பட்டன. பெர்லின் வாசிகள் சில இடங்களில், சுவரை அகற்ற ஆரம்பித்தார்கள். அடுத்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2 மில்லியன் கிழக்கு ஜேர்மன் வாசிகள் திறந்த பெர்லின் சுவரினூடாகப் பயணித்து மேற்கு ஜேர்மனியில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள் என ரைம்ஸ் இதழ் சொல்கிறது.

விளைவுகள் எவை?

பெர்லின் சுவர் அகற்றப் பட்டவுடனேயே கிழக்கும் மேற்கும் ஒன்று சேர்ந்து விடவில்லை, அது 1990 ஒக்ரோபரில் சோவியத் - மேற்கு அணிக்கிடையிலான பேச்சு வார்த்தைகளின் பின்னர் நிகழ்ந்தது. ஆனால், இரு ஜேர்மனிகளும் சேர்ந்தமை, சோவியத் ஒன்றியம் என்ற கம்யூனிச நாட்டின் சவப்பெட்டி மீது அடிக்கப் பட்ட முதல் பெரிய ஆணி என்று சொல்லலாம். இதையடுத்து நிகழ்ந்த சம்பவங்கள், சோவியத் ஒன்றியத்தை உள்ளிருந்தே நொருங்க வைத்த காரணிகளாகத் தொடர்ந்து, 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் முற்றாக இல்லாமல் போனது.

-மேலும் வரும்

Edited by Justin
  • Like 5
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரித்திரங்களை அறிந்து கொள்வதற்கு, பின்வரும் சந்ததியர்களுக்கு ஏன் எங்களுக்கும் கூட பயன் தரும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

சரித்திரங்களை அறிந்து கொள்வதற்கு, பின்வரும் சந்ததியர்களுக்கு ஏன் எங்களுக்கும் கூட பயன் தரும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

உண்மை ஐயா.

Justin தொடருங்கோ அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நல்ல சுவாரஸ்யங்களை அள்ளி அள்ளித் தெளிக்கிறீர்கள் ........தொடருங்கள் ஜஸ்டின் ........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2023 at 23:15, Kavi arunasalam said:

சரித்திரங்களை அறிந்து கொள்வதற்கு, பின்வரும் சந்ததியர்களுக்கு ஏன் எங்களுக்கும் கூட பயன் தரும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

 

On 16/8/2023 at 01:45, ஏராளன் said:

உண்மை ஐயா.

Justin தொடருங்கோ அண்ணை.

 

On 16/8/2023 at 03:14, suvy said:

நல்ல நல்ல சுவாரஸ்யங்களை அள்ளி அள்ளித் தெளிக்கிறீர்கள் ........தொடருங்கள் ஜஸ்டின் ........!   😁

மூவருக்கும் நன்றி! உங்கள் மூன்று பேருக்காகவாவது சுவாரசியமான பனிப்போர் நிகழ்வுகளைப் பற்றிய இந்த தொடர் 10 நாட்களுக்கொரு முறை வரும். வேலையும் இறுக்கமாக மாறி விட்டதால் 10 நாட்கள்! 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

மூவருக்கும் நன்றி! உங்கள் மூன்று பேருக்காகவாவது சுவாரசியமான பனிப்போர் நிகழ்வுகளைப் பற்றிய இந்த தொடர் 10 நாட்களுக்கொரு முறை வரும். வேலையும் இறுக்கமாக மாறி விட்டதால் 10 நாட்கள்! 😂

தற்போது வரை 603 பேர் பார்த்துள்ளார்களாம் அண்ணை.
மூவர் கருத்தெழுதி ஊக்கப்படுத்தினாலும் கணிசமானோர் வாசித்திருக்கிறார்கள்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா, சும்மா நல்ல பொருளான விசயங்களை எழுதினால் ஆர் திரும்பி பார்ப்பினம்🤣.

சும்மா உனக்கு 19 எனக்கு 54 எண்டு எழுதினா நாங்கள் எல்லாம் இறங்கி ஒரு கலக்கு கலக்கலாம்.

வாசிச்சிட்டன் எண்டு பொய் சொல்லமாட்டன். ஆனால் வாசிப்பன்.

தொடரவும்🙏.

55 minutes ago, Justin said:

 

 

மூவருக்கும் நன்றி! உங்கள் மூன்று பேருக்காகவாவது சுவாரசியமான பனிப்போர் நிகழ்வுகளைப் பற்றிய இந்த தொடர் 10 நாட்களுக்கொரு முறை வரும். வேலையும் இறுக்கமாக மாறி விட்டதால் 10 நாட்கள்! 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தற்போது வரை 603 பேர் பார்த்துள்ளார்களாம் அண்ணை.
மூவர் கருத்தெழுதி ஊக்கப்படுத்தினாலும் கணிசமானோர் வாசித்திருக்கிறார்கள்.

ஓம், வாசிக்கிறார்கள் அல்லது கிளிக் ஆவது செய்கிறார்கள் என நினைக்கிறேன். முறைப்பாடாகச் சொல்லவில்லை, ஆனால் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து ஊக்குவிப்பதற்கு நன்றி என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

3 hours ago, goshan_che said:

சும்மா, சும்மா நல்ல பொருளான விசயங்களை எழுதினால் ஆர் திரும்பி பார்ப்பினம்🤣.

சும்மா உனக்கு 19 எனக்கு 54 எண்டு எழுதினா நாங்கள் எல்லாம் இறங்கி ஒரு கலக்கு கலக்கலாம்.

வாசிச்சிட்டன் எண்டு பொய் சொல்லமாட்டன். ஆனால் வாசிப்பன்.

தொடரவும்🙏.

 

நன்றி, நீண்ட கட்டுரை, கதையென்றால் நானும் வார இறுதியில் சேர்த்து வைத்துத் தான் வாசிப்பது.

59 minutes ago, இணையவன் said:

தொடருங்கள் ஜஸ்ரின்.

நன்றி.

நன்றி!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று கட்டுரைகளை எழுதி எம்மை அறிவூட்டும் ஜஸ்ரின் அவர்களுக்கு நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Justinஅண்ணா, யாழிணையத்தில் தலைவரைப் பற்றிய தொடர், நன்னியின் வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் உங்களது இந்த தொடர் எல்லாமே மிகவும் பயனுள்ள தொடர்கள். 

உண்மையில் இப்படியான தொடர்களை இங்கே அல்லது புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இலகுவான மொழி நடையில் உயர் வகுப்புகளிற்குப் பயன்படுத்தலாம். ஒரே சிலப்பதிகாரத்தையும் இராமயாணத்தையும் சொல்லிக் கொடுக்காமல். 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணையின் உண்மைகளை விளக்குகின்ற இப்படியான பயனுள்ள கட்டுரைகள் இலங்கை பாடத்திட்டதில் சேர்க்கபட வேண்டும் 👍    நான் அறிந்த வரையில் அங்கே பாடத்திட்டத்தில் இல்லை என்றாலும் ஆசிரியர்கள் சிலரால் தனிப்பட்ட முறையில் ரஷ்யாவும், சீனாவும்  உலகையும் ஏழைகளையும் காப்பாற்ற போராடுபவர்கள், அதற்கு மாறாக மேற்குலகநாடுகள் உலகை கொள்ளை அடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் என்ற கருத்து போதிக்கபடுகின்றது. இதையே நம்பி தமிழர்கள் தஙகள் வாழ்க்கைக்கே உதவி செய்யாத இந்த தவறான சிந்தனையை வெளிநாடுகளிலும் சுமந்து கொண்டு திரிகின்றனர். பயனற்ற இராமயாணம் சொல்லி கொடுப்பதால் என்ன பயன் கற்பனை பாத்திரங்கள் குரங்கு அனுமான் சக்தி கொண்ட கடவுள் என்றும், இராவணன் பலம் கொண்ட தமிழ் மன்னன் என்றும் கற்பனை செய்து மகிழ்கிறார்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத நிழல் யுத்தங்கள் - 3

பனிப்போரின் முக்கிய திருப்பு முனைச் சம்பவங்களைப் பற்றிப் பேசும் இந்தத் தொடரில், கொரியப் போர், பெர்லின் சுவர் என்பன பற்றிப் பார்த்தோம். இத்தகைய முக்கிய நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, பனிப்போரின் முக்கிய அம்சமாக விளங்கிய ஒரு அம்சம், வல்லரசுகளுக்கிடையேயான உளவுப் போர். இத்தகைய உளவுப் போரின் சாட்சிகளாக விளங்கிய பலர் பின்னாட்களில் சிறந்த நாவலாசிரியர்களாக உருவாகி, அந்த உளவுப் போரின் உள்ளடக்கங்களை வாசகர்களுக்கு வழங்கினர்.

உளவுப் போர்

1991 இல் முடிவுக்கு வந்த கம்யூனிச, மேற்கு தேசங்களிடையேயான பனிப்போர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆரம்பித்ததாகச் சுட்டிக் காட்ட முடியாது. அந்தளவுக்கு பல்வேறு நிகழ்வுகளில், பரிணாமங்களில் பனிப்போர் நிகழ்வுகள் அடங்கியிருந்தன. ஆனால், உளவு நடவடிக்கைகள் தான், சோவியத்திற்கும், மேற்கின் தலைமை நாடான அமெரிக்காவிற்கும் இடையே முதலில் பனிப்போரின் அடையாளமாக ஆரம்பித்தன.

அமெரிக்க அணுவாயுத நுட்பத்தை உளவு மூலம் கவர்ந்த சோவியத் ஒன்றியம்

அமெரிக்காவின் தலைமை அணுவாயுத விஞ்ஞானி ஒப்பன்ஹிமரின் வரலாறு திரைப்படமாக வெளிவந்திருக்கும் இக்காலப் பகுதியில் இதைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவின் அணுவாயுத தயாரிப்பு முயற்சி என்பது மிக இரகசியமாகப் பேணப்பட்ட ஒரு முயற்சி. ஜனாதிபதியாக றூஸவெல்ட் இருந்த போது ஆரம்பிக்கப் பட்ட இந்த முயற்சி பற்றி, றூஸவெல்ட் இறந்து தான் பதவிக்கு வரும் வரை துணை ஜனாதிபதியாக இருந்த ட்ரூமனுக்கே தெரியாமல் தான் இருந்திருக்கிறது.

ஆனால், மன்ஹற்றன் திட்டம் நடந்து கொண்டிருந்த போதே, சோவியத் ஒன்றியம் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கள் உளவாளிகளை விஞ்ஞானிகளாக இந்த திட்டத்தினுள் விதைத்து விடும் அளவுக்கு, சோவியத் ஒன்றியத்தின் உளவு வலைப் பின்னல் மேற்கில் பலமாக இருந்திருக்கிறது. 2019 வரையான ஆய்வுகளின் படி, குறைந்தது 5 பேர், அணுவாயுத ஆய்வுத் திட்டத்தில் வேலை செய்தோர், சோவியத் உளவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

large.FuchsKlausE.J.jpg.32c5e29df327817c59c81add7f3a2879.jpg

கிளாஸ் fபுக்ஸ்: லாஸ் அலாமோசில் பணியாற்றிய சோவியத் உளவாளிகளுள், வெற்றிகரமாக மொஸ்கோவிற்கு அமெரிக்க அணுவாயுத இரகசியங்களைக் கடத்திய ஒருவர். சோவியத் விஞ்ஞானிகளின் திறமையுடன், fபுக்ஸ் வழங்கிய அணுவாயுத இரகசியங்களும் 1949 இல் முதல் அணுவாயுதத்தை சோவியத் ஒன்றியம் பரீட்சிக்க உதவியது. பட உதவி நன்றியுடன்: லொஸ் அலாமொஸ் தேசிய ஆய்வுகூட ஆவணம்.

இவர்களுள், அணுவாயுத வடிவமைப்பு தொடர்பான இரகசியங்களை வெற்றிகரமாக மொஸ்கோவிற்குக் கடத்தியவராக கிளாஸ் fபுக்ஸ் (Claus Fuchs) இருந்தார். லாஸ் அலமோசில் இருந்த அணுவாயுத ஆய்வுகூடத்தில் இருந்த 5 சோவியத் உளவாளிகளில், fபுக்ஸ் மட்டும் தான், அணுவாயுதத்தின் சகல தகவல்களும் தெரிந்த பௌதீகவியலாளராக இருந்தார். இதனால், 1950 இல் சோவியத் ஒன்றியம் முதலில் பரீட்சித்த தனது அணுவாயுதம் பல விடயங்களில் அமெரிக்கா 1945 இல் நாகசாகி மீது வீசிய புளூட்டோனியம் குண்டு போலவே இருந்தது.

இந்த சோவியத் உளவாளிகள் எல்லோருமே தண்டனை அனுபவிக்கவில்லை. 1950 இல் அமெரிக்க உளவு அமைப்பின் நடவடிக்கையினால் இந்த 5 பேரில் 4 பேர்கள் அடையாளம் காணப்பட்டனர். கிளாஸ் fபுக்ஸ், பிரிட்டனில் குற்றத்தை ஒப்புக் கொண்டு 10 ஆண்டுகள் சிறை சென்றார், சிறையிலிருந்து மீண்டதும் கிழக்கு ஜேர்மனி சென்று அங்கே ஒரு நல்ல பதவியில் நீடித்தார். இந்த சோவியத் உளவாளிகளுள் மிக இளையவரான தியோடர் ஹால், தண்டிக்கப்படாமலே தன் வாழ்வைத் தொடர்ந்தார். இருவர் மரண தண்டனை பெற்றனர். இன்றும் கூட ரஷ்ய, சீன அரசுகளுக்கு உளவாளிகளாக செயல்படும் அமெரிக்க பிரஜைகள், இராணுவத்தில் பணியாற்றுவோர் சிலர் ஒவ்வொரு வருடமும் கண்டறியப் பட்டுக் கைது செய்யப் படுகின்றனர். அனேகமாக பணத்திற்காக இவர்கள் உளவு வேலையில் ஈடுபடுகின்றனர். ஆனால், கிளாஸ் fபுக்ஸ், தியோடர் ஹால் போன்ற அக்கால உளவாளிகள், மனப்பூர்வமாக சோவியத் நாட்டின் கம்யூனிச கோட்பாடுகளை ஆதரித்து உளவாளிகளாக மாறினர் என்றே விசாரணைகளில் தெரிய வந்தது. 

பிரிட்டனின் உளவு அமைப்பை ஆழ ஊடுருவிய சோவியத் உளவாளிகள்

பனிப்போர் கால உளவுப் போரில், அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்கள் திருடப் பட்டது கூட ஒரு அதிர்ச்சி தரும் நிகழ்வல்ல. இதை விட ஆச்சரியமான உளவுப் போர்முனை பிரிட்டனிலும், ஐரோப்பிய நிலப்பரப்பிலும் 1980 கள் வரை நிலைத்திருந்தது. இதில், பிரிட்டனின் எம்.ஐ 6 (MI6) என்ற இராணுவப் புனலாய்வுப் பிரிவினுள், ஹரோல்ட் கிம் fபில்பி (Harold “Kim” Philby) என்ற சோவியத் உளவாளி நீண்டகாலமாகப் பணியாற்றிய சம்பவம் இன்றும் திரைப்படங்களாகவும், நூல்களாகவும் வலம் வருகிறது. “சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தம், மேற்கின் இலாப நோக்க சித்தாந்தங்களை விட உலகிற்கு நல்லது” என்ற எண்ணத்தில் இருந்த fபில்பி உட்பட்ட கேம்பிரிட்ஜ் பட்டதாரிகள் ஐவர் (இவர்களை The Cambridge 5 என்பர்)- பிரிட்டனின் பல்வேறு இரகசிய திட்டங்களிலும் அரச ஊழியர்களாக இணைந்து சோவியத்தின் கே.ஜி.பி அமைப்பிற்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளாக நீண்ட காலம் வேலை செய்தனர். இந்த ஐவரில், மூவர் அமெரிக்காவிலும் பிரிட்டன் சார்பில் பணியாற்றியதால், ஏராளமான சோவியத் எதிர் (counterintelligence) நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் சோவியத் ஒன்றியத்திற்கு முன்கூட்டியே தெரியவந்தன.

இவ்வாறு 20 வருடங்கள் தொடர்ந்த கேம்பிரிட்ஜ் ஐவரின் உளவு வேலை 1951 இல் அமெரிக்க புலநாய்வு அமைப்புகள், கே.ஜி.பியினுள் ஊடுருவிப் பெற்ற உளவுத் தகவல்களோடு முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த ஐவரினதும் தலைவர் என்று கருதப் பட்ட கிம் fபில்பி, 1963 வரை தப்பியிருந்து உளவுப் பணியைச் செய்த பின்னர், மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்று அங்கே 1988 வரை வாழ்ந்தார். கிம் fபில்பியின் உளவுப் பணிகளுக்காக, சோவியத் ஒன்றியம், மாதாந்த ஓய்வூதியமும் வழங்கி 90 களில் அவரை ஒரு சோவியத் ஒன்றிய தபால் முத்திரையின் மூலம் கௌரவித்தது. இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அமெரிக்க, மேற்கு அணிகள் என்ன செய்து கொண்டிருந்தன?   

உளவாளிகளின் பாலம்  

மேற்கு நாடுகளின் உளவுப்பலம், பெரும்பாலும் சோவியத் கட்டுப் பாட்டிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளினுள், அந்த நாட்டு மக்களை வைத்தே உளவு வேலைகள் செய்வதில் இருந்தது. இந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வார்சா ஒப்பந்த (Warsaw Pact)  நாடுகள் என்ற , நேட்டோவிற்கு எதிரான அமைப்பின் கீழ் சோவியத் ஒன்றியம் ஒருங்கிணைத்திருந்தது. ஒப்பிற்கு ஒரு உள்ளூர் கட்சி கம்யூனிச ஆட்சி நடத்துவதாகக் காட்டப் படும், ஆனால் பின்னரங்கில் சோவியத்தின் கே.ஜி.பி ஏஜென்டுகளும், செம்படையின் தாங்கிகளும் குவிக்கப் பட்டிருக்கும் (இப்படியான ஒரு கே.ஜி.பி ஓற்றராக கிழக்கு ஜேர்மனியின் ட்றெஸ்டன் நகரில் சில ஆண்டுகள் பணியாற்றியவர் தான் தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி புரின்).

இந்த நிலையில், மேற்கின் ஒரே கவலை, எப்போது சோவியத் ஒன்றியம், கிழக்கில் இருந்து தன் தாங்கிகள் சகிதம் மேற்கினை நோக்கிப் பாயும் என்பதாக இருந்தது. இதனைச் சமாளிக்க, ஏராளமான மேற்கின் உளவாளிகள் வார்சா ஒப்பந்த நாடுகளில் தங்கி வேலை செய்தார்கள். மேற்கு கிழக்கு ஜேர்மனிகளிடையே, பெர்லின் நகரில் சுவர் இருந்தாலும், இரு பகுதியின் ஆயுதப் படையினரும் முன்னரே அறிவித்து விட்டு நுழையும் ஏற்பாடு இருந்தது. இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, சோவியத் அணியும், மேற்கின் பக்கமிருந்து அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளும் விசேட வாகனங்களில் உத்தியோக பூர்வமான பயணங்களை மேற்கொண்டு உளவுப் பணிகளிலும் ஈடுபடுவது ஒரு திறந்த இரகசியமாக இருந்தது. மேற்கின் அணிகள், சோவியத் புதிதாக உருவாக்கிய ரி- 80 (T-80) தாங்கியை இப்படியான ஒரு உளவுப் பயணத்தின் போது தான் முதன் முதலில் படம் பிடித்து வாஷிங்ரனை எச்சரிக்க உதவின. சில சந்தர்ப்பங்களில் இந்த அணிகள் பிடிபடுவதும், மிக அரிதாகக் கொல்லப் பட்டதும் கூட நிகழ்ந்திருக்கிறது. அவ்வாறு ஒரு தரப்பினால் கைதாகும் உளவாளிகளை, கைதிகள் பரிமாற்றம் மூலம் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையும் இருந்திருக்கிறது. பெர்லினில், ஹவெல் நதியின் மேலாக, மேற்கு, கிழக்கு பெர்லின்களை இணைக்கும் கிளைனிக் (Glienicke) பாலத்தில் அனேகமான இந்தக் கைதிகள் பரிமாற்றங்கள் நிகழ்ந்தமையால், அந்தப் பாலத்திற்கு "உளவாளிகள் பாலம்" (Bridge of Spies) என்றும் ஒரு பெயர் உருவானது. இப்படி சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்குமிடையே இப்பாலத்தினூடாகப் பரிமாறப்பட்ட ஒரு முக்கிய நபராக கேரி பவர்ஸ் (Gary Powers) என்ற அமெரிக்கர் விளங்குகிறார்.

70,000 அடிகள் உயரத்திலிருந்து உளவு

large.U-2PlaneNationalSpaceMuseum.jpg.9f284c6c3571c6d19945822c6120ef4e.jpg

"தும்பி" என்று அழைக்கப் பட்ட யூ- 2 உளவு விமானத்தின் ஒரு தோற்றம். 70,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடிய இந்த உளவு விமானம் இன்று யூ 2 சி எனும் நவீன வடிவத்தில் பாவனையில் இருக்கிறது. பட உதவி, நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி.

கப்ரன் கெரி பவர்ஸ் பிரபலமாவதற்கு, அவர் செலுத்திய விமானம் தான் காரணம். பனிப்போரின் உச்சத்தில், 1956 ஜூலை 4 ஆம் திகதி, அமெரிக்க விமானப் படை முதன் முதலாக ஒரு புது வகை விமானத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தது. யூ 2 (U-2) என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் மிகவும் இரகசியமான திட்டம் மூலமாக , லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் வடிமைக்கப் பட்ட ஒரு உளவு விமானம். சாதாரண பயணிகள், மற்றும் சரக்கு விமானங்கள் 35,000 அடிகள் உயரத்தில் பறப்பவை. பி- 29 (B-29) வகையான, அமெரிக்காவின் அணுகுண்டு காவும் விமானங்கள் (Strategic bombers) 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியவை. இந்த யூ 2 உளவு விமானம், 70,000 அடிகள் உயரத்தில், ரேடார்களின் கண்ணில் படாமல் பறக்கக் கூடியவையாக வடிவமைக்கப் பட்டிருந்தது. 60 அடிகள் நீளமான, 80 அடிகள் இறக்கை விஸ்தாரம் கொண்ட யூ 2 விமானத்தை "தும்பி" (Dragonfly) என்று செல்லமாக அழைப்பர்.

large.HighaltitudeCameraU-2Plane.jpg.dbf87dd8478d70792cda29ccca5d5495.jpg

யூ 2 உளவு விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி வாய்ந்த ஒளிப்படக் கமெராக்கள். 1959 இல், இக் கமெராக்கள் பிடித்த படங்கள், தற்போதைய கூகிள் ஏர்த் படங்களை விட துல்லியம் கூடியவையாக இருந்ததாக ஒரு ஆய்வு அண்மையில் உறுதி செய்திருந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி.

70,000 அடிகள் உயரத்தில் ஒட்சிசனின் செறிவு குறைவு, எனவே இந்த விமானத்தை இயக்கும் ஒற்றை விமானி, ஒட்சிசனை  சிலின்டரில் இருந்து சுவாசித்த படி விமானத்தைச் செலுத்த வேண்டும். விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி மிக்க கமெராக்கள் மூலம் கீழே இருக்கும் கட்டமைப்புகள், ஏவுகணைத் தளங்கள் என்பன படம் பிடிக்கப் பட்டு சேகரிக்கப் படும்.

இத்தகைய இரகசியம் நிறைந்த யூ 2 விமானத்தை சி.. யின் கீழ் பணியாற்றிய கப்ரன் கெரி பவர்ஸ் மே மாதம் முதலாம் திகதி, 1960 இல் பாகிஸ்தானின் ஒரு அமெரிக்க தளத்திலிருந்து எடுத்துக் கொண்டு வட மேற்காக சோவியத் நிலப்பரப்பின் மீது பறக்க ஆரம்பித்தார். சோவியத்தின் பிரதான நிலப்பரப்பின் மீது 2900 மைல்கள் பறந்து, உளவுப் படங்கள் எடுத்த பின்னர் ஆர்கேஞ்சல் எனும் வட சோவியத் நகரூடாகக் கடந்து நோர்வேயில் தரையிறங்குவதே நோக்கமாக இருந்தது. ஆனால், யூரல் மலைப்பிரதேசத்தின் மீது வைத்து, விமானத்தின் ஒட்சிசன் வினியோகத்தில் கோளாறு ஏற்படவே, விமானத்தை 70,000 அடிகள் உயரத்திலிருந்து 35,000  அடிகளுக்கு இறக்க வேண்டிய நிலை கெரி பவர்ஸுக்கு ஏற்படுகிறது. இது கூட சோவியத் ஏவுகணைகளுக்கு எட்ட முடியாத உயரம் என்றே அமெரிக்கா நினைத்திருந்தது, ஆனால் ஒரு புதிய வகை ஏவுகணை மூலம் கெரி பவர்ஸின் யூ 2 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது, கெரி பவர்ஸ் பரசூட் மூலம் பாய்ந்து உயிர் தப்பி, சோவியத் ஒன்றியத்திடம் கைதியானார். முதலில் கப்ரன் பவர்ஸ் உயிரிழந்து விட்டார் என்று அமெரிக்கா செய்திக் குறிப்பை தயாரித்துக் கொண்டிருந்த போதே, அவர் உயிரோடிருப்பதை சோவியத் ஒன்றியம் வெளிப்படுத்தியது. அத்தோடு, அமெரிக்காவின் இரகசிய யூ 2 விமானத்தின் சிதைவுகளையும் சோவியத் பாதுகாப்புப் பிரிவு கைப்பற்றி ஆராய ஆரம்பித்தது. இந்த யூ 2 விமான விபத்தின் பிரதான விளைவாக, பாரிசில் நடக்கவிருந்த மேற்கு சோவியத் அணுவாயுதப் போட்டி தொடர்பான மாநாடு ரத்துச் செய்யப் பட்டது. 2 வருடங்கள் உளவுக் குற்றச் சாட்டில் சோவியத் சிறையில் அடைக்கப் பட்ட கெரி பவர்ஸ், 1962 இல் உளவாளிகள் பாலத்தின் வழியாக ஒரு சோவியத் உளவாளியோடு கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப் பட்டார்.

இந்த நிகழ்வுகளால் சோவியத் ஒன்றியம், அமெரிக்காவின் உளவுப் பறப்புகள் பற்றி அறிந்து கொண்டாலும், யூ 2 விமானத்தின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தவில்லை. இரு ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் இருக்கும் கியூபாவில் சோவியத் ஒன்றியம் அணுவாயுத ஏவுகணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த ஏவுகணைக் கட்டுமானங்களை உளவுப் பறப்பினால் படம் பிடித்து வெளிக்கொணர்ந்தது இதே யூ 2 விமானங்கள் தான். இதனால் விளைந்த கியூப ஏவுகணைப் பிணக்கை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

இன்றும் அமெரிக்கா டசின் கணக்கான யூ 2 உளவு விமானங்களைப் பாவனையில் வைத்திருக்கிறது. புதிய தொழில் நுட்பங்களைப் பரீட்சிக்க இந்த விமானங்கள் பயன்படுகின்றன. ஆனால், செய்மதித் தொழில்நுட்பங்கள் இப்போது விருத்தியடைந்திருப்பதால், எந்தக் கட்டுப் பாடுமின்றி பறப்பு மூலமான (overflight) உளவு பல நாடுகளுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. 

உளவுத் தொழிலைப் பிரபலமாக்கிய பனிப்போர்

உளவுப் போரின் பல்வேறு பரிமாணங்களை நூல்களாகவும், திரைக்காவியங்களாகவும் படைத்து, பனிப்போரின் போதான உளவு நடவடிக்கைகள் திரில் நிறைந்தவையாக மக்கள் மத்தியில் பிரபலமாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுள் சில படைப்புகள் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானவை, எனவே வரலாற்றை சுவாரசியமாக வாசிக்க/பார்க்க விரும்புவோருக்கு இந்தப் புனைவுகள் கூட நல்ல வரலாற்றுத் தகவல் மூலங்களாக இருக்கின்றன. John Le Carre எழுதிய “Tinker, Tailor, Soldier, Spy” என்ற நாவல் - இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது - கிம் fபில்பி சம்பந்தப் பட்ட சம்பவங்களின் அடிப்படையிலானது. ஸ்ரிவன் ஸ்பீல்பேர்க்கின், “Bridge of Spies” என்ற திரைப்படமும் சில உண்மை சம்பவங்களின் ஒரு நாடகபாணி விபரிப்பு.

இது போன்ற நூல்கள், திரைப்படங்கள் மூலம், “நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபடுவது ஒரு த்ரில்லிங்கான நல்ல செயல்” என்ற முன்மாதிரி மேற்கு நாடுகளில் தொடர்ந்து விதைக்கப் பட்டு வருகிறது. இது, முடிந்து போன பனிப்போரின் ஒரு எச்சம்!

-தொடரும்

Edited by Justin
இலக்கங்களில் பிழை திருத்தம்.
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான வரலாற்றுத் தகவல்கள், நன்றி அண்ணை.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்க மிச்சம்.. பச்சை முடிஞ்சுது.. நன்றி அண்ணை நேரம் ஒதுக்கி தருவதற்கு..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத நிழல் யுத்தங்கள்-4

ஒக்ரோபர் மாதம் ஆரம்பித்திருக்கிறது. பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கியூப ஏவுகணைப் பிணக்கு நிகழ்ந்து இந்த மாதம் 61 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த முக்கிய நிகழ்வின் பின்னணியைப் பார்க்கலாம்.

வெளியே தெரியாத பேராபத்து

பனிப்போரின் சுவாரசியமான கதைகள் சம்பவங்களுக்குப் பின்னணியில், ஒரு இருண்ட ஆபத்து எப்போதும் மறைந்திருந்தது. அணுவாயுதப் போர் தான் அந்த ஆபத்து. பனிப்போர் காலத்தில், அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் அணுவாயுதங்களை உற்பத்தி செய்து, பரிசோதித்து வந்தன. இதனோடு இணைந்து, இந்த அணுவாயுதங்களைக் காவிச் செல்லும் தொழில் நுட்பங்களையும் இரு நாடுகளும் தொடர்ந்து நவீன மயப்படுத்தி வந்தன.

உலகின் முதல் அணுவாயுதம், அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் பசுபிக்கிற்கு எடுத்துச் செல்லப் பட்டு, அங்கே மீள ஒன்றிணைக்கப் பட்டு, பி 29 என்ற விசேட விமானத்தில் எடுத்துச் செல்லப் பட்டு வீசப்பட்டது. இது நடந்து 10 ஆண்டுகளில், ஏவுகணைகள் மூலம் அணுவாயுதங்களை இலக்குகள் நோக்கி அனுப்பி வைக்கும் தொழில் நுட்பத்தை இரு நாடுகளும் உருவாக்கி விட்டன. கையிருப்பில் இருக்கும் அணுவாயுதங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஏவுகணைத் தொழில் நுட்பம் அணுவாயுதப் போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக உருவாகி விட்டது.

large.SovietMRBM-SS-4.jpg.07cd39648abb4abafc1b0d401b77e1f3.jpg

சோவியத் ஒன்றியம் கியூபாவில் நிறுத்தி வைத்த SS-4 வகை ஏவுகணை, மொஸ்கோ இராணுவ அணிவகுப்பின் போது. Medium-Range Ballistic Missile (MRBM) ஆன இதன் வீச்சு குறைந்தது 600 மைல்கள். அமெரிக்காவின் பல நகரங்கள் இந்த வீச்சினுள் அடங்கியிருந்தன. பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம்.

சோவியத் ஒன்றியம் அணுவாயுதங்களை அமெரிக்கா நோக்கி ஏவுவதற்கு R-16 ரக ஏவுகணைகளை வைத்திருந்தது. திரவ எரிபொருள் மூலம் இயங்கிய இந்த ஏவுகணைகளை உடனே ஏவி விட முடியாதபடி பல மணி நேரத் தயாரிப்பு தேவையாக இருந்தது. இதற்கு எதிராக, அமெரிக்கா வைத்திருந்த அணுவாயுத தாங்கி ஏவுகணைகளில் Minuteman என்ற வகை திட எரிபொருள் மூலம் இயங்கிய உயர் தொழில் நுட்பத்தைக் கொண்டிருந்தது. இதன் பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, சில நிமிடங்களில் இந்த ஏவுகணையை தயாராக்கி ஏவி விடக் கூடியதாக இருந்தது. இது ஒரு பாரிய பலச்சம நிலைப் பிரச்சினையாக சோவியத் ஒன்றியத்திற்குத் தெரிந்தது. ஏனெனில், அணுவாயுதப் போரில் யார் முதலில் தாக்கி, எதிர் தரப்பின் துலங்கலைப் பூச்சியமாக்குகிறார் என்பதிலேயே வெற்றி தங்கியிருக்கிறது.

1960 களில், இந்த விடயத்தில் அமெரிக்காவின் கைகள் ஓங்கியிருந்தமையை சோவியத் ஒன்றியம் அறிந்தே இருந்தது - ஆனால், வெளிப்படையாக தங்களிடம் அதிக ஏவுகணைகள் இருப்பதாக ஒரு பிரச்சாரத்தை செய்து “Missile gap” என்றொன்று இருப்பதை அமெரிக்க நேட்டோ தரப்பை ரஷ்யர்கள் நம்ப வைத்திருந்தனர்.    இத்தகைய அனுகூலங்களோடு, நேட்டோ தரப்பிற்கு தங்கள் உறுப்பு நாடுகளில் அணுவாயுதம் தரித்த ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. மிக முக்கியமாக, சோவியத் அச்சுறுத்தலில் இருந்து தப்ப நேட்டோவில் இணைந்த துருக்கி, நேட்டோவின் ஏவுகணைகளை தன் நாட்டில் நிறுத்தி வைக்கவும் அனுமதித்திருந்தது. டசின் கணக்கான ஜுபிரர் (Jupiter) ஏவுகணைகள் அமெரிக்க விமானப் படையின் கட்டுப் பாட்டில் துருக்கியினுள் வைக்கப் பட்டிருந்தன. இதற்கு நிகராக, அமெரிக்காவிற்கு அருகில் மிக நெருங்கி தனது படைகளை நிறுத்தவோ, ஏவுகணைகளை வைத்திருக்கவோ சோவியத் ஒன்றியத்திற்கு வசதிகள் இருக்கவில்லை - ஆனால் 1959 இல் இந்த நிலை மாறியது!

அமெரிக்கா உருவாக்கிய கியூபா

கியூபா, அமெரிக்காவின் தென்கிழக்குக் கரையிலிருந்து 90 மைல்கள் தொலைவிலிருக்கும் ஒரு தீவுக் கூட்டம். இன்று 11 மில்லியனுக்கும் அதிக மக்கள் கொண்ட, கரீபியன் தீவுகளில் இரண்டாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடு கியூபா. 1902 இல் கியூபா உருவான போது, அங்கே சோசலிசம், கம்யூனிசம் இருக்கவில்லை. உண்மையில், ஸ்பெயினின் காலனி ஆட்சியிலிருந்து கியூபா விடுதலை பெற, காலனி எதிர்ப்பாளராக அன்று திகழ்ந்த அமெரிக்கா உதவி புரிந்தது. இதனால், அமெரிக்காவின் இராணுவத் தளங்களை அமைக்கவும், அமெரிக்க தொழிலதிபர்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் கியூபாவில் முன்னுரிமை கிடைத்தது.

கரும்புச் செய்கையும், அதிலிருந்து கிடைக்கும் சீனியும் தான் கியூபாவின் பிரதான உற்பத்திப் பொருட்கள். 1950 களில் fபுல்ஜென்சியோ பரிஸ்ராவின் தலைமையில், கியூபா ஊழலும், அடக்கு முறைகளும் மலிந்த தேசமாக அமெரிக்காவின் ஆதரவுடன் திகழ்ந்த காலத்தில் தான் fபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் தலைமையில் ஆட்சி மாற்ற முயற்சி புரட்சியாக துளிர் விட்டது. ஒரு கட்டத்தில், பரிஸ்ராவின் ஊழலை அமெரிக்காவினால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க ஆதரவு நீங்கி விட, பரிஸ்ராவின் ஆட்சி வீழ்ந்து காஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர் - இது நிகழ்ந்தது 1959 இல். 

கம்யூனிச கியூபா

ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ உடனடியாக கம்யூனிச நாடாக கியூபாவை மாற்றவில்லை. அமெரிக்கா வழமை போல தன் நலன்களைப் பேண இடம் இருந்தது. ஒரு கட்டத்தில், நியூ யோர்க் நகருக்கு காஸ்ட்றோ விஜயம் செய்து பலமான மக்கள் வரவேற்பைப் பெற்ற நிலை கூட இருந்தது. ஆனால், அமெரிக்காவின் சி.. மத்திய அமெரிக்காவில் செயல்படுத்தியது போல, கியூபாவின் ஆட்சியை முற்றிலும் தம் சார்பாக மாற்றும் முயற்சிகளை எடுத்து, 1961 இல் ஒரு இரகசிய இராணுவ நடவடிக்கையைக் கூட எடுத்திருந்தது. இதனை அவதானித்த சோவியத் ஒன்றியம், காஸ்ட்ரோவை தன் பக்கம் அணைத்துக் கொண்டது. 1962 இல், காஸ்ட்ரோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக (அதுவும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்டாக) பகிரங்கமாக அறிவித்தார். ஒரு படி மேலே சென்று, கியூபாவில் இருந்த அமெரிக்க கம்பனிகளை அரசுடமையாக்கிய அறிவிப்பும் வெளிவந்தது. அமெரிக்கா பதிலுக்கு, கியூபாவின் சீனி உட்பட்ட ஏற்றுமதிகளைத் தடை செய்து, கியூப பொருளாதாரம் வீழ்ச்சியடைய வைத்தது.

ஜோன் கெனடியும் நிகிரா குருசேவும்

இந்த வேளையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இளையவர் கெனடி இருந்தார். சோவியத் தலைவராக இருந்த நிகிரா குருசேவ் அனுபவசாலி, படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னேறி மேலே வந்த பழுத்த அரசியல் வாதி. இந்த அனுபவ அசம நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தான் குருசேவ் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுத்தி வைக்கும் திட்டத்தை முடுக்கி விட்டார்.

வெளிப்படையாக கெனடியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய குருசேவ், ஜேர்மனியின் பெர்லின் நகர் முழுவதையும் சோவியத் தரப்பிடம் விட்டு விடும் படி அழுத்தம் கொடுத்தார். அமெரிக்காவின் இராணுவ தலைமையோ, பெர்லினில் இருந்து ஒரு அங்குலம் கூட நேட்டோ அணி பின்வாங்கக் கூடாது என்று கெனடிக்கு ஆலோசனை கொடுத்திருந்தது. கெனடியும் இதை விட்டுக் கொடுக்காமல் இருந்த நிலையில், ஒரு அழுத்தமாகத் தான், கியூபாவிற்கு சோவியத் ஏவுகணைகள் நகர்த்தப் பட்டன. 

 கடத்தி வரப்பட்ட சோவியத் ஏவுகணைகள்

கியூபாவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடையே இருந்த கப்பல் போக்குவரத்தைப் பயன்படுத்தியே சோவியத் ஏவுகணைகள் பாகங்களாக கியூபாவினுள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த இரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1962 செப்ரெம்பர் வரை அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரியவரவில்லை. ஆனால், சோவியத் சாதாரண ஆயுதங்களை கியூபாவிற்கு வழங்கி வருகிறது என்பதை அமெரிக்கா அறிந்தே இருந்தது. கியூபாவின் மீது கண்காணிப்புப் பறப்புகளை மேற்கொண்ட U-2 உளவு விமானத்தின் படங்கள் தான், ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் கியூபாவில் கட்டப் படுவதை முதலில் வெளிக்கொண்டு வந்தன. 

large.SanCristobalMRBMlaunchsite.jpg.9dc8455c880a385a060e14e471af3eed.jpg

கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை ஏவக்கூடிய ஏவு தளமும், வாகனங்களும். விமானத்திலிருந்து எடுக்கப் பட்ட உளவுப் படம். பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம்.

இதே வேளை, அமெரிக்கா இரகசியமாக அல்லாது, நேரடியாகவே கியூபா மீது ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்த திட்டத்திற்கு நாள் குறிக்கப் பட்டிருக்கவில்லை. கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் இருப்பதை அறிந்து கொண்ட ஒக்ரோபர் 14 முதல், அடுத்த இரு வாரங்கள் வாஷிங்ரனும், கிரெம்ளினும் இந்தப் பிணக்கைச் சமாளித்த விதம் பல பாடங்களுக்கு வழி வகுத்தது எனலாம்!

அமெரிக்காவின் பதில் என்ன?

கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டுமென்று ஒரு தரப்பும், உடனடியாக கியூபா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று ஒரு தீவிரமான தரப்பும் கெனடிக்கு ஆலோசனை வழங்கின. கெனடியோ, மூன்றாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்: கியூபாவைச் சுற்றி கடல்வழிப் போக்குவரத்திற்கு ஒரு தடையை (quarantine) உருவாக்கி, மேலதிக ஏவுகணைப் பாகங்கள் வராமல் தடுப்பதே அந்த மூன்றாவது வழி. இந்தத் தடை மூலம், கியூபாவை நோக்கி வரும் சகல சோவியத் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை பரிசோதிக்க வேண்டும். சோவியத் ஒன்றியம், தான் அனுப்பிய சில கப்பல்களை பரிசோதிக்க அனுமதிக்காமலே பயணத்தை இடை நடுவில் கைவிட்டு திரும்புப் படி செய்தது.

ஆனால், ஏற்கனவே கியூபா வந்து விட்ட ஏவுகணைகளை அகற்ற ரஷ்யர்கள் மறுத்தனர். ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் U-2 உளவு விமானம் கியூபாவின் வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப் பட்டது. இறுதியில், கியூபா மீதான அமெரிக்கத் தாக்குதல் தான் ஒரே தெரிவு என்ற நிலைக்கு அமெரிக்க தரப்பு வந்து விட்ட போது, குருசேவ் நிபந்தனையோடு கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்ற ஒப்புக் கொண்டார். கியூபா மீது தாக்குதல் தொடுக்கக் கூடாது, துருக்கியில் இருந்து நேட்டோவின் ஜுபிரர் ஏவுகணைகளை அகற்ற வேண்டும், ஆகியவையே குருசேவின் நிபந்தனைகளாக இருந்தன.

முதல் நிபந்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு தாக்குதல் நடத்தப் படாதென்ற உறுதி மொழி வழங்கப் பட்டது. இரண்டாவது நிபந்தனையை அமெரிக்கா இலகுவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதைச் செய்வதானால், கியூபாவிற்கு சோவியத் வழங்கிய குண்டு வீச்சு விமானங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்ற அமெரிக்காவின் பதில் நிபந்தனையை சோவியத் ஒன்றியம் ஏற்றுக் கொண்டது.

ஒக்ரோபர் 27, 1962 இல் கியூப ஏவுகணைப் பிணக்கு முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் கடல் போக்கு வரத்துத் தடை நவம்பரில் விலக்கப் பட்டது. சோவியத் ஏவுகணைகளையும், குண்டு வீச்சு விமானங்களையும் கியூபாவிலிருந்து அகற்றிய பின்னர், 1963 மத்தியில் நேட்டோ துருக்கியில் இருந்து தனது ஏவுகணைகளை விலக்கிக் கொண்டது. உலகம், தனது வழமையான பதற்றமற்ற பார்வையாளர் பணியைச் செய்ய ஆரம்பித்தது.  

பாடங்களும் விளைவுகளும்

அணுவாயுதப் போர் விளிம்பு நிலைக்குக் கொண்டு சென்ற கியூப பிரச்சினையில், இரு தலைவர்களும் நடந்து கொண்ட முறை, வெளிக்காட்டிய பொறுப்புணர்வு என்பன அவதானிகளால் பாராட்டப் படுகின்றன. சில ஆண்டுகளின் பின்னர் தனது பின்வாங்கும் முடிவைப் பற்றிக் கருத்துரைத்த குருசேவ் இப்படிச் சொல்கிறார்: "உலக அழிவு பற்றிய அச்சம் எங்கள் பின்வாங்கும் முடிவிற்கு முக்கியமான காரணம். இன்றைய உலகின் ஒரு குறைபாடு, யாரும் அழிவைப் பற்றி அச்சம் கொள்வதில்லை!".

கியூபப் பிணக்கின் விளைவாக பல நல்ல மாற்றங்கள், அமெரிக்க சோவியத் தலைமைகளின் தொடர்பாடலில் ஏற்பட்டன. புதிதாக வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்குமிடையேயான நேரடி தொலைபேசி இணைப்பொன்றும் (hot line) இதன் பின்னர் உருவாக்கப் பட்டது. மட்டுப் படுத்தப் பட்ட அளவில், ஒருவரது அணுவாயுதப் பரிசோதனையை எதிரணி கண்காணிக்கும் ஏற்பாடுகளும் உருவாக்கப் பட்டன.

கியூபாவிற்கு என்ன நிகழ்ந்தது?

கியூபா தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் பொருளாதாரம் சிதைந்த, கறுப்புச் சந்தை மூலம் மக்கள் வாழ்க்கையை நகர்த்தும் ஒரு கம்யூனிச தேசமாகத் தொடர்கிறது. அமெரிக்க பொருளாதாரத் தடையினால் கியூபா இழந்த வருமானத்தை, சோவியத் ஒன்றியத்தின் உதவிகளால் முழுமையாக ஈடு கட்ட இயலவில்லை. 1990 வரை, கியூபாவிற்கு சோவியத் ஒன்றியம் பொருளாதார உதவிகளை வழங்கி வந்தது.

1991 இல், கொர்பச்சேவின் ஆட்சியில் சோவியத் ஒன்றியம் பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. மேற்கிடம் கடனும், உதவிகளும் பெற்று ரஷ்யர்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைக்கு சோவியத் ஒன்றியம் இறங்கியது. இந்த உதவிகளுக்கு மேற்கு அணி விதித்த பல நிபந்தனைகளுக்கு சோவியத் குழு கட்டுப் பட வேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு நிபந்தனை, சோவியத்தின் ஆதரவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நஜிபுல்லா அரசு, கியூபாவின் காஸ்ட்ரோ அரசு ஆகியவற்றிற்கான நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்பதாகும். மேற்கு எதிர்பார்த்ததை விட இலகுவாக இந்த நிபந்தனைகளை கொர்பச்சேவ் குழு ஏற்றுக் கொண்டது. இரு நாடுகளுக்குமான சில பில்லியன் ரூபிள்கள் உதவியை சோவியத் ஒன்றியம் நிறுத்திக் கொண்டது. அடுத்த 6 மாதங்களில் காபூலின் நஜிபுல்லா அரசு வீழ்ந்தது. கியூபா, இன்னும் தப்பியிருக்கிறது.   

-          தொடரும்

 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலவற்றை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா.

13 hours ago, Justin said:

சோவியத் தலைவராக இருந்த நிகிரா குருசேவ் அனுபவசாலி, படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னேறி மேலே வந்த பழுத்த அரசியல் வாதி.

வட கொரிய இளவரசர் கிம்யொங் உன் பதவிக்கு வந்ததை பேரன்றோ, வெளிநாடுகளில் உள்ள  ஈழதமிழர்களுக்கு இளவரசி தலைமை தாங்க வருவதை போன்றோ அல்லாமல்  சோவியத்நாட்டில் நிகிரா குருசேவ் வந்தது சிறப்பு👍

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 3   1970 – 1977 காலப்பகுதியில நாட்டினைத் தன்னிறைவு நோக்கிய பாதையில் கொண்டுசெலுத்திய சிறிமாவோ பண்டாரநாயக்கா என்.எம்.பெரேரா  ஹெக்டர் ஹொப்பேக்கடுவா போன்றோர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பலபொருட்களிற்கும் தடைவிதித்திருந்தனர். அதையும்மீறி இறக்குமதி செய்யமுற்படும் பொருட்களிற்கு அதிகவரியினை விதித்து உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவித்துவந்தனர். இதனால் அரிசிபோன்ற அத்தியாவசியப்பொருட்களிற்கே பெரும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொருட்களைப் பங்கீடுசெய்வதற்காக நாட்டின் பலபகுதிகளிலும் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வளர்தெடுக்கப்பட்டிருந்தன. இவைகள் கூட்டுறவுசங்கம் என்ற பெயரில் அரசதாபனங்கள் போன்று செயற்பட்டன. அன்றைய பொருளாதார நிலையில்  வங்கிகளைவிட அதிகளவு பணம் பரிமாறும் நிறுவனங்களாக இவைவிளங்கின. குறிப்பாக கூறினால்  யாழ்ப்பாண குடாநாட்டில் பணம்புரளும் ஸ்தாபனங்களாக இவையேவிளங்கின. இதனைவிட  நகரங்களிலிருந்த  வங்கிகளைப்போலன்றி  சிறுசிறுகிராமங்களில்கூட இவைகள் கிளைவிட்டு பரவியிருந்தன. இதனால் ஒவ்வொருகிளையிலும் சேரும்பணத்தினை திரட்டி  தாய்ச்சங்கத்தில் ஒப்படைக்கும் பணியிலும் சிலர் நியமிக்கப்பட்டு இருந்தனர். வங்கிகளில்சேர வைப்பிலிடப்படும் இத்தொகைப்பணம் கொழும்பில் அரச மற்றும் கூட்டுத்தாபனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் விலைக்குமாற்றாக வழங்கப்படும்.  இப்பணம் சிறுசிறு உற்பத்தியாளர்கட்கு  அவ்வப்பகுதி  கூட்டுறவுசங்கங்களின் மூலம் கடனாகவும்  வழங்கப்படுவதுமுண்டு. இவ்வகையில் 1970 ஆரம்பகாலங்களில் உருவாகிய போராளிக்குழுக்களின் பார்வையில் இவை இலகுவாக சிக்கிக்கொண்டன. 1973இல்  வல்வெட்டித்துறை கெருடாவில்வீதியில் வைத்து    பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு  கொண்டுசெல்லப்பட்ட   36.000 ரூபாயும்   1974 நவம்பர் மாதத்தில்   தெல்லிப்பளை கூட்டுறவுச் சங்கத்திற்கு   சொந்தமான பணம் 107000.00  ரூபாய் மற்றும் காசோலைகளும் இளைஞர்களினால் பறித்தெடுக்கப்பட்டிருந்தன. இதுபோலவே  1975மே மாத இறுதியில்   அளவெட்டி கூட்டுறவுச்சங்கத்திற்கு உரிய சுமார்   37.000 ஆயிரம்ரூபாய்   பிரபாகரன் தலைமயிலான ‘புதிய தமிழ்ப்புலிகள்’ மற்றும்   செட்டி குழுவினரால் பறித்தெடுக்கப்பட்டது.   இத்தாக்குதல் நிகழ்விற்கான தரவுகள்   பற்றிக்கால் எடுக்கப்பட்டன.  அதேபோல் இந்த முன்முயற்சிக்கான   கார் சாவகச்சேரியில்  இருந்து பிரபாகரன்  கலாபதி  பற்றிக்  அவருடைய நண்பனான இன்பம் என்போரால் பறித்து வரப்பட்டிருந்தது. திருநெல்வேலியில் அனுபவமிக்க செட்டிசாரதியாக அமர்ந்து கொள்ள அதுவரைசாரதியாக இருந்த பற்றிக் வேவுக்காரராக மாற்றப்பட்டு வெற்றிகரமான இப்பணப்பறிப்பு நடைபெற்றது. இவ்வாறு திரட்டப்பெற்ற பணத்தினைவைத்து துரையப்பாவை குறிவைப்பதில் தலைவர்பிரபாகரன் திட்டங்களை வகுக்க முற்;ப்பட்டார். ஆனால் செட்டியுடைய எண்ணமெல்லாம் மேலும் பணத்தினை தேடுவதாகவே அமைந்திருந்தது. செட்டியை தம்முடன் இணைத்துக்காள்ள மறுத்த பெரிய சோதி மற்றும் தங்கத்துரையின் கூற்றுக்கள் உண்மையானநிலையில் செட்டியுடன் கருத்து வேறுபாடுகொண்;ட தலைவர்பிரபாகரனும் பிரிந்து தனியாக செயற்படவாரம்பித்தார். அளவெட்டிபணப்பறிப்பு  சம்பவத்தின்பின் செட்டியுடன் முரண்பட்ட இன்பம் இக்குழுவினரிடமிருந்து ஏற்கெனவே பிரிந்துசென்றிருந்தார். ஆனால் மனந்தளராத தலைவர் தொடர்ந்தும் துரையைப்பாவையே தனது முதல்க்குறியாக கொண்டு செயற்படலானார். தான் அறிந்தகாலம் முதல் தலைவர் பிரபாகரனின் தீர்க்கமான குணத்தை புரிந்துகொண்டிருந்த செட்டி ஒருசில நாட்களிலேயே தன்தவறை உணர்ந்து கொண்டார் போலும்   தானாகவே தலைவரைத் தேடிவந்து கெருடாவில் கந்iசாமி கோவிலடியில் அவரைச்சந்தித்து சமரசம் செய்துகொண்டார்.   இவ்வாறு செட்டி மீண்டும் இணைந்து செயலாற்ற சம்மதம் தெரிவித்த ஒருசிலநாட்களில் பொலிசாரினால்  கைதுசெய்யப்பட்டார். குற்றச்செயல்களைப் புரிவதில் பிரியமும் அசாதரண துணிச்சலும் கொண்டவர் செட்டி ஆவார். எனினும் தலைவர்பிரபாகரனிடம் நிரம்பியிருந்த தமிழினத்திற்கான வேட்கையையும் அதற்காக அவர் வகுத்துக்கொண்ட  தீர்க்கமான பாதையையும் பிரபாகரனுடைய திடமான போராட்டவெறியினையும் இனங்கண்ட ஒருவராகவே ஆரம்பத்தில் காணப்பட்டார். எனினும் பழக்கதோசமும் பொலிசாரின் தொடரான நெருக்குதலும் காரணமாக இறுதியில் பொலிசாரின் உளவாளியாக மாற்றமடைந்தார். இதனால்  1981 மார்ச் 16  இல் குட்டிமணியுடன் சென்ற தலைவர் பிரபாகரனினால்  அவரது பிறப்பிடமான கல்வியங்காட்டிலேயே செட்டி சுட்டுக்கொல்லப்பட்டார். தனபாலசிங்கம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவரை யு ளுழுடுனுஐநுசு’ளு ஏநுசுளுஐழுN என்னும் நூலில் அதன் ஆசிரியரான முன்னால்  குருநகர் இராணுவமுகாம் பொறுப்பதிகாரியும்  ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் பேச்சாளருமான சரத்முனசிங்கா Pழடiஉந ஐகெழசஅயவெ ஆகவே தனது  நுலின் 251வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளமை இங்கே சுட்டிக் காட்டத்தக்கது. முதலாவது இலக்கை செயல்ப்படுத்துவதற்கு முன்பாகவே  செட்டி கைதுசெய்யப்பட்டதால் அவரிடம் இருந்த அளவெட்டிப்பணத்தின் கணிசமான பகுதி போராட்டத்திற்கு பயன்படாது போயிற்று. அத்துடன் இவர்களிடமிருந்த ஒரேயொரு 4.05 துப்பாக்கியுடனேயே செட்டி கைது செய்யப்பட்டிருந்தார். செட்டி கைது செய்யப்பட்டதால் புகலிடம்தேடிய அவரது நண்பனான பற்றிக் வேறு வழியின்றி தலைவருடன் ஒட்டிக்கொண்டார்.  தலைவர்பிரபாகரன் தன்னிடமிருந்த பணத்தில் எதையும் வியாபாரமாகக் கொள்ளும் பற்றிக் மூலமாக இரண்டு கைத்துப்பாக்கிகளை கொள்வனவுசெய்தார். சுப்பிரமணியம் பற்குணராசா என்ற இயற்பெயரையுடைய  இவர் பற்குணம் எனவும் அழைக் கப்பட்டார். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த கெக்கிராவை செல்லையாவின் கடையில் பற்றிக் ஊழியராக இருந்தவர். கெக்கிராவை உட்பட மேலும் பலஇடங்களில் மதுபானவிற்பனைநிலையம் மற்றும் பலசரக்கு கடைகளையும் வெற்றிகரமாக நடத்திவந்தவர் செல்லையா ஆவார். செல்லையாவின் வாடிக்கையாளரான ஒருபொலிசாரின் உதவியினால் பிரபாகரனின் ஆலோசனையை முன் யோசனையாக ஏற்றுக்கொண்டு இரண்டாம் உலகமகாயுத்த காலத்திற்குரிய 38 இலக்கரக  இரண்டு ரிவோல்வர் வகையான கைத்துப்பாக்கிகளையும் அவற்றுக்குரிய இரண்டு குண்டுகளினையும் பன்னிரண்டு வெற்றுத்தோட்டாக்களினையும் பற்றிக் கொள்வனவு செய்திருந்தார். தலைவர்பிரபாகரனின் வழிகாட்டலில் வெறுமனே  இரண்டுகைத்துப்பாக்கிகள் இரண்டுகுண்டுகளுடனும் முதன்நிலைப் போராளியான கலாபதியும் நண்பனும்  செட்டியின் நண்பனான பற்றிக் ஆகிய நால்வரும் துரையப்பாவின் மீதான தாக்குதல் முயற்சிக்கு முன்னுரிமை அளித்து செயற்படமுனைந்தனர். ஆனால் வல்வெட்டித்துறையிலே வாழ்ந்த முன்னைய மூவருக்கோ யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே  பணியாற்றி வாழ்ந்த   நாலாமவரான பற்றிக் இவர்களில் யாருக்குமே துரையப்பாவை தெரியாது.  இதுபோலவே அவரது நடமாட்டங்களைப் பற்றிய எவ்விததகவல்களும் உடனடியாக இவர்களிற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் யூலைமாத ஆரம்பநாட்களில் தலைவருடன் இந்தியாவில் அறிமுகமாயிருந்த  கிருபாகரன்  தலைவர் பிரபாகரனைச்சந்தித்து  அந்த அரிய தகவலைக் கூறினார். பழம்நழுவி பாலில்விழுவது எனும் சொற்றொடருக்கு இசைந்தவாறு  அமைந்த அத்தகவல்   யாழ்மேயர் அல்பிரட் துரையப்பா ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் மானிப்பாய் அந்தோனியார் கோவில் என்பவற்றிற்கு வழிபாட்டிற்காக செல்பவர் என்பதுடன்  கத்தோலிக்கரானபோதும் ஞாயிற்றுக்கிழமைகளில்  பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலிற்கும்  தவறாது  செல்கின்றார் என்பதேயாகும்.  மேற்கூறிய தகவலை கிருபாகரன் உறுதிப்படுத்தியதும்  தலைவர் தனது அடுத்தநகர்விற்கு தயாரானார். ஏனெனின் கிருபாகரன் துரையப்பாவின் வசிப்பிடமான  கொய்யாத்தோட்டத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த அரியாலையை சொந்த இடமாகக் கொண்டிருந்தவர். இதனால் துரையப்பாவை நன்கு தெரிந்திருந்தார்.  தலைமறைவாக இந்தியாவில் இருந்தகாலத்திலும் 1974 ஒக்டோபரில் துரையப்பாவின் மரியாதைக்குரிய ‘பிரதமர்’ ஸ்ரீறிமாவே பண்டாரநாயக்காவின்   இந்தியவருகையை எதிர்த்து  சென்னையில் அமைந்திருந்த  சிறிலங்கா தூதுவராலயத்தையும்  இராஜரட்ணம் ஸ்ரேடியத்திற்கு அண்மையில் இருந்த  பௌத்தகோயிலையும் கிருபாகரனும்  நண்பர்களும் குண்டுவைத்து தகர்க்கமுயற்சித்தனர்.  இதற்காக கைதுசெய்யப்பட்ட இவருக்கும் இவரது நண்பர்களிற்கும் எதிராக சென்னை நீமன்றத்தில் குற்றம்சாட்டப் பெற்றிருந்தது  இவ்வழக்கின் விசாரணைக்காலங்களில் கோடம்பாக்கத்தில் வாழ்ந்திருந்த  பெரியசோதி நடேசுதாசன்  குலம் என்பவர்களுடன்  தலைவரும் நடந்து சென்றே மேற்படி வழக்கினைப் பார்த்திருந்தார். அத்துடன் துரையப்பாவின்மீது தனிப்பட்டவன்மத்தை முன்னிறுத்திய காண்டீபன் அமிர்தலிங்கமும் அவரது நண்பனான    கிருபாகரனும்   தொடர்ச்சியாக துரையப்பாவை தாக்குவதற்கு தருணம்பார்த்து செயலாற்றிவந்தனர். மேற்படிவிடயங்களை   நன்கு தெரிந்திருந்த தலைவர் பிரபாகரனும் மீண்டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் துரையப்பாவின்  மேற்படி நடவடிக்கையை உறுதிசெய்தபின் தொடர்ந்துவரும் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலடியில் வைத்து துரையப்பாவைத் தாக்கலாம் எனமுடிவு செய்தார். ஏனெனில் கிருபாகரனின் தகவலின் அடிப்படையில்  துரையப்பாவை வேறுபலரும் குறிவைத்து இருப்பதால்  மானிப்பாயிலும் அவ்வாறனவர்களில் சிலர் துரை யப்பாவின் வருகைக்காக காத்திருக்கக்கூடும் என எதிர்பார்தார். இதனைவிட மக்கள் செல்வாக்குப் பெற்ற துரையப்பாவை பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் தாக்குவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியும் என்பதையும் தீர்க்கதரிசனமாக தலைவர் முடிவுசெய்தார். காரணம் துரையப்பாவை ஆரம்பத்தில் தீர்துக்கட்டமுயன்ற பொன்.சிவ குமாரனை இறுதியில் பிடிக்கத்துரத்தியவர்கள் பொதுமக்கள்தான் என்பதையும் இதனாலேயே பொலிசாரின் முற்றுகைக்குள் சிவகுமாரன் அகப்பட்டு  சயனைட் உட்கொண்டு   வீரமரணமடைந்நதும்  பகிரங்கரகசியம் ஆகும்.           போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 4   1975யூலை 20திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதியாக துரையப்பாவின் நடமாட்டங்களை கிருபாகரன் உறுதிசெய்தநிலையில் அடுத்துவரும் 27.7.1975  ஞாயிற்றுக்கிழமை அன்று துரையப்பாவின் மீதானதாக்குதலை நடத்துவது எனத்தீர்மானித்தார். இந்நிலையில் அடிக்கடி கலாபதியையும் நண்பனையும் சந்தித்து தாக்குதலிற்கான திட்டங்களை வகுக்கஆரம்பித்தார். இவ்வாறு ஒருநாள் தலைவரும் கலாபதியும் நெற்கொழு மைதானத்திற்கு அருகாமையில் தாம்செய்யப்போகும் தாக்குதலைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் சிலநாட்களிற்கு முன்பாக விளக்கமறியலில்  இருந்து விடுதலையாகி  ஊருக்கு வந்திருந்த குட்டிமணி அவ்விடத்திற்கு வந்தார். எதிர்பாராமல் இவர்களிருவரையும் கண்டவுடன் ‘கள்ளப்பயல்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்திருக்கிறியள் என்னமோ ஆ…..ஆ’ என நகைச் சுவையுடன் கூறியவாறு சென்றார். பாம்பின்கால் பாம்பு அறியுமல்லவா!….யூலை 27ந்திகதி காலை 8மணிக்கு யாழ்பஸ்நிலையத்தில் கிருபா கரனையும பற்றிக்iயும் சந்திப்பதாக கூறிவிட்டு 26.07.1975 சனிக்கிழமை நண்பகலுக்கு சற்றுப்பின்னாக வல்வெட்டித்துறைக்கு வந்த தலைவர் கலாபதியிடம் தனது திட்டத்தைக்கூறி அடுத்தநாள் தாம்நடத்த இருந்த தாக்குதலிற்கான இறுதித்தயாரிப்பு வேலைகளில் இறங்கினார். பலநாட்கள காத்திருந்த இலக்குத்தயார் ஆனால் தாக்குதலிற்குத் தேவையான குண்டுகள்தான் போதாது. ஆனால் கலாபதியின் தொழில்நுட்பத் திறமையில் தலைவர்பிரபாகரன் எப்பொழுதும் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். தாம்முன்னரே கொள்வனவு செய்துவைத்திருந்த 38ம் இலக்க ரக துப்பாக்கிக்கான வெற்றுக்குண்டுகளினை நிரப்பி அவைகளைக்கொண்டே துரையப்பாவைத் தாக்கும் முடிவினை இருவரும் செயற்படுத்த முனைந்தனர். அதற்கேற்ப தம்மிடம் இருந்தபழைய வேட்டைத்துப்பாக்கிக் குண்டுகளின் உள்ளீடுகளான வெடிமருந்துகளினை 38இலக்க கைத்துப்பாக்கி குண்டுகளில் நிரப்புவதன் மூலம்  அவைகளை பாவிக்கக்கூடிய குண்டுகளாக மாற்றமுடியும் என நம்பினர்.யாழ்ப்பாணக்குடாநாடே அன்று இரவு அமைதியாக  உறங்கிக் கிடந்தது. ஆனால் தலைவரும் கலாபதியும் நண்பனும் மட்டுமல்ல காத்தலிங்கம் மகேந்திரதாஸ் என்ற ஆயக்கிளியும்கூட அந்த இரவு உறங்கவில்லை. ஏனெனின் ஆயக்கிளியின் பொறுப்பிலிருந்த காணியின் கார்கராஜ்  உடன் இணைந்திருந்த அறையிலேயே பிரபாகரனும் கலாபதியும் அடுத்தநாள் தாக்குதலுக்கான குண்டினைத தயார்செய்து கொண்டிருந்தனர். விளாம்பத்தையென முன்அத்தியாயங்களில் விபரிக்கப்பட்ட காணியின் வடக்குப் பகுதியினை ஆயக்கிளியின் சகோதரன் முருகுப்பிள்ளை விலைகொடுத்து வாங்கியிருந்தார். அதற்குரிய சுற்றுமதிலை அமைத்ததுடன் கார்க்கராஜ் உடன்கூடிய ஒருஅறையையும் அவ்விடத்தில் அமைத்து  தனது சகோதரனா னான ஆயக்கிளியிடம் அக்காணியை ஒப்படைத்திருந்தார். இதனால் ஆயக்கிளியின் நண்பர்களும் மற்றும் பல இளைஞர்களும் சுதந்திரமாக தமது பொழுதுகளை கழிப்பதற்காக அவ்விடத்தில் கூடுவர்.  சில இளைஞர்கள் இரவில் அங்கேயே படுத்துஉறங்குவதும் உண்டு. மேற்படி இடத்தினையே அன்றைய இரவில் துப்பாக்கிக்குண்டுள் தயாரிப்பதற்காக தலைவரும் கலாபதியும் நண்பனும் பயன்படுத்திக்கொண்டனர். தாக்குதலின் பின் துரையப்பாவின் காரினைப் பயன்படுத்தி அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்வதே இவர்களின் திட்டங்களிலொன்றாகும்.  ஆனால் பிரபாகரனுக்கோ அல்லது கலாபதிக்கோ கார் ஓட்டத்தெரியாதிருந்தது.  பற்றிக் இன்னமும் பழக்கநிலையிலேயே இருந்தார். ஆனால் ஆயக்கிளி இவரைவிட முன் அனுபவமுள்ள சாரதியாக காணப்பட்டார்.  இதன் காரணமாக அடுத்தநாள் தாம் செய்யப்போகும் தாக்குதலில் ஆயக்கிளி யையும் இவர்கள் தம்முடன் இணைத்துக்கொண்டிருந்தனர். முன்பு ஒருதாக்குதல் முன் முயற்சிக்காக வல்வெட்டித்துறை ‘ஈஸ்வரி நகை மாளிகை’ உரிமையாளரான புவனேஸ்வரராஜாவுடைய காரினை   கையகப்படுத்தி யாழப்பாணம்   கொண்டுசெல்ல முயன்றனர் அப்பொழுதும் ஆயக்கிளியே சாரதியாக நியமிக்கப்பட்டிருந்தார். பலாலி இராணுவமுகாமிற்கு அண்மையில் பெற்றோல் போதாமையினால் கார் நின்றுவிடவே நள்ளிரவு வேளையிலும் சிறுதுதூரம் தள்ளிச்சென்றபின்னர் வசாவிளான் வீதியில் அக்காரினை   சமயோசிதமாக இவர்கள் கை விட்டுச்சென்றிருந்;தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இம்முறையும் கார் ஓட்டுவதில் ஆயக்கிளிக்கு ஒருசிக்கல் காணப்பட்டது.  பழைய சோமசெற் காரைமட்டுமே  இலாவகமாக ஓட்டத்தெரிந்த ஆயக்கிளிக்கு துரையப்பாவின் புத்தம் புதிய  போஜோ 404  காரில் கியர் எங்கிருக்கும் என்பதே தெரியாது. இதனால் தமக்கு எப்பொழுதும் உதவக்கூடிய ‘பவன்’ என்னும் அயலிலிருந்த நண்பனிடம் போஜோ ரக காரினை எவ்வாறு இயக்குவது எனும் ஆலோசனைகளையும் கேட்டுப்பெற்றுக்கொண்டனர். இரவிரவாக தம்மிடம் இருந்த 12வெற்றுக்குண்டுகளையும் புதிய குண்டுகளாக உருமாற்றி இரண்டு கைத்துப்பாக்கிகளிலும் ஆறு ஆறாக நிரப்பிக் கொண்டனர். சிறுகச்சிறுக  மிகநுணுக்கமாக குண்டுகளினை    நிரப்பிமுடித்து பின்னிரவில் உறங்கமுயன்றபோதும் தலைவராலும் கலாபதியாலும் உறங்கமுடியவில்லை. விடிந்ததும் தாம் நடத்தப்போகும் ‘துரோகத்தினை துடைக்கும்’ செயலினைச்சுற்றியே அவர்களின் சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தன. உறங்காதஇரவு விடிந்ததும்  காலை ஆறுமணிக்கு அங்கிருந்து  புறப்பட்டு   வல்வெட்டி வன்னிச்சிஅம்மன்    கோவிலடிக்கு இருவரும் நடந்துவந்தனர். இவர்கள் இரவு  இருந்த ஆயக்கிளியின் காணியில் இருந்து மிகக் கிட்டிய தூரத்திலேயே வல்வெட்டித்துறை ஆலடிபஸ்தரிப்பிடம் அமைந்தி ருந்தது.  இப்பஸ்தரிப்பிடத்துடன் இணைந்தே தலைவர் பிரபாகரனுடைய வீடும் காணப்பட்டது.  ஆனால் ஆலடிபஸ்தரிப்பிடத்தில் மட்டுமல்ல வல்வெட்டித்துறையின் வேறு எந்த பஸ்தரிப்பிடத்திலும்  இவர்கள் பஸ்சிற்காக காத்திருக்கமுடியாது. ஏனெனின் இவ்வாறு காத்திருக்கும் வேளையில்   ஒருவரை   ஒருவர் நன்கு அறிமுகமான ஊர் மக்களின் பார்வையில் சிக்கிவிடலாம் அதன்மூலம் எங்கு செல்கின்றீர்கள்?   எனும் கேள்வி எழும் என்பதாலேயே  ஒருமைலிற்கு அதிகமானதூரத்திற்கு இவர்கள் அன்று நடந்து சென்றிருந்தனர். 1972இன் ஆரம்பம்முதல் மாணவர்பேரவையின் செயற்பாடுகளில் அதிக ஈடுபாட்டுடன் செயற்படத்தொடங்கிய பொழுதே பிரபாகரன் வல்வெட்டித்துறை என்ற சுயவட்டத்திற்கு வெளியே வரத்தொடங்கினார். அப்பொழுதே ஊரின் சனநடமாட்டமுள்ள பகுதிகளைத்தவிர்த்தும் ஊருக்கு வெளியே இருந்தும் தனது  பயணங்களை மேற்கொள்வதில் அவர் திடமாயிருந்தார். அதுபோலவே அன்றும் வல்வெட்டி வன்னிச்சிஅம்மன்   கோவிலடிக்குவந்து அங்கிருந்தே யாழ்ப்பாண பஸ்நிலையம் செல்ல முடிவெடுத்தார். இவர்கள் பஸ்நிலையம் வந்து ஒருபஸ் சென்றபின்பும் இவர்களைத் தொடர்ந்து தன்னுடைய காணியைப்பூட்டிவிட்டு வருவதாகக்கூறிய ஆயக்கிளி இன்னும் வந்து சேரவில்லை. மேலும் ஒருபஸ் சென்றபின்னும் ஆயக்கிளி வராமல் போகவே முன்வைத்தகாலை பின்வைக்கமனமின்றி அடுத்துவந்த 751 இலக்கபஸ்சின் மூலமாக காலை எட்டுமணியளவில் யாழ்நகரம் வந்துசேர்ந்தனர்.  இவர்கள் பஸ்நிலையத்திற்குவந்த சிறிதுநேரத்திலேயே முன் திட்டமிட்டவாறு கிருபாகரனும் பற்றிக்கும் இவர்களை வந்து சந்தித்தனர். தேவையின்றி நேரத்தைக் கடத்தாமல் பஸ்நிலையத்திற்கு எதிரிலிருந்த ‘அம்பாள் கபே’  என்னும் உணவுச்சாலையில் நால்வரும் காலைஉணவாக இடியப்பம் உண்டனர். நண்பகல் 12மணிக்கு   துரையப்பா கோவிலிற்கு வருவதால் அதற்குமுன்பாக அவ்விடத்திற்கு சென்றுவிடவிரும்பினர். அதற்கேற்றாப்போல் பொன்னாலை செல்லும் பஸ்நிலையத்திற்குச்சென்று தமக்குரிய பஸ்சின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். பஸ்சிற்காக காத்திருந்த இவ்வேளையில் இவர்களிடம் இருந்துபிரிந்துசென்ற கிருபாகரன் பஸ்நிலையத்திற்கு அண்மையில் இருந்த ஆடைவிற்பனை நிலையத்திற்கு சென்று மேலாடை(சேட்) மடித்துவரும் கடதாசிஅட்டை ஒன்றைப்பெற்றுவந்தார். கழிவென குப்பையில்ப்போடும் அந்தஅட்டையை யாரோ தேடிவந்ததை அறிந்த அவ்வியாபாரிக்கும் சிறுஆசை துளிர்விட்டது போலும். எறியும் அந்த அட்டையை  25சதவிலைக்கு  கிருபாகரனிடம் கொடுத்திருந்தார். பாவம் அந்த அப்பாவி காலைநேரத்தில் ஏதோ வெற்றிகரமாக தனது வியாபாரத்தை தொடங்கியதாக எண்ணி மகிழ்வடைந்திருப்பார். ஆனால் அந்தஅட்டையை வேண்டுபவர் யார்?  எதற்காக வெண்டுகின்றார் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது.  ஆனால் செப்டெம்பர் மாதத்தில்  நடந்த பஸ்தியாம்பிள்ளையின் விசாரணையின் போதுதான் அந்த ஈனச்செயலிற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது. தமதுதிட்டங்கள் ஒவ்வொன்றையும் நிரையாக செயற்படுத்திய அவர்கள் முற்பகல் பதினொருமணியளவில் ஊர்காவற்துறை கீரிமலை பிரதானவீதியில் அமைந்திருந்த பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலடிக்கு வந்துசேர்ந்தனர்.  என்றும் போலவே அன்றும்  கோவிலும் கோவில்சுற்றாடலும் அமைதியாக காணப்பட்டன. கடலை சோடா என சிறுவியாபாரம் செய்யும் கண்ணகை (கண்மணி) என்ற  மூதாட்டிஒருவரின் சிறுவிற்பனைச்சாலையைத் தவிர வேறெவ்வித விற்பனைச்சாலைகளும் அங்கிருக்கவில்லை. இடையிடையே கோவிலுக்கு வந்துபோவோர் தவிர வேறு எவ்வித சனநடமாட்டமுமின்றி அப்பகுதி அமைதியாக காணப்பட்டது. கோவிலின் முன்வீதியின் இடதுபுறம் தேர்க்கொட்டகையுடன் கூடிய தேர்மூட்டியும் வலதுபுறம் வைரவரின் வழிபாட்டிடமும் அமைந்திருந்தன. கோவிலின்; நேரெதிரே வடக்குநோக்கிய  வீதியின் வலதுபுறமாக காணப்பட்ட சிறியமடத்தில் நால்வரும் ஆவலுடன் காத்திருந்தனர். இவர்களில் கிருபாகரன் மட்டும் வரப்போகும் காரினை எதிர்பார்த்து இடையிடையே வீதியில் அங்குமிங்குமாக நடைபோட்டுக்கொண்டிருந்தார். நண்பகல் 12மணியளவில் கார்வரும் நேரமாதலால் அனைவரும் பரபரப்பாகினர். ஆயினும் இவர்கள் எதிர்பார்த்ததுபோல் கார் வரவில்லை. எத்தனைமணிநேரம் காத்திருந்தாலும்  தமது நோக்கத்தை நிறைவேற்றாமல் அன்று திரும்புவதில்லை என்னும் உறுதியுடன் கார்வரும் தென்மேற்குத் திசையில் வைத்தவிழிவைத்தவாறு பார்த்திருந்தனர். நண்பகல் வெய்யில் வேறு கொதித்துக்கொண்டிருந்தது. காலையில் சாப்பிட்ட உணவின் பின் யாரும் எதையும் சாப்பிடவில்லை ஆனால் யாருக்கும் பசிக்கவில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் துரையப்பாவின் காரைப் பார்ப்பதிலேயும் அவரைத்தாக்கும் சிந்தனையிலுமே கழிந்து கொண்டிருந்தது.  இந்நிலையில் வீதியில் நடமாடிக்கொண்டிருந்த கிருபாகரன் என்ன நினைத்தாரோ தலைவரிடம் அனுமதி பெற்றதுடன் பற்றிக்கையும்  உடனiழைத்துக் கொண்டு கோவில்வீதிக்குச் சென்றார். அங்கு கடலை மற்றும் சோடா எனபவற்;றை விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியிடம் இருவரும் சோடா வேண்டிக்குடித்துவிட்டு காரின்வரவை எதிர்பார்த்து அசையாமல் காத்திருக்கும் பிரபாகரனுக்கும் கலாபதிக்கும் சோடா கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் இவர்களிருவரின் தாகமெல்லாம் துரையப்பாவைத் தாக்குவதிலேயே இருந்ததனால் சிரத்தையின்றிக் குடித்துவிட்டு தமது நோக்கத்தினை   நிறைவேற்றும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.          போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5     துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்த குமிழ்முனைப் பேனாவினால் T.N.T என எழுதிவிட்டு அதனைமேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கலாபதி ஈடுபட்டிருந்தார்.  T.N.T என்பது ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற தமிழ்ப்பதத்தினை நேரிடையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் உருவாகும் TAMIL NEW TIGERS என்பதன் முதலெழுத்துக்கள் இணைந்த குறியீடாகும். 1974 இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பி பிரபாகரன் சந்தித்துக் கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ. இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்த இடமாக கொண்ட இவர் 04.05.1926 இல் பிறந்திருந்தார். அரச ஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனி அரசு வேண்டும் என்பதற்காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் தீவிர அகிம்சைப் போராளியாக முன்முகம் காட்டிய இவர் 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர்சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு.ஆடியபாதம்  என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர்.  அத்துடன் 1965இல் அதன் இணைப்பொதுச் செயலாளராக கடமையாற்றினார். தமிழரசுக்கட்சியின் தீவிரம் போதாது என கொள்கைரீதியாக முரண்பட்டு 1969இல் திரு எ. நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்சுயாட்சிக்கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாகவும் விளங்கினார்;. 1970இன் இறுதியில் தோன்றி தமிழ்இன உணர்வுடன் இளைஞர்களை ஆயுதப்போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவையினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைப்புரிந்து வந்தார்.  1972இன் இறுதியில் தமிழ் நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றையதலைவரான செல்வநாயகம்  தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்குசென்று அவர்களின் பயண ஏற்பாட்டை புரிந்த செயல் வீரர் இவராவர். 1973 தை 15இல் நடந்த மண்கும்பான் குண்டுவெடிப்பு முயற்சியைதொடர்ந்து மாணவர் பேரவையின் தலைவர்; சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இராசயனப்பொருளை மாணவர் பேரவையினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைதுசெய்ய பொலிசார் தேடியலைந்தனர். இதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற இராசரத்தினம் அங்கேயே தங்கநேர்ந்தது. தான்சார்ந்த கட்சியினரால் கைவிடப்பட்டு ஆஸ்துமாநோயினால் வருந்திய நிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா. ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்றவர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்துவந்தார். ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 இன் இறுதிக் காலப்பகுதிகளில்  சென்னையிலேயே கழிக்கநேர்ந்தது. 1974ஆகஸ்டில் பெரியசோதி தங்கத்துரை நடேசுதாஸன் என்பவர்களுடன் வேதாரணியத்திலிருந்து சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் கோடம்பாக்கத்திலேயே தங்கியிருந்தார். ஒரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் பல்வேறுகுழுக்களாக பிரிந்து செயல்பட்டதை கண்ட வயதிலும் அனுபவத்திலும்  மூத்த இராசரெத்தினம் மிகுந்த வேதனைப்பட்டார். இதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுதலைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன் நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் தனது பரப்புரையை மேற்கொண்டுவந்தார்.  தமிழரின்படைக்கு தனியான  நிறம் உடை கொண்டதான இராணுவக் கட்டமைப்பை பற்றியும் தனது நோக்கில் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டுமென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி இளைஞர்களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட இனவிடுதலை சம்பந்தமான பலநூல்களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர்களிடம் கூறிவந்தார். The History of Thamiraparni  எனும் ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இக்காலத்தில் இவர் எழுதிவந்தார். (இவரது மறைவின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப்பட்டது)   இதன்மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ என்ற பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974யூன் 1ந்திகதி தான் வாசித்ததாக தனதுடயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும்  Notices of  South India From Magesthens To Mahun என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக்கண்டு தான் மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு Magesthens (மொகஸ்தனிஸ்)  என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்குமுன்  மூன்றாம்நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியரின் அரசசபையில் கிரேக்கதூதராக இருந்தவர்.  கிரேக்க மொழியில் இவர் எழுதிய அக்காலகுறிப்புகளில் இலங்கையை ‘தப்ரபேன்’ எனக் குறித்துள்ளார். இதனையே பாளிமொழியில் எழுதப்பட்ட  மகாவம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் தமிழ்இலக்கிய சான்று கிபி இரண்டாம்நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலாகும். மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதன் முந்தைய பெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத் தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு.ஆ. இராசரத்தினம் எடுத்துக் கொண்டார். ‘புலி’ என்பது தமிழர்களின் அரசவம்சத்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழர்களின் இலச்சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப் பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதிய புலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார். இவர் தனது 1974செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட்குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும்பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளார்த்தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன்.  எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப்படுபவர் யாரிடமும் மனம் கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால்; அழைக்கப்பட்ட போராட்ட முன்னோடியான ‘தங்கத்துரையாகும். தாமிரபரணி அல்லது தாமிரபர்ணி புதிய புலிகள் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்ககுறியீடு; T.N.T என்பதேயாகும். 1974ஆகஸ்டில் சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் இராசரத்தினமும் மனம்திறந்த நட்புடன் ஆளையால் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தைமகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர்கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல்நிலையத்தில் பலமணிநேரங்களை செலவிட்டனர். ஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு  இந்தியவரலாறு  இலங்கை வரலாறு எனப் பலவரலாற்று நூல்களில் மூழ்கிய இவர்கள் அங்கிருந்தே தமக்கான மாற்று (இயக்க)ப் பெயர்களையும் இக்காலத்தில் தேடிக்கொண்டனர். தலைவர் தனது பெயராக சோழமன்னன ‘கரிகாலன்’ என்பதையும் இராசரத்தினம் ஈழமன்னன் எல்லாளன் (ஈழாளன்) என்பதனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக் கொண்டனர். இத்தகைய இவரின் தனிநாடு பற்றிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்றபெயர் விருப்பத்திற்குரியதாகியது. ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் T.N.T என்பதாகும். மேற்படி இரண்டு பெயர்களும் எவ்விதமாறு பாடுமின்றி T.N.T எனவருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப் பட்டது. இதன்வழியில் தமிழின உணர்வில் உந்தப்பட்டு வழிநடந்த தலைவர்; பிரபாகரன் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத இயக்கத்தை உருவாக்கியபோது தாமிரபரணி என்னும் பிரதேசத்தின் பெயரால் தியாகி  இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட பெயரினை அவரின் மனம் கோணாமல் அப்படியே ஆங்கிலத்தில் T.N.T என்பதன் உருவமும் சிதைவுறாமல் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என இனத்தின் பெயரால் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு பெயராக்கிக்கொண்டார். இதனையே துரையப்பாவை எதிர்பார்த்து தவைர் பிரபாகரனுடன் காத்திருந்த முதன்நிலைப் போராளியான கலாபதி T.N.T என எழுதிவைத்தார். T.N.T என்ற பெயரினை அப்பழுக்கின்றி முன்மொழிந்த இராசரெத்தினம் அப்பெயர்கொண்ட அமைப்பினால் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். என்பதை அறிந்து மகிழ்வடைந்த நிலையில் 19.08.1975 இல் ஆஸ்துமா நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார்.  சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்ற வேளைகளிலெல்லாம் சந்திக்க மறுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள்   தியாகவாழ்வு வாழந்த அவர் மறைந்தபின் ‘ஈழத்து நேதாஜி’  எனப்பட்டமளித்து தமக்குரிமை கொண்டாடினர்.  மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழஙகிய இராசரத்தினத்தை 1990இல் அவருடைய  சொந்த இடமான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழ்ஈழத்தின் முதலாவது ‘மாமனிதர்’என பட்டமளித்து தலைவர் பிரபாகரன் பெருமைப்படுத்தினார்.    போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 6   யாழ் பஸ் நிலையத்தில் வேண்டிவந்த மேலாடை அட்டையில் TNT என எழுதி வைத்துவிட்டு துரையப்பாவின் காரின் வரவை எதிர்பார்த்து தொடர்ந்தும் ஆவலுடன் இவர்கள் காத்திருந்தனர். இவர்களின் காத்திருப்பு வீண்போகவில்லை நண்பகல் கடந்து ஏறத்தாள 1.05 மணியளவில் வீதியில் நின்ற கிருபாகரன் கார்வருகிறது எனக்கூறினார். முன்திட்டமிட்ட படியே தலைவரும் கலாபதியும் துரையப்பாவை தாக்க தயாராகினர். பொன்னாலை வீதியில் கோவிலின் வலதுபுறமாக வேகமாக வந்தகாரின் முன் ஆசனத்தில் சாரதிக்கு அருகாமையில் துரையப்பா அமர்ந்திருந்தார். அவருக்கு பின்புறமாக யாழ் மாநகரசபை உறுப்பினர்களில் ஒருவரான  இராஜரட்ணமும் சாரதிக்கு பின்புறமாக யாழ் பலநோக்கு கூட்டுறவுசங்க அதிகாரிகளில் ஒருவரான யோகநாதனும் அமர்ந்திருந்தனர். வீதியின் இடதுபுறமாக அமைந்திருந்த கோவிலின் முன்பாக  சிறிது தூரத்தில் கார் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட காரில் இருந்து இறங்கிய துரையப்பா தனது நிமிர்ந்த நடையுடன் கோவிலை நோக்கி நடக்கமுற்பட்டார் இந்நிலையில் வீதியின் வலதுபுறமிருந்து மடத்திலிருந்து  தலைவர்பிரபாகரன் துரையப்பாவை  நோக்கி  கலாபதி பின்தொடர  வீதியின் குறுக்காக   விரைவாக நடக்கத்தொடங்கினார். துரையப்பா காரில் இருந்து இறங்கி நடக்கத்தொடங்கவும் அவரைநோக்கிய நிலையில் இரண்டு இளைஞர்கள் வேகமாக முன்வருவதைக் கண்ட சாரதி சிவனு என்னநினைத்தாரோ? காரிலிருந்து இறங்கமுற்பட்டார். வேகமாக வீதியை கடந்து கொண்டிருந்த தலைவரின்  கரத்திலிருந்த துப்பாக்கி உடனடியாக சாரதியைநோக்கி எச்சரிக்கை வேட்டைத்தீர்த்த அதேகணத்தில் துரையப்பாவை நோக்கித் திரும்பியது. காருக்குமுன்பாக மூன்றுநான்கு காலடிகளை எடுத்து முன்நடந்து வந்திருந்த துரையப்பா இவைகளைக்கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளும்முன்னரே வீதியை விரைவாகக் கடந்து நேர்நின்ற தலைவரின் கரத்திலிருந்த 38ம்இலக்க ரக கைத்துப்பாக்கி ஆவேசத்துடன் முழுமையாக சீறியது. கணப்பொழுது சுதாகரித்துக்கொண்ட துரையப்பா  பின்புறம் திரும்பி ஓடமுற்பட்டார். ஆனால் அதற்கிடையில் திட்டமிட்டபடி காரின் பின்புறத்திற்கு கலாபதி வந்திருந்தார். ஒருபுறம் சுவர் மறுபுறம் கார் முன்னால் பிரபாகரன்  பின்னால் கலாபதி எத்திசையும் ஓடமுடியாத இறுதி முற்றுகை மரணபயம் கண்களை கவ்விக்கொள்ள காரின் இடதுபுறமாக முன்கதவேரம் குனிந்துகொண்ட   துரையப்பா பதுங்கமுயன்றார். துரையப்பாவிற்கு பின்புறமாக காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இராஜரட்ணம் சாவகசமாக இறங்கி துரையப்பாவை  பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவ்வேளையில் காருக்கு முன்பாக வலது புறமிருந்து இரண்டு இளைஞர்கள் வேகமாக வருவதையும் வந்தவர்களில் ஒருவர் காருக்கு முன்பாக நேராக வந்து துரையப்பாவை சுடுவதையும் கண்டார். அதேநேரம் மற்றவர்  காரைச்சுற்றி  வருவதையும் கண்டார் உடனே தனக்கு அருகாமையில் வந்த அவரின் கையை வேகமாக எட்டிப்பிடித்தார்.  பாவம் அவர்  துரையப்பாவை இலக்காகக் கொண்டு காரின் முன்நடந்து தாக்கிய தலைவரையும் காருக்கு பின்புறம் ஓடிவர முயன்ற துரையப்பாவையும் ஒருகணம் ஏறிட்டுப்பார்த்த கலாபதி முன்னின்றவர் தனது கையைப்பிடித்ததும் வேகமாக தனது கையை இழுத்தவாறே துப்பாக்கியின் விசையை இழுத்தார். இழுத்தகையினால் வேகமாக சுட்டதனால் இலக்குத்தவறிய இரண்டு குண்டுகள் எதிரே இருந்த பழைய சுவற்றில் பாய்ந்தன. இவர் சுதாகரித்துக்கொண்ட நிலையில் மூன்றாவது குண்டு இராஜரட்ணத்தின் கையில்பாய்ந்தது. குண்டு பாய்ததும் இராஜரட்ணம் கோவிலை நோக்கி ஓடினார். இராஜரெட்ணம் ஓடியதும் கலாபதியின் பார்வை துரையப்பாவை நோக்கித்திரும்பியது. தலைவரின் கரத்திலிருந்து சினத்தோடு புறப்பட்டகுண்டுகளின் ஆற்றாமை கண்டு பின்வாங்கி ஓடிவரமுயன்ற துரையப்பா கலாபதியை பார்த்ததும் பின்புறமும் தப்பியோட வழியின்றி முன்கூறியவாறு அப்படியே காரின் முன்கதவோரம் பதுங்கமுயன்றார். அப்பொழுதும் குண்டுகள் அவரை ஊடுருவிப்பாய்ந்தன. அந்நிலையில் நிமிர்ந்த துரையப்பா அப்படியே காருக்கு முன்பாக சில அடிகள் நடந்துவந்தார் அப்பொழுதே அவர் உயிர் பிரிந்திருக்க வேண்டும் தலைவர் பிரபாகரனின்  கால்களிற்கு சிலஅடிகள் முன்பாக முகம்கவிழ மண்ணில் வீழ்ந்தார். விழுந்தவேகத்தில் எகிறித்திரும்பிய அவரது உடல் ஆகாயத்தைப் பார்த்தபடி நீட்டிநிமிர்ந்து அடங்கிப் போனது. ஏற்கெனவே காரின் பின்சீட்டில் சாரதிக்கு பின்புறத்திலிருந்த யோகநாதன் இறங்கி ஓடிவிட்டிருந்தார். நடந்த அனைத்தையும் முன்னிருந்து பார்த்து  உயிர்ப்பயத்தில் செய்வதறியாது உறைந்திருந்த சாரதி ஜவகர்சிவனை தம்மிடமிருந்த வெற்றுத்துப்பாக்கியை காட்டிமிரட்டிய கிருபாகரனும் பற்றிக்கும் முன்திட்டமிட்டபடியே  காரிலேறி தயாராகவிருந்தனர். இவர்களின் நோக்கமெல்லாம் துரையப்பா ஆதலால் ஓடியவர்களை தொடர்ந்துதாக்கவோ அல்லது துரத்தவோ முனையவில்லை. இதனால் விழுந்துகிடந்த துரையப்பாவை கலாபதி  மீண்டும் சுடமுயன்றார்.  ஆனால் துப்பாக்கி வெடிக்கவில்லை. இவர்களால் உருவாக்கப்பட்ட குண்டுகளாதலால் பழைய அத்துப்பாக்கியில் எஞ்சியிருந்த இறுதிக்குண்டு எங்கோ தடக்கிவிட்டது. இந்நேரத்தில் காரின் பின் கதவைத் திறந்து  வைத்திருந்த தலைவர் ‘எல்லாம் முடிந்தது ஓடிவா’ எனக் கூப்பிட்டார். இறுதியாக தலைவருக்கு அருகாமையில் காரின் பின்சீட்டில் கலாபதி ஏறி அமரவும் துரையப்பாவின்  வெள்ளைநிற போஜே 404 கார் பொன்னாலை கீரிமலை வீதியில் வேகமாக ஓடத்தெடங்கியது. இவையெல்லாமே சமகாலத்தில் ஒருசிலகணங்களில் நடந்துமுடிந்தது. முன்திட்டமிட்டபடி ஆயக்கிளி வராமையினால் அனுபவமற்ற பற்குணமே காரை செலுத்திக்கொண்டிருந்தார். அவருக்கு அருகாமையில் கிருபாகரன் அமர்ந்திருந்தார். அவ்விடத்தைவிட்டு விரைவாக தப்பிச்செல்வதே  இவர்களது  நோக்கமாயிருந்தது. இதனால் மிகப்பதற்றத்துடன் பற்குணம் காணப்பட்டார்.  ஆனால் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் சூழலைக்கண்காணித்து செயற்படும் தலைவர்பிரபாகரன்  திடீரென  ஜீப் என கூறினார். எதிரே நீண்டு கிடந்த வீதியின் கண்ணிற்கு எட்டிய  மறு அந்தத்தில் மிகச் சிறிதாக  ஜீப்பின் வரவு தெரிந்தது.  ஜீப் என தலைவர் கூறியதும் பற்குணம் ஜீப்பை பார்த்தாரோ இல்லையோ மேலும் பதட்டமுற்று  காரின் பிரேக்கையும் கிளச்சையும் சேர்த்து மிதித்துவிட்டார் போலும். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தகார்  இரண்டு தடவைகள்  தன்னைத்தானே சுற்றியபடி  அருகிலிருந்த  வயலுக்குள் பின்புறமாக இறங்கியது. எதிர்பாராத  இந்நிகழ்வால் அதிர்ச்சி யடைந்த  அனைவரும் காரைவிட்டு  இறங்கி ஓடினர் ஓடியஇவர்கள் எங்கு போகின்றோம்? எவ்வளவு தூரம்  போகின்றோம்? எனத் தெரியாமலே தோட்டங்கள் வயல்கள் சிறு ஒழுங்கைகள் ஊடாக ஓடியும் நடந்தும் விரைவாக சென்றனர். இவ்வாறு சென்ற பொழுது கிருபாகரனின் தந்தையின் நண்பரொருவரை சந்தித்தனர். அவரிடம் உரையாடிய வேளையிலேயே தாம்வந்து சேர்ந்தவிடம் சித்தங்கேணி என்பதைப்புரிந்து கொண்டனர்.மேலும் வேகமாக நகர்வுகளை மேற்கொண்ட அவர்கள் கண்ணில் தென்பட்ட முதல் பஸ்சிலேறி சுன்னாகம் பஸ்நிலையத்திற்கு வந்துசேர்ந்தனர். அங்கிருந்து யாழ்நகருக்கான 769ஆம் இலக்கபஸ்சில் பயணம்செய்து  இடையே இணுவிலில் பற்றிக்கும் கிருபாகரனும் இறங்கிக் கொள்ள தலைவரும் கலாபதியும் யாழ்ப்பாணம்  வந்து சேர்ந்தனர். அப்பொழுது நேரம் பிற்பகல் 6மணியை தொட்டிருந்தது. பஸ்சிலும் பஸ் நிலையத்திலும்; ‘துரையப்பாவை சுட்டாச்சு’ என ஏதோ எதிர்பார்த்த நிகழ்சி நடந்து விட்டதுபோல் துரையப்பா கொலை பற்றியே எங்கும் பேச்சாக காணப்பட்டது. அடுத்தநாள் பத்திரிகைமூலமே தாம் காரைவிட்டு ஓடிய இடம் கீரிமலைக்கு  அண்மையில்  உள்ள கருகம்பனை என்பதையும் எதிரேவந்த ஜீப்பில்  யாழ்ப்பாண பொலிஸ் அதிபரான ஜே.டீ.எம்.ஆரியசிங்கா தனது குடும்பத்தினருடனும் வேறு சில உயரதிகாரிகளுடன் சேந்தான்குளத்தில் இருந்து வந்து கொண்டிருந்ததையும் போராளிகள் அறிந்துகொண்டனர்.  1971 மார்ச் 11ந்திகதி யாழ் மெயின்வீதி பிறிமியர்கபே டிஸ்கோஅரங்க திறப்புவிழாவின் போது மாணவர்பேரவையின் பொன்.சிவகுமாரன் மற்றும் பொன்.சத்தியசீலனால் வைக்கப்பட்ட குண்டில் அதிஸ்டவசமாக உயிர் தப்பியவர். மீண்டும் 1972 டிசம்பர் 19இல் கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருந்த இவரது வீட்டின்மீது மாணவர்பேரவையைச் சேர்ந்த திசைவீரசிங்கம் மற்றும் இராஜன் போன்றோர் குண்டுவீசியபோது வீட்டில் இல்லாததால் துரையப்பா தப்பித்துக்கெண்டார். 1973- 1974 காலப்பகுதிகளில்  குறிப்பாக பொன்.சிவகுமாரனின் தியாகமரணத்தின்பின் தனது மரணபயத்தை அகற்றி சாதாரணமாக உலாவந்தவர். பொன்.சிவகுமாரனின் ஒருவருட நினைவுதினமும் ஒருமாதமும் கடந்திருந்த நிலையில் அவரைப்போலவே ஆயுதப்போரில் நம்பிக்கை கொண்டு அதனையே தமது வழியாக வரித்துக் கொண்ட தேசியத்தலைவர் பிரபாகரனும் அவரது நண்பனும் முதன்நிலைப் போராளியுமான கலாபதியும் துரையப்பாவின் துரோகப் பயணத்திற்கு முடிவு கட்டினர். துரையப்பாவின் மரணச்செய்தி குடாநாட்டில் அங்குமிங்குமாக ஓடும் ஊவுடீ பஸ்பிரயாணிகள் மூலம் பலஇடங்களிற்கும் எடுத்துச்செல்லப்பட்டு துரிதகெதியில் எங்கும்பரவியது. மதியம் 1.05இற்கு துரையப்பா சுடப்பட்ட செய்தி வல்வெட்டித்துறைக்கு மதியம் 2.30இற்கு தெரிந்துவிட்டது. எதிர்பார்த்து நின்ற நண்பர்களும் வல்வெட்டித்துறை சனசமூகநிலையத்தில் இருந்த சிவகுமாரனின் படத்தினை வணங்கியதுடன் அக்காலத்தில் வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த ‘கலாநிதி ஸ்ரோர்’ கடையில் வாங்கிய இனிப்புகளையும் குளிர்பானங்களையும் மக்களிற்கு வழங்கி மகிழ்ந்தனர். விடயம் அறிந்தமக்களும் தாமும் அம்மகிழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தோசஆரவாரம் புரிந்து தமது மகிழ்வினை வெளிக்காட்டினர். ஒருமனிதனின் இறப்பில் ஏனையமனிதர்கள் மகிழ்படைவது மனிதநேயமற்றதே. இதில் சந்தேகமில்லை. ஆனால் துரையப்பாவின் முடிவு தனி ஒருவனின் இறப்பல்ல. அதனை ஈழத்தமிழரின் விடுதலைப்போர் வரலாற்றின் பிறப்பென்றே கொள்ளலாம்.  அதுவரை ஈழத்தாயின் வயிற்றில் கருவாகி உயிராகி அங்காங்கே உதைத்துக்கொண்டிருந்த ஆயதப்போராட்டம் என்னும் குழந்தை துரையப்பா மீது தீர்க்கப்பட்ட வேட்டொலிகளுடன் தாயின் கருப்பையை கிழித்துக்கொண்டு வரும் குழந்தையைப்போல் தமிழ்ஈழ மண்ணில் தவழ ஆரம்பித்தது. மனிதயேமற்ற சிங்கள அரசுகளினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ்மக்களின் ஆன்மாவின்மீது வஞ்சினம்கொண்ட அன்றையஇளைஞர்களினால் செய்துகொள்ளப்பட்ட உறுதிமொழியின் அடையாளம்தான் துரையப்பாவின் மரணம். 27.07.1975மாலை 06.00 மணிக்கு இலங்கை வானொலிச் செய்தி யிலும் 06.30மணிக்கு தமிழ்நாடு மாநிலச்செய்தியிலும் துரையப்பாவின் மரணம் செய்தியாக்கப்பட்டது. திருச்சி பொன்நகரில் அமைந்திருந்த போராளிகளின் தளத்தில் கூடியிருந்த போராட்டமுன்னோடிகளிடையே  ஆயுதக்குழுவின் முதல்தலைவரான பெரியசோதி கூறினார் ‘யாரும் இனி ஊகங்களை கதைக்காதீர்கள்.   ஆம் துரையப்பாவின் மரணத்தின்பின் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போர் ஊகங்களின்றி உறுதியானநிலையில் பிரபாகரன் காட்டியவழியில் வேகமாக நகரத்தொடங்கியது. ‘வருணகுலத்தான் பார்வையில்’ தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டவையாகும்.         யாரிந்த அல்பிரட்துரையப்பா?….. – பகுதி 7  ’அல்பிரட் தங்கராசா துரையப்பா’ ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அழிக்கமுடியாத பெயர். தமிழ்ஈழத்தின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணநகரத்தினை நவீனமயப்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் முழுப்பங்கினை வகித்தவர். யாழ்ப்பாணநகரத்தின் பல இடங்களிலும் காணப்படும் தமிழ்ச்சான்றோர்களின் அழகுமிகு சிலைகளும் நகரத்தின் நடுவே உயர்ந்து நிற்கும் திராவிட சிற்பக்கலையுடன் கூடிய நவீனசந்தைக் கட்டிடம் உட்பட யாழ்ப்பாணத்தின் பொதுவிளையாட்டரங்கான ‘யாழ் துரையப்பா ஸ்ரேடியம்’ மற்றும் திறந்தவெளி அரங்கு என்பவற்றை நிர்மாணித்த பெருமைக்குரிய நகரமுதல்வர்  இவரேயாவர். அத்துடன் வரலாற்றுசிறப்புமிக்க யாழ்ப்பாண  பொதுநூலகத்தை  முதன்முதல் திறந்துவைத்த முதல்வரும் இவர்தான். இவருடைய காலத்தில் தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டமையும்  இங்கே குறிப்பிடத்தக்கது. 1960 மார்ச் மற்றும் யூலை மாதங்களில் நடந்த பொதுத்தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு தமிழ்க்காங்கிரஸ் தலைவரான ஜி.ஜி எனப்பட்ட காங்கேசர் பொன்னம்பலத்தை தோற்கடித்து யாழ்ப்பாண தொகுதியின் பாராளுமன்றஉறுப்பினராக பதவி வகித்தவர். இளம்சட்டத்தரணியான இவர் சுயேட்சையாக  போட்டியிட்டே இராணிவழக்குரைஞரும் மிகப்புகழ்பெற்ற குற்றவியல் சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தை மட்டுமல்ல அன்று வீசிய தமிழரசுக்கட்சி அலையிலும் அதன்வேட்பாளரான கதிரவேற்பிள்ளையையும் ஒருங்கே தோற்க்கடித்த தனிநபர் என்ற பெருமைக்குரியவர். துரையப்பாவின் மனைவி ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மருமகள் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1960 மார்ச் 19 இல் முதன்முதலாக யாழ்ப்பாணத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட இவர் அன்று சிறுபான்மை பலத்துடன் இருந்த டட்லிசெனநாயக்காவின் ஜக்கியதேசியக்கட்சிக்கு ஆதரவுவழங்கினார். இதன்மூலம்  மார்ச்23  ஜக்கிய தேசியக்கட்சியை ஆளுங்கட்சியாகவும் டட்லிசெனநாயக்காவை  பிரதமராக்கவும் வழிவகுத்தார். அதாவது தனது ஒற்றைவாக்கினாலே ஒரு அரசாங்கத்தையே அமைக்க முன நின்ற King Maker இவர் என அன்று போற்றப்பட்டார். ஆனால் அடுத்த மாதமே 1960 ஏப்ரல் 22ந் திகதி நடைபெற்ற டட்லி செனநாயக்காவின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் சிம்மாசனப் பிரசங்கத்தின்போது தமிழரசுக்கட்சியுடன் இணைந்து டட்லியின் அரசுக்கெதிராக வாக்களித்தார். இதன்மூலம் டட்லி அரசாங்கத்தை தோற்க்கடிக்க இவரும் காரணமானார்.  மீண்டும் 1960 யூலைமாதம் நடந்த 5வது பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். இம்முறை முதன்முறையாக அரசியலுக்கு வந்தவர்தான் பண்டாரநாயக்காவின் விதவை மனைவியான ஸ்ரீறிமாவே பண்டாரநாயக்கா ஆவர். 1960யூலையில் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீறிமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றுக்கொண்டார். அன்று ஸ்ரீறிமாவோவிற்கு தனதுஆதரவை வழங்கியதன் மூலம் அவரது நண்பராகவும் அவரது தீவிரவிசுவாசியாகவும் துரையப்பா மாறினார். 1961இல் தமிழினத்தின் பெயரால் தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட  யாழ்கச்சேரி சத்தியாக்கிரக போராட்டத்திலும் தனதுதொண்டர்களுடன் இவர் கலந்துகொண்டார். 1960 யூலை முதல் 1975 யூலை 27இல் தான் இறக்கும்வரை அக்கட்சி யினதும் ஸ்ரீறிமாவோவினது உண்மையான தோழமையுடன் அவரின் ஆதரவாளராக விளங்கினார். இந்நிலையில் 1970மே மாதம் 27ந்திகதி நடந்த 7வது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டார். எனினும் வெறுமனே இரட்டை இலக்கமான 56 வாக்குகள் வித்தியாசத்தில் அன்றைய தமிழரசுக்கட்சி வேட்பாளரான F.X.மார்ட்டினிடம் வெற்றிவாய்பை இழந்தார். எனினும் பிரதானவேட்பாளரும் தன்னுடன் தீராப்பகை கொண்டிருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று மீண்டும் தனது மக்கள் ஆதரவினை நிருபித்தார். 1970மே பொதுத்தேர்தல் யாழ்ப்பாணதொகுதி முடிவுகள் வாக்காளர்தொகை 34.865 கு.ஓ.மார்ட்டின் (தமிழரசுக்கட்சி)                            8848 அல்பிரட் துரையப்பா  (சுயேட்சை)                       8792 ஜி.ஜி.பொன்னம்பலம் (தமிழ்க்காங்கிரஸ்)        7222 மொத்தவாக்குகள்                                                          24.938 மேலதிகவாக்குகள்                                                              756 இந்துப் பல்கலைக்கழகத்திற்காக வாதாடிய ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கு எதிராக கத்தோலிக்கரான மார்ட்டினை நிறுத்துவதன் மூலம் 1965 – 1970இல் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வாக்குகளை மதரீதியாக பிரிக்கவும் 1960 –  1965வரை பாராளுமன்ற உறுப்பினராக  விளங்கிய திரு.அல்பிரட்துரையப்பாவின் வெற்றிவாய்பை தடுக்கவும் என இரட்டைநோக்குடன் தமிழரசுக்கட்சி முற்பட்டது. இதற்காக யாழ்ப்பாணத்தில் என்றுமேயில்லாத மதரீதியானதும் சமூகரீதியுமான காழ்ப்புணர்வுகளை மார்ட்டினின் நியமனம் மூலம் அம்மக்களிடையே ஏற்படுத்த முயன்றது. இதற்கான விலையை அடுத்துவந்த ஒருவருடத்திலேயே அவர்கள் கொடுக்கநேர்ந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அமைத்த குடியரசு அரசியல் நிர்ணயசபையை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைய பகிஸ்கரிக்கமறுத்த F.X.மார்ட்டினை 15.7.1971இல் இவர்களே கட்சியை விட்டு வெளியேற்ற நேர்ந்தது. வேலியில்போன ஓணானை மடியில் கட்டிய கதையாக இச்செய்தி அன்று வர்ணிக்கப்பட்டது. இதே மார்ட்டின் 1972மே22இல் ஸ்ரீலங்காவின் முதலாவது குடியரசு அரசியல்அமைப்புக்கு ஆதரவளித்த தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் நல்லூர் அருளம்பலம் வட்டுக்கோட்டை தியாகராசா யாழ்ப்பாண நியமனஉறுப்பினர் MC சுப்பிரமணியம்  நியமனஉறுப்பினர் குமாரசூரியர் மட்டக்களப்பு இரண்டாவது உறுப்பினர் இராஜன்செல்வநாயகம் என்பவர்களுடன் இணைந்ததன் மூலம் தமிழரசுக்கட்சியின் முகத்தில் கரிபூசினார். இவர்களிற்கு எதிராக துரோகிப்பட்டங்களை சூட்டிய அன்றைய தமிழரசுக்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்களும் மேற்படி அரசியலமைப்பிற்கு ஆதரவாக பின்நாட்களில் சத்தியப்பிரமாணம் எடுத்து பாராளுமன்றம் சென்றமை  ஈழத்தமிழர்க ளின் வரலாற்றில் நாம்காணும் மாபெரும் துரோகத்தனமாகும். 1970பொதுத்தேர்தலில்; தனது பதவியை மயிரிழையில் தவறவிட்ட துரையப்பா உடனடியாக கிடைத்த சந்தர்ப்பத்தில் யாழ் மாநகரசபை நிர்வாகசபை உறுப்பினரானார்.  அப்பொழுது முதல்வராகவிருந்த திரு நாகராஜா முன்னால் முதல்வாரன துரைராசாவுடனான போட்டியினால்; தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தனக்கிருந்த பொதுமக்கள மற்றும் ஏனையமாநகரசபை உறுப்பினர்களின் பலத்த ஆதரவுடன் 22.04.1971 யாழ்மாநகர முதல்வரானார். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர முதல்வராக இவர் பதவியேற்றதும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் யாழ்ப்பாண மாநகரம் மிளிர்ந்துகொண்டது. இக்காலத்தில்தான் ‘சைக்கிள்பிறக்கிராசி’ என பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட இவர் காலைமுதல் நண்பகல்வரை யாழ் நீதிமன்றத்தில் ஏழைமக்களிற்காக இலவசமாக வழக்காடுவதிலும் பிற்பகலில் மாநகரசபை மேயருக்கான தனது கடமைகளையும் மேற்கொள்ளலானார்.  வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங் களிற்கான கட்டணம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் அறவிடப்பட்டது இக்காலத்தில்தான். இதன்பின்பே கொழும்பிலும் இம்முறை அமுலிற்குவந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் மாநகரசபைக்கான வருமானத்தை சமயோசிதமாக உயர்த்திய இவர் மறுபுறம் யாழ்நகரை அழகுபடுத்துவதிலும் அதிககரிசனை காட்டினார். இவருடைய அன்றைய நிர்வாகத்திறனை பின்னையநாட்களில் SMG என அழைக்கப்பட்ட பத்திரிகையாசிரியரான கோபாலரத்தினம் தனது அனுபவங்களினை தொகுத்து எழுதிய ‘பத்திரிகைத்துறையில் அரை நூற்றாண்டு’ என்னும் நுலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘அல்பிரட் தங்கராசா துரையப்பா கெட்டிக்காரமேயர் என்று பெயர்எடுத்தவர். இவரையார் பாராளுமன்றம் போவதற்கு தேர்தலில் போட்டியிடச்சொன்னார்கள் என யாழ்ப்பாணமக்களே பேசிக்கொண்ட காலமுமிருந்தது.’  இவ்வாறு வசீகரமுள்ள  யாழ்ப்பாண மேயராகவே  இவர் அன்று விளங்கினார். இக்காலத்தில் யாழ் கூட்டுறவு சங்கத்தலைவராகவும் துரையப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் யாழ்ப்பாணநகரத்தின் இருபெரும் பதவிகளை சமகாலத்தில் வகிக்கும் வாய்ப்பைப்பெற்றார். எனினும் சாதாரணமனிதரும் அணுகக்கூடிய சாமானிய மனிதராகவே இவர் நடந்தகொண்டார். இதனால் யாழ்நகரத்தில் வசித்த மக்களின் அபிமானத்தைப்பெற்ற மக்கள்மேயராக இவர் அன்று விளங்கினார். இவர் சுடப்பட்டார் என அறிந்தவுடன் ஆவேசத்துடன் யாழ் வைத்திசாலையை முற்றுகையிட்ட மக்களின்மூலம் இவரது மக்கள்அதரவு பகிரங்கமானது. யாழ் மாநகரமேயர் என்கிற வகையிலும் தனிப்பட்டமுறையிலும் பல சிறப்புகளுடன் நடமாடிய துரையப்பா இரண்டுபாரம்பரிய தமிழ்க்கட்சிகளின்  இடைவிடாத நெருக்குதல் காரணமாக புகலிடம்தேடியோ அல்லது தனது விசுவாசமான நட்பு பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்தோ ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகினார்.  அன்றைய தபால்தந்திஅமைச்சர்  செல்லையாகுமாரசூரியருடன் போட்டி போட்டுக் கோண்டு  அக்கட்சியை  யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் அதிககரிசனை காட்டினார்;. தன்னை எவ்விதகட்சி அடிப்படையுமில்லாமல் பாராளுமன்றஉறுப்பினராகவும்  மாநகரசபை உறுப்பின ராகவும் சுயேட்சையாகவே மக்கள் தெரிவுசெய்தனர். என்பதை மறந்து  தமிழர்விரோத செயல்களினை  முன்னிறுத்திய  இனவாத ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு  இவர் வழங்கியஆதரவு  பெரும்பாலான தமிழ்மக்களின் சீற்றத்திற்குள்ளாகியது.  நகரமுதல்வர் அல்லது கட்சியின் நீண்டகால ஆதரவாளர் என்பதால் ஸ்ரீறிமாவோவின் அரசாங்ககட்சியுடனும் அதன் உயர்மட்டத் தலைவர்களுடனான  இவருடைய தொடர்புகளும்  இவ்வாறான செயல்களும்; சாதாரணமானவையே.  ஆனால் இவரோ மேயர் என்ற பதவியை ஏற்பதற்கு முன்பிருந்தே கொழும்பிலிருந்து வரும் மந்திரிகளையும் அதிகாரிகளையும் இவற்றிற்கு மேலாக திருப்திப்படுத்தமுற்பட்டார்.  இதற்காக  குறிப்பிட்ட    சிலநடனதாரகைகளையும்   பயன்படுத்த முற்ப்பட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதனைவிட இவரது சகஉறுப்பினர்களில் ஒருவர் யாழ் நகரசண்டியனாகவும் தன்னினச்சேர்க்கையாளராகவும் யாழ்ப்பாண மக்களால் இனம் காணப்பட்டார். 1970 தேர்தல்காலங்களில்; தன்னை இடைவிடாது தாக்கிய தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையை பழிதீர்கமுயன்றார்.  தமிழரசுக்கட்சியின் தலைசிறந்த பேச்சாளராக  விளங்கி கருத்துவேற்றுமை கொண்டு அதிலிருந்து விலகிய  புதுமைலோலன் என்ற கந்தசாமியை ஆசிரியராகக் கொண்டு ‘அலையோசை’ பத்திரிகையை வெளியிடலானார். இதன்மூலம் தமிழரசுக் கட்சியினரையும் குறிப்பாககூறினால் தனிப்பட்டரீதியில் அதன் தளபதியென புகழ்ந்துரைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும் அவர்  குடும்பஉறுப்பினர்க ளையும் இப்பத்திரிகை  தரம்தாழ்ந்து  தாக்கியதாக இன்றும் பலர் கூறுகின்றனர். தமிழ்மாணவரின் உயர்கல்வியினை சிதைக்கும்நோக்கில் இனரீதியான தரப்படுத்தல்கொள்கையினை  சட்டமாக்கியது ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகும்.  அக்கட்சிக்கு தீவிரஆதரவளித்தமை ஒருபுறமும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் குந்தகம் விளைவித்து அதன்மூலம் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தமுற்பட்டமையும் இவர்மீதான குற்றச்சாட்டு களாகியது. இக்காரணிகளால் தமிழ்மொழி அல்லது தமிழர் எனும் இனப்பற்றின் ஊடாக தமிழ் மாணவருக்கு எதிரான தரப்படுத்தல் கண்டு உருவாகிய தீவிரவாத அமைப்பான தமிழ்மாணவர் பேரவையின் முதன் நிலைக்குறியாக துரையப்பா இனம்காணப்பட்டார். இதன்காரணமாக 1971மார்ச் அவருடைய காரிலும்  1972ஆகஸ்டில் அவருடையகாணிவேலும் 1972 டிசம்பரில் கொய்யாத் தோட்டவீட்டிலுமாக  மாணவர்பேரவையினரால் அவர் குறிவைக்கப்பட்டார்.  இத்தனை குண்டுத்தாக்குதலிலும் அதிஸ்டவசமாக உயிhதப்பிக்கொண்டார். எனினும் தனதுநிலையை மாற்றிக் கொள்ளாமல் மேலும் மேலும் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான தனது ஆதரவை நல்கிவந்தார். 1973 மார்ச் 12இல் சத்தியசீலனின் கைதுடன் ஓய்விற்குவந்த  மாணவர்பேரவையின் செயற்பாடுகளின் பின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாணக்கிளை அலுவலகத்;தை அன்றைய சுகாதாரஅமைச்சரும் அப்புத்தளை பாராளுமன்ற உறுப்பினரான W.A.P ஆரியதாஸாவினை அழைத்து திறந்துவைத்தார்.  இதன்மூலம் தனது சிங்கள  அரசவிசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். 1974 ஜனவரி 10ந்திகதி இரவு தமிழாராய்சி மகாநாட்டில் சிங்கள இனவெறியன் சந்திரசேகரா என்ற பொலிஸ் அதிகாரியின் தான் தோன்றித்தனமான செயற்பாட்டினால் விளைந்த அசம்பாவிதங்களிற்கு இவர் துணைபோனதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. மேற்படிகாரணிகளால் துரையப்பா அழிக்கப்படவேண்டியவர் என்பது பெரும்பான்மையான குடாநாட்டுமக்களினது விருப்பமாகியது.சந்திரசேகரா யாழப்பாணத் தைவிட்டு மாறிச்சென்றிருந்த நிலையில்; 1975 மார்ச்சில் இல் ஈழம் திரும்பியிருந்த தலைவர் பிரபாகரன் எண்ணத்தில் உதித்த கருதுகோளான  ‘எதிரியைவிட துரோகியே ஆபத்தானவன்’ என்பதற்கிணங்க யாழ்ப்பாண மேயராகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகவும் விளங்கிய துரையப்பாவின் வாழ்வு ‘வல்வெட்டித்துறை’ யில் இருந்து வந்த இருவரினால் முடித்துவைக்கப்பட்டது. இவ்வாறே தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ‘துரையப்பாவின் முடிவு’ முதன்மையாகியது.  
    • போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2   போராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய போராட்டக்குழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவெடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச் மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவநாளினூடாக இலங்கை திரும்பியிருந்தார். 1974காலப்பகுதியில் கைக்குண்டுகள் செய்வதிலும் துப்பாக்கிகள் சேகரிப் பதிலும் ஆர்வம்கொண்ட கலாபதிகுழுவினரைப்பற்றி சென்னையில் வாழ்ந்தகாலத்தில் அறிந்துகொண்டார். தனது அறைநண்பனும் ‘பந்தடியாதோர் சங்கம்’  என்னும் கழகத்தில் கலாபதியுடன் இணைந்திருந்த குலேந்திரசிகாமணி கூறிய விபரங்களின் அடிப்படையில் கலாபதியையும் நண்பனையும் தொடர்புகொண்டு அவர்களை தன்னுடன் இணைப்பதன் மூலம் ஈழத்தமிழரின் உரிமைகளிற்காகவும் விடுiலைக்காகவும் இடைவிடாது சலிப்பின்றி போராடக்கூடிய புதியபோராளிக் குழுவை உருவாக்கமுடியும் எனநம்பினார். ஆனால் தானே ஊருக்குள் சென்று கலாபதியையோ அல்லது வேறு யாரையுமோ சந்திப்பது தன்னைப்பற்றித் தெரிந்த ஏனையவர்களிற்கு தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திவிடும் என்பதை புரிந்து கொண்டார்;. இதனால 1973இல் கெருடாவில் புதுவீட்டுச்சந்தியில் குட்டிமணியின் நண்பன இராசா என அழைக்கப்பட்ட பரமேஸ்வரனின் வீட்டில் தான் தலைமறைவாக  இருந்தகாலத்தில் தன்னுடன் நட்புடன் பழகிய நாதனை கலாபதியுடன் தொடர்பு ஏற்படுத்தும் கருவியாக பயன்படுத்திஇருந்தார்.   ஆனால் முன்பின் அறிமுகமற்ற நிலையில் கலாபதியை அடையாளம் தெரியாமல் வேறு யாரையும் நாதன் அணுகி விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கையாக கலாபதி மற்றும் நண்பனுடைய பெயர்களை எழுதிச்செல்லுமாறு கூறியிருந்தார் கலாபதிகுழுவினரை பெறுத்தவரையில் கலாபதியின்தந்தை வெடிபொருட்களை கையாள்வதிலும் கைக்குண்டு களத்தயாரிப்பதிலும் நிபுணத்துவம் வாயந்;த ‘மில்கார பாலசுப்பிரமணியமா கும்’. இதன்மூலம் தந்தையிடமிருந்து சிறுவயதிலேயே அவ்வித்தைகளை கலாபதியும் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருந்தனர். ஒருமுறை இவர்களால் விளையாட்டாக தயாரிக்கப்பட்டு வீட்டுஅலுமாரியின்கீழ் குண்டொன்று  வைக்கப்பட்டிருந்தது. வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த இவர்களது தாயாரின் துடைப்பத்தில் தட்டுப்பட்டு அதுவெடித்ததனால் தாயார்தனது வலதுகையில் நான்கு விரல்களினை இழந்திருந்தார். இவ்வாறு வெடிமருந்துகளை கையாள்வதில் நன்கு பரிச்சயமுள்ளவராகவே கலாபதி எப்பொழுதும் காணப்பட்டார். இவரிடம் காணப்பட்ட இத்தகைய தொழில் நுட்பஇரகசியமும் இவைகளின் மீதான இவருடைய தீராதகாதலும் பொதுவாகவே அன்றைய வல்வெட்டித்துறை இளைஞர்களிடையே ஏற்படும் சிங்களப்படையினரை தாக்கவேண்டும் என்ற உணர்விற்கு வடிகாலாய் அமைந்தது. கலாபதியும் அவருடைய பாடசாலைத்தோழர்கள் சிலரும் குறிப்பாக இவருடையவீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்தவர்களான 1986இல் கடற்படையி னருடனான மோதலில் வீரமரணமடைந்த ‘ரகீம்’ என அழைக்கப்பட்ட வா.த. கிருஸ்ணமூர்த்தியும் மற்றைய பெயர்குறிப்பிடாத நண்பனும் சின்னச்சோதி நடேசுதாஸன்குழுவினரால் மோகனிடம் ஒப்படைத்துசெல்லப்பட்ட கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டதுடன் அதற்கான குண்டுகளை தாமே தயாரித்து ஊறணி பொலிகண்டிக்கு இடைப்பட்ட கடற்கரையோரம் நடமாடும் இராணுவத்தி னரைத்தாக்கும் முயற்சியில் ஒருநாள்முழுக்க காத்திருந்து அன்று இராணுவம் வராமையால் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இதுபோலவே அந்நாட்களில் வல்வெட்டித்துறை தெணியம்பையில் வாழ்ந்திருந்த சிவநேசன் என்ற சிதம்பராக் கல்லூரி அதிபர் கல்விஅமைச்சின் செயலாளர் ‘துடாவை’i யை அழைத்து தேனீர்விருந்து வைக்கமுயன்றார். இதன்காரணமாக அவரது வீட்டிற்கு குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்திலும் இக்குழுவினரின் பெயரே அன்றுபிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதுபோலவே தியாகி பொன். சிவகுமா ரனும் தனது ஆயுதத்தேவையைமுன்னிட்டு தனதுநண்பன் பட்டுமூலம் இவர்களை ஒருமுறை அணுகியிருநதார். இந்தநிலையிலேயே குலம் மூலம் இவர்களின் செயல்களையும் இவர்களின் எதிர்காலஎண்ணங்களையும் புரிந்துகொண்ட தம்பி எனும் பிரபாகரனும் தொடர்ந்து சலிப்பின்றி போராடக்கூடிய  குழுவைப்பற்றி சிந்தித்தபோதே இவர்களை உள்வாங்கி ஈழத்தமிழருக்கான  ஆயுதப் போராட்டக்குழுவை உருவாக்கமுடியும் என நம்பியிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே கலாபதியும் நண்பனும் பிரபாகரனின் தலைமையில் இணைந்து செயலாற்றமுன்வந்தனர். அக்கணத்திலேயே அதாவது 1975 சித்திரை மாதம் பிரபாகரனின் தலைமையில் முதன்முதலாக ‘புதிய தமிழ்ப்புலிகள்’ இயக்கம் தனது வரலாற்றுப்பிறப்பை எடுத்தது.  அதுவரை ‘தம்பி’ என அழைக்கப்பட்டுவந்த பிரபாகரனும் ‘தலைவர்’ பிரபாகரனாக அன்று முதல் மாற்றமடைந்தார்.  கருத்துநிலையில் இருந்த தமிழ்ஈழத்தை களத்தில் காணும் முனைப்புடனும் பெருநம்பிக்கையுடனும் இவர்கள் தமது அடுத்தகட்ட நகர்வினைத் தொடங்கினர்.  இவ்வாறு தலைவர் பிரபாகரனினால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட முதலாவது போராளியாக கலாபதி தமிழீழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிக்கப்படுகின்றார். 1975  ஏப்ரலில் கலாபதியையும் நண்பனையும் தன்னுடன் இணைத்து புதியபுலிகள் இயக்கத்தை உருவாக்கிய தலைவர்பிரபாகரன்  அன்றுமுதல்   ஈழத் தமிழர்களின் ஆயதப்போராட்டத்தை தலைமையேற்றுக்கொண்டார். பத்துவருடத்தில்; 1985 ஏப்ரலில்; தளபதி கிட்;டு நடத்;திய யாழ் பொலிஸ் நிலைய தாக்குதல் மற்றும் மாத்தையாவினால் மேற்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பொலிஸ்நிலைய முற்றுகை என்பவற்றுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பெரும்பகுதிகளையும் வன்னிப்பெரு நிலத்தின் பலபகுதிகளையும் தமது இறமையுள்ள தளப்பிரதேசமாக பிரபாகரன்; தலைமையிலான விடுதலைப்புலிகள் மீட்டெடுத்துக்கொண்டமை ஈழத்தமிழரின் வரலாற்றில் பெரும்சாதனையாக என்றும் குறிப்பிடத்தக்கதாகும். ஒருபோராட்டக்குழுவானது வளர்ச்சிகண்டு பல்கிப்பெருமளவிலான போராளி களை உள்வாங்கும்பொழுது தலைமையின் அல்லது தளபதியினுடைய கட்டளை க்கு கீழ்படியும் இராணுவமனநிலையுள்ள போராளிகளை பயிற்;சியின் மூலம்  உருவாக்கமுடியும். ஆனால் புனிதஇலட்சியத்தை வரித்துக்கொண்டு சகல வளங்களும் நிரம்பிய ஒருஅரசிற்கெதிராக போராடமுற்படும் ஒரு தனியான முதன் நிலைப்போராளி தன்போன்ற அல்லது தன்னுடன் மனமிசைந்து இயங்கக்கூடிய இரண்டாவதுநபரை தேடிக்கொள்வது மிகமிக கடினமானதாகும். முன்அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து  இது எப்பொழுதும் சாத்தியமாவதில்லை. தன்னைச்சூழ இருக்கும் நண்பர்களிடமிருந்தோ அல்லது  உறவினரிடமிருந்தே இவ்வரியசெயலை செய்ய முடியும். ஏனெனில் தான் சொல்வதை செய்யக்கூடியவராகவும் இன்னும் கூறினால் தன்மனதின் எண்ணவோட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு இசைந்து செயலாற்றக்கூடியவராகவும் இரண்டாம்நபர் அமையவேண்டும். இவ்வாறுசரியாக அமைந்தாலே செயல்ரீதியாக போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். இவ்வகையில் தலைவர் பிரபாகரனது தெரிவானது மிகச்சரியானதாகவே அமைந்தது வரலாறு கண்ட உண்மையாகும்.’ இதன்பின் தொடர்ந்துவந்த சிலவாரங்கள் இவ்வாறான பலசந்திப்புகள் வல்வெட்டித்துறை சிவன்கோவில் தெற்குவீதியிலும் தீருவில் வயலோ ரங்களிலும் நெற்கொழுமைதானத்திலும் இவைகளின் அயலிலும் தொடர்ந்தன.  இவ்வாறு சந்திக்கும்நேரங்களில் புதிய போராளிக்குழுவை அமைப்பதிலும் அதன் எதிர்கால செயற்திட்டங்களை வகுப்பதிலும் தனது பேரவாவை வெளிப்படுத்தியதுடன் அதற்கான பெயரையும் பெயருக்கான காரணத்தையும் இவர்களிற்கு தலைவர் விளக்கமாக கூறிவரலானார். கலாபதி குழுவினரிடமிருந்த  கைத்துப்பாக்கி போலவே தலைவர்பிரபாகரன் தனது தற்பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியும் அதிஸ்டவசமாக 4.05இலக்க வகையைச் சேர்ந்திருந்தது.  இதனால் கலாபதியால் கட்டப்பெற்ற துப்பாக்கிக் குண்டுகளை அதற்கும் பாவிக்கக்கூடியதாகவிருந்தது. அத்துப்பாக்கி மூலம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டின் பின்புறம் மக்கள் நடமாட்டமற்றிருந்த இடத்திலிருந்த பனையொன்றில் சந்தர்பம் கிடைக்கும் நேரங்களில்  துப்பாக்கிசுடும் பயிற்சியினையும் இவர்கள் மேற்கொண்டனர். தனது முதலாவது குறி பலரால் குறிவைக்கப்பட்டும் சிங்களஅரசின் ஆதரவா ளராகவும் அமைப்பாளராகவும் தொடர்ந்து செயற்படும் ‘அல்பிரட் துரையப்பா’ என்பதனையும் இக்காலங்களில்  அடிக்கடி பிரபாகரன் வலியுறுத்தினார். அத்துடன் தான் அறிந்த காலம் முதல் எதையாவது செய்து கொண்டிருக்கும் செட்டியையும் இணைத்து தமது கட்டதாக்குதல் நகர்வினை விரைவில் முன்னெடுப்பதாகவும் கூறினார். அவர்கூறியது போலவே தலைவரும் கலாபதியும் ஏப்ரல் மாத இறுதியில் சுதுமலைக்கு சென்று செட்டியின் நண்பனான’ பற்றிக் உடைய வீட்டில் தலைமறைவாக இருந்த செட்டியுடன் தமதுஅடுத்தகட்ட நகர்வினைப்பற்றி விவாதித்தனர். அன்று அவர்களிலிருந்த சூழ்நிலையில் நிதிஎன்பதே எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்பதை புரிந்துகொண்டனர். ஏனெனில் நிதி இருந்தாலே தமது எதிர்காலத் தேவைக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்யமுடியும் என்பதை பர்pபூரணமாக உணர்ந்துகொண்டனர். இதனால் தமது முதலாவது செயல்முறையாக நிதித் தேவையினை பூர்த்திசெய்யும் வழிவகைகளைப்பற்றி ஆராயமுற்பட்டனர். இறுதியில் உடனடி நிதித்தேவைக்காக அளவெட்டி பலநோக்குகூட்டுறவுச் சங்கத்தின் நிதியைப்பறித்தெடுக்கலாம் என முடிவாயிற்று. எனினும் தலைவர் பிரபாகரனின் முதன்நிலைக்குறியான துரையப்பாவை தொடர்ந்து கண்காணிக்கவும் முயன்றனர்.   -------> வர்ணகுலத்தான்  
    • தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது.     முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே.   1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்பதனைவிட எல்லோரும் எல்லோருக்கும் உறவினர்கள் என்பதே சரியானதாகும். இந்நிலையில் அயற்கிராமத்தைச்சேர்ந்த நாதன் பெயரை எழுதிக்கொண்டு வந்து தன்னை அழைத்தது கலாபதி எதிர்பாராத ஒன்றே!  நல்லவேளை நாதன் பெயரை எழுதிக்கொண்டு  வரும்வேளையில் கலாபதி வீட்டுவாசலிலேயே நின்றிருந்தமையால் எவ்வித ஆள்மாறாட்டமுமின்றி இருவரும் சந்தித்துக்கொண்டனர். நாதன் கூறியசெய்தியோ மீண்டும் ஆச்சரியத்தை அல்ல பேராச்சரியத்தையே கலாபதிக்கு கொடுத்தது. காரணம் தங்களைக் கையுடன் கூட்டிவரச் சொன்ன நபர் ‘பிரபாகரன்’ என்பதைக் கேட்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக அமையாதுவிடும். ஆம் இன்றுமட்டுமல்ல அன்றும்கூட அவரைத் தெரியாதவர்களிற்கு சாதாரண இளைஞராக காட்சியளித்த தேசியத்தலைவருடைய செயல்கள் அவரைத் தெரிந்த ஊரவர்களிற்கும் உறவினர்களிற்கும் அசாதரணமாகவும் வியப்பிற்கு உரியதாகவும் அமைந்திருந்தன.  1970 – 1972 காலப்பகுதிகளில் சிங்களஇனவெறி அரசிற்கெதிராக    கொடும்பாவி பஸ்எரிப்பு குண்டுவீச்சு எனப்பல தீவிரவாதச்சம்பவங்களில் ஈடுபட்டு இறுதியாக வல்வெட்டித்துறை நெற்கொழுவில் நடந்;த கைக்குண்டுத் தயாரிப்பு விபத்தில் முடியவே படுகாயமடைந்தநிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து இந்தியாவிற்குச்சென்ற சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் குட்டிமணி தங்கத்துரை என்னும் தன்னைவிட வயதில் கூடிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டவர் பிரபாகரன் என்பதும் அவ்வாறு மூத்தோருடன் இணைந்து செயல்ப்பட்டதால்  ‘தம்பி’ என்ற அழைபெயரால் வல்வெட்டித்துறை சமூகத்தில் அன்புடன்  இவர் அழைக்கப்பட்டதும் கலாபதிக்கு தெரிந்ததே! இதனைவிட காயமடைந்தவர்கள் தப்பிச்செல்வதற்கு கலாபதியுடைய உறவினரான சித்திரம் என்பவரே படகினை ஏற்பாடுசெய்ததும் கலாபதியுடைய மூத்தசகோதரன் சிறிபதியும் இந்த ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டதும் கலாபதிக்கு நன்குதெரிந்தே இருந்தது..1972அக்டோபர் 05இல் நடந்த இக்குண்டு வெடிப்பின் பின் கடந்த இரண்டு வருடங்க ளிற்கு மேலாக இக்குழுவில் இருந்த குட்டிமணியைத்தவிர வேறுயாரையும் ஊர்ப்பக்கங்களில் அதிகமாக காணமுடிவதில்லை. இதன்தொடராக சில காலங் களின் முன்பு டைனமெற் என்ற வெடிபொருளை வெடிக்கச்செய்யும் கெற்பு எனும் பொருளினை கடல்மார்க்கமாக கொண்டு வரும்பொழுது அவை எதிர்பாராமல் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது.  இதனைத் தொடர்ந்த விசாரணைகளின் பின்பு இந்தியஇலங்கைப் பொலிசாரினால் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையின் ஏதே ஒரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கலாபதி அறிந்தேஇருந்தார். இந்நிலையில் இத்தீவிரவாதக் குழுவைச்சேர்ந்த பிரபாகரன் தன்னையும் தனதுநண்பனையும் அழைத்துவரச் சொன்னதாக அறிந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! எனினும் பிரபாகரன் அழைத்து வரச்சொன்னதாக  நாதன் சொன்னதும் ஏன்?  என விளக்கம் கேட்காமலேயே நாதன் எழுதிக்கொண்டு வந்த அடுத்த பெயருக்குரிய நண்பனின் வீட்டிற்குச்சென்று அவனையும் அழைத்தனர். குறிக்கப்படும் இந்நண்பன் சிலகாலத்திற்கு முன்பு மேற்குறிப்பிட்ட போராளிகளால் இந்தியாவின் வேதாரணியத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்திற்கு சென்று ‘தம்பி’பிரபாகரன் உட்பட அனைவரையும் சந்தித்து திரும்பியிருந்தார். இப்போது மூவரும் கதைத்துக்கொண்டு பிரபாகரனை சந்திக்கச் சென்றனர். பிரபாகரனும் கலாபதியும் 1968இல் பொன்னம்பலம் மாஸ்டர் வீட்டில் ஒன்றாகப்படிக்கும் காலத்திலேயே அறிமுகமானவர்கள் என்பதால் கலாபதிக்கு பிரபாகரன் புதியவர் அல்ல என்;பது இங்கே குறிப்பிடத்தக்கது. நெற்கொழு வைரவர்கோவில்வரை இவர்கள் நடந்துவரும் பொழுது அங்கிருந்த வாசிகசாலையில் தமக்காக பிரபாகரன் காத்துநிற்பதைக் கண்டனர். இவர்களைக்கண்டதும் வெளியேவந்த பிரபாகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். நண்பகலான அவ்வேளையில் தனது கடமை முடிந்தது என நாதன் இவர்களைவிட்டு பிரிந்துசென்றார். அருகிலிருந்த மைதானம்வரை தொடர்ந்து நடந்துவந்த மூவரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டனர். நடந்துவந்த களைப்புத்தீர இவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக்  கொள்ளவும் பிரபாகரன் தான் இவர்களை அழைத்தகாரணத்தை கூறத் தொடங்கினார்.  இரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் பெரியசோதி தங்கத்துரை சின்னச்சோதி நடேசுதாசன் எனும் முன்னோடிகளுடன  இருந்துவிட்டு தான் இப்பொழுது தனியாகவே ஊருக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் காலம்கனியட்டும் என காத்திருப்பது போல் தோன்றுவதால் இவ்வாறான முடிவிற்கு தான் வந்துள்ளதையும் நியாயப்படுத்திய அவர் ஓய்வின்றி எதையாவது செய்ய வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். 1974ஆம் ஆண்டில் கலாபதியும் அவர் குழுவினரும் மேற்கொண்ட தீவிரவாத முயற்சிகளைக்கேள்விப்பட்டே அவர்களினைத்தான் சந்திக்கவிரும்பிய காரணம் என்பதையும் விளக்கமாக கூறினார். தொடர்ந்து இனத்தின் அடிப்படையில் தேவையின்றி அப்பாவிமக்களை அநாவசியமாக தாக்கும் அரசபடைகளிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டுமெனவும் அதற்காக அவர்களை தன்னுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 1967இல் வல்வெட்டித்துறை சந்தியில் அரசபடைகள் பொதுமக்களிற்கு எதிராக தாக்குதலைநடத்தியது. அத்தாக்குதலில் அப்பாவியான சிவஞானசுந்தரம் கொல்லப்பட்டார். இதுபோன்ற மிலேச்சத்தனமான தேவையற்ற தாக்குதல்களை கண்டும் கேள்விப்பட்டும் சிறுவனானபிரபாகரன் வேதனை யுற்றார். இதனால் தாக்கப்படும் மக்களிற்காக வேதனைப்பட்ட இவர் சிங்களப்படைகளின் மீது வெறுப்புக்கொண்டார். 1968இல் தனது பதின்நான்கு வயதில் இருந்தே தீவிரவாத போராட்ட உணர்வுடன் செயற்பட்டவர் பிரபாகரன். சிறுவயதிலிருந்தே மாயாவியின் சாகஸக்கதைகளைப் படிப்பதிலும் அவற்றைசேகரிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதற்கேற்றாப்போல் அக்காலத்தில் கெற்றப்போல் சகிதம் எந்நேரமும் உலாவரும் இவர் தனது பாடசாலைத்தோழர்களுடன் ஒருகுழுவை அமைத்து அதற்கு ‘காட்டுஎல்லைப்படை’ என பெயரும் சூட்டியிருந்தார். (தகவல் சுரேஸ்குமார்;) அதேநேரத்தில் தனதுவீட்டிற்கு அருகாமையில்  விளாம்பத்தை காணியுடன் அமைந்திருந்த  இடிந்து சிதிலமான ஓதுவார் வீட்டினுள் தன்னைவிட மூத்தவர்களான  நடேசுதாசன் ஜெயபால் பாலி மோகன் என்பவர்களுடன் இணைந்து பெற்றோல்க்குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டார். (காலநதிக்கரையில் மீளநினைக்கின்றேன். 1994 ஏப்ரல் மேமாத வெளிச்சம் இதழ்) 1969களில் வேணுகோபால்ஆசிரியர் ஊட்டிய தமிழரின்சுயாட்சிக் கொள்கையினால் உந்தப்பட்டு அவருடன்திரிந்தார். அதேவேளை தனது பாடசாலைத் தோழர்களான சுரேஸ்குமார் குமாரதேவன் என்பவர்களுடன் இணைந்து நெற்கொழு கோழிப் பண்ணையில் சின்னச்சோதியிடம் உடற்பயிற்சி மற்றும்  சைனாபுட்டிங் என அழைக்கப்பட்ட சீன தற்பாதுகாப்பு முறைகளையும் பயின்றுகெண்டார். 1970டிசம்பரில் கபொத சாதாரணபரீட்சைக்கு முதன்முதலாக தேற்றியஅவர்; பரீட்சைக்கு முன்பாகவே தமிழ் மாணவர் பேரவையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். 1971ஜனவரிமாதத்தில் வல்வெட்டித்துறை வேம்படியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் வருகையை எதிர்த்;து பதியுதீன் உடைய கொடும்பாவி கட்டியதுடன் போராட்டப்பாதையில் நேரடியாக களம் இறங்கினார். இவ்வேளையில் இனஉணர்வில் வல்வெட்டித்துறையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கூட்டணியின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மார்ச் மாத முதல்வாரத்தில் வல்வெட்டித்துறையில் நடந்த Nஆபெரேரா வருகைக்கெதிரான புறக்கணிப்புப் போரில் முன்னின்றார். 1972ஆரம்பம்முதலே மாணவர்பேரவை மற்றும் தமிழர்கூட்டணியின் போராட்டப் பாதையில் தனது தீவிரப்போக்கை வளர்த்துக்கொண்டதுடன் குடியரசு அரசியல்யாப்பிற்கு எதிராக தனது இளவயதுத்தோழர்களை இணைத்து 1972 மே 22 குடியரசுநாள் பகிஸ்கரிப்பு மற்றும்  தொண்டைமானாறு பஸ்எரிப்பு (1972 மே 22 இரவு) என்பவற்றை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அத்துடன் மாணவர் பேரவையினால் நடத்தப்பெற்ற துரையப்பாவின் காணிவேல் குண்டு வெடிப்பை திசைவீரசிங்கத்துடன் இணைந்து (1972செப்டெம்பர்23) நடத்தினார். இக்காலத்தில் குலம் உதயணன் நடேஸ் போன்றோருடன் வல்வெட்டித்துறையின் சிலம்ப வல்லுனரான பிரபுவிடம் தமிழரின் உடற்பயிற்சிக்கலையான தெண்டா சிலம்பம் என்பவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே இவர் போராட்ட முன்னோடிகளுடன் இணைந்த நெற்கொழு குண்டுவிபத்து (1972அக்டோபர்05) நடைபெற்றது.  இக்காலத்திலேயே  வல்வெட்டித்துறைக்கு  வெளியேயான தனது தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார்.  செட்டி  ரமேஸ் சிவராசா மற்றும் கண்ணாடி எனும் பத்மநாதன் என்பவர்களுடன் அறிமுகமாகிய இவர்  அவர்களுடன் இணைந்து தாக்குதல்  முன்னேற்பாடாக கல்வியங்காட்டில் வாழ்ந்த சிங்களடொக்டர் ஒருவரின் காரினைக் கடத்தியதடன் (1972டிசம்பர்24) பொலிசாரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக அக்காரினை எரித்தது  உட்பட  வேறுபல நிதித்திரட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்தார். 1973ஜனவரி14இல் சாவகச்சேரியில் சத்தியசீலனை சந்திப்பதற்காக மோகனுடன் சென்ற இடத்தில் சிவகுமாரனுடன் அறிமுகமாகிக்கொண்டார். அடுத்தநாள் வேலணைக்கு வந்த குமாரசூரியருக்கு கறுப்புக்கொடி காட்ட முடியாது தோல்வியுடன் ஊர்திரும்பிய வேளையில் தான்கலந்துகொள்ளும் இறுதியான அகிம்சைப்போர் இதுவென தன்னுடன்வந்த நண்பனான இந்திரலிங்கத்திற்கு உறுதியாகக்கூறினார். அன்று நடந்த மண்கும்பான் குண்டுத்தாக்குதல் முயற்சி யினைத் தொடர்ந்து மாணவர் பேரவையினர் மீதான காவல்துறையினரின் தீவிரவேட்டையில் சிறிசபாரத்தினத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் 23மார்ச் இரவில் பஸ்தியாம்பிள்ளையிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்கொண்டார். 42நாட்களின் பின் மோகனுடன் வேதாரணியம் சென்று தனது முன்னோடிகளுடன் இணைந்து கொண்டார். இவர்களுடன் ஏறத்தாள இரண்டு வருடங்கள் வேதாரணியம் திருச்சி, சென்னை என்னும் இடங்களில் கழித்திருந்தார்.இவ்வாறு போராட்ட முன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய ஒருகுழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவேடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவத்தினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.   -------> வர்ணகுலத்தான்  
    • வீரகேசரி, தினக்குரல் எல்லாம் எங்க இருந்து இந்த கணக்கெடுப்பு எடுக்கீனம்..✍️.🤭
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.