Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, goshan_che said:

@Justin @Cruso

மணிப்பூரில் பெரும்பான்மை மேய்தி சமூகம். இவர்களில் பெரும்பான்மை இந்துக்கள்.

நாகா, குக்கி பழங்குடிகள் சிறுபான்மை - இவர்களில் பெரும்பான்ம கிறிஸ்தவர்.

மேய்திகள், நாகா குக்கிகளை அடிக்கிறார்கள்.

எனது விளக்கம் சரிதானே?

அப்போ ஏன் சீமான், அடிக்கும் இந்துக்களை சொல்லாமல், அடிவாங்கும் கிறிஸ்தவர்களை பார்த்து சாத்தானின் பிள்ளைகள், தீமைக்கு துணைபோவபர் என்கிறார்?

உண்மையிலே புரியவில்லை.

அரசியல் கணக்கு என்பது மிகவும் சிக்கலானது. இங்கு சீமான் இவ்வளவு காலமும் கிறிஸ்தவ, முஸ்லீம் , மற்றும் தாழ்த்தப்படட மக்களுக்காக பேசி வந்தாலும் அவரது அரசியல் செல்வாக்கு பெரிதாக அதிகரித்ததாக தெரியவில்லை. ஈழ மக்களுக்காக பேசுவதினூடாக அவருக்கு அங்கு மக்கள் செல்வாக்கு பெரிதாக அதிகரித்ததாகவும் கூற முடியாது. இருந்தாலும் இப்போதைக்கு அவர் அதன்மூலம் சிலபல நன்மைகளை அனுபவிக்கிறார்.

எனவே அரசியலில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏட்ப மாற்றம் ஏட்பட இடம் உண்டு. இப்போதைக்கு அவர் பெரும்பான்மை இந்துக்களை சார்ந்து அரசியல் செய்வதட்கு தீர்மானித்திருக்கலாம். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அவரை பெரிதாக ஆதரிக்காதபோது அவர் தொடர்ந்தும் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற நினைத்திருக்கலாம். ஏன் ஈழத்தமிழர்களின் அந்த சிலபல நன்மைகள் குறயும்போது எமக்கு எதிராக இல்லாவிடடாலும் எமக்கு ஆதரவாக பேசாமலும் இருக்கலாம்.

எனவே அரசியல் சந்தர்ப்ப சூழல் அவரை அப்படி பேச வைத்திருக்கிறது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இங்கு யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சீமானுக்கு நன்றாகவே தெரியும். எனவே சீமான் அவர்கள் சங்கிகளுக்கு ஒரு படி மேலே போய் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை தாக்குவதட்கு துணைபோனாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை. 

அதாவது, மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படத்தை வைத்து இங்கு அரசியல் செய்கிறார். இருந்தாலும் இவரது பேச்சுக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது. சில வேளைகளில் சச்சி ஐயாவைப்போலவும்பேசுகிறார். 

  • Like 1
  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

valavan

சீமானே ஒரு கிறிஸ்தவர்தான் அவர் உண்மையான பெயர் சைமன் என்று தமிழகத்தில் ஒரு பிரிவினர் கூவிக்கொண்டு இருக்கிறார்கள். அதுபோக விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் அவரை நோக்கி நெருங்கலாம் என்ற ரீதியிலேயே  அடிக்

goshan_che

இல்லை.   சில ஆயிரம் ஆண்டுகளாக படம் 1 ஐ போல் இருந்த நிலைமையை, படம் 2 ஐ போல் மாற்றுவது, படம் 1 நிலைமையையே தொடர வைக்கும் என்பதால், இப்போ படம் 3 இல் காட்டியுள்ளது போல் நடக்கிறது, கால

Justin

இந்த சீமானின் "நியாயமான" கோபம் போல, தமிழக கிறிஸ்தவர்களின், இஸ்லாமியரின் தி.மு.க மீதான ஈர்ப்பிற்கும் ஒரு "நியாயம்" இருக்குமா? உதாரணமாக, 2002 இல் குஜராத் கலவரத்தில் சில ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்ற ,

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, விசுகு said:

ஆனால்  மறுபக்கமாக  திமுகவின்  ஊழல்களை  கண்டும் காணாமல் இருத்தல்  எப்படி நியாயமாகும்??

இஸ்லாமிய, கிறிஸ்தவ தமிழ் நாட்டவருக்கு அவர்களின் மத சுதந்திர பாதுகாப்போடு ஒப்பிடும் போது திமுகவின் ஊழல் ஒரு பொருட்டே அல்ல.

உதாரணமாக இலங்கையில் ஒரு சிங்கள ஊழல்வாதி இராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்து விடுகிறார்.

ஆனால் அவர் இனவாதி அல்ல. பிக்குகளின் கொட்டத்தை அடக்கி வைக்கிறார். வடக்கு கிழக்குக்கு பூரண சுயாட்ட்சி கொடுக்கிறார்.

ஆனால் ஒரே ஊழல்.

இவரை விசுகு ஆகிய நீங்கள் ஆட்சியை விட்டு நீக்க கோருவீர்களா? ஆதரிப்பீர்களா?

பிகு

தமிழ்நாட்டு இந்துக்கள் கூடத்தான் சீமானுக்கு வாக்கு போடவில்லை.

11 hours ago, Cruso said:

அரசியல் கணக்கு என்பது மிகவும் சிக்கலானது. இங்கு சீமான் இவ்வளவு காலமும் கிறிஸ்தவ, முஸ்லீம் , மற்றும் தாழ்த்தப்படட மக்களுக்காக பேசி வந்தாலும் அவரது அரசியல் செல்வாக்கு பெரிதாக அதிகரித்ததாக தெரியவில்லை. ஈழ மக்களுக்காக பேசுவதினூடாக அவருக்கு அங்கு மக்கள் செல்வாக்கு பெரிதாக அதிகரித்ததாகவும் கூற முடியாது. இருந்தாலும் இப்போதைக்கு அவர் அதன்மூலம் சிலபல நன்மைகளை அனுபவிக்கிறார்.

எனவே அரசியலில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏட்ப மாற்றம் ஏட்பட இடம் உண்டு. இப்போதைக்கு அவர் பெரும்பான்மை இந்துக்களை சார்ந்து அரசியல் செய்வதட்கு தீர்மானித்திருக்கலாம். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அவரை பெரிதாக ஆதரிக்காதபோது அவர் தொடர்ந்தும் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற நினைத்திருக்கலாம். ஏன் ஈழத்தமிழர்களின் அந்த சிலபல நன்மைகள் குறயும்போது எமக்கு எதிராக இல்லாவிடடாலும் எமக்கு ஆதரவாக பேசாமலும் இருக்கலாம்.

எனவே அரசியல் சந்தர்ப்ப சூழல் அவரை அப்படி பேச வைத்திருக்கிறது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இங்கு யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சீமானுக்கு நன்றாகவே தெரியும். எனவே சீமான் அவர்கள் சங்கிகளுக்கு ஒரு படி மேலே போய் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை தாக்குவதட்கு துணைபோனாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை. 

அதாவது, மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படத்தை வைத்து இங்கு அரசியல் செய்கிறார். இருந்தாலும் இவரது பேச்சுக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது. சில வேளைகளில் சச்சி ஐயாவைப்போலவும்பேசுகிறார். 

நன்றி இதுதான் இவர் பற்றி எப்போதும் என் பார்வையும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இஸ்லாமிய, கிறிஸ்தவ தமிழ் நாட்டவருக்கு அவர்களின் மத சுதந்திர பாதுகாப்போடு ஒப்பிடும் போது திமுகவின் ஊழல் ஒரு பொருட்டே அல்ல.

உதாரணமாக இலங்கையில் ஒரு சிங்கள ஊழல்வாதி இராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்து விடுகிறார்.

ஆனால் அவர் இனவாதி அல்ல. பிக்குகளின் கொட்டத்தை அடக்கி வைக்கிறார். வடக்கு கிழக்குக்கு பூரண சுயாட்ட்சி கொடுக்கிறார்.

ஆனால் ஒரே ஊழல்.

இவரை விசுகு ஆகிய நீங்கள் ஆட்சியை விட்டு நீக்க கோருவீர்களா? ஆதரிப்பீர்களா?

பிகு

தமிழ்நாட்டு இந்துக்கள் கூடத்தான் சீமானுக்கு வாக்கு போடவில்லை.

நன்றி இதுதான் இவர் பற்றி எப்போதும் என் பார்வையும்.

சாதாரண மக்களுக்கு நீங்கள் சொல்வது சரி தான்

ஆனால் தலைவர்கள் நாட்டின் நலன் மற்றும் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டும் அல்லவா??

சில சலுகைகளுக்கு தலைமை தலையாட்டினால்???

இன்று தாய் நிலம் உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

சாதாரண மக்களுக்கு நீங்கள் சொல்வது சரி தான்

ஆனால் தலைவர்கள் நாட்டின் நலன் மற்றும் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டும் அல்லவா??

சில சலுகைகளுக்கு தலைமை தலையாட்டினால்???

இன்று தாய் நிலம் உதாரணம். 

இல்லை தலைவர்களுக்குத்தான் எந்த நலன் முதன்மையானது என்ற priority முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும்.

உரிமை பாதுகப்பா? vs ஊழல் ஒழிப்பா?

என்பது கேள்வி எனில், ஒடுக்கப்படும் சிறுபான்மை எப்போதும் “உரிமை பாதுகாப்பு என்றே சொல்ல வேண்டும்”.

அது ஈழத்தமிழர், இந்திய கிறிஸ்தவர், இஸ்லாமியர் யாராகினும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இல்லை தலைவர்களுக்குத்தான் எந்த நலன் முதன்மையானது என்ற priority முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும்.

ஆம். எந்தப் பேச்சுக்குப் பலத்த கைதட்டு விழுகிறது, அல்லது எப்படி பேசினால் வாக்குகள் விழும் என்று பேசும் தலைவர்களைத் தான் ஜனத்திரள்வாதத் தலைவர்கள் என்கிறார்கள்.  இப்படியான தலைவர்களில் ஒருவர் தான் ட்ரம்பும்.

பேச்சாளராக, தொடர்பாளராக இருப்பதற்கு பாரிய தகுதிகள் தேவையில்லை. ஆனால், அந்தப் பேச்சையும், தொடர்பாடலையும் வைத்து எப்படி மக்களை ஒரு இலக்கு நோக்கி நகர்த்துவதென்ற புரிதல் தான்  முக்கியமான தலைமைத்துவத் தகுதி.

இல்லா விட்டால், ட்ரம்ப் செய்தது போல சில ஆயிரம் முட்டாப்பீசுகளை அரச நிர்வாகத்தின் மீது பாய வைக்கும் விபரீத நிலையில் தான் ஜனத்திரள் வாதம் முடியும்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாரதீய ஜனதாக் கட்சி என்றிலிருந்து ஆட்சிக்கு வந்தது??

எதுக்கோ தப்பிக்க எதிலோ விழுந்த கதையாக இருக்கிறது. நன்றி 

11 minutes ago, Justin said:

ஆம். எந்தப் பேச்சுக்குப் பலத்த கைதட்டு விழுகிறது, அல்லது எப்படி பேசினால் வாக்குகள் விழும் என்று பேசும் தலைவர்களைத் தான் ஜனத்திரள்வாதத் தலைவர்கள் என்கிறார்கள்.  இப்படியான தலைவர்களில் ஒருவர் தான் ட்ரம்பும்.

பேச்சாளராக, தொடர்பாளராக இருப்பதற்கு பாரிய தகுதிகள் தேவையில்லை. ஆனால், அந்தப் பேச்சையும், தொடர்பாடலையும் வைத்து எப்படி மக்களை ஒரு இலக்கு நோக்கி நகர்த்துவதென்ற புரிதல் தான்  முக்கியமான தலைமைத்துவத் தகுதி.

இல்லா விட்டால், ட்ரம்ப் செய்தது போல சில ஆயிரம் முட்டாப்பீசுகளை அரச நிர்வாகத்தின் மீது பாய வைக்கும் விபரீத நிலையில் தான் ஜனத்திரள் வாதம் முடியும்!

கூட்டத்தை பார்த்து பயப்பட தொடங்கி விட்டோமா?🤣

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இல்லை தலைவர்களுக்குத்தான் எந்த நலன் முதன்மையானது என்ற priority முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும்.

உரிமை பாதுகப்பா? vs ஊழல் ஒழிப்பா?

என்பது கேள்வி எனில், ஒடுக்கப்படும் சிறுபான்மை எப்போதும் “உரிமை பாதுகாப்பு என்றே சொல்ல வேண்டும்”.

உரிமையையும் பாதுகாத்து ஊழலையும் ஒழிப்பது சாத்தியமில்லையா அண்ணை?

அதைச் செய்ய முடியும் என்கிறாரே சர்ச்சைப் பேச்சை பேசியவர்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, விசுகு said:

கூட்டத்தை பார்த்து பயப்பட தொடங்கி விட்டோமா?🤣

வெறுப்பை விதைக்கும் (மத சிறுபான்மையினருக்கெதிராக இப்போது, தெலுங்கர், கன்னடருக்கெதிராக பல காலமாக) அரசியல்வாதியின் பேச்சுக்கு எடுபட்டு வரும் கூட்டத்தைப் பார்த்து எல்லோரும் பயப்படத்தான் வேண்டும்.

ஏனெனில், எப்போது அந்தக் கூட்டம் "பயப்பட அவசியமில்லை" என்று நினைப்போரையும் நோக்கிப் பாயுமென்பது யாருக்கும் தெரியாது.😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமானவர்களும் பத்தோடு பதினொன்று என்ற கட்சி அரசியல்வாதியாகிவிட்டார். நாளைய கூட்டணிக்கான நாடிபிடிப்போடு சேர்ந்ததாகவே முதலிடுகிறார்.  நா.த.கவினது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலர்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

எதுக்கோ தப்பிக்க எதிலோ விழுந்த கதையாக இருக்கிறது. நன்றி 

இல்லை. இருப்புக்கான ஆபத்து (existential threat), ஆபத்து இரெண்டும் ஒன்றல்ல.

6 hours ago, ஏராளன் said:

உரிமையையும் பாதுகாத்து ஊழலையும் ஒழிப்பது சாத்தியமில்லையா அண்ணை?

இந்தியாவில் முடியும் என நான் நம்பவில்லை.

6 hours ago, ஏராளன் said:

அதைச் செய்ய முடியும் என்கிறாரே சர்ச்சைப் பேச்சை பேசியவர்!

முன்னைய ஜெ, சசி ஆதரவு நிலை.

எப்போதும் இருக்கும் பி டீம் என்ற சந்தேகம். 

இரெண்டையும்  செய்ய இவரால் முடியாது என சிறுபான்மையினரை சிந்திக்க வைத்திருக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குரூசோ சரியாக சொல்லியிருக்கிறார்.சீமான் முஸ்லிம்களை கண்மூடிதனமாக ஆதரித்து பார்த்தார் ஆதரவு அதிகரிக்கவில்லை. ஈழம் தமிழர்கள் என்று பேசினார் ஆதரவு அதிகரிக்கவில்லை ஆனால் அதன் மூலம் பல நன்மைகளை அவர் அனுபவிக்கிறார்.

21 minutes ago, goshan_che said:

முன்னைய ஜெ, சசி ஆதரவு நிலை.

ஊழல் மோசடிக்கு தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா ஆதரவு நிலை எடுத்தவரா ஆட்சிககு வந்து ஊழலை ஒழிக்க போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, ஏராளன் said:

உரிமையையும் பாதுகாத்து ஊழலையும் ஒழிப்பது சாத்தியமில்லையா அண்ணை?

அதைச் செய்ய முடியும் என்கிறாரே சர்ச்சைப் பேச்சை பேசியவர்!

அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஆளுமை மிக்க தலைவரால் அல்லது தலைமையால் அதைச் செய்ய முடியும்.  அப்படியான முழுமை மிக்க தலைவர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா இலங்கையிலும் தற்போது  இல்லை. தனது குறுகிய அரசியல் நன்மை பெறுவதற்காக பாரிய ஊழல் செய்த குற்றவாளிகளை கூட ஆதரிக்கும் சீமான் போன்ற முன்றாம் தர அரசியல்வாதிகளால் இதை நிச்சயமாக செய்ய முடியாது. 

தான் ஆள விரும்பும் நிலப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்களில் வெறுப்புணர்வை விதைத்து அரசியல் அறுவடை செய்ய முயலும்  ஒருவன் நல்ல தலைவனாக முடியாது. 

விடுதலைப்புலிகளின் வீழ்சசி தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.  அனால் அந்த பேரிழப்பு இனவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.  அந்த வரப்பிரசாதத்தை அனுபவிப்பவர்களில் ஒருவர் தான் சீமான். 
 
ஆயுதப் போராட்டம் கருக்கொண்ட காலம் முதல் புலிகளுக்கு உறுதுணையாக நின்ற பல தமிழக அரசியல் உறவுகள் புலிகளின் வீழ்சியுடன் அவர்களுடன் சேர்ந்து  காணாமல் போக  புலிகளின் வீழ்சியை வைத்து அரசியல் இலாபமீட்டும் குழுக்களே தமிழகத்தில் இன்று  வாய் வீச்சு வீரத்தில் முன்னிலையில் உள்ளனர். 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சீமான் கருத்து சரியா, பிழையா ஒருபக்கம் இருக்கட்டும்.

திமுக + காங்கிரஸ் கூட்டு சேர்ந்தே எம்மை கருவறுத்தார்கள்.

அவர்களை திட்டிவிட்டு இன்று சேர்ந்து நிக்கும், திருமா, வைக்கோ போன்ற நீலீக்கண்ணீர் வடித்த கோஸ்டிகளும்,  எம்மைப் பொறுத்தவரை...... ம்...ம்ம்....

செந்தில் பாலாஜி, பொன்முடி..... திமுக இனி அரசாள்வது கடினம். அவர்களுடன் சேர்ந்து நிற்பவர்கள் அரசியல் ரீதியாக பலவீனமாக இருப்பார்கள். ஆகவே இது அரசியல் ரீதியாக சந்தர்ப்பம் பார்த்து நடத்திய தாக்குதல் கருத்து என்பதே எனது பார்வை.

சீமான் கருத்து தவறாயின் தன்னெழுச்சியாக சம்பந்தப்பட்ட மக்கள், வெளியே வந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் என்ன? வேண்டுமென்றே ஊதிப் பெரிப்பிக்கப்படுவதாலா?

2 hours ago, island said:

விடுதலைப்புலிகளின் வீழ்சசி தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.  அனால் அந்த பேரிழப்பு இனவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.  அந்த வரப்பிரசாதத்தை அனுபவிப்பவர்களில் ஒருவர் தான் சீமான். 
 
ஆயுதப் போராட்டம் கருக்கொண்ட காலம் முதல் புலிகளுக்கு உறுதுணையாக நின்ற பல தமிழக அரசியல் உறவுகள் புலிகளின் வீழ்சியுடன் அவர்களுடன் சேர்ந்து  காணாமல் போக  புலிகளின் வீழ்சியை வைத்து அரசியல் இலாபமீட்டும் குழுக்களே தமிழகத்தில் இன்று  வாய் வீச்சு வீரத்தில் முன்னிலையில் உள்ளனர். 

ஐயா, நமது பிரச்சணை ஊடாக இன்றைய தமிழக அரசியலை பார்ப்பதே தவறு.

அதனை தனித்தே அதன் போக்கிலே பாருங்கள்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

இல்லை. இருப்புக்கான ஆபத்து (existential threat), ஆபத்து இரெண்டும் ஒன்றல்ல.

திமுக தீண்டாமை யில் இருந்து அம்மக்களை பாதுகாக்கிறது அல்லது பாதுகாக்கும் என்று நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணிப்பூரை மறக்கடிக்க… மடைமாற்றும் சீமான்: அமீர் அதிரடி

JegadeeshAug 05, 2023 15:08PM
seee222.jpg

கடந்த ஜூலை 30ஆம் தேதி மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.  இதில் கலந்துகொண்ட அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி கூறிய கருத்துகள் மற்றும் அதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சர்ச்சையானது.

இதுதொடர்பாக இயக்குநர் அமீர் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிய  பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது, தொடர்ச்சியாக திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆதரிக்கின்றனர்.

அவர்கள் எல்லாம் சைத்தானின் பிள்ளைகள் ஆகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் அவர்கள் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன். அந்த பேரன்பின் வெளிப்பாடு தான் அது. அதை புரிந்து கொள்ளுங்கள் என்று சீமான் சொல்கிறார் இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:

பொதுமேடைகளில் அவர் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வழக்கம் தான். மணிப்பூர் கலவரம் ஹரியானா கலவரம் , ரயிலில் வந்த மூன்று இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இப்படி இந்த கொடூரங்களை எல்லாம் மறக்கடிக்கும் வேலையாக இது ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது என்பது எனக்குள் ஒரு பயத்தையும் , சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்கு அரசியலை எதிர்நோக்கி இருக்கும் ஒரு அரசியல்வாதி இதுபோன்று பேசுவது தவறு.

F2V3NhXXQAAUT-h-768x512.jpeg

கேள்வி:

ஓட்டுக்காக நான் நிற்கவில்லை நாட்டுக்காகத்தான் நிற்கிறேன் என்று சீமான் பல மேடைகளில் பேசியிருக்கிறாரே?

பதில்:

நாட்டுக்காக நிற்கவேண்டும் என்று நினைத்து விட்டால் நாம் தேர்தல் அரசியலில் பங்கு பெறவே கூடாது. பெரியாரைப்போல் ஒரு இயக்கமாக இருந்து விட வேண்டும்.

சீமான் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறேன், என்று சொல்லி யிருந்தால் இந்த விவகாரம் முடிந்து இருக்கும். ஆனால் நான் பேசியது சரி என்று சொல்லும் போது தான் இது போன்ற பிரச்சினைகள் வருகிறது. அது சீமானின் வாக்கு வங்கியை பாதிக்கும். இது போன்ற பேச்சுக்கள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி:

இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சீமான் சொல்கிறாரே?

பதில்:

இது கேட்பதற்குத் தான் நன்றாக இருக்கும். ஆனால், சீமான் பேசுவது தத்துவம். சிறுபான்மையினர் என்ற சொல் சட்டம். இங்கே சட்டம் பேச வேண்டுமா…இல்லை தத்துவம் பேச வேண்டுமா என்றால் நாம் சட்டத்தின் அடிப்படையில் தான் தத்துவம் பேச வேண்டும். சிறுபான்மை என்பது இந்தியாவில் மத அடிப்படையிலானது. ஆனால், சீமான் பேசுவது தத்துவம்.

சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் என்று சீமான் சொல்கிறார் என்றால் அவர் ஒன்றிய அரசை தான் இதில் எதிர்க்க வேண்டும்.

பாஜகவின் கொள்கையே சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்பது தான். இது எப்படி ஆபத்தானதோ அதைப்போல் தான் சீமான் சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் என்று சொல்வதும் ஆபத்தானது.

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் மைனாரிட்டி சமூகத்திற்கு ஆதரவாக உள்ளது. அதில் சிறுபான்மையினருக்கான சலுகைகள் அதிகம் உள்ளது. எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பது தானே பாஜகவின் கொள்கை.
கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

இப்படி உள்ள சூழலில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லும் இந்த பேச்சு பாஜகவின் கொள்கைகளுக்கு வலு சேர்ப்பதைப் போல் உள்ளது.

கேள்வி:

எல்லோரையும் தமிழன் என்று ஒன்று சேர்க்கும் எண்ணமாக அதை பார்க்கலாமா?

பதில்:

மொழி அடிப்படையில் தான் உலகத்தில் நாடுகள் பிரிந்து இருக்கிறது. அது மற்ற நாடுகளுக்கு பொருந்தும் ஆனால் இந்தியாவில் அது பொருந்தாது. காரணம் மற்ற நாடுகளில் பெரும்பான்மையாக ஒரு மொழியை பேசுகின்றனர். ஆனால் , இந்தியாவில் ஒரு மொழியா பேசுகிறோம்? இங்கு சிறுபான்மையினர் என்பது மத அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தான் இப்போது பயன்படுத்துகின்றனர்.

இதன் அடிப்படையில் தான் சிறுபான்மையினருக்கு என்று ஒரு அமைச்சகம், சலுகைகள், கல்லூரிகள் செயல்படுகின்றன.

இப்படி இருக்கையில் சிறுபான்மையினர் என்று  சொல்லாதே என்று சொன்னால்… இளைய தலைமுறை இதை நம்பி வெளியே வந்தால் எதில் சேர முடியும்?
பட்டியல் இனத்தவரை தலித் என்று சொல்லாதே இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல் என்று தூண்டிவிடுவது போலத்தான் சீமானின் இந்த பேச்சுகள் இருக்கிறது.

பாஜகவின் கொள்கைக்கு இது போன்ற உரிமைச் சொல்லாடல் பயன் தந்து விடுமோ என்பது தான் இங்கு மிக முக்கியமானது.

கேள்வி:

பாஜகவின் அரசியலுக்கு சீமான் துணை போகிறாரா? மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை நிறுத்த வேண்டும் என்று பாஜக அரசை கண்டித்து தானே அவர் ஆர்ப்பாட்டமே செய்தார்.

பதில்:

சீமானுக்கு பாஜக தான் இன்றைக்கு பிரதான எதிரியாக இருக்கும் என்று சொன்னால் எதற்காக காங்கிரஸ் கட்சியையும் திமுகவையும் திட்ட வேண்டும்.

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியும், திமுக வும் காரணம் இல்லை.
மணிப்பூரில் பாஜக ஆட்சியமைத்தால் அங்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்று சொல்லித்தான் அந்தக் கட்சி அங்கு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தான் மணிப்பூரில் குறி வைத்து சிறுபான்மைச் சமூகம் தாக்கப்படுகின்றனர். சூழலில் இப்படி இருக்க நாம் யாரை இந்த நேரத்தில் கண்டிக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது இந்த கலவரத்தை கண்டிக்காமல் மடைமாற்றும் செயலாக நான் பார்க்கிறேன்.

X51iG7Fw-download-6.jpeg

கேள்வி:

2009 ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு காங்கிரஸ் கட்சியும் துணைபோகிறது என்று சீமானுடன் இணைந்து போராட்டம் நடத்தி சிறை சென்றவர் நீங்கள்?
காங்கிரஸ் அப்போது செய்ததைத்தான் பாஜக இப்போது செய்கிறது என்று சீமான் சொல்கிறாரே?

பதில்:

இப்போது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்களை விமர்சிப்பதா?. அப்படி இருக்கையில், நாம் தவறு செய்தவர்களை கண்டிக்காமல் இருப்பது அவர்கள் அடுத்த தவறை செய்வதற்கு தூண்டுதலாக இருக்கும். அதன் எடுத்துக்காட்டு தான் ஹரியானா கலவரம்.
கலவரத்தை வைத்துத்தான் பாஜக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது தான் அவர்களின் வரலாறு. தேர்தல் அரசியலில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவது இல்லை என்றால் தேசபக்தி என்று சொல்வது.

கர்நாடக தேர்தலில் நாட்டின் பிரதமர் அம்மாநில பிரச்சனைகள் பற்றி பேசாமல் கேரள ஸ்டோரி படத்தை பற்றி பேசுகிறார். அப்படி என்றால் அவர்கள் எதுமாதிரியான அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்பது புரியும் அது தான் மத அரசியல். கர்நாடகவில் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று சொல்கிறவர்கள் மத அரசியலைத் தான் செய்வார்கள்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. ஆனால், அதை பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் பாஜக அதை வைத்து அந்த தேர்தலை சந்தித்தது.

இந்த தேர்தலை எப்படி சந்திக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். எங்கெல்லாம் மக்கள் பலவீனமானவர்களாக இருக்கின்றனரோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

மணிப்பூர் கலவரத்தை மோடியால் நிறுத்த முடியவில்லை ஆனால் உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும் என்று சொல்கிறார்.
தன் சொந்த நாட்டில் நடைபெறும் கலவரத்தை நிறுத்த முடியாமல் உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும் என்று எப்படிச் சொல்கிறார்.

இவற்றை பற்றித்தான் சீமான் பேச வேண்டும். நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனையை பற்றித்தான் தற்போது பேச வேண்டும்.
சீமான் காங்கிரஸ் , திமுக இனத்தின் எதிரி…பாஜக மனிதகுலத்தின் விரோதி என்று சொல்கிறார்.

நாம் இப்போது மனித குலத்தின் விரோதியை எதிர்க்க வேண்டுமா? இல்லை இனத்தின் எதிரியை எதிர்க்க வேண்டுமா?

Screenshot-2023-08-05-133453-300x168.jpg

கேள்வி:

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே இந்த அமைப்பு தான் என்று சீமான் சொல்கிறாரே?

பதில்:

சிறுபான்மையினராக இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓட்டை நம்பியா பாஜக இருக்கிறது. பெரும்பான்மை சமூக ஓட்டுகளைத் தான் பாஜக நம்பியிருக்கிறது. அப்படி என்றால் இந்த நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கும் ,

பிரச்சனைகளுக்கு காரணம் யார் என்று அவர்களைத்தானே கேட்க வேண்டும்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் தேர்தல் நடக்குமா என்று பயம் அனைவரிடமும் இருக்கிறது. அப்படி பாஜக ஆட்சிக்கு வந்து அவரசரநிலை பிரகடனத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கக் கூடிய சக்தி இங்கு உள்ள ஊடகங்கள், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை.

மணிப்பூரில் கலவரம் நடந்து பல நாட்களுக்கு பிறகு தான் உச்சநீதிமன்ற நீதிபதி அதை பற்றி பேசுகிறார். இந்த சூழாலில் தான் நாம் 2024 ஆம் ஆண்டு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இங்கு இருக்கக் கூடிய இஸ்லாமியர்களுக்கும் மனதிற்குள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறது.

கேள்வி:

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னாரே?

பதில்:

திமுக சொன்னதைப்போல் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்?

கேள்வி:

அதைத்தானே சீமான் வாக்குக்காக திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது மீண்டும் ஏன் அவர்களுக்கே வாக்களிக்கிறீரகள் என்று கேட்கிறார்?

பதில்: 

நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் இந்த நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் சரி செய்துவிடுமா?

நெறியாளர்: பெலிக்ஸ் இன்பஒளி

தொகுப்பு: மு.வா.ஜெகதீஸ் குமார்

https://minnambalam.com/political-news/amir-interview-about-seeman-talk-manipur-issue/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமானை ஊடகங்களுக்கு காட்டாமல் இருட்டடிப்புச்செய்த ஊடகங்களே இன்று அவர் பேச்சை வெட்டி ஒட்டி விவாதப் பொருளாக்கி  அம்பலப்பட்டு இருக்கின்றன.சீமானை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லம் அறிமுகப்படுத்தி விட்டார்கள். யார்ரா அந்தச் சீமான் என்று மக்கள் தேடத் தொடங்குவார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அவரின் காணொளிகளைப் பார்ப்பார்கள். சீமனின் கொள்கைகள்   மிழகம் எங்கும் போய்ச் சேரட்டும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, புலவர் said:

சீமானை ஊடகங்களுக்கு காட்டாமல் இருட்டடிப்புச்செய்த ஊடகங்களே இன்று அவர் பேச்சை வெட்டி ஒட்டி விவாதப் பொருளாக்கி  அம்பலப்பட்டு இருக்கின்றன.சீ

புலவர் நீங்க யாழ் இணையத்தைச் சொல்லலேயே?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

8 hours ago, கிருபன் said:

இந்தியாவில் ஒரு மொழியா பேசுகிறோம்? இங்கு சிறுபான்மையினர் என்பது மத அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தான் இப்போது பயன்படுத்துகின்றனர்.

அப்போ இந்தியாவில் சிறுபான்மையினர் என்பது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் .இந்துக்கள் பெரும்பான்மை.  தமிழர் தெலுங்கர் மலயாளம் இனங்கள்   கணக்கில் இல்லை . முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்துக்கள்  ஏதாவது ஒரு மொழி பேசுவார்கள் ஆனால் அந்த மொழி பொருட்டே இல்லை. 🤔

8 hours ago, கிருபன் said:

பட்டியல் இனத்தவரை தலித் என்று சொல்லாதே இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல் என்று தூண்டிவிடுவது போலத்தான் சீமானின் இந்த பேச்சுகள் இருக்கிறது.

பட்டியல் இனம் என்றும் அங்கே ஒரு இனம் உள்ளதா அவர்கள் மொழி பட்டியலா? அவர்கள் முஸ்லிம் அல்லது  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களா? இப்படிபட்ட  இந்தியாவுடன் தான் தமிழர்கள் பிரதேசங்களை இணைத்து இந்தியாவின் பிரதேசங்களாக  மாற்றிவிட போகிறாராம்  தமிழீழ விடுதலை இயக்க தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, விசுகு said:

திமுக தீண்டாமை யில் இருந்து அம்மக்களை பாதுகாக்கிறது அல்லது பாதுகாக்கும் என்று நான் நினைக்கவில்லை.

The proof of the pudding is in the eating  என்பது ஆங்கில பழமொழி.

புடிங்கின் சுவை உண்ட பின்பே அறியப்படும் (புடிங்கின் தோற்றத்தை வைத்து அல்ல). 

ஒரு விடயத்தில் நம்பிக்கை தியரியை அன்றி செயலை வைத்தே ஏற்படும் என பொருள் கொள்ளலாம்.

தமிழ் நாட்டில் திமுக, எம்ஜிஆர், ஜெ கேரளாவில் காங்கிரஸ்/வலதுசாரிகள், மேற்கு வங்கத்தில் மம்தா/வலதுசாரிகள், ஹிந்தி பெல்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், நித்தீஷ் குமார் ….இவர்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், பிஜேபியோடு கூட்டணியே வைத்தாலும், அவரவர் மாநிலங்களில் மதச்சார்பின்மையை பாதுகாத்து நிற்பார்கள் என்பது…..

இந்த மாநிலங்களில் வாழும் மதச்சிறுபான்மையினர் - இந்த தலைவர்கள், அமைப்புகளின் நடவடிக்கையை காலாகாலமாக பார்த்து, ஏற்படுத்தி கொண்ட நம்பிக்கை.

தமிழகத்தில் இருக்கும் மத சிறுபான்மையினர் திமுக, எம்ஜிஆர், ஜெ மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கை - அவர்கள் பட்டறிவில் இருந்து வருகிறது. 

இதை வெளியில் இருந்து பார்க்கும் நாம் புரிந்துகொள்ளமுடியாது என நான் கருதுகிறேன்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பட்டியல் இனம் என்றும் அங்கே ஒரு இனம் உள்ளதா அவர்கள் மொழி பட்டியலா? அவர்கள் முஸ்லிம் அல்லது  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களா? இப்படிபட்ட  இந்தியாவுடன் தான் தமிழர்கள் பிரதேசங்களை இணைத்து இந்தியாவின் பிரதேசங்களாக  மாற்றிவிட போகிறாராம்  தமிழீழ விடுதலை இயக்க தலைவர்.

தமிழ்நாட்டில் இனம் என்பதற்கு ethnicity (தமிழ், சிங்கள இனம்) என்றும், சாதி (caste) என்றும் இரு அர்த்தங்கள் உண்டு (இலங்கையில் ethnicity மட்டும்தான் இனம் எனப்படும்).

இந்திய அரசியற்சட்டம் தீண்டதகாத, தலித், ஹரிஜன் என அறியப்படும் சாதிகளையும், பழங்குடிகளையும் ஒரு பட்டியலில் வகை படுத்துகிறது (schedule). அவர்கள்தான் schedule caste - பட்டியலினம்.

https://en.m.wikipedia.org/wiki/List_of_Scheduled_Castes

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, புலவர் said:

சீமானை ஊடகங்களுக்கு காட்டாமல் இருட்டடிப்புச்செய்த ஊடகங்களே இன்று அவர் பேச்சை வெட்டி ஒட்டி விவாதப் பொருளாக்கி  அம்பலப்பட்டு இருக்கின்றன.சீமானை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லம் அறிமுகப்படுத்தி விட்டார்கள். யார்ரா அந்தச் சீமான் என்று மக்கள் தேடத் தொடங்குவார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அவரின் காணொளிகளைப் பார்ப்பார்கள். சீமனின் கொள்கைகள்   மிழகம் எங்கும் போய்ச் சேரட்டும்.

ஆனாலும் 👆🏼👇 இது கொஞ்சம் சீரியசான செலக்டிவ் அம்னீசியா.

டிவி, பத்திரிகை, யூடியூப் என அனைத்து தமிழ்நாட்டு  ஊடகங்களுக்கு பரபரப்பு தீனி என்றாலே அது கடந்த 10 வருடத்தில் சீமான் தான்.

அதே போல் யாழிலும் பற்றி எறிந்த பல தமிழ் நாட்டு திரிகள் அவர் பற்றியதே. இரு பாகமாக, பல பக்கங்கள் தாண்டிய திரிகள் “நாம் தமிழர் அரசியல்” என்ற தலைப்பிலேயே ஓடின.

ஜெ, கருணாநிதி, ஸ்டாலின், சசிகலா க்கு அடுத்து கடந்த 10 வருடத்தில் அதிக மீடியா வெளிசம் பட்ட அரசியல்வாதி என்றால் அது சீமான்தான்.

தமிழ் நாட்டில் சீமானை தெரியாதோர் இப்போ இல்லை.

ஆனால் இந்த மீடியா வெளிச்சம்தான் அவரை வாக்காளர் புரிந்து கொள்ளவும் உதவியது.

இனிமேல்தான் மீடியா வெளிச்சம் சீமான் மீது படவேண்டும் என்பதில்லை. இனி பட எதுவும் இல்லை. 

4 hours ago, ஈழப்பிரியன் said:

புலவர் நீங்க யாழ் இணையத்தைச் சொல்லலேயே?

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் இனம் என்பதற்கு ethnicity (தமிழ், சிங்கள இனம்) என்றும், சாதி (caste) என்றும் இரு அர்த்தங்கள் உண்டு (இலங்கையில் ethnicity மட்டும்தான் இனம் எனப்படும்).

இந்திய அரசியற்சட்டம் தீண்டதகாத, தலித், ஹரிஜன் என அறியப்படும் சாதிகளையும், பழங்குடிகளையும் ஒரு பட்டியலில் வகை படுத்துகிறது (schedule). அவர்கள்தான் schedule caste - பட்டியலினம்.

https://en.m.wikipedia.org/wiki/List_of_Scheduled_Castes

தகவல்களுக்கு நன்றி.   இந்தியா 🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தகவல்களுக்கு நன்றி.   இந்தியா 🙆‍♂️

நன்றி.

முன்னர் இன்னொரு திரியில் அலசி இருந்தோம்.

இந்தியாவில் பல தீமையான விடயங்கள் உண்டு - ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தபட்ட மக்களை, பட்டியலில் இட்டு, இட ஒதுக்கீடு கொடுத்து, கை தூக்கி விடுவது இந்த தீமைகளில் ஒன்றல்ல.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை தமிழருக்குள்ளேயே  சிறுபான்மைத்தமிழர் என்று ஒரு பிரிவு உண்டு. “சிறுபான்மை தமிழர் முன்னணி” என்று ஒரு அமைப்பு கூட இருந்தது.  

சிறுபான்மை தமிழர் ஒருவரை உடுப்பிட்டியில்  எம்.பி ஆக்கினோம் என்று தமிழர் விடுதலை கூட்டணி பெருமை பேசியதைப் பலரும் மறந்து இருக்க மாட்டார்கள். 

  • Like 1
  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
    • ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.