Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தகவல் தொடர்புத் துறையில் அழியாத புகழை ஏற்படுத்தியுள்ள சுபாஸ்கரன், இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளாராகவும் இருந்து வருகிறார்.

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், இன்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது.

சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்வு குழுவினால் இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அல்லிராஜா சுபாஸ்கரன் பிரித்தானியாவில் வாழும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஆவார்.

இவர் ஆசியாவின் மிகச்சிறந்த தொழிலதிபருக்கான தங்க விருது, “Voice of Asia” சர்வதேச தொழில்முனைவோர் விருது, Golden Peacock விருதுகளை பெற்றுள்ளதுடன், வணிக நிர்வாகம் மற்றும் தத்துவத்திற்கான கெளரவ கலாநிதிப் பட்டத்தை மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

oruvan%2F2023-08%2F79292337-c824-4ed0-9a93-e59f355e3a91%2Flyca_boss_2.jpg?ssl=1

1972ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி முல்லைத்தீவில் பிறந்த இவர் லைக்கா நிறுவனத்தின் தலைவர் என்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற முதலீட்டாளரும் ஆவார்.

தகவல் தொடர்புத் துறையில் அழியாத புகழை ஏற்படுத்தியுள்ள சுபாஸ்கரன் அவர்கள், இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளாராகவும் இருந்து வருகிறார்.

2014இல் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளராக திரையுலகில் நுழைந்த அவர், பின்னர் 2018 இல் மிகப் பெரிய பொருட் செலவில் 2.0 படத்தை தயாரித்தார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், பொன்னியன் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்திருந்ததுடன், சர்வதேச சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆங்கிலம் அல்லாத மொழிப் படமாக உலகளவில் கொண்டுச் சென்றார்.

oruvan%2F2023-08%2Fe5ec7a17-1976-4119-be0a-a723b42dd8f2%2Flyca_boss_3.jpg?ssl=1

லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் ஊடாக சினிமா துறைக்கு பெரும் பங்காற்றி வரும் அவர், விளையாட்டு துறைக்கும் கைகொடுத்து வருகிறார்.

இதன்படி, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு லைக்கா அனுசரணை வழங்கி வருவதுடன், 2021ஆம் ஆண்டு முதல் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் லைக்கா நிறுவனம் இருந்துவருகிறது.

லைக்கா நிறுவனம் 2012ஆம் ஆண்டு “உலகளாவிய வணிக நிறுவனமாக” அங்கீகரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு, “Lycatel“ நடுத்தர சந்தையில் நுழைந்தது. 250 தனியார் நிறுவனங்களில் 36 வது இடத்தைப் பிடித்தது.

oruvan%2F2023-08%2F129a16b0-75fa-40dc-b4d0-51089c63d66a%2Flyca_boss_4.jpg?ssl=1

இங்கிலாந்தில் உள்ள ஆசிய சமூகத்தில் அதன் தாக்கத்திற்காக ஆசிய சாதனையாளர் விருதுகளில் சிறந்த ஒட்டுமொத்த நிறுவனத்திற்கான “தங்க விருது“ வழங்கப்பட்டது.

இவ்வாறாக பல உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ள பிரபல தொழிலதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு இன்று விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1346364

  • Replies 104
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

பணம் என்றால் முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்வு குழுவினரும்......?

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வா, கம்பன்பில, சரத் போன்றவர்கள் பேசாமல் இருப்பதேன்?
தமிழரின் முதலீடும் தேவை அதே நேரம் தமிழரின் தலையை வடக்கில் இருந்து தெற்குக்கு கொண்டுவருவதாக வீர வசனமும் பேசுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

மேர்வின் சில்வா, கம்பன்பில, சரத் போன்றவர்கள் பேசாமல் இருப்பதேன்?
தமிழரின் முதலீடும் தேவை அதே நேரம் தமிழரின் தலையை வடக்கில் இருந்து தெற்குக்கு கொண்டுவருவதாக வீர வசனமும் பேசுவார்கள். 

இது தான் சிங்களத்திடமிருந்து நாம் கற்கவேண்டிய தந்திரம்.

சீமான் அடிக்கடி சொல்வார்

அதிகாரம் எவ்வளவு வலுவானது என்று. 

அதை வைத்திருக்கும் தைரியத்தில் தான் சிங்களம் இத்தனை ஆட்டங்களையும் தொடர்கிறது 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்+

உவரை தங்கட கைக்குள்ளை வைத்திருக்க சிங்களம் ஆலாவட்டம் எல்லாம் போடுது.

கொஞ்ச நாளைக்கு முன்னாலை தான் கஞ்சா அருண் சித்தார்த்துக்கு தேசபிமான்ய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 🤡

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மேர்வின் சில்வா, கம்பன்பில, சரத் போன்றவர்கள் பேசாமல் இருப்பதேன்?
தமிழரின் முதலீடும் தேவை அதே நேரம் தமிழரின் தலையை வடக்கில் இருந்து தெற்குக்கு கொண்டுவருவதாக வீர வசனமும் பேசுவார்கள். 

இந்த இனவாதிகள் பணம் எண்டவுடன் வாயை மூடிக்கொள்ளுவார்கள். இடைக்கிடை சத்தம் போடடாலும் , இவர்களுக்கு உள்ளூர சந்தோசம்தான். 

6 hours ago, விசுகு said:

சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

பணம் என்றால் முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்வு குழுவினரும்......?

பிச்சைக்காரனுக்கு பணம் கொட்டும் வரைக்கும் இப்படி எல்லாம் தேவ் சரணாய் போடுவார்கள். வங்குரோத்தில் போய் கொண்டிருந்த அரச தொலைக்காட்சிக்கு மாதம்தோறும் 25 மில்லியன் பணம் கொடுத்தால் என்ன செய்யமாடடார்கள். இன்னும்நிறைய நிறுவனங்களூடாக இலங்கைக்கு பணம் கொட்டிட  போகுது. எனவே நிறைய வரவேட்ப்புக்கள் கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்வு குழுவினால் இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

உதெல்லாம் வலுவற்றவிருது. பிக்குகளின் வெறியாட்டத்தை கட்டுப்படுத்தி தர்மத்தை காக்கத்தெரியாதவரை முச்சங்கத்தின் தலைவர் என ஏற்றக்கொள்ளமுடியாது. ஆமா... அது ஏது முச்சங்கம் என்பதையும் விளக்கி சொல்லலாமே? நாளைக்கு அல்லிராஜாவையும் ஒரு சிங்களப்பெயரில் மாற்றாமல்  பாத்துக்கொண்டால் சரி.

4 hours ago, நன்னிச் சோழன் said:

கொஞ்ச நாளைக்கு முன்னாலை தான் கஞ்சா அருண் சித்தார்த்துக்கு தேசபிமான்ய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 🤡

ஆ று ஆண்டுகளுக்கு முன், வி. முரளிதரனுக்கு விசேட விருது அளிக்கப்படவேண்டுமென தாய் நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியது. காரணம்; விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற இலங்கை இராணுவத்தினருக்கு வி. முரளிதரன் பாரிய பங்களிப்பை செய்ததனால். அவ்வாறு செய்யவில்லையெனில்; பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை மீளப்பெற வேண்டும்என அந்த அமைப்பின் இணைப்பாளர் வலியுறுத்தியிருந்தார் என்றால், அவர்களின் பங்களிப்பு சிங்களத்துக்கு எவ்வளவு அவசியமாகியிருந்தது என சிந்திக்கலாம், ஓட்ஸிசன் போன்றது!

  • கருத்துக்கள உறவுகள்+
41 minutes ago, satan said:

கருணாவுக்கு கண்டிப்பாக குடுத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து... கருணா அதற்குத் தகுதியானவர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நன்னிச் சோழன் said:

கருணாவுக்கு கண்டிப்பாக குடுத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து... கருணா அதற்குத் தகுதியானவர்.

அதற்கு, அவர் செய்த பணியென்ன? அந்த திறமை  யாரால் வந்தது? தீட்டிய மரத்தில் கூர் பார்த்ததற்கு சிறப்பு கௌரவம்!

54 minutes ago, satan said:

காரணம்; விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற இலங்கை இராணுவத்தினருக்கு வி. முரளிதரன் பாரிய பங்களிப்பை செய்ததனால்.

இனத்தை, மதத்தை, சமூகத்தை, பண்பாட்டை காட்டிக்கொடுப்பது, விட்டுக்கொடுப்பது, சீரழிப்பது, சிதைப்பது போன்றவற்றிற்கே சிங்களம் விருது வழங்கி கௌரவிக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அதற்கு, அவர் செய்த பணியென்ன? அந்த திறமை  யாரால் வந்தது? தீட்டிய மரத்தில் கூர் பார்த்ததற்கு சிறப்பு கௌரவம்!

இனத்தை, மதத்தை, சமூகத்தை, பண்பாட்டை காட்டிக்கொடுப்பது, விட்டுக்கொடுப்பது, சீரழிப்பது, சிதைப்பது போன்றவற்றிற்கே சிங்களம் விருது வழங்கி கௌரவிக்கும்.  

நீங்கள்  எவ்வளவு சத்தம் போட்டாலும்   அல்லிராசாவை கொண்டு  இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையில்லை தமிழர்களை இலங்கை அரசும் இலங்கை இராணுவமும். பொருளாதார கஸ்டத்திலும். மத்தியிலும்.  பாதுகாப்பாகவும்  மகிழ்ச்சியுடனும் வைத்து உள்ளது. என்று சொல்ல வைத்து அல்லது பேச வைத்து    அல்லிக்கு   கௌரவ விருது   அதியுயர். பிக்குவால்.  வழங்கப்படும் விழாவில் அல்லி பூத்து போய்   இங்கே இருந்தது பயங்கர வாதம்  அதனை இராணுவம் உயிர் தியாகம் செய்து. அழித்து விட்டது என்று வாய் மொழிவார்.  எப்படி இருக்கிறது கற்பனை 🤣🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

அல்லிராஜாவின் பிரான்ஸ் அகதி விண்ணப்பத்தை பார்த்தால் தெரிந்து விடும் எதற்காக நாட்டைவிட்டு ஓடி வந்தார் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தொழில் முனைவோருக்கு கிழமை வட்டிக்கு காசு கொடுப்பவர்கள் லைக்காவின் பெயர சொல்லித்தான் கொடுப்பது  அல்லி க்கு தெரிந்துதான் செய்கிறார்களா என்று கேட்கணும் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அல்லிராஜாவின் பிரான்ஸ் அகதி விண்ணப்பத்தை பார்த்தால் தெரிந்து விடும் எதற்காக நாட்டைவிட்டு ஓடி வந்தார் என்று.

அது அந்தக்காலம்.  இப்போது பிரான்ஸ் அரசு கூட. அவரை அகதி என்று சொல்லாது..இன்று அவர்   பிரபல உலகத் தொழிலதிபர்    இவரை சிங்களவன். தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்போவது திண்ணம்  இது எனது கருத்துகள் தயவுசெய்து கோபம் கொள்ளாமல் கருத்துகள் எழுதுங்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நன்னிச் சோழன் said:

உவரை தங்கட கைக்குள்ளை வைத்திருக்க சிங்களம் ஆலாவட்டம் எல்லாம் போடுது.

கொஞ்ச நாளைக்கு முன்னாலை தான் கஞ்சா அருண் சித்தார்த்துக்கு தேசபிமான்ய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 🤡

அப்போ அருண் சித்தார்தும் அல்லிராஜாவும் ஒண்ணா,இவர்கள் எல்லோரும் புள்ளிராஜாக்கள்தானா!

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Elugnajiru said:

அப்போ அருண் சித்தார்தும் அல்லிராஜாவும் ஒண்ணா,இவர்கள் எல்லோரும் புள்ளிராஜாக்கள்தானா!

அது, இலங்கை அரசு அவர்களை பயன்படுத்துவதை பொறுத்து. நாட்டை விட்டு பாதுகாப்புத்தேடி ஓடியவர்கள், அதற்கான எந்த உத்தரவாதம், உடன்பாடு, மனவருத்தம், மாற்றம் எட்டாமல், இல்லாமல் வந்து முதலீடு செய்யும்போது; இங்கு பிரச்சனையால் அவர்கள் வெளியேறவில்லை அல்லது இன்னொரு காரணம் சொல்லுவார்கள் அதை வெளிப்படையாக நான் சொல்லவிரும்பவில்லை. சிங்களம் அதன் வருடிள் விரைவில் அதை சொல்வார்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவே புலம் பெயர்ந்தார்கள் என்று கதையை முடிக்கும். அதற்கு நம்மில் சிலரும் உடந்தை, ஆனால் எங்களுக்காக இரங்கி உதவி செய்ய நினைக்கு ம் நாடுகள், எங்களின் சுயநலத்தால் ஒதுங்கிக்கொள்ளவும், உண்மையிலேயே உயிர்ப்பயத்தால் போனவர்களை இவர்களின் பட்டியலில் சேர்க்கப்படவும் கூடும். எப்போதும், நமக்கு நாமே எதிரி.

எம் மத்தியில் இன்னும் பல லைக்காக்களும், அல்லி ராஜாக்களும் உருவாகட்டும். 

வளமும், பொருளாதார மேன்மையுமே அதிகாரத்துக்கான அடிப்படைகள். இவற்றை மட்டுமே இந்த உலகம் கண் கொண்டு பார்க்கும். 

அல்லி ராஜாவுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நன்னிச் சோழன் said:

உவரை தங்கட கைக்குள்ளை வைத்திருக்க சிங்களம் ஆலாவட்டம் எல்லாம் போடுது.

கொஞ்ச நாளைக்கு முன்னாலை தான் கஞ்சா அருண் சித்தார்த்துக்கு தேசபிமான்ய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 🤡

இது உண்மையான தகவலா? செய்தி , நிகழ்வு இணைப்பைத் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

எம் மத்தியில் இன்னும் பல லைக்காக்களும், அல்லி ராஜாக்களும் உருவாகட்டும். 

வளமும், பொருளாதார மேன்மையுமே அதிகாரத்துக்கான அடிப்படைகள். இவற்றை மட்டுமே இந்த உலகம் கண் கொண்டு பார்க்கும். 

அல்லி ராஜாவுக்கு வாழ்த்துகள்.

இதைத்தான் நானும் பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி.ஆனால் நாமும் செய்ய மாட்டோம் செய்யிறவனுக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்து எதிரி ஆக்கி அவனுக்கு பலம் சேர்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு.அல்லிராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

சிங்கள அரசு எப்பவுமே றால் போட்டு சுறா பிடிப்பதில் வல்லவர்கள்.

கவனமாக இருங்கள்.

உங்கள் சேவை நாட்டுகத் தேவை.

வாழ்க வளர்க.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

எம் மத்தியில் இன்னும் பல லைக்காக்களும், அல்லி ராஜாக்களும் உருவாகட்டும். 

வளமும், பொருளாதார மேன்மையுமே அதிகாரத்துக்கான அடிப்படைகள். இவற்றை மட்டுமே இந்த உலகம் கண் கொண்டு பார்க்கும். 

அல்லி ராஜாவுக்கு வாழ்த்துகள்.

இதுதான் எனது கருத்தும் யாழ் இணையத்தில் பெரும் புள்ளிகள் இல்லையோ?🙄🙄

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, Elugnajiru said:

அப்போ அருண் சித்தார்தும் அல்லிராஜாவும் ஒண்ணா,இவர்கள் எல்லோரும் புள்ளிராஜாக்கள்தானா!

இல்லை, நான் சொல்ல விளையாத ஒன்றைச் சொன்னதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நான் எழுதியது இருவேறு கருத்துக்கள். ஒரு குடுக்காரனுக்கும் இவ்விருது கொடுக்கப்பட்டதையே சுட்டிக்காட்டினேன். 

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, Justin said:

இது உண்மையான தகவலா? செய்தி , நிகழ்வு இணைப்பைத் தர முடியுமா?

ஓமோம், யாழிலேயே இச் செய்தியைக் கண்டேன். 

இவன் ஒரு சிவப்பு உடை அணிந்த படி இடது பக்கம் நிற்ப்பான், கையில் விருதோடு. 

இப்போது தேடிப்பார்த்தேன் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

வளமும், பொருளாதார மேன்மையுமே அதிகாரத்துக்கான அடிப்படைகள். இவற்றை மட்டுமே இந்த உலகம் கண் கொண்டு பார்க்கும். 

ஆமா...... உண்மைதான்! அந்த பலத்தோடு இருந்தவர்களை வெட்டியும், எரித்தும், கொன்றும் துரத்தினார்கள், உங்கள் இடத்துக்கு போங்கள் என்று. அப்போ யாரும் நம்மை கண்டு கொள்ளவில்லை. வந்தோம், உயர்ந்தோம். தேடி வந்து நாடே இல்லை உங்களுக்கு என்று அடித்தான். உள்ளதை பறித்தான். உலகம் அதை வேடிக்கை பாத்தது. ஆயுதத்தை தூக்கினோம் நம்மை பாதுகாக்க, ஓடி வந்தது உலகம் சேர்ந்து நம்மை அழிக்க. இப்போ எங்களுக்கு நாடு இல்லை, கோவில் இல்லை என்கிறார்கள் பிச்சை எடுத்துக்கொண்டே. அன்று கூலிக்கு, புகையிலை, வெங்காயம், மிளகாய், கருவாடு என்று கொள்வனவு செய்ய வந்தவர்கள் இன்று சொந்தக்காரரை விரட்டிவிட்டு அவர்கள் தொழிலதிபர். இது, தமிழரை கண்டு சிங்களவன் பயப்படுகிறான் என்று கருத்துச்சொல்லவும் இருக்கிறோம். நீங்கள் வந்து முதலிடுங்கள், சிங்களவரை வேலைக்கமர்த்துங்கள், உங்களை விரட்டுவது, உங்களிடமிருந்து பறிப்பது அவர்களுக்கு ஒன்றும் பெரிய சவாலாக இருக்கப்போவதில்லை. "புலம்பெயர்ந்தோர்." இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தோம் என்பவர்கள், இதை சொல்வதற்கு தயங்கப்போவதில்லை. உங்களை இந்த நாட்டின் பிரஜைகள் என்று எங்குமே அவன் சொல்லவுமில்லை, விரட்டியதற்காக மனம் வருந்தவுமில்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எல்லோரும் வாருங்கள், நாட்டை முன்னேற்றுங்கள். அப்போ, அடித்து விரட்டியவர்கள், இப்போ மாலை போட்டு வரவேற்கிறார்கள் உங்களை. போக, திக்கற்று இருந்தவர்களின் தலையை களனியில் வைக்கப்போகிறார்களாம் வந்து அடையாளம் காட்டுங்கள் அவை பூர்வீக  தமிழர்களுடையதுதானா என்று.  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நன்னிச் சோழன் said:

ஓமோம், யாழிலேயே இச் செய்தியைக் கண்டேன். 

இவன் ஒரு சிவப்பு உடை அணிந்த படி இடது பக்கம் நிற்ப்பான், கையில் விருதோடு. 

இப்போது தேடிப்பார்த்தேன் காணவில்லை.

நான் யாழுக்கு வெளியே இலங்கைச் செய்திகளில் தேடிப்பார்த்தும் அப்படி ஒன்றையும் காண முடியவில்லை, எனவே தான் சொன்ன உங்களிடம் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

23 hours ago, சுவைப்பிரியன் said:

பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி

பொருளாதார பலம் எங்களை எப்படி மீட்கும் எனக் கூறமுடியுமா?

ஊரி்ல்(வன்னியில்) vanni cashews என்ற ஒன்றை தயாரிக்கிறார்கள்.. மிகவும் சுவையான ஒன்று.. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. புலம்பெயர் தமிழ் செல்வந்தர்கள், அதுவும் அரசியல் செல்வாக்கானவர்கள் ஏன் இப்படியான உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழிவகுத்து அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். 

ஊரில இளையோர் சீரழிந்து போகிறார்கள், இப்பதான் மறுவாழ்வு சிகிச்சை நிலையம் பற்றி யோசிக்கிறார்கள். எங்கட பொருளாதார பலம் இவர்களை மீட்க வழி செய்யுமா? எப்படி?

கொஞ்ச காலத்திற்கு முன் நீராஜ் டேவிட் அவர்களின் இஸ்ரேல் பயண அனுபவங்களை தொகுத்து வழங்கிய காணெளியைப் பார்த்தேன், அதில் அவர் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் பற்றி அடிக்கடிக் கூறுவார். இதனைப் பார்த்து உங்களைப் போலவே நானும் கொஞ்ச காலத்திற்கு முன் நம்பியிருந்தேன். 

ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கையில் நாங்கள் எங்களுடைய பொருளாதார பலத்தை ஒற்றுமையாகப் பயன்படுத்தவில்லை உணரவில்லை, உணர்ந்தவர்களும் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.