Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அல்லிராஜாக்கள் பலரும் இருக்கிறார்கள்

ஆனால் இன்றைய சிங்களத்தின் நிலை அறிந்து பேரம் பேசுதல் வேண்டும். அல்லது சிங்களம் எமது இந்த பலத்தையும் அழித்து விடும் 😭

வரலாறு எம் கண் முன்னே தான் நடந்தது.

சிங்களம் கேட்டதை செய்து கொடுத்து அதிகாரத்தை பகிரலாம் என்ற இயக்கங்களின் இன்றைய நிலையே சாட்சி 😭

அண்மையில் கூட ஒரு பெரும் கோடீஸ்வர தமிழர் கொழும்பில் கொலையுண்டார். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Like 1
  • Replies 104
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சுவைப்பிரியன்

இதைத்தான் நானும் பல தடவை எழுதியிருக்கிறேன்.பொருளாதரப் பலமே எம்மை மீட்க்க வளி.ஆனால் நாமும் செய்ய மாட்டோம் செய்யிறவனுக்கும் ஏதோ ஒரு பட்டம் கொடுத்து எதிரி ஆக்கி அவனுக்கு பலம் சேர்ப்போம்.

ரஞ்சித்

பொருளாதார பலமே எம்மை மீட்க வழி என்று எழுதப்படும் மொக்கைத்தனமான கருத்துக்களைச் சகிக்க முடியவில்லை. தனக்கு இலாபம் தரக்கூடிய ஒரு சில தமிழ் பண முதலைகளைச் சிங்களம் வளைத்துப்போடும். இவர்கள் பெருந்தொகைப் பணத

Justin

இங்கே அல்லிக்கு விழும் பந்தி பந்தியான வசவுகளைப் பார்க்கையில் ஒன்று தெளிவாகிறது: புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழனாக இருப்பது ரொம்பக் கஷ்டமான விடயம், தாண்ட வேண்டிய bar மிக உயரம்😂!  இந்த ஆக்ரோஷத்தைப்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எவ்வளவு காசு பணம் இருந்தாலும் இந்த பைத்தியக்காறத்தனங்களுக்கு ஒண்டும் குறைவில்லை.. நேற்று ரஜினி இன்று இவர்.. கடவுள் இருந்தால் அவரை பார்த்தால் அவர்காலில் போய் விழுங்கள் அவர் முன்னால் முக்கால் டிகிரியில் குனிந்து நில்லுங்கள்.. இப்படி உழைக்காமல் ஓசிச்சோறு தின்னும் சாமியார்களின்காலில் ஏன் போய் விழுகிறார்கள் குனிகிறார்களோ..?

large.18B14DBF-0792-45D7-BA6B-D787BF7D263B.jpeg.1a3a8c17f1265f66437592ac1de6bee5.jpeg

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
5 hours ago, Justin said:

நான் யாழுக்கு வெளியே இலங்கைச் செய்திகளில் தேடிப்பார்த்தும் அப்படி ஒன்றையும் காண முடியவில்லை, எனவே தான் சொன்ன உங்களிடம் கேட்டேன்.

நானும் யாழுக்கு வெளியே தேடிப்பார்த்தேன்... என்னாலும் காண முடியவில்லை...

ஆனால் இவனுக்கு விருது குடுத்தவங்கள்... இவன் சிவப்பு நிற, அந்த விருது வாங்கிறாக்கள் போடுறது, கோட் போட்டபடி கையில விருதையும் வைத்தபடி நின்டவன். நல்ல ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரின் உழைப்பை சுருட்டி உலையில போடுற லைக்காவுக்கு.. சிங்கள பெளத்த தேரர்கள் விருது.

அதேவேளை.. லெபராவுக்கு... 4ம் மாடியில் விசாரணைக்கு.. சி ஐ டி.. ரி ஐ டி விசாரணைக்கு அழைப்பு.

லைக்காவும் புலம்பெயர் தமிழரினது தான். லெபராவும் புலம்பெயர் தமிழர்களினது தான்.

அதேன் ஒருவருக்கு விருது.. மற்றவருக்கு விசாரணை.

நல்லூரை இடிச்சு.. விகாரை கட்டுவன் என்ற குடிகாரனுக்கு.. சிங்கள இராணுவக் கூலிக்கும் விருது.

சொறீலங்காவில்.. இப்ப தமிழருக்கு தமிழரின் இருப்புக்கு எதிராகவும் சிங்கள தேசத்துக்கு சிங்கள எஜமானருக்கு.. சேவகம் செய்து.. பிழைப்பை ஓட்டுபவர்களுக்கும்... விருதோ விருது. 

  • Like 1
Posted

364064582_743219340941014_26922707906813

உபயம் முகப்புத்தகம். செய்தியின் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எவ்வளவு காசு பணம் இருந்தாலும் இந்த பைத்தியக்காறத்தனங்களுக்கு ஒண்டும் குறைவில்லை.. நேற்று ரஜினி இன்று இவர்.. கடவுள் இருந்தால் அவரை பார்த்தால் அவர்காலில் போய் விழுங்கள் அவர் முன்னால் முக்கால் டிகிரியில் குனிந்து நில்லுங்கள்.. இப்படி உழைக்காமல் ஓசிச்சோறு தின்னும் சாமியார்களின்காலில் ஏன் போய் விழுகிறார்கள் குனிகிறார்களோ..?

அட நீங்கள் வேற.......:rolling_on_the_floor_laughing:
இந்த பாழாப்போன உலகில் எதற்கும் ஆமாம் சாமி போட்டு தலை குனிந்து நின்றால்தான் பேரும் புகழுடனும் தலைநிமிர்ந்து வாழலாம். மாறாக நீதி  நியாயத்துடன் யதார்த்தமாக கேள்வி கேட்டு வாழ்வீர்களேயானால் உங்களை குற்றவாளியாக்கி/ செல்லாகாசாக்கி நடைப்பிணமாக்கி விடுவார்கள்.

கொலை செய்து வாழ்ந்தாலும் தந்திரமாக கொலை செய்து வாழணும். இதுதான் இன்றைய உலகம்.இதற்கான படிப்பினைகள் தமிழினத்தில் அதிகம் உள்ளது.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

large.18B14DBF-0792-45D7-BA6B-D787BF7D263B.jpeg.1a3a8c17f1265f66437592ac1de6bee5.jpeg

அல்லி ஏன் சூரியனை கண்ட தாமரை போல் இப்படி வளைகிறது🤣.

இந்த வளைவு சொல்லி நிற்கும் செய்தி என்ன? அல்லியோ, புள்ளியோ - ஈழத்தமிழன் என்றால் இனவாதத்தின் முன் எட்டாக வளைந்தால் மட்டுமே இலங்கையில் நிலைக்க முடியும்.

இதுவே ஒரு இந்திய, மேற்கத்தய, ஜப்பானிய, ரஸ்ய, சீன வியாபாரி என்றால் இப்படி முதுகு வளைய வேண்டி வந்திராது.

சிறிய அளவில் மக்களுக்கு ஏதும் செய்யலாம் - ஆனால் இப்படியான வியாபாரிகள் மூலம் பொருளாதார ரீதியில் நாம் சுதந்திரம் அடையலாம் என நினைத்தால் அது பகல் கனவே.

அல்லி லாபம் வந்தால் விற்று விட்டு போய்கிட்டே இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பொருளாதார பலம் எங்களை எப்படி மீட்கும் எனக் கூறமுடியுமா?

சொல்லமாட்டார்கள்.

1948 இல் இலங்கை பொருளாதாரத்தை தமிழரும், பறங்கியரும் கையில் வைத்திருந்த போதே இனபிரச்சனை ஆரம்பித்தது.

சொல்ல போனால் தமிழர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட அவர்களின் பொருளாதார பலமும் ஒரு காரணி.

இப்போ முழு வட்டம் சுற்றி வந்து - மீண்டும் பொருளாதார பலம் இருந்தால் விடியலை அடையலாம் என கதைக்கிறார்கள்.

தேவை - பறிக்க முடியாத ஆட்சி அதிகாரம். நிதியை கையாளும் சுதந்திரம். வியாபரிகளை வைத்து அதிகம் சாதிக்க முடியாது. தமக்கு வளைய கூடியோரை மட்டுமே சிங்களம் உள்ளீர்க்கும்.

சிலர் நாட்டுக்கு போக முடியாமல் இருப்பதற்கும். சிலர் போய் விருதும் வாங்குவதற்கும் காரணம் இதுதான்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/8/2023 at 21:46, ஈழப்பிரியன் said:

திரு.அல்லிராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

சிங்கள அரசு எப்பவுமே றால் போட்டு சுறா பிடிப்பதில் வல்லவர்கள்.

கவனமாக இருங்கள்.

உங்கள் சேவை நாட்டுகத் தேவை.

வாழ்க வளர்க.

ஆடு கொளுத்துப்போனால் என்ன நடக்குமென்று தெரியும்தானே. இவருக்கு நன்றாக ஆரத்தி எடுத்து படடம் கொடுப்பதெல்லாம் கழுத்தறுப்புக்குத்தான். இவர் நிறையவே முதலீடுகள் இங்கு செய்துள்ளார்கள். தமிழர்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா என்றால் தேடித்தான் பார்க்க வேண்டும்.

இன்னும் இவர் முதலீடு செய்யும் வரைக்கும் இவருக்கு இன்னுமின்னும் படடங்கள் கிடைக்கும். ஒரு நாள் வரும், இவை எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டு சிங்களவர்களால் அபகரிக்கப்படும். அப்போது எல்லாம் மிகவும் தாமதமாகி விடும். இவர்களின் இனவாதம், மதவாதம் பற்றி இவர்கள் புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வது கவலைக்குரிய விடயம்.

இவருக்கு சுவர்ணவாஹினி, SBC என்னும் இருந்து தொலைக்காட்சி நிலையங்கள் உண்டு. அப்படி இருக்கும்போது மக்கள் பார்க்காத, நடத்தில் இயங்கும் அரச தொலைக்காட்சியை (EYE சேனல் ) எதட்கு மாதாந்தம் 25 மில்லியன் வாடகைக்கு எடுக்க வேண்டும்? இந்த இரண்டிலும் ஒளி பரப்புவதைத்தான் அங்கும் ஒளி பரப்புகிறார்கள்.

தமிழனுக்கு உரிமை வழங்கும் வரைக்கும் இவர்களை நம்புவது மிகவும் அபாயகரமானது. 

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பொருளாதார பலம் எங்களை எப்படி மீட்கும் எனக் கூறமுடியுமா?

ஊரி்ல்(வன்னியில்) vanni cashews என்ற ஒன்றை தயாரிக்கிறார்கள்.. மிகவும் சுவையான ஒன்று.. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. புலம்பெயர் தமிழ் செல்வந்தர்கள், அதுவும் அரசியல் செல்வாக்கானவர்கள் ஏன் இப்படியான உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழிவகுத்து அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். 

ஊரில இளையோர் சீரழிந்து போகிறார்கள், இப்பதான் மறுவாழ்வு சிகிச்சை நிலையம் பற்றி யோசிக்கிறார்கள். எங்கட பொருளாதார பலம் இவர்களை மீட்க வழி செய்யுமா? எப்படி?

கொஞ்ச காலத்திற்கு முன் நீராஜ் டேவிட் அவர்களின் இஸ்ரேல் பயண அனுபவங்களை தொகுத்து வழங்கிய காணெளியைப் பார்த்தேன், அதில் அவர் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் பற்றி அடிக்கடிக் கூறுவார். இதனைப் பார்த்து உங்களைப் போலவே நானும் கொஞ்ச காலத்திற்கு முன் நம்பியிருந்தேன். 

ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கையில் நாங்கள் எங்களுடைய பொருளாதார பலத்தை ஒற்றுமையாகப் பயன்படுத்தவில்லை உணரவில்லை, உணர்ந்தவர்களும் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். 

பொருளாதார பலமே எம்மை மீட்க வழி என்று எழுதப்படும் மொக்கைத்தனமான கருத்துக்களைச் சகிக்க முடியவில்லை. தனக்கு இலாபம் தரக்கூடிய ஒரு சில தமிழ் பண முதலைகளைச் சிங்களம் வளைத்துப்போடும். இவர்கள் பெருந்தொகைப் பணத்தை வாரியிறைத்தே சிங்களத்திடம் கெளரவத்தினைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளுக்கும் தமிழரின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழரின் பணத்தைக் கொண்டு இழக்கப்பட்ட உரிமைகளையோ, இழக்கப்பட்ட தாயகத்தையோ, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையோ பெற்றுக்கொள்ளலாம் என்று சிலர் கனவு காண்பது அவர்களுக்கிருக்கும் கிரகிப்புத் திறனைப் பொறுத்தது. பணம் கொடுத்து உரிமை வாங்கலாம் என்று கனவுகாணும் சிலருக்கு ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன்,

1983 ஆம் ஆண்டு ஆடி 25 ஆம் திகதி தலைநகரின் புறக்கோட்டை மற்றும் பிரதான வீதி, கெய்ஸர் வீதி, கதிரேசன் ஆகிய வீதிகளிலிருந்த தமிழருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையங்கள், நகைக் கடைகள், புடவைக்கடைகள் என்று இலக்குவைத்து அழிக்கப்பட்டன. இதற்கான காரணம் இலங்கையின் அரிசி மொத்த விற்பனை வியாபாரத்தில் 90 வீதமானவை தமிழரின் கைகளிலேயே இருந்தது. மீதி 10 வீதத்தைச் சோனகர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதே போல நகை வியாபாரத்தில் ஏறக்குறைய 100 வீதம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. புடவை வியாபாரமும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் அன்று இருந்தது. பொருளாதாரத்தில் தமிழர்கள் மிகவும் பலமான நிலையில் இருந்தார்கள். பல தமிழ் மொத்த வியாபாரிகளும், நகைக்கடை உரிமையாளர்களும் வாழைத்தோட்டச் சண்டியனான பிரேமதாசவுக்கு மாதம் தோறும் கப்பமாகப் பெரும் பணம் (உதயா நகை வியாபாரம் முதற்கொண்டு) கொடுத்து தமது வியாபாரங்களைப் பாதுகாப்பாக நடத்திவந்தார்கள். பல தொழில் அதிபர்கள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்திருந்தார்கள். அரசாங்கம் பெருமளவு வரிப்பணத்தை தமிழர்களின் தொழில்களூடாகப் பெற்றுவந்தது. ஆனால், ஆடி 25 ஆம் திகதி இவை அனைத்தும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. ஏனென்றால், தமிழரின் பொருளாதார பலத்தினை அழிப்பதே சிங்களத்தின் உண்மையான நோக்கம். வாசிக்கத் தெரிந்தவர்கள் 83 கலவரத்தில் பிரேமதாச,  லலித் அதுலத் முதலி, சிறில் மத்தியூ, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், காமிணி போன்றோர் தமிழரின் பொருளாதார பலம் அழிக்கப்படவேண்டும் என்றே செயற்பட்டனர், இவர்களை ஜெயார் எப்படி வழிநடத்தினார் என்பதை ஒருமுறை படித்துப் பார்ப்பது உதவியாக இருக்கும்.  மாதாமாதம் கப்பம் கட்டிய நகைக்கடைக்காரர்கள் கூட வெறும் ஷொப்பிங் பையுடந்தான் யாழ்ப்பாணத்திற்குக் கப்பல் ஏறினார்கள். அன்றிருந்த தமிழர்களின் பணபலம் அவர்களைக் காக்கவில்லை. அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை, அவர்களின் தாயகத்தைக் காக்கவில்லை, கொல்லப்படுபவர்களையும் காணாமலாக்கப்பட்டவர்களையும் மீட்டுத்தரவில்லை. ஏனென்றால், தமிழரின் பொருளாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைப்பதற்காகவே தமிழரின் பணத்தை, முதலீட்டை, வியாபாரத்தை அழித்தார்கள். போதாதென்று தமிழரின் அழிக்கப்பட்ட வியாபா நிலையங்களை, அவற்றின் கட்டடங்களை அரச ஆதரவுடன் பொறுப்பெடுத்துச் சிங்களவர்களுக் கையளித்தார்கள். 

83 இனவழிப்பில் தமிழர்களுக்குச் சொந்தமான ஒன்றரை இலட்சம் தொழில் நிலையங்கள், வியாபார நிலையங்கள், வீடுகள் என்பன முற்றாக எரிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்துமே இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவியவைதான். ஆனால், தமிழரின் பொருளாதாரப் பலத்தை அழிக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகவே இவை அழிக்கப்பட்டன. இவை அழிக்கப்படும்போது ஒரு கணம் ஏனும் சிங்களம் யோசிக்கவில்லை. அல்லது, இவற்றை வைத்திருந்ததால் மட்டுமே தமிழர்களால் தம்மைக் காத்துக்கொள்ள முடியவில்லை. 

இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் பணம் தருவார்களாம், அதனைக்கொண்டு தமிழரின் உரிமைகளை வாங்கிவிட முடியுமாம். இந்த வீணர்களிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், எவ்வளவு பணம் கொடுத்தால் உங்களுக்கு உரிமை தருவதாக சிங்களவன் கூறியிருக்கிறான்? உங்களின் இழக்கப்பட்ட தாயகத்திற்கு நீங்கள் பேசியிருக்கும் விலையென்ன? கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதிக்குப் பேசியிருக்கும் விலையென்ன? 

அரகலய காலத்தில் புலம்பெயர் தமிழரின் பணத்தின் மூலம் பேரம் பேசலாம் என்று கதை எழுந்தது. உடனேயே சிங்களம் சுதாரித்துக்கொண்டு அவர்கள் வந்து முதலிடலாம், அரசியலில் செல்வாக்குச் செலுத்த முடியாது. இந்த நாட்டை எப்படி நடத்துவதென்பது சிங்கள பெளத்தர்களின் கைகளிலேயே இருக்கிறது என்று தெளிவாகச் சொல்லியது.

உங்களை பொருளாதாரத்தில் பலவீனமாக்கி, தம்மிடம் கையேந்தும் நிரந்தர நிலையை அவன் உருவாக்க நினைக்கிறான். இந்த லட்சணத்தில் உரிமைகளுக்கு பணம் கொடுத்து வாங்கலாம் என்கிற கனவு !

2 hours ago, Cruso said:

ஆடு கொளுத்துப்போனால் என்ன நடக்குமென்று தெரியும்தானே. இவருக்கு நன்றாக ஆரத்தி எடுத்து படடம் கொடுப்பதெல்லாம் கழுத்தறுப்புக்குத்தான். இவர் நிறையவே முதலீடுகள் இங்கு செய்துள்ளார்கள். தமிழர்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா என்றால் தேடித்தான் பார்க்க வேண்டும்.

இன்னும் இவர் முதலீடு செய்யும் வரைக்கும் இவருக்கு இன்னுமின்னும் படடங்கள் கிடைக்கும். ஒரு நாள் வரும், இவை எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டு சிங்களவர்களால் அபகரிக்கப்படும். அப்போது எல்லாம் மிகவும் தாமதமாகி விடும். இவர்களின் இனவாதம், மதவாதம் பற்றி இவர்கள் புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வது கவலைக்குரிய விடயம்.

இவருக்கு சுவர்ணவாஹினி, SBC என்னும் இருந்து தொலைக்காட்சி நிலையங்கள் உண்டு. அப்படி இருக்கும்போது மக்கள் பார்க்காத, நடத்தில் இயங்கும் அரச தொலைக்காட்சியை (EYE சேனல் ) எதட்கு மாதாந்தம் 25 மில்லியன் வாடகைக்கு எடுக்க வேண்டும்? இந்த இரண்டிலும் ஒளி பரப்புவதைத்தான் அங்கும் ஒளி பரப்புகிறார்கள்.

தமிழனுக்கு உரிமை வழங்கும் வரைக்கும் இவர்களை நம்புவது மிகவும் அபாயகரமானது. 

இரத்திணச் சுருக்கம், நன்றி குறூசோ!

Edited by ரஞ்சித்
  • Like 2
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, நன்னிச் சோழன் said:

நானும் யாழுக்கு வெளியே தேடிப்பார்த்தேன்... என்னாலும் காண முடியவில்லை...

ஆனால் இவனுக்கு விருது குடுத்தவங்கள்... இவன் சிவப்பு நிற, அந்த விருது வாங்கிறாக்கள் போடுறது, கோட் போட்டபடி கையில விருதையும் வைத்தபடி நின்டவன். நல்ல ஞாபகம்.

18 hours ago, nunavilan said:

364064582_743219340941014_26922707906813

உபயம் முகப்புத்தகம். செய்தியின் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.

நுணா போட்டிருப்பதைத் தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இது ஒரு  பௌத்த அமைப்பினால் வழங்கப் பட்ட "தேசமான்ய ஆச்சார்ய" எனப்படும் ஒரு போலி டாக்டர் பட்டம்! இதற்கும் இலங்கையின் இரண்டாவது உயர் விருதான தேசமான்யவிற்கும் தொடர்பெதுவும் இல்லை.

இலங்கைக்கு நன்மதிப்பு ஏற்படுத்த இதைச் சொல்லவில்லை, ஆனால் தேசமான்ய என்பது ஏதாவதொரு துறையில் (அல்லிராஜா வர்த்தகம், தொலை தொடர்பில் செய்தது போல) சாதனை/வாழ்நாள் பங்களிப்புச் செய்தோருக்கு மட்டும் கொடுக்கப் படும் தேசிய விருது, அது ஒரு கௌரவ/போலி டாக்டர் பட்டம் அல்ல!

அப்படியான ஒரு விருதின் பின்னால் "ஆச்சார்ய" வைப் போட்டு சித்தார்த்  காதிலும் பூச்சுத்தி, உங்களையும் குழப்பி விட்டார்கள்.😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
4 hours ago, Justin said:

நுணா போட்டிருப்பதைத் தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இது ஒரு  பௌத்த அமைப்பினால் வழங்கப் பட்ட "தேசமான்ய ஆச்சார்ய" எனப்படும் ஒரு போலி டாக்டர் பட்டம்! இதற்கும் இலங்கையின் இரண்டாவது உயர் விருதான தேசமான்யவிற்கும் தொடர்பெதுவும் இல்லை.

ஓமோம் உதைத்தான், உதைத்தான் சொன்னனான்.

5 hours ago, Justin said:

இலங்கைக்கு நன்மதிப்பு ஏற்படுத்த இதைச் சொல்லவில்லை, ஆனால் தேசமான்ய என்பது ஏதாவதொரு துறையில் (அல்லிராஜா வர்த்தகம், தொலை தொடர்பில் செய்தது போல) சாதனை/வாழ்நாள் பங்களிப்புச் செய்தோருக்கு மட்டும் கொடுக்கப் படும் தேசிய விருது, அது ஒரு கௌரவ/போலி டாக்டர் பட்டம் அல்ல!

அப்படியான ஒரு விருதின் பின்னால் "ஆச்சார்ய" வைப் போட்டு சித்தார்த்  காதிலும் பூச்சுத்தி, உங்களையும் குழப்பி விட்டார்கள்.😂

ஓகோ, இதான் சங்கதியோ😂

ஐயோ, சித்தார்த்தா🤡... வடை போச்சே🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஐயோ, சித்தார்த்தா🤡... வடை போச்சே🤣

தமிழினத்திற்கு எதிராக செயற்படும் தமிழர்களை சிங்களம் எப்போதுமே தமது நாயகர்களாக அழகுபார்த்து ரசிக்கும் என்பது புதுவிடயமா என்ன? அன்றிலிருந்து இன்றுவரை தமது சொந்த இனத்திற்கு வஞ்சகம் செய்து சிங்களவருடன் கூடிக் குலாவிய தமிழர்களுக்கு சிங்களம் கொடுத்துவரும் மரியாதையினைப் பார்த்தீர்களென்றால் இவனுக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதுபற்றி நீங்கள் குழம்பத் தேவையில்லை. 2004 இல் இருந்து 2009 வரை கருணாவுக்கு சிங்கள ஆளும்வர்க்கமும், பெளத்த துறவிகளும், கல்விமான்களும் கொடுத்த மதிப்பும், சூட்டிய கெளரவப் பெயர்களையும் பார்த்தால் இவையெல்லாம் ஏன அவனுக்கு வழங்கப்படுகின்றன என்பது புரியும். இவன் போன்றவர்களை நாம் தூக்கிப் பிடித்து விருதுகள் வழங்காதவரை நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/8/2023 at 08:30, goshan_che said:

தேவை - பறிக்க முடியாத ஆட்சி அதிகாரம். நிதியை கையாளும் சுதந்திரம்.

இவை பற்றி யார் சிந்திக்கிறார்கள். அப்படி சிந்தித்தாலும் கூட செயல்படுத்த முடியாத நிலை. 

19 hours ago, ரஞ்சித் said:

உங்களை பொருளாதாரத்தில் பலவீனமாக்கி, தம்மிடம் கையேந்தும் நிரந்தர நிலையை அவன் உருவாக்க நினைக்கிறான்

உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திறமையின் அடிப்படையில் விருது பெற தகுதிபெற்றால் வாங்குவோருக்கும், அவன் சார்ந்தோருக்கும் பெருமை. தகுதியே இல்லாமல் சோரம் போய் பெறுபவை யாவும் பெறுபவருக்கும் அவன் சார்ந்தோருக்கும் அந்த விருதுக்கும் கேலியும் கேள்வியும், அந்த விருதின் மதிப்பு அவர்களுக்குரிய இழுக்கையுமே அடையும். அதை ஒரு தகுதியுள்ளவன் பெற பின்னடிப்பான். இப்போ நாட்டில் யாருக்கு எந்த விருது கொடுக்கிறது என்ற விவஸ்தையே இல்லாமற் போச்சு. கைக்கூலியையும் விருது என்று பெருமையாக அழைக்கிறார்கள், பகிரங்கமாக கொடுக்கிறார்கள் வாங்குகிறார்கள். கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் பார்ப்போருக்கும் விளங்கும் எதற்காக இவருக்கு இந்த கூலி என்று. விருதுதான் பாவம்! ஒரே பெயரில் சேரக்கூடாத கரங்களில் தவழ்ந்து தன் மதிப்பை இழக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அல்லிராஜா பல்லிராஜா ஆகி ஆமத்துறுக்களின் காலில் வீழ்ந்து வணங்கும் அரிய காட்சி

https://www.facebook.com/100077415585753/posts/317932507463933/?mibextid=rS40aB7S9Ucbxw6v

(முதலில் @goshan_che இதை திண்ணையில் போட்டார், அதையெடுத்து திரியில் பதிவிடுகிறேன்.)

சேகரித்து வைப்பம், எதிர்காலத்தில் இவர் சம்பந்தன், சுமந்திரன் போன்று சொந்த இனத்தையே கேவலப்படுத்தி விற்றுப் பிழைக்க நேர்ந்தால் தேவைப்படும்.

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (2).jpg

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (1).jpg

'இதைப் பார்த்தால் நாய் எலும்பு கேட்பது போன்று எனக்குத் தோன்றுகிறது.'

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (5).jpg

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (4).jpg

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (3).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கள பௌத்தர்கள், ஏதாவது தொழில் ஆரம்பிப்பதற்கு முன், விளையாட்டுபோட்டிகளில் போர்களில் அரசியலில் இறங்குவதற்கு முன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்குமுன்    இவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று நூல் கட்டி ஆரம்பிப்பது வழக்கம். இவர் ஏன் எதற்கு இப்படி விழுந்தார்? இவருக்கும் இவர்களின் சம்பிரதாயத்திற்கும் என்ன தொடர்பு என்றால் அதன் தொடர்பு பின்னாளில் இவர் விரட்டப்படும்போது வெளிவரும். கௌரவமாக பேசி முதலீட்டை  தொடங்குவதற்கு  ஏன் அடிமைபோல் விழுகிறார்?  தமிழருக்கு இதில் எவ்வித பயனுமில்லை, சிங்கள பௌத்த தேசத்தை கட்டியெழுப்ப வந்துள்ளார். இந்தச்சடங்கு, விருது கூட இவர் செலவிலேயே நடந்திருக்கும். இதை ஒரு நிகழ்வாக பார்த்துவிட்டு நகர்வதே நமக்கு நல்லது! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, satan said:

உண்மை. தனது வியாபாரத்திற்காக, தனது இலாபத்திற்காக எம்மை எரிக்கக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குகிறார். எமது கலாசாரத்தில் இல்லாத இந்தச் செயலை தனது நவீன பொருளாதார அடிமைத்துவத்தினூடாக இவர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இனிமேல் வரிசையாகப் பல தமிழ் முதலாளிகள் போய் விழுவார்கள். எல்லாம் பணம் பார்க்கும் அதே நோக்கம். இதில் தமிழனின் உரிமையும், இருப்பும், தியாகங்களும் அடிபட்டே போய்விட்டது!!! வாருங்கள், நீங்கள் பொருளாதாரப் பலத்தின்மூலம் பெற்றுக்கொண்டிருக்கும் உரிமைகளை வந்து பாருங்கள்.

உரிமைகளின் பட்டியல்

1. சிங்கள நாசதாரிகளான பெளத்த விஷ நாகங்களின் கால்களில் வீழ்ந்து நக்கும் உரிமை
2......................................

3. ....................................
4. ....................................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
35 minutes ago, ரஞ்சித் said:

உண்மை. தனது வியாபாரத்திற்காக, தனது இலாபத்திற்காக எம்மை எரிக்கக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குகிறார். எமது கலாசாரத்தில் இல்லாத இந்தச் செயலை தனது நவீன பொருளாதார அடிமைத்துவத்தினூடாக இவர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இனிமேல் வரிசையாகப் பல தமிழ் முதலாளிகள் போய் விழுவார்கள். எல்லாம் பணம் பார்க்கும் அதே நோக்கம்.

ஓம், இவரின் இந்த வீழ்ந்து வணங்கும் செயல் நீங்கள் குறிப்பிட்டதிற்கு முன்மாதிரியாக விளங்கும்.

ஆனால், இவ்வாறுதான் அதை வாங்க வேண்டும் என்றும் ஒரு சடங்கு சிங்களவரிடம் உள்ளதையும் பார்க்க வேண்டும்.

எவ்வாறெயினும், எமதினத்தை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்களவரின் காலில் இவர் வீழ்ந்துள்ளது அருவருக்கத்தக்கது.

Posted
On 24/8/2023 at 21:35, Cruso said:

ஆடு கொளுத்துப்போனால் என்ன நடக்குமென்று தெரியும்தானே. இவருக்கு நன்றாக ஆரத்தி எடுத்து படடம் கொடுப்பதெல்லாம் கழுத்தறுப்புக்குத்தான். இவர் நிறையவே முதலீடுகள் இங்கு செய்துள்ளார்கள். தமிழர்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா என்றால் தேடித்தான் பார்க்க வேண்டும்.

இன்னும் இவர் முதலீடு செய்யும் வரைக்கும் இவருக்கு இன்னுமின்னும் படடங்கள் கிடைக்கும். ஒரு நாள் வரும், இவை எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டு சிங்களவர்களால் அபகரிக்கப்படும். அப்போது எல்லாம் மிகவும் தாமதமாகி விடும். இவர்களின் இனவாதம், மதவாதம் பற்றி இவர்கள் புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வது கவலைக்குரிய விடயம்.

இவருக்கு சுவர்ணவாஹினி, SBC என்னும் இருந்து தொலைக்காட்சி நிலையங்கள் உண்டு. அப்படி இருக்கும்போது மக்கள் பார்க்காத, நடத்தில் இயங்கும் அரச தொலைக்காட்சியை (EYE சேனல் ) எதட்கு மாதாந்தம் 25 மில்லியன் வாடகைக்கு எடுக்க வேண்டும்? இந்த இரண்டிலும் ஒளி பரப்புவதைத்தான் அங்கும் ஒளி பரப்புகிறார்கள்.

தமிழனுக்கு உரிமை வழங்கும் வரைக்கும் இவர்களை நம்புவது மிகவும் அபாயகரமானது. 

இதனை வெளியில் இருந்து நாங்கள் சொன்னால் ஏதோ பொறாமையில் கதைக்கிறான் என்போரும் உண்டு. தமிழரை தந்திரமாக பாவித்து விட்டு ஏனையோருக்கு பெப்பே காட்டுவதில் சிங்களம் வல்லவர்களாக இருக்கிறார்கள். எம்மவர்களின் சுயநலமும் , நீண்ட தூரபார்வை இல்லாமையும் காரணமாகலாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, நன்னிச் சோழன் said:

இவ்வாறுதான் அதை வாங்க வேண்டும் என்றும் ஒரு சடங்கு சிங்களவரிடம் உள்ளதையும் பார்க்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய ஒரு சோதனைச்சாவடியில் ஒரு இராணுவத்தினன் மணிக்கட்டில் கத்தோலிக்கர் பயன்படுத்தும் மாலையை கையில் சுற்றியிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்த தமிழர் ஒருவர், நீங்கள் கிறிஸ்தவரா என்று கேட்டார். அதற்கு அவன் இல்லை எனது தாயார் கட்டிவிட்டதாக கூறினான். பின்னொரு நாளில் வேறொரு சோதனைச்சாவடியில் ஒருவன் கிறிஸ்தவ மாலையும் பௌத்த நூலும் கட்டியிருந்ததை அவதானித்தேன். ஒரு காணொளி பாத்தேன், வவுனியாவில் போலுள்ளது. இராணுவ முகாமுக்கு முன்னால் பிக்கு ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கிஒரு உணவுக்கடையை நோக்கி நடக்கிறார், அங்கே முகாமுக்கு முன்னால் சாதாரண உடையில் நின்ற இராணுவத்தினன் ஓடிச்சென்று குனிந்து பிக்குவின் காலை தொட்டு வணங்குகிறான், பிக்குவோ உணவுக்கடையை பார்த்தபடி கையை  அவன்மேல் நீட்டுகிறார், கை அவன் தலைமேல் படவில்லை அந்தரத்தில், அவனோ பிக்குவின் காலை தொட்டு தன் நெஞ்சில் வைத்து பக்தியோடு நகர்கிறான். பிக்கு ஏதும் விசாரிக்கவில்லை, உணவுக்கடைமேல் வைத்த கண் விலகாமல்  நகர்கிறார். இந்த குருட்டு பக்தியிலிருந்து மக்கள் விடுபடவேண்டும். ஒரு பொது போக்குவரத்து வாகனத்தில், பிக்குவுக்கு பக்கத்தில் ஒரு சாதாரண மனிதர் உட்க்கார்ந்ததற்காக அவரை சரமாரியாக பிக்கு தாக்கியதை பகிர்ந்திருந்தார்கள். தமிழரின் வலுவை இழக்கச்செய்தபின் ஏழை சிங்களவருக்கு இவைகள் தொடரும். தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து அரசியல் தந்திரங்களை கற்றபின் விரட்டினார்கள், கல்விமான்களிடம் கற்று சரித்திரத்தை சிதைத்தார்கள், தொழிலதிபர்களிடம் கற்று  தொழிலை கைப்பற்றினார்கள். லைக்காவுக்கு இது புதுசு,  மாத்தையா என்று வாய்நிறைய கூப்பிட, இவர்களின் வரவேற்பில் புளகாங்கிதம் அடைந்து இவரை வைத்து தூண்டில் போட்டு பலரையும்  கவர்ந்து இழுத்து தொழிலை கைப்பற்றியபின் மீண்டும், வந்த இடத்துக்கு ஓடி தப்ப விடமாட்டார்கள். வியாபார போட்டியில் கொலை என்று வராமல் இருந்தால் சரி. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நன்னிச் சோழன் said:

அல்லிராஜா பல்லிராஜா ஆகி ஆமத்துறுக்களின் காலில் வீழ்ந்து வணங்கும் அரிய காட்சி

https://www.facebook.com/100077415585753/posts/317932507463933/?mibextid=rS40aB7S9Ucbxw6v

(முதலில் @goshan_che இதை திண்ணையில் போட்டார், அதையெடுத்து திரியில் பதிவிடுகிறேன்.)

சேகரித்து வைப்பம், எதிர்காலத்தில் இவர் சம்பந்தன், சுமந்திரன் போன்று சொந்த இனத்தையே கேவலப்படுத்தி விற்றுப் பிழைக்க நேர்ந்தால் தேவைப்படும்.

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (2).jpg

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (1).jpg

'இதைப் பார்த்தால் நாய் எலும்பு கேட்பது போன்று எனக்குத் தோன்றுகிறது.'

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (5).jpg

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (4).jpg

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் (3).jpg

தலைவர் பிரபாகரன் மீதான சிங்களத்தின் கடும் கோபத்திற்கு காரணம் அவர் ஒருவரை மட்டுமே இவர்களால் அவர்களது காலில் விழ வைக்க முடியவில்லை என்பதாலேயே. அதனால் தான் நீதிமன்ற தீர்ப்புக்களில் கூட அதி உச்ச கால தண்டனைகள் இருந்தன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, satan said:

தமிழரின் வலுவை இழக்கச்செய்தபின் ஏழை சிங்களவருக்கு இவைகள் தொடரும். தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து அரசியல் தந்திரங்களை கற்றபின் விரட்டினார்கள், கல்விமான்களிடம் கற்று சரித்திரத்தை சிதைத்தார்கள், தொழிலதிபர்களிடம் கற்று  தொழிலை கைப்பற்றினார்கள். லைக்காவுக்கு இது புதுசு,  மாத்தையா என்று வாய்நிறைய கூப்பிட, இவர்களின் வரவேற்பில் புளகாங்கிதம் அடைந்து இவரை வைத்து தூண்டில் போட்டு பலரையும்  கவர்ந்து இழுத்து தொழிலை கைப்பற்றியபின் மீண்டும், வந்த இடத்துக்கு ஓடி தப்ப விடமாட்டார்கள். வியாபார போட்டியில் கொலை என்று வராமல் இருந்தால் சரி. 

சிங்களத்தின் இயல்பான நிலையைச் சுட்டியிருக்கிறீர்கள். பொன் முட்டைபோடும்வரை வாத்துகளைக் கொல்லமாட்டார்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, nochchi said:

சிங்களத்தின் இயல்பான நிலையைச் சுட்டியிருக்கிறீர்கள். பொன் முட்டைபோடும்வரை வாத்துகளைக் கொல்லமாட்டார்கள்! 

அதேவேளை, லைக்கா பொஸ், பக்கா யாவாரி. வெள்ளைக்காரனுக்கே அல்வா கொடுக்கிற ஆள் பாருங்கோ...

ஆள், கொழும்பில சில அரச நிறுவனங்களை வாங்கி போடப்போறார். அதுக்கு இந்த வாய்க்கரிசி போடப்பட்ட மொட்டை கோஸ்ட்டி ஆதரவா இருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடுமே?

போரிஸ் ஜோன்சன் லண்டன் மேயர் ஆக இருந்த போது, வாய்க்கரிசி போட்ட ஆள். 

On 24/8/2023 at 18:05, பாலபத்ர ஓணாண்டி said:

எவ்வளவு காசு பணம் இருந்தாலும் இந்த பைத்தியக்காறத்தனங்களுக்கு ஒண்டும் குறைவில்லை.. நேற்று ரஜினி இன்று இவர்.. கடவுள் இருந்தால் அவரை பார்த்தால் அவர்காலில் போய் விழுங்கள் அவர் முன்னால் முக்கால் டிகிரியில் குனிந்து நில்லுங்கள்.. இப்படி உழைக்காமல் ஓசிச்சோறு தின்னும் சாமியார்களின்காலில் ஏன் போய் விழுகிறார்கள் குனிகிறார்களோ..?

large.18B14DBF-0792-45D7-BA6B-D787BF7D263B.jpeg.1a3a8c17f1265f66437592ac1de6bee5.jpeg

Edited by Nathamuni

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣)
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.