Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏலவே சாட்டிப் பகுதியில்.. தமிழ் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாதபடி.. முஸ்லிம் மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில்... வேலணையும் குறிவைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

இந்த லொகேசன் எல்லாம் யாழில் இருந்தும் போகிறது...அதைவிட நம்ம யூடியூப் சனல்காரர்மூலம் தகவல் பெற்று ..ப்ரம்பல் செய்கிறார்கள்.... நம்ம யூடியூப்பெசும் விய்யூஸ்  பெற  நாயாக அலையினம்...இவை அதுக்கிள்ளை விக்கிற காணியை வேண்டி இனப்பரம்பல் செய்யினம்...

  • Replies 161
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

நிச்சயம் இது "பிள்ளைகளை நாய்கள் கடிக்காமல் பாதுகாக்கும்" ஒரு நடவடிக்கையாகத் தான் இருக்கும்😂! ஒரு தற்செயல் நிகழ்வாக: சில மாதங்கள் முன்பு இதே பாடசாலையில் "சைவரல்லாத ஒருவரை" அதிபராக ஏற்க மாட்டோமென ஒ

Justin

நெடுக்கர், மற்றும் அல்வையான் சொல்வது போல, வெளியே இருந்து வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள நாம் உள்ளே இருக்கும் ஓட்டைகளைப் பற்றிப் பேசாமல் இருந்து தான் எதிர்கொள்ள வேண்டுமா? 500 நியூரோன்களோடு சும்மா அல

Justin

சாதி வாதிகளை "வுட்றா வுட்றா" என்ற தோரணையில் "நாதமுனி" என்ற பெயருடயவர் தடவிக் கொடுக்கும் போது தேவையில்லாத ஒரு முரண்பாடு வருவது தெரியவில்லையா😎? இதற்கு ஒரு தீர்வு தான் இருக்கு: " கோசான் சே" மாதிரி இ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கர், மற்றும் அல்வையான் சொல்வது போல, வெளியே இருந்து வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள நாம் உள்ளே இருக்கும் ஓட்டைகளைப் பற்றிப் பேசாமல் இருந்து தான் எதிர்கொள்ள வேண்டுமா?

500 நியூரோன்களோடு சும்மா அலையில் அடிபடுகிற நட்சத்திர மீன்களா நாம்? 100 பில்லியன் நியூரோன்களோடு வலம் வரும் மனிதர்கள் அல்லவா? அமெரிக்காவில் சொல்வது போல: "you can chew gum and walk!"
மறுபக்கம்: சாதி, மத பிரிவினைகளைக் கம்பளத்திற்குக் கீழ் தள்ளி விட்டுக் கள்ள மௌனம் சாதித்தமையால் என்ன நன்மையை அடைந்து விட்டோம்? சித்தார்த் போன்ற மாயமான்கள் உருவாகவும், அங்கஜன் ராமநாதன் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளை விட மேலாக வாக்குகள் பெறவும் வழி வகுத்தோம்! இதுவே எங்களுக்கு ஒரு பாடமல்லவா? எங்கள் ஊத்தைகளை ஒழிச்சு வைக்காமல் குறைந்தது எம்மிடையேயாவது பேசித் தீர்க்க வேண்டுமென்ற பாடமல்லவா?

  • Like 7
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பாடசாலையில் இப்ப வகுப்பறை கூட கூட்ட விடுவதில்லை பெற்றோர் பிள்ளைகளை பிறகு எப்படி பிள்ளை வேலை பழகும்.

பாடசாலைகளில் மாணவர்கள் தங்களுடைய வகுப்பறைகளை turn எடுத்துக் கூட்டுகிறார்கள். நீங்கள் இப்படி கூறுகிறீர்கள். 

எனது தெரிந்தவர்களின்பிள்ளைகள் போகும் பாடசாலைகளில் இப்படியான நடைமுறை இன்னமும் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nedukkalapoovan said:

இந்த அறிவிப்புக் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால்.. அப்பாடசாலை பெற்றோரோ பிள்ளைகளோ.. பழைய மாணவர் சங்கங்களோ பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்த முடியும். மாற்றங்களை கோர முடியும்.

இந்த அறிவிப்பு வெளியில் வந்த தன் நோக்கம் என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் இப்படி இந்த அறிவிப்பும் சரி பாடசாலைகளில் நடைபெறும் சீர்கேடுகளும் சரி வெளியே வரும் பொழுதுதான் தவறிழைத்தவர்கள் பற்றி தெரியவருகிறது. 

மற்றைய சமூகங்களிலும் எல்லா வித பிரச்சனைகளும் உள்ளது அதற்காக அவர்கள் அதனை தீர்க்காமலா இருக்கப் போகிறார்கள். ஒவ்வொரு சமூகமும் தனக்கேற்ற வழிகளில் பிரச்சனைகளை தீர்க்கவே முயற்சி செய்வார்கள். 

எங்களது சமூகத்தில் பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு மற்றைய சமூகங்களிலும் உள்ளதுதானே என இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். மற்றைய சமூகங்களைவிட நாங்கள் இன்னமும் கவனமாக இருக்கவேண்டும். ஏன் இந்த மாதிரிப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, அதுவும் இப்பொழுது ஏன் அதிகளவு ஏற்படுகின்றது என்பதை விளங்கி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தப் பாடசாலையில் ஏற்கனவே ஒரு பிரச்சனை இருந்தது என்றால் இந்த மாதிரி அறிவிப்புகளை பெற்றோர், மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகளுடன் கலந்தாலோசித்து உரிய முறையில் அறிவித்திருந்தால் இப்படியான முடிவுகள்/செய்திகள் வந்திருக்காது. 

பிரச்சனைகளை உரிய முறையில் அணுகுவது இல்லை என்றால் பிரச்சனைகளை மூடி மறைப்பதும் நல்லது இல்லை. 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nedukkalapoovan said:

சாதி.. மத பிரச்சனைகள் மற்றைய இனங்களில் இருக்கும் உள்ளக பிரிவினைகளோடு ஒப்பிடும் போது தமிழர்கள் மத்தியில் மென்போக்கோடு தான் இருந்தது வந்துள்ளது. சமீப காலமாக (குறிப்பாக 2009 மே க்குப் பின்) அது ஆழப்படுத்தப்படுவதும் ஆக்கிரோசப்படுத்தப்படுவதும்.. வேண்டும் என்றே நிகழ்த்தப்படுகிறது

மென்போக்கு என்று ஆணவக்கொலைகள் எங்கள் சமூகத்தில் முன்பு நடந்திருக்கவில்லை என்றதைதானே மென்போக்காக இருந்தது என்று கூறவருகிறீர்கள். மற்றப்படி எங்களிடமும் இவை நன்றாக உள்ளது.  

2009ற்கு முன்பு இதனைப் பற்றி உண்மையான தெளிவு இருந்திருந்தால் இன்று இந்த மாதிரி நிலை வந்திருக்காது. அப்பொழுதும் இல்லை இப்பவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தப் பாடசாலையில் ஒரு தமிழ் கிறிஸ்தவர் எந்தவித எதிர்ப்புமின்றி வந்திருப்பார். இந்த மாதிரி ஒரு அறிவிப்பும் பிரச்சனையாக இருந்திருக்காது. 

சாதி என்று வரும் பொழுது பலர் உண்மையானதைக் கூறமாட்டார்கள் ஏனெனில் எங்களைப் பற்றிய மற்றவர்களின் எண்ணம் மாறிவிடுமோ என்றளவிற்கு இவை இன்னமும் எங்களில் வேரூன்றித்தான் உள்ளது. இன்று பல வழிகளில் செய்திகள் வெளியே வருகிறது, இப்படியான செயல்களால்  பாதிக்கப்படுபவர்கள் அதனை வெளியே கொண்டு வரும் பொழுது அதனை தடுப்பதோ அல்லது அதனை உதாசீனம் செய்வதோ சரியான செயல் இல்லை. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nedukkalapoovan said:

யாழ் முஸ்லிம் இணையத்தளம்.. இந்தச் செய்தியை உருவகிக்கவும்.. அதனை கொழும்பான் இங்கு கொண்டு வந்து ஒட்டவும் இருந்த உள்நோக்கம் நன்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. (ஒட்டியதோடு சரி கொழும்பான்.. ஒரு கருத்தும் பதியவில்லை.)

தமிழர்களுக்குள் மத.. சாதி ரீதியான அடிப்பாட்டுக்கு மேல்.. பாடசாலை ரீதியான.. கிராம ரீதியான அடிப்பாட்டை உருவாக்கனும். தமிழர்கள் எனி அரசியலுக்காகவோ.. எதுக்காகவுமோ.. ஓரணியில் திரளக் கூடாது. அப்படித் திரள்வது.. முஸ்லிம்களுக்கும் கூடாது.. அவர் தம் எஜமானச் சிங்களவர்களுக்கும் கூடாது.

ஆனால்.. அல்காவின் பெயரால் முஸ்லிம் அரபுலகம் வரை உறவாட வேண்டும்.. ஒற்றுமைப்பட வேண்டும். புத்தரின் பெயரால்.. பெளத்த சிங்களம் பலம்பெற வேண்டும். ஆனால்.. தமிழர்கள் மட்டும் சாத்தியமான எல்லா வழிகளிலும் பிரிய வேண்டும்.. பலமிழக்க வேண்டும். நாட்டை விட்டு ஓட வேண்டும்.

யாழ் களமும்.. இப்ப வர வர.. அதற்கு நல்லா தீனி போடுது.

யாழ் ஒஸ்மேனியா கல்லூரி வாசலில்.. செய்ய முடியாததை.. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவது பற்றி ஏன் பேசினமில்லை. யாழ் வேலணை மத்திய கல்லூரியில் செய்ய முடிவதை.. யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் ஏன் செய்ய முடியவில்லை..?????????!

உள்நோக்கம் எதுவுமில்லை. ஒர் சாதரண செய்தியாகவே பதிவு செய்தேன். 

6 hours ago, goshan_che said:

பிறகென்ன..ஒரே ஆக்கள்தான்…

சட்டு புட்டென்று குறிப்பை அனுப்புங்கோ🤣

நிக்கா செலவு என்னோடது 🤣

வலீமா என்ட கணக்குல வாப்பா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, colomban said:

வலீமா என்ட கணக்குல வாப்பா

சரி…மெனுல வட்லாப்பம் முக்கியம்🤣.

மெளலவி யாரு? @Sasi_varnam ?

பொடியன் சைட்ல சாட்சிக்கு @வாலி

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த அறிவிப்பு வெளியில் வந்த தன் நோக்கம் என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் இப்படி இந்த அறிவிப்பும் சரி பாடசாலைகளில் நடைபெறும் சீர்கேடுகளும் சரி வெளியே வரும் பொழுதுதான் தவறிழைத்தவர்கள் பற்றி தெரியவருகிறது. 

மற்றைய சமூகங்களிலும் எல்லா வித பிரச்சனைகளும் உள்ளது அதற்காக அவர்கள் அதனை தீர்க்காமலா இருக்கப் போகிறார்கள். ஒவ்வொரு சமூகமும் தனக்கேற்ற வழிகளில் பிரச்சனைகளை தீர்க்கவே முயற்சி செய்வார்கள். 

எங்களது சமூகத்தில் பல பிரச்சனைகளை வைத்துக் கொண்டு மற்றைய சமூகங்களிலும் உள்ளதுதானே என இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். மற்றைய சமூகங்களைவிட நாங்கள் இன்னமும் கவனமாக இருக்கவேண்டும். ஏன் இந்த மாதிரிப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, அதுவும் இப்பொழுது ஏன் அதிகளவு ஏற்படுகின்றது என்பதை விளங்கி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தப் பாடசாலையில் ஏற்கனவே ஒரு பிரச்சனை இருந்தது என்றால் இந்த மாதிரி அறிவிப்புகளை பெற்றோர், மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகளுடன் கலந்தாலோசித்து உரிய முறையில் அறிவித்திருந்தால் இப்படியான முடிவுகள்/செய்திகள் வந்திருக்காது. 

பிரச்சனைகளை உரிய முறையில் அணுகுவது இல்லை என்றால் பிரச்சனைகளை மூடி மறைப்பதும் நல்லது இல்லை. 

இது பாடசாலை ஒன்றின் உள்ளக அறிவிப்புப் போலவே தான் இருக்கிறது. பாடசாலைகளின் உள்ளக பிரசுரங்கள்.. அறிவிப்புக்கள்.. கட்டுப்பாடுகள் எல்லாம்.. ஊடகங்களில் வருவது அரிது. அது பாடசாலை நிர்வாகம் சம்பந்தப்பட்டு.. பாடசாலைகளின் விதிமுறைக்கு அமைய வெளிவருவது.

இந்தப் பாடசாலை யாழ் சேர் வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகா வித்தியாலம் என்று தான் இருந்தது. வைத்திலிங்கம் சைவ சமய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஒருவர். பின்னர் இந்தப் பாடசாலைக்கு சொறீலங்கா அரசு.. யாழ் வேலணை மத்திய மகா வித்தியாலயம் என்று பெயரிட்டு.. வைத்திலிங்கத்தை ஒழித்துக்கட்டிவிட்டது. அதன் உள்நோக்கம் இன்று வரை வெளிவரவே இல்லை. அதன் பின் யுத்த காலத்தில்.. இடம்பெயர்வுகளால் வெறிச்சோடிப் போன பள்ளிக்கூடம்.. (1989 இல் இந்தியப் படைகளின் தீவக படையெடுப்பின் போது அகதியாக அடைக்கலமும் கொடுத்தது..அப்போது யாழ் குடாவில் இருந்து பல ஆயிரம் மக்கள் தீவகத்துக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.. ஒப்பரேசன் பவான்.. பூமாலையில் இருந்தான செல் தாக்குதல்கள்.. இராணுவ நடவடிக்கையில் இருந்து தப்ப).. அதன் பின்னர் சொறீலங்கா படைகளின் ஆதிக்கத்தின் கீழ்.. இப்பாடசாலை பல இடர்கள் மத்தியில் இயங்க ஆரம்பித்தது. குறிப்பாக சொறீலங்கா கடற்படையின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் (இப்பாடசாலைப் பகுதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகவும் சொறீலங்கா கடற்படை முகாமாகவும் இயக்கப்பட்டது) பாடசாலை இயங்க வைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பின் இப் பாடசாலை அதன் பழைய மாணவர் சங்கங்களின் உதவியோடு அபிவிருத்தி அடைந்தது. உள்ளக சைவ ஆலயமும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்.. பாடசாலை நிர்வாகம்.. அந்த ஆலய சூழலை கருத்தில் கொண்டு.. அசைவ உணவுகளை அந்த இடத்தில் தவிர்க்க இந்த அறிவிப்பினூடு கோரி இருக்கலாம். இப்படியான அறிவிப்புக்கள் பிற பாடசாலைகளிலும் உண்டு. 

இதற்குள்.. சாதி.. மத பிரச்சனை எப்படி நுழைந்தது.. என்பதுதான் என் கேள்வி..?!

சேர் வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகாவித்தியாலயம்.. இன்று வேலணை மத்திய கல்லூரியாக.. தேசிய பாடசலையாக மாறி நிற்கும் காலம்... வரை... தீவகத்தில் எல்லோருக்கும் சம கல்வி வாய்ப்பை வழங்குகிறது தானே. சாதி.. மத அடிப்படையில்... யாரையும் அது புறக்கணிச்சு நிற்கிறதா..?! இல்லையே.

உணவு சார் விடயத்தில்... அங்குள்ள சைவ ஆலய சூழலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புப் பலகை வந்திருக்கவே இடமுள்ளது. அந்த வகையில்.. இந்த அறிவிப்புப் பலகை தொடர்பில்.. அதிருப்தி இருப்பின் அது சுட்டிக்காட்டப்பட வேண்டிய இடம்.. பாடசாலை நிர்வாகம் ஆகும். 

சமூக முரண்பாடுகளை உருவாக்க முனையும் முஸ்லிம் இணைய ஊடகத்தில்.. அது செய்தியாக்கப்பட்ட விதமும்.. நோக்கமும் வேறு. அதனை நோக்கி யாழ் இணையக் கருத்துக்களமும் இயங்க முனைவது வருத்தமளிக்கிறது. அதைதான் இங்கு நாங்கள் முதன்மைப்படுத்தி சுட்டிக்காட்ட விளைகிறோம். யாழ் ஒஸ்மேனியா கல்லூரிக்குள் இருக்கும் நடைமுறையில் இருக்கும் அறிவிப்புக்களை இதே ஊடகம் வெளியிடுமா..??! அது ஏன் மூடுமந்திரமாக இருக்க அனுமதிக்கிறீர்கள்..????! அதெல்லாம் புட்டும் தேங்காய் பூவும்.. இன நல்லிணக்கம்.. முஸ்லிம் - தமிழ் ஒற்றுமைக்குள் மறைக்கப்படலாம் என்றால்... ஏன் இது முடியாது..??????!

தீவகத்தில் கட்டாக்காலி மாடுகள் உட்பட மக்களின் மாடுகளை கால்நடைகளை களவெடுத்து வெட்டி விற்கும்.. முஸ்லிம் கடத்தல் கும்பல் குறித்து இந்த ஊடகம் செய்தி விடுமா..???! 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

இந்தப் பாடசாலை யாழ் சேர் வைத்திலிங்கம் துரைசாமி மத்திய மகா வித்தியாலம் என்று தான் இருந்தது. வைத்திலிங்கம் சைவ சமய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஒருவர். பின்னர் இந்தப் பாடசாலைக்கு சொறீலங்கா அரசு.. யாழ் வேலணை மத்திய மகா வித்தியாலயம் என்று பெயரிட்டு.. வைத்திலிங்கத்தை ஒழித்துக்கட்டிவிட்டது.

இந்தப்பாடசாலையின் பெயர் ஆரம்பத்தில் வேலணை மத்திய மகா வித்தியாலயம் என்றுதான் இருந்தது. 80களில் அதன் பெயரை இலங்கையின் முதலாவது சபாநாயகர் சேர்வைத்திரிங்கம் துரைச்சாமியின் பெயரில் சேர்வைத்திலிங்கம் துரைச்சுவாமி மத்திய மகா வித்தியாலயம் என்று பெயரை மாற்றினார்கள்.அதற்கு எதராக பெரிய பேராட்டங்கள் நடந்ததால் அது பின்னர் கைவிடப்பட்டது. அப்போது சேர் வைத்திலிங்கம் துரைச்சுவாமியின் மகன் யாழ'ப்பாணத்தில் அதிகாரமிக்க பொறுப்பில் இருந்தார். 1977 இல் தீவகத்தில்' பொதுத்தேர்தலில் நின்று தோற்றார். பத்திரிகைத்தணிக்கைக்கும் பொறுப்பாக இருந்தார். என்று நினைவு பெயர் மாற்றும் காலத்தில் நான் படித்துக் கொண்டடிருந்தேன். பெயர்ப்பலகை கழட்டி எறியப்பட்ட து நன்றாக நினைவிருக்கிறது.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணவன் மனைவி சண்டை பெரிய சத்தமாகி - பக்கத்து வீட்டுக்கு, ரோட்டுக்கு கேட்டால்….

பக்கத்து வீட்டுக்காரன் அதை சொல்லி சிரிக்கத்தான் செய்வான்.

பக்கத்து வீட்டுக்காரன் சிரிக்கிறான் என்பதால், மனைவியை கணவன் வீட்டுக்குள் வைத்து மொத்துவதை பிள்ளைகள் கண்டும் காணாமல் இருக்க முடியாது.

வீட்டில் எல்லாருமாக கதைத்து பிணக்கை முடிக்க வேண்டும்.

இல்லாமல் பிணக்கா? அப்படி எதுவும் இல்லை கணவன் மனைவி கொஞ்சிய சத்தம்தான் அது என மொக்காடு போட்டால் - ஊர் தொடர்ந்து சிரிக்கவே செய்யும். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மற்றவன் எல்லாம் கணவன் - மனைவி சண்டையை நாலு சுவத்துக்க அமுக்கி வைச்சிக்கிறான். உங்க வீட்டு சண்டையை தான் அவன் சந்தி சிரிக்க வைக்கிறான்.. என்றால்.. நீங்களும் அவங்களுக்கு ஏத்த மாதிரி சந்தியில நின்று சண்டை பிடிக்கிறீங்க. ஏன் அவங்கள மாதிரியே நாலு சுவத்துக்க வைச்சு பேசி தீர்த்துக்கிறது அல்லது நாலு சுவத்துக்க வைச்சு மொழுகிக்கிறது. எதற்கு அவன் அடுத்தவன் சிரிக்கிறான் என்பதற்காக சந்திந்துக்கு கொண்டு வந்தி சந்நிதி ஆடுறீங்க. இதைத் தானே அடுத்தவன் எதிர்பார்த்தான். 

இதைச் சொன்னால்.. இல்லை இல்லை.. நாங்கள் வீட்டுச் சண்டையை சந்திக்கு கொண்டு வந்து தான் தீர்ப்பம் என்று நிற்கும் உங்களை என்னென்பது..??! இந்த அறிவை எப்படி மெச்சுவது..??!

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரியில் எழுதும் ஐஸ்டின் ,கோசான் போன்றவர்கள் ஊர் நிலவரம் தெரியாமல் எழுதுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது....அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சரியாயினும்,தமிழர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும்  தப்பில்லை . ஆனால் , அவர்கள் உள் விடயம் தெரியாமல் கதைக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்கள் உள்விடயம் என்னவாக இருக்கும்🤔
மோசமான சண்டை நடக்கும் மனைவியை போட்டு அடிப்பார்கள் பின்பு முக புத்தகத்தில் தமிழ் மூவி படங்களில் வருகிற மாதிரி ஒற்றுமையாக இருக்கும் படங்கள் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
கொடுமையான ஆணவக்கொலைகள் எப்படி தமிழர்களிடம் தோன்றியிருக்கும் என்பது இந்த   திரியில் விளங்கிவிட்டது

பக்கத்து வீட்டுக்காரன், தன்வீட்டு பிரச்சணையை பாயைப் போட்டு மூடிவிட்டு, அடுத்த வீட்டுக்குள்ள நியாயம் பிளக்க வாறது தானே நியாயமில்லை எண்டுறன்.

என்ற வீடு, என்ற மனிசீ, நீர் கிளம்பும் என்று தானே சொல்லுவினம்.

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்கள் உள்விடயம் என்னவாக இருக்கும்🤔
மோசமான சண்டை நடக்கும் மனைவியை போட்டு அடிப்பார்கள் பின்பு முக புத்தகத்தில் தமிழ் மூவி படங்களில் வருகிற மாதிரி ஒற்றுமையாக இருக்கும் படங்கள் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
கொடுமையான ஆணவக்கொலைகள் எப்படி தமிழர்களிடம் தோன்றியிருக்கும் என்பது இந்த   திரியில் விளங்கிவிட்டது

மணைவியை அடிப்பதெல்லாம் பழைய கதை. இபப கதையே வேற!!

****

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரதி said:

இந்த திரியில் எழுதும் ஐஸ்டின் ,கோசான் போன்றவர்கள் ஊர் நிலவரம் தெரியாமல் எழுதுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது....அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சரியாயினும்,தமிழர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும்  தப்பில்லை . ஆனால் , அவர்கள் உள் விடயம் தெரியாமல் கதைக்கிறார்கள் 

நீங்கள் சொல்ல வருவதைச் சொல்ல விடாமல் தொண்டையில் ஏதோ அடைக்கிறதென நினைக்கிறேன்😂. ஆனால், அந்த ஜஸ்ரினுக்குப் புரியாத "உள் விடயங்களை" வாசகர்களுக்காக இங்கே சொன்னால் யாராவது பதில் சொல்வார்கள் என நம்புகிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, nedukkalapoovan said:

மற்றவன் எல்லாம் கணவன் - மனைவி சண்டையை நாலு சுவத்துக்க அமுக்கி வைச்சிக்கிறான். உங்க வீட்டு சண்டையை தான் அவன் சந்தி சிரிக்க வைக்கிறான்.. என்றால்.. நீங்களும் அவங்களுக்கு ஏத்த மாதிரி சந்தியில நின்று சண்டை பிடிக்கிறீங்க. ஏன் அவங்கள மாதிரியே நாலு சுவத்துக்க வைச்சு பேசி தீர்த்துக்கிறது அல்லது நாலு சுவத்துக்க வைச்சு மொழுகிக்கிறது. எதற்கு அவன் அடுத்தவன் சிரிக்கிறான் என்பதற்காக சந்திந்துக்கு கொண்டு வந்தி சந்நிதி ஆடுறீங்க. இதைத் தானே அடுத்தவன் எதிர்பார்த்தான். 

இதைச் சொன்னால்.. இல்லை இல்லை.. நாங்கள் வீட்டுச் சண்டையை சந்திக்கு கொண்டு வந்து தான் தீர்ப்பம் என்று நிற்கும் உங்களை என்னென்பது..??! இந்த அறிவை எப்படி மெச்சுவது..??!

தமிழர்களுக்குள் உள்ள சமூக பிரச்சனைகளை தமிழர்கள் வாசிக்கும்  இணையத்தில் விவாதிப்பது தவறானதா?  பொதுவான சமூக பிரச்சனைகளை ஒவ்வொருவரும் தமக்குள்  SMS  எழுதி விவாதிப்பதா, அல்லது ஒவ்வொருவரும்  தனியே ரகசியமாக விவாதிப்பதா  அல்லது யாருமில்லாத வெளியில் புலம்புவதா? 

சமூக தவறுகளை பொது வெளியில் பேசி தீர்வுகள் கண்டதன்மூலம் தானே பரிணாமவளர்சசியில் இன்றைய நிலையை மனிதன் அடைந்தான்.   

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, island said:

தமிழர்களுக்குள் உள்ள சமூக பிரச்சனைகளை தமிழர்கள் வாசிக்கும்  இணையத்தில் விவாதிப்பது தவறானதா?  பொதுவான சமூக பிரச்சனைகளை ஒவ்வொருவரும் தமக்குள்  SMS  எழுதி விவாதிப்பதா, அல்லது ஒவ்வொருவரும்  தனியே ரகசியமாக விவாதிப்பதா  அல்லது யாருமில்லாத வெளியில் புலம்புவதா? 

சமூக தவறுகளை பொது வெளியில் பேசி தீர்வுகள் கண்டதன்மூலம் தானே பரிணாமவளர்சசியில் இன்றைய நிலையை மனிதன் அடைந்தான்.   

 சமூக பிரச்சணைகளை பேசிக் கொண்டு கிளம்பி வருவது யார் எண்டு பார்க்க மாட்டீர்களா?

இணைக்கப்பட்ட செய்தி வந்தது இஸ்லாமிய பத்திரிகையில்.

பாடசாலை சைவச்சாப்பாடு மட்டும் என்று சொன்னது அதன் கிறிஸ்தவ அதிபர்.

அதில் பிரச்சணை இல்லையே.

மும்மரமாக திசை திருப்ப முயன்றவரும் சைவர் அல்ல. அவரது பிரச்சணை, அந்த கிறிஸ்தவர் அங்கே அதிபராக பட்ட பாடு பெரும் பாடு என்று கவலைப்படுகிறார்.

அதிபர் தரம் ஒன்று உள்ளவர் மட்டுமே தகுதியானவர் என்று வரிசைப்படுத்தப்பட்ட பாடசாலை.

இப்போதுள்ளவர் மட்டுமே தரம் ஒன்றுள்ள விண்ணப்பதாரி. இவர் தெரிவாவார் என்பது தெளிவு.

தகுதி இல்லாத அடுத்த தரமுள்ளோர், அரசியல்வாதிகளை நாடுவதும், சாதியம், கிறிஸ்தவர், போன்ற பிறவற்றை பேசுவதும் எதிர்பார்க்கக் கூடியது தான். அவர்கள் எப்படி தான் கும்பகர்ணம் அடித்தாலும், தரம் ஒன்று இல்லாவிடில் வேலைக்காகாது. கோட்டிலும் வெல்லாது.

இருப்பினும், பாடசாலை, தரம் ஒன்று அதிபரை பெற்றதுடன் கதை முடிந்தது.

ஆனால், அவர் கிறிஸ்தவர் எண்டதால.... சாதிய தூக்கினார்கள் என்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், நின்று மடை மாத்துவது சரியா? தேவையானதா?

கத்தோலிக்க பாடசாலைகளில், வேறு ஒருவர் வரமுடியாது என்பது விதிமுறையாம்? அப்படி என்றால் கடந்து போயிருக்க வேண்டாமா?

“கோவிந்த கிருஷ்ண பஞ்சாபிஷேக சர்மா" அடுத்தவர்களுக்கு நையாண்டியா இராதா என்ற சிந்தணை அறவே இல்லை !

பக்கத்தில் சாட்டி இஸ்லாமிய பாடசாலையில் (அண்மைக் குடியேறிகள்) இருந்து உயர் வகுப்புக்கு விரைவில் இஸ்லாமிய மாணவரும் வரும் போது இஸ்லாமிய அதிபர் வரக்கூடியதாக இருக்க வேண்டுமே என்பதே கொழும்பான் இணைத்த பத்திரிகையின் கவலை.

இப்போது பாடசாலையின் சைவ சாப்பாடு மட்டுமே அறிவிப்பு குறித்து பத்திரிகையின் கவலை ஏன் என்று புரிகிறதா?

சாதீயத்தை, வேறு விடயங்களில் கலந்து குழப்பவதை அனுமதிக்க கூடாது. சரத் வீரசேகர, விமல்வீரவன்ச போன்றோர், தமிழர்களின் சாதீயம் காரணமாக அதிகார பகிர்வுத் தீர்வு கொடாமல் அதிகாரம் சிங்களவரிடம் தான் இருக்க வேண்டுமாம்.

சாதீயம் இருக்கிறது தான். அதை பிறர், எங்கே லாவகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது சரியாகத்தான் படுகுது.. இந்த கோணத்தில் நான் இதை சிந்திக்கவில்லை.. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்..

மேலே பகிடிக்கு கொடுத்த பதில் 👆

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லீம்கள் திட்டமிட்டு இச்செய்தியை பரப்புவதாக இங்கு கூறப்பட்டது.  ஆனால் ஐபிசி தமிழ் ஊடகத்திலும் வந்துள்ளது என்பது புலவர் இணைத்த இணைப்பு மூலம் தெரியவந்துள்ளது. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, island said:

முஸ்லீம்கள் திட்டமிட்டு இச்செய்தியை பரப்புவதாக இங்கு கூறப்பட்டது.  ஆனால் ஐபிசி தமிழ் ஊடகத்திலும் வந்துள்ளது என்பது புலவர் இணைத்த இணைப்பு மூலம் தெரியவந்துள்ளது. 😂😂

அது 20 September 

இது இரண்டு நாளுக்கு முன். அதாவது 21 September !

எங்கிருந்து, எங்கு copy and paste?

உன்னிப்பாக அவதானிக்கவும் 🙂

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

அது 20 September 

இது இரண்டு நாளுக்கு முன். அதாவது 21 September !

எங்கிருந்து, எங்கு copy and paste?

உன்னிப்பாக அவதானிக்கவும் 🙂

எங்கிருந்து வந்தது என்பதை விட செய்தி தமிழர்களிடையே சமூக ஊடகங்களுல் விவாதிக்கப்படும் சர்ச்சையாக உள்ளது என்று ஐபிசி தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அறிக. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, island said:

முஸ்லீம்கள் திட்டமிட்டு இச்செய்தியை பரப்புவதாக இங்கு கூறப்பட்டது.  ஆனால் ஐபிசி தமிழ் ஊடகத்திலும் வந்துள்ளது என்பது புலவர் இணைத்த இணைப்பு மூலம் தெரியவந்துள்ளது. 😂😂

சோனமுத்தா….போச்சா🤣.

இவ்வளவு பக்கமாக மடைமாற்றி எழுதிய அத்தனையையும் ஐ பி சி அடித்து நூத்து விட்டதே 🤣.

————

புரிசன் பெண்டாட்டி சண்டையை பற்றி இப்ப குடும்பகாரரே எழுதுகிறார்கள்.

இப்பவாவது இதை விவாதிக்கலாமா? அல்லது தொடர்ந்தும் மொக்காட்டுக்குள் இருந்து கை காட்டுவோமா?

1 minute ago, island said:

எங்கிருந்து வந்தது என்பதை விட செய்தி தமிழர்களிடையே சமூக ஊடகங்களுல் விவாதிக்கப்படும் சர்ச்சையாக உள்ளது என்று ஐபிசி தமிழில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அறிக. 

2 hours ago, Nathamuni said:

பக்கத்தில் சாட்டி இஸ்லாமிய பாடசாலையில் (அண்மைக் குடியேறிகள்) இருந்து உயர் வகுப்புக்கு விரைவில் இஸ்லாமிய மாணவரும் வரும் போது இஸ்லாமிய அதிபர் வரக்கூடியதாக இருக்க வேண்டுமே என்பதே கொழும்பான் இணைத்த பத்திரிகையின் கவலை.

சாட்டியில், மண்டைதீவில் முஸ்லிம்கள் 90 க்கு முதலே சிறிய அளவில் இருந்தார்கள். 

சிலருக்கு நாரந்தனை, கந்தசாமி கோவிலடி, புளியங்கூடல் எல்லாம் அத்துப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

யாரப்பா சர்ச்சை ஆக்கினது எண்டு தானே பேசுறம்!!

இல்லை நங்கள் அதை பற்றி பேசவில்லை. அனைத்து  மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அரசினர் பாடசாலையில்  மாணவர்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று உத்தவிட்டதைப் பற்றியே இங்கு பேசுகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, island said:

இல்லை நங்கள் அதை பற்றி பேசவில்லை. அனைத்து  மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அரசினர் பாடசாலையில்  மாணவர்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று உத்தவிட்டதைப் பற்றியே இங்கு பேசுகிறோம். 

ஐலண்ட் ப்ரோ!

தெளிவாகி வாருங்கள்!! பேசலாம்!!!

சீதைக்கு ராவணன் என்ன முறை கதை வேண்டாமே!!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.