Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பெற்றோர் அகதிகள் நானும் அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் - அகதிகள் புகலிடக் கோரிக்கையாளர்களை சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கும் இலங்கை பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

25 SEP, 2023 | 12:36 PM
image
 
அவுஸ்திரேலியாவின் ஏனைய மக்களை போல அகதிகளையும் சமமாக நடத்தவேண்டும் என கோரி இலங்கை ஈரானை சேர்ந்த 20 பெண் அகதிகள் மெல்பேர்னில் குடிவரவு துறை அமைச்சர் அன்ரூ கைல்சின் அலுவலகத்திலிருந்து கான்பெராவின் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபேரணியை ஆரம்பித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக வாழும் அகதிகள் புகலிடக்கோரிக்கையர்களை சமமாக நடத்தவேண்டும் என கோரியே பெண்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ள பெண்கள் இன்று மத்திய விக்டோரியாவின் மத்திய பகுதியில் உள்ள நகம்பையை சென்றடைந்தனர்.

zbUatZ_Z_400x400.jpg

முன்னைய அரசாங்கம் அகதிகளின் கோரிக்கையை வேகமாக பரிசீலித்ததால் பாதிக்கப்பட்ட பத்தாயிரம் பேரிற்கு நிரந்தர விசாவை வழங்க கோரி அகதிப்பெண்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்தில் 2012 முதல் 2014 வரையான காலப்பகுதியில்  அவுஸ்திரேலியா சென்ற - தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்ட 19000 அகதிகளிற்கு நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் இந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியா சென்ற 12000 அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த கீத்தா இராமசந்திரன் இந்த நடைபயணத்திற்கு தலைமை தாங்குகின்றார்.

நான் மூன்று பிள்ளைகளின் தாய் எனது  கடைசி மகள் அவுஸ்திரேலியாவில் பிறந்தவள்  அவளுக்கு வேறு நாடோ வீடோ தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஏனைய பெண்களை நான் இலங்கையில் வன்முறைகளிற்கு நடுவில் வளர்ந்தேன் எனது பெற்றோர் அகதிகள் நானும் அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நிச்சயமற்ற தன்மையையும் வன்முறையையும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றைய தலைமுறைக்கு கடத்துகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனக்காக எனது குடும்பத்திற்காக மாத்திரம் அல்ல  நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களிற்காக  இந்த நிலையை மாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது குழந்தைகளிற்கு மருத்துவம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஏனைய உதவிகள் மறுக்கப்படுகின்றன என பேரணியில் கலந்துகொண்டுள்ள ஈரானை சேர்ந்த சமிரா டேர்க்கியன் ஜடே தெரிவித்துள்ளார்

விசா கட்டுப்பாடுகள் எங்கள் திறமைகளை முடக்குகின்றன எங்கள் முழுத்திறனையும் அடைவதை தடை செய்கின்றன எனதெரிவித்துள்ள அவர் பல வருடங்களாக ஈரானின் உள்நாட்டு போரில் நாங்கள் சிக்குண்டோம் நான் எனது நாட்டில் கிடைக்காத பாதுகாப்பை தேடி இந்த நாட்டில் அடைக்கலம் புகுந்தேன் அவுஸ்திரேலியா ஏன் எங்களை இன்னமும் இரக்கமற்ற முறையில் நடத்துகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/165392

  • Replies 107
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவலையளிக்கிறது விரைவில் தீர்வு கிடைக்க தொடர்ந்து போராடுங்கள்.  வாழ்த்துக்கள் 🙏.  உந்த விடயத்தில் ஜேர்மனி ஒரு சிறந்த நாடு    🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எனது குழந்தைகளிற்கு மருத்துவம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஏனைய உதவிகள் மறுக்கப்படுகின்றன என பேரணியில் கலந்துகொண்டுள்ள ஈரானை சேர்ந்த சமிரா டேர்க்கியன் ஜடே தெரிவித்துள்ளார்

குழந்தைகளுக்கு மட்டுமல்ல அகதி பெரியவர்களுக்கும் மறுக்கபடுகின்றன இதில் கனடா, ஐரோப்பா சிறந்தவை.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை இன மக்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் எங்களுக்கோ ஆப்பிரிக்கன் மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இங்கே கனடாவுக்கு லட்சக்கணக்கில் உக்ரேனியன் அகதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக 3 வருட விசா கொடுக்கப்பட்டிருக்கிறது, வேலையும் செய்யலாம், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா மூவாயிரம் டாலர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கொஞ்சம் கூட தெரியாமலே நல்ல வேலைகள் கிடைக்கின்றன. Permanent resident க்கு அப்ளை பண்ணுவதற்கு ஆங்கில அறிவு பரீட்சை பாஸ் பண்ண வேண்டும். வழக்கமாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டு இவர்களுக்கு மட்டும் புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே புதிதாக வாகனம் ஓட்ட தொடங்குபவருக்கு  இன்சூரன்ஸ் மிக அதிகமாக இருக்கும், அதுவும் இவர்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.UKRAINE அகதிகளுக்கு கொடுக்கப்படும் இந்த சலுகை ஏன் மற்ற இன மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று கேட்க இங்கே யாரும் இல்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பகிடி said:

இங்கே கனடாவுக்கு லட்சக்கணக்கில் உக்ரேனியன் அகதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக 3 வருட விசா கொடுக்கப்பட்டிருக்கிறது, வேலையும் செய்யலாம், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா மூவாயிரம் டாலர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கொஞ்சம் கூட தெரியாமலே நல்ல வேலைகள் கிடைக்கின்றன. Permanent resident க்கு அப்ளை பண்ணுவதற்கு ஆங்கில அறிவு பரீட்சை பாஸ் பண்ண வேண்டும்.

 உக்ரேனியர்களுக்கு இங்கே ஜேர்மனியில்  கனடாவை விட சலுகைகள் அதிகம். தொலைபேசி கட்டணம் இல்லை. போக்குவரத்து கட்டணம் இல்லை. வேலை வாய்ப்பு தாராளம். ஆனால் வேலைக்கு போக மாட்டார்கள். உக்ரேனிலிருந்து கார் மூலம் வந்த  அனைவருக்கும் வாகன காப்புறுதி தேவையில்லை.வரியும் கட்ட தேவையில்லை. இன்னும் பல....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகிடி said:

வெள்ளை இன மக்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் எங்களுக்கோ ஆப்பிரிக்கன் மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இங்கே கனடாவுக்கு லட்சக்கணக்கில் உக்ரேனியன் அகதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக 3 வருட விசா கொடுக்கப்பட்டிருக்கிறது, வேலையும் செய்யலாம், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா மூவாயிரம் டாலர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கொஞ்சம் கூட தெரியாமலே நல்ல வேலைகள் கிடைக்கின்றன. Permanent resident க்கு அப்ளை பண்ணுவதற்கு ஆங்கில அறிவு பரீட்சை பாஸ் பண்ண வேண்டும். வழக்கமாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டு இவர்களுக்கு மட்டும் புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே புதிதாக வாகனம் ஓட்ட தொடங்குபவருக்கு  இன்சூரன்ஸ் மிக அதிகமாக இருக்கும், அதுவும் இவர்களுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.UKRAINE அகதிகளுக்கு கொடுக்கப்படும் இந்த சலுகை ஏன் மற்ற இன மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று கேட்க இங்கே யாரும் இல்லை 

இது வெள்ளையின கறுப்பின என்பதை விட, நேரடியான ஒரு காரணம் (குறைந்த பட்சம் கனேடிய அரசு சொல்லக் கூடியதாக) இருக்கிறதே? : கனடா நோக்கி வரும் ஏனைய அகதிகள்  உள்நாட்டு யுத்தங்களால் இடம்பெயரும் போது உக்ரைனியர்கள் அயல் நாட்டின் நேரடியான ஆக்கிரமிப்பினால் இடம் பெயர்கின்றனர். கனடாவுக்கு ஆட்களும் தேவை, அதே நேரம் வருபவர் சரியான காரணத்தோடு வருகிறாரா என்பதை அதிக நேர விரயமில்லாமல் தீர்மானிக்கவும் வேண்டும். இதற்கு ஒரு வழி, உகரேனியர்களை அனுமதிப்பது, அங்கே ஆக்கிரமிப்பு யுத்தம் நடப்பதையும், உயிராபத்து இருப்பதையும் case-by-case ஆக தீர்மானிக்க வேண்டியதில்லை. மறுபக்கம் ஆபிரிக்காவில் இருந்து வரும் ஒருவர், உண்மையிலேயே உயிர் பயத்தால் வருகிறாரா அல்லது அங்கே ஆயுதம் தூக்கி ஏனையோரைக் கொன்று விட்டு தப்பி வருகிறாரா என ஆராய வேண்டியிருக்கும்.

நாடுகள் இப்படி இலகு வழிகளைத் தேர்ந்தெடுப்பது வழமை. அமெரிக்காவில், சோமாலியா உள்நாட்டுப் போர் காலத்தில் வரும் சோமாலிய அகதிகளுக்கு உடனடியாக TPS விசா கொடுத்தார்கள். இலங்கையில் இருந்து வந்தால் விசாரணை செய்தே அகதி அந்தஸ்தோ ஏனைய விசாவோ கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

நீங்கள் சொல்பவை அமெரிக்கா கனடிய ஐரோப்பிய அரசுகளால் கூறப்படும் காரணங்கள் என்றபோதும் உண்மையில் அவர்கள் ஐரோப்பியர்கள் வெள்ளை இனத்தவர் அவர்கள் தம்மிடம் வருவதால் ஏனையவற்றை கழட்டி விட முடியும் அல்லது இதைக்காரணம் காட்டி குறைத்து கொள்ள முடியும் என்பதே முதல் காரணம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்படி தான் எல்லோரையும் நினைக்க வைக்கிறார்கள். ஆனால் இங்கே ukraine அகதிகள் போர்வையில் வருபவர்களில் பலர் ரஸ்யன் ஆதரவு நிலைப்பாடு உள்ள டன்பாஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். Ukrainian மொழி அறவே தெரியாதவர்கள். வாக்நர் குழுவில் தொடர்பில் உள்ளவர்கள் அல்லது  அவர்களின் நிலைப்பாடோடு உடன்படுபவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஏன் உக்ரேனியர்களில் கொலைகாரர்கள் இல்லையா  என்று  தான் எனக்கும் கேட்க தோன்றியது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நீங்கள் சொல்பவை அமெரிக்கா கனடிய ஐரோப்பிய அரசுகளால் கூறப்படும் காரணங்கள் என்றபோதும் உண்மையில் அவர்கள் ஐரோப்பியர்கள் வெள்ளை இனத்தவர் அவர்கள் தம்மிடம் வருவதால் ஏனையவற்றை கழட்டி விட முடியும் அல்லது இதைக்காரணம் காட்டி குறைத்து கொள்ள முடியும் என்பதே முதல் காரணம்.

நிச்சயம் குறைத்துக் கொள்வர், எமக்கு பாதகம் தான். ஆனால் பல்லின/பல் கலாச்சாரத் தன்மை என்பது "இரு புறமும் கூரிய வாள்" என்பதால் இதை விசனத்துடன் பார்ப்பதில் அர்த்தமில்லை எனக் கருதுகிறேன். இந்தியர் (சீக்கியர்), இலங்கையர், ஆபிரிக்கர், வியற்னாமியர் இப்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு காலப் பகுதி கனடா குடியேற்றத்தில் பொற்காலமாக இருந்ததல்லவா? அது போல இப்போது கிழக்கு ஐரோப்பியர், உக்ரேனியர் காலம். கனடாவின் குடிவரவு முறைமை அடிக்கடி மாறுவது (dynamic). பல்லினத் தன்மையும், தேசிய பொருளாதாரத்தின் தேவையும் என்ற இரு அச்சுகளில் நகர்வதால், இதில் முறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லையென்பது என் கருத்து! 

2 hours ago, பகிடி said:

அப்படி தான் எல்லோரையும் நினைக்க வைக்கிறார்கள். ஆனால் இங்கே ukraine அகதிகள் போர்வையில் வருபவர்களில் பலர் ரஸ்யன் ஆதரவு நிலைப்பாடு உள்ள டன்பாஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். Ukrainian மொழி அறவே தெரியாதவர்கள். வாக்நர் குழுவில் தொடர்பில் உள்ளவர்கள் அல்லது  அவர்களின் நிலைப்பாடோடு உடன்படுபவர்கள். 

இது தவிர்க்க முடியாதது. இலங்கைத் தமிழர்களே, எல்லோரும் வடக்கிலும், கிழக்கிலும் அச்சுறுத்தல் இருந்தோரா கனடாவில் குடிவந்தனர்? அல்லது வன்முறைகளின் இலக்குகள் மட்டுமா குடிவந்தனர்? வன்முறை செய்தோரும் கலந்தே தானே வந்தனர்? அது போல உக்ரைனியர்களும் வரவே முயற்சிப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

நிச்சயம் குறைத்துக் கொள்வர், எமக்கு பாதகம் தான். ஆனால் பல்லின/பல் கலாச்சாரத் தன்மை என்பது "இரு புறமும் கூரிய வாள்" என்பதால் இதை விசனத்துடன் பார்ப்பதில் அர்த்தமில்லை எனக் கருதுகிறேன். இந்தியர் (சீக்கியர்), இலங்கையர், ஆபிரிக்கர், வியற்னாமியர் இப்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு காலப் பகுதி கனடா குடியேற்றத்தில் பொற்காலமாக இருந்ததல்லவா? அது போல இப்போது கிழக்கு ஐரோப்பியர், உக்ரேனியர் காலம். கனடாவின் குடிவரவு முறைமை அடிக்கடி மாறுவது (dynamic). பல்லினத் தன்மையும், தேசிய பொருளாதாரத்தின் தேவையும் என்ற இரு அச்சுகளில் நகர்வதால், இதில் முறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லையென்பது என் கருத்து! 

விரிவாக எழுதவில்லை என்று நினைக்கிறேன்

அதை தவறு என்று நானும் நினைக்கவில்லை சொல்லவில்லை

எனது வேலை இடத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் போது நான் தமிழர்களையே கொண்டு சென்றேன் வரவேற்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

உகரேனியர்களை அனுமதிப்பது, அங்கே ஆக்கிரமிப்பு யுத்தம் நடப்பதையும், உயிராபத்து இருப்பதையும் case-by-case ஆக தீர்மானிக்க வேண்டியதில்லை. மறுபக்கம் ஆபிரிக்காவில் இருந்து வரும் ஒருவர், உண்மையிலேயே உயிர் பயத்தால் வருகிறாரா அல்லது அங்கே ஆயுதம் தூக்கி ஏனையோரைக் கொன்று விட்டு தப்பி வருகிறாரா என ஆராய வேண்டியிருக்கும்.

👍

எரித்திரியா என்று ஒரு ஆபிரிக்கா நாடு உள்ளது எத்தியோப்பியாவிடம் இருந்து தனிநாடு வேண்டும் என்று போர் செய்து எரித்திரியா அமைத்தார்கள். அப்போதில் இருந்து இப்போ வரை ஒரு சர்வாதிகாரியினால் தான் எரித்திரியா ஆளபட்டு கொண்டிருக்கின்றது.அங்கே இருந்து பலர் அகதிகளாக மேற்குலநாடுகளில் உள்ளனர். வேடிக்கை என்ன என்றால் சர்வாதிகாரியின் ஆதரவாளர்களும் அகதிகள், எதிர்பாளர்களும் அகதிகள். இவர்கள் வெளிநாடுகளில் தங்களுக்குள் மோதி கொள்வார்கள். சுவிச்சலாந்து யேர்மனியில் பெரிய மோதல்கள் நடைபெற்றதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் பாருங்கோ எப்பவும் பிரிட்டிஸ்காரன் போல நேக்காக டீல் பண்ண வேணும் விசயத்தை.

இஞ்ச பெயரளவில் உக்ரேனியர் வரலாம் - ஆனால் அதிலும் பெரிய தடங்கல்கள் எண்டு ஒரே கொம்பிளைண்ட்.

பிறகு 3 வருட தற்காலிக வதிவிட உரிமை இருக்கு - அதை வைத்து open job market இல வெள்ளையள் செய்ய பஞ்சி படும் வேலையளை செய்யலாம். அதேபோல கல்வி, மருத்துவம் எல்லாருக்கும் போல இலவசம்.

தங்கும் இடம் அரசுததாது ஆனால் பொதுமக்கள் தாமாக விரும்பி இலவச தங்குமிடம் கொடுக்ககலாம் - அவர்கள்தான் அகதிகளை ஸ்பொன்சரும் செய்வார்கள்.

வரி - கட்டியே தீர வேண்டும்🤣.

பிகு

83 கலவரத்தின் பின் யூகே உட்பட பல மேற்கு நாடுகள் ஈழதமிழனுக்கு ஓபன் வீசா கொடுத்து, வீடு, படிப்பு, வேலை எல்லாம் கொடுத்தன.

என் அறிவுக்கு எட்டிய வரை அப்போதும் ஈழ தமிழர் தோல் நிறம் மண்நிறம்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

பிகு

83 கலவரத்தின் பின் யூகே உட்பட பல மேற்கு நாடுகள் ஈழதமிழனுக்கு ஓபன் வீசா கொடுத்து, வீடு, படிப்பு, வேலை எல்லாம் கொடுத்தன.

என் அறிவுக்கு எட்டிய வரை அப்போதும் ஈழ தமிழர் தோல் நிறம் மண்நிறம்தான்🤣

தவறு சகோ

நான் கொழும்பில் இருந்து நேரடியாக 83 இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு பிரான்சுக்கு வந்தேன். 4 வருடங்களாக எனக்கு விசா தராமல் இழுத்து அடித்தார்கள்.

இறுதியாக எனது முதலாளி தான் விசா எடுத்து தந்துதவினார். அது அகதி விசா அல்ல. அது எனது நன்னடத்தை மற்றும் உடல் உழைப்புக்காக மட்டுமே கிடைத்தது.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

தவறு சகோ

நான் கொழும்பில் இருந்து நேரடியாக 83 இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு பிரான்சுக்கு வந்தேன். 4 வருடங்களாக எனக்கு விசா தராமல் இழுத்து அடித்தார்கள்.

இறுதியாக எனது முதலாளி தான் விசா எடுத்து தந்துதவினார். அது அகதி விசா அல்ல. அது எனது நன்னடத்தை மற்றும் உடல் உழைப்புக்காக மட்டுமே கிடைத்தது.

யூகே விசா, அங்கேயே அப்பிளை பண்ணியோருக்கு கிடைத்தது அண்ணை. பிரான்ஸ் பற்றி தெரியவில்லை. 

எனது அயலில் சில அண்ணைமார் போனார்கள். இப்போதும் கதைக்கிறனான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பகிடி said:

அப்படி தான் எல்லோரையும் நினைக்க வைக்கிறார்கள். ஆனால் இங்கே ukraine அகதிகள் போர்வையில் வருபவர்களில் பலர் ரஸ்யன் ஆதரவு நிலைப்பாடு உள்ள டன்பாஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். Ukrainian மொழி அறவே தெரியாதவர்கள். வாக்நர் குழுவில் தொடர்பில் உள்ளவர்கள் அல்லது  அவர்களின் நிலைப்பாடோடு உடன்படுபவர்கள். 

அப்பிடிப்போடு அரிவாளை 👍

என்னுடன்  உக்ரேனியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்கள் உரையாடுவது முழுக்க முழுக்க ரஷ்ய மொழியில் மட்டுமே. உக்ரேனிய மொழி தெரியாது என்பார்கள். ஆனால்  மேற்குலகம் ரஷ்யா மீது காரமாக இருப்பது போல் அவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
அதை விட போர் நடப்பது உக்ரேன் முழுவதும் அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே.

எப்படி இவ்வளவு லட்சம் உக்ரேனியர்கள் அகதிகளானார்கள்.....ஓ மன்னிக்கவும் அவர்களை அகதிகள் என்று சொல்லக்கூடாதாம்.

விருந்தாளிகள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

தவறு சகோ

நான் கொழும்பில் இருந்து நேரடியாக 83 இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு பிரான்சுக்கு வந்தேன். 4 வருடங்களாக எனக்கு விசா தராமல் இழுத்து அடித்தார்கள்.

இறுதியாக எனது முதலாளி தான் விசா எடுத்து தந்துதவினார். அது அகதி விசா அல்ல. அது எனது நன்னடத்தை மற்றும் உடல் உழைப்புக்காக மட்டுமே கிடைத்தது.

விசுகு 1985 இல்.  தை மாதம்   ஒரு கிழமை   கனடா   பிரித்தானியா  ஈழத்தமிழ்ருக்கு  கொடுத்தது    ஜேர்மனியிலிருந்து  பலரும் போனார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

யூகே விசா, அங்கேயே அப்பிளை பண்ணியோருக்கு கிடைத்தது அண்ணை. பிரான்ஸ் பற்றி தெரியவில்லை. 

எனது அயலில் சில அண்ணைமார் போனார்கள். இப்போதும் கதைக்கிறனான்.

இல்லை!

1985 ஏப்ரல் 30ம் திகதி தான் இலங்கைக் கடவுச்சீட்டுக்கான visa on arrival கடைசி நாள்.

வசதி படைத்தோர், அந்த திகதிக்கு முன்பும், பின்பும் விசா எடுத்து வந்தார்கள்.

எனது உறவினர்கள் கிளம்பி ஓடி வந்தார்கள். அவர்களில் பலர் student visa கேட்டு பின்னர் அகதியானார்கள்.

1983 ஆகஸ்ட் வந்து student visa வில் இருந்து மாத்த முடியாமல், ஊர் திரும்பி, பிடிக்காமல் வந்துவிட்டேன் என்று சொன்னவர் கொழும்பில் இருக்கிறார்.

சிலருக்கு விமான நிலையத்தில் விசா நிராகரிக்கப்பட, தடுப்பில் வைக்கப்பட்டு திருப்பி அனுப்ப முயல்கையில், ஆடைகளை களைந்து அண்டவேயருடன் போராடி, தப்பினர்.

2000 ஆண்டளவில் மிலனியம் யூனி என்று 28 வயதுக்கு குறைந்த முக்கியமாக பட்டதாரிகள் வந்தார்கள். இது காமன்வெல்த் 2 வருட வேர்க் விசா. வந்தவர்கள் அகதிக் கோரிக்கை வைக்க, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் லிஸ்டில் இருந்து தூக்கப்பட்டது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் எதையோ சொன்னேன் நீங்கள் வேறு எதையோ பற்றி கதைக்கிறீர்கள்?

மேலே கந்தையா அண்ணை சொன்னதை கவனியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

83 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து யூகே வர வீசா தேவைப்படவில்லை. டிக்கெட் மட்டும் எடுத்து, வந்து இறங்கி இலங்கையில் இருந்து தமிழர் அகதியாக வருகிறோம் என விமான நிலையத்தில் அகதி விண்ணப்பம் அப்பிளை பண்ண முடியுமாய் இருந்தது. இப்படி அப்பிளை பண்ணியோரில் பெரும்பாலானோர் அதிக கேள்வி இன்றி நாட்டில் உள் எடுக்கப்பட்டு அகதி அந்தஸ்தும் அதனூடு வரும் அனுகூலங்களும் வழங்கப்பட்டது.

இதைத்தான் ஓபன் வீசா என அழைக்கிறார்கள்.

இதை இப்படி வந்த ஒரு அண்ணையிடம் தகவல் பெற்று, சுட சுட எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

2000 ஆண்டளவில் மிலனியம் யூனி என்று 28 வயதுக்கு குறைந்த முக்கியமாக பட்டதாரிகள் வந்தார்கள். இது காமன்வெல்த் 2 வருட வேர்க் விசா

இல்லை.

1999-2000 இல் மிலேனியம் அக்கடமி (பிரதானி பீட்டர் பிரவுன், அதன் கொழும்பு முகவர் ஆனந்தகுமார், பம்பலபிட்டியில் அலுவலகம்) மூலம் வந்தவர்கள் ஏ எல் எடுத்து விட்டு இங்கே அடுத்த படிப்பு (பம்மாத்து) படிக்க என வந்தோர். இது student visa.

2003-2004 காலத்தில் 2 வருட வீசா - working holiday maker வீசா. இதற்கு படிப்பு தேவைபடவில்லை. ஒரு வேலை offer, மிகுதி காலத்தை யூகேயை சுற்றி பார்ப்பேன் என வீசா அதிகாரியை நம்பவைத்தால் வீசா கிடைத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் இடது சாரி அரசு(தொழில்கட்சி) ஆட்சிக்கு வரும் போது பெருமளவிலான அகதிகள் நிரந்தர வதிவுடமை பெறுவதுண்டு (தற்போது இடது சாரி ஆட்சியுள்ளது), அகதிகளிற்கு மிகவும் கடினமான சட்டங்களை உருவாக்குவது வலது சாரி அரசு (லிபரல்), கடந்த மூன்று தவணை வலதுசாரி அரசின் ஆட்சியில் மிகவும் கடினமான சட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது, அதனால் தற்போது நடத்தப்படும் போராட்டம் எந்த வகையில் தாக்கம் செலுத்தும் என தெரியவில்லை. இதனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தற்போது வேறு சில மேற்கு நாடுகளும் அவுஸ்ரேலியா நடைமுறைப்படுத்துகின்ற அகதிகெளுக்கெதிரான நடமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.

ஆரம்பத்தில் வெள்ளைநிற குடியேற்ற கொள்கை கொண்ட அவுஸ்ரேலியா தற்போது அனைத்து மக்களையும் வரவேற்கிறது எந்தவித பாகுபாடுமின்றி, ஆனாலும் சில வேலை வழங்குனர் வெள்ளையினத்தவரே வேலைக்கு வேணும் எனும் வேலை விளம்பரங்களை செய்யும் நாடாகவும் அவுஸ்ரேலியா உள்ளது.

கோவிட்டிற்கு பின்னரிலிருந்து மிக அண்மை வரை மாணவ விசாவில் வந்தவருக்கு வேலை செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்த அவுஸ்ரேலிய அரசு மீண்டும் ஒரு வாரத்திற்கு குறித்த நேர அளவு மட்டுமே வேலை செய்யலாம் எனும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோவிட்டிற்கு முந்தைய காலத்தில் இருந்த குடியேற்ற அளவினை விட பெருமளவில் குடியேற்ற விகிதம் அதிகரித்துள்ளது எனகூறப்படுகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக அதிகளவான உழைப்பாளர்கள் தமது பங்களிப்பினை செலுத்துகிறார்கள், இருந்தும் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை அதற்கு காரணம் அதிகளவான வேலைகள் உருவாக்கபடுகின்றன.

ஆனால் எதிர்காலத்தில் நிலமை அவ்வளவு சாதகமாக இல்லை, மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை அவுஸ்ரேலியாவிற்கும் ஏற்பட்டுள்ளது, உக்கிரேன் இரஸ்சிய போர், பொருளாதாரத்தினை மந்தமாக்கியுள்ளது.

அதனால் ஒரு அலகிற்கான உழப்பாளரின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது (உற்பத்தி குறைவடைய அதனை உற்பத்தி செய்ய உபயோகிக்கும் உழைப்பின் அளவு மாறாதிருப்பதால்).

3.7% ஆக உள்ள வேலையின்மை 4.7% ஆக 2024 இறுதிப்பகுதியில் ஏற்படும் என கணித்துள்ளார்கள்.

இந்த விடயங்களை பார்க்கும்போது அகதிகளின் விண்ணப்பங்கள் பெருமளவில் பாதகமான முறையிலேயே பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என் அறிவுக்கு எட்டிய வரை அப்போதும் ஈழ தமிழர் தோல் நிறம் மண்நிறம்தான்🤣

உண்மையாகவா?
நான் இவ்வளவு நாளும் புலிகள் செய்த ஆடடூழியத்தால்தான் 
நாங்கள் நொந்து கறுப்பு ஆனோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் 

அப்போ முன்பும் இப்படித்தான் இருந்து இருக்கிறோம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

83 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து யூகே வர வீசா தேவைப்படவில்லை. டிக்கெட் மட்டும் எடுத்து, வந்து இறங்கி இலங்கையில் இருந்து தமிழர் அகதியாக வருகிறோம் என விமான நிலையத்தில் அகதி விண்ணப்பம் அப்பிளை பண்ண முடியுமாய் இருந்தது. இப்படி அப்பிளை பண்ணியோரில் பெரும்பாலானோர் அதிக கேள்வி இன்றி நாட்டில் உள் எடுக்கப்பட்டு அகதி அந்தஸ்தும் அதனூடு வரும் அனுகூலங்களும் வழங்கப்பட்டது.

இதைத்தான் ஓபன் வீசா என அழைக்கிறார்கள்.

இதை இப்படி வந்த ஒரு அண்ணையிடம் தகவல் பெற்று, சுட சுட எழுதுகிறேன்.

உண்மையில் அப்படி இருந்ததா ? அப்போ ஏன் எங்கட லூசுகள் போகாமல் இருந்தார்களோ தெரியவில்லை 

86-87 இல் ஜெர்மனிக்கு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு படிப்புக்கு என்று சும்மா விட்டார்கள் 
எனது மாமா ஒருவர் என்னை அனுப்ப முயற்சி செய்தார் அம்மா அழுது ஒப்பாரி வைத்து விடவில்லை 
நல்லவேளை அப்போ வராதது அப்போ  வந்திருந்தால் ஜேர்மன் பிள்ளைகளுடன் ஐக்கியமாகி தமிழே மறந்திருப்பேன் 

87- 88 என்று எண்ணுகிறேன் 86 இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

யூகே விசா, அங்கேயே அப்பிளை பண்ணியோருக்கு கிடைத்தது அண்ணை. பிரான்ஸ் பற்றி தெரியவில்லை. 

எனது அயலில் சில அண்ணைமார் போனார்கள். இப்போதும் கதைக்கிறனான்.

83 யூலையில் இருந்து நான் லண்டன் வரத்தான் விரும்பினேன். என்னோடு படித்தவர்களும் அதுக்கு தான் முயற்சி செய்தார்கள். 

ஆனால் அது குதிரைக்கொம்பாகத்தான் அன்றும் இருந்தது. சிலவேளைகளில் உயர் தரத்தில் தேறியவர்களுக்கு கிடைத்ததோ தெரியவில்லை. எனக்கு உயர் தரப் பரீட்சை முடிவுகள் வரவில்லை. 

ஆனால் ஜெர்மனியில் பேர்லின் ரசியாவிடம் இருந்தபடியால் அதை தாண்டி விசா இன்றி வரக் கூடியதாக இருந்தது. அதனைத் தான் இங்கே பலரும் குழப்பமாக எழுதுகிறார்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.