Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சாத்தியமா? சுவிஸ் உறவுகள் உடனே மேடைக்கு வரவும்🎤😅!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Justin said:

இது சாத்தியமா? சுவிஸ் உறவுகள் உடனே மேடைக்கு வரவும்🎤😅!

ஏன்  ?? சாத்தியமில்லை??   கோத்தாவை  விசாரணை செய்த  பொலிஸ் அதிகாரி   அங்கே  பாதுகாப்புடன் இருக்கிறார்    இந்த பொலிஸ்  வசந்த கொலையில்  கோத்தாவை   ஒரு சந்தேகநபராக.  கோடுட்டிருந்தார்.  ஆனால்  துவாரகா  இருக்கிறாரா என்பது கேள்வி   ??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசு கேட்டு வருபவர்களுகளை வீட்டு வாசலுடன் திருப்பியனுப்ப எல்லாம் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

இது சாத்தியமா? சுவிஸ் உறவுகள் உடனே மேடைக்கு வரவும்🎤😅!

நீங்கள் காணொளியை பார்க்காமல் தலையங்கம் மட்டும் பார்த்து விட்டு இக் கருத்தை தரவேற்றி இருக்கின்றீர்கள் அய்யனே!

எங்கே @விசுகு ஐயா?

ஏரம்பு ஐயாவின் மகள் அருணா நல்லவர் என நற்சான்றிதழ் கொடுத்தவராச்சே! இப்ப என்ன ஐயா சொல்ல போகின்றிர்கள்?

எங்கே @goshan_cheche தம்பி?

துவாரகா வை தலைமை யாக ஏற்பேன் என்றவர்!

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, வைரவன் said:

எங்கே @goshan_cheche தம்பி?

துவாரகா வை தலைமை யாக ஏற்பேன் என்றவர்!

யோவ் அண்ணா….

வந்தால்….

வந்து அவர்தான் என உறுதியானால்….

அவர் பின்னால் யார் இருக்கிறார்கள் என அறிந்து….

அதன் பின் உண்மையான தலைமையை தருவார் என பட்டால்….

இப்படி ஏகப்பட்ட கொண்டிசன் போட்டிருக்குறன்….

எல்லாத்தையிம் விட்டுட்டு கடைசியி மட்டும் தொங்கிறது நியாயம் இல்லை🤣

பிகு

வீடியோ தந்த சாந்தி அக்காவுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வரத்தானே வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, குமாரசாமி said:

காசு கேட்டு வருபவர்களுகளை வீட்டு வாசலுடன் திருப்பியனுப்ப எல்லாம் அடங்கும்.

துவாரகா என்று வேடம்பூண்ட மித்துஜா ராஜரட்ணம் 5000 கோடி ரூபா ஏற்கனவே சேர்த்துவிட்டாவாம் என்று நேசக்கரம் @shanthy சொல்கின்றார்!  வீட்டு வாசலுக்கே வராமல் கோடி கோடியாக அள்ளுபவர்களை வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாறவேண்டாம்!

இவ்வளவு காசு கொடுக்கும் அளவுக்கு புலம்பெயர் தேசங்களில் முட்டாப்பயலுவ இருக்கிறார்களா? இதையெல்லாம் அறிய சாந்தி அக்காவுக்கு புலனாய்வு வேலை செய்யும் அந்த “அறிவாளி” யார்?

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தலைவரையும் பிள்ளைகளையும் நிம்மதியா விடுங்க. வீரமரணம் அடைந்தவர்கள் அடைந்தவர்களாகவே இருக்கட்டும். இப்ப தலைவர் இருந்தாலும் அவருக்கு 70 வயது. இந்த வயதில்.. 20 வயதுப் போராளியாக அவரால் செயற்படவும் முடியாது.. இன்றைய பூகோளச் சூழலும்.. இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு உகந்ததல்ல. இன்னொரு ஆயுதப் போராட்டத்தை தமிழர் தேசம் தாங்கிக் கொள்ளும் வலிமையிலும் இல்லை. தேசிய தலைவர் ஒரு அரசியல் போராளியாக இருந்து.. தானும் தன் இனமும்.. மற்றவர்களால் ஏமாற்றப்படுவதையும் மற்றவர்களுக்கு காவடி தூக்குவதையும் விரும்பக் கூடிய ஒருவரல்ல. இந்த நிலையில்.. இவை தேவையற்ற செய்திகள்.

எனினும் புலிகளின் பெயரால்.. சொறீலங்கா அரச கூலிகள் சொறீலங்கா அரசுக்கும்.. பெளத்த விரிவாக்கத்திற்கும் காசு சேர்ப்பது தெரிந்ததே. அந்த வகையில்.. சாந்தி அக்கா இந்த காணொளி வழியாக.. மக்களை விழிப்பூட்ட எண்ணி இருந்தால்.. அதனை வரவேற்கலாம். ஆனாலும் புலம்பெயர் தமிழர்கள்.. புலிகள் காலத்திலேயே கேள்வி கேட்டுத்தான் காசு கொடுத்தவை. இப்ப சும்மா தூக்கிக் கொடுப்பினமா என்பது கேள்விக்குறியே.

புலிகளின் தங்கம் என்று காலத்துக்கு காலம் தோண்டிக் கொண்டிருப்பதும்.. பெளத்த விரிவாக்கத்தைச் செய்யவும்  சிங்கள இராணுவ தேவைகளை பூர்த்தி செய்யவும்.. சுயநலனுக்காகவுமே. 

Edited by nedukkalapoovan
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, கிருபன் said:

இவ்வளவு காசு கொடுக்கும் அளவுக்கு புலம்பெயர் தேசங்களில் முட்டாப்பயலுவ இருக்கிறார்களா?

தேவைக்கு அதிகமாகவே  புலம் பெயர் நாடுகளில் அவர்கள் இருக்கிறார்கள் போல தான் தெரிகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வைரவன் said:

எங்கே   goshan_che தம்பி?

துவாரகா வை தலைமை யாக ஏற்பேன் என்றவர்!

எனக்கு அதிர்ச்சி தந்ததே இது தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு அதிர்ச்சி தந்ததே இது தான்

🤣🤣 🤣 இதென்ன பிரமாதம்…என்கிட்ட இன்னும் நெறைய ஸ்பெசல் ஐட்டம் எல்லாம் இருக்கு….

பிகு

நான் தலைவர் இருக்கிறார் என்பதை எப்போதும் மறுத்தே வந்துள்ளேன்.

ஆனால் துவாரகா தப்பி இருக்கலாம். இதை ஒரு open mind உடன் அணுக வேண்டும் என்றே நான் சொன்னேன்.

துவாரகா வெளியே வந்து, அவர் இதயசுத்தியோடு செயல்பட்டு சிதறி கிடக்கும் புலம்பெயர் சமூகத்தை ஒன்றிணைத்தால் அது எல்லாருக்கும் நல்லதுதானே? அப்படி ஒரு நிலை வந்தால் ஏன் அதை நாம் தட்டி கழிக்க வேண்டும்.

இந்த இனம் உய்ய வேண்டும் என்ற நப்பாசையில் சுமந்திரனுக்கும், விக்கினேஸ்வரனுக்கும் ஆதரவாக எழுதி, எதையாவது ஒப்பேற்றி விடலாம் என நினைத்தவன் நான்.

அவர்களையே ஆதரித்த போது, ஏன் துவாரகாவை கொஞ்சம் அவதானதுடன் ஆதரிக்க முடியாது?

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில்தான் நானும் என் இனமும் இருக்கிறோம்.

அதில் எந்த ஒரு வழியையும், அவதானத்தோடு முயன்று பார்ப்பதில் தவறில்லை.

Edited by goshan_che
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

இவ்வளவு காசு கொடுக்கும் அளவுக்கு புலம்பெயர் தேசங்களில் முட்டாப்பயலுவ இருக்கிறார்களா?

போராட்ட காலங்களிலும் பங்களிப்பு செய்தவர்களை முட்டாள்கள் என்று சொன்னவர்கள் இருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

மன்னிக்கவும்.
இந்தியாவின் குடும்ப அரசியல், இலங்கை பண்டாரநாயக்கா குடும்ப அரசியல், தமிழ்நாட்டு கட்சிகளின் குடும்ப அரசியல், பூட்டோவின் பேத்தி பாக்கிஸ்தானை ஆளவேண்டும் என்ற பாணியில் நீங்கள் சென்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

7 hours ago, goshan_che said:

இந்த இனம் உய்ய வேண்டும் என்ற நப்பாசையில் சுமந்திரனுக்கும், விக்கினேஸ்வரனுக்கும் ஆதரவாக எழுதி, எதையாவது ஒப்பேற்றி விடலாம் என நினைத்தவன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, கிருபன் said:

இவ்வளவு காசு கொடுக்கும் அளவுக்கு புலம்பெயர் தேசங்களில் முட்டாப்பயலுவ இருக்கிறார்களா?

பண ஆசையினால் 37.5 - 40 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்து அந்த பணத்தை இப்படி கொடுக்கிறார்களோ 😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

மன்னிக்கவும்.
இந்தியாவின் குடும்ப அரசியல், இலங்கை பண்டாரநாயக்கா குடும்ப அரசியல், தமிழ்நாட்டு கட்சிகளின் குடும்ப அரசியல், பூட்டோவின் பேத்தி பாக்கிஸ்தானை ஆளவேண்டும் என்ற பாணியில் நீங்கள் சென்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

11 hours ago, goshan_che said:

டுருடோ, புஷ், கென்னடி, கிளிண்டன், லெபென்….

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தமிழீழ இளவரசி துவாரகாவின் வருகையைப் பற்றி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுக் கதைக்கின்றார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துவராகா, அவரது வரவைப் பற்றி ஒரு பாடலுடன் அவர் ஊருக்குள் போய் மக்களின் குறைகளை கேட்பதாக காட்டும் வீடியோ ஒன்று உலாவுகிறது. அதைப் பார்த்தவுடன் நினைவிற்கு வந்தது இந்த மாதிரி மக்களை ஏமாற்றவும், கேலிக் கூத்து செய்யும் அளவிற்கு தமிழர்கள் தாழ்ந்துவிட்டனரா? 

இருக்கிறார்கள் அல்லது இல்லை என்பதை விட  அவர்களுக்கான மரியாதையாவது கொடுக்க வேண்டும் என யோசிக்கும் திறன் அற்றவர்களாக மாறிக்கொண்டு போகிறோமா? 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, கிருபன் said:

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தமிழீழ இளவரசி துவாரகாவின் வருகையைப் பற்றி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுக் கதைக்கின்றார்.

சரியான போட்டி. 

இனி சாந்தி அக்கா இதற்கு பதில் வீடியோ தயாரிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்பராசாவின் கருத்தைப் பார்த்தால் ஈழத்தமிழர்களுக்கு பல இளவரசிகள், இளவரசர்கள், Earls, Dukes, Knights எல்லாம் இனிக் கிடைப்பார்கள் போலிருக்கே😂?

எங்களுக்கு என்ரர்ரெயின்மென்ற் தாராளமாகக் கிடைக்கும் போலிருக்கிறது!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

எங்களுக்கு என்ரர்ரெயின்மென்ற் தாராளமாகக் கிடைக்கும் போலிருக்கிறது!

IMG-4494.jpg

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவர் கந்தசாமி இன்பராசா சாந்தி அக்காவை அம்மையார் ஆக்கிவிட்டார். சாந்தி அக்கா  இனி தேர்தல் களத்தில் போட்டியிடலாம்.

7 hours ago, Justin said:

இன்பராசாவின் கருத்தைப் பார்த்தால் ஈழத்தமிழர்களுக்கு பல இளவரசிகள், இளவரசர்கள், Earls, Dukes, Knights எல்லாம் இனிக் கிடைப்பார்கள் போலிருக்கே😂?

எங்களுக்கு என்ரர்ரெயின்மென்ற் தாராளமாகக் கிடைக்கும் போலிருக்கிறது!

ஒரு இளவரசியும் ஒரு இளவரசரும் கொடுப்பார்கள். ஆனால்  இளவரசிக்கு பல தோழிகள் கொடுப்பார்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதிபதியே நாட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடுகிறார், இவர் நகைச்சுவை அடிக்கிறார். போராடபோனவர்கள் போராடினார்கள், மாண்டார்கள், சிலர் அமைதியாகிவிட்டார்கள், இவர்களோ அதை வைத்து பிழைக்கிறார்கள். இராணுவத்தை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் நிலைநிறுத்துவதற்கு  இவரின் இந்த காணொளி போதும். இவர் பேச்சு ஒரு போராளியின் பொறுப்பான  பேச்சாக தெரியவில்லை.      

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

தலைவர் கந்தசாமி இன்பராசா சாந்தி அக்காவை அம்மையார் ஆக்கிவிட்டார். சாந்தி அக்கா  இனி தேர்தல் களத்தில் போட்டியிடலாம்.

ஒரு இளவரசியும் ஒரு இளவரசரும் கொடுப்பார்கள். ஆனால்  இளவரசிக்கு பல தோழிகள் கொடுப்பார்கள்.

தமிழ் நன்றாக விளையாடுகின்றது🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

நீதிபதியே நாட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடுகிறார், இவர் நகைச்சுவை அடிக்கிறார். போராடபோனவர்கள் போராடினார்கள், மாண்டார்கள், சிலர் அமைதியாகிவிட்டார்கள், இவர்களோ அதை வைத்து பிழைக்கிறார்கள். இராணுவத்தை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் நிலைநிறுத்துவதற்கு  இவரின் இந்த காணொளி போதும். இவர் பேச்சு ஒரு போராளியின் பொறுப்பான  பேச்சாக தெரியவில்லை.      

புலனாய்ப் பிரிவுகளின்(இலங்கை இந்திய)கட்டளைகளின் கீழ் செயல்படும் போராளிகள் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது.

எனவே அவர்களை நொந்து பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அப்படியே ஒரு வேளை துவாரகா உயிருடன் இருந்தாலும் (?) அவரின் தனிப்பட்ட வாழ்வை அமைதியாக வாழ விடுவதே முறை. குழந்தைப்பருவத்தை யுத்தத்தின் அகோரத்தால் இழந்த அவர் தனது இளமைப் பருவத்தையாவது அமைதியாக மகிழ்வாக வாழட்டும். அவரை அரசியலுக்குள் இழுப்பது, அவரை வைத்து அரசியல் செய்து தமது சொந்த வாழ்வை வளப்படுத்தும் புலம் பெயர் மாபியாக்கள் இதை உணரவேண்டும். 

Edited by island
  • Like 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.