Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இஸ்ரேல் ஒரு தேசம், எனவே பழிவாங்கும் உணர்வு இருந்தாலும் இஸ்ரேல் படைகள் சிவிலியன்களைப் பாதுகாக்கும் படி நடந்து கொள்வது குறைந்த பட்ச தகுதியாக இருக்க வேண்டும்.

நிற்க: ஹமாஸ் காசாவில் 2007 இல் தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்குக் கரையில் ஹமாஸிற்கு ஆதரவில்லை. ஈரான், துருக்கி, கட்டார் ஆகிய நாடுகள் ஹமாசுக்கு பல் வேறு வழிகளில் நிதியுதவி செய்கின்றன. இவற்றுள், கட்டார் மட்டும் தான் மனிதாபிமான உதவிகளாகச் செய்கின்றது - இது இஸ்ரேலினால் அனுமதிக்கப் பட்டிருக்கும் உதவி என்கிறார்கள். இதை விட எகிப்தில் இருந்து காசாவினுள் வரும் பொது மக்களுக்கான உணவு, பாவனைப் பொருட்கள் மீது வரி விதித்து, ஹமாஸ் வருடாந்தம் பல மில்லியன் வருமானம் பார்க்கிறது. இந்த வரியையும் ஆயுதம் வாங்கத் தான் பாவிக்கிறார்கள் - ஏனெனில் காசா வாழ் மக்கள் கண்டது மருந்து, உணவு எல்லாமே தட்டுப்பாடான வாழ்க்கை தான் கடந்த 16 ஆண்டுகளாக.

முக்கியமான கேள்விக்கு வருகிறேன்: காசா மக்கள் ஹமாசை இப்போது ஆதரிக்கிறார்களா? இந்த ஆண்டு ஜூனில் ~1200 பேர்களிடம் எடுக்கப் பட்ட மாதிரிக் கருத்துக் கணிப்பின் படி காசாவில் இருக்கும் 38% பேர் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய வன்முறை அமைப்புகளின் வருகை நல்ல விடயம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீதம் மேற்குக் கரையில் வெறும் 16%!

இதற்கு இஸ்ரேல் மீதான வரலாற்றுக் கோபம் உட்பட பல  காரணங்கள் இருக்கலாம், ஆனால் இஸ்ரேலின் இருப்பை ஒழிக்க வேண்டுமென எழுத்தில் வைத்திருக்கும் இரு அமைப்புகளை கணிசமானளவு காசா வாழ் மக்கள் விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது.

5 மில்லியன் மக்கள் தொகையில், வெறும் 1200 பேரின் மாதிரியாக (sampling) இருந்தாலும், பல சுவாரசியமான தரவுகளை உள்ளடக்கிய கருத்துக் கணிப்பு ஆவண இணைப்பு இது, நேரம் இருப்போர் வாசியுங்கள்:

https://www.pcpsr.org/sites/default/files/Poll 88 English full text June 2023.pdf

 ஒரு முட்டுச்சந்தில் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை முட்டி நிற்கிறது. இந்த முட்டுச் சந்தை விட்டு நகர, இஸ்ரேல் செய்ய வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன, ஆனால் பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

Edited by Justin
சனத்தொகை தவறு திருத்தம்
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேல் வந்தடைந்தது

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது.

இந்த போர் நேரத்தில் இருநாட்டு இராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/276548

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு பார்த்தாலும் பொதுமக்கள், ஹமாஸ் பயங்கரவாதிகள் உடல்கள்: சிதைந்து போன எல்லையோர இஸ்ரேல் கிராமம்

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.

காசா எல்லையில் இருந்து சில நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் இருக்கும் இஸ்ரேல் கிராமம் க்ஃபர் அஜா. சுமார் 700 பேர் கொண்ட இந்த கிராமம், பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பள்ளிக்கூடம், தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது.

கடந்து சனிக்கிழமை இந்த கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன.

இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெருக்களில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.

இதனால் ஒரு செழிப்பான கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் இரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/276574

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கெதிராக, பாலஸ்த்தீனர்கள் மீதான அவர்களின் அட்டூழியங்களைப் பொறுக்கமுடியாமலேயே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார்கள் பாலஸ்த்தீன ஆதரவாளர்கள். சரி, அப்படியானால் இஸ்ரேலிய அரசையும் அதன் ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் அல்லவா குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும்?  1200 பொதுமக்கள் வேட்டையாடப்பட்டதற்குக் காரணம் என்ன? குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் , முதியோர் என்று ஆயிரக்கணக்கானோர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதோடு தலைகள் கொய்யப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மேலாக பலர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் 1200 இஸ்ரேலியர்களை, குறிப்பாக பொதுமக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்று ஹமாஸ் எதிர்பார்த்ததா? சாதாரண கல்வீச்சுப் போராட்டத்திற்கே துப்பாக்கித் தாக்குதல் நடத்தி சில பலஸ்த்தீனர்களையாவது கொல்லும் இஸ்ரேலிய இராணுவம், 1200 பொதுமக்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் என்ன செய்யும் என்று ஹமாஸ் எதிர்பார்த்தது? இல்லை, இஸ்ரேல் என்ன செய்யும் என்று தெரிந்தே இத்தாக்குதலை நடத்தியிருந்தால், அப்பாவிப் பாலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் பதில்த் தாக்குதலில் கொல்லப்படவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதானே இதனைச் செய்திருக்கிறது? அப்படியானால், பாலஸ்த்தீன மக்களின் மேல் ஹமாஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே? 

இஸ்ரேல் என்பது அதனை உலகின் வரைபடத்திலிருந்தே முற்றாகத் துடைத்தழித்துவிடக் காத்திருக்கும் நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே, தனது பாதுகாப்பிற்காக எந்த மனிதவுரிமை மீறல்களிலும், இனக்கொலைகளிலும் அது ஈடுபடத் தயாராகவே இருக்கிறது. அயலில் உள்ள நாடொன்றினை ஆக்கிரமித்தல், எல்லைகள் மீறி ஊடுருவித் தாக்குதல், அயல்நாடுகளில் நாசகார வேலைகளில் ஈடுபடுதல் என்று தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஒரு எதேச்சாதிகார அரசு. ஐ. நா வோ அல்லது சர்வதேச மனிதவுரிமைச் சபையோ அல்லது எந்த அமைப்போ இஸ்ரேலைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அமெரிக்காவும், இன்னும் சில மேற்கு நாடுகளும் பின்னால் இருக்கும் தைரியத்தில் இஸ்ரேல் இதனைச் செய்கிறது. கொத்தணிக்குண்டுகளை இஸ்ரேல் பாவிப்பது இதுவே முதல்த் தடவையல்ல. இதற்கு முன்னரும் பலமுறை இஸ்ரேல் இதனைப் பாவித்திருக்கிறது. இதனை அமெரிக்கா கொடுத்திருக்கலாம், அல்லது இஸ்ரேலே சொந்தமாகத் தயாரித்திருக்கலாம். முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, சாலை, புதுமாத்தளம், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் ஹேலோ கண்ணிவெடி அகற்றும் அமைப்பினரால் கண்டெடுக்கப்பட்ட 46 கொத்தணிக்குண்டுகளின் எச்சங்களும், கோதுகளும் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையே காட்டுகின்றன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அதிகளவு மக்களைக் கொல்லும் நோக்கத்திற்காகவே இவை வீசப்பட்டன. இன்று இஸ்ரேல் செய்வதும் அதுதான். அதிகளவு பலஸ்த்தீனர்களைக் கொல்லுதல். 

உண்மையான விடுதலைப் போராட்டம் ஒன்றினை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று அப்பாவிகள் இருபக்கமும் கொல்லப்படக் காரணமாகிவிட்டிருக்கிறார்கள். சர்வதேசத்தில் பலஸ்த்தீன மக்களுக்கு இருந்த சிறிது அனுதாபத்தினையும் ஹமாஸின் மிருகவெறி இன்று முற்றாக அழித்திருக்கிறது. பலஸ்தீனர்களை அழிப்பதில் சிறிதும் கவலை கொல்லாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுக்கு தனது மக்களைக் கொல்ல தானே வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது ஹமாஸ். ஒவ்வொரு யூத மகனின் இறப்பிற்கு 10 பலஸ்த்தினர்களைக் கொல்லும் இஸ்ரேலிய அரசு, தனது 1200 மக்களின் படுகொலைக்கும் எத்தனை ஆயிரம் பலஸ்த்தீனர்களின் உயிர்களைக் காவு கொள்ளப்போகிறது? 

இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சிற்குள்ளும், ஏவுகனை வீச்சுக்குள்ளும் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாரினதும், குழந்தைகளினதும் முகங்களில் தெரிவது வன்னியில் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கதறியபடி ஓடிய எனது உறவுகளே. ஹமாஸின் நரவேட்டையில் பலியான 1200 அப்பாவி இஸ்ரேலியர்களும், இஸ்ரேலின் குண்டுவிச்சில் கொல்லப்பட்டுவரும் பலநூற்றுக்கணக்கான பலஸ்த்தீனர்களும் செய்த தவறு என்ன? இக்கொலைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? 

இதில் நாம் எத்தரப்பையும் சார்ந்து கருத்தெழுததுவதென்பது தவறானது. ஏனென்றால், இருபக்கமும் கொல்லப்படுவது அப்பாவிகளே. 

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

இதில் நாம் எத்தரப்பையும் சார்ந்து கருத்தெழுததுவதென்பது தவறானது. ஏனென்றால், இருபக்கமும் கொல்லப்படுவது அப்பாவிகளே. 

100% ✔️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

இந்த நிலையில், காசா மருத்துவமனைகளில் 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேதம் என தகவல் வெளியாகி உள்ளது.

https://thinakkural.lk/article/276584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

காசாவில் இருக்கும் 38% பேர் ஹமாஸ்,

இணைப்புக்கு முதற்கண் நன்றி. கருத்துக்கணிப்பை வாசிக்கிறேன்.

சில முரண் கருத்துக்கள்.

1. உண்மையில் “வெறும்” 38% தான் ஹமாசுக்கும் இஸ்லாமிக் ஜிகாத்துக்கும் ஆதரவு என்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஹமாஸ் ஆயுத முனையில் அபாசின் பெட்டாவை காஸாவை விட்டு விரட்டிய பின் அது அங்கே ஒரு சர்வாதிகார ஆட்சியையே நிகழ்த்துகிறது. கிட்டத்தட்ட ஈபி யின் கீழ் நாம் 87-90 வரை இருந்த நிலை. இத்தோடு மேலே நீங்கள் சொன்ன மிக மோசமாக இஸ்ரேலால் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம் (1967 எல்லைக்கும் மேலான விஸ்தரிப்பு, அல் அக்சா மசூதி பிரச்சனை) போன்ற எண்ணக்கருவும் இருந்தும் கூட 38% தாம் அந்த மக்கள் ஹமாசுக்கு ஆதரவு என்றால் - நிச்சயம் அங்கே 62% (இது சந்திரிக்கா முதல் முறை வென்ற சதவீதம்- மிகபெரிய ஆதரவு நிலை) இஸ்ரேலுடன் சமாதானமாக வாழ விரும்பும் வழியை விரும்புவதாக கொள்ளலாம் அல்லவா?

38% க்காக 62% ஐயும் வழித்துடைப்பது அநியாயம்.

2. 100% ஹமாசை ஆதரித்தாலும் - சிவிலியன்களை இலக்கு வைப்பது தவறுதான். போர்குற்றம்தான். மனித குல விரோதச்செயல்தான். இதில் எந்த மாற்று கருத்தும் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்.

3. எப்படி ஹமாஸ் இஸ்ரேலை அழித்து முழு நிலமும் தமக்கு வேண்டும் என்று கேட்பது யுத்தத்தை நீடிக்கிறதோ - அதே போல இஸ்ரேலும் பலஸ்தீனத்தின் மிதவாதிகளை பலப்படுத்தாமல் -தனது தொடர் குடியேற்றத்தால் - கிழக்கு ஜெருசலேம் பற்றிய பிடிவாததால் (ஜெருசலேத்த்தை ஜெனிவான போல் இருபகுதியிம் பிரிக்கலாம்) - தீவிரவாதிகளை பலப்படுத்துகிறது என்பதும் உண்மை.

4. இஸ்ரேலை நெகிழ்வுதன்மையை காட்ட உன்னாத, மேற்கும் இதற்கு பங்காளியே.

4. அதே சமயம், இஸ்ரேலும், பலஸ்தீனியர்களும் ஒன்றுபட்டாலும் ஈரானும், ஹிஸ்புலாவும், சிரியாவின் அசாட்டும், ரஸ்யாவும் குழப்பி அடிப்பார்கள்.

2 hours ago, Justin said:

 ஒரு முட்டுச்சந்தில் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை முட்டி நிற்கிறது. இந்த முட்டுச் சந்தை விட்டு நகர, இஸ்ரேல் செய்ய வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன, ஆனால் பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

இது முட்டு சந்து என்பதை விட, வெளியேறும் வழி இல்லாத maze (இதற்கு தமிழ் என்ன?).

ஆனால் ஒரு ஜனநாயக நாடாக. Euro வில் கால்பந்து விளையாடும் நாடாக, global west இன் அங்கமாக இருக்கும் இஸ்ரேலுக்கு - இதை கையாளும் முறை பற்றி ஒரு கடப்பாடு இருக்கிறது. 

57 minutes ago, ரஞ்சித் said:

இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கெதிராக, பாலஸ்த்தீனர்கள் மீதான அவர்களின் அட்டூழியங்களைப் பொறுக்கமுடியாமலேயே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார்கள் பாலஸ்த்தீன ஆதரவாளர்கள். சரி, அப்படியானால் இஸ்ரேலிய அரசையும் அதன் ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் அல்லவா குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும்?  1200 பொதுமக்கள் வேட்டையாடப்பட்டதற்குக் காரணம் என்ன? குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் , முதியோர் என்று ஆயிரக்கணக்கானோர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதோடு தலைகள் கொய்யப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மேலாக பலர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் 1200 இஸ்ரேலியர்களை, குறிப்பாக பொதுமக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்று ஹமாஸ் எதிர்பார்த்ததா? சாதாரண கல்வீச்சுப் போராட்டத்திற்கே துப்பாக்கித் தாக்குதல் நடத்தி சில பலஸ்த்தீனர்களையாவது கொல்லும் இஸ்ரேலிய இராணுவம், 1200 பொதுமக்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் என்ன செய்யும் என்று ஹமாஸ் எதிர்பார்த்தது? இல்லை, இஸ்ரேல் என்ன செய்யும் என்று தெரிந்தே இத்தாக்குதலை நடத்தியிருந்தால், அப்பாவிப் பாலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் பதில்த் தாக்குதலில் கொல்லப்படவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதானே இதனைச் செய்திருக்கிறது? அப்படியானால், பாலஸ்த்தீன மக்களின் மேல் ஹமாஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே? 

இஸ்ரேல் என்பது அதனை உலகின் வரைபடத்திலிருந்தே முற்றாகத் துடைத்தழித்துவிடக் காத்திருக்கும் நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே, தனது பாதுகாப்பிற்காக எந்த மனிதவுரிமை மீறல்களிலும், இனக்கொலைகளிலும் அது ஈடுபடத் தயாராகவே இருக்கிறது. அயலில் உள்ள நாடொன்றினை ஆக்கிரமித்தல், எல்லைகள் மீறி ஊடுருவித் தாக்குதல், அயல்நாடுகளில் நாசகார வேலைகளில் ஈடுபடுதல் என்று தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஒரு எதேச்சாதிகார அரசு. ஐ. நா வோ அல்லது சர்வதேச மனிதவுரிமைச் சபையோ அல்லது எந்த அமைப்போ இஸ்ரேலைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அமெரிக்காவும், இன்னும் சில மேற்கு நாடுகளும் பின்னால் இருக்கும் தைரியத்தில் இஸ்ரேல் இதனைச் செய்கிறது. கொத்தணிக்குண்டுகளை இஸ்ரேல் பாவிப்பது இதுவே முதல்த் தடவையல்ல. இதற்கு முன்னரும் பலமுறை இஸ்ரேல் இதனைப் பாவித்திருக்கிறது. இதனை அமெரிக்கா கொடுத்திருக்கலாம், அல்லது இஸ்ரேலே சொந்தமாகத் தயாரித்திருக்கலாம். முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, சாலை, புதுமாத்தளம், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் ஹேலோ கண்ணிவெடி அகற்றும் அமைப்பினரால் கண்டெடுக்கப்பட்ட 46 கொத்தணிக்குண்டுகளின் எச்சங்களும், கோதுகளும் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையே காட்டுகின்றன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அதிகளவு மக்களைக் கொல்லும் நோக்கத்திற்காகவே இவை வீசப்பட்டன. இன்று இஸ்ரேல் செய்வதும் அதுதான். அதிகளவு பலஸ்த்தீனர்களைக் கொல்லுதல். 

உண்மையான விடுதலைப் போராட்டம் ஒன்றினை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று அப்பாவிகள் இருபக்கமும் கொல்லப்படக் காரணமாகிவிட்டிருக்கிறார்கள். சர்வதேசத்தில் பலஸ்த்தீன மக்களுக்கு இருந்த சிறிது அனுதாபத்தினையும் ஹமாஸின் மிருகவெறி இன்று முற்றாக அழித்திருக்கிறது. பலஸ்தீனர்களை அழிப்பதில் சிறிதும் கவலை கொல்லாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுக்கு தனது மக்களைக் கொல்ல தானே வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது ஹமாஸ். ஒவ்வொரு யூத மகனின் இறப்பிற்கு 10 பலஸ்த்தினர்களைக் கொல்லும் இஸ்ரேலிய அரசு, தனது 1200 மக்களின் படுகொலைக்கும் எத்தனை ஆயிரம் பலஸ்த்தீனர்களின் உயிர்களைக் காவு கொள்ளப்போகிறது? 

இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சிற்குள்ளும், ஏவுகனை வீச்சுக்குள்ளும் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாரினதும், குழந்தைகளினதும் முகங்களில் தெரிவது வன்னியில் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கதறியபடி ஓடிய எனது உறவுகளே. ஹமாஸின் நரவேட்டையில் பலியான 1200 அப்பாவி இஸ்ரேலியர்களும், இஸ்ரேலின் குண்டுவிச்சில் கொல்லப்பட்டுவரும் பலநூற்றுக்கணக்கான பலஸ்த்தீனர்களும் செய்த தவறு என்ன? இக்கொலைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? 

இதில் நாம் எத்தரப்பையும் சார்ந்து கருத்தெழுததுவதென்பது தவறானது. ஏனென்றால், இருபக்கமும் கொல்லப்படுவது அப்பாவிகளே. 

அருமை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கந்தையாண்ணை சொல்வது சிறிலங்கன் ஆமியின் குரலாக என்காதுகளில் ஒலித்து தேன் வந்து பாயுது என் காதினிலே..

”புலிப்பயங்கரவாதிகள் சிவிலியன்களுக்குள் மறைந்திருந்து தாக்குகின்றனர்.. அதனால் அவர்களை அளிக்க அவர்கள் மறைந்திருந்த பாடசாலையின் மீது குண்டு வீசப்பட்டது..”

“புலிப்பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த சந்தையில் குண்டு வீசியதில் 80 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

“புலிப்பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின்மீது குண்டு வீசி தாக்கியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

நல்ல கருத்துக்கள்.

ஆனால் உக்ரேன் விடயத்தில் இந்த அணுகுமுறையும் கருத்துக்களும் ஏனோ மிஸ்ஸிங்?

என்ன தைரியம் இருந்தால் அவர்கள் செலன்ஸிகு வாக்கு போடுவார்கள்?

செலன்சியின் கொட்டத்தை அடக்க மரியுபோல் மக்களுக்கு அடி போடத்தான் வேண்டும்.

ஒரு பெரிய நாடு ரஸ்யாவின் பாதுகாப்பை தக்க வைக்க ரஸ்யா செய்வது சரிதான்…

இவ்வாறாக உக்ரேனில் நடந்த போர்குற்றங்கள் நியாயப்படுத்த பட்ட போதும் இதே “சிறிலங்கன் ஆமியின் குரல்” உங்கள் மனதில் ஒலித்தல்லவா இருக்க வேண்டும்?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

——-

காஸாவில் இயங்கி கொண்டிருந்த கடைசி மின் நிலையமும் எரிபொருள் தீர்ந்ததால் சேவையை நிறுத்தியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இணைப்புக்கு முதற்கண் நன்றி. கருத்துக்கணிப்பை வாசிக்கிறேன்.

சில முரண் கருத்துக்கள்.

1. உண்மையில் “வெறும்” 38% தான் ஹமாசுக்கும் இஸ்லாமிக் ஜிகாத்துக்கும் ஆதரவு என்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஹமாஸ் ஆயுத முனையில் அபாசின் பெட்டாவை காஸாவை விட்டு விரட்டிய பின் அது அங்கே ஒரு சர்வாதிகார ஆட்சியையே நிகழ்த்துகிறது. கிட்டத்தட்ட ஈபி யின் கீழ் நாம் 87-90 வரை இருந்த நிலை. இத்தோடு மேலே நீங்கள் சொன்ன மிக மோசமாக இஸ்ரேலால் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம் (1967 எல்லைக்கும் மேலான விஸ்தரிப்பு, அல் அக்சா மசூதி பிரச்சனை) போன்ற எண்ணக்கருவும் இருந்தும் கூட 38% தாம் அந்த மக்கள் ஹமாசுக்கு ஆதரவு என்றால் - நிச்சயம் அங்கே 62% (இது சந்திரிக்கா முதல் முறை வென்ற சதவீதம்- மிகபெரிய ஆதரவு நிலை) இஸ்ரேலுடன் சமாதானமாக வாழ விரும்பும் வழியை விரும்புவதாக கொள்ளலாம் அல்லவா?

38% க்காக 62% ஐயும் வழித்துடைப்பது அநியாயம்.

2. 100% ஹமாசை ஆதரித்தாலும் - சிவிலியன்களை இலக்கு வைப்பது தவறுதான். போர்குற்றம்தான். மனித குல விரோதச்செயல்தான். இதில் எந்த மாற்று கருத்தும் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்.

3. எப்படி ஹமாஸ் இஸ்ரேலை அழித்து முழு நிலமும் தமக்கு வேண்டும் என்று கேட்பது யுத்தத்தை நீடிக்கிறதோ - அதே போல இஸ்ரேலும் பலஸ்தீனத்தின் மிதவாதிகளை பலப்படுத்தாமல் -தனது தொடர் குடியேற்றத்தால் - கிழக்கு ஜெருசலேம் பற்றிய பிடிவாததால் (ஜெருசலேத்த்தை ஜெனிவான போல் இருபகுதியிம் பிரிக்கலாம்) - தீவிரவாதிகளை பலப்படுத்துகிறது என்பதும் உண்மை.

4. இஸ்ரேலை நெகிழ்வுதன்மையை காட்ட உன்னாத, மேற்கும் இதற்கு பங்காளியே.

4. அதே சமயம், இஸ்ரேலும், பலஸ்தீனியர்களும் ஒன்றுபட்டாலும் ஈரானும், ஹிஸ்புலாவும், சிரியாவின் அசாட்டும், ரஸ்யாவும் குழப்பி அடிப்பார்கள்.

இது முட்டு சந்து என்பதை விட, வெளியேறும் வழி இல்லாத maze (இதற்கு தமிழ் என்ன?).

ஆனால் ஒரு ஜனநாயக நாடாக. Euro வில் கால்பந்து விளையாடும் நாடாக, global west இன் அங்கமாக இருக்கும் இஸ்ரேலுக்கு - இதை கையாளும் முறை பற்றி ஒரு கடப்பாடு இருக்கிறது. 

இதில் முரண் கருத்து எதுவும் எனக்கு இல்லை. இஸ்ரேல் ஹமாஸ் போல நடந்து கொள்ளக் கூடாதென முதல் வரியிலேயே சொல்லி விட்டேன். இஸ்ரேலுக்கு, பழி வாங்குவதை விட அதிக சுமையான, பொறுப்பான விடயங்கள் உண்டு.

அந்த 38% பற்றி மேலதிக விளக்கம்:

"1948 இல் Al Nakba என்ற பலஸ்தீனப் பேரழிவின் பின் (இது இஸ்ரேலிடம் பலஸ்தீன நிலம் முதலில் பறி போன நிகழ்வு) நிகழ்ந்த ஒரு நல்ல விடயம் என்ன?" என்ற கேள்விக்குத் தான் ஹமாஸ் உருவானமை என 38% காசா மாதிரிகள் துலங்கள் காட்டியிருக்கிறார்கள். நேரடியாக ஹமாசை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்ற கேள்வியைக் கேட்கவில்லை.

இதை, கருத்துக் கணிப்பில் இருக்கும் இன்னும் சில கணிப்புகளோடு சேர்த்துத் தான், பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதென்ற கருத்தைச் சொல்கிறேன். இதன் அர்த்தம், காசாவில் இருக்கும் பலஸ்தீன மக்கள் ஹமாசின் குற்றப் பங்காளிகள் என்று சுட்டிக் காட்டுவதல்ல.

ஆனால், நேரம் கிடைக்கும் போது முழு ஆவணத்தையும் வாசித்தீர்களானால், பலஸ்தீனர்கள் தங்கள் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படுத்தாமல் இந்தச் சிக்கலில் இருந்து மீளவே முடியாதென்று நான் நம்புவதன் அடிப்படையை விளங்கலாம்: ஒரு சாம்பிள் - இரு- நாடுகள் தீர்வுக்கான ஆதரவு - மொத்த பலஸ்தீனர்களிடம் 28%, ஆயுதமே வழி என்று சொல்வோர் ~50%.

2008 இன் பின்னர் ஒரு தேர்தலும் நடக்காத நிலையில், இது போன்ற கருத்துக் கணிப்புகள் தான் பலஸ்தீன மக்களின் எண்ண ஓட்டத்தைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இதன் அர்த்தம், காசாவில் இருக்கும் பலஸ்தீன மக்கள் ஹமாசின் குற்றப் பங்காளிகள் என்று சுட்டிக் காட்டுவதல்ல.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

ஒரு சாம்பிள் - இரு- நாடுகள் தீர்வுக்கான ஆதரவு - மொத்த பலஸ்தீனர்களிடம் 28%, ஆயுதமே வழி என்று சொல்வோர் ~50%.

இதன் அடிப்படையாக நான் பார்ப்பது மிக மோசமான ஒரு பொய் பிரச்சாரத்தையே.

அதாவது இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் அந்த நிலத்தில் உரிமையே இல்லை, அவர்கள் வந்தேறிகள் என காலம் காலமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகிலும் போதிக்கப்படுகிறது.

இஸ்லாமிய உலகில் மட்டும் அல்ல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கூட, காஸாவிற்கு எத்தனை Z என்று தெரியாத ஆட்கள் கூட “யூதன் காணி கள்ளன்” என்பதாகவே இந்த பிரச்சனையை விளங்கி வைத்துள்ளனர்.

அத்தோடு எனது அனுபவத்தில் உலகில் எந்த மூலையிலும் பல முஸ்லிம் குடும்பங்களில் - யூதன் எங்கள் பரம எதிரி என்பது மிக சிறிய வயதில் இருந்து ஊட்டப்படுகிறது.

ஆகவே நித்தம் இஸ்ரேலும் நெருக்குவாராத்தில் வாழும் காஸா வாசிகள் இந்த மன நிலையில் இருப்பது எதிர்பார்க்க கூடியதே.

ஆனால் Camp David சந்திப்புக்கு பின்னான காலத்தில், பெரும்பாலன பலஸ்தீனியர்கள் இரெட்டை நாடு கொள்கையை ஏற்றார்கள் என்றே கருதுகிறேன்.

அப்படி ஒரு நிலையை மீள ஏற்படுத்தினால் - அமைதி சாத்தியமாகலாம்.

# hoping against hope

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கந்தையாண்ணை சொல்வது சிறிலங்கன் ஆமியின் குரலாக என்காதுகளில் ஒலித்து தேன் வந்து பாயுது என் காதினிலே..

”புலிப்பயங்கரவாதிகள் சிவிலியன்களுக்குள் மறைந்திருந்து தாக்குகின்றனர்.. அதனால் அவர்களை அளிக்க அவர்கள் மறைந்திருந்த பாடசாலையின் மீது குண்டு வீசப்பட்டது..”

“புலிப்பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த சந்தையில் குண்டு வீசியதில் 80 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

“புலிப்பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின்மீது குண்டு வீசி தாக்கியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”

இலங்கை பிரச்சனையை  இங்கே இழுப்பது சரியில்லை   அப்படி இழுக்காமல். பதில்கள் தர முடியாத???  மேலும் புலிகள் சிங்களப் பகுதியை நோக்கி 20 நிமிடங்களில் 5000 ரக்கேட்டுகளை கொண்டு தாக்கியதில்லை   இதே வேலையை புலிகளும். குறுகிய நேரத்தில்  செய்திருக்கக்கூடிய திறமையுடன் இருந்தவர்கள்  தலைவர் அனுமதிக்கவில்லை போலும்”  அல்லது இந்த முறையில் சிந்திக்கவில்லை   அப்படி இல்லாத நிலையில் வடக்கு கிழக்கு பகுதியில் சிங்களம் ஏன்  குண்டுகள் போட்டது  ??? அது தேவையற்றது எதிர்க்கிறேன். 

ஹமாஸ் 20 நிமிடங்களில் 5000 றக்கெற்க்களை ஏவியுள்ளது   இது மக்களை தவிர்ந்து ஏவப்படவில்லை  1000 பேரவரை  இறந்து விட்டார்கள்   இவர்கள் மக்கள் இல்லையா ???  இஸ்ரேல் மக்களை தவிர்த்து  குண்டுகள் போடுவது கடினம் குறைந்தது  5 பேர் கூட இறக்கலாம் இவர்கள் மக்கள் தான்  ஒருவர் இறந்து போனாலும் மக்கள் இறந்தது என்பார்கள்    நீங்கள் சொல்வது போல் இஸ்ரேல் போரிட்டால் கண்டிப்பாக தோல்வியடையும்  ஹமாஸ். சும்மா இருக்க போவதில்லை  பல்லாயிரக்கணக்கான இஸ்ரேல் மக்களை கொன்று குவிக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதன் அடிப்படையாக நான் பார்ப்பது மிக மோசமான ஒரு பொய் பிரச்சாரத்தையே.

அதாவது இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் அந்த நிலத்தில் உரிமையே இல்லை, அவர்கள் வந்தேறிகள் என காலம் காலமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகிலும் போதிக்கப்படுகிறது.

இஸ்லாமிய உலகில் மட்டும் அல்ல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கூட, காஸாவிற்கு எத்தனை Z என்று தெரியாத ஆட்கள் கூட “யூதன் காணி கள்ளன்” என்பதாகவே இந்த பிரச்சனையை விளங்கி வைத்துள்ளனர்.

அத்தோடு எனது அனுபவத்தில் உலகில் எந்த மூலையிலும் பல முஸ்லிம் குடும்பங்களில் - யூதன் எங்கள் பரம எதிரி என்பது மிக சிறிய வயதில் இருந்து ஊட்டப்படுகிறது.

ஆகவே நித்தம் இஸ்ரேலும் நெருக்குவாராத்தில் வாழும் காஸா வாசிகள் இந்த மன நிலையில் இருப்பது எதிர்பார்க்க கூடியதே.

ஆனால் Camp David சந்திப்புக்கு பின்னான காலத்தில், பெரும்பாலன பலஸ்தீனியர்கள் இரெட்டை நாடு கொள்கையை ஏற்றார்கள் என்றே கருதுகிறேன்.

அப்படி ஒரு நிலையை மீள ஏற்படுத்தினால் - அமைதி சாத்தியமாகலாம்.

# hoping against hope

இது அரைவாசிக் காரணம்.

மிகுதிக் காரணம், இது வரை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் பெற்றோரின் (முதல் 4 நாட்களிலேயே 260 குழந்தைகள் காசாவில் கொல்லப் பட்டன), பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உணர்வு ரீதியான எதிர் வினையாக இருக்கும். காலா காலமாக இத்தகைய இழப்புகளால் பாதிக்கப் பட்டோர் இதயத்தால் தான் யோசிப்பர், தலையால் அல்ல - அப்படி தலையால் யோசிக்கும் படி நாம் ஆலோசனை சொல்வதும் futile exercise என நினைக்கிறேன்.

அந்த காம்ப் டேவிட் (2000 ஆம் ஆண்டு) சமாதான முயற்சியின் பின்னர் பிறந்த ஒருவர் இப்போது 22 வயது இளைஞராக இருப்பார். வளர்ந்தவர்களே பொய்ச்செய்திகளால் ஆகர்சிக்கப் பட்டு எடுபட்டுப் போகும் இந்தக் காலத்தில், இத்தகைய இளைஞர்களை தம் வசம் இழுப்பது ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு மிக இலகு.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இது அவர்கள் கேட்டு பெற்றுக் கொண்டது     இல்லையா??? பழைய கதைகள் தேவையற்றது   20 நிமிடங்களில் 5000 ரக்கெட்கள் கொண்டு தாக்கினால். ...இஸ்ரேல். என்ன செய்ய முடியும்???  அமைதியாக இருக்கலாமா?? அப்படி இருந்தால்  காமாஸ். என்ன செய்யும்??? நாங்கள் பலசாலிகள்   எங்களை எவரும் அடிக்க முடியாது   என்பார்கள்   எனவே  எங்களை விட நீங்கள் பலமிக்கவர்களில்லை என்று சொல்ல வேண்டிய தேவை  இஸ்ரேலுக்குண்டு   அவர்களின் தாக்குதல் மிகவும் சரியானதாகும் 

மிகச் சரியாக சொன்னீர்கள் அண்ணா. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் மக்கள், பெண்கள், குழந்தைகளை பணயம் பிடித்ததோடு மக்களின் தலைகளையும் வெட்டி கொன்று இருக்கிறார்கள். இது மத ரீதியாக போதிக்கபட்ட ஜிஹாத் ஆகும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2023 at 23:45, goshan_che said:

இது ஒரு நம்பிக்கை என முன்பே கூறியுள்ளேன்.

சுருக்கமாக இந்த நம்பிக்கை யாதெனில் ஆபிரகாமுக்கும் அடிமை பெண்ணுக்கும் இஷ்மாயில் பிறந்த பின் எதிர்பாராத வயதில் ஆபிரகாமுக்கும் மனைவி சாராவுக்கும் மகனாக ஐசாக் பிறக்கிறார்.

இந்தக் கதை தெரியும். அதுவே எனது கேள்வியில் அடிப்படையும்.

அதில் கூட Hagar அடிமை இல்லை, வேலைக்காரி; சாராவே Hager ஐ அப்ரஹாமுக்கு உறவை ஏற்ட்டப்படுத்தி கொடுத்தார், ஏனெனில் நீண்ட காலம்  அப்ரஹாம் - சாராவுக்கு பிள்ளை இல்லாததால் என்ற விதத்தில் கதையும் இருக்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

இது அரைவாசிக் காரணம்.

மிகுதிக் காரணம், இது வரை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் பெற்றோரின் (முதல் 4 நாட்களிலேயே 260 குழந்தைகள் காசாவில் கொல்லப் பட்டன), பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உணர்வு ரீதியான எதிர் வினையாக இருக்கும். காலா காலமாக இத்தகைய இழப்புகளால் பாதிக்கப் பட்டோர் இதயத்தால் தான் யோசிப்பர், தலையால் அல்ல - அப்படி தலையால் யோசிக்கும் படி நாம் ஆலோசனை சொல்வதும் futile exercise என நினைக்கிறேன்.

அந்த காம்ப் டேவிட் (2000 ஆம் ஆண்டு) சமாதான முயற்சியின் பின்னர் பிறந்த ஒருவர் இப்போது 22 வயது இளைஞராக இருப்பார். வளர்ந்தவர்களே பொய்ச்செய்திகளால் ஆகர்சிக்கப் பட்டு எடுபட்டுப் போகும் இந்தக் காலத்தில், இத்தகைய இளைஞர்களை தம் வசம் இழுப்பது ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு மிக இலகு.

நீங்கள் சொன்ன மிகுதி அரைவாசி காரணத்துடன் முற்றிலுமாக உடன்படுகிறேன்.

7 minutes ago, Kadancha said:

இந்தக் கதை தெரியும். அதுவே எனது கேள்வியில் அடிப்படையும்.

அதில் கூட Hagar அடிமை இல்லை, வேலைக்காரி; சாராவே Hager ஐ அப்ரஹாமுக்கு உறவை ஏற்ட்டப்படுத்தி கொடுத்தார், ஏனெனில் நீண்ட காலம்  அப்ரஹாம் - சாராவுக்கு பிள்ளை இல்லாததால் என்ற விதத்தில் கதையும் இருக்கிறது.
 
அடிமையோ, வேலைக்காரியோ பெரிய வித்தியாசம் இல்லைத்தானே. 

ஓம்- நீங்கள் சொன்னது போல் சாரா/சேரா தான் பிள்ளை பேறு இல்லாத காரணத்தால் இந்த பெண்ணை, ஆபிரகாமுக்கு முடித்து கொடுத்துள்ளார். பின்னர் 90 சொச்ச வயதில்! சேராவுக்கு ஐசக் (தமிழில் இசக்கி?) பிறக்க லடாய் ஆரம்பமாகியுள்ளது.

எல்லாம் “கதை” தானே. இதை இட்டு பிடுங்குப்படாமல் இரு நாடுகளை, 1967 எல்லையோடு அமைத்து, ஒரு உலக பொது நகரமாக ஜெருசலேத்தை ஆக்கி பிரச்சனையை முடிக்கலாம். 

Easier said than done.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

——-

ஒரு இஸ்ரேலிய பெண்ணையும் அவரின் இரு பிள்ளைகளையும் விடுதலை செய்த ஹமாஸ்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

அதே! சிலர் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே கருத்து வைக்கின்றனர்! ஹமாஸ் வேறு சாதாரண பாலஸ்தீனிய குடிமக்கள் வேறு!!

நான் தெரிந்து தான் எழுதுகிறேன்  இப்படி நடக்க வேண்டும் என்று எழுதவில்லை   இப்படி தான் செய்வார்கள் நடக்கும் என்று கூறுகிறேன்   புலிகள் வேறு   தமிழ் மக்கள் வேறா??  நீங்கள் சொல்லுகிறபடி இஸ்ரேல்   ஹமாஸ். சண்டை  போர் செய்யப்போவதில்லை    மக்களை கொன்று தான்  ஆவார்கள்  நான்  மக்களை கொல்லுங்கள் என்று சொல்லவில்லை    மக்கள் இல்லாத இடத்தில்  தாக்குதல் செய் என்று சொல்வதை விட   குண்டுகள் போடதே என்று சொல்லலாம்  பாலஸ்தீனருக்கு பலம் இருந்தால்   இஸ்ரேலை விட பலமிருந்தால்.  இஸ்ரேல் படுமோசமாக தாக்குவார்கள்  இல்லையா?? அப்படியொரு நிலையில்  இந்த பாலஸ்தீன மக்கள்   ஹமாஸ் ஆக தான்  செயல்படுவார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

மிகவும் கவலைக்குரிய செய்திகள் வருகின்றன. ஆனால் எம்மை அழிக்க துணை போனவர்கள் எம்மை அழித்தவனுடன் கை குலுக்கியவர்கள் நாங்கள் உயிருடன் எரிந்து சாம்பல் ஆகியபோது பார்த்துக் கொண்டு ஊமையாக கைகட்டி நின்றவர்கள் இனியாவது இதனூடாகவாவது எம் அவலங்களையும் பேசட்டும். 

ஆமாம் ஆமாம்.. நாம் உக்ரைனுக்கு விசில் அடிப்பம்.. அவங்கள் (பலஸ்தீன்காரனும்.. இஸ்ரேல் காரனும்..) நமக்காகப் பேசுவாங்கள். 

நமக்கு தெரியவில்லை.. நமது தேவை.. வேலை. அதுதான் நம் தோல்விகளுக்கும் அடிமை வாழ்வுக்கும் முக்கிய காரணம்.

--------------------------------------------

பிபிசியே காமாஸை பயங்கரவாதிகளுன்னு.. சொல்லாதாம்.. அதையிட்டு.. பிரித்தானியாவில் எழுப்பட்ட சர்ச்சைக்கு பிபிசி விளக்கம்..

Why BBC doesn't call Hamas militants 'terrorists' - John Simpson

Government ministers, newspaper columnists, ordinary people - they're all asking why the BBC doesn't say the Hamas gunmen who carried out appalling atrocities in southern Israel are terrorists.

The answer goes right back to the BBC's founding principles.

Terrorism is a loaded word, which people use about an outfit they disapprove of morally. It's simply not the BBC's job to tell people who to support and who to condemn - who are the good guys and who are the bad guys.

We regularly point out that the British and other governments have condemned Hamas as a terrorist organisation, but that's their business. We also run interviews with guests and quote contributors who describe Hamas as terrorists.

The key point is that we don't say it in our voice. Our business is to present our audiences with the facts, and let them make up their own minds.

As it happens, of course, many of the people who've attacked us for not using the word terrorist have seen our pictures, heard our audio or read our stories, and made up their minds on the basis of our reporting, so it's not as though we're hiding the truth in any way - far from it.

Any reasonable person would be appalled by the kind of thing we've seen. It's perfectly reasonable to call the incidents that have occurred "atrocities", because that's exactly what they are.

No-one can possibly defend the murder of civilians, especially children and even babies - nor attacks on innocent, peace-loving people who are attending a music festival.

During the 50 years I've been reporting on events in the Middle East, I've seen for myself the aftermath of attacks like this one in Israel, and I've also seen the aftermath of Israeli bomb and artillery attacks on civilian targets in Lebanon and Gaza. The horror of things like that stay in your mind forever.

But this doesn't mean that we should start saying that the organisation whose supporters have carried them out is a terrorist organisation, because that would mean we were abandoning our duty to stay objective.

https://www.bbc.co.uk/news/world-middle-east-67083432

---------

யாழ் களத்தில் உருட்டித் தள்ளும் உருட்டல் மன்னர்கள் சிலருக்கும் இது விளங்க வேண்டும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நல்ல கருத்துக்கள்.

ஆனால் உக்ரேன் விடயத்தில் இந்த அணுகுமுறையும் கருத்துக்களும் ஏனோ மிஸ்ஸிங்?

என்ன தைரியம் இருந்தால் அவர்கள் செலன்ஸிகு வாக்கு போடுவார்கள்?

செலன்சியின் கொட்டத்தை அடக்க மரியுபோல் மக்களுக்கு அடி போடத்தான் வேண்டும்.

ஒரு பெரிய நாடு ரஸ்யாவின் பாதுகாப்பை தக்க வைக்க ரஸ்யா செய்வது சரிதான்…

இவ்வாறாக உக்ரேனில் நடந்த போர்குற்றங்கள் நியாயப்படுத்த பட்ட போதும் இதே “சிறிலங்கன் ஆமியின் குரல்” உங்கள் மனதில் ஒலித்தல்லவா இருக்க வேண்டும்?

தலைவரே எந்த நேரமும் யாழில் எழிதிக்கொண்டிருக்க நான் பென்சன் எடுத்த பின்புதான் முடியும்.. ஏதோ நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் எழுதுகிறேன்.. எத்தனையோ திரிகளுக்கு வாசிக்கும்போதே கருத்தெழுத தோன்றும் ஆனால் வேறு வேலை எதிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பலநேரங்களில் முடிவதில்லை. அப்புறம் அது அப்படியே மறந்து போயிருக்கும்.:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

———————

வெள்ளை பொஸ்பரசை வீசும் இஸ்ரேலின் செயல் மனிதகுல விரோதமானது.

ஆனால் இலங்கை வீசியதையே கண்டுக்காத நாடுகள் இஸ்ரேலை கண்டிக்கும் என்பது அப்பாவித்தனமா எதிர்பார்ப்பு.

பிகு

இதை சாட்டாக வைத்து ரஸ்யாவை வெள்ளை அடிக்க ஒரு சாரார் கிளம்பி உள்ளனர்.

உக்ரேனில் ரஸ்யாவும் வெள்ளை பொஸ்பரசை பாவித்தது. பாவிக்கிறது.

இதை இங்கே நானும் ரஞ்சித்தும் முன்பே வீடியோ ஆதாரத்தோடு எழுதி உள்ளோம்.

அப்போ கள்ள மெளனம் சாதித்த யாழ்கள ஊறவுகள் இப்போ எகிறி குதிக்கிறார்கள்.

வல்லரசுகள் மட்டும் அல்ல, சாதாரண யாழ்கள உறவுகள் கூட மனித உரிமை கோசத்தை தமக்கு ஏற்ற தருணத்துக்கேற்பவே பாவிக்கிறார்கள்.

காஸாவில் மட்டும் அல்ல உக்ரேனிலும் சாவது மனிதர்கள்தான்.

இந்த நூற்றாண்டின் மிக குரூரமான நகைச்சுவை இந்த டுவீட்.

அப்படியா எழுதுகிறார்கள் ? 
எல்லோரையும் பிடித்துக்கொடுக்க நீங்கள் இருந்தும் அப்படி எழுதுகிறார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை 
 
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, goshan_che said:

——-

ஒரு இஸ்ரேலிய பெண்ணையும் அவரின் இரு பிள்ளைகளையும் விடுதலை செய்த ஹமாஸ்.

இல்லை உது பொய்யென்று அறிவித்துள்ளார்கள், இஸ்ரேலியர்கள். உது 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாம்.

உதை வெளியிட்டது அல் ஜெசீரா...

மற்றது, கமாஸ் அறிவித்துள்ளது, இப்போதைக்கு எந்தவொரு பணையக்கைதிகள் பரிமாற்றமும் நடைபெறாது என்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நன்னிச் சோழன் said:

இல்லை உது பொய்யென்று அறிவித்துள்ளார்கள், இஸ்ரேலியர்கள். உது 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாம்.

உதை வெளியிட்டது அல் ஜெசீரா...

மற்றது, கமாஸ் அறிவித்துள்ளது, இப்போதைக்கு எந்தவொரு பணையக்கைதிகள் பரிமாற்றமும் நடைபெறாது என்டு.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து விடும் பொய்களை நம்புங்கோ...!

பைடன் கமாஸால் சிரச்சேதம் செய்யப்பட்ட பிள்ளைகளின் படம் பார்த்தா.. விமர்சனம் சொன்னார் என்ற வினவலை.. பிபிசி தொடுத்த போது.. பைடன் பார்க்கவில்லை.. பார்த்ததாகச் சொல்லப்பட்டது பொய்.. இஸ்ரேல் அதிகாரிகள் சொன்னதை தான் பைடன் தான் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார் என்று முழுப் பொய்யை சொல்லிவிட்டு இப்ப மறைக்க முக்குகிறார்கள்.

இஸ்ரேலே பொய்யிலே கட்டிவளர்க்கப்பட்ட ஒரு பொய் பித்தலாட்ட பிரச்சார நாடு. லங்காப்புவத்துக்கு வகுப்பெடுத்த நாடு.. அதைப் போய் நம்பிற ஆக்களை என்னென்பது..?!

இதே வழி வந்தது தான் உக்ரைனின் காமடிப் பீசும். 

White House walks back Biden comments, as president goes off script

8025c513-814f-4824-a231-6907106001a4.jpg

Anthony Zurcher

BBC North America correspondent

Joe Biden, like his predecessor, has a propensity to go off-script at times, with his staff scrambling to clarify or retract those remarks.

Mr Biden’s apparent aside during his short speech to Jewish leaders in Washington, expressing shock over photographs of Israeli children beheaded by Hamas attackers, is only the latest example.

The White House has since walked back Mr Biden’s statement, which had seemed to provide official US confirmation of particularly heinous brutality on the part of Hamas attackers. It thrust the president into the middle of the debate over the veracity of the claim and distracted somewhat from the focus of Mr Biden’s message – that he condemned the attack and stood fully in support of Israel.

Murdered children are a heartbreaking tragedy no matter how they were killed. But Mr Biden’s remarks complicate matters for the US as it seeks to aid and support Israel.

As the fog of war continues to swirl around this new conflict, any walking back or confusion risks aiding those who are trying to sow misinformation and cast doubt on events and atrocities that are verifiably true.

https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67073970

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்   வாழ்க ❤️ வளத்துடன்
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.