Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் : 1978 இல் அங்கு பயிற்சிக்கு சென்ற போதே உணர்ந்தேன் என்கிறார் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

11 OCT, 2023 | 04:04 PM
image
 
பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற  யதார்த்தத்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

"பாலஸ்தீன மக்களின் உணர்வுகளையும் ஆழ்மன விருப்பங்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். அங்கு நான் ஆயுதப்பயிற்சி எடுத்த வேளை அவர்களது போராட்டத்தில் கூட பங்கெடுத்திருக்கிறேன்.

எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பே கண்காட்சிகளை நடத்தி பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது. போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல.

ஒரு கையில் ஒலிவ் மரக்கிளையும் மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம். எது வேண்டும் என்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது. 

ஒலிவ் மரக்கிளை அங்கு சமாதானத்தின் சின்னம், அத்தகைய வழிமுறையே சிறந்ததென நானும் கருதியவன், ஆனாலும் அன்றே நான் நினைத்திருந்தேன் அவர்களது பயணத்திலும் மாற்றங்கள் தேவையென்று, பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு, பாலஸ்தீன மக்களும் இன்று எமது போராட்ட  படிப்பினைகளை வைத்து பயணிக்க வேண்டும்.

போர் மேகங்கள் அங்கு  சூழ்ந்துள்ளன, எந்த தரப்பும் பொது மக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும்.

இதேவேளை பாலஸ்தீன மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், நிரந்தர சமாதானம் அங்கு நிலவ வேண்டும், மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமென்ற உரிமம் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல எங்கும் நிலவ வேண்டும் என்று  தெரிவித்தார். 

அதேவேளை, பலஸ்தீன விவகாரத்தினை போன்றே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு சரியான வழிமுறையை முன்கூட்டியே - 30 வருடங்களுக்கு முன்னர் தன்னால் முன்மொழியப்பட்டபோது ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தற்போது, பேரழிவுகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆசிரியர் கலாசாலையின் பயிற்சி ஆசிரியர்களும் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு எமது எதிர்கால சந்ததியினரை சரியாக வழிநடத்த வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/166638

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் அவர்கள் இஸ்ரேல் பயிற்சி எடுத்தபடியால்தான் கடைசிவரை அவர் மீது செய்யப்பட்ட கொலை முயற்சிகளில் தப்பினார் போல. அமைச்சர் இஸ்ரேலுக்கு நன்றிக்கடன் பட்டவர். 

+++

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அமைச்சர் அவர்கள் இஸ்ரேல் பயிற்சி எடுத்தபடியால்தான் கடைசிவரை அவர் மீது செய்யப்பட்ட கொலை முயற்சிகளில் தப்பினார் போல. அமைச்சர் இஸ்ரேலுக்கு நன்றிக்கடன் பட்டவர். 

பலஸ்தீனத்தில்/லெபனானில் தான் பயிற்சி எடுத்தவர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்கள் யாரண்ணை! 

அப்போ ஏன் அண்ணை அப்பவே நீங்கள் ஆயுதத்தைக் கைவிடவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பின்னணி என்னவோ ஆனால் தெளிவாகத்தான் உரை ஆற்றி உள்ளார். 

6 hours ago, ஏராளன் said:

ஒரு கையில் ஒலிவ் மரக்கிளையும் மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம். எது வேண்டும் என்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது. 

அரபாத் அவர்களுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசும் கிடைத்தது என்று நினைக்கின்றேன். அவர் காலத்தின் பின்னால் நிலமைகள் வேறுபட்டுள்ளது. 

6 hours ago, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3

11 OCT, 2023 | 04:04 PM
 
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1. சுதந்திர ஊடகவியலாளர் நிமலராஜனை படுகொலை செய்த அமைப்பின்,

2. உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதலை மேற்கொண்டு ஊழியர்களை படுகொலை செய்த குழுவின்,

3. தமிழர் நிலங்களில் நிகழும் மண் கொள்ளைகளை நிகழ்த்தும் மண் மாபியாக்களின்,

4. தீவகங்களில் நிகழ்ந்த/ நிகழும் சட்ட விரோத செயல்கள் பலவற்றில் ஈடுபடும் ரவுடிகள் குழுக்களின்,

தலைவரும் மற்றும்

5. தினமுரசு ஆசிரியரும், ஈபிடிபியின் சித்திரவதை முகாம்களுக்கு பொறுப்பாளருமான அப்பிள் என்று சக உறுப்பினர்களால் அழைக்கப்பட்ட அற்புதனை கொன்றவர்களை ஏவியவருமான டக்கிளஸ், இன்று பாலஸ்தீனத்தை பற்றியும் சமாதானம் பற்றியும் ஆசிரியர் கலாசாலையில் அதிதியாக கலந்து கொண்டு  பேசி உள்ளார் என்பதை காணும் போது புல்லரிக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சி எடுத்து எவரையாவது நெஞ்சில் சுட்டதுண்டா?

3 minutes ago, விசுகு said:

பயிற்சி எடுத்து எவரையாவது நெஞ்சில் சுட்டதுண்டா?

அவருக்கு தமிழ் மக்களிப் முதுகில் குத்தித்தான் பழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பே கண்காட்சிகளை நடத்தி பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது. போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல.

உண்மையில் 70 களில் பலஸ்தீனர்களுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் இந்த “சிவப்பு” இயக்கங்களான ஈபி, ஈரோஸ் தமிழ் இனத்துக்கு ஒரு மாறாத பின்னடவை ஏற்படுத்தி விட்டுள்ளன.

சிறிமாவோ இஸ்ரேல் எம்பசியை மூடி - பாலஸ்தீன எம்பசியை கொழும்பில் திறந்துள்ளார்.

பின்னர் ஜே ஆர் வந்துதான் இஸ்ரேல் எம்பசியை மீள திறந்துள்ளார்.

அப்படியும் பிரேமதாச வந்து இஸ்ரேல் எம்பசியை மூடி அது 2000 ஆண்டுதான் மீளத்திறக்கப்பட்டுள்ளது.

70/80 களின் ஆரம்பத்தில் எம்மிடம் காசு வாங்கி கொண்டு பயிற்சி, இலங்கயிடம் இராஜதந்திர உறவு என நல்ல டபுள் கேம் ஆடியுள்ளர்கள் பாலஸ்தீனியர்களும் லெபனானியர்களும்.

அன்று முதல் ஊரிலும், புலத்திலும் பலஸ்தீனுக்காக தொண்டை தண்ணி வத்த கத்தி நாம் சாதித்தது ஏதும் இல்லை.

இந்த இடைபட்ட காலத்தில் இலங்கை இராஜதந்திர உறவை முறித்த நிலையில், இஸ்ரேலை அணுக எமக்கு வாய்பிருந்தும், அணுக ஒரு முயற்சி கூட எடுத்ததாக தெரியவில்லை.

புலம் பெயர் தேசத்தில் கூட தமிழ்ஸ் இன் சொலிடாரிட்டி வித் பாலஸ்டைன் என இத்து போன ஒரு பேனரை தூக்கி கொண்டு போய் நிண்டு, மிகவும் பலம் வாய்ந்த முழு யூத இனத்தினதும் வெறுப்பை சம்பாதித்ததுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பு

பலஸ்தீன் -இலங்கை உறவு பற்றிய ஒரு கட்டுரையும் - அதில் இருந்து ஒரு சிறு துளியும் கீழே.

நாம் பலஸ்தீன், பலஸ்தீன் என ஆதரவு கொடுத்தபடி இருக்க அவர்கள் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இலங்கை அரசை காப்பாற்றியுள்ளார்கள்.

For its part, the PA has supported Sri Lanka for many years in UN committee sessions in Geneva devoted to human rights and discussions of accusations about the role played by the Sri Lankan government and army in the war against the Tamil Tigers. In September 2009, a series of discussions between the Sri Lankan Ambassador to Palestine and al-Malki and his deputy were held with the intention of raising money from the Arab League for Sri Lanka.

https://www.inss.org.il/publication/the-palestinian-cause-in-the-international-arena-the-case-of-sri-lanka/

அதேபோல் இலங்கை-பலஸ்தீன் உறவை சொல்லும் மேலதிக பதிவுகள்.

நன்றி @ரஞ்சித்

https://www.tamilguardian.com/content/abbas-hails-rajapaksas-success-palestinian-ties-colombo

https://www.tamilguardian.com/content/abbas-sends-‘heartfelt-congratulations’-rajapaksa-behalf-palestine

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

புலம் பெயர் தேசத்தில் கூட தமிழ்ஸ் இன் சொலிடாரிட்டி வித் பாலஸ்டைன் என இத்து போன ஒரு பேனரை தூக்கி கொண்டு போய் நிண்டு, மிகவும் பலம் வாய்ந்த முழு யூத இனத்தினதும் வெறுப்பை சம்பாதித்ததுதான் மிச்சம்.

இல்லை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இஸ்ரேலுடன் தொடர்பு கொள்ள சில முயற்சிகளை எடுத்தது, ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )வரலாற்றை விட்டு விடாத யூதர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் அது போன்ற முயற்சிகள் எடுபடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பகிடி said:

ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )

இது எனக்கு புதிதாக உள்ளது? விளக்கமாக சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பகிடி said:

இல்லை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இஸ்ரேலுடன் தொடர்பு கொள்ள சில முயற்சிகளை எடுத்தது, ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )வரலாற்றை விட்டு விடாத யூதர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் அது போன்ற முயற்சிகள் எடுபடவில்லை.

இப்போதும்  தமிழர்கள் பாலஸ்தீனத்துக்குத்தான். ஆதரவு   இஸ்ரேலுக்கு எதிர்ப்பு   இலங்கை தமிழருக்கு  எக்காலத்திற்கும் எந்த நாடும் உறுதியாக ஆதரவு வழங்கப்போவதில்லை   ஆனால் முஸ்லிம் என்ற அடிப்படையில் பாலஸ்தீனத்துக்கு  பல நாடுகள் ஆதரவு உறுதியாக என்றும் உண்டு” 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

இல்லை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இஸ்ரேலுடன் தொடர்பு கொள்ள சில முயற்சிகளை எடுத்தது, ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )வரலாற்றை விட்டு விடாத யூதர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் அது போன்ற முயற்சிகள் எடுபடவில்லை.

1 hour ago, goshan_che said:

இது எனக்கு புதிதாக உள்ளது? விளக்கமாக சொல்ல முடியுமா?

ஐயா பகிடி,

புதிர போட்டு போனா எப்படி?🤣

நீங்கள் பண்டை காலம் எண்டது 70,80 களையா? அல்லது மன்னர் காலத்தையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )வரலாற்றை விட்டு விடாத யூதர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் அது போன்ற முயற்சிகள் எடுபடவில்லை.

இது புதிது.

அனால் கேரளத்தில் யூதர் அடி  இருக்கிறது இவர்கள் பேசும் யூத -மலையாளம் தமிழுக்கு கிட்ட என்றும் கேள்வி  (மருவிய மலையாளம்மா ஆக இருக்க வாய்ப்பு),

இது புதிது.

அனால் கேரளத்தில் யூதர் அடி  இருக்கிறது இவர்கள் பேசும் யூத -மலையாளம் தமிழுக்கு கிட்ட என்றும் கேள்வி  (மருவிய மலையாளம்மா ஆக இருக்க வாய்ப்பு)   

Caldwell போன்ற மொழியில் லாளர்களும் சொல்லி இருக்கிறர்கள்,  விவிலிய, விவிலியதுக்கு பின்னான Hebrew இல் தமிழ் சொற்கள் இருக்கின்றன என்று.

கொழும்பிலும் யூத அடி சிறு சமூகம் இருக்கிறது. 

எந்த காலம்? எந்த புவியியல் இடத்தில் பிரச்சனை? 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம். இவர் எடுத்த பயிற்சியை வைச்சு அடிச்சாரே ஒரு அடி காரைநகர் சிங்கள கடற்படை முகாம் தகர்ந்து.. தமிழீழம்.. கிடைச்சதெல்லோ. அதை எல்லாரும் மறந்திட்டாங்கப்பா.  அப்பவே நினைச்சிருப்பார்... பலஸ்தீனத்தில் கமாஸ் உருவாகி.. இப்படி இஸ்ரேலின் திட்டமிட்ட குடியேற்றகாரர்கள் மீது பாயும் என்று.

ஆனால்.. இவர் பலஸ்தீனத்தில் எடுத்த பயிற்சியை வைச்சு.. சொந்த மண்ணில் சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களை திறந்து வைப்பதிலும் புத்த கோவில்களில் வழிபாடு செய்வதிலும் குறியாக இருக்கிறார். இதனை எந்த பலஸ்தீனக்காரனும் செய்யமாட்டான். இவர் போன்ற பதவிக்கு ஆசைப்பட்டு எதிரி காலடியில் தவம் கிடக்கும் போலி அமைச்சர்கள் தான் செய்ய முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மன்னர் காலத்தையா?

ஒரு முறை மத்தியதரைக் கடல் ஊடாக செல்ல வேண்டிய தேவை ஈழத்து அரசனுக்கு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அவனும் ஈழதமிழர் படையும் கடலில் தத்தளித்தனர் அப்போது  அங்கே வந்த  பலஸ்தீனர்கள் அவர்களை அரவணைத்து காப்பாற்றி ஆமை கறி விருந்தும் கொடுத்து ஈழத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த யூதர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு வன்மம் தோன்றிவிட்டது.

இப்படியிருக்குமோ.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சொல்லவேண்டியது - இப்பொது Jews /  Hebrew பிரிக்க முடியாதது. 

அனால், இஸ்ரேல் ஏ எவர் Jew என்பதில் தடுமாற்றம் அல்லது தெளிவில்லை.

ஏனெனில், ஆப்பிரிக்காவில் குடிவரவு செய்தவர்களுக்கும், ஐரோப்பாவில் இருந்து குடிவரவு செய்தற்களுக்கும்  இஸ்ரேல் ஒரே தன்மையாக பரிசோதிக்கவில்லை என்றே நான் அறிந்தது.

(எவராவது வேறு விதமாக அறிந்து இருப்பின் தெரிய படுத்தவும்)
 
ஆகவே, முன்பு, Hebrew, Jew என்று அல்லது அவர்களின் மூதாதையர்  என்று கருத்தப்படாதவர்களால் பாவிக்கப்பட்டு இருக்கலாம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த வீட்டுக்குள்ள ஆயிரம் பொட்டுக்கேடு, அதை தீர்க்க வழியில்லை, பதவிக்காக சொந்த இனத்தை பலிகொடுத்துக்கொண்டு, தவறை சுட்டிக்காட்ட பயந்து கொண்டு, மற்ற நாடுகளுக்கு பாடம் எடுப்பது தங்களை சுத்தம் என்று காட்டுவதற்கன்று வேறொன்றுமில்லை. நிறைகுடம் தழம்பாது, குறைகுடம் எப்போதும் தழம்பிக்கொண்டே இருக்கும். இதுதான் கனடாவுக்கு எதிராக அறிக்கை விட்ட மேதாவிகளின் எண்ணமும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

பயிற்சி எடுத்து எவரையாவது நெஞ்சில் சுட்டதுண்டா?

கடைசிவரை அவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் தப்பித்தாரே. எடுத்த பயிற்சிக்கு அது போதாதா?

சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளை பார்வையிட சென்றபோது தாக்குதலுக்கு உள்ளாகி தப்பி பிழைத்ததாக செய்தி பார்த்து ஞாபகம் உள்ளது.

4 hours ago, பகிடி said:

இல்லை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இஸ்ரேலுடன் தொடர்பு கொள்ள சில முயற்சிகளை எடுத்தது, ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )வரலாற்றை விட்டு விடாத யூதர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் அது போன்ற முயற்சிகள் எடுபடவில்லை.

நீங்கள் தொடர்பு எடுக்க மொசாட் விடுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

ஆனால் பண்டைய காலத்தில் தமிழ் முன்னோர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த பிரச்சனையை நாம் மறந்தாலும் ( அல்லது இல்லை என மறுத்தாலும் )வரலாற்றை விட்டு விடாத யூதர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதால் அது போன்ற முயற்சிகள் எடுபடவில்லை.

ஓர் அரிய உலோகத்தில்  தொழில் சார் புலமை, திறமை கொண்ட குறிப்பிட்ட ஓர் தமிழ் சாதியோடு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

GIMG-4742.jpg

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியர் 1978 க்குப் பின் பலஸ்தீனப் பக்கம் தலை வைச்சே படுத்திருக்கமாட்டார். இதில தான் அரபாத்துக்கே வகுப்பெடுத்தன் என்று அளந்து விடுவதில்.. அவருக்கு அவரே சிறந்தவர் பாருங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nedukkalapoovan said:

குத்தியர் 1978 க்குப் பின் பலஸ்தீனப் பக்கம் தலை வைச்சே படுத்திருக்கமாட்டார். இதில தான் அரபாத்துக்கே வகுப்பெடுத்தன் என்று அளந்து விடுவதில்.. அவருக்கு அவரே சிறந்தவர் பாருங்கோ. 

சந்திரிகா ஆடசியில் யாசீர் அராபத்தை இலங்கைக்கு அழைத்து இருந்தார்கள் 
அப்போ இவர் விளாசின விலாஸை கேட்டு டின்னருக்கு இவரையும் அழைத்தார்கள் 
இவர் அரபாத் முன்பாக நாங்கள் முன்பு பாலஸ்தீனத்தில் பயிற்சி எடுத்தோம் என்று சொல்ல 
அரபாத் அப்படி நாம் யாருக்கும் பயிற்சி கொடுக்கவில்லை என்றுவிட்டு போனார் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

சந்திரிகா ஆடசியில் யாசீர் அராபத்தை இலங்கைக்கு அழைத்து இருந்தார்கள் 
அப்போ இவர் விளாசின விலாஸை கேட்டு டின்னருக்கு இவரையும் அழைத்தார்கள் 
இவர் அரபாத் முன்பாக நாங்கள் முன்பு பாலஸ்தீனத்தில் பயிற்சி எடுத்தோம் என்று சொல்ல 
அரபாத் அப்படி நாம் யாருக்கும் பயிற்சி கொடுக்கவில்லை என்றுவிட்டு போனார் 

இதை அரபாத்திற்கும், சந்திரிகாவிற்கும் இடையே நின்று கொண்டிருந்த விருந்துக்கு பிரதம விருந்தினராக அடைக்கப்பட்டிருந்த மருதர் கேட்டு, வாயில் ஒரு புன்முறுவலை தவழ விட்டார்🤣.

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு முறை மத்தியதரைக் கடல் ஊடாக செல்ல வேண்டிய தேவை ஈழத்து அரசனுக்கு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அவனும் ஈழதமிழர் படையும் கடலில் தத்தளித்தனர் அப்போது  அங்கே வந்த  பலஸ்தீனர்கள் அவர்களை அரவணைத்து காப்பாற்றி ஆமை கறி விருந்தும் கொடுத்து ஈழத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த யூதர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு வன்மம் தோன்றிவிட்டது.

இப்படியிருக்குமோ.

வாய் விட்டுச்சிரித்தேன்.

8 hours ago, Kadancha said:

ஓர் அரிய உலோகத்தில்  தொழில் சார் புலமை, திறமை கொண்ட குறிப்பிட்ட ஓர் தமிழ் சாதியோடு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். 

கொஞ்சம் பொறுமை கடஞ்சா. 

முதலில் “பண்டைய” என பகிடி என்னத்தை சொன்னார் என பார்ப்போம்.

தெற்காசியாவில் இதுவரை யூதர் என ஏற்று கொள்ளபட்ட குழுக்கள் எல்லாம் யேசு பிறப்பின் பின் இஸ்ரேலில் இருந்து இடம் பெயர்ந்தோரே.

ஆனால் யேசு ஒரு காஸ்மீரி இப்படியாக ஒரு கதை உள்ளது. புத்தகமும் உள்ளது. முன்னர் யாழில் இதை பற்றி உருட்டியுள்ளேன்.

பகிடி எதை சொல்கிறார் என பார்ப்போம்.

நான் நினைக்கிறேன் 1970/80 ஐதான் சொல்கிறார் என.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.