Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டு வந்தவர் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டு வந்தவர் பேட்டி

இஸ்ரேல் vs பாலத்தீனம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 2 பேரை இன்று அதிகாலை விடுவித்தது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர் மற்றும் 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர். ஆனால் இவர்களது கணவர்கள் இன்னும் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள். இதன் மூலம் ஹமாஸ் விடுவித்திருக்கும் பணயக் கைதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது.

அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பேர் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களை ‘பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில்’ ஒளித்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

இதுவரை 4 பணயக்கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் இயக்கத்தினர் தாங்கள் கடத்தி சென்றவர்களில் தாய்-மகள் இரண்டு பேரை அக்டோபர் 20ம் தேதி விடுவித்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியது. அதன் தொடர்ச்சியாக, இன்று 2 வயது முதிர்ந்த பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. அவர்கள் 79 வயதான நூரித் கூப்பர், 85 வயதான யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் ஆகியோர் ஆவர்.

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பின்னர், யோஷேவேத் லைஃப்ஷிட்ஸ் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,JENNY YERUSHALMI, ICHILOV HOSPITAL

சுரங்கப் பாதை நெட்வொர்க் எப்படி உள்ளது?

கடந்த இரண்டு வாரங்களாக ஹமாஸ் பிடியில் இருந்த அவர், தனது அனுபவங்களை செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

கிப்புட்ஸில் இருந்து மோட்டார் சைக்கிளில் தன்னை ஹமாஸ் கடத்திச் சென்றதாக அவர் கூறினார். ஒரு கதவு வழியாக காசாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது பல இடங்களில் காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறினார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமும் இருந்தது.

ஹமாஸ் போராளிகள் அவரை எப்படி தடிகளால் தாக்கினார்கள் என்று அவர் கூறினார். எல்லையில் வேலி அமைப்பதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் பல கோடி ரூபாயை செலவிட்டிருப்பதாகவும் ஆனால் அது ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதைத் தடுக்கவில்லை என்றும் லிஃப்ஷிட்ஸ் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், லைஃப்ஷிட்ஸின் மகள் ஷரோன், ஈரமான வயல்களில் பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டிய கட்டாயம் அவரது தாய்க்கு ஏற்பட்டதாகக் கூறினார்.

ஹமாஸ் ஒரு பெரிய நிலத்தடி சுரங்கப் பாதை வலையமைப்பை தயார் செய்துள்ளதாக ஷரோன் கூறினார். ஷரோன் இந்த சுரங்கங்களை சிலந்தி வலையுடன் ஒப்பிட்டார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

உணவு, சிகிச்சை, பாதுகாப்பு எப்படி?

ஹமாஸ் போராளிகள் தனது தாயின் நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை கூட எடுத்துச் சென்றுவிட்டதாக லைஃப்ஷிட்ஸின் மகள் கூறினார். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கியதும், அங்கிருந்தவர்கள், தாங்கள் குர்ஆனை நம்புகிறோம், அதனால் அவளுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

லைஃப்ஷிட்ஸ் மற்றும் 24 பணயக்கைதிகள் சுரங்கப் பாதைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பணயக் கைதிகள் சுத்தமான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உறங்குவதற்கு மெத்தைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

"இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவரைக் கண்காணிக்க ஒரு மருத்துவர் வருவார். காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது காயமடைந்த பணயக்கைதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஐந்து பணயக் கைதிகளையும் கண்காணிக்க ஒரு காவலர் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

சுரங்கப்பாதையில் தங்கியிருந்தபோது, அவருக்கும் அவரது குழுவினருக்கும் வெள்ளைப் பாலாடைக்கட்டி மற்றும் வெள்ளரிகள் உணவாக வழங்கப்பட்டதாக லைஃப்ஷிட்ஸ் கூறினார். அதே உணவையே ஹமாஸ் போராளிகளும் சாப்பிட்டனர்" என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நரகத்திற்கு சென்று வந்தது போல் இருந்தது"

லைஃப்ஷிட்ஸ் தாம் நரகத்துக்குச் சென்று வந்தது போல் இருந்ததாக ஹமாஸ் பிடியில் இருந்ததைப் பற்றித் தெரிவித்தார்.

ஹமாஸ் துப்பாக்கிதாரிகளால் மோட்டார் சைக்கிள்களில் தான் கடத்திச் செல்லப்பட்டதை விவரிக்கும் போது, தான் நரகத்தில் இருந்ததாக கூறுகிறார்.

மற்ற பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதை தனது நோக்கமாக இருக்கும் என்று விடுவிக்கப்பட்ட லைஃப்ஷிட்ஸின் மகள் ஷரோன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cx7wx8pynzqo

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

உணவு, சிகிச்சை, பாதுகாப்பு எப்படி

நன்றாகத் தான் கவனித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கியதும், அங்கிருந்தவர்கள், தாங்கள் குர்ஆனை நம்புகிறோம், அதனால் அவளுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம் என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

நாங்கள் குர்ரானை நம்புகிறோம். ஆதலால் எந்த தீங்கும் செய்ய மாட்டொம் என்று கூறினார். 

என்ன அழகான வார்த்தைகள். செய்ததே கொலை , கொள்ளை , கட்பளிப்பு. குர்ரானில் அப்படி சொல்லவில்லையே . யூதர்கள், கிறிஸ்தவர்கள், காபிர்களை கொலை செய்ய அல்லவா சொல்லி இருக்கிறது. அந்த ஜிஹாதி குரானை சரியாக வாசிக்க வில்லை  போலும். அல்லது ஒழுங்காக மதராசாவிட்கு போகாமல் இருந்திருக்கலாம். பாவம் பிள்ளை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

கற்ப்ழிப்பும், உயிரோடு எரித்ததாக கூறப்பட்ட தகவல்கள் நம்பகத்தன்மையற்றவை. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு திரியில் எழுதினேன்.  ஹமாஸ் பரப்புரையில் வெல்கிறது என.

இங்கேயும் அதுவே நடக்கிறது. 👇

18 hours ago, ஏராளன் said:

ஆனால் இவர்களது கணவர்கள் இன்னும் ஹமாஸ் பிடியிலேயே இருக்கிறார்கள்.

👆🏼 இந்த பெண்கள், அவர்களின் கணவர்கள் இன்னும் ஹமாஸ்சிடம் இருக்கும் போது, இதை விட வேறு விதமாக சொல்லுவார்கள் என எதிர்பார்ப்பது அப்பாவித்தனமா எதிர்பார்ப்பு.

ஹமாஸ் ஒரு பெண்ணின் காலை முறித்து, தலையை கொத்தி, நிர்வாணமாக்கி டபிள் கேப்பில் போட்டு ஊர்வலம் போன அமைப்பு. இதற்கு மறுக்க முடியாத வீடியோ ஆதாரம் உள்ளது.

மூன்று கிழமையில் இந்த அமைப்பு பெண்கள் விடயத்தில் கண்ணியம் மிக்கதாக மாறிவிட்டதாம் - நம்பட்டாம்🤣.

அடிப்படை இஸ்லாமியவாதிகளின் பெண்கள் மீதான அணுகுமுறை உலகறிந்த விடயம். 

இது மேற்கில் இருக்கும் KFCக்கு வாக்கு போடும் கோழிகளை குறிவைத்து ஹமாஸ் எடுத்துள்ள பிரச்சார நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஊடகங்கள் எங்களை பயங்கரவாதிகள் என கூவி வெற்றி அடைந்தது போல் கமாசை செய்ய முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

மேற்கு ஊடகங்கள் எங்களை பயங்கரவாதிகள் என கூவி வெற்றி அடைந்தது போல் கமாசை செய்ய முடியவில்லை. 

தமிழர்களாகிய நாம் தனியே, ஐ.நா உட்பட அனைவராலும் கைவிடப்பட்டோம். ஆனால் காஸா அனைவராலும் கவனிக்கப்படுகிறது.கமாஸை அழிக்க துணைபுரிவோம் என்ற ஒரு உறுதிமொழியைத்தானும் பெற முடியாது அன்ரனி பிளிங்கனும், யோ பைடனும் அரபுலகிலிருந்து வெறும்கையோடல்லவா போயிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்ப்ழிப்பு  உயிரோடு எரித்தல் முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடத்தபடும் கொடுமைகள் பல வெளிவருவது இல்லை முறைபாடுகள் செய்ய முடியாத காரணத்தால்.

1 hour ago, goshan_che said:

இந்த பெண்கள், அவர்களின் கணவர்கள் இன்னும் ஹமாஸ்சிடம் இருக்கும் போது, இதை விட வேறு விதமாக சொல்லுவார்கள் என எதிர்பார்ப்பது அப்பாவித்தனமா எதிர்பார்ப்பு.

இஸ்ரேலுக்குள் சென்று ரொக்கட் குண்டுகள் வீசியம் சுட்டும் கொலைகள் செய்த போது  79 வயதான  85 வயதான  மூதாட்டி பெண்களையும் கூட மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தடிகளால் தாக்கி, நகைகள் கைக்கடிகாரங்களை கொள்யைடித்து வயதான மூதாட்டிகளை நன்றாகத் தான் கவனித்துள்ளனர் ஹமாஸ் உத்தமர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இசுலாமியர்கள் தங்கள் பெண்களையே எப்படி நடாத்துவார்கள் என்பது உலகு அறிந்த விடயம். இதில் எதிரி நாட்டு பெண்களை...?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மேற்கு ஊடகங்கள் எங்களை பயங்கரவாதிகள் என கூவி வெற்றி அடைந்தது போல் கமாசை செய்ய முடியவில்லை. 

நான் அறிய மேற்கின் முண்ணனி ஊடகங்கள் புலிகளை rebels, militants, armed group போன்ற பதங்களை பாவித்து விளிப்பதே வழமை.

மேற்கு நாடுகள்தான் பயங்கரவாத அமைப்பு என பட்டியல் இட்டன.

எம்மை வெற்றி அடைந்தது இலங்கை. அதற்கு துணை போனவை மேற்கு நாடுகளும், கிழக்கு நாடுகளும்.

ஊடகங்கள் அழிவுகளின் போது பாராமுகமாக இருந்தன, ஆனால் இலங்கை சார்பில் மேற்கு ஊடகங்கள் பரப்புரை செய்து புலிகளை பயங்கரவாதிகள் என கூவின என்பது ஓவர் கற்பனை. 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலியர்கள் இறந்து கிடந்த ஹமாஸ் போராளிகளை நடத்திய விதம் ஒருவேளை பெண் ஹமாஸ் போராளி ஒருவர் இஸ்ரேலியர்களின் கையில் கிடைத்திருந்தால்.. ஹமாஸை விட மோசமாகவே நடத்தி இருப்பர் என்பதற்கு நல்ல சான்று. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பெண்களை சொறீலங்கா இனக்கொலைப் படை நடத்திய விதம்.. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க மற்றும் மேற்குலகம்.. எத்தகைய இராணுவப் பயிற்சிகளை ஏற்றுமதி செய்கிறது என்பதற்கு நல்ல சான்று. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

ஊடகங்கள் அழிவுகளின் போது பாராமுகமாக இருந்தன, ஆனால் இலங்கை சார்பில் மேற்கு ஊடகங்கள் பரப்புரை செய்து புலிகளை பயங்கரவாதிகள் என கூவின என்பது ஓவர் கற்பனை

இதிலிருந்து கனடாவில் இருந்து வெளிவரும்  குளோபல் மெயில் எனும் இனவாத பத்திரிகையின் கட்டுரைகளும் அதன் பின்னோட்டங்களும் வாசிக்கவில்லை என்பது புரிகிறது.
இரண்டாவதி சி என் என் உய்டஜம் கொழும்ம்பில் சென்று ஈபிடிபி ஐ பேட்டி கண்டது அடுத்த உதாரணம்.
பி பி சி தமிழ் சொல்லவே தேவை இல்லை.

 கனடாவின் அப்போதைய அமைச்சராக இருந்த போல் மாட்டினை பாராளுமன்றத்தில் எப்படி. அழைத்தார்கள் என்பதை கனடா வாழ் தமிழர்கள் அறிவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

குளோபல் மெயில் எனும் இனவாத பத்திரிகையின் கட்டுரைகளும் அதன் பின்னோட்டங்களும் வாசிக்கவில்லை என்பது புரிகிறது.

நிச்சயமாக மெர்டோக் பாணியிலான பாக்ஸ், டெய்லி மெயில், குளோபல் மெயில் போன்ற இனவாத ஊடகங்களில் நான் மினெக்கெடுதில்லைதான்.

ஆனால் இவை மேற்கில் ஒரு அதி வலதுசாரிகள் வாசிக்கும் ஊடக குப்பைகளே.

ஆனால் நிச்சாயமா CNN, BBC போன்ற ஊடகங்கள் தாம் புலிகளை குறிக்கும் சமயம் (இன்னொருவரின் பேட்டியில் அவர் சொன்னதை அல்ல) அவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பதில்லை.

கீழே CNN LTTE, BBC LTTE ஆகிய பதங்களுக்குரிய கூகிள் தேடலை தந்துள்ளேன். போய் பார்த்தால் தெரியும் சுட்டியில் உள்ள கட்டுரைகள், செய்திகளில் என்ன விழிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது.

https://www.google.co.uk/search?q=cnn+ltte&sca_esv=576482781&source=hp&ei=5AY5ZfCdGrCahbIPxsWfiAc&oq=&gs_lp=EhFtb2JpbGUtZ3dzLXdpei1ocCIAKgIIADICECkyBxApGKABGAoyAhApMgIQKTICECkyAhApMgIQKTISECkYDRiABBixAxiDARhGGPsBMgIQKTICECkyBxApGKABGAoyAhApMgIQKTICECkyAhApMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQLhgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQLhgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDMhAQABgDGI8BGOUCGOoCGIwDSOENUABYAHABeACQAQCYAQCgAQCqAQC4AQHIAQCoAh4&sclient=mobile-gws-wiz-hp

 https://www.google.co.uk/search?q=bbc+ltte&sca_esv=576482781&ei=GAg5Zff3KLeDhbIP0oC2kAg&oq=bbc+ltte&gs_lp=EhNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwIghiYmMgbHR0ZTIGEAAYCBgeMgYQABgIGB4yCBAAGIoFGIYDMggQABiKBRiGAzIIEAAYigUYhgMyCBAAGIoFGIYDMggQIRigARjDBEjURFCxI1jvPnADeACQAQCYAWWgAeYFqgEDOS4xuAEDyAEA-AEBwgIIEAAYogQYsAPCAgUQABiiBMICCBAAGIkFGKIEwgIIEAAYBxgeGArCAgYQABgHGB7CAgsQABgHGB4Y8QQYCsICDRAAGIoFGLEDGIMBGEPCAgcQABiKBRhDwgIIEAAYigUYkQLCAgcQLhiKBRhDwgIIEAAYCBgHGB7iAwQYASBBiAYBkAYB&sclient=mobile-gws-wiz-serp

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட ஆரம்ப காலத்தில் எங்கள் ஊரில் நடந்த அலன் தம்பதிகள் கடத்தல் தான் நினைவுக்கு வருகிறது😂 (ஹமாசும் நம் ஆயுதக் குழுக்களும் ஒன்று எனச் சொல்லவில்லை).

இது ஒரு Psy-op அணுகுமுறை. கொஞ்சம் கொஞ்சமாக சிலரை விடுவித்து, தங்கள் காட்டுமிராண்டித் தனத்தை மறக்கடிக்கச் செய்யும் வேலை - ஏற்கனவே "இளகிய மனமுள்ள😎" சிலர் யாழில் விழுந்து விட்டனர் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிச்சயமாக மெர்டோக் பாணியிலான பாக்ஸ், டெய்லி மெயில், குளோபல் மெயில் போன்ற இனவாத ஊடகங்களில் நான் மினெக்கெடுதில்லைதான்.

ஆனால் இவை மேற்கில் ஒரு அதி வலதுசாரிகள் வாசிக்கும் ஊடக குப்பைகளே.

ஓமோம் .... ஆனால் சீமான் மேட்டர் என்டால் தட்ஸ் டமிழ், கிந்து தமிழ் மற்றும் அனைத்து கிசுகிசு தளம்கள் எழுதும் குப்பைகளையும் தேடி வாசித்து பத்தாதுக்கு யாழிலும் அந்த குப்பையை இணைப்பம்... மாமா கெட்டவனில்லை.. ஆனால் கேவலம் கெட்டவன்டி...😂

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓமோம் .... ஆனால் சீமான் மேட்டர் என்டால் தட்ஸ் டமிழ், கிந்து தமிழ் மற்றும் அனைத்து கிசுகிசு தளம்கள் எழுதும் குப்பைகளையும் தேடி வாசித்து பத்தாதுக்கு யாழிலும் அந்த குப்பையை இணைப்பம்... மாமா கெட்டவனில்லை.. ஆனால் கேவலம் கெட்டவன்டி...😂

யோவ் என்ன லந்தா🤣,

கிசு கிசு இருக்கு போடட்டோ எண்டு கேட்டு, சரி போடுங்கோ எண்டு கேட்ட பின் கிசு கிசு எண்டு சொல்லி போடுறதும், மேர்டோக் பத்திரிகைகள் சொல்லுவதும் ஒண்டா?

மேர்டோக் தளங்களில் அதிகம் மினெகெடுவதில்லை, ஆனால் செய்தி அறிய, விவாதத்தை ஊக்குவிக்க அங்கே இருந்தும் பதிவுகளை இணைத்துள்ளேன். கொரோனா காலத்தில் அதிக டெய்லிமெயில் லிங்ஸ் பதிந்தேன்.

தவிரவும் ஒத்த கருத்தையே பிரதிபலிக்கும் echo chamber இல் இருப்பதும் நம்மை உண்மையை அறிய விடாது.

நாம் எந்த செய்திதளத்தையும் கொஸ்பெல் உண்மைகள் (gospels truth) ஆக கருத வேண்டியது இல்லை.

எல்லாவற்றையும் வாசி, அத்தனையையும் அலசு, கேள்வி கேள். உன் புத்திக்கு சரி எனப்படுவதை ஏற்றுக்கொள் (எங்கேயோ கேட்டமாதிரி இருக்குமே). 

இந்த தெளிவு இருந்தால், குப்பை மேட்டிலும் மேயலாம், அங்கேயும் அரிதாக குண்டு மணிகளை பொறுக்கலாம்.

மேலே நுணாவுக்கு சொன்னது, இந்த குப்பை மேட்டில் புலிகளை பயங்கரவாதிகள் என சொல்வதை வைத்து, மேற்கு ஊடகங்கள் அப்படி சொல்வன என கூற முடியாது என்பதையே.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடித்து நிமிர்த்துவதற்காக இந்திய, இலங்கை படைகளை கொண்டவந்தாலும் ஹமாஸ் போன்ற முஸ்லிம் அமைப்புக்களின் பெண்கள் மீதான அணுகுமுறை உலகறியும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

கற்ப்ழிப்பும், உயிரோடு எரித்ததாக கூறப்பட்ட தகவல்கள் நம்பகத்தன்மையற்றவை. 

உயிரோடு எரித்த வீடியோவை நான் பார்த்தேன். அதை நம்புகிறேன். அதை பயங்கரவாதியாக்கள்தான் வெளியிட்டிருக்கிறார்கள். கட்பளித்ததை வீடியோ எடுத்தாலும் இன்னும் அவர்கள் வெளியிடவில்லை. அங்கு பணயக்கைதிகளாக பிடிக்கப்படடவர்கள் வந்த பின்னர் உறுதிப்படுத்தலாம். இறந்தவர்களின் மரண விசாரணைகளில் இது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹமாஸ், ISIS பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இசுலாமியர்கள் தங்கள் பெண்களையே எப்படி நடாத்துவார்கள் என்பது உலகு அறிந்த விடயம். இதில் எதிரி நாட்டு பெண்களை...?

அப்படி எல்லாம் இல்லை. பெண்களை தெய்வமாக மதிப்பவர்கள். எத்தனை பெண்கள் வந்தாலும் அத்தனை பெண்களையும் ஏற்றுக்கொண்டு காப்பாற்றுபவர்கள். அவர்களது தலைவரே செய்து காட்டி இருக்கிறார். அதையும் விட அதிகமாகவே கவனித்திருக்கிறார். நல்ல முன்மாதிரி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நாங்கள் சுட மாட்டோம் என ஹமாஸ் சொன்னார்கள். ஆனால், எங்கள் மகளைச் சுட்டு கொன்றுவிட்டனர்"

சாச்சியின் குடும்பம்

பட மூலாதாரம்,FAMILY HANDOUT

படக்குறிப்பு,

இந்தக் குடும்பத்தினர் அனுபவித்துக்கொண்டிருந்த வலி மற்றும் வேதனையை பேஸ்புக் மூலமாக முழுவதுமாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஒளிபரப்பினர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அன்னா ஃபோஸ்டர்
  • பதவி, பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

சாச்சி ஐதான் காஸாவிற்கு கடத்தப்பட்டபோது, அவரது கைகளில் அவர் மகளின் ரத்தம் படிந்திருந்தன.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட தனது 18 வயது மகள் மாயனைத் கீழே கிடத்திய பிறகு, சாச்சியின் கைகளில் படிந்திருந்த ரத்தத்தை கழுவக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

குண்டு வெடிப்பின் சத்தம் கேட்க, அவர் தனது உடலைக் கேடயமாகப் பயன்படுத்தி தனது இரண்டு குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்டிருந்ததால், அவரால் அவர் கைகளில் படிந்திருந்த ரத்தத்தை துடைக்க முடியவில்லை.

அந்த குடும்பத்தினர் அனுபவித்துக்கொண்டிருந்த வலி மற்றும் வேதனையை பேஸ்புக் மூலமாக முழுவதுமாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஒளிபரப்பினர்.

சாச்சியின் மனைவி கலி ஐதான் தற்போது தனக்கு நெருக்கமான நகல் ஒஸ் சமூகத்தினரிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று நகல் ஒஸ்.

அவரும் அவரும் குழந்தைகளும் கிப்புட்ஸில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அது அவருடைய வீடு இல்லை.

18 வயதான மாயன், தனது நான்கு வயதிலிருந்தே குடும்பத்துடன் வீட்டில் தான் வசித்து வந்தார். அந்த வீடு, அவர்கள் வளர்ந்த மற்றும் ஒன்றாக நினைவுகளை உருவாக்கிய வீடு. அவரது தம்பி மற்றும் சகோதரிகள் பிறந்த வீடு.

"அவள் எப்போதும் சரியாக இருப்பாள்," என்று அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் பிபிசியிடம் கூறினார்.

“அவள் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றாள். அவள் படிக்க விரும்பினாள், அவள் கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அவளுடைய பிறந்தநாளுக்கு புத்தகங்களைக் கேட்டாள்,” என்கிறார் அவரது பக்கத்து வீட்டுக்காரர்.

மாயன்

பட மூலாதாரம்,FAMILY HANDOUT

படக்குறிப்பு,

கைப்பந்து வீராங்கனையான மாயன், கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்தான் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

புளியமரங்களுக்கு அடியில் நிழலாடிய இடத்தில் அமர்ந்து, அந்த நாளின் வலியை விவரிக்க விரும்பவில்லை, அது இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது என்றாலும், அதனை தன் கணவருக்காக விவரிப்பதாகக் கூறினார்.

"எனக்கு அவர் திரும்ப வேண்டும். முழுமையாய், உயிருடன் இருக்க வேண்டும். எனக்கு அவர் இப்போது திரும்பி வர வேண்டும்,"என்றார் கலி.

அக்டோபர் 7 ஆம் தேதி, காஸாவில் இருந்து ராக்கெட் வெடிக்கும் என்று எச்சரிக்கும் சிவப்பு விளக்கு அலாரங்களின் ஒலியைக் கேட்டு அந்தக் குடும்பத்தினர் விழித்தனர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அன்று காலை, ஏதோ வித்தியாசமாக இருந்தது.

"அது அசாதாரணமானது மற்றும் மிகவும் தீவிரமானது," கலி பிபிசியிடம் கூறுகிறார்.

"அது அடுத்தடுத்து வெடித்தது. எங்களால் வெளியே சென்று மூச்சுவிடக்கூட முடியவில்லை. நாங்கள் எங்கள் வீட்டிற்குள்ளேயே எங்கள் வீட்டின் அறையை மூடிக்கொண்டோம்." என்றார் கலி

“சாச்சியும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இங்கே ஏதோ சரியில்லை என்று சொன்னோம், ஏதோ பயங்கரமாக இருந்தது. நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளோம் என்றும் நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கிப்புட்ஸின் குடியிருப்பு அமைப்பில் இருந்து எங்களுக்கு செய்திகள் கிடைத்தன. அவர்கள் எங்களை அமைதியாக இருக்கும்படியும் சொன்னார்கள், கிப்புட்ஸுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது." என நினைவு கூர்ந்தார் கலி.

தொடர்ந்து பேசிய அவர்,"அது ஒருபோதும் விருப்பமில்லாத ஒன்று என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது எப்போதுமே ஒரு கொடுங்கனவுதான். அதற்கு எப்போதும் அரசு மற்றும் பாதுகாப்பு படையினரிடம் தீர்வு இருந்தது. ஆனால், அது திடீரென்று ஒரு நாள் நிஜமானது. கொடுங்கனவு நிஜமானது,” என்றார் கலி.

கலி
படக்குறிப்பு,

தனது மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரைத் தடுக்க முற்பட்டபோது கொல்லப்பட்டதாக கலி தெரிவித்தார்.

அந்த நேரத்தில், தனது வீட்டிற்கு வெளியே ஏதோ வெடித்து, கண்ணாடி ஜன்னல்களை உடைத்தது எப்படி என்று கலி விவரிக்கிறார். அந்தநேரத்தில் அவர்களின் வீட்டிற்குள் காலடிச் சத்தமும் குரல்களும் கேட்டன. “நாங்கள் சுடவில்லை’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் ஒருவர் கத்தினார். ஆனால் அவர்கள் சுட்டார்கள்,”என்றார் கலி.

"சாச்சி கதவைப் பிடித்துக் கொண்டார், அவர்கள் அதைத் திறக்க விடவில்லை. அதில் பூட்டும் இல்லை, குழந்தைகள் அலறுகிறார்கள், அறைக்குள் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தோம். இருட்டாக இருந்தது, ஆனால் மாயன் புரிந்துகொண்டாள். அவர்களால் கதவை சிறிது திறக்க முடிந்ததை அவள் பார்த்தாள். அவள் மேலே குதித்து கதவைப் பிடிக்க சாச்சிக்கு உதவினாள்." எனக் கூறிக்கொண்டிருக்கும்போதே கலி அழுகத் தொடங்கினார்.

ஆனால், அவர் விவரிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அந்த தருணத்தை விவரிக்கிறார்.

"நாங்கள் சுடமாட்டோம்’ என்று கத்துகிறார்கள், பின்னர் அவர்கள் சுடுகிறார்கள். 'யாரை அடித்தது, யாரை அடித்தது?' என்று சாச்சி கத்தினான்."

"அது மாயன். அவள் அவன் அருகில் விழுந்தாள், பின்னர் ஹமாஸ் குழுவினரால் கதவைத் திறக்க முடிந்தது. அலறல் சத்தம் கேட்டது, அவர்கள் விளக்கை ஆன் செய்தனர். மாயன் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். நான் அவளைப் பரிசோதித்தேன், அவள் தலையில் அடிபட்டதை உணர்ந்தேன், அவள் படுகாயமடைந்திருந்தாள்."

"அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கத்தினார்கள். நாங்கள் குழந்தைகளிடம் 'அவர்களை பார்க்க வேண்டாம்' எனக்கூறி, நான் என் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றேன்."

ஷரோன்

பட மூலாதாரம்,INPHO

படக்குறிப்பு,

தாக்குதலின் போது 15 வயது சிறுமி ஷரோன் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்

"என் வீட்டைச் சுற்றி ஒரு போர் நடந்துகொண்டிருந்தது. அவர்கள்(ஹமாஸ் ஆயுதக்குழுவினர்) என் வீட்டிற்கு உள்ளே இருந்தார்கள்."

இரவு நேரத்தில் அணியும் உடையில் இருந்த சாச்சி, கலி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், யேல் மற்றும் ஷாசார், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு தரையில் அமர்ந்துள்ளனர்.

அவர்களை சிறைபிடித்தவர்களில் ஒருவர் கலியின் தொலைபேசியை எடுத்து, அவளது கடவுச்சொல்லைக் கேட்டு, பேஸ்புக் லைவில் குடும்பத்தைப் படம்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

அந்தக் காணொளியை பார்க்கவே வேதனையாக இருந்தது. சுமார் 26 நிமிடங்களுக்கு மேலாக அவர்களைச் சுற்றியும் ஹமாஸ் தாக்குதல் தொடர்வதால், ராக்கெட்டின் சைரன் சத்தங்கள் ஒலிக்க, அந்த குடும்பமே குனிந்து கிடந்தது. சுற்றியும் வெடிக்கும் வெடிச்சத்தங்களால் பயந்த குழந்தைகள், பெற்றோரின் கைகளைப்பற்றி கதறி அழுதுகொண்டிருந்தனர். இந்த நேரங்களில், இறந்த மாயனின் உடல் சில மீட்டர் தொலைவில் கிடந்தது.

"என் குழந்தைகள் விவரிக்க முடியாத வகையில் தைரியமாக இருந்தார்கள். அவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் பேசினார்கள், அவர்களால் எப்படி முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள், ஏன் சுட்டுக் கொன்றார்கள், ஏன் கொலை செய்கிறார்கள் என்று கேட்டார்கள். ஒருவேளை அதுதான் எங்களைக் காப்பாற்றியிருக்கலாம்?," என்றார் கலி.

"சாச்சி உடைந்துவிட்டார். அவர் தனது மகள் இறப்பதைக் கண்டார், அவள் தலையில் சுடப்பட்டு அவருக்கு அருகில் இறந்துவிட்டார். அவரது 18 வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவரது மகள், அவருடன் இல்லை. வீடு முழுவதும் பலூன்கள் மற்றும் வாழ்த்துகள், மற்றும் ... மற்றும் அவரது ரத்தம்," என்றார் கலி

இறுதியில், சாச்சியை எழுந்திருக்கச் சொன்னார்கள். அவரது கைகள் ஒரு கேபிள் மூலம் அவரது முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டன. அப்பாவைக் கொல்லாதே, அவரைக் கொல்லாதே என்று குழந்தைகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் கத்துகிறார்கள். பின்னர் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடந்தபோது டெல் அவிவ் நகரில் இருந்த கலியின் இரண்டாவது மூத்த மகள் ஷரோன், தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கலி பேசும்போது தன் தாயை ஆறுதல்படுத்தினார்

தாக்குதலின் போது 15 வயது சிறுமி தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். "ஷரோன், நாங்கள் ஒரு பிரச்னையில் இருக்கிறோம், நான் உன்னை பிறகு அழைக்கிறேன். ஐ லவ் யூ" என்று கூறிவிட்டு சாச்சி தொலைபேசியை துண்டித்துவிட்டார். அவர்கள் பேசியது அதுவே கடைசி முறை.

மாயனின் இறுதிச்சடங்கில்
படக்குறிப்பு,

கலியின் இளைய குழந்தைகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் கேள்வி கேட்டனர்.

"அவன் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நான் அவனிடம் "ஐ லவ் யூ, ஹீரோவாகாதே, புத்திசாலியாக இரு. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், என்னிடம் திரும்பி வாருங்கள். அவ்வளவுதான். இப்போது அவர் என்னிடம் திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்கிறார் கலி.

"சாச்சி இங்கே இருக்க வேண்டும். அவர் அவரது மகளைப் பற்றி துக்கம் விசாரிக்க வேண்டும். நான் அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும்,"என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கலி.

காஸாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் தற்போது அடையாளம் கண்டுள்ளது.

"அவர்களின் இலக்கு என்னவென்று எனக்குப் புரியவில்லை" என்கிறார் கலி.

"அவர்கள் தங்களை அரக்கர்களாகக் காட்ட விரும்புகிறார்களா? இது மிகவும் மோசமானது. இது எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியவில்லை. வடு நீடிக்கப் போகிறது. ஆனால் அவர்கள் பொதுமக்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் திரும்பக் கொண்டு வர வேண்டும்," என கோரிக்கை விடுத்தார் கலி.

வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள மற்றொரு கிப்புட்ஸில், மாயனின் சவப்பெட்டி நாற்காலிகளின் வரிசைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது.

மலர்வளையங்கள் மற்றும் வண்ணமயமான பூக்களைக் கொண்டு அவளை நினைவுகூர வரும் நூற்றுக்கணக்கான மக்கள் அமர போதுமான இருக்கைகள் அங்கு இல்லை.

கைப்பந்து விளையாடுவதை விரும்பி, வாழ்க்கையை நேசித்த ஒரு இளம் பெண்ணின் நினைவுகளை அங்கு கூடியிருந்த நண்பர்களும் குடும்பத்தினரும் பேசுகிறார்கள்.

கூடியிருந்த கூட்டத்தினரிடம் கலி தன் மகளை நினைத்துப் பேசுகிறார். அவர் மைக்கின் முன் இல்லாதபோது, அவர் உயிருடன் இருக்கும் குழந்தைகளை இறுக்கமாகப் பிடித்திருக்கிறாள்.

இறுதிச்சடங்களில் மாயன் குடும்பத்தினர்
படக்குறிப்பு,

இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மாயன் படங்கள் உள்ள டி-ஷர்ட்களை அணிந்துள்ளனர்

யேல் மற்றும் ஷாச்சார், வெறும் 11 மற்றும் 9 வயதில், இத்தகைய மோசமான நிகழ்வின் சாட்சிகளாக உள்ளனர். அவர்களின் சகோதரி இறந்துவிட்டார், அவர்களை ஆறுதல்படுத்த அவர்களின் தந்தை இங்கு இல்லை.

சாச்சி இல்லாதது எங்கும் உணரப்படுகிறது. கலி தனது பெயரை உலகம் அறிய விரும்புவதாக கூறுகிறார். அவரை விடுவிக்க உதவும் எந்த சிறிய விஷயத்தையும் அவள் செய்ய தயாராக இருக்கிறாள்.

துக்கம் அனுசரிப்பவர்களில் பலர் முன்பக்கத்தில் அவருடைய மற்றும் மாயன் படங்கள் உள்ள டி-ஷர்ட்களை அணிந்துள்ளனர்.

"கடத்தப்பட்ட தந்தை" மற்றும் "கொலை செய்யப்பட்ட மகள்" என்ற வார்த்தைகள் கொண்ட பதாகைகள் அங்கு இருந்தது. அவர் சொன்ன செய்தி ஒன்று தான். "சாச்சியை மீண்டும் கொண்டு வாருங்கள்".

கற்பனை செய்ய முடியாத இந்த இருளில், அவன் குடும்பத்திற்கு அவன் தேவை.

https://www.bbc.com/tamil/articles/cerkl3104lro

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அன்று காலை, ஏதோ வித்தியாசமாக இருந்தது.

"அது அசாதாரணமானது மற்றும் மிகவும் தீவிரமானது," கலி பிபிசியிடம் கூறுகிறார்.

"அது அடுத்தடுத்து வெடித்தது. எங்களால் வெளியே சென்று மூச்சுவிடக்கூட முடியவில்லை. நாங்கள் எங்கள் வீட்டிற்குள்ளேயே எங்கள் வீட்டின் அறையை மூடிக்கொண்டோம்." என்றார் கலி

“சாச்சியும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இங்கே ஏதோ சரியில்லை என்று சொன்னோம், ஏதோ பயங்கரமாக இருந்தது.

1986ஆம் ஆண்டு அதிகாலையை நெருங்கிய பொழுதொன்றில் சிறிலங்கா அரசபயங்கரவாதப் படைகளின் கவசவாகனங்களின் சத்தம் எமது வீட்டிற்கு அருகிலே  கேட்டது. எழுந்து சுதாகரிப்பதற்குள் வெடியோசைகள்.  சன்னங்கள் நாலாபக்கமும் பாய்ந்தது.  ஜெயந்திநகர் நோக்கிய திசையில் திருநகரின் பிரதான வீதியை ஊடறுத்துச்  சிறிலங்கா அரசபயங்கரவாதப் படைகளின் கவசவாகனங்களின் நகர்வு. நாமனைவரும் வீட்டின் பின்புற வேலியால் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தோம். நாம் ஓடும் திசையில் வேட்டுகளும் வந்தகொண்டிருந்தன. ஆனால், அம்மா சொல்லவதுபோல் தெய்வாதீனமாக எவருக்கும் எதுவும் நடக்கவில்லை. வளவிலே  வேம்பு,பலா, நாவல், தென்னை, கொய்யா, தோடை, மாதுளை,தேசி போன்ற மரங்களும் செடிகளுமாக நின்றதால் சன்னங்களைப் பெரிய மரங்கள்  வாங்கிக்கொண்டு கொப்புகள் முறிந்து வீழும் ஓசையைக் கேட்டவாறு ஓடிய ஓட்டத்தில் திருநகரின் உட்பகுதிக்குள் அறிந்தவரொவரின் வீட்டிற்குள் சென்றுவிட்டோம். அது ஓட்டாலும், பகுதியாகத் தகரத்தாலும் வேயப்பட்ட வீடு. அங்கும் சன்னங்களின் சன்னதம். வேட்டொலிகள் அடங்கியிருந்தது. ஆனால் ஆங்காங்கே கண்ணில் பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனர். கறுப்பு உடைப்படைகள் இன்னும் வீதிக்கரைகளில் படுத்திருப்பதாகக் கூறினார்கள். படைகள் பின்னகர்ந்தபின் சென்றுபார்த்தபோது எமது வீட்டிற்கு அருகில் இருந்த சிறிய வீடு, வேலியுட்படக் கொழுத்தப்பட்டிருந்தது. வீடெரிந்த சுவாலையினால் செவ்விளைநீர் மரம் கருகியிருந்தது. வளவு யானை வெண்கலக்கடைக்குள் புகுந்தநிலை.  

காலங்களும் இடங்களும் வேறானபோதும் சம்பவங்கள் என்னவோ ஒரேமாதிரியே நகர்கிறது. இந்தப் பகுதியைப் படித்தபோது என்மனதில் வந்த காட்சிகள்....

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

உயிரோடு எரித்த வீடியோவை நான் பார்த்தேன். அதை நம்புகிறேன். அதை பயங்கரவாதியாக்கள்தான் வெளியிட்டிருக்கிறார்கள். கட்பளித்ததை வீடியோ எடுத்தாலும் இன்னும் அவர்கள் வெளியிடவில்லை. அங்கு பணயக்கைதிகளாக பிடிக்கப்படடவர்கள் வந்த பின்னர் உறுதிப்படுத்தலாம். இறந்தவர்களின் மரண விசாரணைகளில் இது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹமாஸ், ISIS பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை. 

தாங்கள் இதுவரை எழுதியவை காத்திரமானவையாக உணரப்படுகிறது. 

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், தங்கள் கூற்றுக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்பது என் கரிசனை. அவ்வளவே 👍

  • கருத்துக்கள உறவுகள்

"ஹமாஸ்பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி? மீண்டுவந்தவர் பேட்டி"

எனும் தலைப்பிற்கு இத்தனை பின்னூட்டங்களை எழுதுபவர்கள், 

"காசாவின் நிலை – நாளாந்தம் 400 சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர் – காயமடைகின்றனர் – யுனிசெவ்"

எனும் கட்டுரைப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை என்பது ஆச்சரியமான விடயமல்ல....☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நாங்கள் CNN, BBC, இசுரேலிய மீடியாக்கள் சொல்லுறதை மட்டும்தான் நம்புவம்!! யுனிசெப், UN எல்லாம் பொய்யெல்லோ சொல்லுது!😜

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

"நாங்கள் சுட மாட்டோம் என ஹமாஸ் சொன்னார்கள். ஆனால், எங்கள் மகளைச் சுட்டு கொன்றுவிட்டனர்"

சாச்சியின் குடும்பம்

பட மூலாதாரம்,FAMILY HANDOUT

படக்குறிப்பு,

இந்தக் குடும்பத்தினர் அனுபவித்துக்கொண்டிருந்த வலி மற்றும் வேதனையை பேஸ்புக் மூலமாக முழுவதுமாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஒளிபரப்பினர்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அன்னா ஃபோஸ்டர்
  • பதவி, பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

சாச்சி ஐதான் காஸாவிற்கு கடத்தப்பட்டபோது, அவரது கைகளில் அவர் மகளின் ரத்தம் படிந்திருந்தன.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட தனது 18 வயது மகள் மாயனைத் கீழே கிடத்திய பிறகு, சாச்சியின் கைகளில் படிந்திருந்த ரத்தத்தை கழுவக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

குண்டு வெடிப்பின் சத்தம் கேட்க, அவர் தனது உடலைக் கேடயமாகப் பயன்படுத்தி தனது இரண்டு குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்டிருந்ததால், அவரால் அவர் கைகளில் படிந்திருந்த ரத்தத்தை துடைக்க முடியவில்லை.

அந்த குடும்பத்தினர் அனுபவித்துக்கொண்டிருந்த வலி மற்றும் வேதனையை பேஸ்புக் மூலமாக முழுவதுமாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஒளிபரப்பினர்.

சாச்சியின் மனைவி கலி ஐதான் தற்போது தனக்கு நெருக்கமான நகல் ஒஸ் சமூகத்தினரிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று நகல் ஒஸ்.

அவரும் அவரும் குழந்தைகளும் கிப்புட்ஸில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அது அவருடைய வீடு இல்லை.

18 வயதான மாயன், தனது நான்கு வயதிலிருந்தே குடும்பத்துடன் வீட்டில் தான் வசித்து வந்தார். அந்த வீடு, அவர்கள் வளர்ந்த மற்றும் ஒன்றாக நினைவுகளை உருவாக்கிய வீடு. அவரது தம்பி மற்றும் சகோதரிகள் பிறந்த வீடு.

"அவள் எப்போதும் சரியாக இருப்பாள்," என்று அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் பிபிசியிடம் கூறினார்.

“அவள் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றாள். அவள் படிக்க விரும்பினாள், அவள் கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அவளுடைய பிறந்தநாளுக்கு புத்தகங்களைக் கேட்டாள்,” என்கிறார் அவரது பக்கத்து வீட்டுக்காரர்.

மாயன்

பட மூலாதாரம்,FAMILY HANDOUT

படக்குறிப்பு,

கைப்பந்து வீராங்கனையான மாயன், கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்தான் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

புளியமரங்களுக்கு அடியில் நிழலாடிய இடத்தில் அமர்ந்து, அந்த நாளின் வலியை விவரிக்க விரும்பவில்லை, அது இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது என்றாலும், அதனை தன் கணவருக்காக விவரிப்பதாகக் கூறினார்.

"எனக்கு அவர் திரும்ப வேண்டும். முழுமையாய், உயிருடன் இருக்க வேண்டும். எனக்கு அவர் இப்போது திரும்பி வர வேண்டும்,"என்றார் கலி.

அக்டோபர் 7 ஆம் தேதி, காஸாவில் இருந்து ராக்கெட் வெடிக்கும் என்று எச்சரிக்கும் சிவப்பு விளக்கு அலாரங்களின் ஒலியைக் கேட்டு அந்தக் குடும்பத்தினர் விழித்தனர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அன்று காலை, ஏதோ வித்தியாசமாக இருந்தது.

"அது அசாதாரணமானது மற்றும் மிகவும் தீவிரமானது," கலி பிபிசியிடம் கூறுகிறார்.

"அது அடுத்தடுத்து வெடித்தது. எங்களால் வெளியே சென்று மூச்சுவிடக்கூட முடியவில்லை. நாங்கள் எங்கள் வீட்டிற்குள்ளேயே எங்கள் வீட்டின் அறையை மூடிக்கொண்டோம்." என்றார் கலி

“சாச்சியும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இங்கே ஏதோ சரியில்லை என்று சொன்னோம், ஏதோ பயங்கரமாக இருந்தது. நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளோம் என்றும் நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கிப்புட்ஸின் குடியிருப்பு அமைப்பில் இருந்து எங்களுக்கு செய்திகள் கிடைத்தன. அவர்கள் எங்களை அமைதியாக இருக்கும்படியும் சொன்னார்கள், கிப்புட்ஸுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது." என நினைவு கூர்ந்தார் கலி.

தொடர்ந்து பேசிய அவர்,"அது ஒருபோதும் விருப்பமில்லாத ஒன்று என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது எப்போதுமே ஒரு கொடுங்கனவுதான். அதற்கு எப்போதும் அரசு மற்றும் பாதுகாப்பு படையினரிடம் தீர்வு இருந்தது. ஆனால், அது திடீரென்று ஒரு நாள் நிஜமானது. கொடுங்கனவு நிஜமானது,” என்றார் கலி.

கலி

படக்குறிப்பு,

தனது மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரைத் தடுக்க முற்பட்டபோது கொல்லப்பட்டதாக கலி தெரிவித்தார்.

அந்த நேரத்தில், தனது வீட்டிற்கு வெளியே ஏதோ வெடித்து, கண்ணாடி ஜன்னல்களை உடைத்தது எப்படி என்று கலி விவரிக்கிறார். அந்தநேரத்தில் அவர்களின் வீட்டிற்குள் காலடிச் சத்தமும் குரல்களும் கேட்டன. “நாங்கள் சுடவில்லை’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் ஒருவர் கத்தினார். ஆனால் அவர்கள் சுட்டார்கள்,”என்றார் கலி.

"சாச்சி கதவைப் பிடித்துக் கொண்டார், அவர்கள் அதைத் திறக்க விடவில்லை. அதில் பூட்டும் இல்லை, குழந்தைகள் அலறுகிறார்கள், அறைக்குள் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தோம். இருட்டாக இருந்தது, ஆனால் மாயன் புரிந்துகொண்டாள். அவர்களால் கதவை சிறிது திறக்க முடிந்ததை அவள் பார்த்தாள். அவள் மேலே குதித்து கதவைப் பிடிக்க சாச்சிக்கு உதவினாள்." எனக் கூறிக்கொண்டிருக்கும்போதே கலி அழுகத் தொடங்கினார்.

ஆனால், அவர் விவரிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அந்த தருணத்தை விவரிக்கிறார்.

"நாங்கள் சுடமாட்டோம்’ என்று கத்துகிறார்கள், பின்னர் அவர்கள் சுடுகிறார்கள். 'யாரை அடித்தது, யாரை அடித்தது?' என்று சாச்சி கத்தினான்."

"அது மாயன். அவள் அவன் அருகில் விழுந்தாள், பின்னர் ஹமாஸ் குழுவினரால் கதவைத் திறக்க முடிந்தது. அலறல் சத்தம் கேட்டது, அவர்கள் விளக்கை ஆன் செய்தனர். மாயன் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். நான் அவளைப் பரிசோதித்தேன், அவள் தலையில் அடிபட்டதை உணர்ந்தேன், அவள் படுகாயமடைந்திருந்தாள்."

"அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கத்தினார்கள். நாங்கள் குழந்தைகளிடம் 'அவர்களை பார்க்க வேண்டாம்' எனக்கூறி, நான் என் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றேன்."

ஷரோன்

பட மூலாதாரம்,INPHO

படக்குறிப்பு,

தாக்குதலின் போது 15 வயது சிறுமி ஷரோன் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்

"என் வீட்டைச் சுற்றி ஒரு போர் நடந்துகொண்டிருந்தது. அவர்கள்(ஹமாஸ் ஆயுதக்குழுவினர்) என் வீட்டிற்கு உள்ளே இருந்தார்கள்."

இரவு நேரத்தில் அணியும் உடையில் இருந்த சாச்சி, கலி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், யேல் மற்றும் ஷாசார், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு தரையில் அமர்ந்துள்ளனர்.

அவர்களை சிறைபிடித்தவர்களில் ஒருவர் கலியின் தொலைபேசியை எடுத்து, அவளது கடவுச்சொல்லைக் கேட்டு, பேஸ்புக் லைவில் குடும்பத்தைப் படம்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

அந்தக் காணொளியை பார்க்கவே வேதனையாக இருந்தது. சுமார் 26 நிமிடங்களுக்கு மேலாக அவர்களைச் சுற்றியும் ஹமாஸ் தாக்குதல் தொடர்வதால், ராக்கெட்டின் சைரன் சத்தங்கள் ஒலிக்க, அந்த குடும்பமே குனிந்து கிடந்தது. சுற்றியும் வெடிக்கும் வெடிச்சத்தங்களால் பயந்த குழந்தைகள், பெற்றோரின் கைகளைப்பற்றி கதறி அழுதுகொண்டிருந்தனர். இந்த நேரங்களில், இறந்த மாயனின் உடல் சில மீட்டர் தொலைவில் கிடந்தது.

"என் குழந்தைகள் விவரிக்க முடியாத வகையில் தைரியமாக இருந்தார்கள். அவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் பேசினார்கள், அவர்களால் எப்படி முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள், ஏன் சுட்டுக் கொன்றார்கள், ஏன் கொலை செய்கிறார்கள் என்று கேட்டார்கள். ஒருவேளை அதுதான் எங்களைக் காப்பாற்றியிருக்கலாம்?," என்றார் கலி.

"சாச்சி உடைந்துவிட்டார். அவர் தனது மகள் இறப்பதைக் கண்டார், அவள் தலையில் சுடப்பட்டு அவருக்கு அருகில் இறந்துவிட்டார். அவரது 18 வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவரது மகள், அவருடன் இல்லை. வீடு முழுவதும் பலூன்கள் மற்றும் வாழ்த்துகள், மற்றும் ... மற்றும் அவரது ரத்தம்," என்றார் கலி

இறுதியில், சாச்சியை எழுந்திருக்கச் சொன்னார்கள். அவரது கைகள் ஒரு கேபிள் மூலம் அவரது முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டன. அப்பாவைக் கொல்லாதே, அவரைக் கொல்லாதே என்று குழந்தைகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் கத்துகிறார்கள். பின்னர் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடந்தபோது டெல் அவிவ் நகரில் இருந்த கலியின் இரண்டாவது மூத்த மகள் ஷரோன், தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கலி பேசும்போது தன் தாயை ஆறுதல்படுத்தினார்

தாக்குதலின் போது 15 வயது சிறுமி தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். "ஷரோன், நாங்கள் ஒரு பிரச்னையில் இருக்கிறோம், நான் உன்னை பிறகு அழைக்கிறேன். ஐ லவ் யூ" என்று கூறிவிட்டு சாச்சி தொலைபேசியை துண்டித்துவிட்டார். அவர்கள் பேசியது அதுவே கடைசி முறை.

மாயனின் இறுதிச்சடங்கில்

படக்குறிப்பு,

கலியின் இளைய குழந்தைகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் கேள்வி கேட்டனர்.

"அவன் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நான் அவனிடம் "ஐ லவ் யூ, ஹீரோவாகாதே, புத்திசாலியாக இரு. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், என்னிடம் திரும்பி வாருங்கள். அவ்வளவுதான். இப்போது அவர் என்னிடம் திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்கிறார் கலி.

"சாச்சி இங்கே இருக்க வேண்டும். அவர் அவரது மகளைப் பற்றி துக்கம் விசாரிக்க வேண்டும். நான் அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும்,"என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கலி.

காஸாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் தற்போது அடையாளம் கண்டுள்ளது.

"அவர்களின் இலக்கு என்னவென்று எனக்குப் புரியவில்லை" என்கிறார் கலி.

"அவர்கள் தங்களை அரக்கர்களாகக் காட்ட விரும்புகிறார்களா? இது மிகவும் மோசமானது. இது எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியவில்லை. வடு நீடிக்கப் போகிறது. ஆனால் அவர்கள் பொதுமக்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் திரும்பக் கொண்டு வர வேண்டும்," என கோரிக்கை விடுத்தார் கலி.

வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள மற்றொரு கிப்புட்ஸில், மாயனின் சவப்பெட்டி நாற்காலிகளின் வரிசைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது.

மலர்வளையங்கள் மற்றும் வண்ணமயமான பூக்களைக் கொண்டு அவளை நினைவுகூர வரும் நூற்றுக்கணக்கான மக்கள் அமர போதுமான இருக்கைகள் அங்கு இல்லை.

கைப்பந்து விளையாடுவதை விரும்பி, வாழ்க்கையை நேசித்த ஒரு இளம் பெண்ணின் நினைவுகளை அங்கு கூடியிருந்த நண்பர்களும் குடும்பத்தினரும் பேசுகிறார்கள்.

கூடியிருந்த கூட்டத்தினரிடம் கலி தன் மகளை நினைத்துப் பேசுகிறார். அவர் மைக்கின் முன் இல்லாதபோது, அவர் உயிருடன் இருக்கும் குழந்தைகளை இறுக்கமாகப் பிடித்திருக்கிறாள்.

இறுதிச்சடங்களில் மாயன் குடும்பத்தினர்

படக்குறிப்பு,

இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மாயன் படங்கள் உள்ள டி-ஷர்ட்களை அணிந்துள்ளனர்

யேல் மற்றும் ஷாச்சார், வெறும் 11 மற்றும் 9 வயதில், இத்தகைய மோசமான நிகழ்வின் சாட்சிகளாக உள்ளனர். அவர்களின் சகோதரி இறந்துவிட்டார், அவர்களை ஆறுதல்படுத்த அவர்களின் தந்தை இங்கு இல்லை.

சாச்சி இல்லாதது எங்கும் உணரப்படுகிறது. கலி தனது பெயரை உலகம் அறிய விரும்புவதாக கூறுகிறார். அவரை விடுவிக்க உதவும் எந்த சிறிய விஷயத்தையும் அவள் செய்ய தயாராக இருக்கிறாள்.

துக்கம் அனுசரிப்பவர்களில் பலர் முன்பக்கத்தில் அவருடைய மற்றும் மாயன் படங்கள் உள்ள டி-ஷர்ட்களை அணிந்துள்ளனர்.

"கடத்தப்பட்ட தந்தை" மற்றும் "கொலை செய்யப்பட்ட மகள்" என்ற வார்த்தைகள் கொண்ட பதாகைகள் அங்கு இருந்தது. அவர் சொன்ன செய்தி ஒன்று தான். "சாச்சியை மீண்டும் கொண்டு வாருங்கள்".

கற்பனை செய்ய முடியாத இந்த இருளில், அவன் குடும்பத்திற்கு அவன் தேவை.

https://www.bbc.com/tamil/articles/cerkl3104lro

அவள் கொலை செய்யப்பட்ட்து ஒரு வகையில் நல்லது என்று ஏற்றுக்கொள்ளலாம். கடத்தி கொண்டு போய் ஒவ்வொரு நாளும் நாசம் செய்து ஒவ்வொரு நாளும் கொலை செய்வதை விட இந்த ஒரே மரணம் நல்லது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.