Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் ரில்கோ ஹோட்டலில் நடந்த மிகக் கேவலமான மாபெரும் போதை விருந்து!! அதிர்ச்சிக் காட்சிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மிக கொடூரமாக திட்டமிட்ட முறையில் கலை, கலாச்சார, சமூகவிழுமியங்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. காணி ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது சமூக, கலாச்சார சீர்கேடுகளும் மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் திட்டமிட்டு சீர்கேடான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த 4ஆம் திகதி இரவு “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பை சேர்ந்த Eventsby ShuttleVibe எனும் நிறுவனத்தின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக பார்ட்டிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1500 ரூபாய்க்கும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1000 ரூபாய் என விளம்பரம் செய்து 0741102280 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கோரி இருந்தனர்.

அதன் அடிப்படையில் அன்றைய தினம் பல இளையோர் நுழைவு சீட்டுக்களை பெற்று தமது பெண் நண்பிகளுடன் கொண்டாட்டத்திற்கு சென்று இருந்தனர்.

முன்னதாக DJ இசையுடன் ஆரம்பித்த கொண்டாட்டம் பின்னர் மது விருந்துடன் நிகழ்வு சூடு பிடிக்க தொடங்கியது.

அதனை தொடர்ந்து அங்கு வந்த சிலர் மது போதை தலைக்கு ஏற தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கி கடும் போதையில் ஆட்டம் போட்டுள்ளனர்.

ஹோட்டலில் மதுபானம் மாத்திரமே வழங்க பட்டதாகவும், ஆனாலும் அங்கு வந்த பலரும் தம் வசம் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கலாசாச்சர சீரழிவு நிகழ்வுக்கு ரில்கோ ஹோட்டல் துணை போனமை தொடர்பில் பலரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தென்பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போதை விருந்துக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு எதிராகவும் , விருந்து கலந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்நிலையிலையே தற்போது , யாழ்ப்பாணத்தில் அவ்வாறான விருந்து கொண்டாட்டத்தை தெற்கை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர் எனவும். இவ்வாறானவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள புகைப்படங்களில் காணப்படுபவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள். இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் உங்களது பிள்ளைகள் தொடர்பு கொண்டிருந்தால் உடனடியாக அவர்களை கண்டித்து வையுங்கள். இவர்களை ஏற்கனவே திருமணம் செய்வதற்கு யாராவது ஆயத்தமாகியிருந்தால் கொஞ்சம் யோசியுங்கள்….

இங்கு காணப்படுபவர்களில் திருமணம் முடித்தவர்கள் யாராவது இருப்பார்கள். அவர்களின் மனைவிமார் கவனமாக இருங்கள்… உங்களுக்கும் எயிட்ஸ் நோய் காணப்படலாம்….

https://vampan.net/50210/

படங்கள் இணைக்க முடியவில்லை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாடுகளில் தற் போது நடக்கும் பெரும்பாலான திருமண விழாக்கள்  மது விருந்துடனும் DJ  ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் தான் நடக்கின்றன.  Cocktail bar  இல்லாத திருமணங்களே இல்லை என்று கூறலாம். அதில் தவறு இல்லை. மகிழ்சசியாக வாழ்ககையை அனுபவிக்கவே மக்கள் அனைவரும் விரும்புவது இந்த உலகில் இயல்பு. 

ஆனால் போதை வஸ்துக்கள் பாவிக்கப்பட்டிருந்தால் பொறுப்பான சமூகம் என்ற முறையில் அதை  அனுமதிக்க முடியாது. அதற்கெதிரான விழிப்புணர்வு மேற்கு நாடுகளில் செய்வது போன்று எமது நாட்டிலும் பரவலாக  நடத்தப்பட வேண்டும்.  அவ்வாறு செய்வதன் மூலமே அதனைக் கட்டுப்படுத்த முடியும்.  

அதே வேளை வம்பன் இணையம் போன்ற கொசிப் இணையங்கள் இவ்வாறான  நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் படங்களை பொது வெளியில் பிரசுரித்து அவர்களுக்கு எயிட்ஸ் இருக்கலாம் என்று செய்தி வெளியிடுவது மிக்க கேவலமான கலாச்சாரமாகும்.  சாதாரண செய்திகளை ஊதிப் பெருக்கி தானும் சிலவற்றை இட்டுக்கட்டி   கொசிப் செய்திகளாக்கி  வெளியிடுவது வம்பன் போன்ற நாகரிகம் அற்ற ஒரு சில  இணையங்களின் வாடிக்கை.  

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் தமிழர்களின் திருமண விழாக்கள் மது விருந்துடனும் தமிழ் ஹிந்தி  பாடல்களுடன் ஆடி பாடி கொண்டாட்டங்களுடன் தான் நடைபெறுகின்றது.

தடைசெய்யபட்ட  போதை வஸ்துக்கள்  அனுமதிக்க முடியாது.

25 minutes ago, island said:

அதே வேளை வம்பன் இணையம் போன்ற கொசிப் இணையங்கள் இவ்வாறான  நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் படங்களை பொது வெளியில் பிரசுரித்து அவர்களுக்கு எயிட்ஸ் இருக்கலாம் என்று செய்தி வெளியிடுவது மிக்க கேவலமான கலாச்சாரமாகும்.  சாதாரண செய்திகளை ஊதிப் பெருக்கி தானும் சிலவற்றை இட்டுக்கட்டி   கொசிப் செய்திகளாக்கி  வெளியிடுவது வம்பன் போன்ற நாகரிகம் அற்ற ஒரு சில  இணையங்களின் வாடிக்கை.  

மிகச்சரியாகச  சொன்னீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

புலம் பெயர்ந்த நாடுகளில் தற் போது நடக்கும் பெரும்பாலான திருமண விழாக்கள்  மது விருந்துடனும் DJ  ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் தான் நடக்கின்றன.  Cocktail bar  இல்லாத திருமணங்களே இல்லை என்று கூறலாம். அதில் தவறு இல்லை. மகிழ்சசியாக வாழ்ககையை அனுபவிக்கவே மக்கள் அனைவரும் விரும்புவது இந்த உலகில் இயல்பு. 

இது தவறு ஐலண்ட்.

திருமண நிகழ்வுகள் வழமை போவவே நடைபெறுகின்றன.

நானும் எனது இரு பிள்ளைகளுக்கு 2015 ,2017 இல் திருமணம் செய்து வைத்தேன்.

திருமணம் முடிந்த பின் நடக்கும் வரவேற்பில்த் தான் ஆட்டம், பாட்டம் ,குடி ,நடனம் என்று கொண்டாடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை யார்?ஏன்? நடாத்தினார்கள் என்றும் விசாரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமண விருந்துபசார கொண்டாட்டத்திற்கும் இரவு விடுதிகளில் நடக்கும் டிஷ்கோ டான்ஸ் கொண்டாட்டத்திற்கும் வித்தியாசம் இருக்கு.....

வெள்ளி/ சனிக்கிழமை இரவுக்கொண்டாட்டங்கள் கலாச்சார சீரழிவை கொண்டு வரும்.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவித்திருப்பின், அது தவறு மட்டுமல்ல குற்றமும் ஆகும். கண்டிப்பாக உரியவர்களை இனங்கண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றும்படி, இவ்வாறு வெள்ளி, சனி இரவுகளில் ஆட்டம் பாட்டமும் அதில் 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மதுவை அருந்துவதும் தவறோ குற்றமோ அல்ல. எம் கலாச்சாரத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்து அல்லது அதற்கும் முதல், கள்ளும் தேனும் காமமும் ஊறிக் கிடப்பவை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் தமிழர்களின் திருமண விழாக்கள் மது விருந்துடனும் தமிழ் ஹிந்தி  பாடல்களுடன் ஆடி பாடி கொண்டாட்டங்களுடன் தான் நடைபெறுகின்றது.

தடைசெய்யபட்ட  போதை வஸ்துக்கள்  அனுமதிக்க முடியாது.

மிகச்சரியாகச  சொன்னீர்கள்

உறவுகள் மற்றும் பெற்றோர் முன் நிலையில் நடக்கும் கொண்டாட்டங்களும் முகம் தெரியாத ஆட்களால் நடாத்தப்படும் கொண்டாட்டங்களும் ஒன்றா சகோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓர் குப்பை இணையத்தளச் செய்தி. வாட்ஸப்பிலும் பகிர்ந்திருந்தார்கள். போதைமருந்து பாவித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நடனவிருந்துக்கு போவதை கலாச்சாரக் காவலர்கள் என்று கண்டிப்பவர்கள் உண்மையில் வயித்தெரிச்சல் பிடிச்சவர்கள்தான்..

 

கொழும்பான் யாழ்கள வாசகர்களுக்கு இரத்தக் கொதிப்பை கொண்டுவரத்தானே செய்திகளை இணைப்பவர். ஆனால் படங்களை இணைக்கமுடியாமல் அவதிப்பட்டுள்ளார்!🤪

spacer.png

spacer.png

36 minutes ago, கிருபன் said:

spacer.png

spacer.png

எம் காலத்தில் எம்முடன் படிக்கும் சக மாணவி அருகில் கொஞ்ச நேரம் சைக்கிளில் சமாந்தரமாக சென்றாலே, அதை தவறாக பார்த்தனர். ஆனால், என் மகன் மற்றும் அவன் வயதை ஒத்தவர்கள் தன் நண்பர் / நண்பிகளுடன் இணைந்து இங்கு ஆடிப் பாடுவது போன்று அங்கும் இளம் பெண்களும் இணைந்து கொண்டாட்டமாக ஆடுவதை காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடையங்கள் இன்னமும் தாயகத்தில் நடைபெறவேண்டும் அப்போதான் ஜனநாயகம் தளைத்தோங்கும், வ் எளிநாடுகளில் வாழ்பவர்கள் டிஸ்கோ மற்றும் இரவுநேர சிறப்பு விருந்துகளில் கலந்துகொள்ளலாம் குடாநாட்டுத் தமிழர்கள் மட்டும் என்ன் இப்படியான சோதியில் கலந்து கொள்ளமுடியாது.

தவிர போதை வஸ்துக் கலாச்சாரம் இதன்மூலம் வளர்ச்சி அடைந்து தனிமனிதன் சுயமாகச் சிந்தித்து இயங்கும் திறன் அழிந்து கழுதை கெட்டால் குட்டிசுவர் என மூலைக்குள் கிடந்தால் தூய ஜனநாயகம் மலர்ந்துவிடும் அது நல்லம்தானே 

நாம் பெற்ற இன்பத்தை அவர்களும் பெற்றுக்கொள்ளட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களின் கைகளில் கட்டியிருக்கும் மஞ்சள் நிற Tags ஐக் கவனிக்கவும். 

🤨

  • கருத்துக்கள உறவுகள்

 

கொழும்பான் யாழ்கள வாசகர்களுக்கு இரத்தக் கொதிப்பை கொண்டுவரத்தானே செய்திகளை இணைப்பவர். ஆனால் படங்களை இணைக்கமுடியாமல் அவதிப்பட்டுள்ளார்!

காத்தான் குடியிலும்...கல்முனை மருதமுனையில்..இதைவிட மோசமான போதைவஸ்து இராச்சியமும் ..ஆட்சியும் நடக்கிறது... அதனை படம்போட்டுக்காடமாட்டார்....யாழ்ப்பாணத்தில் என்றா ல் செத்தவீட்டுக்கு கட்டின கருப்புகொடியையும்...அக்க்டோபர் 30 க்கு காட்டினதென்று படம் காட்டுவார்...இன்னம் கொஞ்ச நேரத்தில் திருகோண்மலை அப்யா தீர்ப்புடன் வருவார் பாருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல ஒரு குருவிகூட இல்ல .. வெளிநாட்டுல இருந்துகொண்டு நம்மட ஊர் மரியாதை என்னாகுறது எண்டுராங்கள்..😡😡

சொந்தக்காரர் ஒருத்தர் பெடியன கஷ்டப்பட்டு ஊரெல்லாம் வட்டிக்கு வாங்கி பிரான்சுக்கு அனுப்பினார்... ஏனெண்டு கேட்டன் "ஊர்ல இருந்தா கெட்டு போடுவான  அதான் பிரான்சுக்கு அனுப்பிறனாம்…😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் என்பது மனிதர்கள். இனம் என்பது மனிதர்கள். சமூகம் என்பது மனிதர்கள். பண்பாடும் கலாச்சாரமும் மனிதர்களுக்கானது. அங்கிருந்து மனிதர்களைப் பிடுங்கிவிட்டால் மிஞ்சுவது வெறும் மண்தான். ஊர்தான். நிலம்தான். வெறும் நிலத்தில் கலாச்சாரம் முளைக்காது.

மகன்களை, மகள்களை, தம்பிகளை, தங்கைகளை கொழும்பிற்கும், உலகின் முக்கியமான களியாட்ட-பெரு நகரங்களுக்கும், ‘புதிய’ வாழ்க்கைக்காகவும்,  ‘புதிய’ எதிர்காலத்திற்காகவும் அனுப்பிவைத்துவிட்டு, அங்கு அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றிய அறிவு துளியும் இல்லாமல், ஊரை பற்றி ஊளை இடுவதில் அர்த்தம் இல்லை.. ஆகக்குறைந்தது இங்கு இருப்பவர்களையாவது புலம்பெயராமல் தக்கவைக்க ஏதாவது செய்யலாம்.. ஒவ்வொருவரும் தமது உறவினர்களை வெளியேறாமல் இங்கு தங்கவைக்க ஏதாவது செய்தாலே போதும் நீங்கள் பாதுகாக்க நினைக்கும் கலாச்சாரம் அதுவாக சங்கிலித்தொடர் போல் நீழும் இங்கு....

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2023 at 00:50, நிழலி said:

தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவித்திருப்பின், அது தவறு மட்டுமல்ல குற்றமும் ஆகும். கண்டிப்பாக உரியவர்களை இனங்கண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றும்படி, இவ்வாறு வெள்ளி, சனி இரவுகளில் ஆட்டம் பாட்டமும் அதில் 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மதுவை அருந்துவதும் தவறோ குற்றமோ அல்ல. எம் கலாச்சாரத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்து அல்லது அதற்கும் முதல், கள்ளும் தேனும் காமமும் ஊறிக் கிடப்பவை தான். 

நம்ம ஐயன் வள்ளுவன் கூட இதுக்கு விதிவிலக்கு அல்ல 

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, putthan said:

நம்ம ஐயன் வள்ளுவன் கூட இதுக்கு விதிவிலக்கு அல்ல 

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு

வ‌ண‌க்க‌ம் புத்த‌ன் மாமா
ந‌ல‌ம்மா
க‌ண்டு க‌ண‌ நாள் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் புத்த‌ன் மாமா
ந‌ல‌ம்மா
க‌ண்டு க‌ண‌ நாள் 

சிட்னி முருகன் அருளால் நலமாக இருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

சிட்னி முருகன் அருளால் நலமாக இருக்கிறேன்

ம‌கிழ்ச்சி புத்த‌ன் மாமா🥰🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

சிட்னி முருகன் அருளால் நலமாக இருக்கிறேன்

சிட்னி முருகன் ஒரு —உம் புடுங்க முடியாது.. உங்கள் உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பரம்பரை அலகுகள்தான் நலத்தை தீர்மானிக்கின்றன..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிட்னி முருகன் ஒரு —உம் புடுங்க முடியாது.. உங்கள் உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பரம்பரை அலகுகள்தான் நலத்தை தீர்மானிக்கின்றன..

அது புத்த‌ன் மாமாட அசைக்க‌ முடியாத‌ க‌ட‌வுள்  ந‌ம்பிக்கை 
அதுக்கை தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்க‌  கூடாது
என‌க்கும் க‌ட‌வுள் ந‌ம்பிக்கை அதிக‌ம்..........ஜ‌ந்து விர‌லும் ஒரு மாதிரி இல்லை தானே  அதே போல் தான் ம‌னித‌ர்க‌ளும் ஒவ்வொரு கொள்கை உடைய‌வ‌ர்க‌ள் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பாலபத்ர ஓணாண்டி said:

சிட்னி முருகன் ஒரு —உம் புடுங்க முடியாது.. உங்கள் உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பரம்பரை அலகுகள்தான் நலத்தை தீர்மானிக்கின்றன..

உண்மை தான் ..என்ன இருந்தாலும் பயம் காரணமாக எல்லாம் வல்ல ஒருத்தனை துணைக்கு அழைப்பது என்னை போன்ற சாதாரன மனிதனின் இயல்பு....முற்போக்குவாதிகள் அப்படி அல்ல ..

  • கருத்துக்கள உறவுகள்

புத்த‌ன் அண்ணா முருகன் கோவிலுக்கு செல்லும் போது கூட உடல்நலன் கருதி நடைபயிற்சிக்காக நடந்து தான் செல்வார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/11/2023 at 14:50, நிழலி said:

எம் கலாச்சாரத்தில் சங்க இலக்கிய காலத்தில் இருந்து அல்லது அதற்கும் முதல், கள்ளும் தேனும் காமமும் ஊறிக் கிடப்பவை தான். 

எமது கலாச்சாரத்தில் உள்ள காமமும் கள்ளும் தேனும் வேறெந்த சமுகத்திலும் இல்லை.  என்ன ஒன்று.......எம் கலாச்சாரத்தில் இருட்டு அறைக்குள் ஊமைக்குத்து  சொல்லி வேலையில்லை. மேலைத்தேய கலாச்சாரத்தில்....நடு ரோட்டிலும்....ஓ நோ......ஓ நோ.....ஓ நோ.....ஓ யே........:cool:

கஸ்தூரியார் ரோட்டிலும் இனி அப்படியான சத்தங்களை கேட்கலாம்....🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.