Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் சைவர்களின் கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது - இது நல்லதல்ல என்கிறார் ஆறுதிருமுருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 NOV, 2023 | 12:29 PM
image

(எம்.நியூட்டன்)

அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரச அதிகாரிகள் எவ்விதமான அக்கறையும் இல்லாமல் இருப்பது மனவருத்தத்தை தருகிறது. 

ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது நல்லை ஆதீனத்தின் குரு முதல்வரையும் என்னையும் சந்தித்து கலந்துரையாடியபோது, காங்கேசன்துறை தல்செவன ஹொட்டல் பயன்படுத்தப்படுகின்ற நிலம் சைவ சமயத்தவர்களின் சுக்கிரபாத திருவார சத்திரம் இருந்த இடம். இந்த சத்திரம் இடிக்கப்பட்டு ஹொட்டல் பயன்பாட்டுக்காக இந்த நிலம்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். எத்தனையோ அடியவர்கள் உணவு உண்பதற்காக அன்னதானம் நடைபெற்ற இடமாக, காலையில் சூரிய வழிபாடு செய்யும் இடமாக விளங்க சித்தராலே கட்டப்பட்ட சுப்பிரபாத சத்திரக் காணியை கையளிக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுத்தபோது உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுத்து கையளிப்பேன் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார். 

இச்சந்திப்பு ஜனவரி மாதம் நடைபெற்று இன்றுடன் 11 மாதங்கள் ஆகின்றது. எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. அதேநேரத்திலே கீரிமலை காங்கேசன்துறை வீதியில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்ட நிலப்பரப்பில் ஆதி சடையம்மா மடம் உட்பட  எத்தனையோ தென்மை வாய்ந்த அந்தண கிருஸ்ணர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் அழிக்கப்பட்டன. 

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நேரில் நல்லை ஆதீனத்தினால் எடுத்துரைக்கப்பட்டபோதும் விரைவாக விடுவித்து, அந்த ஆலயங்களை புனருத்தாரனம் செய்வதாக உறுதியளித்தார். ஆனால், இன்று வரை அது நடைபெறவில்லை. 

சைவ மக்கள் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த விடயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கதைத்திருத்தார்கள். ஆனாலும், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் எழுதுகின்ற கடிதங்களுக்கு பதில்களும் கிடைப்பதில்லை.

இன்று இலங்கை வாழ் சைவ மக்களை மனம் நோகச் செய்கின்ற விடயங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இந்த விடயத்தில் சைவ மக்களின் மன நிலையை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று இந்த தீபாவளியில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

சைவ மக்களின் கோவில்கள், நிலங்கள்  பறிபோய்க்கொண்டிருக்கின்றன. திருகோணமலை கோவில் பாதைகளில்  அடாத்தாக போடப்பட்ட கடைகளை அகற்றுமாறு பல தடவைகள் வேண்டியும் அந்தக் கடைகள் அகற்றப்படவில்லை. அதற்கு எத்தகைய முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகிலிருந்த மடங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், அதனை  கட்டுவதற்கான அனுமதியும் இல்லை. பௌத்த சமயத்தவர்களின் கட்டடங்கள் கட்டப்பட்டுக்கொண்டு வருகிறது. 

எனவே, இந்த நாட்டில் சைவ மக்களுக்கு தருகின்ற தொல்லை என்பது எல்லையற்றது. இது இந்நாட்டுக்கு உகந்ததல்ல. சைவ மக்களின் சாபத்துக்கு இவர்கள் ஆளாகின்றார்கள். 

ஜனாதிபதிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் கூற வருவது என்னவெனில், தீபாவளியை முன்னிட்டு குறித்த நிலங்கள் மீட்கப்படாவிட்டால் எதற்கும் அர்த்தமில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/168889

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் திட்டமிட்டு நடக்கும் அபகரிப்புகள் ........அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்......!   

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

பாவம் ஐயா. என்ன செய்வது நிலைமை அப்படி. 

  • கருத்துக்கள உறவுகள்

சைவசமயத்தவர் அல்லாதவர்களிடமிருந்து காணிகளை அபகரிக்கலாம் என்கிற தோற்றப்பாடு எழுகிறதே,....😁

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக நான், ஆறுமுக நாவலர், மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகியோர் சார்ந்த குமுகத்தின் சார்பில் மறவன்புலவு சச்சிதானந்தன் அய்யா குரல்கொடுக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சைவசமயத்தவர் அல்லாதவர்களிடமிருந்து காணிகளை அபகரிக்கலாம் என்கிற தோற்றப்பாடு எழுகிறதே,....😁

ஒரு காலத்தில் எல்லோருமே சைவர்களாக இருந்தவர்களே என்று சொல்ல வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் எல்லோருமே சைவர்களாக இருந்தவர்களே என்று சொல்ல வருகிறார்.

முன்னொரு காலப்பகுதியில்  மாதகல், தையிட்டியில் வாழ்ந்த தமிழ்ப் பெளத்தர்களையும் சேர்த்துத்தானே கூறியிருப்பார் ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

முன்னொரு காலப்பகுதியில்  மாதகல், தையிட்டியில் வாழ்ந்த தமிழ்ப் பெளத்தர்களையும் சேர்த்துத்தானே கூறியிருப்பார் ? 

அவர்களும் சைவத்திலிருந்து பவுத்தத்துக்கு மாறினவர்களோ யாருக்கு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

முன்னொரு காலப்பகுதியில்  மாதகல், தையிட்டியில் வாழ்ந்த தமிழ்ப் பெளத்தர்களையும் சேர்த்துத்தானே கூறியிருப்பார் ? 

சிங்களவருக்கு புத்த மதத்தை கடத்தியவர்களே தமிழர்கள்தான் 

புத்தரே பின்பற்றியது தமிழர்களின் சமண சமயம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்லுறது?

புத்த மத வளர்ச்சிக்கு இந்தியா காசை அள்ளிக் கொடுக்கும் போது, பேசாமல் சீனாவுடன் பேசி சைவத்தை காக்க வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

சிங்களவருக்கு புத்த மதத்தை கடத்தியவர்களே தமிழர்கள்தான் 

புத்தரே பின்பற்றியது தமிழர்களின் சமண சமயம்தான் 

அப்படி கடத்தாமல் நாம் புத்த மதத்தில் இருந்து கொண்டு சைவ சமயத்தை சிங்களவருக்கு கடத்தியிருக்கலாம். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

சிங்களவருக்கு புத்த மதத்தை கடத்தியவர்களே தமிழர்கள்தான் 

புத்தரே பின்பற்றியது தமிழர்களின் சமண சமயம்தான் 

அது உந்தத் திருமுருகனாருக்குத் தெரியுமோ? 

8 hours ago, Cruso said:

அவர்களும் சைவத்திலிருந்து பவுத்தத்துக்கு மாறினவர்களோ யாருக்கு தெரியும். 

இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டுபோன கதைதான்,....ம்ம்ம்ம்ம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, இணையவன் said:

இன்று ஒன்றுக்கும் பயனில்லாத இந்த மதங்கள் அவசியம்தானா ?

மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்? என்னென்ன பிரயோசனங்களை தர வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

13 minutes ago, குமாரசாமி said:

மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்? என்னென்ன பிரயோசனங்களை தர வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

இன்று உலகில் நடக்கும் மனித அடக்குமுறைகளுக்கும் போர்களுக்கும் முக்கிய காரணம் மதம். 

மதத்தைப் புறக்கணிக்கும் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் அமைதியும் பாதுகாப்பும் மனித ஒழுக்கமும் அதிகமாக உள்ளது. ஒருசில விதி விலக்குகள் இருக்கலாம். 

இன்று மனிதனாக வாழ மதம் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இணையவன் said:

இன்று உலகில் நடக்கும் மனித அடக்குமுறைகளுக்கும் போர்களுக்கும் முக்கிய காரணம் மதம். 

மதத்தைப் புறக்கணிக்கும் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் அமைதியும் பாதுகாப்பும் மனித ஒழுக்கமும் அதிகமாக உள்ளது. ஒருசில விதி விலக்குகள் இருக்கலாம். 

இன்று மனிதனாக வாழ மதம் தேவையில்லை.

உங்கள் கருத்து ஏற்புடையதே. ஆனால் மதத்தைப் போல ஒரு பொலிஸ் உலகில் இருக்கமுடியாது.?? அந்த வகையில் இருந்து விட்டு போகட்டுமே? 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, இணையவன் said:

இன்று மனிதனாக வாழ மதம் தேவையில்லை.

ஆம்  பழைய காலத்தில்  சட்டம் இயற்ற பாராளுமன்றம் இல்லாத காலப்பகுதியில் மனித சமுதாயத்தினை  நல்வழிப்படுத்த  சமயங்களும் அவற்றின் கோட்பாடுகளும். உதவியாக இருந்தது  இன்று நிறைய சட்டங்களுண்டு   இயற்றவும் முடியும்   எனவே மதம்” தேவையற்றது தான்  

42 minutes ago, குமாரசாமி said:

மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்? என்னென்ன பிரயோசனங்களை தர வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அப்படி கடத்தாமல் நாம் புத்த மதத்தில் இருந்து கொண்டு சைவ சமயத்தை சிங்களவருக்கு கடத்தியிருக்கலாம். 😂😂

புத்தன்    இயர்பெயர் சித்தாத்தன் [ர்] அவர் தமிழன்   தமிழனை தானே  வழிபாடுகிறார்கள். பின்பற்றுகிறார்கள்  என்பதால் பேசாமல் விட்டுவிட்டுவிட்டார்கள். 😂🤣 யார் கண்டார்கள்  தமிழன் தலைமையில் குண்டுகள் போட்டு  தமிழன் காணிகள் அபகரிக்கப்படுமென்று  

1 hour ago, விசுகு said:

உங்கள் கருத்து ஏற்புடையதே. ஆனால் மதத்தைப் போல ஒரு பொலிஸ் உலகில் இருக்கமுடியாது.?? அந்த வகையில் இருந்து விட்டு போகட்டுமே? 

போலிஸ் அல்ல ரவுடி. ஒவ்வொரு கடவுளும் தாம்தான் பெரியவர் உண்மையானவர் என்றே கூறுகின்றனர். கும்பிடுபவனுக்குச் சொர்க்கம், கும்பிடாதவனுக்கு நரகத்தில் சித்திரவதை. சில மதங்கள் இன்னும் மேலே சென்று அந்த மதத்தைப் பின்பற்றாதவர் எல்லோருக்கும் நரகம் என்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

என்னத்த சொல்லுறது?

புத்த மத வளர்ச்சிக்கு இந்தியா காசை அள்ளிக் கொடுக்கும் போது, பேசாமல் சீனாவுடன் பேசி சைவத்தை காக்க வேணும்!

மகா நாயக்கர்கள் எல்லோரும் தற்போது இந்தியாவின் அரவணைப்பில் என்பது தமிழ்த் தலைமைகளுக்கும் டமிலர்களுக்கும் புரியவில்லை. 

சிலோன் டமில்ஸ் எல்லோரும் இப்பொழுது எல்லோருக்கும் கறிவேப்பிலையானோம். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, இணையவன் said:

 ஒவ்வொரு கடவுளும் தாம்தான் பெரியவர் உண்மையானவர் என்றே கூறுகின்றனர். 

இவ்வாறு எந்த கடவுளும் சொன்னதாக அல்லது சொல்வதாக நான் அறியவில்லை. ஆனால் கடவுளை கும்பிடுவோர் இவ்வாறு செய்கிறார்கள். இது தவறான அணுகுமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

''மதம்'' ஒரு அபின் என கார்ல் மார்க்ஸ் கூறினார். மத (வெறி) வைராகியதால் ஏட்படட வான் செயல்களை பார்த்து அவர் அவ்விதம் கூறினார். தமிழில் ''சமயம் '' என்பது நேரத்திட்கு ஏற்றாற்போல கொள்கை மாற்றும் போக்கு என அர்த்தப்படும். அதாவது, சந்தர்பத்திட்கு ஏற்றாற்போல சமயத்திட்கு சமயம் மாறி மாறி கொளகைகளை வகுத்தல். '' மறை '' என்பது மறைத்து வைத்தால். அதாவது சத்தியத்தை மறைத்து பொய்யான கட்பனைகளை பேசுதல். எனவே நாத்திகம் பேசுவோருக்கு மதம், சமயம், மறை என்னும் தமிழ் சொற்கள் பொருந்தி வருவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, இணையவன் said:

இன்று உலகில் நடக்கும் மனித அடக்குமுறைகளுக்கும் போர்களுக்கும் முக்கிய காரணம் மதம். 

மதத்தைப் புறக்கணிக்கும் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் அமைதியும் பாதுகாப்பும் மனித ஒழுக்கமும் அதிகமாக உள்ளது. ஒருசில விதி விலக்குகள் இருக்கலாம். 

இன்று மனிதனாக வாழ மதம் தேவையில்லை.

மத கலவரத்தை விட இன,நிற பேத கலவரங்களுக்கு  உங்களிடம் பதில் இருக்கா இல்லையா என தெரியவில்லை. இருந்தாலும்  மதங்கள் நல்லதையே போதிக்கின்றன. அதை ஆறறிவு படைத்த,விஞ்ஞான அறிவு/ பகுத்தறிவு படைத்த மனிதனே துர்பிரயோகம் செய்கின்றான்.

399901455_882538963243638_66181861359588

ஒரு ஒரு விளக்கத்திற்காக மட்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Kandiah57 said:

ஆம்  பழைய காலத்தில்  சட்டம் இயற்ற பாராளுமன்றம் இல்லாத காலப்பகுதியில் மனித சமுதாயத்தினை  நல்வழிப்படுத்த  சமயங்களும் அவற்றின் கோட்பாடுகளும். உதவியாக இருந்தது  இன்று நிறைய சட்டங்களுண்டு   இயற்றவும் முடியும்   எனவே மதம்” தேவையற்றது தான்  

நல்வழிப்படுத்தும் கொள்கைகளை சொல்லும் மதங்கள் தேவையில்லை. ஆனால் மனிதனை அழிக்க ஆயுதங்களை  தயாரிக்கும் நாடுகளின் ஆதரவு தேவையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நல்வழிப்படுத்தும் கொள்கைகளை சொல்லும் மதங்கள் தேவையில்லை. ஆனால் மனிதனை அழிக்க ஆயுதங்களை  தயாரிக்கும் நாடுகளின் ஆதரவு தேவையாக்கும்.

ஆயுதங்களையும் தயாரிக்கும்  நாடுகளையும். நான் ஆதரிக்கவில்லை  எப்போது  ??எங்கே?? ஆதரித்தேன்  ஆனாலும் அதிகாலம் தொட்டு ஆயுதங்கள் உண்டு  அன்று வில். கல் அம்பு .....நெருப்பு    குதிரைப்படை யானைப்படை,..போன்றன. பாவனையிலிருந்தன   உங்கள் இறைவன் இராமர். குரங்கையும். விட்டு வைக்கவில்லை    தயவுசெய்து  மதம் கண்டிப்பாக தேவை என்பதற்குயான. காரணங்களை முன் வையுங்கள்    என்னிடம் மதம் தேவையற்றது  என்பதற்கு காரணங்கள் நிறைய உண்டு  அவற்றை எழுதி  நீங்கள் கோயிலுக்கு போய் மடப்பள்ளியை வழிபாடுவதை   கெடுக்க. விரும்பவில்லை  😁🤣😁😂🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.