Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது சர்வதேச கிரிக்கெட் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 NOV, 2023 | 09:06 PM
image

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐசிசி மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை தனது கடப்பாடுகளை பாரதூரமாக மீறிவிட்டதாக தீர்மானித்துள்ளது.

குறிப்பாக இலங்கை கிரிக்கெட் தனது நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுப்பது மற்றும் தனது நிர்வாகத்தில்  அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருப்பது போன்றவை மீறப்பட்டுள்ளன.

இடைநிறுத்தத்திற்கான நிபந்தனைகள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169024

  • கருத்துக்கள உறவுகள்

வடை  போச்சா??

விளையாட்டு  வேற 

அரசியல்  வேற  என  நம்ம தம்பிகள் வேட்டியை அவிழ்த்து  போட்டு திரிய வேண்டியது  தான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சந்தி சிரிக்குது இலங்கை அணியின் கிரிக்கெட் நிலமையை பார்த்து.

தரமும் இல்லை  ஒரு உலககோப்பை போட்டியில் மைதானத்திற்குள் நுழையும் முன்னர் எதை எதை சரி பார்க்கவேண்டும் என்ற அறிவும் இல்லை.

சிங்களவர் தவிர்ந்த எந்த இனத்துக்கும் அணிக்குள் அனுமதி இல்லை. இப்படி ஏகப்பட்ட அதிவிசேட தகுதிகளை தன்னகத்தே கொண்ட அணி.

சில சிங்களவர்களுடன் பேசும்போது தமிழர் முஸ்லீம் மட்டுமல்ல, சிங்களவர்களுக்குள்ளேயே உண்மையான திறமை வாய்ந்த பலருக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்,.

இலங்கை கிரிக்கெட் ஒரு குழுவின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது என்றும் அவர்களை மீறி திறமை இருக்கும் சாதாரண சிங்களவர்கள்கூட அணியுள் நுழைய முடியாது என்று அழுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமை நீக்கம்.

சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசியின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறிப்பாக, அதன் விடயங்கள் சுயாதீனமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரச தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1358219

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி!  👏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:
10 NOV, 2023 | 09:06 PM
image

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐசிசி மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச கிரிக்கெட் பேரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை தனது கடப்பாடுகளை பாரதூரமாக மீறிவிட்டதாக தீர்மானித்துள்ளது.

குறிப்பாக இலங்கை கிரிக்கெட் தனது நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுப்பது மற்றும் தனது நிர்வாகத்தில்  அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருப்பது போன்றவை மீறப்பட்டுள்ளன.

இடைநிறுத்தத்திற்கான நிபந்தனைகள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169024

இந்த‌ த‌டை இர‌ண்டு வ‌ருட‌ம் நீடித்தால் இல‌ங்கை அணி கென்னியா அணி போல் காணாம‌ல் போய் விடும்

சிங்க‌ள‌வ‌ன் ஜ‌சிசியின் சொல்லுக்கு க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌ப்போம் என்று அவ‌ர்க‌ளின் காலில் போய் விழுவாங்க‌ள்.............

  • கருத்துக்கள உறவுகள்

ம்.......நடக்கட்டும், நல்லதே நடந்திருக்கு.........!  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

சந்தி சிரிக்குது இலங்கை அணியின் கிரிக்கெட் நிலமையை பார்த்து.

தரமும் இல்லை  ஒரு உலககோப்பை போட்டியில் மைதானத்திற்குள் நுழையும் முன்னர் எதை எதை சரி பார்க்கவேண்டும் என்ற அறிவும் இல்லை.

சிங்களவர் தவிர்ந்த எந்த இனத்துக்கும் அணிக்குள் அனுமதி இல்லை. இப்படி ஏகப்பட்ட அதிவிசேட தகுதிகளை தன்னகத்தே கொண்ட அணி.

சில சிங்களவர்களுடன் பேசும்போது தமிழர் முஸ்லீம் மட்டுமல்ல, சிங்களவர்களுக்குள்ளேயே உண்மையான திறமை வாய்ந்த பலருக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்,.

இலங்கை கிரிக்கெட் ஒரு குழுவின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது என்றும் அவர்களை மீறி திறமை இருக்கும் சாதாரண சிங்களவர்கள்கூட அணியுள் நுழைய முடியாது என்று அழுகிறார்கள்.

மீசாலை அருகில்

த‌மிழ் பெடிய‌ன்  ல‌சித் ம‌லிங்காவை போல் ப‌ந்து வீச‌க் கூடிய‌வ‌ர்..........ஒருப‌டி மேல‌ சொல்ல‌னும் என்றால் ம‌லிங்காவை விட‌ த‌மிழ் பெடிய‌னின் ப‌ந்து வீச்சு அருமை.............ஆனால் அந்த‌ பெடிய‌னுக்கு  இல‌ங்கை அணியில் விளையாடும் வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வில்லை............

இல‌ங்கை அணியில் விளையாடின‌ த‌மிழ‌ர்க‌ள் மிஞ்சி போனால் 5பேருக்குள்ளை 

அதில் முத்தையா முர‌ளித‌ர‌ன் முத‌ல் இட‌ம்

இர‌ண்டாவ‌து தில‌க‌ர‌த்தின‌ தில்ஷான்

இவ‌ரின் பெய‌ர் சிங்க‌ள‌ம்

பிற‌ப்பால் த‌மிழ‌ர்

மூன்றாவ‌து முஸ்லிம் த‌மிழ‌ன் மாருவ்

நான்காவ‌து அருன‌ட்

இவ‌ரின் தாய் சிங்க‌ள‌ம்

த‌க‌ப்ப‌ன் த‌மிழ‌ன்

இவ‌ர் த‌மிழ் சிங்க‌ள‌ம் ஆங்கில‌ம் மூன்று மொழியும் ந‌ல்லா க‌தைப்பார்

 

இவ‌ர்க‌ளுக்கு பிற‌க்கு இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் இடை சுக‌ம் விளையாடினார்க‌ள்.............இவ‌ர்க‌ளையும் சிங்க‌ள‌ம் ஓர‌ம் க‌ட்டி விட்ட‌து.........ஒருவ‌ர் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் அப்ப‌ அப்ப‌ ந‌ல்லா ப‌ந்து போடுவார் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான திறமையான முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

“கிரிபத்” கிண்டி சாப்பிட வேணும் போலை இருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் மகிழ்ச்சியை கொடுக்கும் அளவுக்கு என்ன உள்ளது?

ஏற்கனவே குழம்பிய குட்டையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் பெரிய பாறாங்கல்லை தூக்கி வீசியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நியாயம் said:

இந்த செய்தியில் மகிழ்ச்சியை கொடுக்கும் அளவுக்கு என்ன உள்ளது?

ஏற்கனவே குழம்பிய குட்டையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் பெரிய பாறாங்கல்லை தூக்கி வீசியுள்ளது. 

இந்திய‌ன்ட‌ காலில‌ சிங்க‌ள‌வ‌ன் போய் விழுவான் தீர்ப்பு பிற‌க்கு மாற்றி எழுத‌ ப‌டும்............இப்ப‌டி  
ஜ‌சிசி முழுக்க‌ முழுக்க‌ இந்திய‌ன்ட‌ க‌ட்டுப் பாட்டுக்கை இருக்கு.............சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு தெரியும் கிரிக்கேட் மீது ஆவ‌த்து வ‌ந்தா சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் குழ‌ம்பி போய் விடுவின‌ம்  என்று..............சிறில‌ங்கா கிரிக்கேட் வாரிய‌ம் ஜ‌சிசியிட‌ம் முறையிடும் இனி கிரிக்கேட்டுக்குள் அர‌சிய‌ல் இருக்காம‌ பார்த்து கொள்ளுகிறோம்

இத‌ற்கு முத‌லும் ஜ‌சிசி சிறில‌ங்கா கிரிக்கேட் வாரிய‌த்தை எச்ச‌ரித்த‌வை............ஆனால் இந்த‌ எச்ச‌ரிக்கை அவ‌ர்க‌ளை ஆட்ட‌ம் காண‌ வைச்சு இருக்கு 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசி உறுப்புரிமை நீக்கம்.

சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசியின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறிப்பாக, அதன் விடயங்கள் சுயாதீனமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரச தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1358219

மதுரைக்கு வந்த சோதனை. ரனிலுக்கு எவ்வளவு வேலை இருக்கு. கிறிக்கட்  நிர்வாகத்துக்குள்ளும் மூக்கை ஏன் நுழைத்தவர்??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

மதுரைக்கு வந்த சோதனை. ரனிலுக்கு எவ்வளவு வேலை இருக்கு. கிறிக்கட்  நிர்வாகத்துக்குள்ளும் மூக்கை ஏன் நுழைத்தவர்??

குள்ள‌ ந‌ரி ர‌னிலுக்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம்
மேற்க்க‌த்தைய‌ ஊட‌க‌ம் கேட்ட‌ கேள்விக்கெல்லாம் ஆனுவ‌த்துட‌ன் ப‌தில் சொன்னார்
 

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்திலும் உப்பிடி ஒன்று வந்து பிறகு சமாளிச்சுப் போட்டினம் ..இதையும் அப்பிடிச் செய்வினம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி திடீரென இடைநீக்கம் செய்தது ஏன்? இதன் பாதிப்பு என்ன?

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தற்காலிகமாக நீக்கிய ஐசிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 10 நவம்பர் 2023

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை உடன் அமலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தமது கடமைகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று கூடிய போது இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம், அரசியல் தலையீடு ஆகிய காரணங்களே சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கூண்டோடு கலைத்த அரசு

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தற்காலிகமாக நீக்கிய ஐசிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்த பின்னணியில், உலகக்கோப்பை போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இது, இலங்கை அரசியலில் பல தாக்கத்தைச் செலுத்தியது.

இந்நிலையில், இந்திய அணியுடனான உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்தது.

அதையடுத்து, இலங்கை அணியின் படுதோல்விக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளே காரணம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்க அறிக்கையொன்றின் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தனது ராஜினாமா கடிதத்தைக் கையளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு புதிய இடைக்கால குழுவொன்றை விசேட வர்த்தமானி ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்திருந்தார்.

முன்னாள் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

 

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணைகளை அடுத்து, இடைக்கால குழுவை தற்காலிகமாக இடைநிறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்த தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் சபைக்கு கொண்டு வரப்பட்டு, நேற்று காலை முதல் விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் பின்னர் நேற்று மாலை இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை இன்று தடை செய்துள்ளது.

 

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு

இலங்கை கிரிக்கெட் வாரியம்

பட மூலாதாரம்,R. SIVARAJA

இலங்கை கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்ததானது, நாட்டிற்கு அபகீர்த்தி என தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

இலங்கையின் அரசியல் தலையீடு காரணமாக ஏற்படும் நிர்வாக சீர்கேடுக்கு இதுவொரு உதாரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.

சர்வதேச தரத்திலான அணியொன்றை இலங்கை உறுதி செய்தாலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான உதவிகளை எதிர்வரும் காலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்காது எனவும், அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cxe1kxn5vd1o

  • கருத்துக்கள உறவுகள்

யார் எங்கு எதை நிறுத்தி ......... எமக்கு என்ன லாபம்?
இளைஞர்களை வெறும் சோம்பேறிகள் ஆக்கும் இந்த கேடு கெட்ட விளையாடடை 
வடக்கு கிழக்கில் ஊக்குவிப்பதை முதலில் நிறுத்தவேண்டும் 
உடலுக்கு வலு சேர்க்கும் Football கால்பந்து   Basketball கூடைப்பந்து கிளித்தட்டு போன்ற விளையாட்டுகளை 
முதன்மை படுத்த வேண்டும் 

யாரவது நன்றாக பந்து வீசுறவன்  அடிக்கிறவன் பிடிக்கிறவன் இருப்பின் 
அவர்களுக்கு ஒரு கழகத்தை மாவட்ட ரீதியில் வைத்துக்கொள்ளலாம் 

மாலை வேளைகளில் விளையாடும் விளையாட்டாக இது இருப்பது ஒரு சோம்பேறி கூட்டத்தையே உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சர்வதேச கிரிக்கெட் சபையின் தீர்மானம் குறித்து மேன்முறையீடு

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தீர்மானம் குறித்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தெரிவி;த்தார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் மேன்முறையீட்டு செயற்பாடுகள் இடம்பெறும்.

அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் சபையிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2023/1358227

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

400833101_727735912724717_34154088828391

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலிலும் விளையாட்டிலும் ஏனைய துறைகளிலும் தமிழர்களைப் புறக்கணித்த சிறிலங்கா இன்று மிகமிகக் கேவலமான நிலையில் இருக்கிறது.ஆனால் இதனை உணர சிங்க பெளத்த பேரினவாதம் விடாது. சிங்களம் தன்னாலே தான் அழியப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ICC-யின் தடை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) விதித்த தடை குறித்து கேள்வி எழுப்பியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இது தொடர்பில் இலங்கை சர்வதேச கிரிக்கட் நிர்வாக சபையிடம் முறையிடும் என உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சில் இன்று (நவம்பர் 10) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐ.சி.சி இந்த தடையை திடீரென அமுல்படுத்தியமை அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.

எந்தவித முன்னறிவிப்பு அல்லது எச்சரிக்கையும் இன்றி தடை விதிக்கப்பட்டதாகவும், இது போன்ற விஷயங்களில் வழக்கமாக பின்பற்றப்படும் ஐசிசி நடைமுறைகளுக்கு முரணாக இருப்பதாகவும் அமைச்சர் விளக்கினார்.

"இது நெறிமுறையல்ல, ஆச்சரியம்", என்று விளக்கிய ரணசிங்க, ஐசிசியின் நடுவர் விதிகளின்படி, ஐசிசியில் இருந்து ஒரு நாட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு முன், உலகளாவிய கிரிக்கெட் அமைப்பு அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட உறுப்பு நாட்டிற்கு அறிவிக்க வேண்டும். 

ஒரு பொதுக் கூட்டம் (AGM), அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நாட்டின் உறுப்பினர் முதல் அறிவிப்பு திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படலாம்.

“அவர்கள் எப்படி நம் நாட்டை இப்படிக் கண்டிக்க முடியும்? அவர்கள் எமக்குத் தெரிவிக்காமல் எமது நாட்டைக் கண்டித்தனர்”, என்று அமைச்சர் கூறினார்.

இதனால், இலங்கையின் உறுப்புரிமை தடைசெய்யப்பட்ட காரணங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து ஐசிசியிடம் முதலில் கேள்வி எழுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் தோல்வியுற்றால், இது தொடர்பாக இலங்கை ஐசிசியிடம் முறையிடும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். R

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ICC-யின்-தடை-குறித்து-விளையாட்டுத்துறை-அமைச்சர்-அதிரடி-அறிவிப்பு/175-327811

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம் - வெளியானது புதிய தகவல் !

11 NOV, 2023 | 11:17 AM
image

இலங்கை கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமைவாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரிக் இன் போ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை எடுப்பதற்காக கூடிய கூட்டத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வா, கலந்துகொண்டிருந்ததாகவும் கிரிக் இன் போ அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கூடவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்திலும் ஷமி சில்வா கலந்துக்கொள்ளவுள்ளதாக அந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 2014 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்திற்குள் கிரிக்கெட் இடைகால குழுவொன்று செயற்பட்டமையை, சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டிருந்ததாக கிரிக் இன் போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிகெட்டில் அரசாங்கம் தலையிடுவதைத் தடுக்கும் முகமாக  இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/169032

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

யார் எங்கு எதை நிறுத்தி ......... எமக்கு என்ன லாபம்?
இளைஞர்களை வெறும் சோம்பேறிகள் ஆக்கும் இந்த கேடு கெட்ட விளையாடடை 
வடக்கு கிழக்கில் ஊக்குவிப்பதை முதலில் நிறுத்தவேண்டும் 
உடலுக்கு வலு சேர்க்கும் Football கால்பந்து   Basketball கூடைப்பந்து கிளித்தட்டு போன்ற விளையாட்டுகளை 
முதன்மை படுத்த வேண்டும் 

யாரவது நன்றாக பந்து வீசுறவன்  அடிக்கிறவன் பிடிக்கிறவன் இருப்பின் 
அவர்களுக்கு ஒரு கழகத்தை மாவட்ட ரீதியில் வைத்துக்கொள்ளலாம் 

மாலை வேளைகளில் விளையாடும் விளையாட்டாக இது இருப்பது ஒரு சோம்பேறி கூட்டத்தையே உருவாக்கும்.

நீங்க‌ள் சொல்லுவ‌து இந்தியாவுக்கு ரொம்ப‌ பொருந்தும்

இத்த‌ன‌ கோடி ம‌க்க‌ளை வைத்து இருக்கிம் இந்தியா புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டியில் இர‌ண்டு ப‌த‌க்க‌ங்க‌ளுட‌ன் நாடு திருப்பின‌ம்

அமெரிக்க‌ன் நூறுக்கு மேல் ப‌ட்ட‌ ப‌த‌க்க‌ங்க‌ள் வென்று கொண்டு போகின‌ம்

இந்தியாவில் விளையாட்டு அக்க‌டாமிக‌ள் மிக‌ மிக‌ குறைவு

அமெரிக்காவில் Basketball கில‌ப் 200க்கு மேல் ஆனால் அதிம் ம‌க்க‌ள் விரும்பி  பார்ப்ப‌து (NBA  ) Basketball

அமெரிக்க‌ர்க‌ள் NFL விளையாட்டுக்கு அமெரிக்க‌ர்க‌ள் அடிமை 

இந்திய‌ர்க‌ள் IPL விளையாட்டை அதிக‌ம் விரும்பி பார்க்கின‌ம்

ஆனால் இந்த் இர‌ண்டு விளையாட்டும் ஒலிம்பிக்கில் இல்லை

அப்ப‌டி இருந்தும் அமெரிக்காவில் ப‌ல‌ விளையாட்டுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தால் தான் அமெரிக்கா நாட்டை சேர்ந்த‌ ஆண்க‌ள் பெண்க‌ள் எல்லா ப‌த‌க்க‌ங்க‌ளையும் வெல்லுகின‌ம் 

அடுத்த‌ வ‌ருட‌ம் பிரான்ஸ்சில் ந‌ட‌க்கும் ஒலிம்பிக்கில் கூட‌ அமெரிக்க‌ன்ட‌  ஆதிக்க‌ம் தான் கூட‌ இருக்கும்🥰🙏

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாட தயார்.

கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்காலக் குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கினால், எதிர்வரும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆதரவை அர்ஜுன ரணதுங்கவுக்கு வழங்கப்படும்.

அத்துடன் சர்வதேச கிரிக்கட் பேரவை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும், இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1358284

  • கருத்துக்கள உறவுகள்

401162790_728071679357807_34707225494766

 

400881249_728199689345006_57187013144837

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.