Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஷ்பு இலங்கை வரக் கூடாது; புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு இலங்கை வரக் கூடாது; புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு

5-17.jpg

‘ஸ்டார்’ நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல உள்ள நடிகை குஷ்புவுக்கு, விடுதலை புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன், தமிழக திரைப்பட கலைஞர்கள் அவ்வப்போது இலங்கை சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கை.

கடந்த, 2009ல் விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக முடக்கப்பட்ட பின், திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்வது படிப்படியாக குறைந்தது. அதற்கு அங்கு நிலவிய குழப்பமான அரசியல் சூழலே காரணம்.

சமீப காலமாக கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரைப்பட கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி நடத்தினார்.

நடிகை குஷ்பு, வரும், 21ல் யாழ்ப்பாணம் முற்றுவெளி மைதானத்தில் நடக்க உள்ள இசை நிகழ்ச்சியில், பாடகர் ஹரிஹரனுடன் பங்கேற்க உள்ளார். ஆனால், இலங்கைக்கு வரக் கூடாது என குஷ்புவுக்கு விடுதலை புலி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை குஷ்பு பா.ஜ.,வில் தேசிய பொறுப்பில் உள்ளார். புலி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, ‘அந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தான்’ என, கருத்து கூறினார்.

இதனால், இலங்கையில் உள்ள புலி அமைப்பு ஆதரவாளர்கள் குஷ்புவை எதிர்ப்பாளராக கருதுகின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழக நடன கலைஞர்கள், ‘சந்தோஷ் நாராயணன் நிகழ்ச்சிக்கும் இப்படி தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், போலீஸ் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

‘அதே போலவே, குஷ்பு, ஹரிஹரன் ஆகியோர் இணைந்து நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்படும்’ என்கின்றனர்.

https://akkinikkunchu.com/?p=260955

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி நடத்தினார்.

அக்கினி குஞ்சு தமிழ்நாட்டு பத்திரிக்கையோ.  அந்த இசையமைப்பாளர் யாழ்பாணத்தில் வரலாறு காணத பிரமாண்டமான இசைநிகழ்ச்சியை நடத்தினார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தில் களியாட்ட நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து மக்களை முட்டாளாக்க நினைப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

(இந்தச் செய்தியின் அடிப்படை என்ன என்று யாருக்காவது தெரியுமா?)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

சமீப காலமாக கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரைப்பட கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி நடத்தினார்.

முற்று முழுதாக் இலவசமாகவே இந்த நிகழ்ச்சி என்று கூறினார்களே?

மற்றவர்கள் எவரும் இலவசமாக நடாத்தியதாக தெரியவில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் பயங்கரவாதிகளிடம் பிச்சை எடுக்க வருகிறாராம் நடிகை குஷ்பு. களியாட்டக் கூடாரமாக மாறும் ஈழம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

முற்று முழுதாக் இலவசமாகவே இந்த நிகழ்ச்சி என்று கூறினார்களே?

மற்றவர்கள் எவரும் இலவசமாக நடாத்தியதாக தெரியவில்லை.

அப்போ இலவசமாக நடத்தபட்ட இசைநிகழ்ச்சி என்று வந்த செய்திகள் எல்லாம்  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:
8 hours ago, ஈழப்பிரியன் said:

முற்று முழுதாக் இலவசமாகவே இந்த நிகழ்ச்சி என்று கூறினார்களே?

மற்றவர்கள் எவரும் இலவசமாக நடாத்தியதாக தெரியவில்லை.

அப்போ இலவசமாக நடத்தபட்ட இசைநிகழ்ச்சி என்று வந்த செய்திகள் எல்லாம்

நானும் இலவச நிகழ்ச்சி என்று தானே போட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் இலவச நிகழ்ச்சி என்று தானே போட்டிருக்கிறேன்.

ஓம் . நான் தான் நீங்கள் (என்று கூறினார்களே?) என்று கேள்வி  கேட்டதை வைத்து தவறாக விளங்கி கொண்டுவிட்டேன்.

16 hours ago, கிருபன் said:

குஷ்பு இலங்கை வரக் கூடாது; புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு

5-17.jpg

‘ஸ்டார்’ நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல உள்ள நடிகை குஷ்புவுக்கு, விடுதலை புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன், தமிழக திரைப்பட கலைஞர்கள் அவ்வப்போது இலங்கை சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கை.

கடந்த, 2009ல் விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக முடக்கப்பட்ட பின், திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்வது படிப்படியாக குறைந்தது. அதற்கு அங்கு நிலவிய குழப்பமான அரசியல் சூழலே காரணம்.

சமீப காலமாக கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரைப்பட கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி நடத்தினார்.

நடிகை குஷ்பு, வரும், 21ல் யாழ்ப்பாணம் முற்றுவெளி மைதானத்தில் நடக்க உள்ள இசை நிகழ்ச்சியில், பாடகர் ஹரிஹரனுடன் பங்கேற்க உள்ளார். ஆனால், இலங்கைக்கு வரக் கூடாது என குஷ்புவுக்கு விடுதலை புலி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை குஷ்பு பா.ஜ.,வில் தேசிய பொறுப்பில் உள்ளார். புலி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, ‘அந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தான்’ என, கருத்து கூறினார்.

இதனால், இலங்கையில் உள்ள புலி அமைப்பு ஆதரவாளர்கள் குஷ்புவை எதிர்ப்பாளராக கருதுகின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழக நடன கலைஞர்கள், ‘சந்தோஷ் நாராயணன் நிகழ்ச்சிக்கும் இப்படி தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், போலீஸ் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

‘அதே போலவே, குஷ்பு, ஹரிஹரன் ஆகியோர் இணைந்து நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்படும்’ என்கின்றனர்.

https://akkinikkunchu.com/?p=260955

1. இவ் நிகழ்வு நிகழ இருப்பது டிசம்பர் 21 இல்.

2. குஷ்பு புலிகளை பயங்கர வாதிகள் என்றது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது 

என் கேள்வி

புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வது மட்டுமன்றி அவர்களை காட்டிக் கொடுத்து, துணை இராணுவ குழுவாக இயங்கிய ஈபிடிபி யின் செயலாளர் நாயகத்தை எம் பி ஆக தெரிவு செய்ததும் இதே யாழ்ப்பாண மக்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

 உங்களுக்கு சனி பகவானின் திசை போல,.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

1. இவ் நிகழ்வு நிகழ இருப்பது டிசம்பர் 21 இல்.

2. குஷ்பு புலிகளை பயங்கர வாதிகள் என்றது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது 

என் கேள்வி

புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வது மட்டுமன்றி அவர்களை காட்டிக் கொடுத்து, துணை இராணுவ குழுவாக இயங்கிய ஈபிடிபி யின் செயலாளர் நாயகத்தை எம் பி ஆக தெரிவு செய்ததும் இதே யாழ்ப்பாண மக்கள் தானே?

அது வேறு இது வேறு  ஈபிடிபி   வேலைவாய்ப்பு கொடுத்தது  இரண்டு மூன்று இலட்சம் வேண்டினாலும்  பிரச்சனையில்லை   ஆனால் குஷ்பு என்ன கொடுத்தார் ?? அல்லது கொடுப்பார்?? ஒன்றுமில்லை  எங்களது சல்லியையும்  அள்ளி கொண்டு போய் விடுவார்கள்  தேவையா ???    நான் ஈபிடிபி இன் ஆதரவாளன் இல்லை   குஷ்புவின். ரசிகனும் இல்லை   😂😂

41 minutes ago, Kandiah57 said:

அது வேறு இது வேறு  ஈபிடிபி   வேலைவாய்ப்பு கொடுத்தது  இரண்டு மூன்று இலட்சம் வேண்டினாலும்  பிரச்சனையில்லை   ஆனால் குஷ்பு என்ன கொடுத்தார் ?? அல்லது கொடுப்பார்?? ஒன்றுமில்லை  எங்களது சல்லியையும்  அள்ளி கொண்டு போய் விடுவார்கள்  தேவையா ???    நான் ஈபிடிபி இன் ஆதரவாளன் இல்லை   குஷ்புவின். ரசிகனும் இல்லை   😂😂

இவ்வாறு பார்த்தால், தென்னிந்திய சினிமா கலைஞர்கள் மட்டுமல்ல, விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரைத் தவிர, உலகின் எந்த மூலையிலும் இருந்தும் எந்தக் கலைஞர்களையும் வர விடக் கூடாது அல்லவா?

இந்த வடிகட்டல்களை ஏன் தாயக மக்களிடம் மட்டும் எதிர்பார்க்க வேண்டும்?  புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களை நோக்கி வரும் இவ்வாறான கலைஞர்கள் விடயத்திலும் இதை ஏன் கடைப்பிடிப்பது இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இதுதான்  இரட்டை வேடம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தைப் பார்த்து அக்கினிக்குஞ்சு செய்திகள் போட்டதால் திகதி, இடம் போன்ற தவறுகள் வந்துள்ளன!

குஷ்பு டிசம்பர் 21 க்கு யாழ்ப்பாணம் போகின்றாரா அல்லது கொழும்பு போகின்றாரா என்று குழப்பமாக இருக்கு!

உறுதியாகத் தெரிந்தால் ஒரு ரிக்கெற்றைப் போட்டுக்கொண்டு போய் களியாட்டத்தில் கலந்துகொள்ளலாம்😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

ஆனால் குஷ்பு என்ன கொடுத்தார் ?? அல்லது கொடுப்பார்??

குஷ்புவின் படங்களைப் பார்த்தது கிடைத்த சந்தோஷங்களை இவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டீர்களா?😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களை நோக்கி வரும் இவ்வாறான கலைஞர்கள் விடயத்திலும் இதை ஏன் கடைப்பிடிப்பது இல்லை?

இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க முடியாது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்ஜிக்காமல் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

குஷ்புவின் படங்களைப் பார்த்தது கிடைத்த சந்தோஷங்களை இவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டீர்களா?😁

குஷ்பு நடிக்க வந்தபோது நான் ஒரு டீன் ஏஜ் வயது பையன். இவரது உண்மையான பெயர் நக்கத். இவரது  சின்னத்தம்பி போன்ற படங்கள் பார்த்து  கிளர்சிசியடைந்த காலம் ஞாபகம் வந்து போகின்றது.  நக்கத், நக்கத் என்று இரவில் புலம்பி நா வரண்டுபோன நிலையில் காலையில் எழுது பார்த்தால் சாரமெல்லம் நனைது போய் இருக்கும் அது அருமையான கனா காலங்கள்.   

கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ
குஷ்பூ என் குஷ்பூ

உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
அல்லி ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா
முத்தம் ரெண்டு போடவா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

பொது வெளியில்...??🤪

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு ஊருக்கு வருவதை நானும் கண்டிக்கிறேன்..

தமன்னா நயன்தாரா,திரிசா சரி அதுதான் இல்லை எண்டா ஒரு சிநேக சிம்ரன் எண்டு ஒரு 45 வயசுக்குள்ள இந்த ரேஞ்சிலயாவது யாரையாவது கூட்டி வாறத விட்டிட்டு அப்பர்ர வயசு ஆக்களை கூட்டி வந்து என்ன இழவுக்கு அங்க போய் மினக்கெடுவான்..😡😡

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

அது வேறு இது வேறு  ஈபிடிபி   வேலைவாய்ப்பு கொடுத்தது  இரண்டு மூன்று இலட்சம் வேண்டினாலும்  பிரச்சனையில்லை   ஆனால் குஷ்பு என்ன கொடுத்தார் ?? அல்லது கொடுப்பார்?? ஒன்றுமில்லை  எங்களது சல்லியையும்  அள்ளி கொண்டு போய் விடுவார்கள்  தேவையா ???    நான் ஈபிடிபி இன் ஆதரவாளன் இல்லை   குஷ்புவின். ரசிகனும் இல்லை   😂😂

சல்லியை அள்ள கொடுப்பவர்கள் யார்??

நாம் முட்டாள்களாக இருக்கிறோமா??

அப்படியானால் ஒரு சினிமா பாடலைக் கூட நாம் கேட்கக்கூடாது அல்லவா??

2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

குஸ்பு ஊருக்கு வருவதை நானும் கண்டிக்கிறேன்..

தமன்னா நயன்தாரா,திரிசா சரி அதுதான் இல்லை எண்டா ஒரு சிநேக சிம்ரன் எண்டு ஒரு 45 வயசுக்குள்ள இந்த ரேஞ்சிலயாவது யாரையாவது கூட்டி வாறத விட்டிட்டு அப்பர்ர வயசு ஆக்களை கூட்டி வந்து என்ன இழவுக்கு அங்க போய் மினக்கெடுவான்..😡😡

நீங்கள் குஷ்புவின் அனுபவத்தை அறியாமல் பேசுகிறீர்கள்?? அது வேற!😜

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

1. இவ் நிகழ்வு நிகழ இருப்பது டிசம்பர் 21 இல்.

2. குஷ்பு புலிகளை பயங்கர வாதிகள் என்றது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது 

என் கேள்வி

புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வது மட்டுமன்றி அவர்களை காட்டிக் கொடுத்து, துணை இராணுவ குழுவாக இயங்கிய ஈபிடிபி யின் செயலாளர் நாயகத்தை எம் பி ஆக தெரிவு செய்ததும் இதே யாழ்ப்பாண மக்கள் தானே?

இலங்கையில் வாழும் மக்கள்  சுயமாக வேலைவழங்கும் நிறுவனங்களுடன் தொடரபு கொண்டு  விண்ணப்பிக்கவும் நேர்முகப்பரீட்சையில் தோன்றி  ஒருவேலையை அனத்து தகுதிகளை கொண்டுருந்தாலும். எடுக்க முடியாது  இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளும்  பாராளுமன்றத்தில் கோரி. வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக வழங்கப்படுகிறது   இந்த நடைமுறை இல்லை என்றால் டக்ளஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆக  யாழ்ப்பாணம் மக்கள் தெரிவு செய்யப்போவதில்லை அவர்கள் வேலை செய்து வாழ வேண்டுமாயின்  இப்படியாவர்களுக்கு  விரும்பாவிடினும். வாக்கு அளிக்க வேண்டிய நிர்பந்தம் மற்றும்படி டக்ளஸ் ஒரு சிறந்த தலைவர் என்று வாக்கு போட்டதாக நான் கருதவில்லை   

நிற்க   வெளிநாடுகளில்  இப்படி நிகழ்வுகளை அறிமுகம் செய்தது புலிகள் பணம் சேர்ப்பதற்ககா   2009 பிறகும் வியாபாரம் நோக்கில் தொடர்ந்து நடக்கிறது   நான் படம் பார்ப்பதில்லை  இசை நிகழ்வுகளுக்கு போவதும் இல்லை  விரும்பியவார்கள் பார்க்கலாம்  உலகமெங்கும்   குறிப்பாக தமிழ்நாடு  நிகழ்ச்சிகள்  பாடுபட்டுகட்டியெழுப்பிய  விடுதலை உணர்வுகள். 1950 ஆம் ஆண்டுக்கு  பின் தள்ளப்பட்டு விட்டது    இயக்கத்துக்கு மாதம் 25 யூரோ   கொடுப்பதற்க்கு   ஊரில் அம்மாவுக்கு சுகமில்லை,...எனக்கு கண் ஒப்பிரேசன். செய்யவேண்டும்,..மகனுக்கு  ரீயுசன்  பணம். கட்ட வேண்டும் ...இப்படி பல காரணம் சொல்லி தவணை கேட்பார் அல்லது சொல்வார்கள்  ஆனால் புதிய படம் வந்தவுடன்  100 யூரோ  150 யூரோ  க்கு குடும்பமாக  முதல் நாள் பார்ப்பார்கள்   2009  முன்பே இந்த நிலமை.   இப்போது சொல்ல தேவையில்லை   இலங்கை தமிழ் மக்களுக்கு விடுதலை உரிமை தேவையற்றது  என்று  வளர்த்து எடுக்கும் நிகழ்வுகள் இவை   எனக்கு இதில் இரட்டை வேடம் இல்லை    வடிவாகப் பார்த்து மகிழுங்கள் 

1 minute ago, Kandiah57 said:

இலங்கை தமிழ் மக்களுக்கு விடுதலை உரிமை தேவையற்றது  என்று  வளர்த்து எடுக்கும் நிகழ்வுகள் இவை   எனக்கு இதில் இரட்டை வேடம் இல்லை    வடிவாகப் பார்த்து மகிழுங்கள் 

நீங்கள் மேலே எழுதியிருப்பதன் உண்மையான நோக்கம், இது தான். நீங்கள் மட்டுமல்ல, குஷ்புவின் நிகழ்வு தொடக்கும் இதர அனைத்து இவ்வாறான நிகழ்வுகளையும் எதிர்க்கும் கூட்டத்தின் உண்மையான நோக்கமும் இதுதான். 

கொண்டாட்டங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும், பொழுது போக்கு நிகழ்வுகளிலும் தாயக மக்கள் ஈடுபட்டால், அவர்கள் விடுதலை உரிமை தேவையற்றது என முடிவெடுத்து விடுவார்கள் என எவ்வாறு நினைக்கின்றீர்கள்? 

தமக்கு அந்த விடுதலை உரிமை தேவை என்பதை  காட்டுவதற்கு அவர்கள் விரதமும் உபவாசமும் தான் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? 

வேறு எவற்றை எல்லாம் அவர்கள் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றீர்கள் என புலம்பெயர்ந்த நாட்டில் எல்லாவற்றையும் அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் ஒரு பட்டியலை தயாரித்து அவர்களுக்கு அனுப்பி வைத்தால், அவர்கள் அதை ஒவ்வொன்றாக கடைப்பிடிக்க வசதியாக இருக்கும் என நம்புகின்றேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் டிவியில மாணட மயிலாட போட்டு மகிழ்ந்தவர்கள் இன்று அதே முள்ளிவாய்க்காலில் வந்து படம் பிடித்து போடவேண்டிய நிலை 

இந்த நடனக்காரி கலா மாஸ்டர் தான் அதை நடத்தி தமிழரின் உணர்வை வெளிவராமல் கருணாநிதிக்கு உதவினார் காலம் எவ்வளவு அற்புதமானது அது இவ்வளவு விரைவாக எம் கண் முன்னே மாறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் 

ஆனால் இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் காரணம் என்றால் அது மிகையல்ல இதை இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணனே புலம்பெயர்ந்த தமிழர்களே நமக்கு சோறு போடும் கடவுள்கள் என்று தெளிவாக கூறிவிட்டார் 

சந்தை என்று ஒன்று இருந்தால் அதில் விற்பனை செய்ய வியாபாரிகள் வரத்தான் செய்வார்கள் 

எனவே தம் சந்தைக்கு வரும் [கலை]வியாபரிகளை தெரிவு செய்யும் பொறுப்பு புலம்பெயர் தமிழருக்கு உண்டு” 

அதை அவர்கள் சரியாகவே செய்வார்கள் என நம்புகிறேன் 

குறிப்பு,.முகநூலில் வந்ததுமுள்ளிவாய்க்கால்  என்ற போட்டுக்கு பக்கத்தில் கலா மாஸ்டர் நின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப குஷ்பு இலங்கைக்கு வரவேண்டுமா இல்லையா ஒண்டுமே விளங்கமாட்டன் எண்டுது!🙄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இப்ப குஷ்பு இலங்கைக்கு வரவேண்டுமா இல்லையா ஒண்டுமே விளங்கமாட்டன் எண்டுது!🙄

யாருங்க இந்த குசு..................ப்பு ? இந்தியாவின் முன்னனணி போராட்ட மகனா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.