Jump to content

திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு - குவியும் கண்டனங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மன்சூர் அலி கான்

பட மூலாதாரம்,MANSOOR ALI KHAN/INSTAGRAM

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

திரிஷா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட சக நடிகைகள் குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது ’அநாகரிகமான’ முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

சக நடிகைகளுடன் பாலியல் வன்புணர்வு காட்சிகள் குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தன்னை குறித்து மன்சூர் அலி கான் பேசியிருப்பது ‘இழிவானது’ மற்றும் ‘அருவருப்பானது’ என, எக்ஸ் தளத்தில் திரிஷா பதிவிட்டுள்ளார். ”ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வந்த மோசமான ரசனை கொண்ட பேச்சு” என தெரிவித்துள்ள அவர், ”அத்தகைய நபருடன் நடிக்காததே நல்லது” என தெரிவித்துள்ளார். என்னுடைய சினிமா வாழ்க்கையில் அவருடன் நடிக்க மாட்டேன் என்பதில் தான் உறுதியாக இருப்பேன் என தெரிவித்துள்ள திரிஷா, “மன்சூர் அலி கான் போன்றவர்கள் மனிதத்திற்கு இழிவான பெயரை பெற்றுத் தருவதாக” கூறியுள்ளார்.

மன்சூர் அலி கானின் பேச்சுக்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

மன்சூர் அலி கான்

பட மூலாதாரம்,MANSOOR ALI KHAN / INSTAGRAM

விளக்கத்திலும் சர்ச்சை

தன்னுடைய பேச்சுக்கு எதிர்வினைகள் வந்ததையடுத்து மன்சூர் அலி கான் அளித்துள்ள விளக்கமும் ‘மிக மோசமானதாக’ இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், தன்னுடைய திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாலும், பிரபல கட்சி சார்பாக தான் போட்டியிட உள்ளதாலும் தான் திரிஷா குறித்த தனது பேச்சு பெரிதாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் அந்த பேட்டியில் திரிஷா குறித்து நல்ல முறையில் பேசியுள்ளதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வு புகார்

நடிகைகள் குறித்து மட்டுமல்லாமல் சினிமா, அரசியல் என எந்த துறையாக இருந்தாலும் அதுகுறித்து ‘வெளிப்படையாக’ பேசுபவராக மன்சூர் அலி கான் அறியப்படுகிறார். மக்கள் பிரச்னைகளுக்காக சாலையில் தனியாக அமர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை கூறுதல் என தன்னுடைய செயல்களுக்காக விமர்சனங்களுக்கு மத்தியில் வெளிச்சம் பெற்றவராக மன்சூர் அலி கான் உள்ளார்.

2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழக்குகளுக்காக சிறை தண்டனை பெற்றுள்ளார் மன்சூர் அலி கான். குறிப்பாக, தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக, பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் மன்சூர் அலி கான். ஆனால், 2012-ம் ஆண்டு புகார் அளித்த பெண் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக அப்பெண் மன்சூர் அலி கானுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்றவர்கள் மீதான அவதூறு பேச்சுகளுக்காகவும் மன்சூர் அலி கான் சிறை சென்றுள்ளார்.

இவற்றுக்கு மத்தியில், திரிஷா எதிர்வினை ஆற்றியதைத் தொடர்ந்து மன்சூர் அலி கானின் பேச்சு பொதுவெளியில் கவனம் பெற்றிருக்கிறது.

மன்சூர் அலி கான் தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்கம், அதுவரை அவரை ஏன் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கக்கூடாது என கருதுவதாக கூறி அறிக்கை வெளியிட்டிருந்தது.

குஷ்பூ சுந்தர்

பட மூலாதாரம்,KHUSHBOO SUNDAR / INSTAGRAM

‘தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு’

மன்சூர் அலி கானின் பேச்சு குறித்து பிபிசியிடம் பேசிய குஷ்பூ, “அவருடைய தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடே இந்த பேச்சு. பொதுவெளியில் பெண்களை மதிக்கத் தெரியவில்லை என்றால், வீட்டிலுள்ள பெண்களை எப்படி மதிப்பார்கள். இம்மாதிரியான பேச்சுகளை முன்பு இருந்த நடிகைகள் கண்டிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால், இப்போதைய நடிகைகள் தைரியமாக அதனை வெளியில் கண்டிக்கின்றனர். இது ஆரோக்கியமானது. மக்களின் பார்வை மாறுகிறது. அதற்கேற்ப சினிமாவின் போக்கும் மாறியுள்ளது. அதனை புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

ஜா. தீபா

பட மூலாதாரம்,DEEPA JANAKIRAMAN / FACEBOOK

படக்குறிப்பு,

எழுத்தாளர் ஜா. தீபா

”தான் பேசியது தவறு என்றே புரியவில்லை”

பெண் இயக்குநர்கள், நடிகைகள் குறித்து தொடர்ச்சியாக ஆவணப்படுத்திவரும் எழுத்தாளரும் சின்னத்திரை தொடர்களுக்கு திரைக்கதை எழுதுபவருமான ஜா. தீபா பிபிசியிடம் கூறுகையில், “தான் பேசுவது தவறு என தெரியாத அளவில்தான் மன்சூர் அலி கான் இருக்கிறார். அப்படித்தான் அவர் சினிமா துறையை பார்க்கிறார். ஒரு நடிகையை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அதில் தவறில்லை என அவர் நினைக்கிறார்.

ஒரு பெரிய நடிகரை அடிப்பது போன்று எனக்கு காட்சி இல்லை என அவர் சொல்லிவிட முடியுமா? கதாநாயகிகளை பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற காட்சிகளே இப்போது வைப்பதில்லை. அந்தளவுக்கு தமிழ் சினிமா மாறியுள்ளது. அவர் இன்னும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்திலிருந்தே வெளியே வரவில்லை” என்றார்.

எதையுமே வெளிப்படையாக பேசுகிற, யாருக்குமே அஞ்சாத நபர் என்ற பிம்பம் மன்சூர் அலிகானுக்கு உள்ளதால், தான் என்ன பேசினாலும் சரிதான் என அவர் நினைக்கிறார் என ஜா. தீபா கூறுகிறார்.

“ஒரு நடிகரின் நடிப்புத் திறமையைத் தாண்டி “அவர் கெத்து” எனக்கூறி அவரை துதிபாடுவதை நிறுத்த வேண்டும். இதுகுறித்து பொதுவெளியில் பேசியதோடு மட்டுமல்லாமல், நடிகர் சங்கத்தில் திரிஷா முறையிட வேண்டும்” என்றார் தீபா.

எழுத்தாளர் ஜீவசுந்தரி

பட மூலாதாரம்,JEEVA SUNDARI/FACEBOOK

படக்குறிப்பு,

எழுத்தாளர் ஜீவசுந்தரி

’வளரும் நடிகைகள் குரல் எழுப்ப முடியுமா?’

மூத்த பத்திரிகையாளரும் தமிழ் சினிமாவில் நடிகைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதிவருபவருமான பா. ஜீவசுந்தரி கூறுகையில், “முன்பு தமிழ் சினிமாவில் பாலியல் வன்புணர்வு காட்சிகள் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான காட்சிகளில் கதாநாயகிகளின் ஆடைகள் கிழிந்திருக்கும்.

70களில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அறிமுகமான குறிப்பிட்ட நடிகை ஒருவர் பாலியல் வன்புணர்வு காட்சியில் நடித்து அறிமுகமானதாலேயே அவருக்கு ‘ரேப் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்புணர்வு காட்சிகளில் சேலைகள் கிழிந்து போய் உள்ளாடை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அவருக்கு பிரத்யேகமான உடைகளெல்லாம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. அந்தளவுக்கு பிரயத்தனப்பட்டு அந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்போது பாலியல் வன்புணர்வு காட்சிகளை வெளிப்படையாக அப்படி காண்பிப்பதில்லை. குறியீடுகளின் மூலமாகவே உணர்த்தப்படுகிறது. அப்படியிருக்கையில் மன்சூர் அலிகான் சொல்லியிருப்பது வக்கிரமானது” என தெரிவித்தார்.

எல்லா காலகட்டங்களிலும் நடிகைகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால், இப்போதைய காலகட்டத்தில் தான் நடிகைகள் அவை குறித்து குரல் எழுப்ப தொடங்கியிருப்பதாகவும் கூறுகிறார் ஜீவசுந்தரி.

நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் கதையில் இயக்குநர்கள் சொல்லாததையும் செய்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜீவசுந்தரி கூறுகிறார்.

இப்போது போன்று அல்லாமல், 60களில் தொடங்கி 2000களுக்கு முன்பு வரையே பெரும்பாலான நடிகைகளுக்கு நடிப்பு என்பது கனவு, லட்சியம் என்பதைத் தாண்டி அதுவொரு தொழிலாக இருந்திருக்கிறது. அது அவர்களின் வாழ்வாதாரம். இதனாலும் சக நடிகர்களின் பாலியல் சீண்டல்கள், பாலியல் ரீதியிலான பேச்சுகளை நடிகைகள் பொதுவெளியில் சொல்லாமல் இருந்திருப்பதாக ஜீவசுந்தரி தெரிவிக்கிறார்.

இப்போது அந்த நிலை மாறியிருப்பதால் பொதுவெளியில் நடிகைகள் பேசுவதாக அவர் கூறுகிறார். வில்லன் நடிகராக அறியப்படும் மன்சூர் அலி கான் போன்றல்லாமல் பெரிய நடிகர்கள் குறித்த இத்தகைய சர்ச்சைகளை நடிகைகள் பொதுவெளியில் பேசுவார்களா என்பது இன்றும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

“அதேமாதிரி, திரிஷா எழுப்பியது போன்று வளர்ந்துவரும் நடிகை ஒருவர், ‘தன்னால் இனி இவருடன் நடிக்க முடியாது’ என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது” என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c2v21352z6zo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோ பார்த்தேன்.. அவர் சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடப்பதையே நினைத்து பேசுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது… 

இது குறித்து ரேகாநாயர் பேசுவது மிக தெளிவானதும் சரியானதுமான கருத்து..

Link to comment
Share on other sites

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோ பார்த்தேன்.. அவர் சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடப்பதையே நினைத்து பேசுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது… 

இது குறித்து ரேகாநாயர் பேசுவது மிக தெளிவானதும் சரியானதுமான கருத்து..

இந்தக் கேவலம் கெட்ட ஆபாசமான பேச்சைத் தான் நீங்கள் நியாயப்படுத்துகின்றீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இந்தக் கேவலம் கெட்ட ஆபாசமான பேச்சைத் தான் நீங்கள் நியாயப்படுத்துகின்றீர்கள்...

நான் பார்த்த‌ ம‌ட்டில் மன்சூர் அலிகான் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா ந‌ல்ல‌ ம‌தின‌ர்............ஏன் தேவை இல்லாம‌ இப்ப‌டி வார்த்தைய‌ விட்டார் தெரிய‌ல‌.............எதை சொன்னாலும் அதில் ஒன்று இர‌ண்டு காமெடி க‌ல‌ந்து தான் பேட்டியில் சொல்லுவார்...............நான் இப்ப‌த்த‌ திரைதுறைய‌ ப‌ற்றி சொன்ன‌து உங்க‌ எல்லாருக்கும் த‌ப்பா ப‌ட்டால் திரிஷாவுட‌மும் ப‌ட‌க் குழுவுன‌ரிட‌மும் ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் என்றால் இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்த‌ அன்றே முடிந்து இருக்கும் 

Link to comment
Share on other sites

2 hours ago, பையன்26 said:

.நான் இப்ப‌த்த‌ திரைதுறைய‌ ப‌ற்றி சொன்ன‌து உங்க‌ எல்லாருக்கும் த‌ப்பா ப‌ட்டால் திரிஷாவுட‌மும் ப‌ட‌க் குழுவுன‌ரிட‌மும் ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் என்றால் இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்த‌ அன்றே முடிந்து இருக்கும் 

அதுதான் ஆண் என்கின்ற திமிர்

அண்மையில் பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், ஐஸ்வர்யா ராய் தொடர்பாக தவறான ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். "நல்ல பிள்ளைகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை திருமணம் முடித்தால், அது தவறாக போய்த்தானே முடியும்" என்றமாதிரி பத்திரைகயாளர் மானாட்டில் கூறி இருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உடனே தான் சொல்லியது தவறு என்றும் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்" என்றும் அறிவித்து இருந்தார்.

ஒரு பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் இந்திய நடிகையைப் பற்றி தவறாக சொல்லியதற்கு மன்னிப்பு கேட்கும் போது இந்த மன்சூர் அலிகான் திமிர் தனமாக தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகின்றார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

நான் பார்த்த‌ ம‌ட்டில் மன்சூர் அலிகான் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா ந‌ல்ல‌ ம‌தின‌ர்............ஏன் தேவை இல்லாம‌ இப்ப‌டி வார்த்தைய‌ விட்டார் தெரிய‌ல‌.............எதை சொன்னாலும் அதில் ஒன்று இர‌ண்டு காமெடி க‌ல‌ந்து தான் பேட்டியில் சொல்லுவார்...............நான் இப்ப‌த்த‌ திரைதுறைய‌ ப‌ற்றி சொன்ன‌து உங்க‌ எல்லாருக்கும் த‌ப்பா ப‌ட்டால் திரிஷாவுட‌மும் ப‌ட‌க் குழுவுன‌ரிட‌மும் ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் என்றால் இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்த‌ அன்றே முடிந்து இருக்கும் 

இதெல்லாம் ஒரு செட்டப் ஆளும்கட்சி ஏதோ ஒன்று செய்கிறது அநேகமாக சிப்கார்ட் தொழில்சாலை போராட்ட கள செய்திகளை மழுங்கடிக்க அதிகாரா ஊடகங்கள் பண்ணும் சேட்டை . 

இப்படி ஒரு செய்திக்கு இவ்வளவுதூரம் சரி பிழை பிடிபதுக்கு பாதிக்க பட்டவ ஒன்றும் பத்தினியும் அல்ல உளறிகொட்டினவர் ஒன்றும் உத்தமனும் அல்ல ரெண்டு கூத்தாடி அடிபடுது என்று விலகிபோயிட வேண்டியதுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அதுதான் ஆண் என்கின்ற திமிர்

அண்மையில் பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், ஐஸ்வர்யா ராய் தொடர்பாக தவறான ஒரு கருத்தைத் தெரிவித்து இருந்தார். "நல்ல பிள்ளைகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை திருமணம் முடித்தால், அது தவறாக போய்த்தானே முடியும்" என்றமாதிரி பத்திரைகயாளர் மானாட்டில் கூறி இருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உடனே தான் சொல்லியது தவறு என்றும் ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்" என்றும் அறிவித்து இருந்தார்.

ஒரு பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் இந்திய நடிகையைப் பற்றி தவறாக சொல்லியதற்கு மன்னிப்பு கேட்கும் போது இந்த மன்சூர் அலிகான் திமிர் தனமாக தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகின்றார்.

ஆமாம் சரியான கருத்துகள்  இவர்களின் இந்த திமிருக்கு  படங்கள் பார்பவர்களும். காரணம் ஆவார்கள்  தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள்  படம் பார்ப்பதை தவிர்த்து  

1,கால் பந்து  

2,.ரென்னிஸ்  

3 நீச்சல் போட்டி 

4. கிறிகேற்

5. ஒட்டப் போட்டி .....இப்படியான விளையாட்டுகளில். கவனம் செலுத்த வேண்டும்  வருமானம் வரும் வாய்ப்புகள் உண்டு   மேலும் உடல் ஆரோகியத்திற்கும் சிறந்தது 

  • Like 1

இதில என்ன ஆண் திமிர்த்தனம், நிழலி?

இது அவர்களது தொழில் ரகசியம். சம்பந்தப்பட அனைவருமே சினிமாக்காரர்கள். ஒரே நாற்றம் பிடித்த குட் டையில் ஊறும் மட்டைகள்.

இவர்களை நம்பி, நாம் சில்லறையை சிதற விடுவது வேஸ்ட்.

நான் நேற்று சொன்னதுபோலவே, இது சரக்கு படத்துக்கான, விளம்பரம். எனது கணிப்பு சரியானால், பட விநியோகம், ரெட் ஜெயண்ட் இடம் போகும்.

அப்புறம், கூட்டிக், கழித்துப் பார்த்தால், கணக்கு சரியாக இருக்கும். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம் சரியான கருத்துகள்  இவர்களின் இந்த திமிருக்கு  படங்கள் பார்பவர்களும். காரணம் ஆவார்கள்  தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள்  படம் பார்ப்பதை தவிர்த்து  

1,கால் பந்து  

2,.ரென்னிஸ்  

3 நீச்சல் போட்டி 

4. கிறிகேற்

5. ஒட்டப் போட்டி .....இப்படியான விளையாட்டுகளில். கவனம் செலுத்த வேண்டும்  வருமானம் வரும் வாய்ப்புகள் உண்டு   மேலும் உடல் ஆரோகியத்திற்கும் சிறந்தது 

முதலே இந்த திரியை கண்டு எனக்கு தெரியாத காரணத்தால் கடந்து சென்றுவிட்டேன். நிழலியின்  மன்சூர்  என்பவரின் பெண் வெறுப்பு பேச்சு என்ற வீடியோ வந்தபடியால் பார்த்தேன்.மிகவும் கேவலமான பேச்சு. இதை ஏன் இங்கே சிலர் நியாயபடுத்த முயல்கிறார்கள் என்று பார்த்தால் (2019 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு..) என்ற தகவல் தெரிய வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆகா.. அதுவா விசயம்...

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?

முதல்ல, சரக்கு படம் ரிக்கற் எடுத்து தியேட்டரில் பாருங்க.

சம்பந்தப்பட்ட அணைவருக்குப் நன்மை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?

முதல்ல, சரக்கு படம் ரிக்கற் எடுத்து தியேட்டரில் பாருங்க.

சம்பந்தப்பட்ட அணைவருக்குப் நன்மை!!

நிழலியின் வீடியோவில் அந்த நடிகர் பேசிய கேவலமான பேச்சு உள்ளது. பின்பு ஏராளன் பதிவிட்ட செய்தி கட்டுரையில் முழு விபரம் உள்ளது.- அவர் பேசியது அநாகரிகமான முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது - என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.அப்படியிருக்க நீங்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்கிறீர்கள், என்னை ரிக்கற் எடுத்து அவரின் படத்தை தியேட்டரில் பார்க்கும் படி சொல்கிறீர்கள். உங்களது பிடித்தமான நடிகரின் படத்தை நான் ஏன் பார்க்க வேண்டும். இந்த திரியில் அவர் நடித்த படத்தை பற்றிய  விமர்சனம் நடைபெறவில்லை.அவரின் கேவலமான பேச்சு பற்றியதே இந்த திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்களுக்கு நான் சொல்வது விளங்காமல் அப்பாவித்தனமா பேசுகிறீர்கள்.

நிழலிக்கு நான் எழுதின பதிலைப் பாருங்கள்.

இது சரக்கு படத்திற்கான திட்டமிட்ட விளம்பரம். அணைவருமே சினிமாக்காரர்கள்.

நேரவிரயம் செய்யாமல், விளங்கினால் நல்லது!!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' - மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், "எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு" என்று நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆம், அடக்க நினைத்தால் அடங்க மறு. இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்.எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து. அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை.

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு.

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்துக்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும்.

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது; தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்." என்று அவர் கூறியுள்ளார்.

பின்னணி: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு மன்சூர் அலிகான் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' - மன்சூர் அலிகான் அறிக்கை | Trisha please forgive me - Mansoor Ali khan apologized - hindutamil.in

“மன்னிப்பது தெய்வீக குணம்” - மன்சூர் அலிகான் விவகாரத்தில் த்ரிஷா பதிவு

சென்னை: தான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகியிருந்தார்.

அப்போது போலீசாரிடம், “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன்” என தெரிவித்ததாக கூறினார். இதனையடுத்து இன்று “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” என கூறி அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வீக குணம்” என பதிவிட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

----------------------------

ஆகவே மக்களே, இந்தப் பிரச்சனையால் மூன்றாம் உலகப் போர் மூளும் என்று இனிப் பயப்படத் தேவை இல்லை.

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயில்வான் ரங்கநாதன் கிட்டத்தட்ட வழிச்சு ஊத்தாத நடிகைகளே இல்லை. அதுக்கு பொங்கியெழாத மான ரோஷ சங்கங்கள் மன்சூர்  அலிகான் சும்மா ஒரு கலகலப்புக்காக சொன்னதையெல்லாம் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள்.😎

அதை விட திரிஷாவின்ர கிசு கிசு படங்களுக்கும் இணையத்தளங்களில் பஞ்சமேயில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்சூர்  அலிகான் என்ற நடிகருக்கு சும்மா ஒரு கலகலப்பு தேவைபட்டால்  தன்னுடன் வேலை செய்கின்ற பெண்ணை பற்றி கேவலமாக பேசுவார். அவருக்கு பொழுது போவில்லை என்று சும்மா ஒரு பொழுது போக்கு தேவைபட்டால் அந்த பெண்ணின் நிலைமை பயங்கரம்

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, திட்டினவர்கள், ஆதரவு கொடுத்தவர்கள் எல்லாம் வாங்கப்பா!

தலைவனின் சரக்கு படம் டிரெயிலர் வந்து பட்டையக் கிளப்புது, பாருங்கோ.

வழக்கமா 300,000 தாண்டாத வியூ 1.5M தாண்டிப் போகுது.

சர்ச்சையில சம்பந்தப்பட்டவர்கள் அணைவரும், சினிமாக்காரர்கள், நடிகர்கள், பட விளம்பரத்துக்காக நடித்தார்கள் என்றேன்.

விளங்க நிணைக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி? 🤣😂

On 24/11/2023 at 14:57, குமாரசாமி said:

அதை விட திரிஷாவின்ர கிசு கிசு படங்களுக்கும் இணையத்தளங்களில் பஞ்சமேயில்லை.🤣

அட, அந்த படம்...🤨

தமிழ் சூரியன் என்று உறவு முன்னர் வருவார். இங்கே யாரோ அதைப் பத்தி சொல்ல, இரவிரவாக தேடிப் பார்த்து, அடுத்தநாள், கண்டேன், பார்த்தேன் என்றார்.

பே அறைஞ்சது போல, பிறகு இந்தப்பக்கம் வரத்தே இல்லை. 😂🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.