Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா Deep Fake ’கா உலகம்தான் சொல்லணும்

  • Replies 300
  • Views 39k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நீங்கள் கேட்பதுதான் இந்த வீடியோ தயாரித்தவர்களின் நோக்கத்திற்கு துணை போகிறது.. அறிவார்ந்த பகுத்தறிவுள்ள எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்படி நீங்கள் கேட்பதுதான் இந்த வீடியோ தயாரித்தவர்களின் நோக்கத்திற்கு துணை போகிறது.. அறிவார்ந்த பகுத்தறிவுள்ள எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுக்க மாட்டார்கள்..

இதுபற்றி என்ன பேசி கொள்ளபோகிறார்கள் என்பதை அறியவே இணைத்தேன் பாலபத்திய ஓணாண்டி வேறொன்றுமில்லை.

 

துவாரகா வின் பேச்சு என்ற கபட நாடக உரையை வெளியிட்டவர்கள் ஆகக் குறைந்தது செய்யும் களவிலாவது கொஞ்சம் மினக்கெட்டு இருக்கலாம். 'அவர்களின்' வளத்தையும் காசையும் கொள்ளை அடித்த இந்தக் கூட்டம், Deep fake போன்ற நவீன தொழில் நுட்ப விடயங்களுக்காகவது கொஞ்சம் காசை செலவழித்து இதனை வெளியிட்டு இருக்கலாம். இனை கூட பயன்படுத்தவில்லை இந்த மூடர்கள்.
 
இனி இதைச் சொல்லி உண்டியல் குலுக்கிக் கொண்டு இவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, கக்கூஸ் கழுவ பயன்படுத்தும் துடைப்பத்தை எடுக்க மறந்து விடாதீர்கள்
  • கருத்துக்கள உறவுகள்+

நேற்றையில இருந்து துவாரகா வெளியிலை வாறா என்டு அறிவிக்கிறதிலை விசுகரும் கருவரும் கொஞ்சம் பிசியாம்... இன்டைக்கு வந்து உவதா ஆள் என்டு சொல்லி ஒரே கூத்தடிக்கப் போயினம்

ஒன்று விளங்கவில்லை... வளவன் இணைத்தமைக்கு ஏன் எல்லோரும் Downvote இனை குத்துகின்றீர்கள் என. உண்மையில் அவர் இங்கு இணைத்தமையை வரவேற்க வேண்டும். இதைப் பற்றி உரையாடுவதற்கும், உண்மைத்தன்மை பற்றி கதைப்பதற்கும், இந்த போலிகளை தோலுரிக்கவும், இதனை இணைத்தல் அவசியம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, நிழலி said:

ஒன்று விளங்கவில்லை... வளவன் இணைத்தமைக்கு ஏன் எல்லோரும் Downvote இனை குத்துகின்றீர்கள் என. உண்மையில் அவர் இங்கு இணைத்தமையை வரவேற்க வேண்டும். இதைப் பற்றி உரையாடுவதற்கும், உண்மைத்தன்மை பற்றி கதைப்பதற்கும், இந்த போலிகளை தோலுரிக்கவும், இதனை இணைத்தல் அவசியம் அல்லவா?

ஓமோம், நானும் தீர மறந்துபோனன், மறுவளத்தாலை பார்க்க. நன்றி சுட்டிக் காட்டியமைக்கு. நான் என்னுடைய - 1 திரும்பப்பெற்றுக் கொண்டேன்.

எல்லோரும் திரும்பப் பெற்றுக்கொண்டால் நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்+

மதி மாமியின் பூதவுடல் & மதிமகளின் வித்துடல்

 

(இவற்றை அந்த இந்திய யூரியூப் சனலில் வெளியிட்ட பின்னரே என்னிடத்தில் இருப்பில் இருந்த படிமங்களுக்குள் தேடி முழுப்படத்தையும் எடுத்தனான். அப்படி இருந்தும் என்னிடத்தில் மதி மாமியின் பூதவுடலின் முழுப் படம் இல்லை.)

 

 

 

மதி மாமி:

large....jpg.bc1f0707950bd63795c24250925

 

நீலத்துணியால் போர்த்தப்பட்டிருப்பவர் மதி மாமி:

large.1507677_1024901954187801_218402055

 

 

  • நடுவிலை மாலதி படையணியின்ர படையணிச் சீருடையோடு (காற்சட்டையால் கீழுடல் போர்த்தப்பட்டிருப்பவர்) வித்துடலாய் வளர்த்தப்பட்டிருப்பவர்: பி.ம. துவாரகா (இயக்கப்பெயர்: மதிமகள்)
  • அந்த மஞ்சள் பஞ்சாபி: மதிமாமியின் கால்கள்

large.154533_315088451898795_2008672032_

 

large.11071609_1001300379881292_27583937

 

large.11427002_1024902034187793_65182580

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

ஒன்று விளங்கவில்லை... வளவன் இணைத்தமைக்கு ஏன் எல்லோரும் Downvote இனை குத்துகின்றீர்கள் என. உண்மையில் அவர் இங்கு இணைத்தமையை வரவேற்க வேண்டும். இதைப் பற்றி உரையாடுவதற்கும், உண்மைத்தன்மை பற்றி கதைப்பதற்கும், இந்த போலிகளை தோலுரிக்கவும், இதனை இணைத்தல் அவசியம் அல்லவா?

புரிதலுக்கு நன்றி.

அதனால்தான் ‘’உரையாற்றியதாக.....’’ என்று தலைப்பிட்டேன் அந்த புள்ளிகளின் தொடராய் எந்த வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியிலும் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்காலாம் என்றும் மறைமுகமா குறிப்பிட்டேன்..

காணொளியிலுள்ள பேச்சினை நிதானமாகக் கேட்கப் பொறுமை இல்லை. சுருக்கமாக விளங்கியது என்னவென்றால் மக்களே மறுபடி போராடித் தமிழீழம் எடுக்க வாருங்கள் என்கிறார் (தவறு என்றால் யாராவது விளக்குங்கள்). 14 வருட அஞ்ஞாதவாசச் சிந்தனை இவ்வளவுதானா ? ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் இந்த அறிக்கை தேவையா ? ஆளுமை அறிவியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத பிரயோசனமில்லாத இந்த அறிக்கையை வாசிப்பதை விட பேசாமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சில மதங்களிற்கு முன்னர் AI 2041 என்ற புத்தகம் வாசித்திருந்தேன். அது 2041 உலகம் தொழில்நுட்பத்தில் முக்கியமாக செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தூரம் வரை செல்லும் அல்லது செல்லலாம் என்பது பற்றியது. 

அந்த புத்தகம் வாசித்த பின்னர் இப்படி ஏதாவது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். 

Deep fake என்பதை இன்னும் சரியாக கையாள தெரியாத ஒரு கூட்டம் இதை செய்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு 10-15 வருடங்களில் அதை சரியாக பயன்படுத்தி தலைவரின் உரையை வெளியிடுவார்கள். அது வரை பொறுமை காக்கவும். 

நான் உரையை கேட்கவில்லை. வீடியோவின் thumbnail பார்த்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. 😄

  • கருத்துக்கள உறவுகள்

இக்காணொளியில் விடுதலைப்புலிகள் பாவிக்காத ஒரு சொல்லை பலதடவை பாவிச்சிருக்கிறார் அதாவது ஒரே சொல்லை அதுவும் விடுதலைப்புலிகள் தங்கள் உரையில் பாவிக்காத சொல்லைப் பலதடவைகள் பாவித்ததால் துவாரகா என்று சொல்லி உரை நிகழ்த்தும் இவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறோம்.

அந்தசொல் என்னவெனில் நாம் என்று தேசியத்தலைவர் பாவிக்கும் சொல்லை நான் எனப் பல இடங்களில் இவர் பாவிக்கிறார் அதாவது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடும் கொள்கை விளக்க உரையை எப்போதும் நான் தெரிவித்துகொள்கிறேன் எனச்சொல்வதில்லை அதாவது "நாம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றே உரைப்பது வழக்கம்.

ஆனால் மிகவும் அருவருக்கத்தக்கதும் புலிகளது ஈகத்தை மலினப்படுத்துவதும் தலைவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதும் தவறு எனச்சொல்லிக்கொண்டு போரில் மரணித்துவிட்ட ஒரு உயிரை கண்டவர்கள் எல்லாம் நக்கல் நையாண்டி செய்ய திட்டமிட்டே நாடகமாடிவிட்டது "தமிழர் விரோததேசமாகிய இந்தியா" 

இந்தியா நாசமாகிப்போகும் காலம் மிகவிரைவில் வரும்.

கொசுறாக இந்தியாவின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலைப்புலிகளது படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் தடை செய்து அதனை வெளியிட்டவர்களது கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்யும் முறைமையை இப்போது முகப்புத்தகம் தவிர்த்திருக்கிறது. இதன்மூலம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்னுமாப்போல் இந்தியா தனது கபடமுகத்தைத் தோலுரித்துக்காட்டி மிகவும் அசிங்கமாகச் சிரிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  துவாரகா பார்ட்டி கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுகிறார்கள் என்பதை தவிர தமிழர்களின் அரசியலை கொண்டு செல்கிறோம் என்று கூறி தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தேசிய அரசியல் என்று (ஏமாற்றும்)  செயற்படும் ஒட்டு மொத்தமான   எல்லா அமைப்புகளுக்குமே  சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி  நகரும் எந்த அக்கறையும் இல்லை.  

ஆகவே,  இந்த துவாரகா குறூப்புக்கும்  மற்றய தேசிய அமைப்புகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதே நிஜம்.  

தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டுமானால்   தற்போதைய நிலையில் சாத்தியமான, விரைவான,  அரசியல் தீர்வை நோக்கிய நகர்வு மிக அவசியம். அதைச் செய்ய ஒருங்கிணைந்த புரிந்துணர்வுடன் கூடிய செயற்பாடு அவசியம்  என்ற அரசியல் பாலபாடத்தை கூட  புரிந்து கொள்ளாது தமக்குள் குறுகிய அரசியல் செய்யும் தாயக/ புலம் பெயர் தேசிய அமைப்புகளுக்களுக்குள்  கொஞ்சம் விசர்  கூடிய அமைப்பே இந்த துவாரகா பார்ட்டி. 

  • கருத்துக்கள உறவுகள்

வடிவமைக்கபட்ட சில்லைறகளின் அலம்பல்கள், அதன் விளைவு "துவாரகா".


தமிழர் இறமையும், திமிரும் கருங்காலிகளுக்கு விளையாட்டாகிவிட்டது.


முகவரி கொடுத்தவர்களே முக்காடு போட வைப்பார்கள்.

நன்றி.

இதில் ஒரு நல்ல விடயம், ஏமாற்றுக் கும்பல் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியுள்ளது. சமூக வலைத் தளங்களிலும் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையென நம்பி இவர்கள் வலையில் சிக்கிய அப்பாவிகள் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ?

வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ?

மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே!

அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே!

விலை எங்கு போனீர்?

வலை பின்னி வாரீர்   வார்த்தைகள் பொய்க்கின்றீர்

நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன்.

தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்+

அந்த அக்காவுக்கு ஒரு ஒழுங்கான மேக் அப் கூட போடேலை. மாப்பானைக்குள்ளை விழுந்த எலிக்குஞ்சு மாதிரி வந்து நிக்கிறா😆. கமராக்கு முன்னாலை வாரது கொஞ்ச வடிவா வெளிக்கிட்டு அனுப்பிறதை விட்டுட்டு இப்பிடி அரைகுறையா அனுப்பி விட்டிருக்கிறாங்கள்.🤣🤣

அடுத்த மாவீரர் நாளுக்காவது ஒழுங்கா மேக் அப் போட்டு அனுப்புங்கடா, இந்திய அப்பிரண்டீசுங்களா.😏

 

  • கருத்துக்கள உறவுகள்

@நன்னிச் சோழன்

Screenshot-20231127-183450-Chrome.jpg

இந்த‌ப் ப‌ட‌த்தை இன்று தான் பார்க்கிறேன்............உண்மையில்  க‌வ‌லையாக‌ இருக்கு..............
ல‌ண்ட‌னில் வ‌சிக்கும் அருணாவுக்கு முடிந்தால் இதை அனுப்பி விடுங்கோ இதை பார்த்தாவ‌து திருந்த‌ட்டும்..............

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:
இனி இதைச் சொல்லி உண்டியல் குலுக்கிக் கொண்டு இவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, கக்கூஸ் கழுவ பயன்படுத்தும் துடைப்பத்தை எடுக்க மறந்து விடாதீர்கள்

 ராசாக்கள் வரட்டுக்கும் பிடிச்சு வீட்டில உள்ள கக்கூஸ் எல்லாத்தையும் கிளீன்பண்ணவிட்டால் போச்சு! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இதில் ஒரு நல்ல விடயம், ஏமாற்றுக் கும்பல் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியுள்ளது. சமூக வலைத் தளங்களிலும் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையென நம்பி இவர்கள் வலையில் சிக்கிய அப்பாவிகள் பாவம்.

விசுகண்ணையும் உதிலை ஓராள்..😂 உத நம்பி இதுக்கு விசுகண்ணை குடுத்த பில்டப் இருக்கே..🤦🏻

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

உண்மையா Deep Fake ’கா உலகம்தான் சொல்லணும்

இதென்ன கரச்சலா கிடக்குது இதை இணைத்தவருக்கு ஏன்யா மைனஸ் புள்ளி நந்தர் விளக்கம் கொடுப்பாரா அல்லது வழக்கம்போல்  அமைதி தானா அப்படி அமைதியானால் உங்கள் புரிந்து கொள்ளல் அவ்வளவுதானக்கும் ?

இங்கு பலதையும் இணைப்பது உண்டு உண்மை பொய் உணர்ந்து கொள்ள குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டிருக்காமல் இருக்கணும் என்பதுக்காக.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாய் டியுப் நிர்வாகம் இப்படியான காணொளி களை  பாய்ந்து பாய்ந்து துக்குபவர்கள் இன்று விட்டு வைத்து இருக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் உரையை கேட்டேன். முன்னைய மாவீரர் தின உரைகளில் இருந்து பலவற்றை உருவித் தொகுக்கப்பட்டுள்ளது. புதிய செய்தி என்னவென்றால் புலம்பெயர் தமிழர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் உதவவேண்டும் என்பதுதான். 

தேசியத்தலைவரின் மகள் என்று சொல்லும் ஒருவர் போராளிகளாக தமது உயிரையும் கொடுக்க துணிந்தவர்களை முன்னாள் போராளிகள் என்று ஏன்  விளிக்கின்றார்?

ஒரு அமைப்பை தலைமைதாங்க வருபவர் உறுப்பினர்களை முன்னாள் போராளிகள் என்றால் இந்த அமைப்பின் தற்போதைய உறுப்பினர்கள் யார்?

மேலும், துவாரகாவாகத் தோன்றியவருக்கு தமிழ் உச்சரிப்பை சரியாகச் சொல்லிக்கொடுக்கவில்லை. லகரம் மோசமாக இருக்கின்றது.

இறுதியாக அவர் சொன்னது சரிதான்!

”புளிகளின் தாகம் தமிளீளத் தாயகம்”

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

வழக்கமாய் டியுப் நிர்வாகம் இப்படியான காணொளி களை  பாய்ந்து பாய்ந்து துக்குபவர்கள் இன்று விட்டு வைத்து இருக்கிறார்கள் .

ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இப்போது இந்திய‌ன் சொல்வ‌தை தான் கேக்கின‌ம்

முக‌ நூல்
யூடுப்
அவ‌ங்க‌ள் சிக்ன‌ல் கொடுக்க‌ அதை யூடுப் நிறுவ‌ன‌ம் ஏற்றுக் கொள்ளும் இந்த‌ காணொளிய‌ ம‌க்க‌ளின் பார்வைக்கு விட‌ சொன்னால் ஒரு த‌டையும் இன்றி விடுவாங்க‌ள்..............இல‌ங்கையில் இருந்து 4தாய‌க‌ பாட‌ல் போட்ட‌துக்கு இந்த‌ கிழ‌மை ஒரு பெடிய‌னின் யூடுப் முட‌க்க‌ப் ப‌ட்ட‌து 

25ஆயிர‌ம் பார்வையாள‌ர‌ கொண்ட‌ யூடுப் ச‌ண‌ல்................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.