Jump to content

Question

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. 

யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
நன்றி 

Recommended Posts

  • 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஊர்க்காவலன் said:

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. 

யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
நன்றி 

இலங்கை அடையாள அட்டை இருந்தால் தொடங்க விடுகிறார்கள் என்று கேள்வி. ஆனால் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு சட்டமூலம் கொண்டு வந்து உங்கள் பணத்தை அரசு கையகப்படுத்தலாம். இலங்கைப் பிரஜை இல்லாமல் அடையாள அட்டை மூலம் காணி வாங்கியோரும் அரசிடம் கொடுக்க வேண்டிய நிலைமை வரலாம். மேலதிக தகவல்கள் பிழை திருத்தங்கள் வரவேற்கப்படுகிறது 

  • Like 1
  • 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீரா சொல்வதே பல வியாபார முதலைகள் செய்வது.

பணத்தை NRFC a/c யில்போட்டு, அதற்கு எதிராக 80% வரை உள்ளூர் பணத்தை லோன் எடுப்பது. அதில் ஆதனத்தை வாங்கி, பின்னர் மோர்க்கேஜ் எடுத்து கடணைக்கட்டுவது.

வடகைக்கு கொடுத்து வரும் பணத்தில் மோர்ட்கேஜ் கட்டுவது.

ஆக, சிங்களவன் எரித்தால், சந்தோசம், நீயே கடனை உழைச்சுக்கட்டப்பா என்று நோ ரென்சன் சிரிப்பு!!

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஊர்க்காவலன் said:

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. 

யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
நன்றி 

ஆற்றில் பணத்தை போட்டாலும் சிலவேளை திரும்ப கிடைக்கும் போயும் போயும் இலங்கையில் பணத்தை போட்டால் சிங்களவன் தான் அனுபவிப்பான் .

  • Like 3
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிறீலங்காவில் பிறந்த வெளிநாட்டுக் குடியுரிமை உள்ள ஒருவர் திறக்கலாம்.

Non Resident Rupees Account  (NRRA) 

இந்தக் கணக்கு சிலவருடங்களுக்கு முன்னர் கோத்தபாய அரசினால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில்   அறிமுகப்படுத்தப்பட்டது.

உங்களது கடவுச்சீட்டும் வெளிநாட்டில் உங்களது முகவரியை உறுதிப்படுத்த சாரதி அனுமதிப் பத்திரமும் போதுமானது.

ஆனால் இந்த வங்கிக் கணக்கிற்கு உள்ளூரில் பணம் வைப்பிலிட முடியாது.  வெளிநாட்டிலிருந்து வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பணமாற்றுச் சேவையினூடக அல்லது உங்களது வெளிநாட்டு வங்கியினூடாக மாத்திரமே வைப்பிலிடலாம்.

மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பணமாற்று சேவை வழங்குநர்கள். நாடுகள் ரீதியாக

https://www.cbsl.gov.lk/en/remittance-partners

மேலும் இவ்வகையான (வங்கிக்  கணக்கு ) வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர வைப்பிற்கான வட்டிவீதமும் வைப்பிற்கான காலமும் சற்றுக் குறைவானது.

Edited by MEERA
  • Like 3
  • Thanks 2
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, MEERA said:

உள்ளூரில் வைப்பிலிட முடியாது என்றால் என்ன அர்த்தம்? 
இலங்கை சென்றால் அந்த பணம் எடுக்க முடியாது என்று அர்த்தமா? 
வைப்பிலிருக்கும் பணம் இலங்கை ரூபாயில் இருக்குமா அல்லது அந்தந்த நாட்டு நாணயத்திலா? 

Edited by ஊர்க்காவலன்
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, ஊர்க்காவலன் said:

உள்ளூரில் வைப்பிலிட முடியாது என்றால் என்ன அர்த்தம்? 
இலங்கை சென்றால் அந்த பணம் எடுக்க முடியாது என்று அர்த்தமா? 
வைப்பிலிருக்கும் பணம் இலங்கை ரூபாயில் இருக்குமா அல்லது அந்தந்த நாட்டு நாணயத்திலா? 

உள்ளூரில் CMD - Cash Machine Deposit & CD - Counter Deposit மூலமாக பணம் வைப்பிலிட முடியாது. உண்டியல் மூலமான பணப் பரிமாற்றத்தை தடுப்பதற்காக.

நீங்கள் தாராளமாக பணத்தினை எடுக்க முடியும். அந்த கணக்கினூடாகவே மற்றைய கணக்குகளுக்கு மாற்றவும் Standing Order - (நிலையியற் கட்டளை) பிறப்பிக்கவும் முடியும்.

உங்களது பணம் சிறீலங்கா ரூபாவில் இருக்கும். 

Edited by MEERA
  • Like 2
  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் அன்கிருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை 

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, MEERA said:

உள்ளூரில் CMD - Cash Machine Deposit & CD - Counter Deposit மூலமாக பணம் வைப்பிலிட முடியாது. உண்டியல் மூலமான பணப் பரிமாற்றத்தை தடுப்பதற்காக.

நீங்கள் தாராளமாக பணத்தினை எடுக்க முடியும். அந்த கணக்கினூடாகவே மற்றைய கணக்குகளுக்கு மாற்றவும் Standing Order - (நிலையியற் கட்டளை) பிறப்பிக்கவும் முடியும்.

உங்களது பணம் சிறீலங்கா ரூபாவில் இருக்கும். 

இறுதியான ஒரு கேள்வி. எந்த வங்கியில் இந்த NRRA வசதி உள்ளது? கணக்கினை ஆன்லைன் மூலம் திறக்கும் வசதிகள் இருக்குமா? 

இலங்கையில் கோடி கோடியாய் முதலீடு செய்வதற்கு நான் இந்த தகவலை கேட்கவில்லை என்பதையும் கூறிக்கொண்டு....:)

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஊர்க்காவலன் said:

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. 

யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
நன்றி 

இலங்கைக் குடியுரிமை இல்லாதவர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க முடியாது.
இலங்கையில் உள்ள சர்வதேச வங்கிகளில் ஆரம்பிக்கலாமா என்று தெரியவில்லை.

32 minutes ago, ஊர்க்காவலன் said:

இறுதியான ஒரு கேள்வி. எந்த வங்கியில் இந்த NRRA வசதி உள்ளது? கணக்கினை ஆன்லைன் மூலம் திறக்கும் வசதிகள் இருக்குமா? 

இலங்கையில் கோடி கோடியாய் முதலீடு செய்வதற்கு நான் இந்த தகவலை கேட்கவில்லை என்பதையும் கூறிக்கொண்டு....:)

https://www.google.com/search?q=nrra+account&oq=nrra&aqs=chrome.1.69i57j0i512l2j0i10i512l2j46i175i199i512j0i512l3j0i10i512.8486j0j7&sourceid=chrome&ie=UTF-8#ip=1

மேலுள்ள இணைப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் விபரங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஊர்க்காவலன் said:

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. 

யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
நன்றி 

தாராளமாகத் திறக்கலாம். இதில் ஒரு பிரச்சனையும் இல்லை. வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கு என்று பெயர். 

இலங்கை ரூபாயிலும் திறக்கலாம, அனுமதிக்கபட்ட வேற்றுநாட்டு பணக் கணக்கையும் ஆரம்பிக்கலாம்’. ஆனால் ரூபாயில் பணத்தை வைப்பிலிடுவது  பண மதிப்பிழக்கத்தால் பாதிக்கப்படலாம். 

எனவே டொலரிலோ, பவுண்சிலோ திறப்பதுதான் பாதுகாப்பானது. அதற்கான வட்டியும் அதிகம். 

வங்கியில் வைப்பிலிடும் பணத்தை அரசு எடுத்துக்கொள்ளும் அபாயம் என்பது நடைமுறையில் வெகு அரிதானது. இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் மேற்கு நாடுகள் வங்கிகளிண் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்த்திருந்த  தங்கள் மக்களின் தங்கத்தை எடுத்துக்கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு. 

அதுசரி ஊர்க்காவலனுக்கு பென்சன் எடுக்கும் வயது நெருங்குகிறதோ? 

🤣

  • Like 2
  • Haha 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kapithan said:

இல்லை தலீவரே. பென்சன் எடுக்க நிறைய காலம் இருக்கு.

ஆனா பென்சன் எடுக்கிறதை திட்டமிடுற வயசுக்கு வந்திட்டன் :)

சில சமூக சேவைகள் செய்வதற்கு நேரடியாக இலங்கையில் வங்கிக்கணக்கு இருந்தால் நடைமுறை சிக்கல் நிறையவே குறையும். அதற்கு தான் கேட்டனான். இந்த இடைத்தரகர்கள் மூலமாக செய்வது நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறது. 

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

இலங்கைக் குடியுரிமை இல்லாதவர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க முடியாது.
இலங்கையில் உள்ள சர்வதேச வங்கிகளில் ஆரம்பிக்கலாமா என்று தெரியவில்லை.

https://www.google.com/search?q=nrra+account&oq=nrra&aqs=chrome.1.69i57j0i512l2j0i10i512l2j46i175i199i512j0i512l3j0i10i512.8486j0j7&sourceid=chrome&ie=UTF-8#ip=1

மேலுள்ள இணைப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் விபரங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வெளிநாட்டவர்களுக்கான சேமிப்பு கணக்கை இலங்கை குடியுரிமை இல்லாத ஒருவர் ஆரம்பிக்க/பேண முடியும். 

மக்கள் வங்கியில் செய்து தருவார்கள். ஏ ரி எம் கார்ட் மற்றும் மக்கள் வங்கி அப் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம். கணக்கை இலங்கை ரூபாயிலோ அல்லது டொலரிலோ வைக்கலாம். 

ஒரு ஐந்தோ பத்தோ இலட்சங்களை வைப்பிலிட்டு இலங்கை செல்லும் சமயங்களில் அல்லது ஏதாவது சில்லறை கொடுக்கல் வாங்கல்களை இந்த கணக்கின் மூலம் செய்வது உசிதமானது. மற்றும்படி பெரிய தொகைகளை வைப்பிலிட்டு பெரிய கொடுக்கல் வாங்கல்கள் செய்தால் அது நிச்சயம் வங்கியின் கண்காணிப்பிற்கு ஆளாகலாம். எனவே பெரிய அலுவல்கள் அல்லது நீண்டகால சேமிப்பு கணக்கு என்றால் வங்கி முகாமையாளருடன் உரையாடி ஆரம்பத்திலேயே சந்தேகங்களை போக்குவது நல்லது. தவிர இலங்கை அரசு நேரத்துக்கு நேரம் நடைமுறைகளை மாற்றும் என்பதும் நாம் அறியாதது அல்ல. நீண்டகால/பெரிய முதலீடு/வியாபார நோக்கு போன்றவை என்றால் வங்கியில் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம்.

  • Like 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ரெட்டை குடி உரிமை இருக்கு.. ஆனாலும் நான் அம்மாவை ரெண்டாவது ஆளாய் இணைத்துதான் திறந்திருக்கிறேன்.. பின்னுக்கு ஏதும் பிரச்சினை வந்தாலும் அம்மா இலங்கை பிரசை என்பதால் பணத்தை அம்மா கிளேம் பண்ணலாம் என்பதால் ஒரு பாதுகாப்புக்கு.. நீங்களும் பெரிய அமவுண்டு எனில் அப்படி ஏதும் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது நல்லது..

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஊர்க்காவலன் said:

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. 

யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
நன்றி 

இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்து கொண்டே போகிறது.

ஒரு லட்சம் வங்கியில் போட்டால் அதன் பெறுமதி கொஞ்சகாலம் போக ஐம்பதினாயிரமாக இருக்கும்.சிலவேளை அதையும் விட குறையலாம்.

இலங்கை கடன்களை திரும்ப கொடுக்கும் போது இறக்குமதிகளுக்கு உள்ள தடைகளை எடுக்கும் போது ஒரு லட்சம் சில ஆயிரம் ரூபாக்கள் ஆகலாம்.

இதைவிட வரும் வட்டிக்கும் Tax இப்போது  கொடுக்க வேண்டும்.

  • Thanks 2
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, MEERA said:

உங்களது பணம் சிறீலங்கா ரூபாவில் இருக்கும். 

மீரா வெளிநாட்டுப் பணத்திலும் வைப்பிடலாமென்று எண்ணுகிறேன்.

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஊர்க்காவலன் said:

இறுதியான ஒரு கேள்வி. எந்த வங்கியில் இந்த NRRA வசதி உள்ளது? கணக்கினை ஆன்லைன் மூலம் திறக்கும் வசதிகள் இருக்குமா? 

இலங்கையில் கோடி கோடியாய் முதலீடு செய்வதற்கு நான் இந்த தகவலை கேட்கவில்லை என்பதையும் கூறிக்கொண்டு....:)

இந்த வங்கிக் கணக்கு எல்லா வங்கிகளிலும் உள்ளது.

ஆனால் HNB இல் மாத்திரம் நீங்கள் அவர்களது App இனூடாக நிரந்தர வைப்பினை மேற்கொள்ளலாம். 

நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்றே கணக்கினை ஆரம்பிக்க முடியும். முக்கியமாக KYC ( Know Your Customer ) form நிரப்ப வேண்டும். உங்களது படமும் கையொப்பமும் இலத்திரனியல் முறையில் சேமிக்கப்படும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

மீரா வெளிநாட்டுப் பணத்திலும் வைப்பிடலாமென்று எண்ணுகிறேன்.

ஆம் அண்ணா. 

நான் சொல்வது NRRA

NON RESIDENT RUPEES ACCOUNT 

நீங்கள் சொல்வது NRFC

NON RESIDENT FOREIGN CURRENCY 

  • Like 1
  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஊர்க்காவலன் said:

இலங்கையில் கோடி கோடியாய் முதலீடு செய்வதற்கு நான் இந்த தகவலை கேட்கவில்லை என்பதையும் கூறிக்கொண்டு....:)

இங்கு தான் சந்தேகம் வலுப் பெறுகிறது 🤣🤣🤣.

இன்றைய நிலையில் 24,000 பிரித்தானிய பவுண்களை அனுப்பினாலே போதும் கோடீஸ்வரனாக…

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, MEERA said:

ஆனால் HNB இல் மாத்திரம் நீங்கள் அவர்களது App இனூடாக நிரந்தர வைப்பினை மேற்கொள்ளலாம். 

கொமர்சல், மக்கள் வங்கிகளிலும் ஒன்லைன் மூலமாக நிரந்தர வைப்புச் செய்யலாம் என நினைக்கிறேன்.

  • Thanks 1
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, MEERA said:

இந்த வங்கிக் கணக்கு எல்லா வங்கிகளிலும் உள்ளது.

ஆனால் HNB இல் மாத்திரம் நீங்கள் அவர்களது App இனூடாக நிரந்தர வைப்பினை மேற்கொள்ளலாம். 

நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்றே கணக்கினை ஆரம்பிக்க முடியும். முக்கியமாக KYC ( Know Your Customer ) form நிரப்ப வேண்டும். உங்களது படமும் கையொப்பமும் இலத்திரனியல் முறையில் சேமிக்கப்படும்.

ஆம் அண்ணா. 

நான் சொல்வது NRRA

NON RESIDENT RUPEES ACCOUNT 

நீங்கள் சொல்வது NRFC

NON RESIDENT FOREIGN CURRENCY 

தகவலுக்கு நன்றி மீரா.

4 minutes ago, MEERA said:

இங்கு தான் சந்தேகம் வலுப் பெறுகிறது 🤣🤣🤣.

இன்றைய நிலையில் 24,000 பிரித்தானிய பவுண்களை அனுப்பினாலே போதும் கோடீஸ்வரனாக…

காலம் போகப்போக இந்த தொகை குறைந்து கொண்டு தான் போகும்.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணையத்தில் தேடியபோது கிடைத்த சில தகவல்கள்:

https://www.sfconsultingbd.com/blog/can-a-foreigner-open-a-bank-account-in-sri-lanka

https://enterslice.com/lk/open-bank-account-in-sri-lanka

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை குடியுரிமை இல்லாதவர்கள் இலங்கையில் டொலர்கள் பவுண்களில்  வங்கி கணக்கு திறக்க முடியும் என்ற முறை பழைய காலம் தொடங்கி  இருந்து வந்திருக்க வேண்டும்.புதிதாக ரூபாவிலும் வங்கி கணக்கு திறக்க முடியும் என்று தகவல் பிரபா யாழ்களத்தில் 2  , 3 வருடத்திற்கு முன்பு எழுதியிருந்தவா.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

இதைவிட வரும் வட்டிக்கும் Tax இப்போது  கொடுக்க வேண்டும்.

ஒம் அண்ணா 5% வருடாந்த வரி செலுத்த வேண்டும் பெறும் வட்டிக்கு.

உதாரணமாக உங்களுக்கு வருடம் ஓன்றிற்கு 10 இலட்சம் ரூபா வட்டி வருமானமாக பெற்றிருந்தால் 50,000/= வரி செலுத்த வேண்டும்.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது இடத்தில் இருப்பவர்கள் சிலர் சிறிலங்காவில்  உள்ள வங்கியில்  பணம் வைப்பிலிடுவதற்காகவே அடிக்கடி செல்வதாக கூறுவார்கள். ஏனென்றால் வட்டி அதிகமாம். ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே. அதன் பின்  புதிப்பிக்க வேண்டுமாம்.

  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் மக்கள் வங்கியில் பணியாற்றி இருக்கிறேன் ஆனாலும் அதிலிருந்து விலகி இருபது வருடங்களாகிறது. நானும் சில வங்கிக் கணக்குகளை இலங்கையிலே பேணி வருகிறேன். அந்த அடிப்படையில் சில தகவல்களை உங்களுக்கும் பரிமாறலாம் என்று நினைக்கிறேன். இலங்கையில் வதிவுரிமை இல்லாத வெளிநாட்டு குடியுரிமை உள்ளவர்கள், சாதாரண வங்கி கணக்குகளை ஆரம்பிக்க முடியாது. அவர்களுக்கென்று வதியாதோர் வெளிநாட்டு கணக்கு என்பது கடந்த நீண்ட காலமாகவே இலங்கையில் இருந்து வருகிறது. அந்த வதியாதோர் நாணய கணக்கு விரும்பினால் வெளிநாட்டு நாணயத்தில் இல்லாத இலங்கை ரூபாய் ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. அதே வேலை அண்மையிலே வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக வெளிநாட்டு நாணயத்திலேயே ஆரம்பிக்கக் கூடிய கணக்கு  அது தான் நீங்கள் மேலே குறிப்பிட்டவை. குறிப்பாக இலங்கையில் பிறந்தவர்களுக்கு ஒரு அடையாள அட்டை இருக்கும். அந்த அடையாள அட்டையை கொண்டு நீங்கள் எந்த வங்கிக்கு சென்றாலும் ஒரு கணக்கு திறக்கலாம். ஆனால் நீங்கள் எனக்கு வெளிநாட்டு குடியுரிமை இருக்கு என்பது அந்த வங்கிக்கு தெரியப்படுத்தக் கூடாது. இலங்கையில் உள்ள தகவல் மையப்படுத்தல் அடிப்படையில் ஒருவர் வெளிநாட்டிலே குடியுரிமை பெற்றுவிட்டார் என்பது இலங்கைக்கு அல்லது இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு தெரியாது என்பது முக்கியமானது. ஆகவே நீங்கள் ஒரு அடையாள அட்டை எடுத்துச் சென்றீர்களான இருந்தால் எந்த வங்கியிலும் கணக்கு ஆரம்பிக்கலாம் அவர்கள் உங்களை உள்நாட்டுக்காரர் என்று நினைத்துக் கொண்டே கணக்கு திறப்பார்கள். உங்கள் கணக்குகளை உங்கள் மொபைல் போனிலேயே செயல்படுத்தக் கூடியதாக அவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நீங்கள் இங்கிருந்து பணம் அனுப்பலாம். இங்கிருந்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆகவே இது சம்பந்தமாக எனக்கு உள்ள அறிவை பகிர்ந்து கொண்டேன். நான் இவ்வாறு குறிப்பிடத்தக்களவு தொகைகளை சில வங்கிகளில் வைத்து நான் தேவைப்படும் பொழுது மாற்றீடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். முதலீடு சம்பந்தமாக பேசுவதென்றால் அதைப் பற்றி ஒரு தனி கட்டுரை என்றால் எழுத முடியும் அதை நான் இந்த இடத்தில் விவாதிக்க முன் வரவில்லை நன்றி.

மற்றியது ஆன்லைனில் கணக்கு ஆரம்பிக்க முடியாது ஆனால் வங்கிக்கு குறிப்பிட்ட துணைக் களத்திற்கு எங்கள் தொலைபேசி அழைப்பு எடுத்தோம் அல்லது இமெயில் மூலம் தொடர்பு கொண்டோம் அவர்கள் உங்களுக்கு முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் அதற்குரிய விண்ணப்பங்களையும் உங்களுக்கு அனுப்பி வைத்து அவ்வாறான வெளிநாட்டு கணக்குகளை ஆரம்பிப்பது நடைபெற்று உள்ளது. அவ்வாறு நான்  இலங்கை வங்கியிலே ஒரு கணக்கை ஆரம்பித்திருந்தேன் அது டாலரில் ஆரம்பிக்க கூடிய கணக்கு

1 hour ago, MEERA said:

ஒம் அண்ணா 5% வருடாந்த வரி செலுத்த வேண்டும் பெறும் வட்டிக்கு.

உதாரணமாக உங்களுக்கு வருடம் ஓன்றிற்கு 10 இலட்சம் ரூபா வட்டி வருமானமாக பெற்றிருந்தால் 50,000/= வரி செலுத்த வேண்டும்.

மாதாந்தம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் உழைப்பவர்கள் மட்டுமே அந்த  வபட்டிக்கான வரி செலுத்தல் வேண்டும் என்பது அரசாங்கத்தினுடைய வரி  கொள்கையாகும்

  • Like 1
  • Thanks 2
  • 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ooravan said:

நான் மக்கள் வங்கியில் பணியாற்றி இருக்கிறேன் ஆனாலும் அதிலிருந்து விலகி இருபது வருடங்களாகிறது. நானும் சில வங்கிக் கணக்குகளை இலங்கையிலே பேணி வருகிறேன். அந்த அடிப்படையில் சில தகவல்களை உங்களுக்கும் பரிமாறலாம் என்று நினைக்கிறேன். இலங்கையில் வதிவுரிமை இல்லாத வெளிநாட்டு குடியுரிமை உள்ளவர்கள், சாதாரண வங்கி கணக்குகளை ஆரம்பிக்க முடியாது. அவர்களுக்கென்று வதியாதோர் வெளிநாட்டு கணக்கு என்பது கடந்த நீண்ட காலமாகவே இலங்கையில் இருந்து வருகிறது. அந்த வதியாதோர் நாணய கணக்கு விரும்பினால் வெளிநாட்டு நாணயத்தில் இல்லாத இலங்கை ரூபாய் ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. அதே வேலை அண்மையிலே வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக வெளிநாட்டு நாணயத்திலேயே ஆரம்பிக்கக் கூடிய கணக்கு  அது தான் நீங்கள் மேலே குறிப்பிட்டவை. குறிப்பாக இலங்கையில் பிறந்தவர்களுக்கு ஒரு அடையாள அட்டை இருக்கும். அந்த அடையாள அட்டையை கொண்டு நீங்கள் எந்த வங்கிக்கு சென்றாலும் ஒரு கணக்கு திறக்கலாம். ஆனால் நீங்கள் எனக்கு வெளிநாட்டு குடியுரிமை இருக்கு என்பது அந்த வங்கிக்கு தெரியப்படுத்தக் கூடாது. இலங்கையில் உள்ள தகவல் மையப்படுத்தல் அடிப்படையில் ஒருவர் வெளிநாட்டிலே குடியுரிமை பெற்றுவிட்டார் என்பது இலங்கைக்கு அல்லது இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு தெரியாது என்பது முக்கியமானது. ஆகவே நீங்கள் ஒரு அடையாள அட்டை எடுத்துச் சென்றீர்களான இருந்தால் எந்த வங்கியிலும் கணக்கு ஆரம்பிக்கலாம் அவர்கள் உங்களை உள்நாட்டுக்காரர் என்று நினைத்துக் கொண்டே கணக்கு திறப்பார்கள். உங்கள் கணக்குகளை உங்கள் மொபைல் போனிலேயே செயல்படுத்தக் கூடியதாக அவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நீங்கள் இங்கிருந்து பணம் அனுப்பலாம். இங்கிருந்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆகவே இது சம்பந்தமாக எனக்கு உள்ள அறிவை பகிர்ந்து கொண்டேன். நான் இவ்வாறு குறிப்பிடத்தக்களவு தொகைகளை சில வங்கிகளில் வைத்து நான் தேவைப்படும் பொழுது மாற்றீடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். முதலீடு சம்பந்தமாக பேசுவதென்றால் அதைப் பற்றி ஒரு தனி கட்டுரை என்றால் எழுத முடியும் அதை நான் இந்த இடத்தில் விவாதிக்க முன் வரவில்லை நன்றி.

மற்றியது ஆன்லைனில் கணக்கு ஆரம்பிக்க முடியாது ஆனால் வங்கிக்கு குறிப்பிட்ட துணைக் களத்திற்கு எங்கள் தொலைபேசி அழைப்பு எடுத்தோம் அல்லது இமெயில் மூலம் தொடர்பு கொண்டோம் அவர்கள் உங்களுக்கு முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் அதற்குரிய விண்ணப்பங்களையும் உங்களுக்கு அனுப்பி வைத்து அவ்வாறான வெளிநாட்டு கணக்குகளை ஆரம்பிப்பது நடைபெற்று உள்ளது. அவ்வாறு நான்  இலங்கை வங்கியிலே ஒரு கணக்கை ஆரம்பித்திருந்தேன் அது டாலரில் ஆரம்பிக்க கூடிய கணக்கு

மாதாந்தம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் உழைப்பவர்கள் மட்டுமே அந்த  வபட்டிக்கான வரி செலுத்தல் வேண்டும் என்பது அரசாங்கத்தினுடைய வரி  கொள்கையாகும்

நன்றி விளக்கத்துக்கு இன்னும் படிக்கவில்லை நாளை படிக்கிறேன் .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.