Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவானில் வெடித்த சண்டை; தம்பதியால் அவசர அவசரமாகத் தரையிறங்கிய விமானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற தம்பதி இடையே நடுவானில் சண்டை ஏற்பட்டதால், விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கணவன், மனைவி இடையே எப்போது சண்டை வரும், எப்போது ஒன்று சேருவார்கள் என்று கணிக்கவே முடியாது. திடீரெனச் சண்டைபோடுவார்கள், அடுத்த நிமிடமே சேர்ந்துகொள்வார்கள். அந்த வகையில், ஜெர்மனியின் ம்யூனிச் நகரிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்ற லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த தம்பதிக்கு இடையே, நடுவானில் தகராறு ஏற்பட்டது.

அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தன்னை மிரட்டுவதாகக் கூறி, பைலட்டிடம் மனைவி புகார் செய்தார். விமானப் பணியாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் சண்டையை நிறுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் பைலட் டெல்லி விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, நிலைமையை எடுத்துக் கூறி, விமானத்தைத் தரையிறக்க அனுமதி கேட்டார்.

டெல்லியில் உடனே அனுமதி கொடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், சண்டையிட்டுக்கொண்ட தம்பதி விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, டெர்மினஸ் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர், விமானப் பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்தனர். அவர்களை டெல்லியில் இறக்கிவிட்ட பிறகு, சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டுச் செல்லத் தயாரானது. இதில் கணவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். மனைவி தாய்லாந்தைச் சேர்ந்தவர்.
மாமியார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றபோது கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/282950

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இதில் கணவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். மனைவி தாய்லாந்தைச் சேர்ந்தவர்.
மாமியார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றபோது கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது.

பல ஜேர்மன்  ஆண்கள் தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து இருக்கின்றார்கள்.
அவர்கள் சொல்லும் காரணம் ஆசிய பெண்கள் கணவனை நன்றாக பராமரிப்பதுடன்
சுவையான சமையலும்  செய்வார்கள் என்பார்கள்.

இந்தப் பெண்  ஜேர்மனியில் இருக்கும் மட்டும் அமைதியாக இருந்து விட்டு,
தாய் வீட்டுக்குப் போகும் வழியில்... ஏதோ புது பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளது போல் தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

பல ஜேர்மன்  ஆண்கள் தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து இருக்கின்றார்கள்.

100% உண்மை தோழர்.. வித விதமா தேத்தண்ணி தயாரிப்பதில் சிலோன் காரரை மிஞ்சிவிட்டினம்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

100% உண்மை தோழர்.. வித விதமா தேத்தண்ணி தயாரிப்பதில் சிலோன் காரரை மிஞ்சிவிட்டினம்..

தோழர், எங்கடை ஆட்களுக்கு... animiertes-zuhause-smilies-bild-0012.gif பால் தேத்தண்ணி, பிளேன் ரீ´யை... தவிர animiertes-zuhause-smilies-bild-0033.gif
வேறை ஒண்டும் போடத் தெரியாது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif 

இதற்குள் இனி நின்றால்... தாய்க்குலம் தோலை உரித்துவிடும். animiertes-gefuehl-smilies-bild-0158.gif நான் எஸ்கேப்பு  தோழர். animiertes-gefuehl-smilies-bild-0129.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

😄

17 minutes ago, தமிழ் சிறி said:

தோழர், எங்கடை ஆட்களுக்கு... animiertes-zuhause-smilies-bild-0012.gif பால் தேத்தண்ணி, பிளேன் ரீ´யை... தவிர animiertes-zuhause-smilies-bild-0033.gif
வேறை ஒண்டும் போடத் தெரியாது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif 

இதற்குள் இனி நின்றால்... தாய்க்குலம் தோலை உரித்துவிடும். animiertes-gefuehl-smilies-bild-0158.gif நான் எஸ்கேப்பு  தோழர். animiertes-gefuehl-smilies-bild-0129.gif

 சிறீத்தம்பி இந்த ரெண்டு தேத்தண்ணியை விட ...

. ஜிஞ்சர் டி  லெமன் டி  மசாலா டி  சுக்கு காபி ..

.முடடைக்   கோப்பி 

எல்லாம்  உங்கடையாக்கள் போட்டுத் தரல்லையா   ?😄
 
Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிலாமதி said:

😄

 சிறீத்தம்பி இந்த ரெண்டு தேத்தண்ணியை விட ...

. ஜிஞ்சர் டி  லெமன் டி  மசாலா டி  சுக்கு காபி ..

.முடடைக்   கோப்பி 

எல்லாம்  உங்கடையாக்கள் போட்டுத் தரல்லையா   ?😄
 
நிலாமதி அக்கா, கலியாணம் கட்டின புதுசிலை... முட்டைக்  கோப்பி போட்டுத் தந்தவை.
அதுக்குப் பிறகு... பால் ரீ, பிளேன் ரீ.. என்று, அரைத்த மாவையே அரைக்கிறாங்க. animiertes-gefuehl-smilies-bild-0239.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நிலாமதி அக்கா, கலியாணம் கட்டின புதுசிலை... முட்டைக்  கோப்பி போட்டுத் தந்தவை.
அதுக்குப் பிறகு... பால் ரீ, பிளேன் ரீ.. என்று, அரைத்த மாவையே அரைக்கிறாங்க. animiertes-gefuehl-smilies-bild-0239.gif

இன்னும் பாலூத்தேல்லை எண்டு சந்தோசபடுவியளா…..

எப்ப பாரு நொட்டை சொல்லி கொண்டு😂

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

இன்னும் பாலூத்தேல்லை எண்டு சந்தோசபடுவியளா…..

எப்ப பாரு நொட்டை சொல்லி கொண்டு😂

வணக்கம் கோசான்.

விடுமுறைகள் எல்லாம் எப்படி இருந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

கோபிக்குப் பெயர் போன அமெரிக்கா... 

இங்கிருந்து கிளம்பி தேத்தண்ணியை இந்தியா, இலங்கை உலகமெங்கும் உள்ள தனது காலணிகள் அனைத்திலும் பரப்பிய பிரித்தானியாவிலேயே, தேத்தண்ணியை விழுத்தி, கோப்பி சாம்ராஜ்ஜியத்தினை உருவாக்கி விட்டார்கள்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்த ஒரு அம்மணி ராஜஸ்தான் சுற்றுலா போயிருக்கிறார். தங்கியிருந்த மோட்டல் யன்னல் ஊடாக பார்த்தால், ஒரு கடை - வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், கப்பில் வாங்கிக் குடிக்கிறார்கள்... கிளம்புகிறார்கள். சிலர் இரண்டாவது கப் ஆர்டர் பண்ணி குடித்து விட்டு கிளப்புகிறார்கள். 

இவருக்கு ஆச்சிரியம். அப்படி என்னத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்று சிந்திக்கிறார். ஒரு வேலை சாராயமோ... டீ கடை போர்டு இருந்தால் தெரிந்திருக்கும் அது இல்லாததால் குழப்பம்.

கீழே இறங்கி வருகிறார். ரெஸ்ப்பினில் விசாரிக்கிறார். அவர்கள் சொன்ன விபரத்துடன் வெளியே போய், இந்தியில் சாய் என்கிறார். எந்த சாய் வேணும் என்கிறார் கடைக்கார பையன் ஆங்கிலத்தில்.

அட, ஆங்கிலம் பேசுகிறானே என்று மகிழ்வுடன் பேசினால், அவன் ஒரு பட்டதாரி. வியாபாரம் செய்ய முனைந்து இதனை செய்கிறார். தான் செய்யும் விதவிதமான, டீகளை அவவுக்கு விளக்கப்படுத்த... அந்த பெண் அமேரிக்கா திரும்பி, கோப்பி போலவே ஒரு டீ செயின் தொடங்கி விட்டார்.

நான் இதனை வாசித்த 2007ம் ஆண்டு, இரண்டாவது ஆண்டு வருமானம் $15மில்லியன். இப்போது பெயர் மறந்து விட்டது. தேடித் பார்க்க வேண்டும். 

4 hours ago, தமிழ் சிறி said:

பல ஜேர்மன்  ஆண்கள் தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து இருக்கின்றார்கள்.
அவர்கள் சொல்லும் காரணம் ஆசிய பெண்கள் கணவனை நன்றாக பராமரிப்பதுடன்
சுவையான சமையலும்  செய்வார்கள் என்பார்கள்.

இந்தப் பெண்  ஜேர்மனியில் இருக்கும் மட்டும் அமைதியாக இருந்து விட்டு,
தாய் வீட்டுக்குப் போகும் வழியில்... ஏதோ புது பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளது போல் தெரிகின்றது.

தாய்லாந்துக்காரி வலு கெட்டிக்காரி... ஊருக்கு வருவேன் என்று அடம் பிடித்த ஜெர்மன் வீட்டுக்காரரை டெல்லில இறக்கி விட்டாச்சு.

இனி ஊருக்கு போய், தாய்லாந்து ஒரிஜினல் புருசனோட, லீவில வந்த காலத்திலை சந்தோசமா இருந்து போட்டு, திரும்பி வந்து, I am very sorry darling எண்டால் ஓகே தானே... 😜

10 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான்.

விடுமுறைகள் எல்லாம் எப்படி இருந்தது?

அவர் எங்கை ஹாலிடே போனவர்... கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டு பார்த்திருப்பார்...

நாட்டில எத்தனை பிரச்சனைகள்... சை... 🤣😁

2 hours ago, தமிழ் சிறி said:

... பால் ரீ, பிளேன் ரீ.. என்று, அரைத்த மாவையே அரைக்கிறாங்க. animiertes-gefuehl-smilies-bild-0239.gif

உங்களுக்கு இவையாவது கிடைக்குதே... கொடுத்த வைச்ச மனுசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

ஜெர்மனியிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற தம்பதி இடையே நடுவானில் சண்டை ஏற்பட்டதால், விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இரண்டு பேருக்கும் வாற தண்டப்பணம் கணக்கு வழக்கில்லாமல் வரப்போகுது....அதோட விமானம் டெல்லியில இறங்கின செலவு ஏறின செலவு எல்லாம் காணி சொத்து பத்து வித்தாலும் கட்டாது கண்டியளோ 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான்.

விடுமுறைகள் எல்லாம் எப்படி இருந்தது?

வணக்கம் அண்ணை. சுகமே கழிகிறது. 🙏

4 hours ago, Nathamuni said:

நான் இதனை வாசித்த 2007ம் ஆண்டு, இரண்டாவது ஆண்டு வருமானம் $15மில்லியன். இப்போது பெயர் மறந்து விட்டது. தேடித் பார்க்க வேண்டும். 

இப்ப லேட்டஸ்டா யூகேயில சாய்-வாலா எண்டு ஒரு செயின் நல்லா ஓடுது.

கராக் சாய் நல்லா இருக்கும். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இப்ப லேட்டஸ்டா யூகேயில சாய்-வாலா எண்டு ஒரு செயின் நல்லா ஓடுது.

கராக் சாய் நல்லா இருக்கும். 

அது எங்களுக்கு, 'பாக்கித் துரைகளுக்கு'. (யாரும் பிழை பிடிக்க வராயினம் எணட நம்பிக்கை).

வெள்ளையள், 'வாலா' பேரை கேட்டே வராயினம்.

போனனான். விலை அநியாயத்துக்கு கூட!!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நிலாமதி அக்கா, கலியாணம் கட்டின புதுசிலை... முட்டைக்  கோப்பி போட்டுத் தந்தவை.
அதுக்குப் பிறகு... பால் ரீ, பிளேன் ரீ.. என்று, அரைத்த மாவையே அரைக்கிறாங்க. animiertes-gefuehl-smilies-bild-0239.gif

அண்ணை நீங்கள்  முட்டைகோப்பி குடித்த உசாரில் பிடி பிடியென்று பிடித்திருப்பீர்கள்.
இதென்ன கோதாரியாகக்கிடக்கு எல்லாம் இந்த முட்டைக்கோப்பியால் வந்த வினை என்று வீட்டுக்கார அம்மா 
அத்தோட முட்டைக்கோப்பிக்கு கட். இது தான் நடந்திருக்கும்.  😄😄😄

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

தோழர், எங்கடை ஆட்களுக்கு... animiertes-zuhause-smilies-bild-0012.gif பால் தேத்தண்ணி, பிளேன் ரீ´யை... தவிர animiertes-zuhause-smilies-bild-0033.gif
வேறை ஒண்டும் போடத் தெரியாது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif 

இதற்குள் இனி நின்றால்... தாய்க்குலம் தோலை உரித்துவிடும். animiertes-gefuehl-smilies-bild-0158.gif நான் எஸ்கேப்பு  தோழர். animiertes-gefuehl-smilies-bild-0129.gif

சில வேளைகளில் தெரிவு குறைவாக இருப்பது நல்லது, எனக்கு தெரிவு செய்வதில் பிரச்சினை உள்ளது.

உதாரணமாக காலை உணவு என்ன வேணும் என கேட்டு ஒரு சின்ன பட்டியலை தருவார்கள், ஆரம்பத்தில் எதனை தெரிவு செய்வது என்பது குழப்பமாக இருக்கும் ஏதாவது இலகுவான விடயத்தினை செய்யுங்கள் என்றால் கோபம் வந்துவிடும் (அவர்கள் சிரமம் எடுத்து செய்வதினை கருத்து எடுக்கவில்லை என நினைக்கிறார்ககள் என நினைக்கிறேன்).

நீங்கள் உங்களுக்கு செய்வதையே எனக்கும் செய்யுங்கள் என உசாராக கூறிவிடுவதுண்டு (பெரிதாக சமைப்பதென்று நினைக்கவேண்டாம் உடனடி பொதி செய்யப்பட்ட உலர் உணவில் கொதிநீரை விடுவதுதான் அந்த சமையல்).

9 hours ago, Nathamuni said:

கோபிக்குப் பெயர் போன அமெரிக்கா... 

இங்கிருந்து கிளம்பி தேத்தண்ணியை இந்தியா, இலங்கை உலகமெங்கும் உள்ள தனது காலணிகள் அனைத்திலும் பரப்பிய பிரித்தானியாவிலேயே, தேத்தண்ணியை விழுத்தி, கோப்பி சாம்ராஜ்ஜியத்தினை உருவாக்கி விட்டார்கள்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்த ஒரு அம்மணி ராஜஸ்தான் சுற்றுலா போயிருக்கிறார். தங்கியிருந்த மோட்டல் யன்னல் ஊடாக பார்த்தால், ஒரு கடை - வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், கப்பில் வாங்கிக் குடிக்கிறார்கள்... கிளம்புகிறார்கள். சிலர் இரண்டாவது கப் ஆர்டர் பண்ணி குடித்து விட்டு கிளப்புகிறார்கள். 

இவருக்கு ஆச்சிரியம். அப்படி என்னத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்று சிந்திக்கிறார். ஒரு வேலை சாராயமோ... டீ கடை போர்டு இருந்தால் தெரிந்திருக்கும் அது இல்லாததால் குழப்பம்.

கீழே இறங்கி வருகிறார். ரெஸ்ப்பினில் விசாரிக்கிறார். அவர்கள் சொன்ன விபரத்துடன் வெளியே போய், இந்தியில் சாய் என்கிறார். எந்த சாய் வேணும் என்கிறார் கடைக்கார பையன் ஆங்கிலத்தில்.

அட, ஆங்கிலம் பேசுகிறானே என்று மகிழ்வுடன் பேசினால், அவன் ஒரு பட்டதாரி. வியாபாரம் செய்ய முனைந்து இதனை செய்கிறார். தான் செய்யும் விதவிதமான, டீகளை அவவுக்கு விளக்கப்படுத்த... அந்த பெண் அமேரிக்கா திரும்பி, கோப்பி போலவே ஒரு டீ செயின் தொடங்கி விட்டார்.

நான் இதனை வாசித்த 2007ம் ஆண்டு, இரண்டாவது ஆண்டு வருமானம் $15மில்லியன். இப்போது பெயர் மறந்து விட்டது. தேடித் பார்க்க வேண்டும். 

தாய்லாந்துக்காரி வலு கெட்டிக்காரி... ஊருக்கு வருவேன் என்று அடம் பிடித்த ஜெர்மன் வீட்டுக்காரரை டெல்லில இறக்கி விட்டாச்சு.

இனி ஊருக்கு போய், தாய்லாந்து ஒரிஜினல் புருசனோட, லீவில வந்த காலத்திலை சந்தோசமா இருந்து போட்டு, திரும்பி வந்து, I am very sorry darling எண்டால் ஓகே தானே... 😜

அவர் எங்கை ஹாலிடே போனவர்... கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டு பார்த்திருப்பார்...

நாட்டில எத்தனை பிரச்சனைகள்... சை... 🤣😁

நிங்கள் ஒரு யாழ்கள இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதன் (ஒரு நடமாடும் புத்தகசாலை).

உங்களுடைய தகவலுடன் நான் கேள்விப்பட்ட தகவலையும் இங்கு இணைக்கிறேன்.

கோப்பி தாயாரிப்பதற்கு பாலினை அதிகமாக சூடாக்க கூடாது என்பார்கள் (பெரும்பாலான கடைகளில் சூடு கணிக்கும் கருவி பயன்படுத்துவார்கள், ஆனால் பாத்திரத்தின் சூட்டினை உணரடிப்படையிலும் கோப்பியினை தயாரிப்பார்கள்), கோப்பித்தூளை பயன்படுத்தும் கருவியினை சரியாக சுத்திகரிக்கவேண்டும் (ஒரு கோப்பி போட்டபின்னர் சுடுநீரில் கழுவுவது நல்லது என கூறுவார்கள்), போப்பி தூள் பயன்படுத்தும் கருவியினுள் கோப்பிதூள் சம அளவில் பரவி அழுத்தம் சமமாக இருக்கவேண்டும் என கூறுவார்கள்( சுடு நீர் ஒரு பகுதியினூடாக மட்டும் துளைத்து செல்லகூடாது என்பார்கள்) அத்துடன் கோப்பியினை உடனடியாக வறுத்து உடனடியாக பயன்படுத்தும் போது சுவையாக இருக்கும் எனகூறுவார்கள், முக்கியமாக பாலின் நுரையும், கோப்பியும் (கசாயம்) அளவீடுகள் பேணப்படவேண்டும் என கூறுவார்கள் (நான் கோப்பி இரசிகன் இல்லை மேலே கூறப்பட்டவை அனைத்தும் கேள்விப்பட்டவை). 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் டெல்லியில் இறங்கி தாஜ்மஹால் பார்த்திட்டுப் போக பிளான் பண்ணி நாடகமாடியிருக்கிறார்கள்........!  😁

31 minutes ago, vasee said:

vasee இதுவும் ஒரு நல்ல தகவல்.......சரி சரி உண்மையை சொல்லுங்க வீட்டில் நீங்கள்தானே கோப்பி போடுவது......அதுதான் ஒண்ணுக்குள்ள ஒன்னாயிட்டம் சொல்லுங்கள்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

அவர்கள் டெல்லியில் இறங்கி தாஜ்மஹால் பார்த்திட்டுப் போக பிளான் பண்ணி நாடகமாடியிருக்கிறார்கள்........!  😁

vasee இதுவும் ஒரு நல்ல தகவல்.......சரி சரி உண்மையை சொல்லுங்க வீட்டில் நீங்கள்தானே கோப்பி போடுவது......அதுதான் ஒண்ணுக்குள்ள ஒன்னாயிட்டம் சொல்லுங்கள்......!  😂

தற்போது இல்லை,  நிங்கள் கேட்டதால சொல்கிறேன், ஆரம்பத்தில் வேலைக்கு போவதுடன் வீட்டு வேலைகள் அனைத்தும் நான் தான் செய்தேன் (சமையல் உள்ளடங்களாக, எல்லாம் ஒருவருக்கொருவர் உதவிதான்).

ஆரம்பத்தில் உணவகத்தில் வேலை செய்த அனுபவம் சிறிது உள்ளது அதனால் கோப்பி தாயாரிப்பு அனுபவம் சிறிதளவு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

முட்டைக்கோப்பிக்கு கட்.

காலையில நித்திரை கலக்கத்தில எழும்பி இதை பிழையாக வாசித்து ஒரு கணம் ஆடிப்போய்ட்டன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

 சுவையாக இருக்கும் எனகூறுவார்கள், முக்கியமாக பாலின் நுரையும், கோப்பியும் (கசாயம்) அளவீடுகள் பேணப்படவேண்டும் என கூறுவார்கள் (நான் கோப்பி இரசிகன் இல்லை மேலே கூறப்பட்டவை அனைத்தும் கேள்விப்பட்டவை). 

கள உறவு வசி.....கசாயம் என்பது  சில வகை மூலிகை களை அவித்து பெறப்படுவது கசப்பாக இருக்கும். உடல் நலமின்மையோடு சம்பந்தப்பட்ட்து 

சாயம் என்பது  தேயிலையின் செறிவு தன்மை ஒரு அளவு வெந்நீருக்குள் . ஒருபக்கற் போடடால் வரும் செறிவுக்கும் மூணுபக்கற் போட்டால் வரும் செறிவுக்கும் உள்ள வேறுபாடு. .

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2023 at 02:25, நிலாமதி said:

கள உறவு வசி.....கசாயம் என்பது  சில வகை மூலிகை களை அவித்து பெறப்படுவது கசப்பாக இருக்கும். உடல் நலமின்மையோடு சம்பந்தப்பட்ட்து 

சாயம் என்பது  தேயிலையின் செறிவு தன்மை ஒரு அளவு வெந்நீருக்குள் . ஒருபக்கற் போடடால் வரும் செறிவுக்கும் மூணுபக்கற் போட்டால் வரும் செறிவுக்கும் உள்ள வேறுபாடு. .

தகவலுக்கு நன்றி, இப்போது தமிழ் மொழி கூட மறந்து போகிறது (வயது போய்விட்டது).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.