Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக்ஜாம் புயல்: சென்னையில் மழை நின்றது, பல இடங்களில் நீர் தேக்கம் - சமீபத்திய தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மிக்ஜாம் புயல், சென்னை மழை
5 டிசம்பர் 2023, 05:13 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.

இதனால், மாநகர் முழுதும் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பித்தன. பல இடங்களில் மின்சாரம் இல்லாமலும், தொலைதொடர்பு இணைப்புகள் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் குடியிருப்பு வளாகங்களுக்குள்ளும் நீர் புகுந்ததாலும் மக்கள் சிரமத்திற்குள்ளாயினர்

இந்நிலையில், இன்று (டிசம்பர் 5) சென்னையில் மழை நின்றிருக்கிறது.

ஆனாலும் நகரின் பல இடங்களிலும் நீர் தேங்கி நிற்கிறது.

பிபிசி செய்தியாளர்கள் களத்திலிருந்து அளிக்கும் தகவல்களின்படி, பல இடங்களில் வீடுகளிலும் குடியிருப்பு வளாகங்களிலும் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை, டிசம்பர் 6) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 
மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,

திருவான்மியூர், காமராஜர் நகர்

சென்னையில் பல இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்

மாநகரில் பல இடங்களில் தேங்கிய நீர் இன்னும் வடியாமல் இருக்கிறது.

களத்தில் இருக்கும் பிபிசி செய்தியளர்கள் அளித்த தகவலின்படி, அடையாறு, கூவம் நதியின் கரைப்பகுதிகள், முகப்பேர், சைதாப்பெட்டை, சூளைமேடு, திருவான்மியூர், ஆகிய பகுதிகளில் நீர் இன்னும் தேங்கியிருக்கிறது.

தி நகர் இருந்து கோடம்பாக்கம் செல்லும் சாலையில் நீர் தேங்கியிருக்கிறது. சைதாப்பேட்டையின் பல பகுதிகளிலும் நீர் தேங்கியிருக்கிறது.

சூளைமேட்டில் கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் இருக்கும் சில தெருக்களிலும் வீடுகளிலும் தேங்கியிருக்கிறது. சூளைமேட்டில் விழுந்த மரங்கள் இன்னும் விழுந்துகிடக்கின்றன.

ஆனால், 100அடி சாலை, போரூர்-கிண்டி சாலைம் அண்ணா சாலையின் பல பகுதிகள், ஆகிய சென்னையின் முக்கியச் சாலைகளில் தேங்கியிருந்த நீர் வடிந்திருக்கிறது.

சென்னை பெருநகரக் காவல்துறையின் அறிக்கையின்படி, நீர் தேங்கியுள்ளதால் 17 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன. சூளைமேடு, கோயம்பேடு புதுபாலம், வியாசர்பாடி, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகியவையும் இதில் அடக்கம்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம்

பலி 8 ஆக உயர்வு

மழை தொடர்பான சம்பவங்களில் நேற்று 5 பேர் இறந்திருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஒருவர் மின்சாரம் தாக்கியும், ஒருவர் மரம் விழுந்ததாலும், ஒருவர் சுவர் இடிந்து விழுந்ததாலும் இறந்திருக்கின்றனர், என்று சென்னை பெருநகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சீர்செய்யப்பட்டு வரும் மின் இணைப்புகள்

மழையால் நேற்று சென்னை முழுதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மின் இணைப்புகளை சரிசெய்யும் பணி நடந்து வருவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, அண்ணா சாலை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய பகுதிகள் உட்படப் பல பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையம் திறப்பு

சென்னை விமான நிலையத்தில் நீர் தேங்கியிருந்ததால் விமானச் சேவைகள் நேற்று நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று சேவைகளுக்காக விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c0k2d9v900wo

  • கருத்துக்கள உறவுகள்

-சென்னை வெள்ளம் | அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி நீர் - கரையோர வீடுகள் பாதிப்பு

 

சென்னை: சென்னை அடையாறு - ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கியபோது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதி கனமழையாக கொட்டியது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனிடையே செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

அடையாறு ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, காவல் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும், அடையாற்றின் கரையோர பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் இருந்துவரும் நீர்வரத்தால், அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அடையாற்றில் 40,000 கனஅடி தண்ணீர் பாய்ந்து செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு: அடையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் தரப்பில் போதுமான முன்னறிவிப்பு செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திங்கள்கிழமை இரவு 7.30 மணி முதல் அதிகரிக்க தொடங்கிய வெள்ள நீரில் சைதாப்பேட்டை திடீர் நகர் பகுதியை சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அருகில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

17017749143057.jpg

ஆபத்தை உணராமல்... - இதனிடையே, அடையாறு ஆறு பாயந்து ஓடுவதை வெவ்வேறு பகுதிகளில் உள்ள பாலங்களின் மேல் ஆபத்தை உணராமல் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில், அடையாற்றில் ஓடும் வெள்ளத்தைப் பார்க்க ஆர்வமாக திரண்டுள்ள மக்கள், பலரும் வெள்ளத்தை தங்களது செல்போனில் படம்பிடித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வெள்ளம் | அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி நீர் - கரையோர வீடுகள் பாதிப்பு | 40,000 cubic feet water release in Adayar river: Evacuation of people living in low-lying areas - hindutamil.in

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மழை: மீண்டும் 2015 போன்ற நிலைமையா? பாதிக்கப்பட்ட மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மிக்ஜாம் புயல், சென்னை மழை
5 டிசம்பர் 2023, 06:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை இப்பொது நின்றிருக்கிறது.

ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

தி நகர், அண்ணா சாலை போன்ற நகரின் பிரதான பகுதிகளில் நீர் வடிந்து தற்போது நிலைமை சற்று சரியாகி விட்டிருந்தாலும், மற்ற குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் தேங்கியிருக்கிறது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். பால், உணவு போன்ற அடிப்படை தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனர் சிலர்.

களத்திலிருந்து பிபிசி செய்தியாளர்கள் சேகரித்து வழங்கிய மக்களின் குரல்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் 4,000 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் செய்தும் சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள பகுதி

‘மிண்டும் 2015 நிலையா?’

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படு நீர் வரவிருக்கிறது என்ற தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள மக்கள்.

அந்தப் பகுதியில் உள்ள பல குடிசைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்பு கட்டிடத்தில் முதல்மாடி வரை தண்ணீர் வந்ததாகக் கூறுகிறார்கள்

இதனால் அவர்களது வீடுகளில் நீர் புகுந்து இப்பொது அவர்கள் தெருக்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நிற்பதாகக் கூறுகிறார்கள்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,

தாட்சாயணி

சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் தாட்சாயணி, 2015-ஆம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்தின் போது சந்தித்த அதே சூழ்நிலையை மீண்டும் எதிர்நோக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகச் சொல்கிறார்.

”எங்கள் வீட்டில் நீர் ஏறியிருக்கிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறோம். பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லை,” என்றார்.

 
மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,

விஜயலக்ஷ்மி

‘இடமும் இல்லை, உணவும் இல்லை’

அதே பகுதியைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி, தனது வீடு முழுவதும் மூழ்கியிருக்கிறது என்றும், விட்டில் கல்விச் சான்றிதழ்கள் முதல் சமையல் பொருட்கள் வரை அனைத்தையும் விட்டுவிட்டு வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.

“மக்களுக்கு இருக்க இடமில்லை. சாலை, பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் தங்கியிருக்கிறோம். உணவு, நீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதுவரை உதவிக்கு யாரும் வந்ததை தான் பார்க்கவில்லை. உணவு தான் இப்போதைக்கு முக்கியத் தேவை,” என்கிறார் அவர்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,

திலீப்

‘சென்ற முறையை விட பாதிப்பு அதிகம்’

பிபிசி தமிழிடம் பேசிய நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப், ஞாயிறு நள்ளிரவு தங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்
படக்குறிப்பு,

நந்தம்பாக்கம்

“இப்போது வரை 2 நாட்களாக அதே நிலை தான். இன்று மாலைக்குள் (செவ்வாய்க்கிழமை) மின் பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தெருக்களில் தண்ணீர் ஓரளவு வடிந்துவிட்டது, வெளியே சென்று வர முடிகிறது. ஆனால் நந்தம்பாக்கம் ஏரி அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இன்னும் மழை நீர் வடியவில்லை, மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலையும் உள்ளது. இந்த்ப் பகுதி மக்களுக்கு 2015-ஆம் ஆண்டை விட பாதிப்புகள் மிகவும் அதிகம்,” என்றார்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை

பட மூலாதாரம்,X/VISHNU VISHAL - VV

நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆமீர் கான் மீட்பு

நடிகர் விஷ்ணு விஷால், காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டினுள் வெள்ளம் புகுந்து அதன் அளவு விரைவாக அதிகரித்து வருவதாகத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தனது வீட்டில் மின்சாரம், வைஃபை, தொலைபேசி சிக்னல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

மொட்டைமாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் உதவி கிடைக்குமெனெ நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

“சென்னையிலிருக்கும் அத்தனை மக்களோடும் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்,” என்று பதிவிட்டிருக்கிறார்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு,

விஷ்ணு விஷால், ஆமீர் கான் ஆகியோர் மீட்கப்பட்ட காட்சி

விஷ்ணு விஷால் இதை பதிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை விஷ்ணு விஷால் சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிலையில், அந்தப் புகைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் இருப்பதையும் காண முடிகிறது.

தங்களை மீட்ட பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

ஆமிர் கான், தனது தாயாரின் சிகிச்சைக்காக சில காலம் முன்பு சென்னைக்குச் சென்று தங்கியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அஜித் குமார்

பட மூலாதாரம்,VISHNU VISHAL

பின்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட விஷ்ணுவிஷால், "எங்களது நிலையைப் பற்றி ஒரு பொது நண்பர் மூலம் கேள்விப்பட்ட அஜித் சார், எங்களைப் பார்க்க வந்ததுடன் எங்கள் குடியிருப்பில் உள்ள மற்றவர்களின் பயணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வின் கூறியது என்ன?

அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை வெள்ளத்தால் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

"30 மணி நேரமாக எனது பகுதியில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். வேறு வழி என்னவென்று தெரியவில்லை" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்?

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம்,X/MKSTALIN

படக்குறிப்பு,

4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் ஸ்டாலின்

இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளார்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, 2015-ஆம் ஆண்டின் மழையைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்ததாகக் கூறினார். ஆனாலும் வெள்ள பாதிப்புகள் 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் மிகக்குறைவு என்றார்.

“2015-ஆம் ஆண்டின் வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட செயற்கையான வெள்ளம், ஆனால் இப்போது ஏற்பட்டது இயற்கையான வெள்ளம்,” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், 4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் அவர். 2015-ஆம் அண்டு 199 இறப்புகள் பதிவானதாகவும், தற்பொது 8 இறப்புகள் மட்டுமே பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c9738ved7x7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வெள்ளத்தின் கோர முகத்தை உலகுக்கு காட்டிய காணொளியின் முழு பின்னணி

சென்னை வெள்ளம் கார்கள் சேதம்
படக்குறிப்பு,

கார்கள் சேதமடைந்து நிற்கும் நிலையில், அவற்றைப் பழுது பார்க்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்கின்றனர் கார் உரிமையாளர்கள்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

திங்கட்கிழமை அதிகாலை முதல் சென்னை வெள்ளம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கிய போது, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிக்கரணையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து அந்தக் காணொளி எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

சென்னையில் 2023 பெருவெள்ளத்தின் கோர முகமாக இணையத்தில் இந்தக் காணொளி பலராலும் பகிரப்பட்டது. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணி குறித்து பிபிசி தமிழ் ஆய்வு செய்தது.

அந்தக் காணொளி எடுக்கப்பட்ட இடம், பள்ளிக்கரணையில் அமைந்துள்ள புரவங்கரா என்னும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான பூர்வா விண்டர்மியர் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியாகும்.

இந்தப் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இதில் இ- பிளாக் பகுதியில் இருந்த ஒரு தடுப்புச் சுவர் உடைந்ததால் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த வெள்ள நீர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அடித்துச் சென்றது.

 
புரவங்கரா குடியிருப்புகளில் தேங்கியுள்ள வெள்ள நீர்

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றியிருந்த பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் மேடவாக்கம் ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீரால் அந்த குடியிருப்புப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. இது குறித்து அந்தக் குடியிருப்பின் இ- பிளாக் பகுதியில் வசித்து வரும் ரூபேஷ் என்பவரிடம் பேசினோம்.

"ஞாயிறு இரவு முதல் இங்கு நிலைமை மோசமாகத் தொடங்கியது. முதலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்ததால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். திங்கள் கிழமை அதிகாலையில் பெரும் சத்தம் ஒன்று கேட்டது.

முதல் தளத்தில் இருக்கும் என் வீட்டின் பால்கனிக்கு சென்று பார்த்தேன். அங்கு என் கண்கள் கண்ட காட்சியை நம்ப என் மனம் மறுத்தது," என்று அந்தச் சம்பவத்தை விவரித்தார் ரூபேஷ்.

 
சென்னை வெள்ளம் கார்கள் சேதம்
படக்குறிப்பு,

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குடியிருப்பு வளாகத்திற்குள் நிற்கின்றன.

ரூபேஷ் அன்று நடந்ததை விவரித்தார் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

"குடியிருப்புப் பகுதியின் தடுப்புச் சுவர் உடைந்து தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியிருந்தது. உடனே நான் கீழ் தளத்திற்குச் சென்று அங்கு நிறுத்தியிருந்த என் இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்த முயன்றேன்.

ஆனால் தண்ணீர் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. சில நொடிகளில் முழு சுவரும் உடைந்துவிட்டது. ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, எனது வீட்டிற்குத் திரும்பி விட்டேன். முதல் தளம் வரை தண்ணீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இருந்தோம். இந்த குடியிருப்புப் பகுதிக்குப் பின்புறம் ஒரு பெரிய மைதானம் உள்ளது.

வெள்ள நீரால் மைதானம் நிறைந்து, தண்ணீர் எங்கும் செல்ல வழியில்லாமல் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டது. இப்போது வரை இங்கு மின்சாரம் சரி செய்யப்படவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி ஆங்காங்கே கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த அல்லது மீட்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை," என்று கூறினார்.

'கட்டுமான நிறுவனத்தின் அலட்சியமே காரணம்'

சென்னை வெள்ளத்தின் கோர முகத்தை உலகுக்கு காட்டிய காணொளியின் முழு பின்னணி

"அந்தக் காணொளியில் முதலில் அடித்துச் செல்லப்படும் வாகனம் என்னுடையதுதான். அதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்," எனக் கூறுகிறார் இ-பிளாக் பகுதியில் வசித்து வரும் ரவி.

"அந்தக் காணொளியை நீங்கள் பார்த்தால், அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதன் தடுப்புச் சுவர் மிக உயரமானதாகவும் பலமானதாகவும் இருக்கிறது.

ஆனால் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் தடுப்புச் சுவர் மிகவும் பலவீனமாக இருந்தது. இது குறித்துப் பலமுறை எனது மகன் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று கூறினார் ரவி.

அதுமட்டுமின்றி, சுவர் உடைந்துவிடும் என்ற அச்சம் அங்குள்ள பலருக்கும் ஏற்கெனவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இதுகுறித்து குடியிருப்புவாசிகள் தைரியமாகப் பேச முன்வரவில்லை எனவும் ரவி குறிப்பிட்டார்.

"அந்தச் சுவரை பலமாகக் கட்டியிருந்தால் இத்தனை வாகனங்கள் சேதமடைந்திருக்காது. இப்போதும்கூட கட்டுமான நிறுவனத்தின் சார்பிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை, குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக மட்டுமே உணவு, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது."

 
வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்பட்ட வைரல் காணொளி

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,

வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

லேக் வியூ அபார்ட்மென்ட் எனக் கூறி விற்றார்கள், ஆனால் இப்போது குடியிருப்பு முழுவதுமே ஏரியின் மீது கட்டப்பட்டதைப் போலத்தான் உள்ளது என்றும் ரவி குறிப்பிட்டார்.

"இந்தச் சேதங்களுக்கு யார் பொறுப்பு? இவ்வளவு வீடுகளைக் கட்டுபவர்கள் ஒரு பலமான சுவரைக் கட்ட முடியாதா?" எனக் கேள்வியெழுப்பும் ரவியின் குரல் கோபமும் ஆதங்கமும் கலந்தே ஒலித்தது.

ஏற்கெனவே கட்டப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட பிளாட்டுகளில் இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது, மேலும் புதிதாக மூவாயிரம் பிளாட்டுகள் அருகில் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

"பள்ளிக்கரணை குடியிருப்புகளில் நிலைமை கொஞ்சம்கூட சரியாகவில்லை. கட்டுமான நிறுவனத்திடம் கேட்டால் எந்தப் பதிலும் இல்லை. வீட்டை விளம்பரம் செய்து விற்றுவிட்டு காணாமல் போய் விட்டார்கள். லட்சங்களைக் கொடுத்து வீடுகளை வாங்கியவர்களின் நிலை தற்போது இப்படி உள்ளது," எனக் கூறினார்.

தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம்

புரவங்கரா குடியிருப்புகளில் தேங்கியுள்ள வெள்ள நீர்
படக்குறிப்பு,

புரவங்கரா குடியிருப்பில் வடியாமல் தேங்கியிருக்கும் வெள்ள நீர்.

"குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் தண்ணீர் இல்லை. முதியோர்களும் குழந்தைகளும் மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்," என்று பெயர் வெளியிட விரும்பாத குடியிருப்புவாசி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேங்கியுள்ள நீரை வெளியேற்றவோ அல்லது ஆங்காங்கே பழுதாகி நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவோ போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தேங்கியுள்ள வெள்ள நீரால் நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் அரசிடமிருந்தோ, கட்டுமான நிறுவனத்திடம் இருந்தோ எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

"கட்டுமான நிறுவனம் நினைத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடக்காமல் நிச்சயமாகத் தடுத்திருக்க முடியும்," என்று உறுதிபடக் கூறுகிறார் பூர்வா விண்டர்மியல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர்.

 

பூர்வா விண்டர்மியர் குடியிருப்போர் சங்கத்தின் துணைத் தலைவர் பாலமுரளியிடம் பேசியபோது, "கட்டுமான நிறுவனத்தின் மீதுதான் முழு தவறும் எனச் சொல்ல முடியாது. அந்தத் தடுப்புச் சுவருக்குப் பின்னால் பல ஏக்கர்களுக்கு காலி நிலம் உள்ளது.

அதிக மழை காரணமாக வெளியேறிய நீர், தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வந்துவிட்டது. எவ்வளவு பலமான சுவராக இருந்தாலும்கூட அதைத் தடுத்திருக்க முடியாது.

இப்போதைக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்று வருகிறோம். குடியிருப்புப் பகுதியின் சில சுற்றுச் சுவர்களை ஜே.சி.பி மூலம் உடைத்து நீரை வெளியேற்றி வருகிறோம்.

முடிந்தவரை உணவு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். மின்சாரம் இல்லாததால் குடிநீரை மேல் தளங்களுக்குக் கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. கட்டுமான நிறுவனத்திடம் கலந்து பேச முயற்சி எடுத்துள்ளோம். இயல்பு நிலை திரும்ப சில நாட்களாகும்," எனக் கூறினார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக புரவங்கரா கட்டுமான நிறுவனத்தின் திட்டப் பொறியாளரிடம் பேச முயன்றபோது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cw42z1rgprdo

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

லேக் வியூ அபார்ட்மென்ட் எனக் கூறி விற்றார்கள், ஆனால் இப்போது குடியிருப்பு முழுவதுமே ஏரியின் மீது கட்டப்பட்டதைப் போலத்தான் உள்ளது என்றும் ரவி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நதி, ஏரிக்கும் நீர் வரத்து அதிகரிக்கும் போது அதன் உபரி நீரை உறிஞ்சி கொள்ள ஒரு ஸ்பாஞ்ச் தேவைப்படும். இதை floodplains என்பார்கள்.  யாழ் நகருக்கு பொம்மை வெளியியும், வலிகாமத்துக்கு கல்லுண்டாயும், கொழும்புக்கு முத்துராஜவெலவும் இப்படித்தான்.

ஏரியில் மட்டும் அல்ல, இந்த ஏரியின் வெள்ளமேந்து பகுதியில் வீடு கட்டினாலும் இதே நிலமைதான்.

சென்னையில் 2015 மழைக்கு பின் வீடு வாங்கிய பலர், 3ம் மாடிக்கு மேல் இப்படியான பகுதியில் வாங்கினாலும் ஓகே என வாங்கினராம்.

ஆனால் வீடு 3ம் மாடி என்றாலும் கார் ரோட்டில்தான் போக வேண்டும், வெள்ளம் வடியும் வரை மின்சாரம் வராது.

அண்மையில் மும்பையிம் இப்படி மழையை சந்தித்தது. 

உலக வெப்பமாதல் மேலும், மேலும் இவ்வாறான மழைகளை தரப்போகிறது.

பல கட்டுப்பாடுகள் உள்ள மேற்கில் கூட flash floods வருவது இப்போ கூட. வளர்முக நாடுகளின் பெரு நகரங்கள் பாடு திண்டாட்டம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு நதி, ஏரிக்கும் நீர் வரத்து அதிகரிக்கும் போது அதன் உபரி நீரை உறிஞ்சி கொள்ள ஒரு ஸ்பாஞ்ச் தேவைப்படும். இதை floodplains என்பார்கள்.  யாழ் நகருக்கு பொம்மை வெளியியும், வலிகாமத்துக்கு கல்லுண்டாயும், கொழும்புக்கு முத்துராஜவெலவும் இப்படித்தான்.

ஏரியில் மட்டும் அல்ல, இந்த ஏரியின் வெள்ளமேந்து பகுதியில் வீடு கட்டினாலும் இதே நிலமைதான்.

சென்னையில் 2015 மழைக்கு பின் வீடு வாங்கிய பலர், 3ம் மாடிக்கு மேல் இப்படியான பகுதியில் வாங்கினாலும் ஓகே என வாங்கினராம்.

ஆனால் வீடு 3ம் மாடி என்றாலும் கார் ரோட்டில்தான் போக வேண்டும், வெள்ளம் வடியும் வரை மின்சாரம் வராது.

அண்மையில் மும்பையிம் இப்படி மழையை சந்தித்தது. 

உலக வெப்பமாதல் மேலும், மேலும் இவ்வாறான மழைகளை தரப்போகிறது.

பல கட்டுப்பாடுகள் உள்ள மேற்கில் கூட flash floods வருவது இப்போ கூட. வளர்முக நாடுகளின் பெரு நகரங்கள் பாடு திண்டாட்டம்தான்.

அதெல்லாம் சேர்ப்பில்லை..... இல்லை, இதில டீம்காவில தான் பிழை..

******

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சேர்ப்பில்லை..... இல்லை, இதில டீம்காவில தான் பிழை..

******

டீம்காவில் முழு பிழை - நாலாயிரம் கோடியை ஏப்பம் விட்டு ஸ்வாக செய்தது.

ஒரு புதிய  வெள்ளமேந்து பகுதியை அல்லது ஒரு புதிய ஏரியை நிர்மாணித்து - மோட்டர் பம்புகள்+ கால்வாய்காள் (canal) மூலம் உபரி நீரை வெளி ஏற்றும் பொறிமுறையை உந்த காசில் செய்திருக்கலாம். எல்லா வழிந்தோடும் வழிகளையும் கடலை நோக்கி அமைத்து விட்டு, கடல் சீற்றத்தால் கடல் நீரை வாங்கவில்லை என்கிறார்கள். இது நடக்கும் என எதிர்பார்த்திருக்க வேண்டிய ரிஸ்க்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2023 at 17:13, ஏராளன் said:

முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்?

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம்,X/MKSTALIN

படக்குறிப்பு,

4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் ஸ்டாலின்

இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளார்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, 2015-ஆம் ஆண்டின் மழையைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்ததாகக் கூறினார். ஆனாலும் வெள்ள பாதிப்புகள் 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் மிகக்குறைவு என்றார்.

“2015-ஆம் ஆண்டின் வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட செயற்கையான வெள்ளம், ஆனால் இப்போது ஏற்பட்டது இயற்கையான வெள்ளம்,” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், 4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் அவர். 2015-ஆம் அண்டு 199 இறப்புகள் பதிவானதாகவும், தற்பொது 8 இறப்புகள் மட்டுமே பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்ப எதுக்கு வெள்ள நிவாரணப் பணிக்கு.. 5000 கோடி மத்திய அரசிடம் கேட்கப் போவதாகச் சொன்னார். குடும்பச் சேமிப்பில் இடவோ..??!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு நதி, ஏரிக்கும் நீர் வரத்து அதிகரிக்கும் போது அதன் உபரி நீரை உறிஞ்சி கொள்ள ஒரு ஸ்பாஞ்ச் தேவைப்படும். இதை floodplains என்பார்கள்.  யாழ் நகருக்கு பொம்மை வெளியியும், வலிகாமத்துக்கு கல்லுண்டாயும், கொழும்புக்கு முத்துராஜவெலவும் இப்படித்தான்.

ஏரியில் மட்டும் அல்ல, இந்த ஏரியின் வெள்ளமேந்து பகுதியில் வீடு கட்டினாலும் இதே நிலமைதான்.

சென்னையில் 2015 மழைக்கு பின் வீடு வாங்கிய பலர், 3ம் மாடிக்கு மேல் இப்படியான பகுதியில் வாங்கினாலும் ஓகே என வாங்கினராம்.

ஆனால் வீடு 3ம் மாடி என்றாலும் கார் ரோட்டில்தான் போக வேண்டும், வெள்ளம் வடியும் வரை மின்சாரம் வராது.

அண்மையில் மும்பையிம் இப்படி மழையை சந்தித்தது. 

உலக வெப்பமாதல் மேலும், மேலும் இவ்வாறான மழைகளை தரப்போகிறது.

பல கட்டுப்பாடுகள் உள்ள மேற்கில் கூட flash floods வருவது இப்போ கூட. வளர்முக நாடுகளின் பெரு நகரங்கள் பாடு திண்டாட்டம்தான்.

சென்னையைப் போல கொழும்பு நகரமும் திட்டமிடாமல் தன் கட்டங்களை கட்டுகிறார்கள்.

 கொழும்பின்   அதிஷ்ரம் மேற்கு சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.    வங்காள விரிகுடாவில் தான் சூறாவளிகள் மையம் கொண்டு மேற்கு நோக்கி நகர்வதால் சென்னையில் இருந்து கலகத்தாவரைக்கும்  அடிக்கடி இவ்வாறான இயற்கை அனர்த்தத்துக்கு உள்ளாகும் பிரதேசமாக அமைந்துள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

சென்னையைப் போல கொழும்பு நகரமும் திட்டமிடாமல் தன் கட்டங்களை கட்டுகிறார்கள்.

 கொழும்பின்   அதிஷ்ரம் மேற்கு சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.    வங்காள விரிகுடாவில் தான் சூறாவளிகள் மையம் கொண்டு மேற்கு நோக்கி நகர்வதால் சென்னையில் இருந்து கலகத்தாவரைக்கும்  அடிக்கடி இவ்வாறான இயற்கை அனர்த்தத்துக்கு உள்ளாகும் பிரதேசமாக அமைந்துள்ளது.  

ஓம். 2015 இல் கொழும்பு ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நிற்கும் போது மழை அடிக்கத்தொடங்கியது. அந்த பகுதி எல்லாம் முன்னர் வெறும் தரை - இப்போ காங்கிரீட். வளாகத்துள் போகும் போது மழை இல்லை, சாப்பிட்டு வெளி வர முழங்காலுக்கு சற்று கீழே வெள்ளம். டக்சி எடுத்து கிருலப்பனை போக 3 மணத்தியாலம் பிடித்தது.

இப்போ போர்ட் சிட்டி வேற வெள்ளம் பாயும் வழியை அடைத்து கொண்டு இருக்கிறதோ தெரியா. அமைவிட அதிஸ்டம் ஒரு தரம் தப்பினாலும் பெரிய அனர்த்தம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏரியில வீட்டக்கட்டினா வெள்ளம் வராம சினோவா கொட்டும்…

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஓம். 2015 இல் கொழும்பு ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நிற்கும் போது மழை அடிக்கத்தொடங்கியது. அந்த பகுதி எல்லாம் முன்னர் வெறும் தரை - இப்போ காங்கிரீட். வளாகத்துள் போகும் போது மழை இல்லை, சாப்பிட்டு வெளி வர முழங்காலுக்கு சற்று கீழே வெள்ளம். டக்சி எடுத்து கிருலப்பனை போக 3 மணத்தியாலம் பிடித்தது.

இப்போ போர்ட் சிட்டி வேற வெள்ளம் பாயும் வழியை அடைத்து கொண்டு இருக்கிறதோ தெரியா. அமைவிட அதிஸ்டம் ஒரு தரம் தப்பினாலும் பெரிய அனர்த்தம் வரும்.

தென் ஆசியாவிலே, லண்டனுக்கு அடுத்து, கொழும்பில் தான், விக்டோரியா மகாராணி காலத்தில் நிலக்கீழ் drainage சிஸ்டம் அமைத்தார்கள்.

அது காலத்துக்கு அமைய முன்னேற்ற படவில்லை. அதுவே அதன் குறைபாடு.

சென்னையில், யாழ்ப்பாணத்தை போலவே, ஒரு முழுமையான drainage சிஸ்டம் இல்லை. வீதியின் ஓரத்தில் ஓடும் சாக்கடை தான், வழிக்கால்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

உலக வெப்பமாதல் மேலும், மேலும் இவ்வாறான மழைகளை தரப்போகிறது.

பல கட்டுப்பாடுகள் உள்ள மேற்கில் கூட flash floods வருவது இப்போ கூட. வளர்முக நாடுகளின் பெரு நகரங்கள் பாடு திண்டாட்டம்தான்.

இது எல்லாம் கொழுப்பு எடுத்தவர்களின் கதை. பூமி பாதுகாப்பாக உறுதியாக உள்ளது. டொனால் ரம் எழுதிய பூமியின் உறுதி என்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது வாங்கி படியுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேதனை, சீற்றம், கண்ணீர்: 'மீட்புப் பணியில் தமிழ்நாடு அரசு சொதப்பிவிட்டது' - விரக்தியில் சென்னை மக்கள்

வேதனை, சீற்றம், கண்ணீர்: 'மீட்புப் பணியில் தமிழ்நாடு அரசு சொதப்பிவிட்டது' - விரக்தியில் சென்னை மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC

6 மணி நேரங்களுக்கு முன்னர்

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நின்று 48 மணிநேரம் ஆகியும், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.

தாம்பரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், முடிச்சூர் ஆகிய சென்னையின் புறநகர் பகுதிகளிலும், வட சென்னையின் வியாசர்பாடி, புளியந்தோப்பு, சூளை உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று வரை மழை நீர் வடியாமலும், மின் விநியோகம் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்ததாக தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்நிலையில், பிபிசி தமிழின் செய்தியாளர்கள் நேற்று மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த மழை நின்று 48 மணிநேரத்திற்கு மேலோகியும் இன்று வரை நீர் வடியாததற்கான காரணம் என்ன?

 

‘மழைநீர் வரும் என எச்சரிக்கை இல்லை’

மிக்ஜாம் புயல்

பிபிசி செய்தியாளர்கள் சாரதா மற்றும் அஷ்ஃபாக் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முடிச்சூர் சாலைக்கு அருகில் இருக்கக்கூடிய பாரதி நகர் மற்றும் குட் வில் நகர் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கிருந்த மக்கள் மழை நீர் தேங்கும் என்பது குறித்து அரசு சார்பில் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் கொடுக்கவில்லை என செய்தியாளர் சாரதாவிடம் கூறியுள்ளனர்.

“மழை பெய்தபோது சாலையிலோ அல்லது அவர்களின் வீடுகளுக்கு உள்ளோ தண்ணீர் வரவில்லை. மழை நின்ற பிறகுதான் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. செவ்வாய்க் கிழமை நிலவரப்படி சாலையில் சுமார் 6 முதல் 7 அடியளவு தண்ணீர் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.

நேற்று அந்த நீர் சற்று குறைந்து 4 அடியளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், செவ்வாய்க் கிழமையன்று மோசமான நிலையில் இருந்தபோது அரசுத் தரப்பில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை என்று வேதனை தெரிவித்த மக்கள், மீட்புக் குழுவினரே நேற்றுதான் மீட்புப் பணிகளுக்காக அப்பகுதிக்கு வந்திருப்பதாகவும் கூறியதாக,” சாரதா தெரிவித்தார்.

 

மீட்புப் பணியில் சுணக்கம்

மிக்ஜாம் புயல்

அதேபோல, மீட்புப்பணிக்காக யாரும் வராத கோபத்தில், மக்கள் தாங்களாகவே தண்ணீரில் இறங்கி ஆபத்தான முறையில் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதைப் பார்த்ததாகக் கூறினார் செய்தியாளர் அஷ்ஃபாக்.

“மக்களை யாரும் மீட்க வரவில்லை. தண்ணீர், உணவு என எதுவும் கிடைக்காத விரக்தியிலும், கோபத்திலும், வயதானவர்களும், கைக் குழந்தைகளை வைத்திருப்பவர்களும் தேங்கியுள்ள தண்ணீரை பொருட்படுத்தாமல், தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

தண்ணீர் தேங்கியதைவிட, அதை முன்கூட்டியே எச்சரித்திருந்தால், பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருப்போம் என அப்பகுதி மக்கள் கூறினர்,” என்கிறார் அஷ்ஃபாக்.

அதோடு, மீட்புப் பணியிலும் சுணக்கம் இருப்பதைப் பார்க்க முடிந்ததாகக் கூறுகிறார் அஷ்ஃபாக்.

“புதன்கிழமை காலையில் இருந்துதான் மீட்புப் பணிகளையே துவங்கியிருக்கிறார்கள். ஆனால் அதிலும், வெறும் இரண்டு ரப்பர் படகுகள் மட்டுமே மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் நான்காயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரண்டு ரப்பர் படகுகளை மட்டுமே கொண்டு மீட்புப் பணியை மேற்கொள்வது அம்மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்கிறார் அஷ்ஃபாக்.

நமது செய்தியாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில், அப்பகுதியில் 2015க்குப் பிறகு தற்போதுதான் தண்ணீர் தேங்குவதாகவும், அதேவேளையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

வேளச்சேரியில் என்ன பிரச்னை?

மிக்ஜாம் புயல்

வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்றிருந்தார் பிபிசி தமிழின் மூத்த செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். மழை நின்று பல மணிநேரம் ஆகியும் மீட்புப் பணிக்கு யாரும் வராததே அப்பகுதி மக்களின் பிரச்னையாக இருந்ததாகக் கூறுகிறார் முரளிதரன்.

“வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் பெருமளவு சதுப்பு நிலங்களில் கட்டப்பட்டவை. அதனால், எப்போது மழை பெய்தாலும், அப்பகுதிகளில் மழை நீர் வருவது வழக்கம்.

ஏனெனில், அப்பகுதி வழியாக வடிந்துதான், மழை நீர் ஏரிக்கும், ஆற்றுக்கும், கடலுக்கும் செல்லும். ஆனால், இப்போது அதைவிட முக்கியப் பிரச்னை, மழைநீர் தேங்கியபோதும் மீட்க யாரும் வரவில்லை என்பதே. இந்த ஆதங்கம் அப்பகுதி மக்கள் அனைவரிடமும் தென்பட்டது.

செவ்வாய்க்கிழை மதியம்தான் மீட்புப்படையினரே வந்துள்ளனர். அவர்களும், மாலை 6 மணி வரை மீட்புப் பணிகளில் இருந்துவிட்டு, இருட்டிய பிறகு கிளம்பியுள்ளனர். மீண்டும் அடுத்த நாள் காலைதான் மீட்புப்பணியைத் தொடங்கியுள்ளனர். இதனால், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் அவதிப்பட்டுள்ளனர்,” என்கிறார் முரளிதரன்.

 

‘தரமணியில் ஆறாக ஓடிய வெள்ளநீர்’

மிக்ஜாம் புயல்

தரமணி பகுதிக்கு நேரடியாகச் சென்றிருந்த பிபிசி செய்தியாளர் சுபகுணம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை யாரும் மீட்க வராததால், இடுப்பளவு தண்ணீரில் மக்களே வேறு இடங்களுக்கு சென்றதைப் பார்த்ததாகக் கூறினார்.

“தரமணியில் சோழமண்ணன் வீதி, கட்டபொம்மன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் நீர் வடியாததாலும், மீட்பதற்கு யாரும் வராததாலும், இடுப்பளவு தண்ணீரில் மக்களே வெளியேறத் தொடங்கினர்.

வெளியேற முடியாத சில முதியவர்கள், சாலையின் ஓரத்தில் இருந்த படிக்கட்டுகளிலேயே உணவின்றி உறங்கிக்கொண்டு உதவிக்காகக் காத்திருந்தனர்,” என்கிறார் சுபகுணம்.

 

சென்னை புறநகரில் தண்ணீர் ஏன் வடியவில்லை?

வடசென்னை

பட மூலாதாரம்,DILIP SRINIVASAN

சதுப்பு நிலங்கள், கரையோரத்தில் உள்ள காலியிடங்களில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்ததும், வீடுகள் கட்டியதுமே மழைநீர் இவ்வளவு நாட்களாகியும் வடியாததற்கான காரணம் என்கிறார் சென்னை புறநகர் பகுதியில் நிர்நிலைகள் குறித்துத் தொடர்சியாக ஆய்வு மேற்கொண்டு வருபவரும், ஆர்வலருமான டேவிட் மனோகர்.

“இது இப்போதைய பிரச்னை மட்டுமல்ல. எப்போது மழை பெய்தாலும் இந்தப் பகுதிகளில்(வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில்) தண்ணீர் தேங்கும். அதன் அளவு மட்டுமே மழையின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். ஆதனுர் ஏரியில் இருந்துதான் தண்ணீர் அடையாற்றுக்கு வரும்.

முடிச்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மக்கள் ஏரிகளையும், ஆறுகளையும் மட்டும் விட்டுவிட்டு, அதை ஒட்டியுள்ள வெள்ளப்பகுதிகள், நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வீடுகளைக் கட்டிவிட்டனர்.

அதனால், தற்போது வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஒடும்போது, ஏரிகள் நிறைந்து சதுப்பு நிலங்களில் வடிகிறது. இப்படி வடியும் பகுதிகளெல்லாம் குடியிருப்புகளாக இருப்பதால், இந்தப் பகுதிகளில் தண்ணீர் வருவதும் தேங்குவதும் நடக்கும். இதற்கு இப்பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்த அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்,” என்கிறார் மனோகர்.

மேலும், 2015இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது நீர் தேங்கிய இடங்களைவிட, தற்போது மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த மழையால், அதிக இடங்களில் நீர் தேங்கியுள்ளதாகக் கூறுகிறார் மனோகர்.

“இதற்குக் காரணம், 2015க்கு பிறகு, கடந்த எட்டு ஆண்டுகளிலும் இந்தப் பகுதிகளில் அதிகளவில் கட்டுமானங்கள் நடந்ததுதான். கடந்த வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு அரசு எந்தப் பாடமும் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது,” என்கிறார் மனோகர்.

 

வட சென்னையிலும் வடியாத வெள்ளநீர்

வடசென்னை

பட மூலாதாரம்,DILIP SRINIVASAN

வட சென்னையின் வியாசர்பாடி, பட்டாளம், கொளத்தூர், கனிகாபுரம், புலியந்தோப்பு, சூளை, எம்.கே.பி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வரை நீர் வடியாமல் உள்ளது. நீர் வடியாததால், மின் வசதி இல்லாமலும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

எல்லா மழைக் காலங்களின் போதும் வடசென்னை பகுதியில் மழைநீர் தேங்குவதாகவும், ஆனால், எப்போதும் அந்தப் பகுதிக்குத் தான் அதிகாரிகள் கடைசியாக வருவதாகவும், வியாசர்பாடியைச் சேர்ந்த மீனா கூறுகிறார்.

“நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன். எப்போது மழை பெய்தாலும், தண்ணீர் எங்கள் சாலைகளில் தேங்கி நின்றுவிடும், பல நேரங்களில் வீடுகளுக்கு உள்ளும் தண்ணீர் வந்துவிடும். இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வளவு ஆண்டுகளாகிவிட்டது.

இப்போது பட்டப்படிப்பு முடித்து வேலைக்குச் செல்கிறேன். தற்போது, நான் இதை அரசு அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த அவலத்தை வெளியுலகத்திற்குச் சொல்லியுள்ளேன். இருந்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுவயதில் இருந்தே இந்த இயலாமை துரத்திக்கொண்டே இருக்கிறது,” என்கிறார் மீனா.

மழைநீர் தேங்குவதற்கான காரணம் குறித்துப் பேசிய மீனா, “தண்ணீர் தேங்குவதற்கு மழைநீர் வடிகால் பணிகளைச் சரியாக மேற்கொள்ளாதது ஒரு காரணம். மற்றபடி, மழை நின்று இரண்டு நாட்களாகியும் யாரும் வந்துகூடப் பார்க்கவில்லை, அதுதான் எங்களுக்கு பெரிய பிரச்னை. தற்போது வரை நீரை வெளியேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேங்கிய நீர் வெளியேறினால் தான் மின் இணைப்பு தருவார்கள். எப்போது சரியாகும் எனத் தெரியவில்லை,” என்கிறார் மீனா.

“இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிறது. இப்போது வரை நீர் வடியவில்லை. யாரும் வந்து பார்க்கக்கூட இல்லை. இன்று மாலைதான் எந்தெந்தப் பகுதிகளுக்கு உதவி தேவை என்றே கேட்டிருக்கிறார்கள். இனிமேல்தான் உதவிகள் கிடைக்கும் என நினைக்கிறேன்,” என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த நர்மதா.

 

வடசென்னை மக்களின் கோபம் என்ன?

வடசென்னை

பட மூலாதாரம்,DILIP SRINIVASAN

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது தேங்கிய மழைநீரைவிட, இந்த முறை அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், அதற்கு, கடந்த எட்டு ஆண்டுகளில் வடசென்னையில் உள்ள ஏரிகள் மற்றும் ஏரிக்கரையோரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் காரணம் என்றும் கூறுகிறார் அப்பகுதியில் வசிப்பவரும், சமூக ஆர்வலருமான ஷாலின் மரியா லாரன்ஸ்.

“மழைநீர் வடிகால் பணி 95 சதவீதம் நிறைவடைந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெறவில்லை என்பதுதான் கள யதார்த்தம். மழை நீர் தேங்கியதற்கான காரணமும், அதைச் சரி செய்ய வேண்டியதும் நீண்ட காலத்திட்டம்தான்.

ஆனால், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வீடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் மக்களின் கோபம்,” என்கிறார் ஷாலின் மரியா லாரன்ஸ்.

தமிழ்நாடு அரசு இந்தப் புயலின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது என்றார் ஷாலின்.

 

என்ன சொல்கிறது தமிழ்நாடு அரசு?

வடசென்னை

பட மூலாதாரம்,DILIP SRINIVASAN

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “பாதிப்புகள் இருக்கும் எனத் தெரியும். ஆனால், இவ்வளவு பாதிப்புகள் இருக்கும் எனத் தெரியவில்லை. தொலைபேசி சிக்னல் பல இடங்களில் இல்லாததால், பாதிப்புகள் ஏற்பட்டவுடன் மீட்புப் பணிக்குத் தேவையான ஆட்களைத் திரட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இன்றுதான் ஓரளவிற்குத் தேவையான ஆட்களை திரட்டி மீட்புப் பணிகளை நடத்தி வருகிறோம்,” என்றார் அந்த அதிகாரி.

வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள், மின் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் பேச முயன்றோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “வெள்ளம் ஏற்படுவது குறித்து எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அதன் அளவும், வீரியமும் மாறுபட்டுள்ளது. இருப்பினும், 36 மணிநேர தொடர் மழைக்குப் பிறகு முடிந்தவரை தண்ணீரை வெளியேற்றியுள்ளோம்.

தற்போது (புதன்கிழமை இரவு 9மணி) வரை 75 சதவீதமான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது. மக்களை மீட்டுள்ளோம். மீதமுள்ளவர்களையும் விரைவில் மீட்போம், நீரை விரைவில் வெளியேற்றுவோம்,” என்றார்.

மழைநீர் வடிகால் குறித்துக் கேட்டபோது, “மழை நீர்வடிகால் பயனளிக்கவே இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. இதுவோர் அசாதாரண சூழல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் பயனளிக்கவில்லை என்றால், தற்போது 75 சதவீதம் பகுதிகளில் மழைநீர் வடிந்திருக்காது.

தற்போது மழைநீர் வடிகால் வழியாக மழைநீர் வெளியேறாத பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அது உடனடியாகச் செய்ய வேண்டியது இல்லை. அது நீண்டகால செயல்முறை. இப்போது மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/czq2z0dx9d2o

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் கொழுப்பு எடுத்தவர்களின் கதை. பூமி பாதுகாப்பாக உறுதியாக உள்ளது. டொனால் ரம் எழுதிய பூமியின் உறுதி என்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது வாங்கி படியுங்கோ.

அப்படியே பிளீச்சை குடித்தால் ஒரு நோயும் அண்டாது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அனைவரும் ஒன்றுபடுவோம் – டேவிட் வோர்னர்

மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து தான் மிகுந்த கவலையடைந்ததாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் தம்மாள் முடிந்த உதவிகளை வழங்க அனைவரும் ஒன்றுபடுவோம் எனவும் டேவிட் வோர்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/283762

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கரணை: கடல் மட்டத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள்

பள்ளிக்கரணை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது. புயலின் தாக்கம் முடிந்து 4 நாட்களை கடந்தும் மீண்டு வர இயலாமல் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளதன் பின்னணி என்ன?

பள்ளிக்கரணையில் வசிக்கும் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பால், உணவு, குடிநீர் இன்றி தவித்து வருவது ஏன்?

அரசு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை சட்டவிரோதமாக குடியிருப்புப் பகுதியாக மாற்றியதால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகர் மாநகராட்சியின் 14-வது மண்டலமாக இருப்பது பள்ளிக்கரணை. இது சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பேரூராட்சியாக இருந்த பள்ளிக்கரணை

கடந்த 2012-ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

 
மிக்ஜாம் புயல் - பள்ளிக்கரணை

பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM

படக்குறிப்பு,

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கடந்த 20 ஆண்டுகளில் அழித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது

சதுப்பு நிலம் என்பது என்ன?

ஆண்டு முழுவதும் ஈரப்பதம் இருக்கும், நீர் இருக்கும் நிலத்தைத்தான் சதுப்பு நிலம் என்கிறார்கள். சிறு தாவரங்களும் நீர் வாழ் விலங்குகளுக்கும் இது அடைக்கலம் தருகிறது. உவர்ப்பு மற்றும் நன்னீர் என இருவகையான சதுப்பு நிலங்கள் உண்டு.

பள்ளிக்கரணையில் இருப்பது நன்னீர் சதுப்பு நிலமாகும். கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்திருக்கிறது.

"சென்னை நகரத்தின் முக்கியமான வெள்ளநீர் வடிகாலாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது." என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் இடமாகவும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது.

பல்லுயிர் ஆதாரமாக விளங்கும் பள்ளிக்கரணை

பள்ளிக்கரணையில் கடந்த 1965-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 5,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் பரந்து விரிந்து இருந்தது. சென்னையின் நகரமயமாக்கலால் சிறிது சிறிதாக சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் முளைத்ததால் தற்போது வெறும் 1,500 ஹெக்டேர் சதுப்பு நிலமாக குறுகிப்போனது.

அதிகாரமிக்கவர்களால் பள்ளிக்கரணையின் அழிவை தடுப்பதில் சிக்கல் இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கடந்த 20 ஆண்டுகளில் அழித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

இவை அனைத்தும் பத்திரப்பதிவு துறையில் போலிப் பத்திரம் தயாரிக்கப்பட்டு நீர்நிலைப் பகுதியை குடியிருப்புப் பகுதியாகப் பதிவு செய்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திப் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியதாகவும் புகார் உள்ளது.

 
மிக்ஜாம் புயல் - பள்ளிக்கரணை

பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM

படக்குறிப்பு,

பள்ளிக்கரணை வங்கக்கடலை ஒட்டியுள்ள சதுப்பு நிலக் காடுகளை கொண்ட பகுதி

சதுப்பு நிலங்களை அழிப்பது யார்?

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளால் குடியிருப்பு நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்க வேண்டிய சென்னை பெருநகர் வளர்ச்சி ஆணையம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கத் தவறியது ஏன்?

சதுப்பு நிலத்திற்கு குடியிருப்புப் பகுதியாக மாற்றிய அதிகாரியின் மீது அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளித்தும் அதிகாரியின் மீது அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு பணி உயர்வு கிடைத்திருப்பதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

நீர்வளத்துறை செயல்படுகிறதா?

நீர்நிலைகளை பாராமரிக்க வேண்டிய நீர் வளத்துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. அரசால் ஆண்டுதோறும் நீர்நிலை மேலாண்மைக்கு ஒதுக்கப்படும் பணம் செலவிடும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டுகிறது.

 
மிக்ஜாம் புயல் - அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM

படக்குறிப்பு,

அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்

நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில் நீர்நிலைப் பகுதிகளை இடங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக (Zero land value) அறிவிக்க வேண்டும் என உத்தரவு வழங்கியது.

ஆனால், அந்த உத்தரவை அரசு பின்பற்றி வருவாய்த்துறையின் கீழ் வரும் நீர்நிலையின் இடங்களை மதிப்பில்லா இடமாக மாற்றி பதிவுத்துறையில் அறிவிக்கவில்லை.

நீர்நிலைகளின் மதிப்பு குறித்து அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தரப்பில் பதிலளிக்காதது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

கடல் மட்டத்தில் இருக்கிறதா பள்ளிக்கரணை?

“சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து பூஜ்ஜியம் அல்லது ஒரு அடி மட்டுமே உயரமாக உள்ளது.

இதனால், மழைக்காலங்களில் பக்கிங்காம் கால்வாய் வழியாக மழைநீர் முட்டுக்காடு கடலை நோக்கிச் செல்லக் கூடிய ஒங்கியம் மவுடு பகுதியில் ஆகாயத் தாமரையின் தடுப்பதால் மழைநீர் சீராக கடலில் சென்று சேர முடியாமல் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து கொள்கிறது.

பள்ளிக்கரணையில் இருந்து மழைநீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் சேரும் இடம் வரை இருக்கு நீர் வழி பாதையை மாநகராட்சி முறையாக பராமரிப்பு செய்யாவிட்டால் ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் மக்கள் குடிநீர், பால், உணவுக்காகவும் மழை காலங்களில் இருப்பிடத்தை தேடி அழைய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதில் (RTI) கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் தற்போது வரை அரசு ", என்றார்.

 
மிக்ஜாம் புயல் - பூவுலகின் நண்பர்கள்

பட மூலாதாரம்,POOVULAGIN NANBARGAL

படக்குறிப்பு,

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும் எளிதில் பாதிக்கும் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்கிறார் பூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த சவுந்தரராஜன்

இது தொடர்பாக பிபிசியிடம் கூறும் போது "சென்னைக்கான மாஸ்டர் பிளான்-3 திட்டத்தை ரத்து செய்து மாஸ்டர் பிளான் இரண்டில் விடுபட்டதை நிறைவேற்ற வேண்டும்,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளை எளிதில் பாதிக்கும் பிராந்தியமாக அறிவித்து, அங்கு இருக்கும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினால் 125 டி.எம்.சி நீரை சென்னையின் நீர்நிலைகளில் சேமித்து வெள்ள பாதிப்பை தவிர்க்கலாம்", என்றார்

தொடர்ந்து பேசிய அவர் "தென் சென்னையை காப்பாற்ற அரசு விரும்பினால் பள்ளிக்கரணை பகுதியில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு எந்தத் தயக்கம் காட்டக் கூடாது" எனக் குறிப்பிட்டார்.

 

தமிழக அரசின் பதில் என்ன?

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் கடந்த காலத்தில் 12 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் கூவத்தின் அருகே அகற்றப்பட்டன. தற்போது மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.

மீட்புப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்படும் இடத்தில் பொது மக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீர் நிலைகளை தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்படும்," என கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c4n7mg5rxe7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேளச்சேரி கட்டுமான பள்ளத்தில் இருவர் சிக்க யார் காரணம்? மீட்புப் பணி தாமதம் ஆனது ஏன்?

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,NDRF

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய பள்ளத்திற்கு அருகே நிலம் சரிந்த விபத்தில் ஐந்து பேர் பள்ளத்தில் விழுந்து சிக்கினர். அவர்களில் மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், இருவர் வெள்ளிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

ஐந்து பேர் சிக்கிய விபத்தில், இருவரை மட்டும் மீட்க தாமதமானது ஏன்? மீட்புப் பணியில் இருந்த சவால்கள் என்ன? இறந்த இருவர் பள்ளத்தில் சிக்கியது எப்படி?

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை மிக்ஜாம் புயல் தமிழகத்தின் கடலோரப் பகுதியைக் கடக்கும்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகனமழை பெய்து கொண்டிருந்தது.

 

பள்ளத்தில் ஐந்து பேரும் சிக்கியது எப்படி?

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்போது, வேளச்சேரியில் உள்ள கிண்டி ஐந்து பர்லாங் – வேளச்சேரி சாலை இணைப்புச் சந்திப்பில் இருந்த பெட்ரோல் பங்க்கின் அருகில் தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தது. அங்கு கட்டப்படும் அடுக்குமாடி கட்டடத்தின் மூன்று அடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்காக சுமார் 50 முதல் 60 அடிக்கு பள்ளம் தோண்டியிருந்தனர்.

மழை பெய்த அன்று காலை, அந்தக் கட்டுமான தளத்தில் இருந்த கன்டெய்னர், ஜெனரேட்டர் அறை மற்றும் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கின் தற்காலிக கழிவறை ஆகியவை அந்தப் பள்ளத்தில் சரிந்தது. அப்போது, கழிவறை, ஜெனரேட்டர் அறை மற்றும் கன்டெய்னர் மீதிருந்த ஐந்து பேர் அந்தப் பள்ளத்தில் சிக்கினர்.

இதை நேரில் பார்த்த அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள், பள்ளத்தின் மேல் பகுதியில் சிக்கியிருந்த மூன்று பேரை அப்போதே மீட்டனர். பிறகு, அந்த பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த 24 வயதான நரேஷ் மற்றும் கட்டுமான தளத்தில் பணியாற்றிய 29 வயதான கள பொறியாளர் (சைட் இன்ஜினியர்) ஜெயசீலன் ஆகியோரை பள்ளத்தில் காணவில்லை.

அவர்கள் பள்ளத்திற்கு அடியில் சிக்கியிருப்பார்கள் என அஞ்சிய நிலையில், அவர்களை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினரும், ஆவடியில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் பணியினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

திங்கள்கிழமை தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், இருவரையும் கண்டுபிடிக்க முடியாமல், மீட்புப் படையினர் திணறினர். ஐந்து நாட்கள் கடும் முயற்சிக்குப் பின்னர், நேற்று (வெள்ளிக்கிழமை) இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

 

இருவர் உடல்கள் மீட்கப்பட்டது எப்படி?

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,NDRF

சுமார் 60 அடி பள்ளத்தில் தற்காலிக கழிவறையும், கன்டெய்னரும் விழுந்தது. இதற்குக் கீழே இருவரும் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சிய நிலையில், பள்ளத்தில் தொடர்ந்து மழைநீர் வடிந்து வந்ததால், மழைநீரை அகற்றினால் மட்டுமே, அவர்களை மீட்க முடியும் என்ற சூழல் உருவானது.

ஏற்கெனவே நிலம் சரிந்து விபத்து ஏற்பட்டதால், அருகில் அதிக எடைகொண்ட இயந்திரங்கள் மற்றும் வாகனங்களைக் கொண்டு வந்து, தண்ணீரையோ, மண் சரிவையே வெளியேற்றுவதில் நடைமுறைச் சிக்கல் இருந்ததாக மீட்புப் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில், புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று, 60 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக என்.எல்.சி, நிறுவனத்திடம் இருந்து அதிநவீன குழாய் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் உள்ள நீரை வெளியேற்றினர்.

பள்ளத்தில் உள்ள நீரை வெளியேற்றினாலும், தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டுக் கொண்டிருந்ததால், மனிதர்களை பள்ளத்தில் இறக்கி மீட்புப் பணியைத் தொடர முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், தொடர்ந்து சரிந்து வரும் மண்ணை அகற்ற எல்&டி நிறுவனத்தின் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு, சரிந்திருந்த மண்னை அகற்றினர். இதனால், மீட்புப்பணி வியாழக்கிழமை இரவு சற்று வேகம் எடுத்தது. அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 4.30 மணியளவில், நரேஷ் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஜெயசீலனையும் மீட்கும் பணி நடைபெற்று வந்தது. காலை 11 மணியளில் மீட்புப்பணியை பார்வையிட வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், விரைவில் மீட்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

“அவர் உயிருடன் இருக்கிறார் என்று பொய் கூற விரும்பவில்லை. துர்நாற்றம் வீசும் பகுதியில் தேடுகிறோம். அதிகபட்சம் அடுத்த மூன்று மணிநேரத்தில் மீட்டுவிடுவோம்,” எனத் தெரிவித்தார்.

மதியம் 1.30 மணியளவில், ஜெயசீலனும் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இருவரது சடலமும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 

மீட்புப் பணியில் தாமதம் ஏன்?

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,NDRF

மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடர் மீட்புப்பணியைச் சேர்ந்த முத்துக்குமார் பிபிசியிடம் பேசுகையில், தண்ணீர் மற்றும் மண் சரிவு என இரண்டையும் ஒரே நேரத்தில் சந்தித்ததால், மீட்பில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறினார்.

“முதல் நாளே நாங்கள் உள்ளே இறங்கிப் பார்த்தோம். அப்போதுதான் இது 60 அடி ஆழம் எனத் தெரிந்தது. மேலும், அந்தப் பள்ளத்தில் தண்ணீர் அதிகம் தேங்கியிருந்தது. மழை காரணமாக அருகில் இருந்த நிலமும் சரிந்துகொண்டே இருந்தது. இவைபோக, அவர்கள் கட்டுமானத்திற்காக 60 அடி ஆழத்திற்குத் தோண்டியிருந்ததால், உள்ளே கான்கிரீட்டுக்காக போட்டிருந்த கம்பிகளும் இருந்தன,” என்றார் முத்துக்குமார்.

இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மீட்புப்படையினர் மேற்கொண்ட மீட்புப் பணிகளில், பெரும்பாலும் அது பள்ளத்தில் நிலச்சரிவு மீட்பாகவும், அல்லது ஆறு, வெள்ளத்தில் இருந்து மீட்டதாக இருந்ததாகவும், இந்த மீட்புப் பணியில் இரண்டு சவால்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் முத்துக்குமார் கூறினார்.

மேலும், அதில் வேறு யாரேனும் சிக்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டபோது, இருவரை மட்டும்தான் காணவில்லை என புகார் தெரிவித்திருந்ததாகவும், இருவரின் சடலத்தையும் மீட்டுள்ளதாகவும் முத்துக்குமார் கூறினார்.

 

அதிகனமழையில் அதிகாலை வரவழைக்கப்பட்ட ஜெயசீலன்

வேளச்சேரி கட்டுமான விபத்து - மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,NDRF

திருமணமாகி 11 மாதங்களே ஆன ஜெயசீலன், தனது மனைவியுடன் வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார். ஜெயசீலன் பள்ளத்தில் சிக்கிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி மஞ்சு, அவர் உடல் மீட்கப்படும் வரையில் ஐந்து நாட்களாக சாலையின் ஓரத்திலேயே அமர்ந்திருந்தார்.

சம்பவம் குறித்துப் பேசிய மஞ்சு, மழைநீரை வெளியேற்றுவதற்காக ஜெயசீலனை அழைத்ததன்பேரில், அவர் சென்றதாகக் கூறினார்.

“திங்கள் கிழமை அதிகாலை கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது காலை சுமார் 4 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் உடனே கட்டுமான தளத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கிளம்பினார். நான் அவரை அப்போதே தடுத்தேன்.

அவர், ‘நான் இப்போது சென்று தண்ணீரை ஜெனரேட்டர் போட்டு வெளியேற்றாவிட்டால் ரூ 2.5 கோடி நஷ்டமாகிவிடும்’ எனக் கூறிவிட்டு சென்றார். அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள்,” என்றார் மஞ்சு.

நான்கு பேர் மீது வழக்கு; இருவர் கைது

தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார், கட்டுமானத் தள மேற்பார்வையாளர்கள் எழில், சந்தோஷ், மேலாளர் மணிகண்டன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304(ii) (உயிரிழப்பு ஏற்படும் எனத் தெரிந்து அஜாக்கரதையாக பணியில் அமர்த்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்து, எழில் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், புயல் காரணமாக தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்திருந்தும் பணிக்கு வரவழைத்த நிறுவனத்தின் மீது வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி சார்பாகவும் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

“காவல்துறையின் நடவடிக்கை ஒருபுறம் நடக்கிறது. அதேபோல, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாகவும் தனியாக இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது. கட்டுமானத்தில் ஏதேனும் விதிமீறல் இருக்கிறதா என்பதையும் விசாரித்து வருகிறோம்,” என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/c032485767go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி கள ஆய்வு: மழை நின்று 5 நாளான பிறகும் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி நிலை இதுதான்...

முதல்வரின் கொளத்தூர் தொகுதி மழையில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 26 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. மழை நின்று 5 நாட்களாகி விட்ட போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் முழுமையாக வடியவில்லை.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொளத்தூர் தொகுதி எப்படி இருக்கிறது? அங்குள்ள மக்கள் மழை, வெள்ளத்தை சமாளித்தது எப்படி?

இதுதொடர்பான பிபிசி கள ஆய்வில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கொளத்தூர் தொகுதி மக்கள் சொல்வது என்ன? முதல்வர் தொகுதி என்பதால் தனி கவனம் கிடைத்ததா?

சென்னை கொளத்தூர் நிலை என்ன?

பட மூலாதாரம்,X/DMK

முதல்வரின் கொளத்தூர் தொகுதி நிலை என்ன?

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் முழங்கால் அளவிற்கு மேல் மழைநீர் சூழ்ந்து இருந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகே மழைநீர் வடிந்தது.

கொளத்தூரில் பாலாஜி நகர், குமரன் நகர், அன்னை சத்யா நகர் போன்ற பகுகளில் டிசம்பர் 7ஆம் தேதி மாலைதான் தேங்கிய வெள்ள நீர் மீன் மோட்டாரைக் கொண்டு அகற்றப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டைச் சூழ்ந்த கழிவு நீரில் நடந்ததால் காலில் வீக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார் கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த காமாட்சி.

இது குறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், “புயல் மழையால் எனது வீட்டினுள் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அத்துடன் கழிவுநீரும் கலந்திருந்தது. இதனை அகற்ற அதிகாரிகள் யாரும் வரவில்லை. நானும் எனது பேரனும் சேர்ந்து வீட்டில் உள்ள வாளியைக் கொண்டுத் தேங்கிய கழிவு நீரை அகற்றினோம்.” என அவர் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், “இதனால், எனது பாதப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாத சூழலில் இருக்கிறேன். இன்னமும் ஒரு அடிக்குக் கழிவு நீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மழை நீர் சூழ்ந்ததால் வீட்டினுள் இருந்த பிரிட்ஜ், மின்விசிறி, ரேடியோ போன்ற மின் சாதனங்கள் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளன", என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் இதேபோல் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அனைத்து தாழ்வான வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மின்சாதனங்கள் சேதம் அடைந்ததாகத் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதி நிலை என்ன?
 

“முதலமைச்சர் வந்த பிறகே பணிகள் நடந்தன”

மழை பாதிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கொளத்தூரைச் சேர்ந்த இறைச்சி வியாபாரியான முருகேசன், “வெள்ள நீர் இறைச்சிக் கடைக்குள் புகுந்ததால் இறைச்சியை பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நான்கு குளிரூட்டு பெட்டிகள், இறைச்சியை தூய்மை செய்யும் இயந்திரம் உட்பட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது” என்கிறார் .

அவர் கூறுகையில், “2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு 5 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வர இயலவில்லை.” எனத் தெரிவித்தார்.

முதல்வரின் கொளத்தூர் தொகுதி மழையில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது?

அவர் மேலும் கூறுகையில், “முதல்வர் தொகுதிக்கு வருகிறார் என தெரிந்தவுடன் அதிகாரிகள் அவசரஅவசரமாக படகுகளை விட்டு மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் அவர்கள் கொளத்தூர் தொகுதியின் ஒரு பகுதியில் மட்டுமே மீட்புப் பணிகளைச் செய்தனர். குமரன் நகர் பேருந்து நிலையம் வரை படகு இயக்கவில்லை” என அவர் கூறினர்.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டிசம்பர் 6ம் தேதி தனது தொகுதியான கொளத்தூருக்கு வந்தார்.

ஆனால் மழை நீர் அதிகம் தேங்கி இருக்கக்கூடிய பகுதிக்குள்ளே வரவில்லை. முன்புறமாகவே வந்து நலத்திட்டத்தைக் கொடுத்துத் திரும்பிவிட்டார் என அந்தப்பகுதியைச் சேர்ந்த இறைச்சி வியாபாரி முருகேசன் தெரிவிக்கிறார்.

ஒரு குளிரூட்டியைப் பழைய இரும்பு கடையில் போட்டு விட்டோம். மேலும், 2 பிரிட்ஜ்களை ரிப்பேர் செய்ய எலக்ட்ரீசியன்கள் கிடைப்பதும் இப்போது கடினமாக உள்ளது. இதனால், ஆட்கள் கிடக்காமல் ஒரு வாரத்திற்கு மேலாக எங்களது தொழில் முடங்கி இருக்கிறது" என முருகேசன் கூறினார்.

சென்னை கொளத்தூர் தொகுதி நிலை என்ன?
 

தூய்மை பணியில் இறங்கிய மக்கள்

கொளத்தூரின் அன்னை சத்யா நகர், பாலாஜி நகர், குமரன் நகர், மீன் மார்க்கெட் போன்றப் பகுதியில் சாலை முழுவதிலும் கழிவு நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை இருப்பதால் அதனை பொதுமக்களே அகற்றி வருகின்றனர்.

கொளத்தூரை ஒட்டிய மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவர் கூறும் போது, "கொளத்தூரில் 4 அடி அளவுக்கு நீர் தேங்கியது நீர் வடிந்தாலும் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. தூய்மை பணியாளர்களை அழைத்து கழிவுகளை தூய்மை செய்ய சொன்னால் தற்போது பெரிய கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது பகுதியில் இருக்கக்கூடிய கழிவுகளை நாங்களே அகற்றுகிறோம்,”தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், “மழை வெள்ளத்தால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் பல கழிவு பொருட்களும் கலந்து கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திலேயே தூய்மை செய்து வருகிறோம்", என கூறினார்.

முதல்வரின் கொளத்தூர் தொகுதி மழையில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது?
முதல்வரின் கொளத்தூர் தொகுதி மழையில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது?
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் இன்று பள்ளிகள் திறப்பு!

Chennai schools reopen today

மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு பிறகு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று (டிசம்பர் 11) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஒருவாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட சீரமைப்புகளை சரிசெய்வதற்காக ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட உள்ளது.  மாணவர்களின் நலன் கருதி இன்று துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் செயல்பட உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், செங்கல்பட்டு – பரனூர் இடையே சரக்கு ரயில் தடம் புரண்டதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 

https://minnambalam.com/tamil-nadu/chennai-schools-reopen/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் – என்ன நடந்தது?

சென்னை வெள்ளம், அரசு மருத்துவமனை, குழந்தை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்

சென்னையில் மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் வெள்ளத்தால், ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காமல் வீட்டிலேயே பிரசவிக்கப்பட்டு இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கியிருக்கிறது ஒரு அரசு மருத்துவமனை நிர்வாகம்.

இதனையடுத்து, கடையில் வெள்ளைத் துணியை வாங்கி, குழந்தையின் உடலின் மீது சுற்றி அடக்கம் செய்ய உதவியிருக்கிறார்கள் தன்னார்வலர்கள்.

இந்தச் சம்பவம், மருத்துவக் கட்டமைப்பில் பின் தங்கி இருப்பதகக் கருதப்படும் வட மாநிலங்களில் நிகழவில்லை.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓர் குடும்பத்திற்கு நிகழ்ந்து இருக்கிறது

இறந்த குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுத்த நிகழ்வு தொடர்பானப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது. அரசியல் தலைவர்கள் உட்பட அனைத்து தப்பினரும் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்

 
சென்னை வெள்ளம், அரசு மருத்துவமனை, குழந்தை
படக்குறிப்பு,

வீட்டினுள் மழைநீர் சூழ்ந்ததால் செளவுமியா வீட்டின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்

வீட்டில் நடந்த பிரசவம், இறந்து பிறந்த குழந்தை

சென்னையில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. அப்போது பெய்த கனமழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது.

வெள்ளம் வீடுகளைச் சூழ்ந்ததால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே சிக்கிக்கொண்டு பால், குடிநீர், உணவு தொலைத் தொடர்பு சேவை இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதில் சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த மசூத் பாட்ஷா, தினக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். கர்ப்பமாக இருந்த இவரது மனைவி செளவுமியாவுக்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இவர்கள் வசித்து வந்த வீட்டினுள் மழைநீர் சூழ்ந்ததால் செளவுமியா வீட்டின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். வீட்டைச் சுற்றி மழை நீர் கழுத்தளவு இருந்ததால் வீட்டின் அருகே இருந்த பெண்களை உதவிக்கு அழைத்தனர். பெண்கள் வந்து பார்த்த போது செளவுமியாவிற்கு பிரசவ வலி அதிகரித்து, குழந்தை இறந்து பிறந்தது.

கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலகை, மீன்பாடி வண்டி ஆகியவற்றை ஏற்பாடுச் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் உதவியுடன் தொப்புள் கொடி அகற்றப்பட்டது. பின் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த குழந்தையின் உடலை 5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு பெட்டியில் வைத்து பெற்ற அவரது தந்தை மசூத் தன்னார்வலர்கள் உதவியுடன் வியாசர்பாடி மயானத்தில் அடக்கம் செய்து இருக்கிறார்.

சென்னை வெள்ளம், அரசு மருத்துவமனை, குழந்தை
படக்குறிப்பு,

மசூத்

‘ஆம்புலன்ஸ் கிடைக்காததால் குழந்தையை இழந்துவிட்டேன்’

பிபிசியிடம் பேசிய மசூத், தனது மனைவி செளவுமியாவிற்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி காலை 11 மணியளவில் பிரசவ வலி வந்தது என்றார்.

“ஆம்புலன்ஸ் வரவழைத்து மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்லலாம் என 108க்கு தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். மழை வெள்ளத்தால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் சிக்னல் கிடைக்காமல் போனது. வெளியே சென்று வாகனம் தேடிச் சென்றேன் கிடைக்கவில்லை. தண்ணீர் கழுத்தளவிற்கு இருந்ததால் இதனால் வீட்டின் அருகே வசிக்கும் பெண்களை உதவிக்கு அழைத்தேன்,” என்றார்.

அவர்கள் உதவிக்கு வந்தனர் என்றும், குழந்தை இறந்தே பிறந்தது என்றும் அவர் கூறினார். “தொப்புள் கொடி அகற்றப்படாமல் இருந்தால் தாய்க்கும் ஆபத்து என பெண்கள் கூறினர்,” என்றார்.

“இதனால், எனது பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் ஒரு பலகையை மீன்பாடி வண்டி மீது வைத்து அருகில் இருந்த ஜி-3 அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வெள்ளநீர் புகுந்ததால் அரசு மருத்துவமனையே பூட்டப்பட்டு இருந்தது," என கூறினார்.

 

போலீசார் உதவியால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தொடர்ந்து பேசிய அவர் அதைத்தொடர்ந்து தனது மனைவியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், ஆனால் அவர்கள் பிரச்னை வந்துவிடும் என எண்ணி சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என்றும் கூறினார்.

“புளியந்தோப்பு காவல்துறை பெண் அதிகாரி உதவியதால் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் உள்நோயாளியாக அனுமதித்து தொப்புள் கொடியை அகற்றி அங்கிருந்து சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,” என்றார் மசூத்.

பிபிசியிடம் பேசிய குழந்தையின் தந்தை மசூத், அரசு மருத்துவமனையிடம் கொடுத்தபோது குழந்தையின் உடலை அட்டப்பெட்டியில் வைத்துக் கொடுத்ததாகக் கூறினார்.

ஆனால், பிபிசியிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் பிரவீன் குமார், தனியார் மருத்துவமனையிலிருந்து குழந்தையின் உடலைப் பெறும்போது, அது துணியில் சுற்றப்பட்டிருந்தது, அது அப்படியே தான் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

 
சென்னை வெள்ளம், அரசு மருத்துவமனை, குழந்தை

காவல் துறையிடம் கடிதம்

மேலும் பேசிய மசூத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் இறந்த குழந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்தது என்றார். “குழந்தையின் உடலை பெறுவதற்கு ஆதார் அட்டை எடுத்து வரும்படி பிணவறையின் முதல் நாள் இரவு ஊழியர் கூறினார்,” என்றார்.

மறுநாள் காலை வந்து கேட்ட போது இது போலீஸ் வழக்கு என்பதால் காவல் நிலையத்திலிருந்து கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே தான் உடலை அளிக்க முடியும் என அவர்கள் கூறியதாகக் கூறினார்.

“அந்நேரம் அருகில் இருந்த ஒருவர் 2,500 ரூபாய் கொடுத்தால் எல்லா வேலையும் வேகமாக நடைபெறும் எனக் கூறினார். அப்பொழுது நான் அவரிடம் பணம் இல்லை என்று கூறினேன்,” என்றார்.

மேலும், தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் அவரை விட்டுவிட்டு காவல்நிலையம் வர இயலாது எனக் கூறியதாகவும், போலீசார் உறவினரை அனுப்பி வைக்குமாறு கூறியதாகவும் அவர் கூறினார். “தொடர்ந்து கடிதத்தை பெற்று குழந்தையின் உடலை வாங்குவதற்காக சென்றோம்,” என்றார்.

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல்

மருத்துவமனைக்குச் சென்ற போது செவிலியர் அட்டை பெட்டியுடன் தயாராக காத்திருந்ததாகக் கூறினார் மசூத்.

“அதனை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல் இருந்தேன். அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய உதவினர். வியாசர்பாடி சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்றுபெட்டியை திறந்து போது குழந்தையின் உடல் மீது ஒரு துணி கூட சுற்றாவில்லை,” என்றார்.

மேலும் பேசிய மசூத், பிணவறை ஊழியர் அவசரமாக உடலைக் கேட்டதால் துணி சுற்றாமல் கொடுத்ததாகக் கூறியதாகத் தெரிவித்தார்.

“மேலும், பணம் கொடுத்தது தொடர்பாக பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பிணவறை ஊழியர்களையும் வரிசையில் நிற்க வைத்து என்னிடம் காட்டினார். என்னிடம் பணம் கேட்ட நபர் அந்த ஊழியர்களில் யாரும் இல்லை என தெரிய வந்தது", என்றார்.

சென்னை வெள்ளம், அரசு மருத்துவமனை, குழந்தை
படக்குறிப்பு,

ஆசாத்

‘கையில் இருந்து நழுவிய குழந்தையின் உடல்’

குழந்தையின் உடலை அடக்கம் செய்த ஆசாத் பிபிசி தமிழிடம் பேசினார்.

“குழந்தையின் உடலைப் பெற்று சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்த போது ஒரு சிறு துணிகூட இல்லாமல் குழந்தை இருந்தது அதனை வெறும் கையால் தூக்க முயன்ற போது குழந்தை கையில் இருந்து நழுவிச் சென்றது,” என்றார்.

“இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாங்களே எங்களது பணத்தில் வெள்ளைத் துணியை வாங்கி குழந்தையின் உடலைச் சுற்றி பின் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தோம்,” என்றார்.

மேலும் பேசிய அவர், கொரோனா காலத்தில் கூட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல உடல்களை அடக்கம் செய்து இருக்கின்றோம். ஆனால், உரிய முறையில் துணியைச் சுற்றியே அடக்கம் செய்து இருக்கின்றோம். இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய இயலாதவர்களுக்கு துணி, போர்வை வாங்கிக் கொடுத்து உடலை சுற்றிய பின்னரே அடக்கம் செய்வோம் என்றார்.

சென்னை வெள்ளம், அரசு மருத்துவமனை, குழந்தை

மருத்துவமனை பணியாளர் பணியிடை நீக்கம்

இது தொடர்பாக கீழ்பாக்கம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் டீன் முத்துச்செல்வம் பிபிசியிடம் பேசினார்.

“மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை காடா துணி என்று சொல்லப்படும் துணியால் சுற்றி வழங்குவது தான் நடைமுறை இந்தக் குழந்தையை அட்டைப்பெட்டிக்குள் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிணவரை உதவியாளர் பன்னீர் செல்வம் பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்,” என்றார்.

“மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை துணியால் சுற்றி உறவினர்களிடம் வழங்க வேண்டும். குழந்தையின் உடலை எப்படி எடுத்துச் செல்வது என்பதனை உறவினர்களின் முடிவுக்கு விட்டுவிடுவோம்,” என்றார்.

குழந்தை அட்டைப்பெட்டிக்குள் துணி சுற்றப்படாமல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது அந்த குழுவினர் விசாரணையை துவங்கி நடத்தி வருகின்றனர்.

“இந்த விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனையில் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது என", கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் " சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரை, மருந்து, மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப கையிருப்பு உள்ளன பற்றாக்குறை இல்லை,” எனத் தெரிவித்தார்.

 

காவல் துறை சொன்னது என்ன?

குழந்தை இறப்பில் பெற்றோருக்கு எந்தச் சந்தேகமும் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என காவல் ஆய்வாளர் பிரவீன் குமார்.

https://www.bbc.com/tamil/articles/cw02y69rzp8o

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

குழந்தை இறப்பில் பெற்றோருக்கு எந்தச் சந்தேகமும் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என காவல் ஆய்வாளர் பிரவீன் குமார்.

மிகவும் சோகமான கதை.

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் கொடுமையானது........இறந்த சிசுவுக்கு அஞ்சலிகள்......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல்

GBEr0IgWIAAnyRK?format=jpg&name=small

கொடூர உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் இன்று பள்ளிகள் திறப்பு!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.