Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ-தமிழ் வலையொளி பேட்டி..

 

  • Replies 69
  • Views 6.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1. இந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி பட்ட தமிழ் உணர்வாளராய் இருந்தார் என மிக அழகாக கூறப்பட்டுள்ளது. இந்த விஜயகாந்தைத்தான், அவரின் கடைசிகாலங்களில் தெலுங்கன், தமிழை தமில் என உச்சரிப்பவர் என சிலர் விமர்ச

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ் நாட்டு இதர நடிகர்கள் அச்சமடையுமளவிற்கு மனித நேயமிக்கவர் என கூறுகின்றார்கள். ஏனைய நடிகர்களை திட்டுவது போல் விஜய்காந்த் அவர்களை திட்டியதை நான் எங்கும் காணவில்லை.

  • இது  என்றும்  பலருக்கு புரியப்போவதில்லை  அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் ..  ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! தமிழகத்தில் இருந்த வாழ்ந்த ஒரே ஒரு நேர்மையான அரசியல்வாதி கேப்டன் தான்! தலைவர் மேலிருந்த நல்லெண்ணத்தினால் தன் மகனுக்கு அவர் பெயரை சூட்டியவர். 

கேப்டன் இறந்தாலும் தமிழர் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு வர முன் ஈழத்தமிழர் மீதும்  விடுதலைப்புலிகள் மீதும் மிகுந்த அபிமானமிக்க ஒருவராக இருந்தவர். அதற்காகவே ஈழத்தமிழர்கள் இவரின் படங்களை தெரிவு செய்து பார்த்த காலமும் உண்டு.

அபிமானமிக்க கலைஞனுக்கு புகழஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

414832811_673235695013851_39756399051447

  • கருத்துக்கள உறவுகள்

இவரை பற்றி வலவன் யாழ்களத்தில் எழுதி படித்திருக்கிறேன் இலங்கை தமிழர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர் என்று தெரியவருகின்றது.

இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந் ஒரு நல்ல மனிதர். ஈழத்தமிழர்கள் பால் அதிக கரிசனை கொண்டவர். ஒரு மனிதனின் சாவு எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியவர். அனைத்து மக்களும் இரங்கலைத் தெரிவிக்கிறார்கள்;.  தமிழ்சினிமாவுக்கே பொருத்தமில்லாத கநறப்பு நிறத்தில் சினிமாவில் சாதித்துக்காட்டியவர். ஜெயலலிதா கருணாநிதி அரசியலில் உச்ச நிலையில் இருந்தபொழுதே துணிவாக அரசியலுக்கு வந்து குறகிய காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர். தன:னடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு சமமான உணவை கொடுத்துத மனித நேயம் படைத்தவர். ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். உல்லாவற்றுக்கும் மேலாக தமிழக  ஊடகவிபச்சாரிகளுக்கு நேராக காறித்'துப்பியவர்.  தமிழினத்துரோகி கருணாநிதி போல பக்கா அரசியல்வாதியாக இருக்காமல் நல்ல மனித நேயத்தோடு கூடிய மனிதன். கருணாநிதி இறந்த பொழுது ஈழத்தமிழர்கள் மகிழ்சியடைநதார்கள். கப்டனின் இழப்புக்கு எல்லோரும் இரங்கல் தெரிவிக்கிறார்கள். இதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. நஜவாழ்வில் நடிக்கத்தெரியாத மனிதன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, புலவர் said:

விஜயகாந் ஒரு நல்ல மனிதர். ஈழத்தமிழர்கள் பால் அதிக கரிசனை கொண்டவர். ஒரு மனிதனின் சாவு எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியவர். அனைத்து மக்களும் இரங்கலைத் தெரிவிக்கிறார்கள்;.  தமிழ்சினிமாவுக்கே பொருத்தமில்லாத கநறப்பு நிறத்தில் சினிமாவில் சாதித்துக்காட்டியவர். ஜெயலலிதா கருணாநிதி அரசியலில் உச்ச நிலையில் இருந்தபொழுதே துணிவாக அரசியலுக்கு வந்து குறகிய காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர். தன:னடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு சமமான உணவை கொடுத்துத மனித நேயம் படைத்தவர். ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். உல்லாவற்றுக்கும் மேலாக தமிழக  ஊடகவிபச்சாரிகளுக்கு நேராக காறித்'துப்பியவர்.  தமிழினத்துரோகி கருணாநிதி போல பக்கா அரசியல்வாதியாக இருக்காமல் நல்ல மனித நேயத்தோடு கூடிய மனிதன். கருணாநிதி இறந்த பொழுது ஈழத்தமிழர்கள் மகிழ்சியடைநதார்கள். கப்டனின் இழப்புக்கு எல்லோரும் இரங்கல் தெரிவிக்கிறார்கள். இதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. நஜவாழ்வில் நடிக்கத்தெரியாத மனிதன்.

தமிழ் நாட்டு இதர நடிகர்கள் அச்சமடையுமளவிற்கு மனித நேயமிக்கவர் என கூறுகின்றார்கள். ஏனைய நடிகர்களை திட்டுவது போல் விஜய்காந்த் அவர்களை திட்டியதை நான் எங்கும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், கேப்டன் விஜயகாந்துடன் மீனாட்சி திருவாளையடல் என்ற படத்தில் பணிபுரிந்தார்.
இதில் சிவனாக கேப்டன் விஜயகாந்த் அவர்களும், அகத்தியராக டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரமும் நடித்துள்ளனர்.
அந்த நல்ல மனிதர் இன்று நம்மிடையே இல்லை.
"இசைமணி" சீர்காழி கோவிந்தராஜன் குடும்பத்தினர் சார்பாக கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி...
414745678_869463251845386_30187656473498
 
 
414748101_869463255178719_73099213740802
 
 
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தன்மானமும், சுயகௌரவமும் : 1986ல் விஜயகாந்த் கொடுத்த பேட்டி!

KaviDec 29, 2023 14:26PM
vijayakan.webp

சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளில் விஜயகாந்திடம் பேரன்பும், வெளிப்படை தன்மையான வெள்ளந்தி தனமும் வெளிப்படும்.

வரம்புமீறி கேள்விகள், வார்த்தைகள் செய்தியாளர்களிடம் இருந்து வரும் போது பெரும் கோபமும் விஜயகாந்திடமிருந்து வெடித்து கிளம்பும். அரசியல்வாதியான பின்பு அந்த பழக்கம் மாறாதவராகவே விஜயகாந்த் வெள்ளந்தி தனமாக இருந்தார்.

அதுவே அவரது அரசியல் பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இப்போது இல்லை சினிமாவில் தொடக்ககாலத்திலேயே அதே போன்றுதான் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றாக இருக்கிறது 1986ஆம் ஆண்டு சினிமா பத்திரிக்கைக்கு அவர் கொடுத்த பேட்டி. அவற்றில் இருந்து குறிப்பிட்ட பகுதி.

விஜயகாந்த் பேட்டி

புது நடிகன்னா மதிக்கமாட்டாங்க

இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்’னு சொல்வாங்களே அதுதான்.

சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன்.
அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்’ தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரியவர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.
முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்.

ஆனா, ‘இனிக்கும் இளமை’ படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, ‘அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்‘னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு!

vijayakanth-65.jpg

‘அகல் விளக்கு’ படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு’ படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை!

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்துக்கு என்னை புக் பண்ணினார். ‘ஒருதலை ராகம்’ படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் நடிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் ‘நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கனும்’னு சொல்லிட்டார்.

‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் ‘வாஷ்’ பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம்.

PXuk4v8i-sddefault.jpg

‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர்.
மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் ‘சாட்சி’ படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘

விஜயகாந்த்துடன் நடிக்க மறுத்த நடிகைகள்

‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. ‘பார்வையின் மறுபக்கம்’ படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன்.

அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை’ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க… நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை!

இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க’னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்’ என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே ‘தங்களுக்குப் பாதுகாப்பில்லை’னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும்.

சினிமாவில் இருக்கிற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?’’

‘‘தங்கள் படங்கள்ல ஒரு நாளாவது என்னை நடிக்க வெச்சு, அதுக்குப் பிறகு அந்தப் படத்தையே கேன்ஸல் பண்ணிட்டு, ‘விஜயகாந்துக்கு நடிக்க வரலை. அதனாலதான் அந்தப் படத்தை எடுக்கலை’னு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கணும்னு இன்னிக்கும் ஆசைப்படற பெரிய மனிதர்கள் இருக்காங்க தெரியுமா? அதே சமயம் இவங்களே பினாமி மூலம் கால்ஷீட் கேட்கறதும் உண்டு. அவங்க மேலேயே நான் கோபப்படலை, நடிகைகள் மேலா கோபப்படப் போறேன்..?

இன்னிக்குச் சொல்றேன், எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை.

“நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது. தினமும் முப்பது, நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்.’’

cinema-768x461.webp

‘இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?ன்னு கேட்டா அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்’ கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன்.

இதெல்லாம் நான் நடிகனாகறதுக்கு முன்னாடியே! நான் சாப்பாடு போடறதை விளம்பரம் பண்ணியா போடறேன்..? அதேமாதிரி என் சொந்தப் படமான ‘உழவன் மகன்’ ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது. கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை…’’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் விஜயகாந்த்.
 

 

https://minnambalam.com/cinema/self-esteem-and-self-respect-interview-given-by-vijayakanth-in-1986/

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி: தீவுத்திடலில் குவியும் பிரபலங்கள்; கண்ணீர் மல்க பொதுமக்கள் பிரியாவிடை

29 DEC, 2023 | 12:44 PM
image
 

 சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் மேடையில் உள்ள விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிச் செல்கின்றனர்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர். தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும்கூட ரசிகர்கள் வந்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த சிலர் விஜயகாந்த் தமிழக முதல்வராக வந்திருக்கலாம். மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிட்டனர் என்று கூறினர்.

vijayakanth2.jpg

விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

இன்று மதியம் 1 மணியளவில் தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி: விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மகன்கள் சண்முகபாண்டியன், பிரபாகரன், மைத்துனர் சுதீஷுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் வந்திருந்தனர். பின்னர் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடியின் முழுமையான அன்பைப் பெற்ற விஜயகாந்த் ஏழைகளின் பங்காளன். அவரின் புகழ் என்றும் ஓங்கியிருக்கும்” என்றார்.

vijaya_kanth_dead.jpg

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கேப்டன் இளகிய மனம் கொண்டவர். அவர் மறைவு வருத்தமளிக்கிறது. அரசியலில் மனிதநேயத்துடன் உள்ள தலைவரை நாம் பார்க்கமுடியாது. அப்படிப்பட்டவரை இழந்துவிட்டோம். கடைசி முறையாக அவருடைய முகத்தை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று வந்துள்ள தொண்டர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். தன் பணத்தால் மக்களுக்கு உதவிய தலைவரை இழந்துவிட்டோம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு, தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பிரதமர் மோடி உடனடியாக இரங்கல் குறிப்பு பதிவிட்டதோடு, நம்மை நேரடியாக இங்கே அனுப்பிவைத்தார். ஆளுநர் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளேன்” என்றார்.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்: விஜயகாந்த் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். ”விஜயகாந்தின் புன்சிரிப்பை மறக்க முடியாது. அவர் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி தமிழீழ விடுதலை வேட்கைக்கு வடிவம் கொடுத்தவர்” என்று அவர் கூறியுள்ளார்.

தேவா முதல் பார்த்திபன் வரை.. இசையமைப்பாளர் தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “நான் பார்த்த வள்ளல் விஜயகாந்த் தான். அற்புதமான மனிதர்” என்றார். இயக்குநர், நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இயக்குநர், நடிகர் சுந்தர்.சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துச் சென்றனர். மாமனிதர் என்றால் அது கேப்டன்தான் என்று சுந்தர்.சி-யும், சொக்கத்தக்கம் என்றால் அது விஜயகாந்துக்கே செல்லும் என்று குஷ்புவும் புகழஞ்சலி செலுத்தினர். இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசுகையில், “நான் விஜயகாந்த் என்ற நடிகரைவிட அவருடைய மனிதநேயத்துக்கு மிக்கப்பெரிய ரசிகன்” என்றார்.

நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்களுடன் பேசி ஆறுதல் கூறினர். ஓ.பன்னீர்செல்வத்துடன் புகழேந்தி வந்திருந்தார். அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “2011-ல் ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். ஈகை குணம் கொண்டவர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்” என்று நினைவுகூர்ந்தார்.

rajini1.jpg

ரஜினிகாந்த் இரங்கல்: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்து மிகப் பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர் எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது. விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்” என்றார். தொடர்ந்து ரஜினிகாந்த் சென்னையில் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்நிதி, லிவிங்ஸ்டன் அஞ்சலி: இன்று காலை தீவுத்திடலுக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் அருள்நிதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர் லிவிங்ஸ்டன் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை சொந்தச் செலவில் நடிகராக்கியவர். என்னை ஒரு நடிகராக அங்கீகரித்து வளர்த்தெடுத்து, சம்பாதிக்க வைத்து வாழவைத்தவர்” என்றார்.

 

ராம்கி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்: நடிகர் ராம்கி செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்துடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார். அந்தப் படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்துக்கு பெயர் கேப்டன். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் அனவருமே கேப்டன் ஷாட்டுக்கு ரெடியா, கேப்டன் வந்துட்டாரா? என்றுதான் பேசுவோம். கொஞ்ச நாளில் அது அவரது ஆஃபீஸ் வரை நீண்டது. அங்கே போன் செய்து கேப்டன் கிளம்பிட்டாரா எனக் கேட்பார்கள். அந்தப் படம் முடிந்தும் கேப்டன் என்றே அவரை எல்லோரும் வாஞ்சையோடு அழைத்தோம். கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பின்னர் அந்தப் பெயர் அவரின் அடையாளமாகிவிட்டது என்றார்.

 

கண்கலங்கிய ரஜினிகாந்த்: சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலிக்கு செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கன்னியாகுமரி படப்பிடிப்பில் இருந்து இங்கே வருகிறேன். மனம் மிகவும் கனக்கிறது. விஜயகாந்த் பற்றி பேச எவ்வளவோ இருக்கிறது. நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். ஒருமுறை பழகிவிட்டால், வாழ்க்கை முழுக்க அதனை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர்.

 

நண்பர்கள் மீது கோபப்படுவார். அரசியல்வாதிகள் மீது கோபப்படுவார். ஊடகங்கள் மீது கூட கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. காரணம் அவரது கோபத்தில் சுயநலம் இருக்காது. தைரியத்துக்கும் வீரத்துக்கு இலக்கணமானவர்.

 

கேப்டன் அவருக்கு பொறுத்தமான பெயர். 71 பால்களில், நூற்றுக்கணக்கான சிக்சர்களை குவித்து, மக்களை மகிழ்வித்து விக்கெட்டை இழந்து இந்த உலகம் என்னும் ஃபீல்டை விட்டு போய்விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் போன்றோர். வாழ்க விஜயகாந்த் நாமம்” இவ்வாறு ரஜினி நா தழுதழுக்க உருக்கமாக பேசினார்.

https://www.virakesari.lk/article/172691

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

விஜயகாந்த்

பட மூலாதாரம்,VIJAYAKATNTH FACEBOOK

28 டிசம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
படக்குறிப்பு,

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை

விஜயகாந்த் மறைவையொட்டி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரோடு இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்ற அவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து தனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றுள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைத்தள பக்கங்களில் ‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே…’ என்ற வாசகங்களோடு விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை செலுத்தும் படங்கள் பகிரப்பட்டுள்ளன.

விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
படக்குறிப்பு,

மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த் உரை

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்த பிறகு தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியுள்ளார். இதில் முன்வந்து நின்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அரசு மரியாதை செய்ய ஏற்பாடு செய்ததற்கும், தீவுத்திடலில் அஞ்சலிக்கு இடம் ஒதுக்கி கொடுத்ததற்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் இது போல் எந்த தலைவருக்கும் கூட்டம் கூடியதில்லை. இரண்டு நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

“இந்த சோகமான நாளில் தலைவரின் கனவை வெற்றிபெற செய்ய வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். அந்த நாள்தான் தேமுதிகவின் வெற்றி நாள். தேமுதிக அலுவலகத்தில் தலைவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் விளக்கு ஏற்றப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

'54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்'

"தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்" என்று தயாரிப்பாளர் சிவா ஒருமுறை கூறியிருக்கிறார்.

"சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் டி. சிவா.

https://www.bbc.com/tamil/articles/ce5j35dgpv1o

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!  

  • தொடங்கியவர்

மிகச் சிறந்த மனிதர். நல்ல அரசியல்வாதியாகவும் இருந்தவர். நேற்று முழுதும், நல்லா பழகிய ஒருவரை இழந்துவிட்டதாக மனம் அரட்டிக் கொண்டு இருந்தது.

இவரது அரசியல் வாழ்வையும் நாசமாக்கியவர் வேறு யாரும் இல்லை...வைகோ தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள் ....

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சிக் கலைஞர் #விஜயகாந்த் அவர்களுக்கு வன்னி பெருநிலப்பரப்பு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்வி நிலையென நினைத்தால் தமிழீழ விடுதலைக்காக படைக்கப்பட்ட பாடல் " தமிழ்த்தேசத்தின் விடுதலைப் பாடல் "

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GCiKCNtWoAAFh-j?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயகாந்த் கடைசி வரை நடந்த கொடுமைகள்....

 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

விஜயகாந்த் கடைசி வரை நடந்த கொடுமைகள்....

 

1. இந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி பட்ட தமிழ் உணர்வாளராய் இருந்தார் என மிக அழகாக கூறப்பட்டுள்ளது. இந்த விஜயகாந்தைத்தான், அவரின் கடைசிகாலங்களில் தெலுங்கன், தமிழை தமில் என உச்சரிப்பவர் என சிலர் விமர்சித்தனர்.

2. அரசியல் என வந்து விட்டால் அதன் பின் சதிகளை சந்திக்காமல் இருக்க முடியாது.

ஆனால் தனியே சதிகள் மட்டும் அல்ல. உண்மையில் நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அதே கூர்மையோடு sharpness அரசியலில் இருந்திருப்பின் - இன்றைக்கு அவர் முதல்வராக கூட வந்திருப்பார். கட்சி தொடங்கிய சில காலத்திலேயே அவரின் sharpness அதள பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. இந்த வீழ்ச்சியின் ஆரம்பம்தான் பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடக்க தொடங்கியது. இதை ஜெயும், கருணாநிதியும் கீழ்தரமாக பாவித்து கொண்டார்கள். அதன் பின் சுதீசும், பிரேமலதாவும் அவரை ஒரு பொம்மை போல முன்னிறுத்தி எந்த ஊழல் அரசியலை கேப்டன் வெறுத்தாரோ அதையே செய்தார்கள்.

இப்ராஹிம் ராவுத்தரை கேப்டன் பிரிந்ததில் ஆரம்பித்து, குடிப்பழக்கத்தை நிறுத்துகிறோம் என சிகிச்சை கொடுத்து அவரை மரத்துப்போக செய்தது, அவர் சேர்த்த எம் எல் ஏக்களை, கட்சியை சிதற அடித்தது என எதிரிகளை விட கூட இருந்தோரின் சுயநலத்துக்கு கேப்டன் பலியாகியதுதான் அதிகம்.

கேப்டன் வாழ்நாள் கனவாக தொடங்கிய கட்சி, கடைசியில் வெளிபடையாக பண பேரம் படியாததால் கடைசி நேரத்தில் கூட்டணி மாறிய அவலத்தை கண்டது. அதேபோல் எதை விடவும் கட்சிக்கு சுதீஸ் ராஜ்யசபா போவதே முக்கியம் என சுருங்கியும் போனது.

கேப்டன் ஒரு அற்புதமான ஆத்மா

இப்போ அவருக்கு கிடைக்கும் புகழாஞ்சலி எல்லாம் அவர் சுயநினைவில், தன் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர் நடந்து கொண்ட விதத்துக்கு கிடைக்கும் கெளரவம், அங்கீகாரம்.

ஆனால் கடந்த 20-15 வருடங்களாக அவர் விஜயகாந்தாகவே இருக்கவிலை என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

கேப்டன் ஒரு அற்புதமான ஆத்மா

இப்போ அவருக்கு கிடைக்கும் புகழாஞ்சலி எல்லாம் அவர் சுயநினைவில், தன் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர் நடந்து கொண்ட விதத்துக்கு கிடைக்கும் கெளரவம், அங்கீகாரம்.

ஆனால் கடந்த 20-15 வருடங்களாக அவர் விஜயகாந்தாகவே இருக்கவிலை என்பதே உண்மை.

ஒரு மனிதன் நேர்மையாக நீதி நியாயமாக கள்ளம் கபடமில்லாமல் இருந்தால் விரைவாக மரணிக்கப்பப்படுவதும் தாழ்த்தப்படுவதும் இந்த உலகின் நடை முறைகளில் ஒன்று.

மற்றும் படி அரசியலில் பல சில குளறுபடிகள் எங்கும் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்தால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய நாறல் மட்டைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

1703831119187.jpg?resize=750,375&ssl=1

விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது விஜயகாந்துடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்த அவர், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்களைத்  தெரிவித்துள்ளார்.
vijayakanth-3.jpg?resize=600,337&ssl=1
 
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சந்தனப்பேழையில் விடைபெற்றார் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த்தின் பூதவுடன், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

தே.மு.தி.க. தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் உடல் தே.மு.தி.க. அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

இவரின் உடலுக்கு அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில், கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் இவரது உடல் தீவுத்திடல் பகுதியிலிருந்து தே.மு.தி.க. கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் வரலாறு காணாத மக்கள் கூட்டம் திரண்டமையால், சென்னை பூந்தமல்லி வீதியின் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், அன்னாருக்கு பூக்களை தூவியும் கட்சிக் கொடிகளை ஏந்தியும் கண்ணீரால் தங்களின் அஞ்சலியை செலுத்தினர்.

இதனையடுத்து விஜயகாந்த்தின் பூதவுடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை முன்னிட்டு, குறித்த பகுதியில் பொலிஸாரினால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்து.
அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அன்னாரின் பூதவுடல் கொண்டுவரப்பட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் கண்ணீரால் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர், அன்னாரின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் தமிழக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான சுப்பிரமணியன், அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2023/1364513

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.