Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Cruso said:

உங்கள் மண்டைக்குள் இந்து மதவாதம் இருக்கும்போது எங்கள் தலைக்குள் நீங்கள் சொல்கிற கிறிஸ்தவ  மத வாதம் இருக்க கூடாதோ? உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல் எறியக்கடவன்.

எம்மை பொறுத்தவரைக்கும் உங்களின் ஆட்சியில் இருப்பதைவிட சிங்களவனின் கீழ் இருக்கலாம். சிவபூமி, சிவா சேனை எல்லாம் கொண்டு எங்களை ஆட்சி செய்ய முயட்சிப்பதை எல்லாம் நாங்கள் அறியாமல் இல்லை.

சிங்களவன் தமிழனுக்கு உரிமை கொடுக்க மாடடான் என்று எங்களுக்கு தெரியும். அப்படி கொடுப்பாங்க இருந்தால் நிச்சயம் அதில் கிறிஸ்தவர்களின் உரிமையும் வேறாக நிச்சயமாக பதியப்படும். இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளியில் இருந்து கொண்டு யாரும் எங்களுக்கு உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. 

சிங்களவனால் தமிழனுக்கு தீர்வா???

முதலில் சோனகர்கள் தற்போது உங்களைப் போன்ற தமிழ் கிறீஸ்தவர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது.

தமிழர்கள் எப்போதும் சைவர்களுக்கு தீர்வு என்று கேட்டது கிடையாது. சிவபூமி சிவசேனை ஓன்றும் அரசியல் கட்சி அல்ல. 

வெளியில் இருந்து யாரும் உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உதவி என்றவுடன் பல்லைக் காட்டிக் கொண்டு வந்து விடுவீர்கள்.

  • Replies 69
  • Views 6.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை…. தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று

  • அங்கு தமிழ் இந்துக்கள்தான் பெரும்பாண்மை. அப்படி இருக்கும்போது சுமந்திரன் எப்படி அந்த ஆயுதத்தை எடுக்க முடியும்? ஒரு கிறிஸ்தவனால் ஆரம்பிக்கப்படட கட்சியில் இன்று கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக

  • உங்கள் மண்டைக்குள் இந்து மதவாதம் இருக்கும்போது எங்கள் தலைக்குள் நீங்கள் சொல்கிற கிறிஸ்தவ  மத வாதம் இருக்க கூடாதோ? உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல் எறியக்கடவன். எம்மை பொறுத்தவரைக்கும் உங்களின் ஆ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் தலைவராக  யார் வந்தாலும் பேரினவாதிகளுக்கு எதிராக  அரசியல் செய்து தமிழருக்கு உரிமைகளை பெற்றுகொடுக்கும் வல்லமை  தமிழரசு கட்சிக்கோ மற்றய கட்சிகளுக்கோ இல்லாத நிலையில்,  ஏனப்பா மதவாதம் என்ற விஷக்கருத்துகளை  பேசி,   மட்டுப்படுத்தப்பட்ட  வாழும் உரிமைகளுடனும் கொடிய  யுத்தம் கொடுத்த பேரிழப்புகளின் பாதிப்புகளை சுமந்தவாறு  ஓரளவுக்காவது மகிழ்வாக வாழ துடிக்கும் மக்கள் மீது பிரிவினைகளை விதைத்து அவர்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்குகின்றீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

சிங்களவனால் தமிழனுக்கு தீர்வா???

அது ஒரு நாளும் இல்லை 

முதலில் சோனகர்கள் தற்போது உங்களைப் போன்ற தமிழ் கிறீஸ்தவர்கள். பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது.

பூனை குட்டியை நீங்கள் வைத்து கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களை ஏமாற்றலாமெல்லாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் அதில் கவனமாக இருக்கிறோம். 

தமிழர்கள் எப்போதும் சைவர்களுக்கு தீர்வு என்று கேட்டது கிடையாது. சிவபூமி சிவசேனை ஓன்றும் அரசியல் கட்சி அல்ல. 

அரசியாக கட்சி இல்லை. ஆனால் ஒரு அரசியல் திடடதுடன் இயங்குகிறார்கள் . உங்களை போன்றவர்கள் மறைமுகமாக உதவி செய்வதும் எங்களுக்கு தெரியும். 

வெளியில் இருந்து யாரும் உபதேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உதவி என்றவுடன் பல்லைக் காட்டிக் கொண்டு வந்து விடுவீர்கள்.

யாருக்காவது  ஐந்து சதம் குடுத்திருப்பிறீர்களோ தெரியவில்லை. நான் என்றால் வெளி நாட்டில் வாழும் எந்த அகதியிடமும் இந்த பிச்சை  காசை கேட்ட்தும் இல்லை பெற்றதும் இல்லை. உதவி செய்தவன் ஒரு நாளும் தம்படடமடிக்கமாடடான். இங்குள்ள  மக்களின் ரத்தத்தை காட்டி  வெளி நாடு சென்று தஞ்சம் பெற்றவர்களின் மன நிலை இதுதான்.நிச்சயமாக உங்கள் ஆலோசனை எங்களுக்கு தேவை இல்லை.  நலமுடன் வாழ்க.

5 hours ago, island said:

தமிழரசுக் கட்சியின் தலைவராக  யார் வந்தாலும் பேரினவாதிகளுக்கு எதிராக  அரசியல் செய்து தமிழருக்கு உரிமைகளை பெற்றுகொடுக்கும் வல்லமை  தமிழரசு கட்சிக்கோ மற்றய கட்சிகளுக்கோ இல்லாத நிலையில்,  ஏனப்பா மதவாதம் என்ற விஷக்கருத்துகளை  பேசி,   மட்டுப்படுத்தப்பட்ட  வாழும் உரிமைகளுடனும் கொடிய  யுத்தம் கொடுத்த பேரிழப்புகளின் பாதிப்புகளை சுமந்தவாறு  ஓரளவுக்காவது மகிழ்வாக வாழ துடிக்கும் மக்கள் மீது பிரிவினைகளை விதைத்து அவர்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்குகின்றீர்கள்.  

இதை நீங்கள் இப்போது தலைமைத்துவத்துக்காக மதத்தை முன்னிறுத்தி போட்டியிடும் தமிழ் (?) தலைமையிடம் தெரிவித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

@Cruso

IMF இடம் நாடு கையேந்தி உள்ளது உங்கள் கைகளுக்கு தெரியவில்லை. நாட்டின் தலைவர் IMF இற்கு பல்லை இழித்துக் கொண்டு IMF சொல்வதெற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு உலகெல்லாம் கடன் கேட்பது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

@Cruso

IMF இடம் நாடு கையேந்தி உள்ளது உங்கள் கைகளுக்கு தெரியவில்லை. நாட்டின் தலைவர் IMF இற்கு பல்லை இழித்துக் கொண்டு IMF சொல்வதெற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு உலகெல்லாம் கடன் கேட்பது தெரியவில்லை.

IMF ஒரு பக்கம் கிடக்கிறான். அது சரி நீங்கள் எவ்வளவு கடன் கொடுத்தீர்கள்?🤣

மேலே எனது கருத்துக்களுக்கு சும்மா down vote பண்ணிவிட்டு ஓடாமல் கருத்து எழுதுங்கள். நிறைய பேர் அப்படிபோடுகிறார்கள் அனால் ஏன் என்று எழுதுவதில்லை. உண்மை சுடத்தான் செய்யும். ? 😜

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2024 at 20:16, Cruso said:

நீங்கள் இப்படி எழுதுவதால் உண்மையை மறைக்க முடியாது. தலைமைத்துவ தெரிவு முடியட்டும். பின்னர் நான் என்ன நடக்குமென்பதை எழுதுகிறேன்.

இங்கு எனது நலன் என்று ஒன்றுமேயில்லை. எங்களை யாராவது இஸ்லாமியரின் வழியை பின்பற்ற தள்ளினால் அதன் பலனை அனுபவிப்பார்கள். 

உங்கள் கூற்று உண்மையானால் சுமந்திரன்  பா. உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்.  ஆகவே உங்கள் மதவாத  விசங்களை விதைக்காதீர்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

உங்கள் கூற்று உண்மையானால் சுமந்திரன்  பா. உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்.  ஆகவே உங்கள் மதவாத  விசங்களை விதைக்காதீர்கள்.
 
இது மத வாதம் இல்லை. தலைமுத்துவ போட்டியில் நடக்கும் உண்மையை சொல்லுகிறேன். 

நான் இங்கு மதவாதமாக எழுதவில்லை. எமது குருமார் போப்பணடவர், கர்தினால், பிஷப் எல்லோருஞ்யும்விமர்சித்து எழுதி இருக்கிறேன். யார் பிழை செய்தாலும் பிழைதான்.

அவர்கள் மற்ற மதத்தவரை மதிக்காவிடடாள் அதுவும் பிழை என்று தெளிவாக எழுதி இருக்கிறேன். கபித்தான் உடனானன கருத்தாடலில் விரிவாக எழுதியம் இருக்கிறேன். 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2024 at 02:30, Cruso said:

கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக்கணிக்கப்படும் நிலைமை.

இது பிழையான கருத்து  சுமந்திரனை புறக்கணிக்கும் காரணம்  கிறிஸ்த்தவன். என்பதற்காக அல்ல  அவரது செயல்பாடுகள்  ஐக்கிய தேசிய கட்சியின் செயல்கள போல் இருக்கிறது  தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சி இல்லை   அவர் ஐக்கிய தேசிய கட்சியில். தொடர்ந்து இருந்து இருக்கலாம் ஆனால் ரணில்  இவரை தமிழரசு கட்சிக்குள்ளே புகுத்தி இருக்கலாம் உடைப்பதற்க்காக  என்று கருதுகிறேன்   மேலும்  தமிழர்கள் அரசியலில் சமயம் பார்ப்பதில்லை இனம் தான் பார்க்கிறார்கள் அதாவது தமிழ்மொழியை பார்க்கிறோம்  செல்வாவையும். பல பாதிரியார்களையும்  சுத்த தமிழர்களாகப் பார்த்தோம். பார்ப்போம்  சுமத்திரன். சட்டத் தொழிலில் பாவிக்கும் பொய்யை  அரசியலில் பாவிப்பதை தவிர்ப்பது நல்லது  பாராளுமன்ற தேர்தலில் அடாவடித்தனங்களைச் செய்து  வென்றது போல்  கட்சித்தலைவர். பதவியையும் கைப்பற்ற முயற்சிகள் செய்யக்கூடாது   

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

நான் எழுதுவது தலைமைத்துவத்தின்  மதவாதத்தை பற்றியது. மற்றவர்கள் மேல்பூச்சாய் பூசி அப்படி இல்லை என்று எழுதலாம். உண்மையில் அப்படி இல்லை. இங்கு நான் சுமந்திரன் மக்களாலதெரிவு செய்யப்பட்ட்து பற்றியோ அவரது தலைமைத்துவ போட்டி பற்றியோ அல்ல. தலைமைத்துவம் எப்படி போகின்றது என்பது பற்றியதே.

அப்படி என்றால் அடுத்த தலைமைத்துவத்துக்கு ஒருவரை கட்ச் வளர்ந்திருக்க வேண்டும். சம்பந்தன் அவர்கள் சுமந்திரனைத்தான் உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ அடையாள படுத்தி இருந்தார். அப்படி திடீரென மாற்றுவதட்கு அங்குள்ளவர்கள் மதவாதத்தை பயன்படுத்தியதை பத்திரிகைகளிலும் பார்த்தேன்.

எனவே தலைமை பிழையானால் எல்லாமே பிழையாகத்தான் இருக்க போகின்றது. சுமந்திரனை நல்லவர் என்று சொல்ல வர வில்லை. அவரும் சாதாரண அரசியல்வாதியை போலத்தான் நடந்து கொள்கிறார்.

எப்படி இருந்தாலும் நாங்கள் எங்கள் உரிமை விடயத்தில் கவனமாக இருக்கிறோம். இந்தியாவில் என்ன நடக்குதென்று எல்லோருக்கும் தெரியும்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Cruso said:

எப்படி இருந்தாலும் நாங்கள் எங்கள் உரிமை விடயத்தில் கவனமாக இருக்கிறோம். இந்தியாவில் என்ன நடக்குதென்று எல்லோருக்கும் தெரியும்தானே. 

நன்றி ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அப்படி என்றால் அடுத்த தலைமைத்துவத்துக்கு ஒருவரை கட்ச் வளர்ந்திருக்க வேண்டும்.

அவர்கள் எல்லோரும் விரும்புகிறார்கள் இல்லை  ஒரு சாதாரண பிரஜை. வளர்ந்து தலைவராக வருவதை   ஏனெனில் அவர்களுக்குகான  வாய்ப்புகள் இல்லாமல் போகும்   என்பதால் 

எந்தவொரு தமிழ்கட்சியும் இளைஞர்களை இணத்து  தலைவர்கள் ஆக்கும் நோக்கில் வளர்த்து எடுக்கவில்லை  தன்னிச்சையாக இணைத்து வளர்த்து வரும் இளைஞர்களை கூட ஒதுக்கி வைக்கிறார்கள்  இளைஞர்களின் அனுபவம் வளர்வதற்கு சந்தர்ப்பங்கள். வழங்கப்படுவதில்லை 

அந்த காலத்தில் எங்கள் முன்னோர்கள் சட்டத்தரணிகள் படித்தவர்கள். என்று சொல்லி  இவர்களை வளர்த்து எடுத்து விட்டார்கள்  இவர்களுக்கு இரண்டு வருமானம் ஒன்று சட்டத் தொழில் மூலம் மற்றது பாராளுமன்ற கொடுப்பனவுகள்    இதில் ருசி கண்டு விட்டார்கள்   எனவேதான் புதிய இளைய தலைவர்கள் உருவாக விரும்புகிறார்கள் இல்லை  இந்த செயல்கள இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடையமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது 

தமிழ் மக்களுக்குகாக  உழைப்பதற்கு இன்றைய நிலையில் ஒரு தமிழ் தலைவருமில்லை  இது தமிழ் மக்களின் பிழையா?? இல்லை  தமிழ் தலைவர்களின் பிழைய?? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Cruso said:

இதை நீங்கள் இப்போது தலைமைத்துவத்துக்காக மதத்தை முன்னிறுத்தி போட்டியிடும் தமிழ் (?) தலைமையிடம் தெரிவித்தால் நல்லது.

தலைமைத்துவத்தை பற்றியும் அதன் தற்போதைய நடைமுறை விடயங்கள்  குறித்தும் எனக்கு தெரியாது.

ஆனால்,  ஈழத்தமிழ்  சாதாரண மக்களிடையே  மதவாதம், மத வெறி பெரியளவில் இருக்கவில்லை,  என்பதே எனது அபிப்பிராயம். மதங்களை கடந்து  தமிழர்களாகவே சினேகித பூர்வமாக  வாழ்ந்து வருகின்றனர்.  

ஆனால், சமீபத்தில் இந்திய ஆர். எஸ்.எஸ், பா.ஜ.க போன்றன  மதவாத நச்சு செடிகளை  ஈழத்தமிழரிடையே விதைக்க  முயன்று வருகின்றனர்.  அதற்கு உள்ளூர் தமிழர்கள் சிலரையும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் அஜென்டாவே   சச்சிதானந்தம் போன்றவர்கள் பரப்பும் நச்சுக்கருத்துக்களும் சமீபத்திய சில பிரச்சனைகளும்.  

இருந்தாலும்,  இது ஈழத்தமிழரினையே எடுபடாது என்பதே எனது அனுமானம்.  ஆகவே இதனை ஒரு கட்சிக்குள்ளான இரு நபர்களின் தலைமைத்துவத்துக்கன  போட்டி என்ற வகையில் எடுப்பதே சரியானது.  இதற்குள் நீங்கள் மதத்தினை வலிந்து  இழுப்பது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தலாம் என்பது எனது அவதானிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

பன்மொழிப் புலமை, சட்டவாளர் இதெல்லாம் தலைமைக்கு வெளிப் பூச்சுகளே... இனம் சார்ந்து சிந்திக்கும், தம் இன மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்யும் தலைமை வேண்டும். கோட்டுப் போட்டவர் தான் தலைமைக்குரியவர் என்ற மனநிலை மாற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

Edited by theeya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனித்துவமாக...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

ஆனால்,  ஈழத்தமிழ்  சாதாரண மக்களிடையே  மதவாதம், மத வெறி பெரியளவில் இருக்கவில்லை,  என்பதே எனது அபிப்பிராயம். மதங்களை கடந்து  தமிழர்களாகவே சினேகித பூர்வமாக  வாழ்ந்து வருகின்றனர்.  

நான் உங்கள் கருத்துக்கள் சிலவற்றுடன் உடன்படுகின்றேன். இனவாதம், மதவாதம் மட்டுமல்ல பிரதேச வாதமும் இருந்தது என்பது என் கருத்து. புலிகள் காலத்திலும் அது இருந்தது என்பது உண்மை. நீங்கள் விரும்பினால் நான் இதனை பெயர்களுடன் ஆதார பூர்வமாக எழுதுவேன். உண்மையாக நடந்தவற்றை எழுதலாம். 

நான் இங்கு கிறிஸ்தவர்களை பற்றி மத தலைவர்களாக இருக்கலாம், அரசியல் தலைவர்களாக இருக்கலாம் விமர்சிக்காமல் இருந்ததில்லை. ஆனால் இந்து என்றவுடன் கொதித்தெழுகிறார்கள் பாருங்கள். அதுதான் மத வாதம்.

8 hours ago, theeya said:

பன்மொழிப் புலமை, சட்டவாளர் இதெல்லாம் தலைமைக்கு வெளிப் பூச்சுகளே... இனம் சார்ந்து சிந்திக்கும், தம் இன மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்யும் தலைமை வேண்டும். கோட்டுப் போட்டவர் தான் தலைமைக்குரியவர் என்ற மனநிலை மாற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

அதட்காக ஒரு இந்து தமிழ் (?) தலைமைதான் வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை. அதுதான் தலைமை போட்டியில் நடக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக சுமந்திரனே தெரிவுசெய்யப்படுவார் என அறியக்கூடியதாகவுள்ளது! நாளை தேர்தல் நடைபெற்று வெற்றியாளரை அறிவிக்கும்போது குழப்பம் விளைவித்து காவல்துறை அழைக்கப்பட, காவல்துறையின் உதவியுடன் சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டார் என காட்டுவதற்காக ஒரு தரப்பு தயாராகிவருகின்றது. 

அய்பிசி,  இன்பத் தமிழ் ஒலி போன்ற புலம்பெயர் ஊடகங்கள் சிறீதரனுக்காக தமது இறுதிக்கட்ட பரப்புரையை முடக்கி விட்டுள்ளன. ஏலவே இவர்களால் கொம்புசீவிவிடப்பட்டுள்ள கஜே-கயே குழு, சீவி குழு வரிசையில் இனி சிறி குழு ஒன்று உருவாக்கப்டப்போகின்றது.

இறுதியாக என்னுடைய பார்வையில் சுமந்திரன் வேறு சிறீதரன் வேறு அல்ல. கடந்த சில மாதங்கள் வரை சிறீதரன் சுமந்திரனுடன் ஒத்துப்போனவர் தான். இப்ப பதவிக்காக புலம்பெயர் போலி தமிழ்த் தேசியவாதிகளுடைய ஆதரவில் சிறீதரன் தமிழ்த் தேசியத்தின் காவலனாக போலி உருவெடுத்து நிற்கின்றார்.  என்னைப் பொறுத்தவரையில் சிறீதரன் தான் தலைவராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த போலினதும் போலிகளினதும் உண்மை முகம் வெளிப்படும். 

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வாலி said:

என்னைப் பொறுத்தவரையில் சிறீதரன் தான் தலைவராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

இதுவரை தலைவராக இருந்த மாவை என்ன தான் சாதித்துள்ளார்?

அவர் தான் தலைவர என்று சொன்னால்த் தான் தெரியும்.

அவரவர் தலைவர்களாகவே செயற்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வாலி said:

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக சுமந்திரனே தெரிவுசெய்யப்படுவார் என அறியக்கூடியதாகவுள்ளது! நாளை தேர்தல் நடைபெற்று வெற்றியாளரை அறிவிக்கும்போது குழப்பம் விளைவித்து காவல்துறை அழைக்கப்பட, காவல்துறையின் உதவியுடன் சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டார் என காட்டுவதற்காக ஒரு தரப்பு தயாராகிவருகின்றது. 

அய்பிசி,  இன்பத் தமிழ் ஒலி போன்ற புலம்பெயர் ஊடகங்கள் சிறீதரனுக்காக தமது இறுதிக்கட்ட பரப்புரையை முடக்கி விட்டுள்ளன. ஏலவே இவர்களால் கொம்புசீவிவிடப்பட்டுள்ள கஜே-கயே குழு, சீவி குழு வரிசையில் இனி சிறி குழு ஒன்று உருவாக்கப்டப்போகின்றது.

இறுதியாக என்னுடைய பார்வையில் சுமந்திரன் வேறு சிறீதரன் வேறு அல்ல. கடந்த சில மாதங்கள் வரை சிறீதரன் சுமந்திரனுடன் ஒத்துப்போனவர் தான். இப்ப பதவிக்காக புலம்பெயர் போலி தமிழ்த் தேசியவாதிகளுடைய ஆதரவில் சிறீதரன் தமிழ்த் தேசியத்தின் காவலனாக போலி உருவெடுத்து நிற்கின்றார்.  என்னைப் பொறுத்தவரையில் சிறீதரன் தான் தலைவராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த போலினதும் போலிகளினதும் உண்மை முகம் வெளிப்படும். 

அப்படியான கிரிமினல் யோசனைகள் எல்லாம் சிறிதரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வராது. அது கிரிமினல்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வரும். அதற்காகவே இப்படியொரு செய்தியை வஅவர்களே வெளியிட்டிருக்கலாம்.கடந்த பொதுத்தேர்தலிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்து. ஆனால் அப்போது சிறிதரன் சுமத்திரனோடு ஒட்டி  உறவாடியபடியால் ஒன்றும் தெரியாத மாதிரி மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக சுமந்திரனே தெரிவுசெய்யப்படுவார் என அறியக்கூடியதாகவுள்ளது! நாளை தேர்தல் நடைபெற்று வெற்றியாளரை அறிவிக்கும்போது குழப்பம் விளைவித்து காவல்துறை அழைக்கப்பட, காவல்துறையின் உதவியுடன் சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டார் என காட்டுவதற்காக ஒரு தரப்பு தயாராகிவருகின்றது. 

அய்பிசி,  இன்பத் தமிழ் ஒலி போன்ற புலம்பெயர் ஊடகங்கள் சிறீதரனுக்காக தமது இறுதிக்கட்ட பரப்புரையை முடக்கி விட்டுள்ளன. ஏலவே இவர்களால் கொம்புசீவிவிடப்பட்டுள்ள கஜே-கயே குழு, சீவி குழு வரிசையில் இனி சிறி குழு ஒன்று உருவாக்கப்டப்போகின்றது.

இறுதியாக என்னுடைய பார்வையில் சுமந்திரன் வேறு சிறீதரன் வேறு அல்ல. கடந்த சில மாதங்கள் வரை சிறீதரன் சுமந்திரனுடன் ஒத்துப்போனவர் தான். இப்ப பதவிக்காக புலம்பெயர் போலி தமிழ்த் தேசியவாதிகளுடைய ஆதரவில் சிறீதரன் தமிழ்த் தேசியத்தின் காவலனாக போலி உருவெடுத்து நிற்கின்றார்.  என்னைப் பொறுத்தவரையில் சிறீதரன் தான் தலைவராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த போலினதும் போலிகளினதும் உண்மை முகம் வெளிப்படும். 

நேற்றைய தொலைக்காட்சியில் மூவரது ஒளி பரப்பவும் வெளியாகியது. ஸ்ரீதரனும் சுமந்திரனும் சாதாரண தொனியில் பரபரப்பிலாமல் பேசினார்கள்.

ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத் யோகேஸ்வரன் பேசும்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். புலம்பெயர் அமைப்புக்கள் ஸ்ரீதரனை வாபஸ் வாங்கும்படி  கூறியதாகவும் அதனால் தான் போட்டியிட முன் வந்ததாகவும் கூறினார். இப்போது ஸ்ரீதரன் போட்டியிடுவதால் தான் அவருக்கு வாக்களிக்க போவதாகவும் கூறினார்.

இனி போட்டி முடிந்தவுடன் நாம் தமிழர் சமாதானமாக ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்ற வார்த்தைகளை கேட்கலாம். ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறையை இருக்கப்போவது என்பது சவாலுக்குரிய பிரச்சினையே. 

  • கருத்துக்கள உறவுகள்

articles_hpwn01SCXCb3Qykk3VeH.jpg?resize

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மும்முனை போட்டி இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெறவுள்ளது.

அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்   ஆகிய மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்ப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.  .

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன இன்று திருகோணமலையில் கூடவுள்ளது.

அதன்படி பொதுக்குழுவில் இருந்து 325 பேரும், மத்திய செயற்குழுவில் இருந்து 50 பேரும் இணைந்து இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1366672

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

news-04-6.jpg

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு வாக்கெடுப்பு முடிவடைந்து, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) காலை கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆரம்பமாகிய நிலையில் தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், S. ஶ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.

தலைவரை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற வாக்கெடுப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/288895

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு எண்ணுகின்ற இடத்திற்கு... சுமந்திரனை விடாதேங்கோ. animiertes-gefuehl-smilies-bild-0424.gif animiertes-gefuehl-smilies-bild-0129.gif  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியை பக்குவமாக வழிநடத்தக்கூடிய தலைவர் சிறிதரன் - இரா.சம்பந்தன் தெரிவித்தார்

Vhg ஜனவரி 21, 2024
Photo_1705802699288.jpg

இலங்கைத்தமிழரசுகட்சி தலைவராக பக்குவமாக தமிழ் மக்களை கூட்டிணைத்துக்கொண்டு வழிநடத்தக்கூடிய தலைவர் சிவஞானம் சிறிதரனே அவருக்கே எனது முழு ஆதரவும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும், திருகோணமலை எம் பியுமான இரா .சம்பந்தன் நேற்று(20-01-2024) தெரிவித்தார்.

தமிழ்சுகட்சி தலைவர் பதவிக்காக இன்று(21-01-2024) திருகோணமலையில் உங்கள் மாவட்டத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் உங்கள் ஆதரவு யாருக்கு என ஊடகவியலாளர் அவரின் கொழும்பு இல்லத்திற்கு சென்று நேரடியாக கேட்டபோது இதனை கூறினார் அது தொடர்பாக மேலும் அவர் கருத்து கூறுகையில்.

தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு என்றுமில்லாத வகையில் மூன்றுபேர் போட்டியிடுகிறார்கள் இந்த நிலமை கட்சிக்கு உகந்தது இல்லை என்பதை கடந்த (10), ம் திகதி என்னை சந்திக்க வந்த சிறிதரன், சுமந்திரன் யோகேஷ்வரன் மூன்று பேருடனும் கூறினேன் அவர்கள் பேசி ஒருவருக்கு விட்டுக்கொடுப்பதா கூறினார்கள் ஆனால் அந்தவிதமாக அவர்கள் செய்யவில்லை இருந்தபோதும் யோகேஷ்வரன் சிறிதரனுக்கு விட்டுக்கொடுப்பேன் என என்னிடம் கூறியிருந்தார் அது நல்ல விடயம்.

மற்றப்படி ஏனய சிறிதரன் சுமந்திரன் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுக்கவில்லை என்பது வருந்த தக்க சம்பவம். இருந்தபோதும் பொதுச்சபையில் உள்ளவர்கள் அவர்களுக்கு பொருத்தமான ஒருவரை வாக்களித்து தலைவராக தெரிவார்கள்.அது அவர்களின் உரிமை.

என்னைப்பொறுத்தவரையில் சிறிதரன் தமிழ் மக்களை கூட்டிணைத்து கருமங்களை வடக்கு கிழக்கு முழுவதும் செய்யக்கூடிய பக்குவம் அவருக்கு இருக்கிறது தமிழ் மக்களை கொள்கைரீதியாக அரவணைக்கும் பக்குவமும் உள்ளது அதை அவருடைய செயல்பாடுகளில் இருந்து அவதானித்துள்ளேன். இன் நிலையில் சிறிதரனே தலைவராக வரவேண்டும் என நான் நினைக்கிறேன் இருந்தபோதும் எனக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாதபோதும் 

தமிழரசுகட்சி் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் நின்று சிறிதரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் நிலைப்பாடும் என்றார்.

https://www.battinatham.com/2024/01/blog-post_864.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸபில் இருந்து

1. சிவஞானம் சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. சீ.யோகேஷ்வரன்:00

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:42

தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

IMG20220416104233.jpg?resize=720,375&ssl

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கினங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.

இன்னிலையில் வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1366693

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.