Jump to content

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!

 

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தை மற்றும் நுவரெலியா ஆகிய பொதுச்சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், நேற்று நுவரெலியாவில் மொத்த காய்கறிகள் விலைகள்…

காரட் 1 கிலோகிராம் 1,450 ரூபாய்

ப்ரோக்கோலி 1 கிலோகிராம் 3,600 ரூபாய்

முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 570 ரூபாய்

முள்ளங்கி 1 கிலோகிராம் 160 ரூபாய்

கிழங்கு 1 கிலோகிராம் 370 ரூபாய்

நோகோல் 1 கிலோகிராம் 270 ரூபாய்

குடைமிளகாய் சிவப்பு 1 கிலோகிராம் 800 ரூபாய்

குடைமிளகாய் மஞ்சள் 1 கிலோகிராம் 700 ரூபாய்

துளசி 1 கிலோகிராம் 2600 ரூபாய்

சீன முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 1,300ரூபாய்

சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 3,200ரூபாய்

செலரி 1 கிலோகிராம் 700 ரூபாய்

கொத்தமல்லி தழை 1 கிலோகிராம் 450ரூபாய்

பனிப்பாறை 1 கிலோகிராம் 2300 ரூபாய்

சாலட் 1 கிலோகிராம் 1600ரூபாய்

சிவப்பு சாலட் 1 கிலோகிராம் 1800ரூபாய்

மிஞ்சி 1 கிலோகிராம் 900ரூபாய்

இதேவேளை, தம்புள்ளை மொத்த விற்பனை நிலையத்தில் பழங்களின் மொத்த விலைகள் வருமாறு…

சர்க்கரை வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாய்

புளி வாழைப்பழம் 1 கிலோகிராம் 110 ரூபாய்

கார் 1 கிலோகிராம்290 ரூபாய்

அம்புன் 1 கிலோகிராம் 190 ரூபாய்

கொய்யா 1 கிலோகிராம் 280 ரூபாய்

தர்பூசணி 1 கிலோகிராம் 140 ரூபாய்

அன்னாசிப்பழம் 1 கிலோகிராம் 400 ரூபாய்

அல்போன்சா 1 கிலோகிராம் 1700 ரூபாய்

அவகேடோ 1 கிலோகிராம் 290 ரூபாய் ஆகிய விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

http://www.samakalam.com/உச்சம்-தொட்ட-மரக்கறி-வில/

 

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.pngமுருங்கக்காய் ஒரு கிலோ3000 ரூபாயாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றில் பலதும் வெளிநாட்டு இறக்குமதி போல் உள்ளது. ஏன் மக்கள் உள்ளூர் மரக்கறிகளை தேடுவதில்லையா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

IMG-5698.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

இவற்றில் பலதும் வெளிநாட்டு இறக்குமதி போல் உள்ளது. ஏன் மக்கள் உள்ளூர் மரக்கறிகளை தேடுவதில்லையா?!

 

எனது வினாவும் மக்களினால் தமது காய்கறி தேவையின் குறிப்பிடத்தக்களவு பகுதியை வீட்டுதோட்டம் மூலம் பூர்த்தி செய்யமுடியாதா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

 

எனது வினாவும் மக்களினால் தமது காய்கறி தேவையின் குறிப்பிடத்தக்களவு பகுதியை வீட்டுதோட்டம் மூலம் பூர்த்தி செய்யமுடியாதா? 

On 16/1/2024 at 10:17, விசுகு said:

இவற்றில் பலதும் வெளிநாட்டு இறக்குமதி போல் உள்ளது. ஏன் மக்கள் உள்ளூர் மரக்கறிகளை தேடுவதில்லையா?!

நாங்கள் வெளிநாடுகளுக்கு போய்த்தான் உழுவம்.  உள்ளூரிலை   உழமாட்டம் கண்டியளோ....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் வெளிநாடுகளுக்கு போய்த்தான் உழுவம்.  உள்ளூரிலை   உழமாட்டம் கண்டியளோ....:cool:

அப்படியானால் நாங்கள் இங்கே முருங்கை காய் முருங்கை இலை பாவக்காய்  மரவள்ளி கிழங்கு புடலங்காய் வெங்காயப்பூ கத்தரிக்காய் வெண்டிக்காய் பூசணிக்காய் கருவேப்பிலை மற்றும் பலவற்றையும் தாயக மரக்கறிகளை தானே என்ன விலை கொடுத்தும் வாங்குகிறோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2024 at 14:23, கிருபன் said:

பனிப்பாறை 1 கிலோகிராம் 2300 ரூபாய்

 

இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை

Ice berg or lettuce

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை

இன்னும் இரண்டு சிங்களப் பெயராக்கும் என்று விட்டுவிட்டேன்!

 

கார் 1 கிலோகிராம்290 ரூபாய்

அம்புன் 1 கிலோகிராம் 190 ரூபாய்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை

wk-01-blumenkohl_rdax_850x565s.jpg

👆 சிலவேளை இதுவாக இருக்குமோ.... 👆

  • Like 1
Link to comment
Share on other sites

இலங்கையில் காய்கறிகளின் விலை ஓரளவேனும் சீரானதாக இருந்ததில்லை. 

பருவ காலங்களை ஒட்டிய பயிர்ச்செய்கை இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம். நவீன முறையில் வெயில் அதிகமாக உள்ள இலங்கையில் குறுகிய இடத்தில் குறைந்த நீர் வசதியுடன் வருடம் முழுவதும் மரக்கறி பயிர்செய்யலாம். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:
2 hours ago, உடையார் said:

இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை

wk-01-blumenkohl_rdax_850x565s.jpg

👆 சிலவேளை இதுவாக இருக்குமோ

Glacier

கூகிள் பண்ணிப் பார்த்த போது இப்படி வருகிறது.

1 minute ago, இணையவன் said:

இலங்கையில் காய்கறிகளின் விலை ஓரளவேனும் சீரானதாக இருந்ததில்லை. 

பருவ காலங்களை ஒட்டிய பயிர்ச்செய்கை இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம். நவீன முறையில் வெயில் அதிகமாக உள்ள இலங்கையில் குறுகிய இடத்தில் குறைந்த நீர் வசதியுடன் வருடம் முழுவதும் மரக்கறி பயிர்செய்யலாம். 

பயிர்ச் செய்கைக்கு தேவையான மூலங்கள் விலை ஏறியபடியால்த் தான் இப்படி விலை ஏறி உள்ளது.

70 களின் ஆரம்பத்தில் சிறிமா கொண்டுவந்த இறக்குமதி தடையால் பல வீடுகளிலும் இருந்த பூக்கன்றுகளை எல்லாம் வெட்டி அவரவர் தேவைக்கு தோட்டம் செய்தனர்.

இனிமேலும் இப்படி தொடங்கலாம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

அப்படியானால் நாங்கள் இங்கே முருங்கை காய் முருங்கை இலை பாவக்காய்  மரவள்ளி கிழங்கு புடலங்காய் வெங்காயப்பூ கத்தரிக்காய் வெண்டிக்காய் பூசணிக்காய் கருவேப்பிலை மற்றும் பலவற்றையும் தாயக மரக்கறிகளை தானே என்ன விலை கொடுத்தும் வாங்குகிறோம்.

நாங்கள் கூடுதலாக ஜேர்மன் கடைகளில் விற்கும் மரக்கறிகளையே சமைத்து சாப்பிடுவோம். சுவையாக சமைத்தால் மேற்கத்திய மரக்கறிகள் நன்றாகத்தான் இருக்கும்.

ஈழத்தில் நமது பிரதேசங்களில் வேலியில் படரும் செடி கொடியும் உணவுதான். அதனால் தான் எம் பிரதேசங்கள் எவ்வளவு அனர்த்தங்களை சந்தித்தும் பட்டினி சாவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயம் said:

 

எனது வினாவும் மக்களினால் தமது காய்கறி தேவையின் குறிப்பிடத்தக்களவு பகுதியை வீட்டுதோட்டம் மூலம் பூர்த்தி செய்யமுடியாதா? 

இப்ப வெளிநாட்டுக்காசை எடுத்து செலவழிச்சு வாழுற புத்தி வந்திட்டுது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்காத சனங்கள்தான் உழைத்து சீவிக்குது. எத்தனை காணிகள் சும்மா கிடக்குது. தோட்ட வேலைக்கு ஆள் தேவை என்றால் ஒருத்தரும் வருகிறரா;கள் இல்லையாம். தோட்டக்காரர்கள் தாங்கள் மட்டும் கஸ்ரப்பட்டு உழைக்கறதால  அளவாகச் செய்வதால் உற்பத்தி குறைகிறது. 30 -35 வருடங்களுக்கு முன்னால் வெங்காயம் வெட் வருபவர்கள்  கோழிக்கால்  வெங்காயத்தைக் கொண்டு போய்  சமைப்பார்கள்.(விளையாத வெங்காயம்.). அத மட்டுமல்ல வெங்காய அறுவடை முடிந்த பின்னர் அங் கே சிதறிக்கிடக்கும் வெங்காயங்களைச் இலவலசமாக எடுத்துச் செல்வார்கள். பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் கிணறுகசை; சுற்சி மிளகாய் நடுவார்கள்  அவற்றில் வரும் காய்கள் அவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தம். எமது முன்னோர்கள் படிக்கா விட்டாலும் எவ்வளவு மனிதாபிமானத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழ். ஒவ்வொருவரும் தங்கள் வீட்ஐடச் சுற்றி வீட்டுத் தோட்டம் லவத்தாலே அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிடைக்கும். நெல் அறுவடை முடிந்த பின்னர் எலிப் பொந்தில் சேகரித்து வைக்கப்பட் நெல்மணிகளை எத்தனை பேர் சேகரித்திருக்கிறார்கள். இப்பொழுது உலகுக்கு உணவு தரும் விவசாயத்தைக் கேவலமான தொழிலாகப் பார்த்ததால் வந்த வினை.
உழுதுண்டு வாழ்வானனே வாழ்வான்- மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர். 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2024 at 14:47, விசுகு said:

இவற்றில் பலதும் வெளிநாட்டு இறக்குமதி போல் உள்ளது. ஏன் மக்கள் உள்ளூர் மரக்கறிகளை தேடுவதில்லையா?!

இதில் அநேகமானவை உள்ளூர் மரக்கறிதான். முன்னர் பாதைகளில் வைத்து  விட்ப்பார்கள். இப்போது பாதைகளும் வெறிச்சோடி கிடக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் உருளைக்கிழங்கு, பருப்பு இவை இரண்டையும் சமைத்து காலத்தை ஓட்டுகின்றார்கள். 

பெரியவர்களுக்கு வண்டி வைப்பது தொடக்கம் எல்லோருக்கும் மலச்சிக்கல் ஏற்படுவது வரை இது ஒரு சமுதாயத்தையே நீண்ட காலத்தில் ஆரோக்கியம் குன்றியதாக மாற்றிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vegitableJ_d-1.jpg?resize=670,375&ssl=1

வரலாறு காணாத விலை உயர்வு : மரக்கறிகளின் விலையை தீர்மானித்தது யார்?

வியாபாரிகள் தீர்மானித்த மரக்கறிகளின் விலையை விவசாயிகளின் தீர்மானத்திற்கேற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை ரூ.2,500 ஆக உயர்ந்து வரலாற்றில் பதிவான அதிகூடிய விலையை பதிவு செய்துள்ளது.

மேலும் போஞ்சி, கறி மிளகாய், வெண்டைக்காய், லீக்ஸ் மற்றும் கோவா போன்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், காய்கறி விலையை நிர்ணயிப்பவர் விவசாயி என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1366335

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

24 கரட் சுத்தமான தங்கம். 😂

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தோட்டத்தில்தான் எனது சமையலுக்கு தேவையான பல வகை கீரைகள்,  மரக்கறிகள் & பழங்களை விளைவிக்கின்றேன், பொழுது போகின்றது, உடம்புக்கும் நல்ல உடற் பயிற்ச்சி, 

இதை இலங்கையில் சர்வ சாதரணமாக செய்யலாம் எமது மண் & கால நிலையுடன் ஓப்பீடும் போது

21 hours ago, இணையவன் said:

இலங்கையில் காய்கறிகளின் விலை ஓரளவேனும் சீரானதாக இருந்ததில்லை. 

பருவ காலங்களை ஒட்டிய பயிர்ச்செய்கை இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம். நவீன முறையில் வெயில் அதிகமாக உள்ள இலங்கையில் குறுகிய இடத்தில் குறைந்த நீர் வசதியுடன் வருடம் முழுவதும் மரக்கறி பயிர்செய்யலாம். 

 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2024 at 12:15, உடையார் said:

இது என்ன மரக்கறி??? இதுவரை கேள்விப்பட்டதில்லை

என‌க்கும் தெரியாது உடையார் அண்ணா...........

58 minutes ago, உடையார் said:

எனது தோட்டத்தில்தான் எனது சமையலுக்கு தேவையான பல வகை கீரைகள்,  மரக்கறிகள் & பழங்களை விளைவிக்கின்றேன், பொழுது போகின்றது, உடம்புக்கும் நல்ல உடற் பயிற்ச்சி, 

இதை இலங்கையில் சர்வ சாதரணமாக செய்யலாம் எமது மண் & கால நிலையுடன் ஓப்பீடும் போது

 

வாழ்த்துக்க‌ள்🙏🥰.............என‌க்கும் செய்ய‌ ஆசை தான்.............நான் இருக்கும் இட‌த்தில் வெக்கை கால‌த்தில் நிறைய‌ ப‌ழ‌ம் சும்மா புடுங்கி சாப்பிட‌லாம்.............முந்தி ம‌ர‌க்க‌றிக‌ள் நிறைய‌ வைத்து இருந்த‌வை அதை செய்ய‌ ஆட்க‌ள் இல்லை.......இப்போது த‌னிய‌ ப‌ழ‌ங்க‌ள் தான் உடையார் அண்ணா............வெக்கை கால‌ம் வ‌ரும் போது வீடியோ பிடிச்சு உங்க‌ளுக்கு அனுப்புறேன்....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புலவர் said:

நெல் அறுவடை முடிந்த பின்னர் எலிப் பொந்தில் சேகரித்து வைக்கப்பட் நெல்மணிகளை எத்தனை பேர் சேகரித்திருக்கிறார்கள்.

புலவர் ஒரு பகுதி இந்த எலிகளை பிடிப்பதற்கு மண்வெட்டி தடி பொல்லுகளுடன் நிற்பார்கள்.

அவர்களுடன் வந்த பெண்களை புத்துக்குள் உள்ள நெல்லை அள்ள

ஆண்கள் எலிகளை அடித்து பிடித்து கொண்டு போய் சமைப்பார்கள்.

எலி என்றவுடன் வீடுகளில் ஓடித் திரியும் எலிகளைத் தான் இப்போதைய ஆட்களுக்கு தெரியும்.

புத்தெலிகளை கண்டறிந்திருக்க மாட்டார்கள்.

தைப்பொங்கலுக்கு அரிசி வாங்கிப் பொங்குவதில்லை.

புதிர் எடுத்து குத்தி வந்த அரிசியில்த் தான் பொங்குவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

எனது தோட்டத்தில்தான் எனது சமையலுக்கு தேவையான பல வகை கீரைகள்,  மரக்கறிகள் & பழங்களை விளைவிக்கின்றேன், பொழுது போகின்றது, உடம்புக்கும் நல்ல உடற் பயிற்ச்சி, 

2015 வரை நாங்களும் ஓரளவுக்குத் தேவையான மரக்கறி வகைகள் தோட்டம் செய்தோம்.

பலருக்கும் கொடுத்து குளிர் காலத்திலும் பாவிப்பதற்காக இன்னொரு குளிர்சாதன பெட்டியும் வாங்கி மேலதினமாக வருவதை வெட்டிவெட்டி பொதி செய்து வைத்திருந்தோம்.

2015 இன் பின் கோடை விடுமுறைகளுக்கு வீட்டில் நிற்பது இல்லை என்றே சொல்லலாம்.

தற்சமயம் கோடையிலும் நிற்பதில்லை குளிர் காலங்களிலும் நிற்பதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி விலை: வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் கோரிக்கை

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர் கனமழையால் இதுபோன்ற நிலை ஏற்படும் என முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை அமைச்சர் ஊக்குவித்துள்ளார்.

விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சையும் பலர் திட்டுகிறார்கள். கனமழையால் மரக்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது,” என்றார்.

இதற்கு தீர்வாக வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/288577

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.