Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!

spacer.png

ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார்.

spacer.png

அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்த போதிலும், இந்த தென்னிந்திய கலைஞர்கள் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி நிதியுதவி செய்தார்களா? என்று அவரைக் கேள்வி எழுப்பும் அவரது அரசியல் எதிரிகளின் விமர்சனத்திற்கு அவர் ஆளாகியுள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அவதியுறும் இவ்வேளையில்,ஜீவன் தொண்டமான் ஏன் தேசிய பொங்கல் விழாவை இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாட நடவடிக்கை எடுத்தார்? என ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) பசறை அமைப்பாளர் லெட்சுமணர் சஞ்சய் கேள்வியெழுப்பியுள்ளார்.

spacer.png

நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ளதோடு, பல குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

மக்கள் 100,000 க்கும் அதிகமான வாக்குகளை அளித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவர்களுக்கான சேவைகளை பெற்றுக் கொடுத்தனர்.

ஆனால், இவ்வாறான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருகிறார் ஜீவன் தொண்டமான். வருகைக்கான பணம் எங்கிருந்து வந்தது? இவ்வாறு மக்களின் பணத்தை வீண் விரயம் செய்தமைக்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜீவன் தொண்டமான் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகைகளை அழைப்பதற்கு பதிலாக, உள்ளூர் கலைஞர்களை கலந்துகொள்ள ஊக்கப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.samakalam.com/நடிகைகளால்-சிக்கலில்-சிக/

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல் விழா குறித்த சர்ச்சைகளுக்கு ஜீவன் தொண்டமான் விளக்கம்!

தென்னிந்திய நடிகைகள் பலரின் பங்குபற்றுதலுடன் அண்மையில் ஹட்டனில் இடம்பெற்ற ‘தேசிய தைப் பொங்கல்’ விழா தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார்.

jeewan-news.jpg

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் திணைக்களம் ஆகியன இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான கொண்டாட்டம் நடத்தப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஜீவன் தொண்டமான் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொங்கல் விழாவிற்கு அதிகளவு செலவிடவில்லை செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை  செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அது அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தமிழ்நாட்டுடன் காணப்படும் நீண்ட கால உறவுகளின் அடிப்படையில் தாம் நடிகைகளை அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகைகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர் . நடிகைகள் தங்களது உரைகளில் அர்த்தபூர்வமான பல விடயங்களை எடுத்துரைத்தனர். பெண்களை வலுவூட்டல், பிள்ளைகளின் பாடசாலை கல்வி போன்றவற்றை அவர்கள் தங்களது உரைகளில் வலியுறுத்தியதாக அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார். சிலர் பெண் ஆளுமைகளை மலினப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தேசிய தைப்பொங்கல் விழா அனைத்து சமூகங்களின் மீதான அரசாங்கத்தின் கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலானது என அவர்குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/289279

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா கவர்ச்சி  மூலம் அரசியலில் எதுவும் செய்யலாம் என்பது தமிழினத்திற்கு கிடைத்த சாபங்களில் ஒன்று....😎

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் அடுத்த தடவை நடிகைகளை. விட்டுட்டு நடிகர்களை கூப்பிடனும் 🤣😂 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!

அட நான் ஏதோ நடகைகளை தள்ளிக் கொண்டு போட்டார் என நினைத்தேன்.

இது பணப் பிரச்சனையாக இருக்கே.

இந்தியாவின் கதை வசனம் தயாரிப்பு டைரக்சன்.

இதில எங்க வெறும் நடிகரை போட்டு கேள்விகள்?

  • கருத்துக்கள உறவுகள்

யேமனுக்கு கடற்படை கப்பலை அனுப்புவது எந்த பணத்தில்?

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்து வைத்த அமைச்சர்  ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

அப்படியென்றால் அடுத்த தடவை நடிகைகளை. விட்டுட்டு நடிகர்களை கூப்பிடனும் 🤣😂 

நடிகர்களை வைச்சு நாங்கள் என்ன செய்யிறது.....ஜீவன் தொண்டமான் சீற்றம் ...வரசகேசரியில் தலைப்பு செய்தி 

4 hours ago, Kapithan said:

கொடுத்து வைத்த அமைச்சர்  ☹️

எனக்கும் லைட்டா வயிறு எரிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

எனக்கும் லைட்டா வயிறு எரிகிறது.

 

உதுக்குத்தான் சொன்னவையல் இணக்க அரசியல் செய்து இணைந்து கொள்ளுங்கள் என்று ....நாங்கள் கண்டு கொள்ளவில்லை விசயம் தெரிந்தவங்கள்  இணக்க அரசியலூடாக புகுந்து விளையாடுகிறார்கள் ...எங்களுக்கு வயிற்றெரிச்சல் தான் மிச்சம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kandiah57 said:

அப்படியென்றால் அடுத்த தடவை நடிகைகளை. விட்டுட்டு நடிகர்களை கூப்பிடனும் 🤣😂 

உங்க சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த கூப்பிட்டு பாருங்க......கடவுள் விண்ணிலிருந்து மண்ணை தொட்டு விட்டதாகவே புளகாங்கிதம் அடைவார்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்

பல்லுள்ளவர் பக்கோடா சாப்பிடுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி ஆய்வு : பத்திரிகையாளர் பாண்டியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.