Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-20240208-WA0044-750x375.jpg

யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான  சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சி  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240208-WA0047-600x284.jpg

IMG-20240208-WA0049-600x338.jpg

https://athavannews.com/2024/1368978

  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில்  கஞ்சி  வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில்    கரிகரனைப் பார்க்க வந்த   கூட்டம்.!

nedukkalapoovan

இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட

புலவர்

இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய்  தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!

யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, எச்சரித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை  குறித்த கலைஞர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு நபரொருவருக்கு தலா 30,000 ரூபாய் அறவிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விளம்பரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் போதே  மு.தம்பிராசா, இவ்வாறு  எச்சரித்துள்ளார்.

https://athavannews.com/2024/1368992

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு

ஜேர்மனியில் இருந்து நேரடியாக போய் குதிக்கலாமா?? அதென்ன சர்வதேச விமான நிலையம்??  உள்ளூர் அல்லது பிராந்திய விமான நிலையம் கட்டுநாயக்கவா??🤣

இவர்களுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தால்  முள்ளிவாய்க்கால் நடந்தது என்பதையும் இனப்படுகொலை நடந்தது என்பதையும் நம்ப முடியவில்லை 

  • Like 2
  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆறுதிருமுருகன் போன்ற கலாச்சாரகாவலர்கள் யாரும் கம்பு சுத்தவில்லையா இன்னும்..?

Posted
1 hour ago, தமிழ் சிறி said:

 முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, எச்சரித்துள்ளார்.

படம் எடுக்க காசு கேட்பதெல்லாம் அடக்கு முறை வகைக்குள் வருகுதாம் இவருக்கு. இவரை இங்கு கனடாவுக்கு வரச் சொல்ல வேண்டும். கிறிஸ்மஸ் தாத்தாவுடன் படம் எடுக்கவே காசு கேட்கின்றார்கள் இங்கு.

எப்படியோ மு. தம்பிராசாவுக்கு தன் பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் இருந்து நேரடியாக போய் குதிக்கலாமா?? அதென்ன சர்வதேச விமான நிலையம்??  உள்ளூர் அல்லது பிராந்திய விமான நிலையம் கட்டுநாயக்கவா??🤣

இவர்களுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தால்  முள்ளிவாய்க்கால் நடந்தது என்பதையும் இனப்படுகொலை நடந்தது என்பதையும் நம்ப முடியவில்லை 

கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டால் வயிறெரியத்தான் செய்யும். 

தற்போதும் காலம் கடந்துபோய்விடவில்லை. 

😏

தென்னிந்தியாவின் நிறுவனங்கள் வடக்கு Kழக்கில் முதலிட ஆயத்தம் செய்கின்றன. 

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில் இருந்து நேரடியாக போய் குதிக்கலாமா?? அதென்ன சர்வதேச விமான நிலையம்??  உள்ளூர் அல்லது பிராந்திய விமான நிலையம் கட்டுநாயக்கவா??🤣

இவர்களுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தால்  முள்ளிவாய்க்கால் நடந்தது என்பதையும் இனப்படுகொலை நடந்தது என்பதையும் நம்ப முடியவில்லை 

முள்ளிவாய்க்காலை நினைத்து நினைத்து உருகி உருகி ஜேர்மனியில் நீங்கள் மட்டும் மூடிட்டு வீட்டுக்குள்ள முக்காடு போட்டுட்டா இருக்கிறியள்..? இல்லத்தான..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆறுதிருமுருகன் போன்ற கலாச்சாரகாவலர்கள் யாரும் கம்பு சுத்தவில்லையா இன்னும்..?

ஆமாம், ஆறு திருமுகன்  வேலிகளை உயர்த்திக்கட்டி பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் யாழ்பாணக்   கலாச்சாரம்  இப்போது இல்லை என்றும. மீண்டும் அது வேண்டும் என்றும் கவலைப்பட்டு பதிவிட்டிருக்கிறாராம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இதேவேளை  குறித்த கலைஞர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு நபரொருவருக்கு தலா 30,000 ரூபாய் அறவிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் என்ன கழுத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு போயா படமெடுக்கிறார்கள்?

முடிந்தால் மக்களை தடுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

முள்ளிவாய்க்காலை நினைத்து நினைத்து உருகி உருகி ஜேர்மனியில் நீங்கள் மட்டும் மூடிட்டு வீட்டுக்குள்ள முக்காடு போட்டுட்டா இருக்கிறியள்..? இல்லத்தான..

நான் படம் பார்ப்பதில்லை  எந்தவொரு இசை நிகழ்வுகளும் பார்ப்பது இல்லை  அதற்காக மற்றவர்களை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை  நன்றாகவே பாருங்கள்  நான் மூடிக்கொண்டு வீட்டில் இருக்க நீங்களா சாப்பாடு போடுகிறீர்கள்??   இங்கே கழுவி துடைத்து தெரு கூட்டி தான் சாப்பிடுகிறோம்  மட்டுமல்ல ஊருக்கும் அனுப்பி உள்ளோம்  யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு இருக்கும் போது  நாங்கள் கூட்டக்கூடாது துடைக்க கூடாது கழுவக்கூடாது  என்று கொண்டு திண்ணையிலிருந்து  வாய் நிறைய வெற்றிலை பேயிலை போட்டு  கணட இடமெல்லாம் இரத்த சிவப்பாக துப்பிக்கொண்டு திரிய தெற்கிலிருநது சிங்களவன் வந்து  கூட்டி துடைத்து கழுவதை  நான் நேரில் பார்த்துள்ளேன்  நாங்களும் உங்கே உள்ளவார்கள். போலிருந்தால் பிச்சை தான் எடுக்க வேணடும் அடுத்த தலைமுறையை சேரந்த படிக்காதவரகள் இங்கே வாழுபவரகள்.  பிச்சை தான் எடுக்க வேண்டும்  

இங்கே பணம் மரத்தில் பிடுஙகுவது இல்லை  வேர்வை சிந்தி உழைக்க வேண்டும்  குத்தி இருந்து சாப்பிட்டு கொண்டு மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை  அனுப்பு அனுப்பு என்று நடு சமத்தில் தொலைபேசியில் கேட்க முடியாது கருத்துகள் எழுதும் போது சிந்தித்து எழுதவும் 

போராடும் போது அவர்களை கொண்டாடுவது   கூத்தாடிகள். பாடும் போது இவர்களை கொணடாடுவது  இது தான் தமிழ் இனம்  சரி பிழை துக்கி பாரக்கமால் எழுந்தமானத்தில் தங்களுக்குள் தேவையில்லாமல் தங்களுக்குள் அடிபடுவார்கள் அது தான் தமிழ் இனம்

முள்ளிவாய்க்கால் இறந்துபோனவாரகள் இவர்களின் உறவினர்கள் தானா?? சகோதரர்கள் தானா??

1 hour ago, Kapithan said:

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். 

ஒம் ஒம்  நானும் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன்   கனடாவில் உள்ள சொததுகளை விற்றுக்கொண்டுபோய் முதலீடு செய்யுங்கள்  நாலு மாதத்தில் ரணில்  நித்திரை கொள்ள போய் விடுவார்  எனவே… உடனும் முதலீடு செயயவும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

வள வள சள சள எண்டு அலம்பாமல் பொயின்ற்சை எழுதுங்கோ.. மாட்டை பத்தி எழுதச்சொன்னா மாடுகட்டின கட்டை, கயிறு, மாடு திண்ட புல்லு எல்லாம் எழுதிக்கொண்டு..  முள்ளிவாய்க்காலுக்கும் நடிகர்மார் வாறதுக்கும் என்ன சம்பந்தம்..? நீங்கள் படம்பாக்காததுக்கு நாங்கள் என்ன செய்யிறது.. ஊரில இருக்கிறவன் பாப்பான் விடுவான்.. உங்கட கட்டை வேகோணும் எண்டதுக்காக நாங்கள் எங்கட கவட்டையை வேக வைக்கேலுமோ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் ஏதோ யோகியம் எண்டமாதிரி நாங்கள் நினைக்கிறம் 

தமன்னா ரஜனிகாந்தின் படத்தில அரையும் குறையுமா நிண்டு காவாலா எனும் பாட்டுக்கு ஆடுறதை த்ப்லைக்காட்சியில் போட்டு தங்கள் பிள்ளைகளை அதே மாதிரி ஆடச்சொல்லி (நண்டு சிண்டுகளுக்கு) பழகிப் பின்னர் பிறந்த நாள் விழா சாமத்திய வீடுகளில மேடையில் ஏத்தி ஆடுறதும் நாங்கள் சொல்லும் குற்றத்தில சேருமா இல்லையா?

நான் அறிய ஒரு தாயும் மகளும் யாழ்ப்பாணத்தில பவுடர் வித்துக்கொண்டு திரிகினம் அவர்களுக்குப் பஞ்சம் என்றோ அல்லது குடும்பத்தில் ஆண்தலைமை போரில் இறந்தோ காணமல் போனதோ இல்லை ஆனால் மேலதிக சொகுசு தேவைப்படுகுது மகளது கைப்பையில் அவர் தனது தொலைபேசி இலக்கத்தை எழுதி வைத்திருக்கிறார், அவருக்கு போதைப்பொருள் கொடுத்து விற்கச்சொன்னவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவரை தாயும் மகளும் பொஸ் எனத்தான் அழைக்கிறார்கள் இகைவிட தமண்ணா வந்ததும் கரிகரன் வந்ததும் மோசமான செயலா?

இலங்கை அரசாங்கம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் எனும் திட்டத்தைக் கொண்டுவந்ததே வருமானம் குறைவான குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களில் நன்றாகப் படிக்கக்கூடியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கி அவர்களது கல்விக்கு ஊக்கமளிப்பதற்காகவே. ஆனால் இப்போது என்ன நடந்தது இலங்கையில் முதல் நிலைப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான போட்டிப்பரிட்சையாக மாற்றியமைக்து ஏழை மாணவர்களுடன் வசதிபடைத்த மாணவர்களைப் போட்டி போடவைத்து தங்களது பிள்ளைகளை சிறந்த மாலைநேர ரியூசன் கல்வி நிறுவனக்களில் சேர்த்து மதிப்பெண்கள் பெறப்பண்ணி ஏழை மாணவர்களது சந்தர்ப்பங்களைத் த்ட்டிப்பறிக்கிறார்களே அதை விட இது மோசமான செயலா?

இல்லாவிடில் மாவட்டம்தோறும் முதல்நிலைப் பாடசாலைகள் தங்களது மாணவர் சேர்க்கையில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வரும் மாணவர்களுக்கு அனுமதியில் முதலிடம் கொடுத்து  அனைத்து மாணவர்களையும் ஏழை மாணவர்களுடன் போட்டிக்கு முகம்கொடுக்கப்பண்ணும் முறையைவிட இது மோசமான செயலா?

சரி இல்லாதுவிட்டால் அரசாங்கம் பட்டதாரிகளையும் உயர்தரப் பரீட்சையில் நல்லதராதரம் எடுத்தவர்களையும் தெரிவுசெய்து அவர்களுக்கு கற்றல் கற்பித்தல் சம்பந்தமான சிறப்புப் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக்கி வருடத்தில் பாதி நாளே பாடசாலை நாளாக்கி ஆனால் வருடம் முழுமைக்கும் மாதாமாதம் சம்பளம் கொடுத்து வருடத்துக்கு இரண்டுதடவை ரெயில்வே வாரண்ட் கொடுத்து பிள்ளைகளைப் ப்டிப்பியுங்கோ எனச்சொன்னால்  அப்படி அவர்கள் தங்களது மாணவர்களுக்கு கற்பித்திருந்தால் தமிழர் பகுதி ஈறாக இலங்கைத் தீவு எங்கும் ஏன் ரியூட்டரிக்கொட்டில்கள் மானவர்களால் நிறைந்திருக்கு அங்கு படிப்பிக்கும் ஆசிரியர்கள் என்ன தேவ லோகத்திலிருந்தா வந்தவர்கள்? உங்களுக்குத் தெரியுமா எத்தனை பாடசாலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்க்ச் சரியாகப் படிப்பிக்காது அவர்களே ரியுட்டரிக் கொடில்களில் மாங்கு மாங்கு எனப் படிப்பித்து சித்தியடையும் மாணவர்களது படங்களை பேனர்களில் அச்சடித்து தங்கள் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள் என விளம்பரப்படுத்துகிறார்கள். அவர்களிடம் வினவுங்கள் அவர்கள் படிப்பிக்கும் பாடசாலையில் அவரது வகுப்பில் அதே பாத்தில் எத்தனைபேர் சித்தியடைந்தார்கள் என பூச்சியம் இவைகளைவிட தமண்ணா வருவது தவறா?

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வள வள சள சள எண்டு அலம்பாமல் பொயின்ற்சை எழுதுங்கோ.. மாட்டை பத்தி எழுதச்சொன்னா மாடுகட்டின கட்டை, கயிறு, மாடு திண்ட புல்லு எல்லாம் எழுதிக்கொண்டு..  முள்ளிவாய்க்காலுக்கும் நடிகர்மார் வாறதுக்கும் என்ன சம்பந்தம்..? நீங்கள் படம்பாக்காததுக்கு நாங்கள் என்ன செய்யிறது.. ஊரில இருக்கிறவன் பாப்பான் விடுவான்.. உங்கட கட்டை வேகோணும் எண்டதுக்காக நாங்கள் எங்கட கவட்டையை வேக வைக்கேலுமோ..

இது உஙகளுக்கு தான்  பொருத்தும் எனக்கில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

ஒம் ஒம்  நானும் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன்   கனடாவில் உள்ள சொததுகளை விற்றுக்கொண்டுபோய் முதலீடு செய்யுங்கள்  நாலு மாதத்தில் ரணில்  நித்திரை கொள்ள போய் விடுவார்  எனவே… உடனும் முதலீடு செயயவும் 

இலங்கையில் தமிழினம் தலைநிமிரக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை,....☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

இலங்கையில் தமிழினம் தலைநிமிரக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை,....☹️

இலங்கையில் தமிழினம். தலைநிமிரதாதுக்கும். எங்களுக்கும் என்ன சம்பந்தம் ?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

முள்ளிவாய்க்காலை நினைத்து நினைத்து உருகி உருகி ஜேர்மனியில் நீங்கள் மட்டும் மூடிட்டு வீட்டுக்குள்ள முக்காடு போட்டுட்டா இருக்கிறியள்..? இல்லத்தான..

கந்தையர்: 

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாநிதி  இலங்கை தமிழர்கள் விடயத்தில் நடந்து கொண்டதில்  பிழை இல்லை என்பதை உணர முடிகிறது  அவருக்கும் தனிப்பட்ட விருப்பு  ஆசைகள்’ உண்டு”   எனவேதான் அவரை திட்டுவது தேவையற்ற விடயம்   

5 minutes ago, Kapithan said:

கந்தையர்: 

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே. 

இது அந்த கருத்து எழுதிய மேதாவிக்குத் தான் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

கருணாநிதி  இலங்கை தமிழர்கள் விடயத்தில் நடந்து கொண்டதில்  பிழை இல்லை என்பதை உணர முடிகிறது  அவருக்கும் தனிப்பட்ட விருப்பு  ஆசைகள்’ உண்டு”   எனவேதான் அவரை திட்டுவது தேவையற்ற விடயம்   

இது அந்த கருத்து எழுதிய மேதாவிக்குத் தான் தெரியும் 

8 minutes ago, Kapithan said:

கந்தையர்: 

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே. 

நேர விரயம்  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kapithan said:

நேர விரயம்  

ஆமாம் நிச்சியமாக  உங்கள் நேரத்தை சேமித்து கொள்ளுங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு நடை பெறுவது எமது கற்பனை அரசியலையும் தாண்டி இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அரசியல் சிறிலங்கா முழுவதும் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவது ....சிங்களம் எவ்வளவு குத்திமுறிந்தாலும் இந்தியாவின் ஆதிக்கம்/செல்வாக்கு போன்றவற்றை தடுத்து நிறுத்த முடியாது ....கச்சை தீவு கொடுக்க முதலே  உருவான செல்வாக்கு இது ..

இனப்படுகொலை நடந்து உள்ளது என்பதை சர்வதேசம் நன்றாக் அறியும் இருந்தாலும் தங்களது நலன் கருதி அதை வெளி உலகிற்கு அம்பல படுத்தாது..

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர போக்கை பார்த்தால் அடுத்த  முறை பொது தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமன்னாவை  அழைத்தால் அமோக வெற்றி பெறலாம்....இந்த புத்தனின் அறிவுக்கு எட்டுகிறது

  • Like 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திரன். சொல்லுகிறார். போர முடிச்சாது என்று  சினிமாகாரர் வந்தது சந்தோசமாம்  

இந்த சினிமாகாரரகள் இந்தியார்கள் அவர்களுக்கு மேள தாளத்துடன் பெரிய வரவேற்பு கொடுப்போம்  ஆனால் இந்தியாவை திட்டி தீர்ப்போம். ஏனென்றால் இந்த சினிமாகாரருக்கும் இந்தியாவுக்கும்  என்ன சம்பந்தம் ஒரு சம்பந்தமில்லை ஆமா இவர்கள் 2009 எங்கே போனார்கள்??  இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி உழைத்து கொண்டிருந்தார்கள்  வை.கோ வை  நெடுமாறனை திட்டுவோம். ஏன்?? அவர்கள் விடுதலை அமைப்பு வளர  எந்தவொரு எதிர்பார்ப்புகள் இன்றி உழைத்தவார்கள்  இந்தியாவுடன் தமிழ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் தீட்டி கொட்டுவோம்  ஆனால் இந்தியா சினிமாகாரரை நாங்கள் அழைக்கலாம். நாங்கள் தலைவர் வழியில் போரடுகிறோம். அடுத்த பாட்டுக் கச்சேரி முள்ளிவாய்க்காலில் வைத்தாலும் ஆச்சர்யமில்லை ஏனெனில் முள்ளிவாய்க்காலுக்கும் சினிமா கச்சேரிக்கும் என்ன சம்பந்தம் சம்பந்தமில்லை அல்லவா?? 

குறிப்பு,...இலங்கை போருக்கு பட்ட கடனிலிருந்து. போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும்  இன்னும் மீளவே இல்லை  ஆனால் புலிகள் தரப்பு 2009 இல் மீண்டு விட்டார்கள்   யார் மீட்டது ??  விடுதலை உணர்வு உள்ள தமிழர்கள்  🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Elugnajiru said:

ஆனால் மேலதிக சொகுசு தேவைப்படுகுது

இலங்கைத் தமிழர்கள்( வெளிநாட்டுக்காரர் உட்பட )சீரழிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இனிமேலும் மீட்க முடியாது என்றே நினைக்கின்றேன். பலர் திடீர் பணக்காரர் ஆக எதையும் செய்ய தயார், நல்ல கல்வியில், கடும் உழைப்பில் இனியும் அக்கறை இல்லை, பாடசாலை ஆசிரியர்களோ சமூக வலைத்தள அடிமைகள், எந்த வேலையையும் உருப்படியாக செய்யும் திறமை அற்ற  தொழிலார்கள், இளசுகள் என்ற போர்வையில் நாச வேலைகளைச் செய்யும் வப்புகள்,கழுசறைகள் ( பெண் பிள்ளைகளும் இதில் சரி சமனாக அடக்கம் )  இப்படி இலங்கையில் உள்ளவர்களை இங்கிருந்து படங்காட்டி கெடுத்ததில் புலம் பெயர்ந்த தமிழர்க்கு பெரும் பங்கு உண்டு.

அங்கோன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நல்ல குடும்பங்கள் இந்த சூழலுக்குள் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் மனதுக்குள் அழுது புலம்புகின்றன.

இங்கே உள்ள ஓரளவு நல்ல மனிதர்களோ வெளியே தம்மை தமிழர் என்று இனம் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றன 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் 10 ஆண்டுகள் அதிகம் அதற்கிடையில் போர் நடந்ததே மறந்து விடும் இளம் சமுதாயம் 

அவர்களை குறைசொல்ல முடியாது உலக நாடுகளின் தொழிநுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம் இப்ப யார் இங்கு மிக பிரபலமாகுவது  என்ற போட்டி 30000 சின்ன காசு போட்டோக்கு அதைவிட அதிகம் செலவு செய்பவர்கள் ஏராளமான இங்கு உள்ளாரகள் இதில் ஏழைகளை ஒதுக்கி விடுங்கள் நாளுக்கு 2500 கூலிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்

  • Like 5

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதற்காகத்தான் சொல்கிறேன், பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு இருக்கட்டுமென்று. அப்போ அனுரா அதை சாட்டாக சொல்லி தப்பிக்க முடியாது. இதைத்தானே நானும் சொன்னேன். அவர் மூன்றில் இரண்டை விட அதிகமாக வென்றிருக்கிறார், நாம் அவரை  விமர்ச்சிப்பதால் எதுவும் மாறாது. நல்லதை எதிர்பார்ப்போம் என்று. அதற்குத்தானே வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கிறீர்கள் என்னோடு.   ஏற்கெனவே மாண்புமிகு ஜனாதிபதி கூறிவிட்டார், தற்போது நாட்டிலுள்ள பெரும்பிரச்சனை பொருளாதாரம். அதற்கு முதல் முக்கியத்துவம், இவற்றையும் செய்வேன் ஆனால் உடனடியாக செய்ய நான் ஒன்றும் மந்திரவாதியல்ல எனும் உண்மையை ஏற்றுக்கொண்டார். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு ஆதாரங்கள், சாட்சியங்கள் தேவை. அதற்கு ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தி நிரூபிக்கப்பட்டாலே தண்டனை வழங்கப்படும். நீதிசெயற்பாடுகளில் தான் தலையிடப்போவதில்லை என்கிறார். இதெல்லாம் ஒரே இரவில் நடக்கக்கூடியதல்ல, அவர் செய்ய முடியாததை வெறும் வாக்குக்காக அன்கொன்றும் இங்கு வேறொன்றும் சொல்லவில்லை. மக்கள் தாமே முன்வந்து அவரை தெரித்தெடுத்துள்ளார்கள். நான் மக்களின் முடிவை மதிக்கிறேன். பல வாசகர்கள் சொல்லிக்காட்டி விட்டார்கள். அவர்களுக்கு சலிப்பேற்படுத்த வேண்டாம்.  ஐந்துவருடத்தின் பின் கதைக்கிறேன் இதுபற்றி.
    • எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், நிழலி….!
    • அப்ப அனுர இனவாதிகளை சாந்த படுத்த மட்டும் நாம் பெளத்த கோவில் விடயத்தை சும்மா எதிர்த்து விட்டு அடங்கி விட வேண்டும்? இவை எல்லாம் அனுர இனவாதி இல்லை என்ற உங்கள் கற்பனை நிலைப்பாட்டில் எழுத படுபவை. அனுரவும் ஜேவிபியும் பச்சை இனவாதிகள். அவர்கள் இதை ஒருப்போதும் தடுக்கப்போவதில்லை. மேலும் அனுர இனவாதத்தை எதிர்க்க வந்தாரா அல்லது சாந்தபடுத்த வந்தாரா ? 2/3 பெரும்பான்மை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என சகலதையும் கொண்டுள்ள இப்போதே ஒரு துரும்பை கூட இவர்கள் தூக்கி போடவில்லை. இனி போக போக இறங்குமுகம்தான். எந்த அரசுக்கும் honeymoon period என தொடக்க காலத்தில் எதிர்ப்பு குறைந்த்ஹ் இருக்கும். கடினமான வேலைகளை அப்போதான் செய்வார்கள். இவர்களால் இப்பவே இனவாதிகளை ஒண்டும் செய்ய முடியவில்லை, இன்னும் சில வருடத்தில் இதை விட வெறுப்பை சம்பாதித்த நிலையில் என்னத்தை செய்ய முடியும். நீங்களும் அப்போ வந்து அனுர பாவம் இனவாதிகள் எதையும் செய்ய விடவில்லை என சப்பை கட்டு கட்டுவீர்கள். இனவாதி, இனவாத கட்சியிடமே இனவாதத்தை கட்டுபடுத்த கோரும் மடமை போல் வேறில்லை.
    • நாட்டின் தலைவரை எல்லாம் நீங்களோ நானோ தேர முடியாது. அது சிங்கள வாக்குகள் தீர்மானிக்கும் விடயம். நாம் எந்த தேர்தலிலும் எமது நலனுக்கு ஏற்றதை மட்டுமே செய்யலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.