Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சிறப்புடன் சேவை செய்து வந்த தமிழரசுக் கட்சி 10 வருடத்திற்கு முன்பாக வந்த சுமத்திரனால் கெட்டது போன்று ஒரு குறையுமின்றி வாழ்ந்த இலங்கை மக்கள் தமன்னா அவர்கள் வந்ததினால் வீழ்ந்தனர்.

  • Replies 148
  • Views 15.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில்  கஞ்சி  வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில்    கரிகரனைப் பார்க்க வந்த   கூட்டம்.!

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட

  • புலவர்
    புலவர்

    இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய்  தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

தமன்னா வரமுன்னர் இலங்கை நல்லாத் தான் இருந்தது என்கிறீர்கள்?

1988 ல் நடிகை அமலா, மோகன், வெண்ணிற ஆடை மூர்ததி, சார்லி என ஒரு பட்டாளத்தையே  அழைத்து விடுதலைப்புலிகள்  ஐரோப்பாவில் Star night  நிகழ்ச்சி  நடத்தினார்கள்.   இன்று தமன்னா வந்தால் கலாச்சார சீரழிவாம். சிரிப்பாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

1988 ல் நடிகை அமலா, மோகன், வெண்ணிற ஆடை மூர்ததி, சார்லி என ஒரு பட்டாளத்தையே  அழைத்து விடுதலைப்புலிகள்  ஐரோப்பாவில் Star night  நிகழ்ச்சி  நடத்தினார்கள்.   இன்று தமன்னா வந்தால் கலாச்சார சீரழிவாம். சிரிப்பாக இருக்கிறது. 

என்ன ஆதாரம் புலிகள் தான் அழைத்தார்கள் என்பதுக்கு ?

புலி இல்லா நேரம் எலி கூட சிங்கம்தான் .

அந்த நேரம் கள்ள  பியர் யாபாரம் செய்தவன் கூட செல்லப்பாவின் பாட்டுக்கள் தான் கேட்கணும் என்று சொல்லி வான்களில் சப்ளை செய்தார்கள் டிரைவரா வந்தவன் உணர்ச்சி பொங்க முதலாளிக்கு உழைத்து கொடுத்தான் இன்று அவன் வாடகை வீட்டில் முதலாளி வில்லோ கவுசில் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களுக்கு சிறப்புடன் சேவை செய்து வந்த தமிழரசுக் கட்சி

உந்தக் கூத்து எப்ப நடந்தது!😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

1988 ல் நடிகை அமலா, மோகன், வெண்ணிற ஆடை மூர்ததி, சார்லி என ஒரு பட்டாளத்தையே  அழைத்து விடுதலைப்புலிகள்  ஐரோப்பாவில் Star night  நிகழ்ச்சி  நடத்தினார்கள்.   இன்று தமன்னா வந்தால் கலாச்சார சீரழிவாம். சிரிப்பாக இருக்கிறது. 

ஆம் பல வருடங்களிக்கு முன்பு நான் ஒரு செய்தி வாசித்தேன் இது உண்மையோ தெரியவில்லை. ஒரு முறை கனடவுக்கு நடிகர் பிரசந்த் மற்றும் பல நடிகைகள் வந்து இது போல் ஒரு ஸ்டார் நைட் செய்தார்களாம். இதில் பல ரசிகர்கள், மேடையில் நடிகைகள் ஆடுப்போது பண நோட்டுக்களை அவர்களை நோக்கி வீசி எறிந்து  இன்பமடைந்தார்களாம் இது உண்மையோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

90 களில் வீரகேசரியில் ஒரு விளம்பரம் (முழுப்பக்க விளம்பரம் என்பதாக நினைவில் உள்ளது) போடுவார்கள், அதில் மேற்கு இந்திய அணி வீரர் ரிச்சி ரிச்சர்ட்சன் கூறுவார் "என்னை கவர்ந்திழுக்க வீசப்படும் பந்துகளை அணுகமாட்டேன் ஏனென்றால் அதுதான் எனக்கு போடப்படும் தூண்டில்" கவனத்தை கவரும் மோசமான பொருளை வாங்காதீர்கள் என கூறுவார்.

அவர் விளம்பரம் செய்யும் பொருள் ஒரு மதுபானம் என நினைக்கிறேன் (அதனாலேயே அது எனது கவனத்தினை ஈர்த்தது- உடலுக்கு தீங்கு செய்யும் ஒரு பொருளினை அது தரமானது என்பதால் உடலுக்கு தீங்கில்லை என்பது போல் ஒரு மாயையினை வாடிக்கையாளரினை கவர்வதற்காக செய்யும் உளவியல் சந்தைப்படுத்தும் உத்தி).

இந்த நகைமுரண் இந்த திரியிலும் காணப்படுகிறது.

இந்த திரியில் ஆரம்பத்தில் அனைத்து கருத்தாளர்களுக்கும் பழைய காலத்திலும் தற்காலத்திலும் யாழ்ப்பாண மக்கள் இவ்வாறு நடந்தார்கள் (அவர்களின் வார்த்தையில் காட்டுமிராண்டித்தனம்) என கூறியவர்கள் கூட திரியின் இறுதிப்பகுதியில் அந்த செயலுடன் ஏதோ ஒரு வகையில் உடன்பாட்டிற்கு வந்தனையே காணமுடிகிறது.

நான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு தமிழாசிரியர் சிலேடை பற்றி கூறி மாணவர்களிடம் உதாரணம் கேட்டார் (சிலேடை என்பது ஒரு சொல் அல்லது தொடர் சொல் பல கருத்துக்களை உச்சரிக்கும் விதத்தில் தருவதாகும்).

அந்த வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவன் எழுந்து கூறினார் " ஐந்து சதத்திற்கு கொஞ்ச லாம்பெண்ணை".

அது ஒரு கலப்பு வகுப்பு, ஆசிரியர் மாணவரை கோபத்தில் திட்டி உட்கார வைத்தார், ஆசிரியருக்கு மட்டுமல்ல அந்த வகுப்பில் இருந்த சக ஆண் மாணவர்களுக்கு கூட ஒரு வகையான தர்மசங்கடமான சூழ்நிலையினை ஏற்படுத்தியது.

நாம் மற்றவர்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு வந்துள்ள யாழ்ப்பாண சமூகம் என ஆரம்பத்தில் கூறிய கள உறவுகள் திரியின் பின்பகுதியில் ஒரு முரண்பாடான கருத்துகளை முன்வைக்கும் நிலைக்கு வந்துள்ளது தெரிகிறது.

நிகழ்ச்சிகள் வைப்பதிலோ அல்லது அதில் கலந்து கொள்வதிலோ தவறில்லை ஆனால் அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு இடையூறு (முகம் சுழிக்க வைப்பது போல் நடந்து கொள்வது, மக்கள்நெருக்கடியால் உயிர் உடமைக்கு பாதிப்பு) ஏற்படா வகையில் நடந்து கொண்டால் தவறு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

என்ன ஆதாரம் புலிகள் தான் அழைத்தார்கள் என்பதுக்கு ?

புலி இல்லா நேரம் எலி கூட சிங்கம்தான் .

அந்த நேரம் கள்ள  பியர் யாபாரம் செய்தவன் கூட செல்லப்பாவின் பாட்டுக்கள் தான் கேட்கணும் என்று சொல்லி வான்களில் சப்ளை செய்தார்கள் டிரைவரா வந்தவன் உணர்ச்சி பொங்க முதலாளிக்கு உழைத்து கொடுத்தான் இன்று அவன் வாடகை வீட்டில் முதலாளி வில்லோ கவுசில் .

நீங்கள் மறுக்கும் அளவுக்கு அது ஒன்றும் தவறான செயல் அல்ல. நிதி சேகரிப்புக்கு அது அவசியமாக பட்டதால் அன்று மிகவும் வெளிப்படையாக புலிகள் அதைச் செய்தார்கள்.  அதில் தவறு ஏதும் இல்லை. அது அன்றைய நிலையில் அவசியமானதும் கூட. 

நிகழ்ச்சிக்கான ரிக்கட்  கூட வழமையாக போராட்ட நிதி சேகரிக்கும் இயக்க உறுப்பினராலேயே விற்கப்பட்டது.  ( நானும் அவர்களிடம் தான் வாங்கினேன்) 

அதன் பின்னர் சிறிது காலத்தில் எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் நிகழ்சியும். 1990 கோடை காலத்தில் கங்கை அமரனின் நிகழ்ச்சியும் வெளிப்படையாக  புலிகளால் நடத்தப்பட்டன.  

அதற்கு வாழும் சாட்சிகள் பல உண்டு. அந்நேரத்தில் ஐரோப்பாவில் இயங்கிய உறுப்பினர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களில் பலரை எனக்கு தனிப்பட தெரியும் என்றாலும்  இங்கு அவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூறுவது தவறு. ஆனால்,  நிச்சயம் உங்களுக்கு அந்த நேரத்தில் இயங்கியவர்களில் சிலரையவது தெரிந்திருக்கும். விசாரித்துப் பாருங்கள். 

1985 ல் சென்னையில் தமிழ் திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும் இணைந்து  மிகப்பெரிய Star Night நிகழ்சியை  தமிழ் ஈழ போராட்ட நிதி சேகரிப்புகாகவே செய்திருந்தனர். அதில் புலிகளின் பிரதி நிதி ஒருவரும் உரையாற்றி இருந்தார் என்பதையும் கூடுதல் தகவலாக தெரிவித்து கொள்கிறேன். 

3 hours ago, colomban said:

ஆம் பல வருடங்களிக்கு முன்பு நான் ஒரு செய்தி வாசித்தேன் இது உண்மையோ தெரியவில்லை. ஒரு முறை கனடவுக்கு நடிகர் பிரசந்த் மற்றும் பல நடிகைகள் வந்து இது போல் ஒரு ஸ்டார் நைட் செய்தார்களாம். இதில் பல ரசிகர்கள், மேடையில் நடிகைகள் ஆடுப்போது பண நோட்டுக்களை அவர்களை நோக்கி வீசி எறிந்து  இன்பமடைந்தார்களாம் இது உண்மையோ தெரியவில்லை. 

நீங்கள் கூறிய நிகழ்ச்சி  பற்றி நான்  கேள்விப்பட வில்லை.  நடந்திருக்கலாம். ஆனால், நடிகைகள் ஆடும்போது பண நோட்டுகளை வீசியெறிந்தது என்றால் அது நிச்சயமாக  தனியாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக  இருந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

தமன்னா வரமுன்னர் இலங்கை நல்லாத் தான் இருந்தது என்கிறீர்கள்?

"இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்."

எனது கருத்திடுகையில் இறுதி வரியில் குறிப்பிட்ட விடையத்தைப் புரியாது நீங்கள் இப்படி எழுதியிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. காரணம் யாழ் களத்தில் தர்க்கரீதியாக பல கருத்திடுகைகளுக்கு வாசிப்பவர்களது சந்தேகங்களை அல்லது செய்தியிலுள்ள மயக்கத் தனமையை விளக்கிக் கருத்திடும் உறவுகளில் நீங்களும் ஒருவராவர். ஒருசிலரது நிலைப்பாட்டுகள் உங்களது தர்க்கங்களுக்கு ஒத்துப்போகாதுவிடினும் கருத்திடுகயின் உள்ளடக்கத்திற்கு இன்னுமொரு பார்வையும் உண்டு என புரியவைப்பவர் என்பதானல்.

இதைத்தவிர இதே விடையத்தில் ஆரம்பத்திலும் நான் கருத்துத் தெரிவித்திருந்தேன் அதில் தமன்னாவது வருகை யாழில் உள்ளவர்களைச் சீரழிச்சுப்போட்டுது எனக் கூறவரவில்லை. 
நூற்றுக்கணக்கில் தமது உளவாளிகளை இறக்கியும் உள்ளூரில் அனைத்துமட்டத்திலும் எம்மவர் மத்தியிலும் ஊடுருவியும். தமிழ்த்தேசியம் பேசுபவர்களது கடந்தகால தப்புக்களையும் அசிங்கங்களையும் ஆவணப்படுத்தி மிரட்டியும். புதிதாக யாராவது களத்துக்கு வந்தால் அவர்களை தங்கள் வலைக்குள் வளைத்துப்போட்டும் காரியம் சாதிக்கும் தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகூடிய சக்தியுடன் இறுமாப்பாக எழுந்து தங்கள் காரியங்களை நினைத்தமாத்திரத்தில் சாதிக்கும், ஐரோப்பியாவின் உறபத்திப் பொருளாதார வல்லரசான ஜேர்மனியை ஆறாம் இடத்துக்குப் புறம்தள்ளி வலிமையான நாடாகத் திகழும் இந்தியாவுக்கு தமன்னா எனும் ஒரு துருப்புச்சீட்டைத் தவிர வேறெதையும் தேடிப்போகமுடியாது என நான் சொல்லவரவில்லை.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு இன்னும் புரியாத விடயம், சாதாரண ஒரு களியாட்ட இசை நிகழ்ச்சியில் நடந்த ஒழுங்குபடுத்தல் குறைபாட்டு விடயத்தை இவ்வளவு சிரத்தையாகக் களமாடுவது எதற்கு? 

தமண்ணா ஆடுவதை TV யில் பார்த்து ரசிக்கலாமென்றால் Live show ஒன்றில் பார்ப்பது தவறானதா? 

ஒவ்வொரு கோடைகாலத்திலும் புலத்தில் நடாத்தப்படும் தென்னிந்திய இசை நிகழ்வுகளை ஆவலுடன் இரசிக்கும் புலம் பெயர்ஸ், இலங்கையில் அத்தி பூத்தாற்போல நடைபெறும் ஒரு விடயத்திற்கு குத்தி முறிவது அவர்களின் இரட்டை வேடத்தை  வெளிக்காட்டுவதாக நான் கருதுகிறேன். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

1988 ல் நடிகை அமலா, மோகன், வெண்ணிற ஆடை மூர்ததி, சார்லி என ஒரு பட்டாளத்தையே  அழைத்து விடுதலைப்புலிகள்  ஐரோப்பாவில் Star night  நிகழ்ச்சி  நடத்தினார்கள்.   இன்று தமன்னா வந்தால் கலாச்சார சீரழிவாம். சிரிப்பாக இருக்கிறது. 

நடிகை அமலாவை ஐரோப்பியாவுக்குக் கொண்டுவந்தது புலிகள் இல்லை டுசில்டோர் புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஒன்றரை வருடத்துக்கு முன்வரை இருந்த இன்டோ சிலோன் சுப்பர் மார்க்கற் நிர்வாகம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

90 களில் வீரகேசரியில் ஒரு விளம்பரம் (முழுப்பக்க விளம்பரம் என்பதாக நினைவில் உள்ளது) போடுவார்கள், அதில் மேற்கு இந்திய அணி வீரர் ரிச்சி ரிச்சர்ட்சன் கூறுவார் "என்னை கவர்ந்திழுக்க வீசப்படும் பந்துகளை அணுகமாட்டேன் ஏனென்றால் அதுதான் எனக்கு போடப்படும் தூண்டில்" கவனத்தை கவரும் மோசமான பொருளை வாங்காதீர்கள் என கூறுவார்.

அவர் விளம்பரம் செய்யும் பொருள் ஒரு மதுபானம் என நினைக்கிறேன் (அதனாலேயே அது எனது கவனத்தினை ஈர்த்தது- உடலுக்கு தீங்கு செய்யும் ஒரு பொருளினை அது தரமானது என்பதால் உடலுக்கு தீங்கில்லை என்பது போல் ஒரு மாயையினை வாடிக்கையாளரினை கவர்வதற்காக செய்யும் உளவியல் சந்தைப்படுத்தும் உத்தி).

இந்த நகைமுரண் இந்த திரியிலும் காணப்படுகிறது.

இந்த திரியில் ஆரம்பத்தில் அனைத்து கருத்தாளர்களுக்கும் பழைய காலத்திலும் தற்காலத்திலும் யாழ்ப்பாண மக்கள் இவ்வாறு நடந்தார்கள் (அவர்களின் வார்த்தையில் காட்டுமிராண்டித்தனம்) என கூறியவர்கள் கூட திரியின் இறுதிப்பகுதியில் அந்த செயலுடன் ஏதோ ஒரு வகையில் உடன்பாட்டிற்கு வந்தனையே காணமுடிகிறது.

நான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு தமிழாசிரியர் சிலேடை பற்றி கூறி மாணவர்களிடம் உதாரணம் கேட்டார் (சிலேடை என்பது ஒரு சொல் அல்லது தொடர் சொல் பல கருத்துக்களை உச்சரிக்கும் விதத்தில் தருவதாகும்).

அந்த வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவன் எழுந்து கூறினார் " ஐந்து சதத்திற்கு கொஞ்ச லாம்பெண்ணை".

அது ஒரு கலப்பு வகுப்பு, ஆசிரியர் மாணவரை கோபத்தில் திட்டி உட்கார வைத்தார், ஆசிரியருக்கு மட்டுமல்ல அந்த வகுப்பில் இருந்த சக ஆண் மாணவர்களுக்கு கூட ஒரு வகையான தர்மசங்கடமான சூழ்நிலையினை ஏற்படுத்தியது.

நாம் மற்றவர்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு வந்துள்ள யாழ்ப்பாண சமூகம் என ஆரம்பத்தில் கூறிய கள உறவுகள் திரியின் பின்பகுதியில் ஒரு முரண்பாடான கருத்துகளை முன்வைக்கும் நிலைக்கு வந்துள்ளது தெரிகிறது.

நிகழ்ச்சிகள் வைப்பதிலோ அல்லது அதில் கலந்து கொள்வதிலோ தவறில்லை ஆனால் அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு இடையூறு (முகம் சுழிக்க வைப்பது போல் நடந்து கொள்வது, மக்கள்நெருக்கடியால் உயிர் உடமைக்கு பாதிப்பு) ஏற்படா வகையில் நடந்து கொண்டால் தவறு இல்லை.

வாசே 
இந்த உத்தி இப்போதும் கையாளப்படுகிறது.

கருனாநிதியின் மகன் ஸ்ராலினை அரசியலுக்கு இழுத்துவர மீசா எனும் சட்டத்தில் சிறை சென்றவர் என்பது அப்போது அனைவரையும் வியப்பிலாள்தியது. ஆனால் இப்போ உதயநிதி அரசியலுக்கு வர அப்படியான சிறை செல்லல்கள் உதவாது காரணம் இவர்கள் இப்போது சிறை சென்றாலும் உழ்ழலில் போகிறார்கள் என சமூகவலைத்தளம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டுடும்.
அதனால் உதயநிதிக்கு அறிமுகமாக சினிமாக்கவர்ச்சி தேவைப்பட்டது அதையும் இடையில் நயனதாராவுடன் இணைத்து செய்திகள் பரப்பப்ப்டாடது சினிமாக்கவர்ச்சி மற்றும் நெகட்ரீவ் விமர்சனங்கள் ஒன்று சேர்ந்து எதை அவர் விரும்புகிறார்களோ அதன்மூலம் சம்பந்தப்பட்டவர் மிகவும் பரவலாக அறிமுகமாவார்.

அதேபோல் உதயநிதியது மகன் இரண்டாயிரத்துக் குழந்தை எனும் வகையில் வருகிறார் அவரது எதிர்காலம் அந்த வயது மக்களிடம்தான் என்பதைத் தெரிவுசெய்து அவர்களுக்கு உதயநிதியின் மகனை அறிமுகப்படுத்த....

சமூகவலைத்தளங்களில் வெளிநாட்டில் படிக்கபோன இடத்தில் ஒரு போலந்துக்காரப் பெண்ணுடன் டேட்டிங் செய்கிறார் என பரவலாக செய்தியைச் சிதறடித்து ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் இளசுகளுக்கு இதுதான் பேசு பொருள்

அதே போன்றதே அன்றாடப் பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போராடாமல் சிந்தனைச்சிதறல்களை மக்கள் மத்தியில் அதுவும் இளம் சந்ததிகளின்மத்தியில் ஏற்படுத்தி ஒரே இடத்தில் கட்டிப்போடுவதே இலக்கை நிர்ணயித்தவனது வேலை.

இதில் நாங்கள் கிழடுகட்டைகள்  (என்னைத் திட்டாதையுங்கோ இப்போதெல்லாம் முப்பது வயதைக் கடந்த அல்லது அண்மித்த ஆண்கள் எல்லாம் இளம் பெண்களுக்கு அங்கிள்தான்) கடந்தகாலங்களில் இவைகளைக் கடந்துவந்தாலும் யதார்த்தம் எம்மைச் சுட்டதனால் புலம்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உண்மையில் எனக்கு இன்னும் புரியாத விடயம், சாதாரண ஒரு களியாட்ட இசை நிகழ்ச்சியில் நடந்த ஒழுங்குபடுத்தல் குறைபாட்டு விடயத்தை இவ்வளவு சிரத்தையாகக் களமாடுவது எதற்கு? 

தமண்ணா ஆடுவதை TV யில் பார்த்து ரசிக்கலாமென்றால் Live show ஒன்றில் பார்ப்பது தவறானதா? 

ஒவ்வொரு கோடைகாலத்திலும் புலத்தில் நடாத்தப்படும் தென்னிந்திய இசை நிகழ்வுகளை ஆவலுடன் இரசிக்கும் புலம் பெயர்ஸ், இலங்கையில் அத்தி பூத்தாற்போல நடைபெறும் ஒரு விடயத்திற்கு குத்தி முறிவது அவர்களின் இரட்டை வேடத்தை  வெளிக்காட்டுவதாக நான் கருதுகிறேன். 

😏

இதற்கு பச்சையும் சிவப்பும் போடணும். வழி இல்லை

1 - √

2 - -1 (தேய்ந்த அதே பல்லவி. ரக்கோட்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

நடிகை அமலாவை ஐரோப்பியாவுக்குக் கொண்டுவந்தது புலிகள் இல்லை டுசில்டோர் புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஒன்றரை வருடத்துக்கு முன்வரை இருந்த இன்டோ சிலோன் சுப்பர் மார்க்கற் நிர்வாகம்.

நான் கூறியது யார் உத்தியோகபூர்வமாக  ஸ்போன்சர் செய்தார்கள் என்பதல்ல. யார் நிகழ்சிகளை மக்கள் முன் ஒருங்கிணைத்தார்கள் எனபதையே.  

ஐரோப்பாவுக்கு தமிழகத்தில் இருந்து  எந்த பேச்சாளரும் புலிகளின் உத்தியோக பூர்வ அழைப்பில் வருவதில்லை என்பது தங்களுக்கு தெரியும்.

அவ்வாறு செய்ய புலிகள்  சட்டபூர்வமான அமைப்பு அல்ல.  

ஐரோப்பாவில் புலிகளின் நிறுவனங்கள் புலிகளின் பெயரில் பதிவு செய்யப்படுவதில்லை. தனியார் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டது. புலிகள் அதை நிர்வாகம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இது போல் பல விடயங்களை கூறலாம். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, island said:

நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறியள் மதுரா பாலா காலத்துக்கு முன்னதான திரைப்பட நடிகர் மற்றும் பாடகர்கள் பற்றிய வருகை எதுவும் புலிகள் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

இதற்கு பச்சையும் சிவப்பும் போடணும். வழி இல்லை

1 - √

2 - -1 (தேய்ந்த அதே பல்லவி. ரக்கோட்)

ஏன் அண்ணர், நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இசை நிகழ்ச்சிகளை ரசிப்பதில்லையோ? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

ஏன் அண்ணர், நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இசை நிகழ்ச்சிகளை ரசிப்பதில்லையோ? 

கச்சேரி முடிஞ்சு கனநாள் ஆகிறது என்று கூறி 

 அவங்க சென்னைக்கு போயிட்டாங்க தமன்னா பெங்களுருக்கு போயிருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Elugnajiru said:

நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறியள் மதுரா பாலா காலத்துக்கு முன்னதான திரைப்பட நடிகர் மற்றும் பாடகர்கள் பற்றிய வருகை எதுவும் புலிகள் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை. 

என் கண்முன்னே நடந்த விடயத்தை நீங்கள் நீங்கள் பொய்யாக்க வேண்டிய அவசியம் ஏனோ?  நடந்த அந்த நிகழ்வு தவறானதாக எவரும் சித்தரிக்க வில்லை. அதை மக்கள் கூட ஏற்றுக்கொண்டிருந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திய பாத்து நீ வாத்தியா எண்டு கேட்டால் வாத்திக்கு கோபம் வரத்தான் செய்யும்..

டாக்டர பாத்து நீ டாக்டரா எண்டு கேட்டால் டாக்டருக்கு கோபம் வரத்தான் செய்யும்..

காவாலிய பாத்து தமன்னா “ நீ காவாலியா” எண்டு கேட்டால் காவாலிக்கு கோபம் வரும்தான..

வாத்திக்கும் டாகடருக்கும் வந்தா ரத்தம் காவாலிக்கு வந்தா தக்காளி சட்னியா..? 😡😡

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

Live show ஒன்றில் பார்ப்பது தவறானதா? 

அதோடு யாழ்பாணத்து மக்கள் எல்லாம் முஸ்லிம் மதத்தவர்கள் அவர்கள் எல்லாம் இசை நடன நிகழ்ச்சிகள் பார்க்க கூடாது, அங்கே நடத்த அனுமதிக்கவும் கூடாது என்கின்ற மாதிரி அல்லவா சொல்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஏன் அண்ணர், நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இசை நிகழ்ச்சிகளை ரசிப்பதில்லையோ? 

இங்கே எந்த புலம்பெயர் தமிழர்கள் நீங்கள் உட்பட குத்தி முறிந்தார்கள்?? உங்கள் கற்பனைகளை உங்களுக்கு மட்டும் பொருத்திப் பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

இங்கே எந்த புலம்பெயர் தமிழர்கள் நீங்கள் உட்பட குத்தி முறிந்தார்கள்?? உங்கள் கற்பனைகளை உங்களுக்கு மட்டும் பொருத்திப் பாருங்கள். 

குத்தி முறியவில்லையென்றால் எனது கருத்தில் எதில்  தங்களுக்கு முரண்பாடு? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

குத்தி முறியவில்லையென்றால் எனது கருத்தில் எதில்  தங்களுக்கு முரண்பாடு? 

அப்படி இல்லை என்கிற பொழுதே உங்கள் குற்றச்சாட்டே வலிமை இழந்து விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

அப்படி இல்லை என்கிற பொழுதே உங்கள் குற்றச்சாட்டே வலிமை இழந்து விட்டது 

பிறகேன் -1

🤨

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.