Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

Oruvan

தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் திருகோணமலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுச் செயலாளருக்கான தேர்தலில் 320 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆகவே மேலதிகமாக வாக்களித்த உறுப்பினர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்கள்.

இந்த உறுப்பினர்களின் அதிகரிப்பு தொடர்பாக யாப்பில் குறிப்பிடப்படாததன் நோக்கம் தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டே பொதுச்சபைக் கூட்ட முடிவுகள் யாப்பிற்கு முரணானவை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பொதுச்சபையைக் கூடுவதற்கான விதி முறைகள் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலைனைக்கு உட்படுத்திய நீதிபதி, கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

பொதுச்சபைக் கூட்டத் தீர்மானங்களை மையமாகக் கொண்டே தேசிய மாநாடு நடத்தப்படுவது வழமை.

ஆனால் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக்கூட்ட முடிவுகள் யாப்புக்கு முரணாக இருப்பதால், தேசிய மாநாடும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை யாப்பின் பிரகாரம் சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் சரியானதா அல்லது முரணானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஏனெனில் குறித்த மனுவில் கட்சி தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் எதிராளியாக காண்பிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதாவது பொதுச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமும், அதற்கு முன்னதாக இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பும் யாப்பு விதிகளுக்கு முரணானவை என்ற பொருள் விளக்கம் மனுவில் இருப்பதாக திருமலை நீதிமன்ற வட்டாரங்கள் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தன.

தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் சிறிதரனுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 184, சுமந்திரனுக்கு 137 வாக்குகள்.

ஆகவே இங்கும் வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதாவது மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9 பேரும், தொகுதிவாரியாக 280 பேர் உட்பட 332 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிந்தனர்.

ஆனால் 321 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்தநிலையில் பொதுச் செயலாளர் தெரிவில் பொதுச்சபைக் கூட்ட எண்ணிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் சிறிதரனின் தலைமைப்பதவி தெரிவிலும் சட்ட விளக்கங்கள் எழுகின்றன.

ஆகவே நீதிமன்ற விசாரணையில் சிறிதரனின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பும் யாப்பிற்கு முரணானதா அல்லது இல்லையா என்ற வாதங்கள் முன்வைக்கப்படலாம்.

ஆனாலும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்புத் தொடர்பாகவும் அது தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் விளக்கமுமே இறுதி முடிவாக இருக்கலாம்.

எவ்வாறாயின் இந்த மனு பின்னரான நிகழ்வுகள் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு படிப்பினையைக் கொடுத்துள்ளன.

அதேவேளை யாப்பின் உப விதிகளின் பிரகாரம் உறுப்பினர்களின் காலத்திற்கு காலம் மாறலாம் எனவும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

1948 இல் பொதுச் சபை உறுப்பினர் எண்ணிக்கை 160 என்றால் 74 வருடங்களின் பின்னர் அது 350 ஆக உயர்வடை வாய்ப்பு உள்ளது என்ற வாதத்தை எமது செய்திச் சேவைக்கு சுட்டிக்காட்டினார்.
 
https://oruvan.com/sri-lanka/2024/02/15/trinco-court-order-to-iatk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டை  இவர்களிடம் கொடுத்தால்...???😭

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, விசுகு said:

நாட்டை  இவர்களிடம் கொடுத்தால்...???😭

அதற்காக தான் இயற்கையே அதைக் கொடுக்கவில்லை. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த காலங்களில் இவர்களது தகிடுதித்தங்களை வெளியே இருந்து விமர்சித்தவண்ணமே இருந்தனர், அவர்களது கருத்தை உண்மையாக்குமாப்போல் செய்யும் சுத்துமாத்தால் இப்போ இவர்கள் நடுத்தெருவில் மானங்கெட்டு நிற்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என விமர்சித்துக்கொண்டிருந்த இவர்களே ஒரு ஜனநாயகப் பொதுவெளியில் யாப்பு மற்றும்ம் சட்ட வரையறைகளுக்குள் ஒரு நிர்வாகக்குழுவைத் தெரிவுசெய்யும் விடையத்தில் எந்தவித இங்கிதமும் இல்லாது நடந்துள்ளார்கள்.

இந்த வழக்கை நீதித்துறைக்கு யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை வெளியே சொல்ல எந்தவொரு வெகுஜன ஊடகத்துக்கும் துணிவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு முக்கியமான செய்தி, முன்னர் கேள்விப் பட்டிராத ஒரு ஊடகத்தில் மட்டும் வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இது உண்மையா அல்லது வழமை போல மாட்டை விட்டு மரத்தைப் பற்றி எழுதும் நம் ரொய்லெற் ஊடகங்களின் இன்னொரு படையலா😂?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Justin said:

இவ்வளவு முக்கியமான செய்தி, முன்னர் கேள்விப் பட்டிராத ஒரு ஊடகத்தில் மட்டும் வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இது உண்மையா அல்லது வழமை போல மாட்டை விட்டு மரத்தைப் பற்றி எழுதும் நம் ரொய்லெற் ஊடகங்களின் இன்னொரு படையலா😂?

பெப் 19 நடைபெறவிருந்த மாநாட்டுக்குத் தடை.  சிறிதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபைக் கூட்டங்களும் யாப்பின்படி முரணானவை என்று வழக்குப் போடப்பட்டுள்ளது.

முன்னாள் பா. உ.  பா.அரியநேத்திரன் வாட்ஸப்பில் பகிர்ந்தது..

———

இன்று தமிழரசுக்கட்சிக்கு எதிராக இரண்டு வழக்குகள் விபரம்.

1)இது திருகோணமலை வழக்கு முழுவிபரம்.. 

இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்து கட்டானையொன்றினை பிறப்பித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடை பெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது என வாதம் முன்வைக்கப்பட்டது.
எனவே குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இதன் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு -கோணேசபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக இவ் வழக்கினை தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2)யாழ்பாண நீதிமன்ற வழக்கு!
அடுத்து யாழ்பாணம் நீதிமன்றில் வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு உறுப்பினர் பீற்றர் இழஞ்செழியன் சட்டத்தரணி குருபரன்  தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளுக்கும்  பின்னணியில் ஒருதரப்பே உள்ளது என்பதுதான் உண்மை.!

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

மேலும் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ். நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1369933

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, island said:

அதற்காக தான் இயற்கையே அதைக் கொடுக்கவில்லை. 

குதிரைக்கு கொம்பு கொடுத்தால் அது எவ்வளவு பிரச்சனையில் முடியும் என்று இயற்கை முடிவு செய்துள்ளது

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

இந்த இரண்டு வழக்குகளுக்கும்  பின்னணியில் ஒருதரப்பே உள்ளது என்பதுதான் உண்மை.!

https://athavannews.com/2024/1369933

பீற்றர் இளஞ்செழியன் சுமந்திரனின் ஆள் அல்லவா? அப்ப சுமந்திரனா பின்னால் இருப்பது? சும்மா சும்மா திட்டித் திரியும் பெருமாள் இப்போது எங்கே போனார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

குதிரைக்கு கொம்பு கொடுத்தால் அது எவ்வளவு பிரச்சனையில் முடியும் என்று இயற்கை முடிவு செய்துள்ளது

இந்த குதிரைகளுக்கு கொம்பு தமிழர்களின் நம்பிக்கை. அது இருக்கும் வரை???

அவர்கள் புத்திசாலிகள்

ஆட்சியில் இருந்து இவ்வளவு பணம் சேர்த்தால் ஊழல் என்பார்கள். ஆனால் இது அதுக்கு மேல சேர்த்தாலும் எதிர்கட்சி தானே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான பிரச்சனைகளில் ஆட்களை போட்ட காலம் முடிந்து இப்ப வழக்கு  போடும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தானே. 😂 

  • Like 1
  • Haha 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம்.

யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்."

தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம் | Sumandran Says I Will Argue For Itak In Court

வழக்கில் எதிராளி

''இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன். திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன்.

ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்.'' என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/sumandran-says-i-will-argue-for-itak-in-court-1708003071

இப்படியொரு சுத்து மாத்து மனிதனை என் வாழ்நாளில் முதன் முதலா பார்க்கிறேன் .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

இன்று தமிழரசுக்கட்சிக்கு எதிராக இரண்டு வழக்குகள் விபரம்.

IMG-5840.jpg

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

நாட்டை  இவர்களிடம் கொடுத்தால்...???😭

75 வருடமா சிங்கள அரசியல்வாதிகளிடம் கொடுத்து அவையள் என்னத்தை கிழிச்சவையள் ...அதே மாதிரி இவையளுமெதையாவது சுருட்டி கொண்Tஉ அரசியல் செய்திருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஊரில இப்ப எல்லாரும் சட்டம் படிக்கினம். ஏனென்றால்.. இதுக்குத்தான்.. சொந்த இனத்துக்குள்.. குடும்பத்துக்குள்.. ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க.. முதுகில குத்த.

ஆனால்.. தமிழனை இனப்படுகொலை.. செய்த.. சிங்களவனை.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்த விடமாட்டினம். 

இதுக்குத்தான் இவை இவ்வளவு தீவிரமா சட்டம் படிக்கினம். 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, பெருமாள் said:

தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம்.

யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்."

தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம் | Sumandran Says I Will Argue For Itak In Court

வழக்கில் எதிராளி

''இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன். திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன்.

ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்.'' என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/sumandran-says-i-will-argue-for-itak-in-court-1708003071

இப்படியொரு சுத்து மாத்து மனிதனை என் வாழ்நாளில் முதன் முதலா பார்க்கிறேன் .

பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, புலவர் said:

பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.

சுமந்திரனைப் புத்திசாலி என்கிறீர்கள்? எல்லோரினது கண்களிலும் விரலை விட்டு ஆட்டுகிறார் அல்லவா? 

🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, Kapithan said:

சுமந்திரனைப் புத்திசாலி என்கிறீர்கள்? எல்லோரினது கண்களிலும் விரலை விட்டு ஆட்டுகிறார் அல்லவா? 

🤣

இதை தேர்தல் நடக்கும் போதே சூரியன் எப் எம் காரர் சொல்லிட்டாங்கள். சுமந்திரன்.. போலி சனநாயக வேடம் போட்டு விட்டுக்கொடுப்பது போல போக்குக்காட்டிக்கொண்டு... விட்ட பதவியை பறிப்பார் என்று. இது இந்த சட்டாம்பிக் கும்பலுக்கு புதிதல்லவே. 

இதால தான் உதய சூரியன் அந்தமிச்சுது.. எனி வீடும் தரைமட்டமாகிடும். சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அலுவலை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.. சிங்கள எஜமான விசுவாசத்தோடு. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கினார். இப்ப தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னமாக்கிட்டார். எனி மிஞ்ச ஒன்றுமில்லை. தமிழர்களின் ஒருமித்த குரலுக்கும் வாய்ப்பில்லை. எனி என்ன சுமந்திரன் காட்டில் அடை மழை தான். 

அடுத்த பாராளுமன்றில்.. நிச்சயம் சுமந்திரன் சிங்கள அமைச்சுப் பதவி பெறுவார். கூட மாவையும் மகனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கேட்பார். 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Kapithan said:

சுமந்திரனைப் புத்திசாலி என்கிறீர்கள்? எல்லோரினது கண்களிலும் விரலை விட்டு ஆட்டுகிறார் அல்லவா? 

🤣

சகுனிக்கும் புத்திசாலிக்கும் வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்க ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, nedukkalapoovan said:

இதை தேர்தல் நடக்கும் போதே சூரியன் எப் எம் காரர் சொல்லிட்டாங்கள். சுமந்திரன்.. போலி சனநாயக வேடம் போட்டு விட்டுக்கொடுப்பது போல போக்குக்காட்டிக்கொண்டு... விட்ட பதவியை பறிப்பார் என்று. இது இந்த சட்டாம்பிக் கும்பலுக்கு புதிதல்லவே. 

இதால தான் உதய சூரியன் அந்தமிச்சுது.. எனி வீடும் தரைமட்டமாகிடும். சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அலுவலை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.. சிங்கள எஜமான விசுவாசத்தோடு. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கினார். இப்ப தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னமாக்கிட்டார். எனி மிஞ்ச ஒன்றுமில்லை. தமிழர்களின் ஒருமித்த குரலுக்கும் வாய்ப்பில்லை. எனி என்ன சுமந்திரன் காட்டில் அடை மழை தான். 

அடுத்த பாராளுமன்றில்.. நிச்சயம் சுமந்திரன் சிங்கள அமைச்சுப் பதவி பெறுவார். கூட மாவையும் மகனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கேட்பார். 

வினாத்தாளுக்கு விடை எழுதியபின் பாஸ் செர்டிபிகேட் வந்தவுடன் அறிவை தொலைத்து விட்டு  சுமத்திரனை விட்டால் இந்த பிரபன்ஜத்தில் அறிவு ஜீவி கிடையாது என்று பின்னால்  திரிபவர்களுக்கு  என்னதான் சொன்னாலும் மண்டையில் ஏறாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, பெருமாள் said:

சகுனிக்கும் புத்திசாலிக்கும் வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்க ?

புத்திசாலி மட்டுமே  சகுனியாகலாம் 

இல்லாவிட்டால் மங்குனி என்றுதான் அழைப்பார்கள். 

🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Kapithan said:

புத்திசாலி மட்டுமே  சகுனியாகலாம் 

இல்லாவிட்டால் மங்குனி என்றுதான் அழைப்பார்கள். 

🤣

அப்ப உங்கள் சுமத்திரன் தமிழர்களுக்கு எதிரான சகுனி என்பதை ஒப்புகொள்கிறிர்கள் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

அப்ப உங்கள் சுமத்திரன் தமிழர்களுக்கு எதிரான சகுனி என்பதை ஒப்புகொள்கிறிர்கள் நன்றி .

2 hours ago, பெருமாள் said:

சகுனிக்கும் புத்திசாலிக்கும் வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்க ?

யாப்பின் படி நடக்காது பிழை செய்துவிட்டு இப்பொழுது பிடி பட்ட பின்பு ஐயோ தமிழ் மானம் காற்றில் பறக்குதே, பிழை பிடித்தவர்கள், வழக்குப் போட்டவர்கள் துரோகிகள், சகுனிகள் என்று புலம்பி என்ன பிரியோசனம்?

"செய் வினை திருந்தத் செய்

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

அப்ப உங்கள் சுமத்திரன் தமிழர்களுக்கு எதிரான சகுனி என்பதை ஒப்புகொள்கிறிர்கள் நன்றி .

சகுனியாயிருப்பதற்கும் மதி வேண்டுமல்லவா?  ஆனால் முட்டாளாக இருப்பதற்கு?

🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பெருமாள் சுமந்திரன் மேல் இவ்வளவு காண்டாக இருக்கிறீர்களே?

இன அழிப்பு ஒன்று நடக்கவேயில்லை என்று ஓடி ஓடி உலக நாடுகளுக்குள் உள்ள து துவர்களுக்குப் சொன்னார் இல்லையா அந்த ஓடியோ வெகு விரைவில இங்கு யாழுக்கும்  வரும் பொறுங்க .

இவர் யாரை கேட்டு இனவழிப்பு இல்லை என்று சொன்னார் ?

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பெருமாள் said:

இன அழிப்பு ஒன்று நடக்கவேயில்லை என்று ஓடி ஓடி உலக நாடுகளுக்குள் உள்ள து துவர்களுக்குப் சொன்னார் இல்லையா அந்த ஓடியோ வெகு விரைவில இங்கு யாழுக்கும்  வரும் பொறுங்க .

இவர் யாரை கேட்டு இனவழிப்பு இல்லை என்று சொன்னார் ?

இது 2010இல் நடந்ததா?

Guest
This topic is now closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.