Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3   16 FEB, 2024 | 10:45 AM

image

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) இரவு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் அருகில் இருக்கும் வயோதிப பெண் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் வயோதிப பெண்ணின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

இந்நிலையில் அருகில் இருந்த சிசிரிவி கமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை  மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/176510

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொடூரமான கொலை மட்டும் அல்ல . சோறு போட்ட வீட்டுக்கு பெரிய நம்பிக்கை துரோகம். 😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுதான் "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது" என்பது........!  😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி, அறிமுகமில்லாத வேற்று மனிதர்களை வீட்டோடு சேர்த்துக்கொள்ளவோ குழந்தைகளை தொடவோ தூக்கி கொஞ்சவோ , மாமாக்கு ஒரு அவ்வா கொடுங்கோ என்று கேண தனமா உறவு கொண்டாட அனுமதிக்கவோ தனியாக எங்கும் அனுப்பி வைக்கவோ அனுமதிப்பது சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டுவதற்கு சமம்.

ஒருசில மேலைநாடுகளில் குறிப்ப்பிட்ட வயதுக்கு பின்னர் பெற்ற தந்தையே தன்னோட மகளுக்கு உடை மாற்றுவது சட்டப்படி குற்றம், ஆரம்பத்தில் என்னடா இது கேவலமான சட்டம் என்று தோன்றியது, பின்னர் பெற்ற மகள் மீதே கை வைத்த கேவலமான ஒரு சில மனிதர்களை பார்த்த பின்பு  சட்டம் பற்றி கேவலமா சிந்திச்சது நான்தான் என்று பின்பு தோன்றியது.

அஞ்சலிகள் அந்த பிஞ்சுக்கு.

  • Like 3
  • Thanks 1
Posted

இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது.

தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

யார் அந்தக் காவாலி?......

விஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்த அப்துல் ரகுமான் என்பவராவார்....

 

🔥🔥🔥

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நன்னிச் சோழன் said:

யார் அந்தக் காவாலி?......

விஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்த அப்துல் ரகுமான் என்பவராவார்....

 

🔥🔥🔥

இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்தப் பிஞ்சுக்கு என் அஞ்சலி . போதை காட்டிய பாதை. குழந்தைகள் எவ்வ்ளவு பாதுகாப்போடு வளர்க்க வேண்டுமென சொல்லி நிற்கிறது. எவனையும் நம்ப முடியாது.குழந்தைகளின்  எதிர்காலத்தை எண்ணி இந்த சமூகத்தை பார்த்து பயப்பிட வேண்டி இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைமன்னார் கிராமத்தில் காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - சந்தேகநபர் கைது

16 FEB, 2024 | 05:07 PM
image

மன்னார்- தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு காணாமல்போன நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

s2.gif

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த சிறுமி உள்ளடங்களாக சிறுமியின் சகோதரர்கள் 4 பேர் தலைமன்னார் கிராமத்தில் உள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வருகின்றனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் புத்தளம் மாவட்டம் பூங்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (16) இரவு குறித்த 10 வயதுடைய இயான்சி என்ற சிறுமி அம்மம்மாவின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, குறித்த சிறுமியை தேடி வந்துள்ளனர். 

மேலும் குறித்த தென்னை தோட்டத்தில் சென்று குறித்த சந்தேக நபரிடம் வினவிய போது தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த நிலையில் மீண்டும் தேடியுள்ளனர்.

s3.gif

பின்னர் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது குறித்த சிறுமியின் பின்னால் குறித்த நபர் செல்வது தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த நபரை பிடித்து விசாரணைகளுக்கு உட்படுத்தி  இரவு முழுவதும் தேடிய நிலையில் இன்றைய தினம் (16) அதிகாலை   சிறுமியின் உடல் குறித்த தனியார் தென்னந் தோட்டத்தின் பின் பகுதியில்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52)  குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

s5.gif

எனினும் குறித்த நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடல பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

s6.gif

இதேவேளை தலைமன்னார் கிராமத்தை  சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் குற்றவாளியை உடனடியாக தூக்கில் போடுமாறும் கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் கொலையாளிக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி  விசாரணைக்காக வருகை தந்த பதில் நீதவானிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

https://www.virakesari.lk/article/176554

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, இணையவன் said:

இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது.

தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது.

போதைவஸ்து ஒரு சாட்டு.

ஏன் பாட்டியை விட்டுட்டு பேத்தியைப் பிடித்துள்ளார்?

குழந்தைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

போதைவஸ்து ஒரு சாட்டு.

ஏன் பாட்டியை விட்டுட்டு பேத்தியைப் பிடித்துள்ளார்?

குழந்தைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவைக்கு பாட்டி வயது பிடிக்காதுங்கோ......நெத்தெலி தான் புடிக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, alvayan said:

அவைக்கு பாட்டி வயது பிடிக்காதுங்கோ......நெத்தெலி தான் புடிக்கும்..

இதுக்குத் தான் போதை ஒரு சாட்டு என்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நன்னிச் சோழன் said:

யார் அந்தக் காவாலி?......

விஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்த அப்துல் ரகுமான் என்பவராவார்....

 

🔥🔥🔥

 

3 hours ago, alvayan said:

இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழரென்றால் பாலியல் வல்லுறவு செய்திருக்க வாய்ப்பில்லை என்கிறீர்களோ ? 

 

1 hour ago, alvayan said:

அவைக்கு பாட்டி வயது பிடிக்காதுங்கோ......நெத்தெலி தான் புடிக்கும்..

இது கேலிக்குரிய விடயம் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, இணையவன் said:

இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது.

தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது.

 அவர்கள் போதை  வஸ்து வியாபாரத்திலேயே மும்முரமாக இருக்கும் பொது சமூக நலன் எங்கே வரப்போகுது. முதலில் இந்த அரசியல்வாதிகளை பிடித்து உள்ளே தள்ள வேண்டும். தமிழ் தேசியமாவது , அரசியலாவது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை: தலைமன்னாரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - என்ன நடந்தது?

இலங்கை 10 வயது சிறுமி கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 17 பிப்ரவரி 2024

இலங்கை தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் தனது போலியான அடையாளத்துடன் தலைமன்னார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி எப்படி உயிரிழந்தார்? யார் அந்த நபர்? என்ன சொல்கிறார்கள் காவல்துறையினர்?

நடந்தது என்ன?

மன்னார் - தலைமன்னார் பகுதியில், உயிரிந்த 10 வயது சிறுமியும், அவரது நான்கு சகோதரர்களும், தங்களின் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புத்தளம்-பூங்குளம் பகுதியில் தொழில் செய்து வருகின்றனர். அதனால், அவர்களின் ஐந்து குழந்தைகளும் தங்களின் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 15) அன்று மாலை, இந்த 10 வயத சிறுமி அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார்.

வர்த்தக நிலையத்திற்கு சென்ற சிறுமி, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனையடுத்து, அவரது உறவினர்களை, அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

பல மணித்தியாலங்கள் தேடல் தொடர்ந்த போதிலும், சிறுமி தொடர்பான எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, சிறுமியின் பாட்டி உள்ளிட்ட உறவினர்கள், தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் அன்று மாலையே புகார் செய்துள்ளனர்.

தொடர்ந்து, தலைமன்னார் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து, சிறுமியை தேடியுள்ளனர்.

எனினும், சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, போலீசார் அருகிலுள்ள சிசிடிவி கமராக்களை ஆராய்ந்துள்ளனர். அதில், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர், சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதை போலீசார் கண்டறிந்தனர்.

சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற நபர், அப்பகுதியில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் நபர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்

 
சிறுமி கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெயர் மாற்றி வாழ்ந்த வந்த சந்தேக நபர்

சந்தேகத்திற்கிடமான வைகயில் சிறுமியை பின்தொடர்ந்த நபர், திருகோணமலை-குச்சவெளி பகுதியைச் சேர்ந்த கே.வி.அப்துல் ரகுமான்(52) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அவரது அனைத்து அடையாள அட்டையிலும், அவரது பெயர் கே.வி அப்துல் ரகுமான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவர் விஜேந்திரன் என்ற பெயரிலேயே வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் கூறினர்.

அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள தென்னைத் தோட்டம் ஒன்றில், காணாமல் போன 10 வயது சிறுமியின் சடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.

 
சந்தேகப்படும் நபர் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாரா?

சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

காணாமல் போன சந்தர்ப்பத்தில் சிறுமி பெண்கள் அணியும் நீளமான சட்டையொன்றை அணிந்திருந்த நிலையில், சிறுமி அரை நிர்வாணமாக மீட்கப்பட்டார் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தில் காணப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு வருகைத் தந்த மன்னார் மாவட்ட நீதவான், விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரியும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை நடத்தியுள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

இந்த விசாரணைகளை அடுத்து, சடலம் மன்னார் மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

 
சிறுமி கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம்

சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமன்னார் பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

சிறுமியை கொலை செய்த குற்றவாளி உடனடியாக தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அத்துடன், இந்த குற்றவாளிக்கு விரைவில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான மகஜரொன்றை பிரதேச மக்கள் நீதவானிடம் வழங்கியுள்ளனர்.

 

இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா
படக்குறிப்பு,

இளையதம்பி தம்பையா, மூத்த வழக்கறிஞர்

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருப்பது இந்த காலப் பகுதியில் அத்தியாவசியமானது என மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

அத்துடன், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பெற்றோர் சிறுவர்களுக்கு தெளிவூட்டி வைத்தல் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தெளிவூட்டல்களை பெற்றுக்கொள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொள்ள வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cw0rk2y74ero

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னாரில் 10 வயது சிறுமி கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Published By: DIGITAL DESK 3   19 FEB, 2024 | 03:49 PM

image

மன்னார், தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை பொலிஸார்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (19) பொலிஸாரினால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

இதன்போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/176772

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஏராளன் said:

மன்னாரில் 10 வயது சிறுமி கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Published By: DIGITAL DESK 3   19 FEB, 2024 | 03:49 PM

image

மன்னார், தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை பொலிஸார்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (19) பொலிஸாரினால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

இதன்போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/176772

அந்த கொலை காரன் சார்பாக யார் ஆஜர் ஆகியது என்று எழுதினால் நல்லது.  நாமும் தெரிந்து கொள்ளலாம்.

எப்படியோ கொலை காரனுக்கு தண்டனை வழங்கினால் நீதிமன்றத்துக்கு ரிஸ்ர்ட் பதியுதீனின் ஆட்களால் கல்லெறி நிச்சயம். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைமன்னாரில் 10 வயது சிறுமி கொலை : சிறுமியின் தாய், தந்தை, பாட்டி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை : சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

29 FEB, 2024 | 05:04 PM
image

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி, கடந்த 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். 

இச்சம்பவம் தொடர்பில் கைதான, அதே கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கடந்த 19ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், சந்தேக நபரை 29ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, சந்தேக நபர் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை, அம்மம்மா உள்ளிட்ட 5 பேரை நீதவான் விசாரணை செய்தார். 

அதையடுத்தே, சந்தேக நபரின் விளக்கமறியலை மார்ச் 7ஆம் திகதி வரை நீட்டித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177610

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/2/2024 at 16:56, ஏராளன் said:

அவரது அனைத்து அடையாள அட்டையிலும், அவரது பெயர் கே.வி அப்துல் ரகுமான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவர் விஜேந்திரன் என்ற பெயரிலேயே வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் கூறினர்.

சில தப்புக்களை செய்ய அடையாளங்களை மாற்றி செய்ய வேண்டிய நிலை ....

சந்தேக நபர் திட்டமிட்டு பெயரை மாற்றி அந்த கிராமத்தில் வாழ்ந்திருக்கின்றார் ,,,

பொலிசார் இது பற்றி தீவிரமாக விசாரனை செய்ய வேண்டும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனது அடையாளத்தை மாற்றி திட்டமிட்டே இவர் இப்படியான செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளார். போதை அவருக்கு உற்சாகமும் துணிவும் கொடுத்து இருக்கும். தக்க  தண்டனை கொடுத்து  இப்படியான சிந்தனை உள்ளவர்களை செய்யாமல் தடுக்க சட்டம் உதவ வேண்டும். 
எந்த இனத்தவர் இப்படி செய்தார் என ஆராய்ந்து என்ன நடக்க போகிறது? சகல  இனத்தவர்களும் இப்படியான செயலில் ஈடுபடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைமன்னார் சிறுமி கொலை: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

mannar-300x200.jpg

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மன்னார் நீதவான் சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சான்றுப்பொருட்களின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்காகவும், சிறுமியின் மரண விசாரணை முடிவுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியலும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, தலைமன்னார் ஊர்மனை கிராம மக்களும், ஆலய பங்குத் தந்தையும் பிரசன்னமாகியிருந்தனர்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த மாதம்15 ஆம் திகதி மாலை காணாமற்போன 10 வயது சிறுமியின் சடலம், மறுநாள் தென்னந்தோப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த 52 வயதான ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

https://thinakkural.lk/article/294867

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கஞ்சா கடத்தல் அதே காலப்பகுதியில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் ..குற்றவாளிகள் சிலர் 50 ,60 வயது உடையவர்கள் ...என்ன தான் நடகின்றது ...

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைமன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை : தடுப்பு காவலில் இருந்து தப்பிச் சென்றவர் 6 மாதங்களின் பின் கைது!

16 DEC, 2024 | 05:43 PM
image

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேககபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மீண்டும்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,  

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளார். 

தப்பிச் சென்ற சந்தேகநபர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

தலைமன்னார்  பொலிஸார் தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இன்று  திங்கட்கிழமை (16) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பிண்ணனி

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந் தோப்பில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீதான பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

குறித்த கொலை தொடர்பாக தோட்டத்தில் வேலை செய்த  55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இந்நிலையில், சந்தேகநபர் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளை, வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார். 

கடந்த 6 மாதங்களாக குறித்த நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/201446



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.