Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

Screenshot-2024-03-10-at-2.21.29%E2%80%A

கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியை பார்வையிட நேரில் சென்றுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. மைதானத்திற்கு வருகை தந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி மைதானத்திற்கு வருகை தந்த மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண வந்திருந்த மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான அநுராத ஜயரத்ன, ரவி கருணாநாயக்க மஹிந்தானந்த அலுத்கமகே, ஹர்ஷ டி சில்வா மற்றும் சாகல ரத்நாயக்க, எம். ஏ. சுமந்திரன், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

https://akkinikkunchu.com/?p=270716

  • Replies 64
  • Views 5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    சுமந்திரனின் இறுதி இலக்கு அமைச்சர் பதவி. அதற்காக அவர் படிப்படியா உழைச்சுக் கிட்டு தான் இருக்கார். புலி நீக்கவாதி தமிழ் தேசிய நீக்கவாதி மாவீரர் நீக்கவாதி மிதவாதி சிங்கள பெ

  • இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை.  அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன்.  இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை  கிடைத்துவிடும் என்பது போன்ற மாயைய

  • முதலே நான் குறிப்பிட்டது போல, கேள்விகளுக்குப் பதில் வராது. ஏன்? இவர்கள் சுமந்திரன் மீது சாட்டும் குற்றங்களின் தோற்றுவாய் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு வந்தவையல்ல, வேறு தோற்றுவாய்கள், வெளியே சொல்ல தயங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் இறுதி இலக்கு அமைச்சர் பதவி.

அதற்காக அவர் படிப்படியா உழைச்சுக் கிட்டு தான் இருக்கார்.

புலி நீக்கவாதி

தமிழ் தேசிய நீக்கவாதி

மாவீரர் நீக்கவாதி

மிதவாதி

சிங்கள பெளத்த பேரின புகழ்வாதி

சொறீலங்கா.. எக்க ராஜ்ஜய வாதி

ஜனாதிபதி சட்டவாதி

தமிழசுக் கட்சி சுவீகரிப்புவாதி

புலி இனச்சுத்திகரிப்பு வாதி

இப்படி பல வாதங்களோடு ஏன் வலம் வந்து கொண்டிருக்கிறார்..

எப்பவும் ரணிலுக்கு பின்னால் பக்கத்தில் தான் நிற்பார். அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

டக்கி இலக்கம் 2 தயாராகி கொண்டிருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் Colombo Royal College ன் பழைய மாணவர். ரணிலும் பழைய மாணவர் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலைக் கடந்து அரசியலில் வெவ்வேறுகட்சியைச் சேர்ந்தவர்கள்  ஒரு விளையாட்டுப்போட்டியை  இணைந்து பார்ப்பதும் ஒரு பொது நிகழ்சசியில் கைகுலுக்கிக் கொள்வதும் Zivilisation அடைந்த மக்கள் வாழும் மேற்கு நாட்டு அரசியல்வாதிகளின் பழக்கவழக்கம். அதை  இலங்கை போன்ற நாடுகளில் ஐயோ  அதுவும் தமிழ் அரசியல்வாதி செய்வது மன்னிக்கமுடியாத குற்றம்.  

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேணும் அரசியலை அரசியலாக பார்க்கவேணும் ...யாழ் களத்தில் நான் படிச்ச பாடங்களில் ஒன்று....

புட்டினும் ரொனால்ட் டிரம்பும் கை குழுக்கி வியாபாரம் பண்ணுவது போல் இதுவும் ஒன்று ...

கஞ்சா மாபியா தலைவன் பொலிஸ் அதிகாரிகள்,முதலமைச்சர் ஆகியோருடன் படம் பிடித்து பொக்கற்றுக்குள் வைத்து கொள்வான் தேவை ஏற்படின் அந்த படத்தை காட்டி தப்பித்துக் கொள்வான்....

அது போல இவரும் தேவை ஏற்படின் ..ஐ .நா...
மற்றும் மந்திரி பதவி ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nedukkalapoovan said:

எப்பவும் ரணிலுக்கு பின்னால் பக்கத்தில் தான் நிற்பார். அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

டக்கி இலக்கம் 2 தயாராகி கொண்டிருக்குது. 

சுமந்தினார் அரசியலுக்கு வந்தவுடனையே சின்னக் கதிர்காமர் எண்ட பட்டம் குடுத்தது  எல்லோ 😂

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சுமந்தினார் அரசியலுக்கு வந்தவுடனையே சின்னக் கதிர்காமர் எண்ட பட்டம் குடுத்து  எல்லோ 😂

இனி பெரிய கதிர்காமர் என வழங்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை சேர்ந்திருந்து பார்க்கும்போதும் நான் யாருடைய பிரதிநிதி என்பதை ரணில் ஒரு போதும் மறக்கமாட்டார். ஆனால் எம்மவர்கள். . ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

சுமந்திரன் Colombo Royal College ன் பழைய மாணவர். ரணிலும் பழைய மாணவர் என நினைக்கிறேன். 

ஒரே கல்லுரி பழைய மாணவர்கள் தங்கள் கல்லுரி கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது கூட ஒன்றாக இருக்க கூடாது என்று தமிழ் தேசிய கோட்பாடு சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஒரே கல்லுரி பழைய மாணவர்கள் தங்கள் கல்லுரி கிரிக்கெட் போட்டியை பார்க்கும் போது கூட ஒன்றாக இருக்க கூடாது என்று தமிழ் தேசிய கோட்பாடு சொல்கின்றது.

தமிழ்த் தேசியம் எங்கே சொல்கிறது? 

தமிழ்த் தேசியம் பேசும் மடையர்கள் சொல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுமத்தர் ரணிலுடன் விளயாட்ட பார்ப்பது பிரச்சனையல்ல முதலில் அவரின் சுயம் எது ? என்பதை தமிழ்  மக்கள் தெரிந்து கொள்ளனும் .

தனக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று பொய்யான செய்தியை சொல்லி புனர்வாழ்வு அளிக்கபட்ட போரில் அங்கவீனர் ஆகிய முன்னாள் புலி போராளிகளை சிங்கள அரசிடம் சொல்லி சிறையில் இட்டு தனக்கு பாதுகாப்புக்கு அதிரடி படையை பெற்றுகொண்டார்  அதே  (இன்னமும் அவர்கள்  சிறையில் தான் உள்ளார்கள் ) அதிரடி படையுடன் மாவீரர் நாளில் போராளி வீட்டுக்குள் சென்று மாவீரர் தினத்தை கடைபிடிப்பார். 

உலகிலே பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியவர் ஒரே ஒரு நாளில் நெல் விதைத்து அடுத்த சிலமணி நேரம்களில் வளர்ந்த நெல்லில் பொங்கல் செய்து காட்டியவர் இந்த பிழைப்புக்கு  யாழ்பாணம் பஸ் ஸ்டாண்டில் துண்டை விரித்து பிச்சை எடுத்து இருக்கலாம் .

சிங்களவர்களுடன் வாழ்வதே தனக்கு சந்தோசம் என்பவர் முறையான தேர்தலில் வராமல் பின்கதவால் தமிழர் அரசியலுக்குள் வந்து எண்ணற்ற இழப்புகளையும் இழந்து போயிருந்த தமிழருக்கு கிடைக்கவேண்டிய நியாமான தீர்வுகளை சர்வதேச விசாரணை முடிவுகளை குழப்பியடித்தவர் .

இலங்கை தமிழர்களில் தனக்கு மட்டுமே ஆங்கிலமும் சிங்களமும் எழுத வாசிக்க கதைக்க தெரியும் என்று நம்புபவர் அதை தனது விசுவாசிகளுக்கும் சொல்லி வைத்திருப்பார் ஆனால் பொது மேடையில் இலங்கையின் சட்ட புத்தகம் படிக்க தெரியாமல் உளறுவார் .

மேலே உள்ள வைக்கு எதிர் வாதம் செய்ய வருவோர் தயவு செய்து சுமத்திரன் தமிழர்  அரசியலுக்கு வந்து  கடந்த 14 வருடத்தில்  தமிழர்கள் பெற்றுக்கொண்ட ஒரு நன்மையை சொல்லிய பின் கருத்துக்களை வைப்பது நல்லது .

 தமிழர் இன அழிப்பை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகள் சிங்கள அரசியல்வாதிகள் நிம்மதியாக உறங்க செல்கிறார்கள் என்றால்   காரணம் இவர் மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்

27/02/24 தாயார் மரணம்

01/03/24 இறுதிக் கிரிகைகள்

10/03/24 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர் சானாதிபதியுடன்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2024 at 20:13, Kapithan said:

தமிழ்த் தேசியம் எங்கே சொல்கிறது? 

தமிழ்த் தேசியம் பேசும் மடையர்கள் சொல்கிறார்கள். 

இந்த கருத்து ஆட்சேபனைக்கு உரியது ...😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இந்த கருத்து ஆட்சேபனைக்கு உரியது ...😁

ஏன்? 

On 11/3/2024 at 07:43, பெருமாள் said:

இங்கு சுமத்தர் ரணிலுடன் விளயாட்ட பார்ப்பது பிரச்சனையல்ல முதலில் அவரின் சுயம் எது ? என்பதை தமிழ்  மக்கள் தெரிந்து கொள்ளனும் .

தனக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று பொய்யான செய்தியை சொல்லி புனர்வாழ்வு அளிக்கபட்ட போரில் அங்கவீனர் ஆகிய முன்னாள் புலி போராளிகளை சிங்கள அரசிடம் சொல்லி சிறையில் இட்டு தனக்கு பாதுகாப்புக்கு அதிரடி படையை பெற்றுகொண்டார்  அதே  (இன்னமும் அவர்கள்  சிறையில் தான் உள்ளார்கள் ) அதிரடி படையுடன் மாவீரர் நாளில் போராளி வீட்டுக்குள் சென்று மாவீரர் தினத்தை கடைபிடிப்பார். 

உலகிலே பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியவர் ஒரே ஒரு நாளில் நெல் விதைத்து அடுத்த சிலமணி நேரம்களில் வளர்ந்த நெல்லில் பொங்கல் செய்து காட்டியவர் இந்த பிழைப்புக்கு  யாழ்பாணம் பஸ் ஸ்டாண்டில் துண்டை விரித்து பிச்சை எடுத்து இருக்கலாம் .

சிங்களவர்களுடன் வாழ்வதே தனக்கு சந்தோசம் என்பவர் முறையான தேர்தலில் வராமல் பின்கதவால் தமிழர் அரசியலுக்குள் வந்து எண்ணற்ற இழப்புகளையும் இழந்து போயிருந்த தமிழருக்கு கிடைக்கவேண்டிய நியாமான தீர்வுகளை சர்வதேச விசாரணை முடிவுகளை குழப்பியடித்தவர் .

இலங்கை தமிழர்களில் தனக்கு மட்டுமே ஆங்கிலமும் சிங்களமும் எழுத வாசிக்க கதைக்க தெரியும் என்று நம்புபவர் அதை தனது விசுவாசிகளுக்கும் சொல்லி வைத்திருப்பார் ஆனால் பொது மேடையில் இலங்கையின் சட்ட புத்தகம் படிக்க தெரியாமல் உளறுவார் .

மேலே உள்ள வைக்கு எதிர் வாதம் செய்ய வருவோர் தயவு செய்து சுமத்திரன் தமிழர்  அரசியலுக்கு வந்து  கடந்த 14 வருடத்தில்  தமிழர்கள் பெற்றுக்கொண்ட ஒரு நன்மையை சொல்லிய பின் கருத்துக்களை வைப்பது நல்லது .

 தமிழர் இன அழிப்பை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகள் சிங்கள அரசியல்வாதிகள் நிம்மதியாக உறங்க செல்கிறார்கள் என்றால்   காரணம் இவர் மட்டுமே .

உங்கள் முடிவுகள் facts ன் அடிப்படையில் வந்தவை அல்ல. 

வெறுப்பின் அடிப்படையில் வந்தவை. 

ஆத்திரத்தில் புத்தி வேலை செய்வதில்லை என்பார்கள். அது வெறுப்பை உமிழ்பவர்களுக்கும் பொருந்தும். 

1 hour ago, MEERA said:

27/02/24 தாயார் மரணம்

01/03/24 இறுதிக் கிரிகைகள்

10/03/24 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர் சானாதிபதியுடன்

பொறுப்பைச் சுமப்பவர்களுக்கு (responsibilities) மனிதப்  பலவீனங்களை கையாளும் ஆற்றல் உண்டு. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பொறுப்பைச் சுமப்பவர்களுக்கு (responsibilities) மனிதப்  பலவீனங்களை கையாளும் ஆற்றல் உண்டு. 

😁

இல்லை சும்மிடம் அறவே கிடையாது...முழுப் பதவிமோகமும் ..பணத்தாசையும்தாசையும் உண்டு...தமிழரசுக்கட்டிசியை  இயங்கா நிலைக்கு ஆக்கியது...அம்மா  செத்து 10 நாள் ஆகுமுன் நரியுடன்

சேர்ந்து கிரிக்கட்டு பார்த்தது...அதன் பலன் இன்று தனிப்பட்ட அழைப்பில்  ஐ. எம் .எஃப்... மீட்டிங்கில் கலந்து கொண்டது...இதன்மூலம் ..பெரும் பணம் பெற்றிருப்பார்..அது அவர் உழைப்பு..உதைப்பு நம்மினத்திற்கு என்பதை கிஞ்சித்தும் யோசிக்க மாட்டார்....அதுசரி ..சுமாவுக்கு முட்டுக்கொடுப்பதில் கரிசனை உள்ள நீங்கள்.... இட்டிலிக்கு சட்டினி மாதிரி..அடிக்கை தமிழினத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பதிவையும் போட்டு நல்லவனாக நடிக்கிறீங்களே ... இது என்ன டிசைனுக்குள்  வருகிறது சார்.. சொல்லமுடியுமா

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

தங்களைப் போன்ற சிலரால் அரசியலுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்கா சும் வெறுக்கப்படுகிறார் என நம்புவதால்  முட்டுக் கொடுக்கிறேன் . 

போதுமா? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

உங்கள் முடிவுகள் facts ன் அடிப்படையில் வந்தவை அல்ல. 

வெறுப்பின் அடிப்படையில் வந்தவை. 

ஆத்திரத்தில் புத்தி வேலை செய்வதில்லை என்பார்கள். அது வெறுப்பை உமிழ்பவர்களுக்கும் பொருந்தும். 

முதலில் இந்த facts  என்பதன் அர்த்தம் என்ன அந்த சொல் எங்கு பாவிக்கப்பட வேண்டியது என்பதை அறிந்து பாவியுங்கள் .

11 hours ago, MEERA said:

27/02/24 தாயார் மரணம்

01/03/24 இறுதிக் கிரிகைகள்

10/03/24 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர் சானாதிபதியுடன்

அவருக்கு சிங்களவர்களுடன் கூடி குலாவுவதே பிடிக்கும் என்று சொன்னவர் ஆனால் இவ்வளவு தீவிரமாய் இருப்பார் என்று நினைக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

இல்லை சும்மிடம் அறவே கிடையாது...முழுப் பதவிமோகமும் ..பணத்தாசையும்தாசையும் உண்டு...தமிழரசுக்கட்டிசியை  இயங்கா நிலைக்கு ஆக்கியது...அம்மா  செத்து 10 நாள் ஆகுமுன் நரியுடன்

சேர்ந்து கிரிக்கட்டு பார்த்தது...அதன் பலன் இன்று தனிப்பட்ட அழைப்பில்  ஐ. எம் .எஃப்... மீட்டிங்கில் கலந்து கொண்டது...இதன்மூலம் ..பெரும் பணம் பெற்றிருப்பார்..அது அவர் உழைப்பு..உதைப்பு நம்மினத்திற்கு என்பதை கிஞ்சித்தும் யோசிக்க மாட்டார்....அதுசரி ..சுமாவுக்கு முட்டுக்கொடுப்பதில் கரிசனை உள்ள நீங்கள்.... இட்டிலிக்கு சட்டினி மாதிரி..அடிக்கை தமிழினத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பதிவையும் போட்டு நல்லவனாக நடிக்கிறீங்களே ... இது என்ன டிசைனுக்குள்  வருகிறது சார்.. சொல்லமுடியுமா

இந்தக் கிரிக்கெற் பார்க்கவும், கூட்டத்திற்குப் போகவும் பணம் பெற்றுக் கொண்டது பற்றி ஏதாவது செய்திகள், ஆதாரங்கள் இருக்கின்றனவா? அல்லது கடந்த காலத்தில் ஒரு தமிழ் தரப்பு அமைப்பு பணம் பெற்றுக் கொண்டு மகிந்தவை வெல்ல வைத்தார்கள் என்பது போல ஒரு வதந்தியா? அறிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்😎.

  • கருத்துக்கள உறவுகள்

நோ கொமன்ஸ்.  சிம்பிளி வேஸ்ற். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நோ கொமன்ஸ்.  சிம்பிளி வேஸ்ற். 🤣

இது பல ஆண்டுகளாக நடக்கிற "வேஸ்ற் வெற்று" உரையாடல். இதற்கு பதில்கள்  சொல்வதை விட கேள்விகள் கேட்டால் கம் மென்று போய் விடுவினம், எங்களுக்கும் நேரம் மிச்சம்!

பெருமாள் மேலே சொன்ன சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு சுமந்திரன் போட்டதல்ல, சுமந்திரனின் முறைப்பாட்டினால் பொலிஸ் போட்டதும் அல்ல! பொலிஸ் புலனாய்வுப் பிரிவு போட்ட கிரிமினல் வழக்கு. இதைச் சுமந்திரன் போட்டதாகச் சொன்ன பெருமாளிடம், அதற்குரிய கோர்ட், பொலிஸ் முறைப்பாட்டு ஆதாரத்தைத் தரும்படி 2 ஆண்டுகள் முன்பு கேட்டிருந்தேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் - ஆள் எதையும் தேடுவதில் கில்லாடி, ஆனால் கண்டு பிடிப்பதில் அவ்வளவு சிறப்பானவர் அல்ல😂!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை.  அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன்.  இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை  கிடைத்துவிடும் என்பது போன்ற மாயையைக் கட்டமைக்க இவர்களுக்கு சுமந்திரன் தேவை. முன்பென்றால் ஒரு வில்லன் போரடித்தவுடன் அவரைப் போட்டு தள்ளிவிட்டு அடுத்த வில்லனைக் கட்டமைக்கலாம்.   இப்போது அதை செய்யமுடியாது என்ற விரக்தி சுமந்திரன்போகுமிடமெல்லாம் பின்னால் திரிந்து திரிந்து குலைக்க வேண்டிய பரிதாப நிலை. 😂 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, MEERA said:

27/02/24 தாயார் மரணம்

01/03/24 இறுதிக் கிரிகைகள்

10/03/24 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர் சானாதிபதியுடன்

உலக வழக்க ரீதியாக தமது துக்கத்தை ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கடைப்பிடிப்பார்கள்.
சுமந்திரன் சார்  இன்றிருப்பார் நாளை இல்லை என்ற கொள்கை உடையவர் போல...😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, island said:

இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை.  அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன்.  இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை  கிடைத்துவிடும் என்பது போன்ற மாயையைக் கட்டமைக்க இவர்களுக்கு சுமந்திரன் தேவை. முன்பென்றால் ஒரு வில்லன் போரடித்தவுடன் அவரைப் போட்டு தள்ளிவிட்டு அடுத்த வில்லனைக் கட்டமைக்கலாம்.   இப்போது அதை செய்யமுடியாது என்ற விரக்தி சுமந்திரன்போகுமிடமெல்லாம் பின்னால் திரிந்து திரிந்து குலைக்க வேண்டிய பரிதாப நிலை. 😂 

எல்லாம் போர் குற்றங்களை விசாரிக்க தவணை கேட்டதின் பலாபலன்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எல்லாம் போர் குற்றங்களை விசாரிக்க தவணை கேட்டதின் பலாபலன்கள்...

சுமந்திரன் உட்பட தற்போதைய அரசியல்திவாதிகள் எல்லோருமே பயன்றற வெறும் வெற்றுக்கோஷங்களை முன்னிறுத்திய அரசியலை மட்டுமே செய்கிறார்கள் என்பதே எனது பார்வை. மக்களின் அன்றாட பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க முடியாத வெத்து வேட்டுகள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  மக்களின் நடைமுறைப் பிரச்சனைகளை தீர்க்கும் விடயத்தில் டக்லஸ் செய்வதைக் கூட செய்ய வலுவற்ற வெத்து வேட்டுகளாகவே சுமந்திரன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். 

ஆனால், யுத்தக்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிமன்றத்தை நோக்கி வழக்கு தொடுக்க மேற்குநாடுகள் முன்வந்த போது சுமந்திரன் என்ற தனி நபர் அதை தடுத்துவிட்டார் என்பதற்கான நம்பகமான எந்த செய்தியையும் சர்வதேச ஊடகங்களில் நான் காணவில்லை.  அப்படியான நம்பகரமான அனைத்துலக ஊடகச் செய்தி இருந்தால் இணைத்தால் நானும் அதை வாசிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சுமந்திரன் உட்பட தற்போதைய அரசியல்திவாதிகள் எல்லோருமே பயன்றற வெறும் வெற்றுக்கோஷங்களை முன்னிறுத்திய அரசியலை மட்டுமே செய்கிறார்கள் என்பதே எனது பார்வை. மக்களின் அன்றாட பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க முடியாத வெத்து வேட்டுகள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  மக்களின் நடைமுறைப் பிரச்சனைகளை தீர்க்கும் விடயத்தில் டக்லஸ் செய்வதைக் கூட செய்ய வலுவற்ற வெத்து வேட்டுகளாகவே சுமந்திரன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். 

ஆனால், யுத்தக்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிமன்றத்தை நோக்கி வழக்கு தொடுக்க மேற்குநாடுகள் முன்வந்த போது சுமந்திரன் என்ற தனி நபர் சுமந்திரன்  அதை தடுத்துவிட்டார் என்பதற்கான நம்பகமான எந்த செய்தியையும் சர்வதேச ஊடகங்களில் நான் காணவில்லை.  அப்படியான நம்பகரமான அனைத்துலக ஊடகச் செய்தி இருந்தால் இணைத்தால் நானும் அதை வாசிக்கலாம். 

சுமந்திரன் என்ற தனி நபர் சுமந்திரன்  அதை தடுத்துவிட்டார் 

அவர் தனி நபர் அல்ல தமிழரின் பிரதிநிதி.  தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

இதுக்கும் ஆதாரங்கள் வேண்டுமா??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.