Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
22 MAR, 2024 | 07:16 AM
image
 
கனடாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை 23 சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமைகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளார்.

கனடாவுக்கு சென்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-03-22_at_7.03.58_AM.கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ஸ் எல்லோருக்கும் கொடி பிடிக்கும் நோய் உள்ளது போலத் தென்படுகிறது. 

☹️

Posted

நிறைய சிங்களவர்களும் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, Kapithan said:

கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ஸ் எல்லோருக்கும் கொடி பிடிக்கும் நோய் உள்ளது போலத் தென்படுகிறது. 

☹️

ஏன் அதை தப்பாக பார்க்கிறீர்கள்?

1000 பேர் நின்றாலும் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாது.

ஆனால் 10 பேர் நின்றாலும் ஒரு கொடி இருந்தால் யார் என்று தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் அதை தப்பாக பார்க்கிறீர்கள்?

1000 பேர் நின்றாலும் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாது.

ஆனால் 10 பேர் நின்றாலும் ஒரு கொடி இருந்தால் யார் என்று தெரிந்துவிடும்.

நீங்கள்  சொல்வது இங்கு நல்ல பொருத்தமே....

லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க மத்திய அரசின் செயலகம் (Federal Building) ஒன்றுள்ளது. அதைச் சுற்றி தினமும் இங்கு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் உலகில் உள்ள எல்லோராலும் நடத்தப்படும். சுற்றிவர இருக்கும் நடைபாதையில் நின்று கோஷங்கள் எழுப்பலாம், ஆனால் புல்லுக்குள் கால் வைக்கக்கூடாது...

எவரும் கொடி பிடித்தும் நான் பார்த்ததில்லை. அது ஒரு சட்டமாக, ஒழுங்காகக் கூட இருக்கலாம். இஸ்ரேலியர்கள் ஒரு பக்கம் நின்று கோஷம் போடுவார்கள், பலஸ்தீனியர்கள் இன்னொரு பக்கத்தில் நின்று கோஷம் போடுவார்கள். கொடிகள் இல்லாததால், பல சமயங்களில் எங்களால் யார் யார் எவர் எவர் என்று கண்டு பிடிக்கிறது என்பது இயலாத காரியம்.

2009ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னும், தமிழ் மக்கள் ஒரு பக்கமும், சிங்கள மக்கள் இன்னொரு பக்கமும் நின்று கோஷங்கள் எழுப்பியிருக்கின்றார்கள். இலங்கைத் துணைத் தூதரகம் அருகிலேயே உள்ளது. அவர்கள் வந்து படம் எடுப்பார்கள். பின்னர் எங்காவது அது செய்தியாக வரும். அது ஒரு காலம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் அதை தப்பாக பார்க்கிறீர்கள்?

1000 பேர் நின்றாலும் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாது.

ஆனால் 10 பேர் நின்றாலும் ஒரு கொடி இருந்தால் யார் என்று தெரிந்துவிடும்.

அவர்கள் இங்கே வருவது எங்கள் புலம்பெயர்ஸ்😉 ஐச் சந்திக்க. 

கொடி பிடித்தால் வேலைக்காகுமா? 

முதற்கோணல் முற்றும் கோணல். . 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

நிறைய சிங்களவர்களும் உள்ளார்கள்.

கனடாவில் தமிழர்கள் போல் தாமும் பலமாக இருக்கின்றோம் என சிங்களவர்களும் காட்ட வருகின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, குமாரசாமி said:

கனடாவில் தமிழர்கள் போல் தாமும் பலமாக இருக்கின்றோம் என சிங்களவர்களும் காட்ட வருகின்றார்களா?

 இல்லை. Banner ல் தமிழும் சிங்களமும் இருக்கிறது. 

இந்தக் கொடிபிடிப்பு  அவர்களது /JVP ஆதரவாளர்களின் முதிர்ச்சியற்ற செயலைக் காட்டுகிறது. 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kapithan said:

 இல்லை. Banner ல் தமிழும் சிங்களமும் இருக்கிறது. 

இந்தக் கொடிபிடிப்பு  அவர்களது /JVP ஆதரவாளர்களின் முதிர்ச்சியற்ற செயலைக் காட்டுகிறது. 

தமிழை சும்மா சாத்திரத்துக்கு வைச்சிருக்கினம்.😁

Posted
38 minutes ago, குமாரசாமி said:

கனடாவில் தமிழர்கள் போல் தாமும் பலமாக இருக்கின்றோம் என சிங்களவர்களும் காட்ட வருகின்றார்களா?

2021 ல் 33000 சிங்களவர்கள் கனடா முழுவதும் உள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது. அதிலும் ரொரண்டோவில் செறிந்து வாழ்கிறார்கள். மேலே உள்ள படத்தில் 25 பேரளவில் உள்ளார்கள். நாம் கூட இருப்பதால் பெரிதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்(canada) ஈடுபடுவதில்லை.
2001( சரியான ஆண்டாக இருக்குமென நினைக்கிறேன்) ம் ஆண்டில் சக்கரமென்றோவில்(sacaramento, USA) உருத்திரகுமாரனால் ஒரு கூட்டம் புலிகள் சார்பாக நடாத்தப்பட்டது. அப்போ நிறைய சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் அவர்களை கலைந்து போக செய்தார்கள். அனுமதியுடன் நடக்கும் கூட்டத்தை குழப்ப முடியாது என பொலிசார் கூறினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, nunavilan said:

என்றோ ஒரு நாள் சிங்களவர்களும் சம /மேலதிக பலத்துடன் இருப்பார்கள். அதை இனவாத அரசே முன்னின்று செய்யும். காரணம் சிங்கள இனவாத அரசிற்கு கண்ணை குத்துவது கனடா தமிழர்கள் தான்.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

தமிழை சும்மா சாத்திரத்துக்கு வைச்சிருக்கினம்.😁

வருவதே புலம்பெயர்ஸ் ஐச் சந்திக்கத்தான்.

ஆனால் வருமுன்னரே அவர்களது திட்டம் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

வருவதே புலம்பெயர்ஸ் ஐச் சந்திக்கத்தான்.

ஆனால் வருமுன்னரே அவர்களது திட்டம் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. 

🤨

அந்த புலன்பெயர்ஸ்களின்ர நோக்கம் என்ன?
2009 முடிவு அவையளுக்கு வெற்றி தானே? இனியும் என்ன வேணுமாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

என்றோ ஒரு நாள் சிங்களவர்களும் சம /மேலதிக பலத்துடன் இருப்பார்கள். அதை இனவாத அரசே முன்னின்று செய்யும். காரணம் சிங்கள இனவாத அரசிற்கு கண்ணை குத்துவது கனடா தமிழர்கள் தான்.

உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .

  • Like 2
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பெருமாள் said:

..............இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க

சோம்பேறித்தனம்.  பிள்ளைகள் பெறுவதில் இல்லை  அதில் அவர்கள்  சுறுசுறுப்பானவர்கள். 🤣😀😂 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

சோம்பேறித்தனம்.  பிள்ளைகள் பெறுவதில் இல்லை  அதில் அவர்கள்  சுறுசுறுப்பானவர்கள். 🤣😀😂 

இனி அதிலும் சிலோவாக மாறுவர்கல் காரணம் பொருளாதார பிரச்சனை தொண்டை மட்ட்டும் அடைக்கும் .

1 minute ago, பெருமாள் said:

இனி அதிலும் சிலோவாக மாறுவர்கல் காரணம் பொருளாதார பிரச்சனை தொண்டை மட்ட்டும் அடைக்கும் .

சில எழுத்து பிழைகள் வேணும் என்றே விடபட்டு உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவுக்கு போன அனுரா, அனுபவமுள்ள ஒருவரை கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லையா? அல்லது அசம்பாவிதத்தை தவிர்த்துக்கொண்டாரோ? அது சரி... இலங்கையிலேயேதானே  தேர்தல் வரப்போகுது, இவர் ஏன் கனடாவுக்கு பிரச்சாரம் செய்யப்போனார்? கோத்தா போல் வாக்காளர்களை இறக்குமதி செய்யபோகிறாரோ?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இலங்கையிலிருந்து கியூபாவுக்கும் வடகொரியாவுக்கும் போகாமல், காபிடலிஸ்ட் நாடுகளுக்குப் போய் அங்கிருந்து இலங்கையில் சோஷலிஸ ஆட்சியைக் கொண்டுவர முயல்வதெல்லாம் என்ன மாதிரி மனநிலை! 🥲
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பகிடி said:
இலங்கையிலிருந்து கியூபாவுக்கும் வடகொரியாவுக்கும் போகாமல், காபிடலிஸ்ட் நாடுகளுக்குப் போய் அங்கிருந்து இலங்கையில் சோஷலிஸ ஆட்சியைக் கொண்டுவர முயல்வதெல்லாம் என்ன மாதிரி மனநிலை! 🥲
 
அனுர திசாநாயக; சோசலிஸமா ? கிலோ என்ன விலை? 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

அந்த புலன்பெயர்ஸ்களின்ர நோக்கம் என்ன?
2009 முடிவு அவையளுக்கு வெற்றி தானே? இனியும் என்ன வேணுமாம்?

2009 என்பது இராணுவ ரீதியிலான வெற்றி மட்டும்தான். கோட்பாடு ரீதியிலான வெற்றி இல்லை. எனவே, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டுமாகின் பலம் மிக்க தமிழ்த் தரப்புக்களுடன் பேசித்தான் ஆக வேண்டும் என்பதை  அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

 வட அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மிகவும் முக்கியமானவர்கள். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, பெருமாள் said:

உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .

உஷ் உஷ் ...இதெல்லாம் சிங்களவர்களின் அரசியல் சாணாக்கியம் .....என மார்பு தட்டி அரசியல் பாடம் எடுக்கும்கோஸ்டிகளும் உண்டு  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, satan said:

இவர் ஏன் கனடாவுக்கு பிரச்சாரம் செய்யப்போனார்?

15 hours ago, பகிடி said:

இலங்கையிலிருந்து கியூபாவுக்கும் வடகொரியாவுக்கும் போகாமல், காபிடலிஸ்ட் நாடுகளுக்குப் போய் அங்கிருந்து இலங்கையில் சோஷலிஸ ஆட்சியைக் கொண்டுவர முயல்வதெல்லாம் என்ன மாதிரி மனநிலை!

ரஷ்யா, சீனா, கியூபா , வடகொரியா  எல்லாம் வெறும் வெத்து வேட்டுக்கள்.  சிறந்தது எது என்பதை ஈழத்தமிழர்கள் குடியேறிய தமது புத்திசாலிதனத்தை எமக்கு காட்டியுள்ளார்கள்  என்று  சிங்கல மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துகின்றார்.

  • Like 1
Posted
21 hours ago, பெருமாள் said:

உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .

சாப்பிடுவதற்கும்  IMF வேணும் என்றதை விட்டு விட்டீர்கள்.:)

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, Kapithan said:

2009 என்பது இராணுவ ரீதியிலான வெற்றி மட்டும்தான். கோட்பாடு ரீதியிலான வெற்றி இல்லை. எனவே, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டுமாகின் பலம் மிக்க தமிழ்த் தரப்புக்களுடன் பேசித்தான் ஆக வேண்டும் என்பதை  அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

 வட அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மிகவும் முக்கியமானவர்கள். 

லண்டன்  அல்லி  ராஜாவுக்கு  ஆப்பு ரணில்கொடுத்து விட்டார்  இனி வட அமெரிக்க தமிழர்கள் ஆக்கும் 😀

11 hours ago, Kapithan said:

2009 என்பது இராணுவ ரீதியிலான வெற்றி மட்டும்தான். கோட்பாடு ரீதியிலான வெற்றி இல்லை. எனவே, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டுமாகின் பலம் மிக்க தமிழ்த் தரப்புக்களுடன் பேசித்தான் ஆக வேண்டும் என்பதை  அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

நிரந்தர அமைதி முதலில் இலங்கையில் உருவாக்கபடனும் அடாத்தாக பிடிக்கப்பட்ட தமிழர் காணிகளை விடுவிக்கணும் கானுற இடமெல்லாம் புத்தர் சிலை யை வைப்பதை நிறுத்தனும் யுத்தமே இல்லாத இடத்தில் அளவுக்கு அதிகமான ராணுவம் எதற்கு முதலில் இலங்கையில் இருந்து ஆரம்பியுங்க @Kapithan ஓவரா கனவு காண்கிறார் 😃

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, putthan said:

உஷ் உஷ் ...இதெல்லாம் சிங்களவர்களின் அரசியல் சாணாக்கியம் .....என மார்பு தட்டி அரசியல் பாடம் எடுக்கும்கோஸ்டிகளும் உண்டு  

சிங்களவனே பஞ்சம் தாங்கமுடியாமல் இலங்கை தீவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறான் இதுக்குள் இவை வேறை 😀

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.