Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது? விஷம் குடிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது ஏன்? முழு பின்னணி

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த் மற்றும் கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 24 மார்ச் 2024

ஈரோடு மக்களவைத் தொகுதியின் ம.தி.மு.க சிட்டிங் எம்.பி கணேசமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகிய இருவருமே மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து அவர் என்ன சொன்னார்? கணேசமூர்த்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வைகோ கூறியது என்ன? கணேசமூர்த்தி சாப்பிட்ட விஷம் எப்படிப்பட்டது? விஷ முறிவு மருத்துவர்கள் கூறுவது என்ன?

என்ன நடந்தது?

மதிமுக தொடங்கியது முதலே அதன் மூத்த தலைவராக, கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவுக்கு பக்கபலமாக தொடர்ந்து இருந்து வந்தவர் கணேசமூர்த்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியிலும் அவரையே அக்கட்சி நிறுத்தியது. தற்போதைய ஈரோடு தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று மார்ச் 24ம் தேதி காலையில் கணேசமூர்த்தி விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சைக்குப் பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைகோ நேரில் நலம் விசாரித்தார்

கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் உயிராக நேசித்த, கண்ணின் மணியாக திகழ்ந்த ஆருயிர் சகோதரர் கணேச மூர்த்தி, தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தொடர்பில் உள்ளார்.

மாணவர் அணியிலிருந்த அவர், சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பை பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை சான்ஸ் பார்ப்போம் என்றனர்.

நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது.

99% அவரை (துரை வைகோ) நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர்.

அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன்.

இத்தனைக்கும் பிறகும் அவர் நன்றாக பேசினார். பிரியமாகவே பேசினார். மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். இன்று காலை 10 நிமிடம் மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர்.

அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிரார். அங்கு வந்த கபிலனிடம் 'இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்' எனக் கூறியுள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செய்ய வேண்டிய முதன்மையான முதலுதவிகள் அனைத்தும் செய்து விட்டனர்." என்றார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவ தலைமை நிபுணர் என்ன கூறினார்?

கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டிருக்கும் கே எம் சி ஹெச் மருத்துவமனையின் தலைமை மருத்துவ நிபுணரிடம் கணேச மூர்த்தியின் உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்துள்ளார். அப்போது மருத்துவ நிபுணர் பகிர்ந்து கொண்ட தகவல்களாக வைகோ கூறுகையில், "முதலுதவி சரியாக செய்ததால் தான் நாங்கள் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம்.

அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். ஆதலால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்கோவும் கொடுக்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.

துரை வைகோ நேரில் நலம் விசாரித்தார்

கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ உடனே கோவை விரைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கணேசமூர்த்தியை இரவில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்தும், அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் பதிலளித்தார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

துரை வைகோ, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர்

‘கணேசமூர்த்தி கவலைக்கிடமாக உள்ளார்’

கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்துப் பேசிய துரை வைகோ, ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர்.

அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 48 மணி நேரத்திற்கு பின் தான் அவரது உடல் நிலை குறித்து சொல்ல முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’’ என்றார்.

தேர்தலில் சீட் கிடைக்காததால் தற்கொலை முயற்சியா?

கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி கணேசமூர்த்திக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது" என்று துரை வைகோ தெரிவித்தார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

தனியார் மருத்துவமனை கூறியது என்ன?

கணேசமூர்த்தியை அவரது உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்தான் முதலில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "காலை 11 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது கணேசமூர்த்தி சுயநினைவுடன்தான் இருந்தார். காலை 10 மணிக்கு அவர் விஷம் குடித்தார் என்று உறவினர்கள் கூறினார்கள். விஷத்தை தண்ணீரில் கலந்து அவர் குடித்துவிட்டதாக உறவினர்கள் கூறினர்.

விஷம் குடித்திருந்ததால் அவரது வயிற்றை மருத்துவமனையில் சுத்தம் செய்தார்கள். அப்போது அவரது இதயத்துடிப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்" என்று கூறினார்.

விஷ முறிவு சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

ஒரு மனிதனின் உடலுக்குள் விஷம் நுழைந்தால், மருத்துவர்கள் அந்த விஷத்தை முறிக்க என்னென்ன செய்வார்கள் என விளக்கினார் தடயவியல் துறையின் விஷ முறிவு மேலாண்மை நிபுணர். பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில்,

“எம்.பி. கணேஷமூர்த்தி உட்கொண்டது மாத்திரையின் ஜெனரிக் பெயர் கிடைத்தால்தான், அதன் பண்புகள், உடலில் கலந்து விஷமாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி தெரியும். ஆயினும் பொதுவாக விஷமுறிவைப் பொறுத்தவரை நேர மேலாண்மேதான் முக்கியம்” என்றார்.

"ஒருவர் வாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ, வாய்க்குள் வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல முறைகளில் விஷத்தை உட்கொண்டால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம்.

அவர் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டால், உணவுக்குழாய், குடல் ஆகியவை சுத்தம் செய்யப்படும்.

அதுவே 3 முதல் 4 மணி நேரமாக ஆகியிருந்தால், நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்தே விஷத்தின் மாதிரி அறியப்படும்.

நோயாளிக்கு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, இருதயத் துடிப்பு குறைவது, சுயநினைவு இழத்தல், வலிப்பு உள்ளிட்டவற்றை வைத்து என்ன மாதிரியான விஷம் என அறிய வாய்ப்பு உண்டு,

சிறுகுடல் 8 மீட்டர் நீளம் கொண்டது. 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்தால் அதில் 6 மீட்டர் அளவுக்கு விஷம் பரவி குடலில் ஓட்டியிருக்கும்.

இதையடுத்து நேரம் ஆக ஆக, அது பெருங்குடல் உள்ளிட்ட பல உறுப்புக்களில் பரவக்கூடும்.

வயிற்றைச் சுத்தம் செய்யும்போது, மெக்கானைஸ்ட் வடிவில் உள்ள சார்கோல் பயன்படுத்தும்போது, வயிற்றின் குடல்பகுதியில் விஷம் ஒட்டிக்கொள்ளாதபடி அகற்ற உதவும்.

இந்த முறை குடலில் ஓட்டியிருக்கும் 70-80% விஷத்தை வெளியேற்ற உதவும்.

அதை விட நேரம் அதிகம் கடந்து விட்டால், கூடிய விரைவில் உரிய மருந்துகளை வைத்து குடலைக் கழுவி சுத்தம் செய்வதோடு பிற வகை சிகிச்சைகளும் பின்பற்றப்படும்.

மலம் மற்றும் சோடா பை கார்பனேட் கொண்டு சிறுநீர் வழியாகவும் விஷத்தை முறித்து உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

ஒருவேளை சுயநினைவிழந்திருந்தாலோ, விஷமானது ரத்தத்தில் கலந்து இருந்தாலோ, ஹீமோ டயாலிசிஸ், ஹீமோ ஃபில்ட்ரேசன், ஹீமோ பர்ஃப்யூசன் ஆகிய முறைகளில் ரத்தத்தில் இருந்து அகற்றப்படும்." என்று தெரிவித்தார்.

யார் இந்த கணேசமூர்த்தி?

ஈரோட்டைச் சேர்ந்தவரான கணேசமூர்த்தி (77), இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டம் படித்துள்ளார். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக வைத்துள்ள இவர் ம.தி.மு.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக உள்ளார். கணேசமூர்த்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அக்கட்சியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்.பியாக உள்ளார்.

பல ஆண்டுகளாக அவர் ம.தி.மு.கவில் இருந்தாலும், இவரின் அரசியல் வாழ்க்கை தி.மு.கவில் இருந்து தான் துவங்கியது. ம.தி.மு.க தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக தி.மு.கவில் இருந்த கணேசமூர்த்திக்கு தி.மு.க மேலிடம் 1984ல் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது. அதன்பின், படிப்படியாக அவரது செல்வாக்கு உயர்ந்த நிலையில், தி.மு.க மேலிட உத்தரவுப்படி 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பின், 1993ம் ஆண்டு தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.கவில் இருந்து வெளியேறிய கணேசமூர்த்தி, ம.தி.மு.கவில் இணைந்தார். 1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

மூன்று முறை எம்.பி!

1998 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின், 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையிலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இவருக்கு 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இந்தத்தேர்தலில் வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு அதன்பின் நடந்த, 2014 மக்களவை தேர்தலிலும் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார்.

அதன்பின், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், ஈரோடு தொகுதியில் போட்டியிட ம.தி.மு.கவினர் வாய்ப்பு வழங்கிய நிலையில், அதில் வெற்றி பெற்று தற்போது ‘சிட்டிங்’ எம்.பியாக உள்ளார். மக்களவைத் தேர்தல்களில் எப்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் வைகோ, கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார்.

ஒரு முறை, எம்.எல்.ஏ, மூன்று முறை ஈரோடு எம்.பி பதவியை பெற்றுள்ள கணேசமூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் ம.தி.மு.கவிற்கென தனிச்செல்வாக்கை உருவாக்கியுள்ளார்.

30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளர்!

தேர்தல்களில் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், ம.தி.மு.க கட்சியில் பொருளாளர் பதவியையும் வகித்து, பல ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராக விசுவாசியாக இருக்கிறார்.

ம.தி.மு.கவில் இருந்து பலர் வெளியேறி தி.மு.கவில் இணைந்தபோதும் கூட, 1993 முதல் இன்று வரையில் கணேசமூர்த்தி ம.தி.மு.கவில் வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வருகிறார்.

தற்போதைய தேர்தலிலும் கணேசமூர்த்தி, ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியி்ல போட்டியிடுவார் என, கணேசமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தி.மு.கவினர் இந்த முறை ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதியை மட்டுமே ஒதுக்கியதால், கணேசமூர்த்தி மனவிரக்தியில் இருந்ததாக, அந்தக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c723jlpgkxmo

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

கவலை தரும் செய்தி. தேர்தலில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சியில் இறங்குவதா? 

பரீட்சைகள் மற்றும் நீட் தேர்வு பொன்றவற்றில் தோற்றுப் போகும் மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்கும் போது, பரீட்சைகளும் முடிவுகளும் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று அறிவுரை சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் இவர் போன்றோர்......

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை.

இவர் மக்களுக்கு வழிகாட்டிகளா ? கோழைகள்.

தமிழ அரசியலில் இருக்கும் மோசமான பிறவிகளுக்குள் வைகோ வும் ஒருவர். திமுக வில் இருந்து வைகோ பிரிந்த தருணம் பல தொண்டர்கள் தீக்குளித்தனர். அவர்களின் அந்த தியாகத்தில் மலர்ந்தது மதிமுக. பின், அத்தனை தியாகங்களையும் குழி தோண்டிப் புதைத்து விட்டே மீண்டும் திமுக வுடன் கூட்டணி வைத்தார். 

எந்த வாரிசு அரசியலை வெறுத்து வெளியேறினாரா, அதே அரசியலை தன் மகனை முன் நிறுத்தியதன் மூலம் அவரே செய்தார். இன்று  இன்னொருவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டும் விதமாக நடந்து கொண்டு இருக்கின்றார். 

இறுதி யுத்த காலத்தில், போராளிகளுக்கு மருத்துவ வசதி தொடர்பாக தொடர்பு கொள்ளும் போது, நாட் கணக்கில் வழக்கத்தில் இருந்த தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்தவர் இந்த போலி ஈழ ஆதரவாளர்.

தற்கொலைகளின் மூலம் அரசியல் நடாத்தும் ஒரு மோசமான அரசியல்வாதி வைகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

உண்மைதான்  நிழலி, அடுத்தது திமுகவில் தான்தான் என்றிருந்த போது, வாரிசு குறுக்கிட கட்சியை விட்டு வெளியேறியவர், இன்று அதே ‘வாரிசு’ அரசியல் செய்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை.

இவர் மக்களுக்கு வழிகாட்டிகளா ? கோழைகள்.

மூன்று முறை பாராளுமன்றம் போனவர் இன்னமும் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க மனமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தமிழ அரசியலில் இருக்கும் மோசமான பிறவிகளுக்குள் வைகோ வும் ஒருவர். திமுக வில் இருந்து வைகோ பிரிந்த தருணம் பல தொண்டர்கள் தீக்குளித்தனர். அவர்களின் அந்த தியாகத்தில் மலர்ந்தது மதிமுக. பின், அத்தனை தியாகங்களையும் குழி தோண்டிப் புதைத்து விட்டே மீண்டும் திமுக வுடன் கூட்டணி வைத்தார். 

எந்த வாரிசு அரசியலை வெறுத்து வெளியேறினாரா, அதே அரசியலை தன் மகனை முன் நிறுத்தியதன் மூலம் அவரே செய்தார். இன்று  இன்னொருவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டும் விதமாக நடந்து கொண்டு இருக்கின்றார். 

இறுதி யுத்த காலத்தில், போராளிகளுக்கு மருத்துவ வசதி தொடர்பாக தொடர்பு கொள்ளும் போது, நாட் கணக்கில் வழக்கத்தில் இருந்த தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்தவர் இந்த போலி ஈழ ஆதரவாளர்.

தற்கொலைகளின் மூலம் அரசியல் நடாத்தும் ஒரு மோசமான அரசியல்வாதி வைகோ. 

ப‌சியோடு கூட‌ வாழ‌ ப‌ழ‌கு ஆனால் வைக்கோ போல் வாழ்ந்து விடாதே என்று ஒரு ப‌ழ‌மொழி இருக்கு வைக்கோவுக்கு !!!!!!!

அர‌சிய‌லில் அண்ணன் சீமான் இவ‌ரை எதிர்க்க‌ வில்லை ஆனால் த‌ன‌து ந‌ல்ல‌ நட்பு வட்டாரத்தை இழிவு ப‌டுத்தி விட்டு திமுக்காவிட‌ம் அடைக்க‌ல‌ம் புகுந்த‌வ‌ர்................

2009க‌ளில் திருமாள‌வ‌ன் ம‌ற்றும் வைக்கோ நினைச்சு இருந்தால் இன‌ அழிப்பை த‌டுத்தி நிறுத்தி இருக்க‌லாம் ஆனால் இவ‌ர்க‌ள் அதை செய்ய‌ த‌வ‌றி விட்டார்க‌ள்................வைக்கோ அள‌வுக்கு வேறு யாரும்  க‌ருணாநிதி குடும்ப‌த்தை  அர‌சிய‌லில் நாற‌டிச்சு இருக்க‌ மாட்டின‌ம்...........11வ‌ருட‌த்துக்கு முத‌ல் பேசின‌ காணொளிக‌ள் இப்ப‌வும் யூடுப்பில் இருக்கு.............ஸ்டாலின எவ‌ள‌வு கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ முடியுமோ அவ‌ள‌வு கேவ‌ல‌ப் ப‌டுத்தி விட்டு அதே ஸ்டாலின முத‌ல‌மைச்ச‌ர் ஆக்குவ‌தே என‌து ல‌ச்சிய‌ம் என்று பேசின‌வ‌ர் தான் இந்த‌ வைக்கோ என்ற‌ மான‌ஸ்த‌ன்....................

திராவிட‌ கூட்ட‌ம் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் போல் எங்க‌ளுட‌ன் சேர்ந்து வ‌ருவார்க‌ள் இடையில் எங்க‌ளின் கழுத்தை பாய்ந்து க‌டிக்கும் போது தான் தெரியும் இவ‌ர்க‌ள் இவ‌ள‌வு ஆவத்தான‌வ‌ர்க‌ள் என்று😞..........................

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

😢....

எங்களின் போராட்டத்திற்கு இவர்கள் செய்த துரோகங்கள் என்று பலர் எழுதியதை வாசித்திருக்கின்றேன். இவை வெளியில் வராத, பொதுவில் பலருக்கும் தெரியாத விடயங்கள். உங்களைப் போன்றோருக்கு மட்டுமே தெரியும்.

மக்கள் நலக் கூட்டணி என்று ஒன்றை உருவாக்கி, விஜய்காந்தை படு தோல்வி அடைய வைத்தவர் வைகோ என்று தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்லுவார்கள். ஒரு காலத்தில் இவர் போகும் இடம் உருப்படவே உருப்படாது என்ற ஒரு இமெஜ் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரசோதரன் said:

வைக்கோவுக்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை...............ஆம் 2016க‌ளில் க‌ப்ட‌னை கிங்மேக்க‌ர் நீங்க‌ள் தான் அடுத்த‌ முத‌ல‌மைச்ச‌ர் நீங்க‌ள்  என்று ஆசைய‌ காட்டி ஏமாற்றி விட்டார்............அப்போது ஜெய‌ல‌லிதா அர‌சிய‌லில்  அசுர‌ப‌ல‌த்தோட‌ இருந்த‌ கால‌ம்.............

க‌ப்ட‌ன்ட‌ அர‌சிய‌ல் அழிவுக்கு இர‌ண்டு கார‌ண‌ம் ஒன்று 2014க‌ளில் பாசிச‌ பாஜ‌க்கா கூட‌ கூட்ட‌னி வைச்ச‌து............இர‌ண்டாவ‌து ஊட‌க‌ங்க‌ள் க‌ப்ட‌னை ஆத்திர‌ம் ப‌டும் ப‌டி கேள்விகளை கேட்டு  அவ‌ர் கோவ‌ப் ப‌டுவ‌தை வெட்டி ஒட்டி கோமாளி போல் க‌ப்ட‌னை சித்த‌ரித்த‌தில் ஊட‌க‌ங்க‌ளில் ப‌ங்கு பெரிது..........திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்கா ஊட‌க‌ங்க‌ள்  தான் க‌ப்ட‌னை கோல் மூட்டி கூத்து பாத்த‌வ‌ர்க‌ள்...........அதோட‌ க‌ப்ட‌னும் நோய்வாய் ப‌ட்டு மெது மெதுவாய் அர‌சிய‌லில் இருந்து ஒதுங்கி விட்டார்..............வைக்கோவுக்கும் பெரிய‌ ப‌ங்கு உண்டு க‌ப்ட‌ன அழித்த‌தில் ஆசை வார்த்தை காட்டி ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னிக்கு கூட்டி வ‌ந்து அவ‌ர்க‌ள் பெற்ற‌ வாக்கு ச‌த‌ வீத‌ம் 10க்கு குறைவு......... 2011 ஆண்டு எதிர் க‌ட்சியாய் இருந்த‌வ‌ர் க‌ட‌சியில் யாரும் கூட்ட‌னிக்கு கூப்பிட‌ விரும்பாத‌ க‌ட்சியாய் தேமுதிக்கா போய் விட்ட‌து............க‌ப்ட‌னின் ம‌க‌ன் இனி தேமுதிக்கா க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துவார் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு.............

க‌ருணாநிதி வைக்கோ க‌ணிமொழி ராம‌தாஸ் என்று 2009க‌ளில் இவ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌ம் அதிக‌ம்.............அண்ண‌ன் சீமானின் பேச்சை 2006க‌ளில் த‌ன் முத‌ல் முறை கேட்டேன்...............2008க‌ளில் மீண்டும் ராமேஸ்வ‌ர‌த்தில் போர‌ நிறுத்த‌ சொல்லி அண்ண‌ன் சீமானுன் அமிரும் பேசின‌துக்கு இருவ‌ரையும் தூக்கி சிறையில் அடைத்தார் க‌ருணாநிதி...........2009 இன‌ அழிப்பு நாளுக்கு நாள் அதிக‌ரிக்க‌ வ‌ழ‌க‌றிஞ‌ர்க‌ள் பொதும‌க்க‌ள் என்று எல்லாரும் வீதிக்கு வ‌ந்து  போராட‌ த‌மிழ் நாட்டு காவ‌ல்துறைய‌ வைச்சு வழக்கறிஞர்க‌ளின் மண்டையை உடைத்தார் கருணாநிதி...........அதோடு அண்ண‌ன் சீமானையும் ப‌ல‌ வாட்டி சிறையில் அடைத்தார்............2018க‌ளில் முத‌ல‌மைச்ச‌ரா இல்லாம‌ எதிர் க‌ட்சி த‌லைவ‌ரா இருந்து இற‌ந்து போனார் க‌ட்டும‌ர‌ம்...............மெரினா க‌ட‌ல்க‌ரையில் க‌ருணாநிதிய‌ அட‌க்க‌ம் செய்ய‌ இட‌ம் தாங்கோ என்று ப‌ச்சை த‌மிழ‌ன் ஜ‌யா எடப்பாடி பழனிசாமியிட‌ம் க‌ருணாநிதி குடும்ப‌ம் கெஞ்சினார்க‌ள்..........ப‌ல‌ பேச்சு வார்த்தைக்கு பிற‌க்கு மெரினாவில் இட‌ம் கொடுத்தார் ஜ‌யா எடப்பாடி பழனிசாமி..............

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

பரீட்சைகள் மற்றும் நீட் தேர்வு பொன்றவற்றில் தோற்றுப் போகும் மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்கும் போது, பரீட்சைகளும் முடிவுகளும் மட்டுமே வாழ்க்கை இல்லை

தமிழ்நாட்டு இப்படியான செய்திகளை படிக்கும் போது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டு இப்படியான செய்திகளை படிக்கும் போது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கும்.

சில நேரங்களில் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தலைவர்களும் இப்படியான விபரீத முடிவுகளை மறைமுகமாக ஆதரிக்கின்றார்களோ என்று கூடத் தோன்றுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

சில நேரங்களில் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தலைவர்களும் இப்படியான விபரீத முடிவுகளை மறைமுகமாக ஆதரிக்கின்றார்களோ என்று கூடத் தோன்றுகின்றது

ஓம் அப்படி தான் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கணேசமூர்த்தி மரணம்.. ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவின் வாரிசு அரசியலால் கொல்லப்பட்ட கணேசமூர்த்திக்கு அஞ்சலிகள்.

இதனை முன்னுதாரணமாக வைத்து செந்தமிழன் சீமான் அண்ணா எந்தக் காலத்திலும் வாரிசு மற்றும் குடும்ப அரசியல் செய்யக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவமே நன்றாக இருக்கிறார் கதைக்கிறார் என்றெல்லாம் ஐயா வைகோ அறிக்கை விட்டிருந்தாரே?

அஞ்சலிகள்.

வைகோ வின் கேடுகெட்ட அரசியலால் உயிரிழந்த இன்னுமொரு உயிர்.

அஞ்சலிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஷமருந்திய கணேசமூர்த்தி எம்.பி. மரணம்: கடைசி நாள்களில் நடந்தது என்ன?

கணேசமூர்த்தி

பட மூலாதாரம்,X

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 28 மார்ச் 2024, 03:48 GMT
    புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்

விஷமருந்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தியின் உயிர் இருதய செயலிழப்பால் பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி தனது வீட்டில் தென்னை மரங்களுக்கு பூச்சிக் கொல்லிக்காக வைக்கப்பட்டிருந்த விஷத்தைப் பருகி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எம்.பி. கணேசமூர்த்தி.

அங்கு அவரது வயிற்றின் செரிமான உறுப்புகள் சுத்தம் செய்யப்பட்ட பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது இருதயத் துடிப்பு குறைந்தது. சுயநினைவு இழந்து வந்தார். இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். செயற்கை இருதய நுரையீரல் செயல்பாடுகளுடன் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.

நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது முக்கிய உடல் உறுப்புக்கள் சீராக செயல்படுவதில் சிக்கல் நீடித்தது. ரத்த அழுத்தம், அவ்வப்போது குறைந்து வந்தது. இதையடுத்து இன்று காலை 05.05 மணிக்கு இருதயம் செயலிழந்து உயிர்பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கே எம் சி எச் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இது விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கு என்பதால், ஈரோடு போலீசாரிடம் உடற்கூராய்வுக்காக உடல் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின், அவரது சொந்த ஊரான சென்னிமலை குமாரவலசுக்கு இறுதிச்சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

தேர்தலில் வாய்ப்பு தராத நிலையில் தற்கொலை முயற்சி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு மார்ச் 24ஆம் தேதி வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தற்போதைய எம்.பி. தேர்தலுக்கு கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை வாய்ப்பு கொடுப்போம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன். ஆனால், அவர் தென்னைக்கு வைத்திருந்த நஞ்சைப் பருகிவிட்டார்.” எனக் கூறியிருந்தார்.

கல்லூரி நாட்களிலேயே வைகோவுடன் நட்பு

கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னிமலை குமாரவலசு பகுதியை பூர்வீகமாக கொண்டவர்.

1947 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையின் பெயர் அவிநாசி கவுண்டர் தாயார் சாரதாம்பாள். இவருக்கு பாலாமணி என்று மனைவி இருந்தார். தமிழ் மீது அதிக பற்று கொண்ட அவர், தனது மகளுக்கு தமிழ் பிரியா என்றும், மகனுக்கு கபிலன் என்றும் பெயரிட்டார்.

விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட போதும் தியாகராயர் கல்லூரி பிஏ பயின்றவர் சென்னையில் சட்டப்படிப்பு படித்தவர். தியாகராயர் கல்லூரியில் பயிலும்போதிருந்தே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், கணேசமூர்த்திக்கு நல்ல நட்பு ஏற்படத் தொடங்கியது.

பள்ளி நாட்களிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட கணேசமூர்த்தி அக்கட்சியில் மாநில மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆனார். பேரறிஞர் அண்ணாவை அடிக்கடி சந்தித்துப் பேசுமளவு நெருங்கிப் பழகிய அபிமாகியாக வலம் வந்தார்.

1976-ல் அவசரநிலை காலத்தில் தலைவர்களை கைது செய்த சிறையில் அடைத்த போது மாணவர் திமுக சார்பில் தீவிரமாக கழக பணியாற்றினார் கணேசமூர்த்தி. 1984 இல் இந்திய அரசியல் சட்ட ஆட்சி மொழி பிரிவு இணைப்பு போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றார்.

எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாவட்ட திமுக செயலாளராக இருந்த அவர், மொடக்குறிச்சி எம்எல்ஏவாக 1989 லேயே உயரிய பதவியை அடைந்தார். அப்போது பதவிக்கு வந்த 2 ஆண்டுகளிலேயே 2 கால்நடை மருத்துவமனைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒரு வேளாண் கிடங்கு ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தார். இது ஈரோட்டு மக்களுக்கு அவர் மீதும், அவர் பணியின் மீதும் நன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது.

1991 கீழ்பவானி பாசன பகுதிகள் புஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் விடும் போது, நஞ்சை பயிர் செய்தால் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டு வந்தது. அந்த தண்டத் தீர்வையை கடும் சிரத்தை மேற்கொண்டு நீக்கினார்

1993-ல் திமுகவில் இருந்து வைகோ வெளியேறிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கட்சி தொடங்கியபோது துணையாக உடன் வெளியேறியவர். அப்போதிருந்து எத்தனையோ பேர் கட்சி மாறி வெவ்வேறு கட்சிகளுக்கு சென்ற பின்பும், வைகோவை விட்டும், மதிமுகவை விட்டும் விலகிவில்லை.

1998ல் பழனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம் பி ஆனார். 2009 -லும் அவர் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 தேர்தலில் தோல்வி பெற்ற போதும் 2019 ஆம் ஆண்டில் மீண்டும் எம்பி பதவியை கைப்பற்றினார்.

முக்கியத் தலைவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடன் கணேசமூர்த்தியைத்தான் அழைத்துச் செல்வார். வைகோ உள்ளிட்ட மதிமுகவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் தோல்வியுற்றபோதும், மதிமுக சார்பில் வெற்றிப் பெற்றுக் காட்டியவர் கணேசமூர்த்தி. அக்கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தார்.

எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

பட மூலாதாரம்,ANI

கோவை திருப்பதி ஈரோடு கோவை உள்ளிட்ட மின்சார ரயில்கள் இயங்க இவர் முக்கியமாக காரணமாக அமைந்தார்.

2002ல் பொடா சட்டத்தில் தனது ஈரோடு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி, 555 நாட்கள் சிறைவாசம் சென்றார்.

இவர் மதிமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தலைமை ஏற்று பொதுப்பணிகள் ஆற்றினாலும் அவற்றில் பெரும்பாலானவை விவசாயிகளுக்கான பிரச்னையாகவே இருந்தது.

உரவிலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், பரும்பின் ஆதார விலை நிர்ணயம், பல்வேறு மாவட்ட விவசாயிகளை ஒன்றாக ஒருங்கிணைத்து போராடுவது, முல்லைப் பெரியாறு அணை உரிமை காத்தல், அட்டப்பாடியில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு, முழு மதுவிலக்கு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு என பல போராட்டங்களிலும் பெரும்பங்கு வகித்தார் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி.

தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய உரிய ஆணை பெற்று தரப்பட்டதில் இவரது பங்கும் உண்டு. அதேபோல் தாராபுரத்தில் மூடி கிடந்த கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க கோரி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

https://www.bbc.com/tamil/articles/crg0pn13d1vo

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் குடுத்தாக  பொடா வில் ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்தவர் கணேசமூர்த்தி அவர்கள்.  கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2024 at 07:07, பையன்26 said:

2009க‌ளில் திருமாள‌வ‌ன் ம‌ற்றும் வைக்கோ நினைச்சு இருந்தால் இன‌ அழிப்பை த‌டுத்தி நிறுத்தி இருக்க‌லாம் ஆனால் இவ‌ர்க‌ள் அதை செய்ய‌ த‌வ‌றி விட்டார்க‌ள்

வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2024 at 08:58, பையன்26 said:

க‌ருணாநிதி வைக்கோ க‌ணிமொழி ராம‌தாஸ் என்று 2009க‌ளில் இவ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌ம் அதிக‌ம்.

2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்

வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கந்தப்பு said:

வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 

க‌ண்டிப்பாய் த‌மிழ‌க‌த்தில்  மக்கள் புரட்சியை உருவாக்கியிருக்க முடியும் 2009க‌ளில்
அண்ண‌ன் சீமானுக்கு இப்ப‌ இருக்கும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு அப்ப‌ இருந்து இருக்க‌னும் தீயை ப‌த்த‌ வைச்சு இருப்பார் அது த‌மிழ‌க‌ம் எங்கும் காட்டு தீ போல்  எரிந்து இருக்கும்............க‌ருணாநிதி என்ன‌ எந்த‌ கொம்ப‌னா இருந்தாலும் ச‌ரி  மக்கள் புரட்சிக்கு முன்னால் அவர்கள் தோற்றுப் போய் விடுவார்க‌ள் .............இது தான் உண்மையான‌ வ‌ர‌லாறு....................உதார‌ன‌த்துக்கு 2013ம் ஆண்டு மாண‌வ‌ புர‌ட்சி த‌மிழ‌க‌த்தில் வெடிக்க‌............அதை பார்த்த‌ க‌ருணாநிதி கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் என்று அறிவித்தாரா இல்லையா.............அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌னும்..........................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிகெட்ட தமிழ்நாட்டு அரசியல்.
கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

க‌ண்டிப்பாய் த‌மிழ‌க‌த்தில்  மக்கள் புரட்சியை உருவாக்கியிருக்க முடியும் 2009க‌ளில்
அண்ண‌ன் சீமானுக்கு இப்ப‌ இருக்கும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு அப்ப‌ இருந்து இருக்க‌னும் தீயை ப‌த்த‌ வைச்சு இருப்பார் அது த‌மிழ‌க‌ம் எங்கும் காட்டு தீ போல்  எரிந்து இருக்கும்............க‌ருணாநிதி என்ன‌ எந்த‌ கொம்ப‌னா இருந்தாலும் ச‌ரி  மக்கள் புரட்சிக்கு முன்னால் அவர்கள் தோற்றுப் போய் விடுவார்க‌ள் .............இது தான் உண்மையான‌ வ‌ர‌லாறு....................உதார‌ன‌த்துக்கு 2013ம் ஆண்டு மாண‌வ‌ புர‌ட்சி த‌மிழ‌க‌த்தில் வெடிக்க‌............அதை பார்த்த‌ க‌ருணாநிதி கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் என்று அறிவித்தாரா இல்லையா.............அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌னும்..........................

கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.