Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Number of wounded in Hezbollah attack up to 18, with 1 in critical condition

By EMANUEL FABIAN 
FOLLOW
Today, 4:14 pm

Galilee Medical Center in Nahariya says 18 people were admitted to the hospital following a Hezbollah drone strike in Arab al-Aramshe.

It says one victim is listed in critical condition and two are seriously wounded.

Another four people are listed in moderate condition, while the remaining victims are lightly hurt, the hospital adds.

https://www.timesofisrael.com/liveblog_entry/number-of-wounded-in-hezbollah-attack-up-to-18-with-1-in-critical-condition/

Iranian president: ‘Tiniest invasion’ by Israel will be met with a massive response

At annual military showcase, Ebrahim Raisi hails ‘success’ of country’s weekend missile and drone strike on Israel, as Tehran’s navy commander pledges greater presence in Red Sea

https://www.timesofisrael.com/iranian-president-tiniest-invasion-by-israel-will-be-met-with-a-massive-response/

மண்ணெண்ணெயை இப்போதே வாங்கி சேமித்து வைக்க ஆரம்பிக்கலாம்’. 

😁

  • Replies 180
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ  ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு  அச்சொட்டாய் ஆதாரம்  காட்ட......அந்த நாட்டையே

  • goshan_che
    goshan_che

    அப்பனுக்கே அரைக்கோவணம்…. இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣

  • goshan_che
    goshan_che

    தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்- #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம். அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும். அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2024 at 18:35, கிருபன் said:

ஈரானின் ஜனாதிபதி சிறிலங்காவுக்கு உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொள்ள போகின்றாராம் என செய்திகள் வருகின்றது...2008 ஆம் ஆண்டு தொடங்கிய அணைக்கட்டு இப்ப திறக்க போறார்...
வளைகுடா தியட்டர் ஒவ் ஒபரேசன் முடிவுக்கு வந்து ....தென்னாசியா வில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தியட்டர் ஒஃப் ஒப்பரேசன் தொடங்க போகின்றார்களோ?

நம்ம லங்கா மாதா உசாராக இருக்க வேணும்...ஒரு பக்கம் ஈரான் சீனா ரஸ்யா கூட்டு....மறு புறம் அமெரிக்கா மேற்கு கூட்டு ...வழமை போல இந்தியா இரண்டு பேருக்கும் வாலாட்டி கொண்டு சிறிலங்கா மாதவை லவ் பண்ண முயற்சிகள் ஆனால் சிறிலன்கா மாதா இவரை கனவிலும் கை பிடிக்க மாட்டார்...என்பது
உலகமறிந்த உண்மை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

மண்ணெண்ணெயை இப்போதே வாங்கி சேமித்து வைக்க ஆரம்பிக்கலாம்’. 

கிட்டத்தட்ட எல்லா இயற்கை வளங்களும் நிறைந்த கனடாவிலும் விலையேற்ற பிரச்சனையா?
ஏன்? என்ன காரணம்?

சர்வதேசமயமாக்கல் என்பது இது தானோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன்

18 APR, 2024 | 10:58 AM
image
 
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார்.

ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/181353

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

இது வரை, இந்த மேற்கு சார்ந்த ஊடகங்கள் பொய்" என்ற "ரிபீட் பல்லவியைத்" தாண்டி, அந்த தரவுகளை நீங்கள் மறுத்து எந்த சான்றையும் தந்ததை நான் காணவில்லையே? இனிச் செய்வீர்களா?

இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா?

இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது.

முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

மறுபடியுமா? 

ஈரான் மீதான பதில் தாக்குதலை விரும்பாதவர்கள் 52 வீதமானோர். செய்தியில் தெளிவாகக் குறிப்புடப்பட்டுள்ளது.

அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா?

இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது.

முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.

உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள்
பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன்

போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா....................

டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................

1 hour ago, Eppothum Thamizhan said:

அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!

தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ?

Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict

செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ?

செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது.  இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.

Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. 

 இதில் யாருக்கு விளக்கமில்லை??

இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா?

இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது.

முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.

அங்கே என்ன நடந்தது?

1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்).

2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை).

3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன்.

4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!)

அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!)

எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).  

இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்:

நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது.

அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்!

ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம்.

உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!

7 minutes ago, Eppothum Thamizhan said:

Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. 

 இதில் யாருக்கு விளக்கமில்லை??

இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!

52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது.

74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது. 

🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. 

 இதில் யாருக்கு விளக்கமில்லை??

இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!

உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?

https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523 

முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும்.

74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!

10 minutes ago, Eppothum Thamizhan said:

முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும்.

74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!

3 hours ago, இணையவன் said:

செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. 

அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான். 
🙂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது.

74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது. 

🙂

ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2024 at 17:13, விசுகு said:

ஈரானில் இந்த அத்துமீறலை அல்லது நேரடியான யுத்தத்தை இஸ்ரேல் மன்னித்து மறந்து விடும் என்கிறீர்களா?

நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர்.

மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது.

சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, putthan said:

ஈரானின் ஜனாதிபதி சிறிலங்காவுக்கு உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொள்ள போகின்றாராம் என செய்திகள் வருகின்றது...2008 ஆம் ஆண்டு தொடங்கிய அணைக்கட்டு இப்ப திறக்க போறார்...

ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.

52 minutes ago, goshan_che said:மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது.

திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.

எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம்.

ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை.

தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது.

அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது.

ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை.

ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு.

இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே.

இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது.

இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கமாசையே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரானுடனான தாக்குதலில் அநேகமாக  அணு ஆயுதம் பயன்படுத்தப்பட சாத்தியமுண்டு.

ஆயுதங்களை விற்று தள்ளுவதே எமது குறிக்கோள். நண்பனெல்லாம் பிறகு தான். --யாராக இருக்கும்?

6 hours ago, Justin said:

உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?

According to a survey performed by The Hebrew University of Jerusalem, 74% of the Israeli public opposes an Israeli counter-attack in Iran if it would undermine the security alliance between the United States, the United Kingdom, France, and several moderate Arab countries, including Jordan and Saudi Arabia.  

7 பத்தும் ஒரு 4ம் சேர்ந்தால் 74. முதல் பந்தியில்  74 என குறிப்பிடபட்டுள்ளது. அவசரகுடுக்கைகளாக .......

  • கருத்துக்கள உறவுகள்

22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)

அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும்

இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம்

அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................

ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது

அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது.

☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.